Saturday, October 17, 2026
Blog

30th September 2026 Indian Bank Financial Results!

Chennai: 

  •  Total business increased by 14.22%, reflecting broad-based momentum across all the segments
  •  Gross Advances grew by 16.39% YoY, led by strong traction in Retail, Agriculture and MSME (RAM) portfolios
  •  Deposits rose by 12.50%, supported by a healthy CASA ratio of 39.36%
  •  Bank strategically reduced its Bulk deposit (including CD) by 5.60% on QoQ basis, from ₹1.62 lakh Cr in Jun’26 to ₹1.52 lakh Cr in Sep’26
  •  Bank has mobilized fresh FCNR(B) Deposits amounting to ₹22486 Cr. It has also raised OFCB of ₹3806 Cr
  •  Net profit recorded a growth of 14.71% YoY, reflecting improved operational efficiency, steady NIM and disciplined cost management
  •  Operating profit grew by 46.58% YoY
  •  The bank’s non-interest income (NII) registered a strong growth of 59% YoY, reaching ₹3,953 Cr for the quarter ended September 2026
  •  The Bank’s cost-to-income ratio improved by 723 bps to 39.25% in Sep’ 2026 from 44.80% in Jun’26
  •  Asset quality strengthened further, with GNPA improving to 1.61% and NNPA to 0.14%
  •  Digital adoption reached 96% of total transactions, showcasing technology-led customer engagement
 
• Net Profit up by 14.71% YoY at ₹3462 Cr in Sep’26 from ₹3018 Cr in Sep’25 
• Operating Profit improved by 46.58% YoY to ₹7090 Cr in Sep’26 from ₹4837 Cr in Sep’25
• Net Interest Income increased by 17.83% YoY to ₹7719 Cr in Sep’26 from ₹6551 Cr in Sep’25
• Return on Assets (RoA) stood at 1.31%, Return on Equity (RoE) at 19.65 % in Sep’26 
• Yield on Advances (YoA) stood at 8.17% in Sep’26
• Cost of Deposit stood at 4.89% in Sep’26 
• Gross Advances increased by 16.39% YoY to ₹721982 Cr in Sep’26 from ₹620324 Cr in Sep’25 
• RAM (Retail, Agriculture & MSME) advances grew by 17.74% YoY to ₹442302 Cr in Sep’26 from ₹375660 Cr in Sep’25
• RAM contribution to gross domestic advances stood at 67.04%. Retail, Agri & MSME advances grew by 17.37%, 17.18% and 19.06% YoY respectively. Home Loan (including mortgage) grew by 12.33% YoY in Sep’26
 
• Priority sector advances as a percentage of ANBC stood at 48.67% at ₹257647 Cr in Sep’26 as against the regulatory requirement of 40%
• Total Deposits increased by 12.50% YoY and reached to ₹874036 Cr in Sep’26 as against ₹776946 Cr in Sep’25. Current, Savings & CASA deposits grew by 27.48%, 11.55%, and 13.77% YoY respectively
• Domestic CASA ratio stood at 39.36% as on 30thSep’26
• CD ratio stood at 82.60% as on 30thSep’26
• GNPA decreased by 99 bps YoY to 1.61% in Sep’26 from 2.60% in Sep’25, NNPA reduced by 2 bps to 0.14% in Sep’26 from 0.16% in Sep’25
 
• Provision Coverage Ratio (PCR, including TWO) stood at 98.22% in Sep’26 
• Slippage Ratio contained to 0.69% in Sep’26 in comparison to 0.79% in Sep’25
• Capital Adequacy Ratio stood at 16.21%. CET-I stood at 15.18% and Tier I Capital at 15.18% in Sep’26
• Earnings Per Share (EPS) increased to ₹102.82 in Sep’26 from ₹89.63 in Sep’25
 
• Net Profit up by 5.77% QoQ to ₹3462 Cr in Sep’26 from ₹3273 Cr in Jun’26
• Fee based income grew by 10.76% QoQ to ₹1030 Cr in Sep’26 from ₹930 Cr in Jun’26   
• Yield on Investments (YoI) improved by 2 bps QoQ to 6.98% in Sep’26 from 6.96% in Jun’26
• Cost to income ratio improved by 555 bps to 39.25% in Sep’26 from 44.80% in Jun’26
• Net Interest Margin (NIM) Domestic stood at 3.42% in Sep’26
• GNPA decreased by 25 bps to 1.61% in Sep’26 from 1.86% in Jun’26, NNPA reduced by 1 bps to 0.14% in Sep’26 from 0.15% in Jun’26
 
• Net Profit up by 12.42% YoY to ₹6735 Cr in H1FY27 from ₹5991 Cr in H1FY26
• Operating Profit grew by 31.65% YoY to ₹12647 Cr in H1FY27 from ₹9607 Cr in H1FY26
• Net Interest Income up by 17.38% YoY to ₹15154 Cr in H1FY27 from ₹12910 Cr in H1FY26
• Net Interest Margin (NIM) Domestic stood at 3.41% in H1FY27, improvement of 6bps over H1FY26 level of 3.35%
• Return on Assets (RoA) stood at 1.31 in H1FY27
• Credit Cost improved by 5 bps YoY to 0.22% in H1FY27 from 0.27% in H1FY26 
• Return on Equity (RoE) stood at 19.57% in H1FY27
 
Network:
• The Bank has 6017 domestic branches (including 3 DBUs), out of which 2013 are Rural, 1611 are Semi-Urban, 1196 are Urban & 1197 are in Metro category. The Bank has 3 overseas branches & 1 IBU (Gift City Branch).
• The Bank has 5678 ATMs & BNAs and 18,379 Business Correspondents (BCs).
• Digital Banking:
• Business of ₹1,45,344 Cr has been generated through Digital Channels in H1FY27. A total of 164 Digital Journeys, Utilities and Processes have been launched so far and accounts for 19.31%. 
• Number of Mobile Banking users has grown by 26% YoY, reaching 2.66 Cr.
• UPI users and Net Banking users have witnessed an increase of 20% & 2% YoY reaching 2.89 Cr and 1.20 Cr respectively. Fastag & POS users increased by 135% & 50% respectively. 
 
Awards & Accolades:
• The Bank was declared winner of the “Best PSB Award 2024-25” by Financial Express.
• The MD & CEO of the Bank received “CEO of the Year” award at Tamil Nadu Business Leader of the Year, 2025.
• Indian Bank has been awarded the APY Annual Award of Excellence for achieving 104% of APY target in FY26.
• The Bank received prestigious SKOCH Golden Award for “IB SAATHI” and Silver Award for “Security Operations”.
• The Bank was awarded the second prize in the prestigious Rajbhasha Kirti Puraskar for FY 2024-25.
• The Bank was declared the winner of the “Golden Peacock Award for Excellence in Artificial Intelligence” for the year 2026.
• The Chief Financial Officer of Indian Bank was honoured as the Best CFO in the Bank (Mid Cap category) at DSIJ’s 2026 CFO Awards.
• The Bank has been declared winner under “Overall Performance-Bank” in the class of Best Public Sector Bank (Medium) at the ASSOCHAM.
 
Our Focus:
Our goal is to make daily banking simple, quick, and accessible for all our customers. We are continuously improving our digital platforms and streamlining processes to deliver transparent, hassle-free services. By keeping customer convenience at the center of our digital growth, we aim to be the most trusted banking partner for individuals, farmers, and businesses alike.

பொள்ளாச்சி மக்களுக்கு அறிவிப்பு! உங்கள் ஊரில் நுரையீரல் செயலிழப்பு கிளினிக்!!

Pollachi:

Fortis ஹெல்த்கேர் நெட்வர்க்கின் ஒரு பகுதியான, சென்னை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள க்ளென்ஈகிள்ஸ் மருத்துவமன, தனது விரிவான நுரையீரல் சிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக, தொடங்கியுள்ள நுரையீரல் புற நோயாளிகள் பிரிவு மையத்தை பிரபு ஸ்பேஷாலிட்டி மருத்துவமனையில் துவங்கி உள்ளது.

பிறந்த குழந்தைகளில் காணப்படும் மரபணு கோளாறுகளில் இருந்து, வயது வந்தோருக்கான நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வரை அனைத்து வயதினருக்குமான முழுமையான நுரையீரல் சிகிச்சையை உயர் திறன் கொண்ட மருத்துவ மையமாக இந்த புற நோயாளிகள் பிரிவு மையம் திகழ்கிறது.

நுரையீரல் நோய்களை மதிப்பீடு செய்வதற்கும், சிகிச்சை அளிப்பதற்குமான புதிய உயர் திறன் கொண்ட மருத்துவமனையான க்ளென்ஈகிள்ஸ் மருத்துவமனை நுரையீரல் புற நோயாளிகள் பிரிவு மையத்தை பிரபு மருத்துவமனையில் தொடங்கி வைத்துள்ளனர்.

பொது மக்கள், நுரையீரல் சிறப்பு சிகிச்சை தேவைப்படுவோர், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவோர், இரண்டாவது opinion தேவைப்படுவோர் பயன் பெரும் வகையில் இந்த பிரிவு அமைய பிரதி மாதம் க்ளென்ஈகிள்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிறப்பு மருத்துவர் விமி வர்கீஸ் பொள்ளாச்சி பிரபு மருத்துவமனைக்கு மாதம் தோறும் வருகை தருகின்றார்.

பொள்ளாச்சி சுற்றுப்புற நுரையீரல் பிரச்சினை உள்ள மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த நுரையீரல் செயலிழப்பு clinic அமைய பெற வேண்டும். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை சென்னை Gleneagles மருத்துவமனையில் தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பிட்டு திட்டத்தில் செய்யப்படும். இதை பொள்ளாச்சி மக்கள் தெரிந்து கொள்ளுங்கள்….

‘எக்மோ’ பல்லுறுப்பு உயிர் காக்கும் சிகிச்சை
பிரிவு!

சென்னை வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை, இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடுகளை செயற்கையாகப் பூர்த்தி செய்யும் அதிநவீன ‘எக்மோ’ கருவிகளைக் கொண்ட பிரத்யேகப் பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பிரிவு, சிறுநீரகம் உள்ளிட்ட உடலின் பிற உறுப்பு செயலிழப்புகளுக்கும் விரிவான அவசர சிகிச்சைகளை வழங்கும். புதிதாக தொடங்கப்பட்டுள்ள எக்மோ மற்றும் பல்லுறுப்பு உயிர் காக்கும் பிரிவில் கடுமையான சுவாச செயலிழப்புக்கான விவி-எக்மோ, இதய செயலிழப்புக்கான விஏ- எக்மோ, இதயம் மற்றும் நுரையீரல் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் செயலிழக்கும் நிலையில் பயன்படுத்தப்படும் வி-ஏவி எக்மோ, நோயாளியை விழித்திருக்கும் நிலையில் வைத்திருக்கும் அவேக் எக்மோ, மற்றும் சாலை மற்றும் வான்வழியில் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு வரும் போது பொருத்துவதற்கான எக்மோ போன்ற பல்வேறு சிறப்பு எக்மோ கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

விவி-எக்மோ, முக்கியமாக இரத்தத்தில் ஆக்சிஜனைச் சேர்த்து, கார்பன் டை ஆக்சைடை அகற்றுவதன் மூலம் நுரையீரலுக்கு சிகிச்சையளிக்கிறது; அதே வேளையில், இதயம் இரத்தத்தை திறம்பட உடலுக்கு அனுப்ப முடியாத போது விஏ- எக்மோ சுவாசம் மற்றும் ரத்த ஓட்டம் ஆகிய இரண்டிற்கும் ஆதரவை வழங்குகிறது. வி-ஏவி எக்மோ இதயம் மற்றும் நுரையீரல் இரண்டிலும் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு ஆதரவளிக்கிறது. தகுதியான நோயாளிகளுக்கு, ‘விழித்திருக்கும் நிலையிலான எக்மோ’ மூலம் அவர்கள் சுயநினைவோடு இருக்கும்போதே தேவையான உயிர் காக்கும் சிகிச்சையை வழங்க முடியும்.

எக்மோ வசதி இல்லாத மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகளை வான் மற்றும் தரை வழியில் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது பொருத்தப்படும் சிறப்பு எக்மோ சேவைகளும் உள்ளன. காவேரி மருத்துவமனையின் சிறப்பு நிபுணர் குழு, நோயாளி இருக்கும் மருத்துவமனைக்கே நேரடியாகச் சென்று, நோயாளியின் நிலையை ஆய்வு செய்து தேவைப்படும் பட்சத்தில் எக்மோ சிகிச்சையைத் தொடங்கும்.

அதன் பிறகு, நோயாளி தொடர்ச்சியான எக்மோ கண்காணிப்புடன் வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு, அங்குள்ள பல்நோக்கு மருத்துவ நிபுணர்கள் குழு மூலம் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்படும். எக்மோ சிகிச்சையைத் தொடங்குவது மட்டுமின்றி, நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் பிற உறுப்புகளின் செயலிழப்பைக் கையாளுதல், கவனமான திரவ மேலாண்மை, சிறப்பு டயாலிசிஸ் மற்றும் பல்வேறு மருத்துவப் பிரிவுகளின் ஒருங்கிணைந்த பராமரிப்பு போன்ற சிக்கலான தேவைகளும் ஏற்படலாம்.

இவற்றை எதிர்கொள்ள, இம்மையம் அனுபவம் வாய்ந்த பல்நோக்கு நிபுணர் குழுவைக் கொண்டு, நோயாளியின் மாறிவரும் உடல்நிலைக்கு ஏற்ப உடனுக்குடன் முடிவெடுத்துச் தொடர் கண்காணிப்பையும் சிகிச்சையையும் வழங்குகிறது. இம்மையத்தில் எக்மோ நிபுணர்கள், கார்டியோதொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், கார்டியோதொராசிக் மயக்கவியல் நிபுணர்கள், பெர்ஃப்யூஷனிஸ்ட்டுகள், இதயவியல் நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள், சிறுநீரகவியல் நிபுணர்கள், ரத்தவியல் நிபுணர்கள், தொற்றுநோய் நிபுணர்கள், எக்மோ பயிற்சி பெற்ற செவிலியர்கள், பிசியோதெரபி மருத்துவர்கள் மற்றும் இதர மருத்துவக் குழுவினர் இணைந்து ஒருங்கிணைந்த சிகிச்சையை வழங்குகின்றனர். இந்த பிரிவை, காவேரி மருத்துவமனையின் எக்மோ பிரிவின் இயக்குநரும், மூத்த கார்டியோதொராசிக் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணரும், இந்திய எக்மோ சங்கத்தின் தலைவருமான டாக்டர் கே. மதன் குமார் வழிநடத்துகிறார்.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எக்மோ கருவிகள் மற்றும் மருத்துவ சேவைகளை குறித்து டாக்டர் மதன் குமார் கூறுகையில்:

“கடுமையான இதயம் அல்லது நுரையீரல் செயலிழப்பு வழக்கமான சிகிச்சைகளுக்குப் பலனளிக்காத போது, எக்மோ தற்காலிக உயிர் ஆதரவை வழங்குகிறது. பல நேரங்களில் எக்மோ சிகிச்சை தொடரும் போதே பிற உறுப்புகளுக்கும் அவசர சிகிச்சைகள் தேவைப்படலாம். இந்நிலைகளில் அதற்கேற்ற மேம்பட்ட சிகிச்சைகளை வழங்கும் பல்நோக்கு மருத்துவக் குழுவும் தேவை. இவற்றை கருத்தில் கொண்டு இப்புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.

காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில்:

“மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை என்பது அதன் பின்னணியில் உள்ள மருத்துவக் குழுவின் பலத்தை பொறுத்தது. குறிப்பாக நோயாளியின் தேவைகள் வேகமாக மாறும்போது, சரியான நிபுணர்கள், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ அனுபவத்தின் மூலமே சிக்கலான மருத்துவச் சூழல்களைக் கையாள முடியும். காவேரி மருத்துவமனையில், தீவிரமான மற்றும் சிக்கலான உடல்நலப் பாதிப்புகள் கொண்ட நோயாளிகளுக்குத் தேவையான அனைத்துப் பராமரிப்புகளையும் ஒரே இடத்தில் அளிக்கும் வகையில், ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை வழங்குவதிலேயே நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்,” என்றார்.

‘ஹைக்கூ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது!

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஹைக்கூ’. வரும் அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
 
அமைச்சர் ராஜ்மோகன், “தளபதியுடைய பல படங்கள் ஓடிய திரையில் என்னுடைய தம்பி ஏகன் படம் வெளியாகவிருப்பதும் மகிழ்ச்சி. கடின உழைப்பாளி ஏகன். இயக்குநர், படக்குழு மற்றும் இன்றைய நாயகன் சித்து என எல்லோருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். நல்ல கருத்துகளோடு பொழுதுபோக்கு அம்சமும் சேர்ந்திருக்கும் படங்கள் சமீபத்தில் வெளியாகவில்லை. ‘ஹைக்கூ’ அந்த குறையை போக்கும். படம் மிகப்பெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்”. 
 
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, “இரண்டு கதாபாத்திரங்களுக்கிடையே ஆன மனஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் துல்லியமாக படமாக்கி இருக்கிறார்கள். அதற்கு சித்து அற்புதமான இசை கொடுத்திருக்கிறார். பாடல்களும் சிறப்பாக உள்ளது. படம் மிகப்பெரும் வெற்றியடையும். ஏகன் பெரிய இடத்தை அடைவார்”. 
 
பாடலாசிரியர் மோகன்ராஜா, “இந்த டைட்டிலுக்கே இயக்குநருக்கு வாழ்த்துக்கள். ஹைக்கூ என்பது ஒரு தரிசனம், அன்பு. எனக்கு பல ஹைக்கூ கவிதைகள் பிடிக்கும். இந்த தலைமுறைக்கும் ஹைக்கூ கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த சித்துவுக்கு நன்றி. ஏகன் இன்னும் பெரிதாக ஜெயிக்க வேண்டும்”.
 
இசையமைப்பாளர் சித்துகுமார், “‘ஹைக்கூ’ என்னுடைய 15 ஆவது படம். குடும்பம், நண்பர்களுக்கு நன்றி. விஷன் சினிமா ஹவுஸ் எப்போதுமே எனக்கு ஸ்பெஷல். ஏகன் இனிமையானவர். தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்கு செல்வார். நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்”. 
 
இயக்குநர் சசி, ” மிகவும் எளிமையான கதை ‘ஹைக்கூ’. இரண்டு விதமான காதலை நுணுக்கமாக சொன்ன இயக்குநருக்கும் சிறப்பாக நடித்த நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள். நிச்சயம் இது படக்குழுவினருக்கு மைல்கல் திரைப்படமாக அமையும்”. 
 
தயாரிப்பாளர் தனஞ்செயன், ” ஹைக்கூ படம் நான் பார்த்து விட்டேன் கவிதையான படம். படத்தின் கதை புதிதானது. காதலை முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் நமக்கு காட்டும். இது போன்ற ஒரு கதையை கொடுத்த இயக்குநர் யுவராஜ்க்கு வாழ்த்துக்கள். ஹீரோயின்கள் இருவரும் கியூட். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் “.
 
நடிகர் அதிர்ச்சி அருண், “‘ஹைக்கூ’ படத்தில் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் அருள் சார் மற்றும் இயக்குநருக்கு நன்றி. மலையாளப் படங்ககும், மலையாள நடிகர்களும் தமிழுக்கு வந்தால் ஹிட்தான். அந்தவகையில், ஹீரோயின் ஃபெமினாவும் ஹிட் ஆவார். ஸ்ரீதேவி திறமையானவர். ஹீரோ ஏகன் எனக்கு தம்பி மாதிரி. பெரிய ஹீரோவாக வருவார். படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை”.
 
இயக்குநர் பொன்ராம், “வித்தியாசமான லவ் ஸ்டோரி ‘ஹைக்கூ’. மகளிர் கல்லூரியில் ஒரே ஒரு ஆண் மாணவன் எனும் லைன் நன்றாக இருந்தது. நகைச்சுவை, லவ் என டிரெய்லர் கலாட்டாவாக இருந்தது. சித்து இசை அருமை. ஏகன் கருப்பு வைரம். நிச்சயம் நல்ல இடத்திற்கு செல்வார். ஃபெமினா, ஸ்ரீதேவி அருமையான நடிகர்கள். கலர்ஃபுல்லாக, பிரம்மாண்டமாக தயாரிப்பாளர் அருள் சார் படம் எடுத்துள்ளார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”. 
 
நடிகை ஃபெமினா, “நான் முதலில் பார்த்த தமிழ் படம் தளபதியின் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம்தான். ஹைக்கூ எனக்கு ஸ்பெஷலான படம். ஏகன் சிறந்த நடிகர். ஸ்ரீதேவியும் நானும் ஒரு நாள் இணைந்து நடித்தோம். படக்குழுவினருக்கு நன்றி. என்னை இந்த படத்தில் அழைத்து வந்த சுரேஷ் சந்திரா சாருக்கு நன்றி. சித்து இசை பிரம்மாதம். படம் உங்களுக்கும் பிடிக்கும். என் குடும்பத்தை பெருமைப்படுத்தும் படமாக இது இருக்கும்”.
 
நடிகை ஸ்ரீதேவி, ” தமிழில் நான் அறிமுகமாகும் படம் ஹைக்கூ. என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி”. 
 
ஆர்ஜே நிதி, “இது எனக்கு முதல் படம். வாய்ப்பு கொடுத்த யுவராஜூக்கும் விஷன் சினிமா ஹவுஸூக்கும் நன்றி. சித்து இசையில் கலக்கி இருக்கிறார். ஏகன், அருண் என எல்லோரும் கலகலப்பாக வைத்திருந்தார்கள். அக்டோபர் 23 அன்று படம் ரிலீஸ் ஆகிறது”. 
 
இயக்குநர் யுவராஜ், ” பெரிதாக எந்த கண்டிஷனும் சொல்லாத தயாரிப்பாளர் அருள் சார். அவருக்கு நன்றி. ஒத்துழைப்பு கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி. சித்துவின் ஆல்பம் சிறப்பாக வந்துள்ளது. என்னை நம்பி நான் சொன்னதை எல்லாம் செய்த ஏகன், ஃபெமினா, ஸ்ரீதேவிக்கு நன்றி”. 
 
தயாரிப்பாளர் அருளானந்து, “விஷன் சினிமா ஹவுஸின் மூன்றாவது படம் இது. சினிமாவில் தெரிவதற்காக 18 வருட உழைப்பை கொடுத்திருக்கிறார் ஏகன். நன்றாக நடித்தால் மட்டுமே சினிமாவில் நீடிக்க முடியும் என ஏகனிடம் சொல்லியிருக்கேன். என்னிடம் சொன்னதை அப்படியே யுவராஜ் எடுத்திருக்கிறார். எனக்கு படம் ரொம்ப பிடித்திருக்கிறது. விஷன் சினிமாவின் அடுத்து ஐந்து படங்களுக்கும் சித்துதான் இசையமைப்பாளர். இசையும் கவிதை போல வந்திருக்கிறது. படத்தில் உழைத்த அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்”.
 
நடிகர் ஏகன், ” அதிர்ச்சி அருணும் நானும் பல வருடங்களாக நண்பர்கள். பல சீரிஸ் ஒன்றாக நடித்திருக்கிறோம். இப்போது ஹைக்கூ படத்திலும் நடித்திருக்கிறோம். எனக்கு அற்புதமான பாடல்கள் கொடுத்த சித்து சாருக்கு நன்றி. ஹீரோயின்ஸ் இரண்டு பேரும் இயக்குநரை நம்புங்கள். நிச்சயம் பெரிய இடத்திற்கு செல்வீர்கள். எனக்கு ஆதரவு கொடுத்த அப்பாவுக்கு நன்றி. 23 ஆம் தேதி படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”. 
 
சக்தி ஃபிலிம் பேக்டரி, சக்திவேலன், “விஷன் சினிமா ஹவுஸை நம்பி படம் செய்யலாம். அந்த அளவிற்கு கடின உழைப்பை கொடுப்பார்கள். ‘ஹைக்கூ’ படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

‘டிரோன்ஸ்’ பட குழுவினர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு

GM Morgan Films தயாரிப்பில், ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிரோன்ஸ்’ திரைப்படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் நகைச்சுவை அம்சங்களை உள்ளடக்கிய வித்தியாசமான படைப்பாக உருவாகியுள்ளது. வரும் அக்டோபர் 16-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
 
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழு பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்து,   தங்களது அனுபவங்களையும் படத்தின் உருவாக்கம் குறித்த தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.
 
இந்நிகழ்வினில்…
 
தயாரிப்பாளர் ஜி. எம். மோர்கன்  பேசியதாவது.., 
 
உங்கள் அனைவரையும் சந்திப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இது என்னுடைய முதல் திரைப்படம்.
 
இந்தப் படத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், நான் ராகவ் மிர்தாத் அவர்களை என்னுடைய நண்பரின் வீட்டில் சந்தித்தேன். அங்கு சந்தித்துப் பேசிய பத்து நிமிடங்களிலேயே இந்தப் படத்தைத் தயாரிப்பது என்று முடிவு செய்தோம். அவர்கள் நிறைய கதைகளைச் சொன்னார்கள். ஆனால், எனக்கு நகைச்சுவைப் படம்தான் வேண்டும் என்று கூறினேன். அப்படித்தான் இந்தப் படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பு அமைந்தது.இது அனைவரும் பார்க்கக்கூடிய ஒரு திரைப்படம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்குமே இந்தப் படம் பிடிக்கும் என்று நம்புகிறேன். எனவே, அனைவரும் படத்தைப் பார்த்து ரசிக்க வேண்டும்” நன்றி. 
 
சினிமாவாலா சதீஷ் பேசியதாவது..,
 
வணக்கம், இந்த மேடை எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான ஒரு மேடையாக இருக்கிறது. பல வருடங்களாக இங்கு வந்திருக்கிறேன். உங்களுடன் அமர்ந்திருக்கிறேன். உங்களிடமிருந்துதான் என்னுடைய பயணம் தொடங்கியது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்றுதான் வந்தேன். ஆனால், அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் தொழில்நுட்பப் பாதையைத் தேர்ந்தெடுத்து எனது பயணத்தைத் தொடர்ந்தேன். இன்று மீண்டும் நடிப்பதற்கான வாய்ப்பை இந்தப் படத்தின் மூலம் உருவாக்கிக் கொடுத்த தயாரிப்பாளர் ஜி. எம். மோர்கன் சாருக்கும், இயக்குநர் ராகவ் மிர்தாத் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.ராகவ் மிர்தாத் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளியான ‘பன் பட்டர் ஜாம்’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்திலும் மிகுந்த திறமை கொண்ட பலர் பணியாற்றியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தனித்துவமான திறமை கொண்டவர்கள். சசி, குரேஷி, தேவதர்ஷினி மேடம் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது.
 
நான் நடித்த முதல் படமான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ எப்படியொரு தனித்துவமான, வழக்கத்திற்கு மாறான திரைப்படமாக இருந்ததோ, அதேபோன்ற வித்தியாசமான அணுகுமுறை இந்தப் படத்திலும் இருக்கும். இதெல்லாம் சாத்தியமா என்று கேட்கலாம். ஆனால், நாங்கள் முயற்சி செய்து, அந்தக் கற்பனையைச் சரியாகத் திரையில் கொண்டுவருவதற்கு உழைத்திருக்கிறோம்.‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் நடித்தவர்களில் பலரும் அப்போது புதுமுகங்களாக இருந்தார்கள். அந்தப் படத்திற்கு நீங்கள் எந்த அளவுக்கு ஆதரவு கொடுத்தீர்களோ, அதேபோன்ற ஆதரவை ‘ட்ரோன்ஸ்’ படத்திற்கும் எங்கள் குழுவினருக்கும் வழங்குவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். மிக்க நன்றி.
 
ஆர்.ஜே. தீபக் பேசியதாவது..,
 
பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் ஒரு படத்தில் நடிக்கும்போது இங்கே நின்று பேச வேண்டும் என்று பலமுறை நினைத்திருக்கிறேன். அந்தக் கனவு இன்று நிறைவேறியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் ராகவ் மிர்தாத் அவர்களுக்கும், தயாரிப்பாளர் ஜி.எம். மோர்கன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இந்தப் படத்தைப் போலவே என்னுடைய உணர்வுகளும் இப்போது மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன. ஆர்.ஜே.வாக என்னுடைய பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பிருந்தே நடிகராக வேண்டும் என்பது என்னுடைய கனவு. வானொலியில் நான் செய்த பணியின் மூலம் கிடைத்த அங்கீகாரம், இந்த வாய்ப்பை எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது என்று நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சிறிது நேரம் மட்டும் வந்து செல்லும் கதாபாத்திரமாக இல்லாமல், படம் முழுவதும் பயணிக்கும் வாய்ப்பை என்மீது நம்பிக்கை வைத்து வழங்கியிருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம்.
 
இந்தப் படத்தில் என்னுடன் நடித்திருக்கும் நண்பர்களுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவம். சினிமாவாலா சதீஷ் ட்ரெய்லரில் இரண்டு நிமிடங்கள் வருவதைப் பார்த்திருப்பீர்கள். படத்திலும் அவர் அப்படித்தான் வருவார். டிராவிட் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களும் எனக்கு இருக்கின்றன. அவர் சிறந்த கலைஞர். அஞ்சலி மிகவும் உணர்வுபூர்வமாக நடிக்கக்கூடியவர். படப்பிடிப்பில் அவர் அழுது நடித்துக்கொண்டிருப்பார்; மானிட்டரில் பார்த்த பிறகும் மேலும் உணர்ச்சிவசப்படுவார். சித்தி இத்னானியும் இந்தப் படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கும் எனது நன்றி. மறக்காமல் அக்டோபர் 16-ம் தேதி இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டும். படத்தைப் பார்த்துவிட்டு எங்களுக்கான நல்ல கருத்துகளைப் பகிர்ந்துகொண்டால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம். நன்றி!
 
நடிகை அஞ்சலி நாயர் பேசியதாவது..,
 
உங்கள் அனைவருக்கும் வணக்கம். இதுவரை என்னுடைய படங்களுக்கு நீங்கள் நிறைய ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். இந்தப் படத்திற்கும் அதேபோல் தொடர்ந்து ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். முதலில் என்னுடன் நடித்த சக கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் ஏற்கெனவே ஒருவரையொருவர் அறிந்திருந்தாலும், இணைந்து பணியாற்றுவது இதுதான் முதல் முறை. எங்கள் தயாரிப்பாளர் ஜி. எம். மோர்கன், இயக்குநர் ராகவ் மிர்தாத் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. சிறிய குழுவாக இருந்தாலும், மிகவும் வலிமையான குழுவாக இணைந்து பணியாற்றியிருக்கிறோம்.
 
இந்தப் படத்தின் மூலம் புதிதாக ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம். ‘டிரோன்ஸ்’ திரைப்படம் ஃபேண்டஸி, ஹாரர் மற்றும் சர்வைவல் அம்சங்கள் கொண்ட படமாக இருக்கும். இதில் பல விசித்திரமான சம்பவங்கள் நடைபெறும். அதேசமயம், ரசிகர்களை மகிழ்விக்கும் பல பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. குடும்பத்துடன் அனைவரும் அமர்ந்து ரசிக்கக்கூடிய முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக இது இருக்கும்.
 
பொழுதுபோக்கு அம்சங்களுடன் மட்டுமல்லாமல், நிற அரசியல், நிறவெறி மற்றும் காதல் சார்ந்த சில தீவிரமான, சர்ச்சைக்குரிய விஷயங்களையும் இப்படம் தொட்டுச் செல்கிறது. இத்தகைய கருத்துகளைப் பேசினாலும், அவற்றைச் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு பாணியில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்திருக்கிறோம்.
 
வரும் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் இப்படத்தை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திரையரங்குகளில் சென்று பாருங்கள். படம் பிடித்திருந்தால் மற்றவர்களிடமும் பகிர்ந்து ஆதரவு கொடுங்கள். இப்படிப்பட்ட சிறிய படங்கள் ரசிகர்களின் விமர்சனங்கள், கருத்துகள் மற்றும் வாய்மொழி வரவேற்பின் மூலமாகத்தான் அதிகமான மக்களைச் சென்றடைகின்றன. இதுபோன்ற புதிய கருத்துகளைக் கொண்ட, வழக்கமான சினிமா பாணியை உடைக்கும் திரைப்படங்கள் தொடர்ந்து தமிழில் வெளியாக வேண்டும் என்று விரும்புகிறேன். மிக்க நன்றி!
 
நடிகை சித்தி இத்னானி பேசியதாவது..,
 
“பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் இன்று சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் படத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு, உங்கள் மனதில் ஒரு கேள்வி இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த ஆண்டின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக எதிர்பார்க்கப்படும் ரஜினிகாந்த் சாரின் படத்துடன், எங்களுடைய சிறிய படத்தை ஏன் வெளியிடுகிறார்கள் என்பதுதான் அந்தக் கேள்வி. ஆனால், உண்மையில் தலைவரின் படத்துடன் எங்களுடைய படமும் வெளியாவது எங்களுக்குப் பெருமையும் கௌரவமும் அளிக்கிறது. அவருடைய படத்திற்கு முன்னால் எங்களுடைய படம் ஒரு சிறிய புள்ளியாக இருந்தாலும், அதுவே எங்களுக்கு மிகப்பெரிய விஷயம். தமிழ் சினிமாவைப் பற்றிப் பெருமையாகப் பேசும்போதெல்லாம் என் நினைவுக்கு முதலில் வருபவர் தலைவர் ரஜினிகாந்த். அவருடைய எளிமையும் பணிவும் தமிழ்நாட்டைத் தாண்டி, நாட்டின் எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் உள்ள மக்களைக் கவர்ந்திருக்கிறது. ‘டிரோன்ஸ்’ படக்குழுவினர் அனைவரும் தலைவரின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தைக் காணவும், அவருடைய வெற்றியைக் கொண்டாடவும் ஆவலுடன் இருக்கிறோம்.
 
அதேநேரத்தில், இது நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகள் நிறைந்த காலம். குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய சிறிய, சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக ‘டிரோன்ஸ்’ இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்வேன். எங்கள் தயாரிப்பாளர் ஜி. எம். மோர்கன் சார், ஒன்று முதல் நான்கு படங்கள் வரை மட்டுமே பணியாற்றியுள்ள எங்களைப் போன்ற புதிய கலைஞர்களை நம்பி இவ்வளவு பெரிய முதலீட்டைச் செய்திருக்கிறார். இந்த நவராத்திரியில் நான் கடவுளிடம் வேண்டிக்கொண்ட ஒரே விஷயம், அவர் முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெறுவதோடு லாபமும் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். எங்களைப் போன்ற சிறிய படங்களுக்கு உங்கள் ஆதரவு மிகவும் அவசியம். பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெற்றி பெறுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இயக்குநர் ராகவ் போன்ற படைப்பாளிகளுக்கும், ஜி. எம். மோர்கன் போன்ற தயாரிப்பாளர்களுக்கும் வாய்ப்பளித்து, அவர்கள் கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தைப் புதிய திரைப்படங்களில் முதலீடு செய்ய ஊக்கமளிப்பதில் பத்திரிகையாளர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது.
 
இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய தீபக், சதீஷ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. சினிமாவாலா சதீஷுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. அஞ்சலியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இரண்டு நடிகைகள் நல்ல நண்பர்களாக இருக்க முடியும் என்பதற்கும் எங்கள் நட்பு ஓர் உதாரணம். ராகவ் மிகவும் திறமையான இயக்குநர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் சூர்யா சாரின் படத்திற்கும் எழுதி வருகிறார். குரேஷி விஜய் தொலைக்காட்சியில் சிறப்பான பணிகளைச் செய்திருக்கிறார்; தற்போது பல படங்களிலும் நடித்து வருகிறார். நகுல், சதீஷ் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். சமூக வலைதளங்களில் பிரபலமானவர்களும் இந்தப் படத்தில் இணைந்திருப்பது சிறப்பு. இங்கே இருக்கும் ஆர்.ஜே. தீபக்கிற்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள். இது போன்ற உண்மையான, இயல்பான மனிதர்களை ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
 
இறுதியாக, இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. எங்கள் ‘டிரோன்ஸ்’ திரைப்படத்திற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தரும். மிக்க நன்றி”.
 
நடிகர் டிராவிட் செல்வம் பேசியதாவது..,
“இங்கு வந்திருக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் நன்றாக இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். எனக்குச் சற்று பதற்றமாக இருக்கிறது. இந்தப் படத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், ‘டியூட்’ படத்தை முடித்திருந்தபோது இந்தக் கதையைக் கேட்டேன். என்னை அழைத்து, இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றும், இரண்டு கதாநாயகிகள் இருப்பதாகவும் சொன்னார்கள். அதற்கு நான், ‘இரண்டு கதாநாயகிகள் இருக்கிறார்கள் என்றால் என்னை ஏன் அழைக்கிறீர்கள்? நான் ஏற்கெனவே பரிதாபங்கள் நிகழ்ச்சியில் இதுபோன்ற விஷயங்களைச் செய்துகொண்டிருக்கிறேனே’ என்று கேட்டேன். அதற்கு, ‘எவ்வளவு நாள்தான் இப்படியே நடிப்பீர்கள்? நீங்களும் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்தால் நன்றாக இருக்கும்’ என்று கூறினார்கள். அதனால் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
 
ஆரம்பத்திலிருந்தே ஒரு குறிப்பிட்ட ஜானருக்குள் அடக்கிவிட முடியாத படமாக ‘டிரோன்ஸ்’ உருவாகியிருக்கிறது. இதில் ஹாரர், நகைச்சுவை எனப் பல அம்சங்கள் உள்ளன. குழந்தைகள் ரசிக்கக்கூடிய மோகினிப் பேய், மோகினிப் பாட்டி, தேவதை எனப் பல்வேறு விதமான வித்தியாசமான கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு சிறிய படத்தில் அரசியல் கருத்தையும் அதே நேரத்தில் பொழுதுபோக்கு அம்சங்களையும் இணைத்துக் கொடுப்பதற்கு தயாரிப்பாளருக்குத் தைரியம் வேண்டும். அந்த வகையில், இப்படத்தைத் தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் ஜி. எம். மோர்கன் சாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லா தயாரிப்பாளர்களும் இதுபோன்ற வித்தியாசமான கதைகளில் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் உருவாகும் சிறிய படங்கள்தான் மற்ற மொழிகளிலும் கவனம் பெறும் என்று நம்புகிறேன். இந்தப் படமும் அப்படிப் பலரிடம் சென்றடையும் என எதிர்பார்க்கிறேன். இயக்குநர் ராகவ் மிர்தாத் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
என்னுடன் நடித்த சக கலைஞர்கள் அனைவரும் சிறப்பானவர்கள். முதலில் குரேஷி அண்ணா, மிகவும் ஜாலியான மனிதர். பத்து அடி தூரம் நடந்தால்கூட, அதற்குள் பல காமெடி கவுண்டர்களைப் போட்டு நம்மைக் கலாய்த்துவிடுவார். அடுத்து ஆர்.ஜே. தீபக். செட்டில் இவர் என்ன செய்வாரோ என்று சில நேரங்களில் நானே பயந்திருக்கிறேன். ஏதாவது விஷமம் செய்துவிடுவாரோ என்று அவரை அமைதியாக இருக்கச் சொல்வோம். ஆனால், அவர் நல்ல மனிதர். அஞ்சலி நாயர் மிகச் சிறந்த நடிகை. அவர் அழுது நடித்தால் பார்ப்பவர்களையும் அழ வைத்துவிடுவார். சித்தி இத்னானி எங்கள் படக்குழுவில் அனுபவம் மிக்கவராக இருந்தார். சிம்பு, அருண் விஜய், ஆதி போன்ற நடிகர்களுடன் நடித்தவர் என்பதால், ஆரம்பத்தில் அவரிடம் பேசுவதற்குக்கூட எங்களுக்குச் சற்று தயக்கம் இருந்தது. ஆனால், எந்தப் பந்தாவும் இல்லாமல் முதல் நாளிலிருந்தே எங்களை நண்பர்களாகப் பழகி, எளிதாக நடிக்க உதவினார். அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம்.
 
இறுதியாக, சினிமாவாலா சதீஷ் அண்ணனுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் எனக்கு முக்கியமான வாய்ப்பு கிடைத்ததற்கு அவர்தான் காரணம் என்று நம்புகிறேன். அவர்தான் என்னுடைய பெயரைப் பரிந்துரைத்து இந்தப் படத்தில் நடிக்க வைத்ததாகச் சொன்னார். அதேபோல், பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் அண்ணன்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பரிதாபங்கள் இல்லாமல் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. ‘டியூட்’ உள்ளிட்ட படைப்புகளுக்கு நீங்கள் எந்த அளவுக்கு ஆதரவு கொடுத்தீர்களோ, அதேபோல் ‘டிரோன்ஸ்’ என்ற இந்தச் சிறிய படத்திற்கும் ஆதரவு கொடுக்க வேண்டும். ரசிகர்களின் வாய்மொழி வரவேற்பின் மூலமாகவே இந்தப் படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். ஏதேனும் தவறு செய்திருந்தாலோ, குறைகள் இருந்தாலோ, உங்கள் வீட்டுப் பையனாக நினைத்து, அடுத்த முறை எப்படிச் சிறப்பாகச் செய்யலாம் என்று அறிவுரை கூறுங்கள். அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன். இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி” என்று டிராவிட் செல்வம் பேசினார்.
 
‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத், தனது அடுத்த படைப்பாக ‘ட்ரோன்ஸ்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். வழக்கமான கதைக்களங்களிலிருந்து மாறுபட்டு, கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் நடந்தால் என்னவாகும் என்ற சுவாரஸ்யமான கற்பனையை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி பாணியில் உருவாகியுள்ள இப்படம், மர்மமும் மாயாஜாலமும் நிறைந்த புதிய உலகத்திற்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும் வகையில் உருவாகியுள்ளது.
 
இப்படத்தில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேட் சயின்டிஸ்ட், துப்பறிவாளர், தேவதை, சூனியக்காரி என வித்தியாசமான கதாபாத்திரங்களும், அவற்றைச் சுற்றி நிகழும் மர்மமான சம்பவங்களும் படத்தின் கதைக்களத்திற்கு சுவாரஸ்யம் சேர்க்கின்றன.
 
ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஹரி எஸ்.ஆர். இசையமைத்துள்ளார். சதீஷ் சூர்யா படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஆர். கிஷோர் கலை இயக்கத்தைக் கவனித்துள்ளார். GM Morgan Films நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார்.
 
‘டிரோன்ஸ்’ திரைப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
 
 

நிதியுதவி வழங்கிய படக்குழு!

ஜியோ ஸ்டுடியோஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட், தம்மம் பிலிம்ஸ் இணைந்து ‘டோரதி’ படக்குழு சார்பில் தீவிர உடல்நலப் பாதிப்புகளுடன் போராடும் 25 திருநங்கைகளின் நலனுக்காகநிதியுதவி வழங்கினர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், மனிதநேயம், கண்ணியம், ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவை குறித்த விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. படத்தின் திரையரங்கு வெற்றியையும், ரசிகர்களிடமிருந்து கிடைத்த உணர்வுபூர்வமான வரவேற்பையும் படக்குழு கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தீவிர உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள 25 திருநங்கைகளின் நலனுக்காக நிதியுதவி வழங்கியுள்ளது.

‘டோரதி’ திரைப்படம் வணிகரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மனிதர்களின் உணர்வுகளை நுட்பமாகச் சித்தரித்த விதத்திற்கும், ஒவ்வொருவரின் கண்ணியம் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உரிமையை வலியுறுத்தியதற்கும் ரசிகர்கள் தெரிவித்த பாராட்டுகளும், பகிர்ந்துகொண்ட தனிப்பட்ட அனுபவங்களும் படக்குழுவினரை நெகிழச் செய்துள்ளன. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே திருநங்கைகளின் நலனுக்கு நிதியுதவி வழங்கும் முடிவு படக்குழு எடுத்தது.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்ற ‘டோரதி’ படத்தின் வெற்றி விழாவின்போது இந்த நிதியுதவித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அப்போது, திருநங்கைகள் நல அமைப்பான ‘எங்கள் சகோதரன்’ அமைப்பின் பிரதிநிதிகள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மருத்துவ மற்றும் நிதியுதவி தேவைப்படும் 25 பேரை அறிமுகப்படுத்தினர்.
 
அவர்களில் புற்றுநோய், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், கை,  கால்களை இழந்தவர்களும், பிறவியிலேயே பார்வையற்றவர்களும் இடம்பெற்றிருந்தனர். இந்த 25 பேருக்கும் காசோலையை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வழங்கினார்.

இந்த நிதியுதவியைப் பெறுபவர்களை வெற்றி விழாவுக்கு அழைத்து வருவது குறித்துப் படக்குழுவுக்கு தகவல் தெரிவித்தபோது, அவர்களுக்கு பயணம் செய்து வருவதில் வருவதில் ஏற்படக்கூடிய சிரமங்கள் குறித்து கருத்தில் கொண்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கவலை தெரிவித்துள்ளார். இருப்பினும், உடல்நலப் பிரச்சினைகளையும் பொருட்படுத்தாமல், தங்களை நெகிழச் செய்த திரைப்படத்தை உருவாக்கிய இயக்குநரை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்ற விருப்பத்துடன் அவர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

அடுத்த ஓராண்டுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் உணவுச் செலவுகளைச் சமாளிக்க இந்த நிதி உதவும் என்று நெகிழ்ச்சியுடன் நிதியுதவி பெற்றவர்கள் பகிர்ந்துகொண்டனர். நோய்களுடன் போராடுவதோடு, மாற்றுத்திறன் சார்ந்த சவால்களையும் சமூகப் புறக்கணிப்பையும் எதிர்கொண்டு வரும் அவர்களுக்கு, இந்த நிதியுதவி அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெரும் ஆதரவாக இருக்கும் என அமைப்பின் பிரதிநிதிகளான சுதா மற்றும் ஜெயா தெரிவித்தனர்.

மனிதநேயம், கருணை மற்றும் கண்ணியம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘டோரதி’ திரைப்படத்தின் நோக்கத்தை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது. சமூகத்தின் முன்முடிவுகளையும் பார்வைகளையும் கடந்து, கதையில் இடம்பெறும் மனிதர்களையும் அவர்களின் உணர்வுகளையும் மையப்படுத்த முயன்ற இந்தப் படத்தின் வெற்றி, திரையரங்குகளுக்கு வெளியேயும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதாகப் படக்குழு நம்புகிறது.

கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தை ஜோதி தேஷ்பாண்டே, குனீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் தயாரித்துள்ளனர். மேஸ்ட்ரோ இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் இணைந்து இப்படத்தை வழங்கியுள்ளது.
 
 
 

THE SOCIAL RECKONING

Sony Pictures Entertainment India Release, CURTAIN RAISER – Written, co-produced and directed by Aaron Sorkin, this is a standalone sequel to The Social Network (2010), this flick talks about the Facebook leak in 2021 by Frances Haugen and Jeff Horwitz. The World Premiere of the film was held at Curzon Mayfair Cinema in London.
 
SYNOPSIS- Based on the events that gave rise to the Wall Street Journal’s shocking 2021 investigative series, ‘The Facebook Files’, the film tells the true story of Frances Haugen (Mikey Madison), a young Facebook engineer, who enlists the help of Jeff Horwitz (Jeremy Allen White), a Wall Street Journal reporter, to go on a dangerous journey that ends up blowing the whistle on the social network’s most guarded secrets, leaking Facebook’s most classified and confidential documents running to over 1000 in numbers!
 
CREDITS – Written & Directed by- Aaron Sorkin
Cast- Mikey, Madison, Jeremy Allen White, Jeremy Strong, Bill Burr, Betty Gilpin etc
Cinematography-Jeff Cronenweth
Edited by-Alan Baumgarten
Music – Alexandre Displat
 

Dorothy Movie Thanks meet

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டோரதி’. வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் படம் வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. 
 
தயாரிப்பாளர் அச்சின் ஜெயின், “இந்த படம் சிறந்த அனுபவமாக மாற்றி கொடுத்த ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி”.
 
ஷபிதா, “கடந்த 16 வருடங்களாக திருநங்கை மற்றும் திருநர் சமூகத்திற்காக வேலை பார்த்து வருகிறோம். நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், நிறைய படங்கள் வந்திருந்தாலும் ‘டோரதி’ எப்போதுமே ஸ்பெஷல். படம் பார்த்து முடித்ததும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டேன். எங்கள் சமூகத்தின் குரலாக இந்தப் படம் உள்ளது. நிஜ வாழ்க்கையிலும் என்னை ஏற்றுக் கொண்டது என் அண்ணிதான். அதனால், ‘டோரதி’ என்னை நெகிழ வைத்தது. திருநங்கைகள் திருமணமே செய்து கொள்ளலாம் என சட்டமே வந்துவிட்டது. அப்படி இருக்கும்போது இந்த படத்தின் கிளைமேக்ஸில் என்ன பிரச்சினை? திருநர் சமூகம் இன்னும் பல உயரத்திற்கு செல்வார்கள். அதற்கு இந்த படமே சாட்சி”.
 
மாளவிகா, “கார்த்தி-ஹீரோ, சுப்பு- ஹீரோயின், ராஜ்- இளையராஜா சார் என கார்த்திக் சுப்புராஜாக இணைந்து ‘டோரதி’ படம் உருவாகியிருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் கண்ணில் ஒத்திக்கொள்ளலாம். ரிஷிகாந்த், சனந்த் என இரண்டு அற்புதமான நடிகர்களை கார்த்திக் சுப்புராஜ் வெளிக்கொண்டு வந்துள்ளார். எங்களை மதிக்கவில்லை என்றாலும் எங்களை அவமானப்படுத்தாதீர்கள். இந்த வருடம் நமக்கு கிடைத்த பரிசு ‘டோரதி’. நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும். ஊரோரம் புளியமரம் என யுவன் சங்கர் ராஜா கொடுத்த கசப்பான பாடல் அனுபவத்தை அவரது அப்பா இளையராஜா மீனாட்சி, காமாட்சி எனப் பாடல் கொடுத்து நீக்கிவிட்டார். அனைவருக்கும் நன்றி”. 
 
சுபா, “இந்த சமூகத்திற்கான புரட்சிதான் இந்தப் படம். ‘பாம்பே’, ‘காஞ்சனா’, ‘அருவி’ போன்ற படங்களில் திருநர் சமூகத்தை சிறப்பாக காட்டியிருப்பார்கள். ஆனால், ஜென்ஸீ காலத்தில் ‘டோரதி’ பேசியிருக்கும் விஷயம் மிக முக்கியமானது. 2050 வரை சிந்திக்க வைக்கும் படமாக இது வெளியாகியுள்ளது. வியாபார நோக்கத்தில் இல்லாமல் சமூக நோக்கத்தில் இந்தப் படத்தை இயக்குநர் உருவாக்கி இருக்கிறார். சனந்த், ரிஷிகாந்த் இருவருக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. நாம் எல்லோரும் இணைந்து செயல்படுவோம்” என்றார். 
 
இயக்குநர் வசந்தபாலன், “ஆணாதிக்கம், மாஸ் என நினைத்து நிறைய தவறான விஷயங்களை சினிமாவில் திணித்து கொண்டிருக்கிறோம். அதற்கெல்லாம் சம்பட்டியில் அடித்தாற்போலதான் ‘டோரதி’ வந்திருக்கிறது. ரோமியோ-ஜூலியட் போல ‘டோரதி’யும் அற்புதமான காதல் படம். இந்தப் படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்க வேண்டும். ஒளிப்பதிவு படத்தின் பலம். ராஜா சார் தன் இசையால் இந்தப் படத்தை ஆசீர்வதித்திருக்கிறார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்”. 
 
இயக்குநர் சசி, ” நான் ஒரு தமிழ் சினிமா இயக்குநர் என்பதில் பெருமை. அதற்கு காரணம் ‘டோரதி’. மூன்றாம் பாலினத்தவருக்காக ஒரு படம் செய்ய வேண்டும் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் முன்வந்திருப்பது பெரிய விஷயம். இன்னும் பெரிதாக அவர் ஜெயிக்க வேண்டும்”. 
 
இயக்குநர் லிங்குசாமி, “பேரன்பும் தைரியமும் கொண்ட ஒருவரால் தான் இந்த ‘டோரதி’ மாதிரியான படம் எடுக்க முடியும். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு அது இருக்கிறது. இரண்டு முறை இந்த படம் பார்த்தேன். பேரன்போடு இந்தப் படம் எடுத்த கார்த்தியை வாழ்நாள் முழுக்க கொண்டாடலாம். ராஜா சாரின் இசை இந்தப் படத்திற்கு பெரும் பலம். ரஜினி- கமல் போல ரிஷி- சனந்த். வாழ்த்துக்கள்”. 
 
இயக்குநர் மிஷ்கின், “‘டோரதி’ திரைப்படம் மூலம் திருநர் சமூகத்தை மிக உயர்ந்த இடத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் எடுத்து சென்றுள்ளார். சீர்கெட்ட சமூகத்தை ‘டோரதி’ மூலம் தூக்கி நிறுத்தியுள்ளார். வசூலை தாண்டி சிறந்த படமாக இது காலத்திற்கும் நிற்கும். இளையராஜாவை அடுத்து நான் கார்த்தி காலில்தான் விழ வேண்டும். இந்த படத்தையும் விமர்சனம் செய்ய வேண்டும். நம் எல்லோரையும் விட வாழ்க்கையை நன்கு புரிந்தவர்கள் திருநங்கைகள். சகிப்புத்தன்மையை இந்தப் படம் நமக்கு சொல்லி தருகிறது. காதுகள் இருப்பது இளையராஜா இசை கேட்க, கண்கள் இருப்பது டோரதி போன்ற படங்கள் பார்க்க. கடைசி விவசாயி, கொட்டுக்காளி படங்களை விட 100 மடங்கு சிறப்பான படம் டோரதி. மாஸ் ஹீரோ டெம்ப்ளேட்டை உடைத்து ரிஷி, சனந்த் பெரிய ஹீரோவாகி இருக்கிறார்கள். பெரிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. கீர்த்தி இந்தப் படத்தின் உயிர். நன்றி”. 
 
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி, சக்திவேலன், “டோரதி படத்தின் வெற்றி விழாவை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. கருத்து சுதந்திரம் எனும் பெயரில் இந்த படத்தின் மீது பல கருத்து வன்முறைகள் படம் பார்க்காமலேயே ஆரம்பத்தில் கட்டவிழ்க்கப்பட்டது. ஆனால், அதையும் தாண்டி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றிருக்கிறது. பாக்ஸ் ஆஃபிஸில் இந்த வார இறுதியில் முதலிடம் பிடிக்கும். பல மாதங்கி, மரகதமணி, மீனாட்சி கொடுத்த ஆசீர்வாதம்தான் இது. ரிஷி, சனந்த் என இரு திறமையாளர்களை இந்தப் படம் கொடுத்திருக்கிறது. மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நானும் ஒரு பங்கு என்பதில் மகிழ்ச்சி”. 
 
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ” சினிமா வலுவான ஆயுதம். மக்கள் மனதை மாற்றும் சக்தி கொண்டது. திருநர் சமூகத்தை இதுநாள் வரை பார்த்த பார்வையை இந்த படம் நிச்சயம் மாற்றும் என பலர் என்னிடம் சொன்னார்கள். அது தான் இந்த படத்தின் வெற்றி என கருதுகிறேன். என்னுடைய தனிப்பட்ட வெற்றியாகவும் பார்க்கிறேன். எங்களுக்கு கிடைத்த ஆசிர்வாதம் ராஜா சார் இசை. படத்தின் இன்னொரு ஹீரோ திரு சார். அனைவருக்கும் நன்றி” என்றார்.

நிர்வாகிகள் மத்தியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன?!

நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் நிர்வாகிகள் சந்திப்பு இந்த வருடம் சென்னை போரூர் அருகில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது:

இந்த அமைப்பு என்பது நம்மால் முடிந்த உதவிகள் அனைவருக்கும் செய்வதுதான் நோக்கமே தவிர யாருக்கும் போட்டியாகவோ அல்லது யாரையும் எதிர்க்கவோ இந்த அமைப்பு இல்லை என்பதில் அனைவரும் தெளிவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடல் ஆரோக்கியம் தான் மிகப்பெரிய விஷயம் என்பதை உணர்த்தி அனைவரும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் பிறகு நன்றாக சம்பாதிக்க வேண்டும் சம்பாதித்து முதலில் உங்களது குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும்.

தற்போது சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்ற படமும் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படமும் நடித்து கொண்டிருக்கிறேன். இரண்டு படங்களும் ஜனராஞ்சகமான பொழுதுபோக்கு திரைப்படமாக படமாக இருக்கும்.

நற்பணி என்ற பெயரில் ஓரிரு நாள் மட்டும் செய்து முடித்து விடாமல் நாள்தோறும் நற்பணி செய்வோம் என்ற பெயரில் வருடம் 365 நாளும் குறைந்தபட்சம் 10 நபர்களுக்கு நற்பணி செய்து வருவதை நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். முக்கியமாக ஒரு நாளில் குறைந்தபட்சம் பத்து நிமிடம் ஆவது புத்தகம் படியுங்கள் என்று கூறினார்.

பிறகு அந்நிகழ்ச்சியில் புத்தக கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது அங்கிருந்து முதல் புத்தகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.

Kauvery Hospital Radial Road Launches SAMATVA

Kauvery Hospital Radial Road has launched SAMATVA, Centre for Obesity, Metabolic Health & Lifestyle Transformation, a dedicated centre offering comprehensive and coordinated care for people with obesity and related metabolic health concerns. Dr. Tamilisai Soundararajan, former Governor of Telangana and former Lieutenant Governor of Puducherry, launched the clinic. The latest National Family Health Survey-6 (2023-24) indicates that 44.2% of women aged 15-49 in Tamil Nadu are overweight or obese, highlighting the growing burden of excess weight and its associated health risks.

Against this backdrop, SAMATVA takes an integrated approach that moves beyond conventional weight-loss programmes. The centre brings together medical expertise and evidence-based lifestyle interventions to assess an individuals medical, metabolic, nutritional, physical and behavioural needs and develop a personalised care pathway accordingly. The multidisciplinary team at SAMATVA includes physicians, endocrinologists, gastroenterologists, hepatologists and allied health professionals, enabling patients to access coordinated care under one roof. The approach focuses not only on weight reduction, but also on improving metabolic health, reducing obesity-related health risks and supporting sustainable lifestyle changes.

Dr. Aravindan Selvaraj, Co-founder and Executive Director, Kauvery Group of Hospitals, said:

At Kauvery, we believe healthcare must evolve with the changing health needs of the communities we serve. The growing burden of obesity and metabolic disorders calls for a more integrated and long-term approach to care. With SAMATVA, we are bringing together medical expertise and lifestyle interventions to create a structured model that goes beyond weight management and focuses on improving overall health and quality of life.

The centre also places emphasis on structured follow-up, as sustainable lifestyle change requires continued guidance and monitoring. Patients will receive ongoing support through their health journey, with interventions adapted based on their progress and evolving healthcare needs. Through SAMATVA, Kauvery Hospital aims to provide a structured, coordinated and patient- centred approach to obesity management, with continuous monitoring and guidance focused on improving metabolic health, reducing associated health risks and supporting sustainable lifestyle changes. 

Commenting on the launch, Dr. Piyush Bawane, Clinical Lead, Medical Gastroenterology, Kauvery Hospital, Radial Road, said:

Obesity can have a significant impact on metabolic health and is often associated with conditions such as diabetes, fatty liver disease, hypertension and cardiovascular risk. At SAMATVA, our approach is to assess these associated risks comprehensively and develop an appropriate treatment plan for each patient. This allows us to address obesity as a health condition while also managing the broader metabolic risks associated with it.

Dr. Rameez Raja B, Consultant, Endocrinology, Kauvery Hospital, Radial Road said:

Obesity is a complex metabolic condition, and its impact can extend across multiple organ systems. A comprehensive assessment helps identify individual risks and determine the appropriate treatment approach. SAMATVA brings together multidisciplinary expertise to support a more personalised approach to obesity management.

About Kauvery Hospital:

Kauvery Hospital is a leading multi-specialty healthcare provider in India, recognized for its commitment to clinical excellence, patient-centric care, and advanced medical infrastructure. The hospital group operates a network of twelve hospitals across six key locations – Trichy, Chennai, Salem, Hosur, Tirunelveli, and Bengaluru – and employs over 11000 healthcare professionals. Serving millions of patients annually, Kauvery Hospital is dedicated to delivering high-quality secondary and tertiary care, supported by a strong focus on innovation, clinical outcomes, and continuous advancement in healthcare delivery.