Sunday, July 12, 2026
Blog

2 கோடி ஏமாற்றிய கில்லாடிகள்! எதற்கு தெரியுமா?!

சென்னை பெருங்​குடி பகு​தி​யைச் சேர்ந்த பிரதீப்​ராஜா (27), முது​நிலை அறி​வியல் பட்​டம் பெற்​றவர். இவர் தனி​யார் மென்​பொருள் நிறு​வனத்​தில் பணி​யாற்றி வரு​கிறார். இவரிடம், மதுர​வாயல் பகு​தி​யில் தனி​யார் நிறு​வனம் நடத்தி வந்த திரு​வண்​ணா​மலை​யைச் சேர்ந்த சிலம்​பரசன் (35), சென்னை மதுர​வாயலைச் சேர்ந்த பிரபு (41) மற்​றும் அவர்​களது கூட்​டாளி​கள், முன்​னணி பன்​னாட்டு நிறு​வனங்​களில் அதிக சம்பளத்​தில் வேலை வாங்​கித் தரு​வ​தாக கூறி​யுள்​ளனர்.

இதையடுத்து சென்னை மத்​திய குற்​றப்​பிரி​வில் உள்ள வேலைவாய்ப்பு மோசடி புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​தினர். விசா​ரணை​யில், வேலை வாங்​கித் தரு​வ​தாக போலி வாக்​குறுதி அளித்து பலரிடம் பணம் வசூலித்​தது உறு​தி​யானது.

இதனைத் தொடர்ந்து தலைமறை​வாக இருந்த முக்​கிய குற்​ற​வாளி​யான திரு​வண்​ணா​மலை​யைச் சேர்ந்த சிலம்​பரசனை அவரது மாவட்​டத்​திலேயே நேற்று முன்​தினம் கைது செய்​தனர். மேலும், சென்னை மதுர​வாயலில் பதுங்​கி​யிருந்த பிரபு​வும் கைது செய்​யப்​பட்​டார். அவர்​களிடம் இருந்து 2 செல்​போன்​கள் மற்​றும் வழக்கு தொடர்​பான முக்​கிய ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

முதல் கட்ட விசா​ரணை​யில், வேலை​வாய்ப்பு தேடும் இளைஞர்​களின் அவசரத்தை பயன்​படுத்​தி, பிரபல நிறுவனங்​களில் நேரடி நியமனம் செய்து தரு​வ​தாகக் கூறி பலரிடம் லட்​சக்​கணக்​கில் பணம் வசூலித்​தது தெரிய​வந்​துள்​ளது.

இந்த மோசடி​யில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்​கலாம் என்ற கோணத்​தி​லும் விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. கைது செய்​யப்​பட்ட இரு​வரும் நேற்று நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டு, நீதி​மன்ற உத்​தர​வின்​படி சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். மேலும் பா​திக்​கப்​பட்​ட​வர்​கள் வேறு யாரேனும் இருந்​தால் முன்​வந்து புகார் அளிக்​கு​மாறு மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார்​ கேட்​டுக்​கொண்​டுள்​ளனர்​.

மெட்ரோவில் பயணம் செய்யும் போது சத்தமாக பேசினால் அபராதம்!

மெட்ரோ ரயில்​கள், ரயில் நிலைய வளாகங்​களில் சக பயணி​களுக்கு இடையூறு ஏற்​படுத்​தும் வகை​யில் செல்​போனில் சத்​த​மாகப் பேசுவது, காதில் ஹெட்ஃ​போன் பொருத்​தாமல் செல்​போனில் பாட்டு கேட்​பது போன்ற பயண ஒழுங்​கு​முறை விதி​மீறல்​களுக்​கான அபராதம் ரூ.500-ல் இருந்து அதி​கபட்​ச​மாக ரூ.2,500 வரை உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் வெளி​யிட்ட அறிக்​கை: 

மெட்ரோ ரயில் பயண ஒழுங்​கு​முறை​களைப் பின்​பற்​றி, சக பயணி​களின் வசதிக்​கும், அமை​திக்​கும் மதிப்​பளிக்​கு​மாறு அனைத்து பயணி​களை​யும் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் கேட்​டுக் கொள்​கிறது.

மெட்ரோ ரயில் (இயக்​கம், பராமரிப்​பு) சட்​டம் 2002 பிரிவு 59-ன்​கீழ், சக பயணி​களுக்​குத் தொந்​தரவு விளை​விப்​ப​தோ, அவர்​களது வசதிக்கு இடையூறு ஏற்​படுத்​தும் வகை​யில் செயல்​படு​வதோ தண்​டனைக்​குரிய குற்​றம் ஆகும்.

குறிப்​பாக, மெட்ரோ ரயில்​கள் மற்​றும் வளாகங்​களில் செல்​போன் ஒலிபெருக்​கியைப் பயன்​படுத்​து​வது, காதில் ஹெட்போன் (Headphone) பொருத்​திக் கொள்​ளாமல் இசை, வீடியோக்​கள் பார்ப்​பது, செல்​போனில் உரத்த குரலில் பேசுவது ஆகிய செயல்​கள் மூலம் அதிக இரைச்​சலை ஏற்​படுத்​தும் வகை​யில் செல்​போன்​களைப் பயன்​படுத்​து​வதும், மற்​றவர்​களுக்கு இடையூறு விளை​விப்​பதும் தண்​டனைக்​குரிய குற்​ற​மாகக் கருதப்​படும்.

மத்​திய வீட்​டு​வச​தி, நகர்ப்​புற விவ​காரங்​கள் அமைச்​சகம் கடந்த ஜூன் 19-ம் தேதி வெளி​யிட்ட அரசிதழ் அறி​விப்​பின்​படி, ‘ஜன் விஸ்​வாஸ் சட்​டம் 2026’-ன் கீழ் ஒரு புதிய திருத்​தம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. அதன்​படி, மெட்ரோ ரயில் மற்​றும் அதன் வளாகங்​களில் மற்ற பயணி​களுக்கு இடையூறு விளைவிக்​கும் செயல்​களில் ஈடு​படு​வோருக்​கான அபராத தொகை ரூ.500-ல் இருந்து தற்​போது அதி​கபட்​ச​மாக ரூ.2,500 வரை உயர்த்​தப்​பட்​டுள்​ளது. மேலும், விதி​களை மீறும் பயணி​கள் அங்​கீகரிக்​கப்​பட்ட அதி​காரி​களால் மெட்ரோ வளாகத்​தில் இருந்து உடனடி​யாக வெளி​யேற்​றப்​பட​வும் வாய்ப்பு உள்​ளது.

எனவே, சக பயணி​களின் பயணச் சூழலைக் கருத்​தில் கொண்​டு, அனை​வரும் மெட்ரோ ரயில் மற்​றும் அதன் வளாகங்​களில் உரத்த குரலில் பேசுவது, ஒலிபெருக்கி பயன்​படுத்​து​வது (ஸ்​பீக்​கர் மோடு) ஆகிய​வற்றை தவிர்த்​து, காதில் பொருத்​திக் கொள்​ளும் ஹெட்போன்களை பயன்​படுத்​து​மாறு கேட்​டுக் கொள்​ளப்​படு​கிறது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

பாடகி எஸ்.ஜானகி அம்மா இன்று காலமானார்! அவரை பற்றி பார்ப்போம்

ந்திய திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 88. வயது முதிர்வு காரணமாக அவர் மறைந்த தகவலை, சமூக வலைதளத்தில் அவரது குடும்பத்தினர் பகிர்ந்தனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற ஊரில் (1938) பிறந்தவர். மூன்று வயதில் தொடங்கி 10 வயது வரை இசை கற்றார். முதல் மேடை நிகழ்ச்சியில் பாடியபோது இவருக்கு 9 வயது.

‘விதியின் விளையாட்டு’ (1957) என்ற படத்தில் ‘பெண் என் ஆசை பாழானது’ என்பதுதான் இவர் பாடிய முதல் பாட்டு. அடுத்த நாளே ஒரு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்து. கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.

‘மௌன கீதங்கள்’ படத்தில் ‘டாடி… டாடி… ஓ மை டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே…’ பாடலை, அந்த மழலைக் குரலில் கேட்கும்போது சந்தோஷம் பொங்கும். காரணம், காற்றை கவுரவப்படுத்தும் அந்தக் குரல் எஸ்.ஜானகினுடையது!

குழந்தையின் குரலா, குமரியின் குரலா, காதலியின் ஏக்கமா, காதலனோடு கிறக்கமா, ‘பழைய நெனப்புடா பேராண்டி… பழைய நெனப்புடா…’ எனப் பாடும் கிழவியின் விசனமா? – இப்படி எந்த உணர்ச்சியையும் குரலில் வடிக்கும் திறனைப் பெற்றிருந்த எஸ்.ஜானகியே, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தென்னிந்திய இசையமைப்பாளர்களின் ஏகோபித்த முதல் தேர்வாக இருந்தார்.

1957-ல் இருந்து தமிழ் மொழியில் பாடி வந்தவர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம், வங்காளம், சமஸ்கிருதம், ஒடியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், ஜெர்மன், படுகா, பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் பாடியிருக்கிறார்.

17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற பெருமை பெற்றவர். அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும், அனைத்து பின்னணிப் பாடகர்களுடனும் இணைந்தும் பாடியுள்ளார். ‘இளையராஜா – எஸ்.பி.பாலசுப்ரமணியம் – எஸ்.ஜானகி’ கூட்டணி தென்னிந்திய இசைத் துறையில் தனி முத்திரை பதித்தது. 

பாடலில் பொதிந்துள்ள உணர்ச்சி மற்றும் நடிகைகளுக்கு ஏற்ற வகையில் குரலை மாற்றிப் பாடக்கூடியவர். குழந்தைக் குரலில் பாடுவதிலும் வல்லவர். இவர் பாடிய ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’, ‘செந்தூரப் பூவே’, ‘காற்றில் எந்தன் கீதம்’, ‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’, ‘ராதைக்கேற்ற கண்ணனோ’, ‘அம்மா.. அம்மா..’ போன்றவை காலத்தால் அழியாதவை.

திரைப்படப் பின்னணிப் பாடல்கள், தனிப் பாடல்கள் என பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களை தானே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். ஒரு தெலுங்குப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

கலைமாமணி, கேரள மாநில சிறப்பு விருது பெற்றவர். சிறந்த பாடகிக்கான தேசிய விருது 4 முறை, கேரள அரசு விருது 14 முறை, ஆந்திர அரசு விருது 10 முறை, தமிழக அரசு விருது 7 முறை பெற்றவர். இலங்கையில் 1992-ல் இவருக்கு ‘ஞான கான சரஸ்வதி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

2013-ல் மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. மிகவும் தாமதமாக கிடைக்கும் கவுரவம் என்று கூறி அதை ஏற்க மறுத்து விட்டார். ‘காற்றில் ஜானகியின் கீதம்…’ எப்போதும் உலகோடு இரண்டறக் கலந்திருக்கும். எங்கோ, எவர் செவியிலோ கேட்டுக்கொண்டே இருக்கும்.

எஸ்.ஜானகி பாடிய பல தனிப்பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. இப்பாடல்கள் மகிழ்ச்சி, சோகம், ஏக்கம், பிரிவு, கொண்டாட்டம், ஆசை, தாய்மை எனப் பல விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும் என்றென்றும் கேட்கக்கூடிய செவ்வியல் தன்மையைப் பெறுகின்றன.

“எனது ரசிகர்கள்தான் எனக்குப் பெரிய விருது” என்று ஜானகி சொன்னது போல ரசிகர்களின் மனங்களில் என்றைக்குமே அவருக்கு இடமிருக்கும். தென்னிந்திய மொழிகள் இருக்கும் வரை இவ்வுலகில் ஜானகியின் குரல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்.

‘லவ் ஓ லவ் விமர்சனம்’ RATING 2.9/5

ஹீரோ பவிஷ் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டு துபாய் தப்பி செல்வதாக போலிஸ் ஆபிசர் செல்வராகவன் பவிஷை கைது செய்து வைக்க, அங்க வந்த மாதர் சங்கம் பவிஷுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என போராட, பவிஷ் தன் கதையை செல்வராகவனிடம் சொல்கிறார்.

பவிஷ், நாக துர்காவை பார்த்துவுடன் காதல் அவருகாக என்ன வேண்டும்னாலும் செய்யலாம் என காதலித்து வருகிறார். நாக துர்காவோ பவிஷ் தகுதிக்கு மீறி செலவு வைக்கிறார். அவரும் கடன் வாங்கி தன் ஆசை காதலிகாக செலவு செய்கிறார். கடன்காரராகவும் மாறுகிறார்.

ஒரு கட்டத்தில் நாக துர்கா ஒரு சில காரணத்தால் உடனே திருமணம் செய்ய வேண்டும் என சொல்ல, அதற்குள் நாக துர்கா அம்மா வந்து பவிஷ் ஒரு கடன்காரர் இவர் எப்படி என் பெண்ணை பார்த்துகொள்வார் என பவிஷ் அப்பா கே எஸ் ரவிகுமார் போலிஸ் ஸ்டேஷனில் எல்லோர் முன்னிலையும் அசிங்கப்படுத்துகிறார்.

இதனால் மனமுடைந்து கே எஸ் ரவிகுமார் மற்றும் குடும்பமே பவிஷ் மீது கோபம் கொள்ள, அதே நேரத்தில் பவிஷ் வேலையும் போக, காதலால் தன் வாழ்க்கை சந்தோஷம் எல்லாம் போக, பவிஷ் வாழ்க்கை என்ன ஆனது, இவர்கள் காதல் என்ன ஆனது என்பதே மீதிக்கதை….

பவீஷ், நாக துர்கா என இருவரும் கதாபாத்திரத்திற்கு தங்களால் முடிந்த அளவுக்கு நியாயம் சேர்த்துள்ளார்கள். காதலிக்காக பர்ஸ் முழுவதும் கரைந்து, குடும்பம் சமூகம் என அசிங்கப்பட்டு அதிலிருந்து அவர் நாக துர்காவுக்கு போடும் கண்டிஷன் அப்போது அவர் செய்யும் சேட்டை என இந்த ஜென் தனுஷாகவே கண்முன் ஜொலிக்கிறார், சிறப்பாகவும் செய்துள்ளார்.

இந்த படம் காதல் மோதல் பிரிவு அதை தொடர்ந்து ஒரு ரிவெண்ச் என்பது போல் செல்கிறது, அதில் ஒரு சில இடங்கள் ரசிக்க வைத்தாலும் பல இடங்கள் சோதிக்கிறது தான். எந்த காலத்தில் இருக்கிறோம், இன்னும் பசங்களா காதலுகாக செலவு பண்றாங்க, பொண்ணுங்க செலவு வைக்கிறாங்க என்பது போல் 90ஸ் சினிமா வசனங்கள் வந்தால் பரவாயில்லை காட்சிகளும் அப்படியே உள்ளது.

மைனஸ்: கிளைமேக்ஸ் பெரிய அளவில் இல்லை…. கதை மனதை தொடும் அளவில் இல்லை…

மொத்தத்தில் இந்த ‘லவ் ஓ லவ்’ குழப்பமான காதல்.

‘லக்‌ஷ்மி காந்தன் கொலை வழக்கு’ விமர்சனம் RATING 3.4/5

டிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், வருமையில் சிக்கித்தவிக்கும் நாயகன் வெற்றி திருடுகிறார். வேலை கிடைக்கும் வரை அதையே தொழிலாக வைத்துக்கொண்டு பயணிக்கும் அவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் கொலை குற்றவாளியாகிறார். வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதிக்கிறது. தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தன் குற்றத்திற்கான தண்டனையாக இருந்தாலும், அதன் மூலம் தனக்கான நீதி மறுக்கப்பட்டிருக்கும் வாதத்தை வெற்றி முன் வைக்கிறார். அவரது வாதம் சரியா? தவறா? என்பதே கதை…

இறுக்கமான மனநிலையோடு இருந்தாலும், தனது கருத்துகளை தெளிவாக எடுத்துக்கூறும் வெற்றி, படம் முழுவதும் பேசிக்கொண்டு இருந்தாலும், அந்த காட்சிகளை சரியான முறையில் கையாண்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்.

நாயகியாக வருகிறார் பிரிகிடா சகா. மூக்கும் முழியுமாக சிரிக்கும் கண்களுடன் அந்த கிராமத்து வெள்ளந்திப் பெண்ணாக வருகிறார்.காதல் காட்சிகளிலும் கடைசியில் ஒரே ஒரு திருட்டு என்று கணவனைத் திசை மாற்றுவதிலும் என்று தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

வெற்றியின் நண்பராக வரும் லொள்ளு சபா மாறன், அம்மாவாக நடித்திருக்கும் லிஸி ஆண்டனி, தொழிலதிபர் லக்‌ஷ்மிகாந்தனாக நடித்திருக்கும் கவிதா பாரதி, வெற்றியைத் தூக்கிலிடும் ‘ஹேங்மேன்’ பணி செய்பவராக வரும் சுப்பிரமணியம் சிவா, கன்யா பாரதி, அருவி மதன் ஆகியோர் தங்களது எல்லை தாண்டாத நடிப்பின் மூலம் ஈர்க்கிறார்கள்.

தர்புகா சிவாவின் இசையும், பாடல் வரிகளும்கதையின் தன்மை உணர்த்தும் வகையில் உள்ளன. முதல் பாதியில் நிறைய பேசிக் கொண்டிருப்பதாக தோன்றினாலும் அந்த சலிப்பு தெரியாத அளவிற்கு சரளமாகப் படத்தொகுப்பு செய்துள்ளார்படத்தொகுப்பாளர் பூபதி வேதகிரி.

சிறைச்சாலையில் உள்ள காவல்துறை அதிகாரியாக வருகிறார் ரங்கராஜ் பாண்டே.கண்டிப்பும் அதே நேரம் கருத்துகளைக் கவனிக்கிற நுண்ணுணர்வும் கொண்டவராக வருகிறார்.தொலைக்காட்சி விவாதங்களைப் பார்த்த அவர் இதில் கைதியுடன் ஆன கருத்து மோதலில் தனது பாத்திரத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.

மைனஸ்: படத்தில் ரெட்டியார் என்ற சமூக பெயர் எதற்கு? என்றே தோணுகிறது….. கதையில் கூடுதல் கவனம் தேவை…

மொத்தத்தில் இந்த ‘லக்‌ஷ்மி காந்தன் கொலை வழக்கு’ மனித துடிப்பு.

காவேரி மருத்துவமனையின் ‘ஹைபிரிட் கேத் லேபில்’

சென்னை:

ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை, பழுதடைந்த இரண்டு இதய வால்வுகளுக்கு மீண்டும் ஒரு திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை இன்றி வெற்றிகரமாக சிகிச்சையளித்து சாதனை படைத்துள்ளது. பெருந்தமனி வால்வு நோய்க்காக செய்யப்பட்ட திறந்தநிலை அறுவை சிகிச்சைக்குப் பிறகு, உலகிலேயே முதல்முறையாக முழுமையாக கதீட்டர் வழியில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை இதுவெனக் கருதப்படுகிறது.


ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு சிக்கலான இதய வால்வு அறுவை சிகிச்சை செய்துகொண்ட 58 வயது நபருக்கு இந்த நவீன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நோயாளியின் சொந்த நுரையீரல் தமனி வால்வை (Pulmonary valve) எடுத்து, பழுதடைந்த பெருந்தமனி வால்வுக்குப் (Aortic autograft) பதிலாகப் பொருத்தும் சிகிச்சையே ‘ராஸ்’ (Ross) செயல்முறை என அழைக்கப்படுகிறது. அதேசமயம், எடுக்கப்பட்ட நுரையீரல் தமனி வால்வுக்குப் பதிலாக தானமாகப் பெறப்பட்ட மனித வால்வு பொருத்தப்படும். ராஸ் சிகிச்சை நீண்டகாலத்திற்குச் சிறந்த பலன்களை அளித்தாலும், நாளடைவில் இரண்டு வால்வுகளும் தேய்மானம் அடைந்து, பிற்காலத்தில் மாற்று சிகிச்சை தேவைப்படலாம்.


நோயாளியின் பின்னணி மற்றும் சவால்கள்
இந்நோயாளிக்கு கடுமையான அயோர்டிக் பின்னொழுக்கு, மிதமான நுரையீரல் சுருக்கத்துடன் கூடிய கடுமையான நுரையீரல் பின்னொழுக்கு, தீவிர நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் மற்றும் மிதமான மிட்ரல் பின்னொழுக்கு ஆகிய பாதிப்புகள் இருந்தன. கால்கள் மற்றும் வயிற்றில் கடுமையான வீக்கம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டில் குறைபாடு, தீவிர மூச்சுத்திணறல் உள்ளிட்ட இதயச் செயலிழப்புப் பிரச்சனைகளால் அவர் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரால் நிம்மதியாக உறங்க முடியாத நிலை இருந்தது. மேலும், நியூயார்க் ஹார்ட் அசோசியேஷன் (NYHA) அளவுகோலின்படி, இதயச் செயலிழப்பில் மிகத் தீவிரமான III-IV நிலையில் அவர் இருந்தார்.


அவர் பல்வேறு மருத்துவமனைகளை அணுகியபோதும், இரண்டாவது முறையாக திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை செய்வது மிகச் சிக்கலானது மற்றும் அதிக ஆபத்து நிறைந்தது எனத் தெரிவிக்கப்பட்டது. கதீட்டர் அடிப்படையிலான சிகிச்சையை மேற்கொள்வது கூட சவாலானது என்றே மருத்துவ நிபுணர்களால் கருதப்பட்டது.


காவேரி மருத்துவமனையின் நவீன சிகிச்சை முறை காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட்டின் பன்முக மருத்துவ நிபுணர் குழு, முப்பரிமாண எக்கோ கார்டியோகிராபி மற்றும் கார்டியாக் சிடி ஸ்கேன் மூலம் நோயாளியின் நிலையை விரிவாக ஆய்வு செய்தது. அதன் முடிவில், மீண்டும் ஒரு திறந்தநிலை அறுவை சிகிச்சை இன்றி, முழுமையாகக் கதீட்டர் மூலமாகவே பழுதடைந்த இரண்டு வால்வுகளுக்கும் சிகிச்சையளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டன.

மருத்துவத் துறையில் இதுவரை இதுபோன்றதொரு சிகிச்சை பதிவு செய்யப்படாததால், சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பு, ட்ரான்ஸ்கதீட்டர் ஹார்ட் வால்வ் தெரபிஸ் பிரிவின் இயக்குநர் டாக்டர் ராஜாராம் அனந்தராமன் தலைமையிலான மருத்துவக் குழுவும், சர்வதேச வல்லுநர்கள் குழுவும் இச்சிகிச்சை முறையை விரிவாக ஆய்வு செய்தன.


முதலில் பல்மனரி ஹோமோகிராஃப்ட் பகுதியில் கவர்டு ஸ்டெண்டுகள் மற்றும் பலூன் விரிவாக்கம் மூலம் தயார்படுத்தப்பட்டு, பின்னர் மெட்ரானிக் மெலடி ட்ரான்ஸ்கதீட்டர் பல்மனரி வால்வு பொருத்தப்பட்டது. அதன்பின் பழுதடைந்த அயோர்டிக் ஆட்டோகிராஃப்டில் (Aortic autograft), எட்வர்ட்ஸ் சேபியன் 3 அல்ட்ரா ரெசிலியா பலூன்-விரிவாக்கக்கூடிய வால்வு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. புதிய வால்வை நிலைநிறுத்த உதவுவதற்கு வால்வில் கால்சியப் படிமங்கள் இல்லாததால், இச்சிகிச்சைக்கு மிக நுணுக்கமான திட்டமிடலும், துல்லியமான செயல்பாடும் தேவைப்பட்டது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப உதவியுடன் ‘விர்ச்சுவல் வால்வ் இம்ப்ளான்ட்’ கணிப்பு மாதிரிகள் பயன்படுத்தப்பட்டன. முழு மயக்கவியலின் கீழ், உணவுக்குழாய் வழியாக தொடர்ச்சியான எக்கோ கார்டியோகிராபி வழிகாட்டுதலுடன் ஹைபிரிட் அறுவை சிகிச்சை அரங்கில் இச்சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.


முழுமையாக குணமடைந்த நோயாளி
தீவிர சிகிச்சைப் பிரிவில் சில நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி, எவ்விதச் சிக்கலுமின்றி குணமடைந்து வீடு திரும்பினார். இரண்டு வாரங்களுக்குப் பிறகான பரிசோதனையில் அவரது உடல்நிலையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. வீக்கம் முழுமையாகக் குறைந்து, NYHA Class I இயல்பு நிலைக்கு அவர் திரும்பியிருந்தார். தற்போது அவரால் நிம்மதியாக உறங்க முடிவதுடன், எவ்விதச் சிரமமுமின்றி தினமும் 20-30 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சியும் மேற்கொள்ள முடிகிறது.


டாக்டர் ராஜாராம் அனந்தராமன் (இயக்குநர் – ட்ரான்ஸ்கதீட்டர் ஹார்ட் வால்வ் தெரபிஸ், காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட், ஆழ்வார்பேட்டை) கூறியதாவது:


“ராஸ் சிகிச்சைக்குப் பிறகு அயோர்டிக் மற்றும் பல்மனரி ஆகிய இரண்டு வால்வுகளும் பழுதடைந்தால், அதற்கான சிகிச்சைத் தேர்வுகள் மிகவும் குறைவு. ஏனெனில், மீண்டும் ஒரு திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்வது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். துல்லியமான ஸ்கேனிங், மிகச் சரியான திட்டமிடல் மற்றும் பல்வேறு மருத்துவப் பிரிவுகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலமாகவே, மார்பைத் திறக்காமல் கதீட்டர் முறையிலேயே பழுதடைந்த இரண்டு வால்வுகளையும் எங்களால் வெற்றிகரமாக மாற்ற முடிந்தது. எங்கள் அறிவுக்கு எட்டியவரை, உலக மருத்துவ வரலாற்றில் முழுமையாக கதீட்டர் மூலம் ‘டபுள் ட்ரான்ஸ்கதீட்டர் ராஸ் ரெஸ்க்யூ’ சிகிச்சை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். வேறு வழியின்றி தவிக்கும் அதிக ஆபத்துள்ள நோயாளிகளை கவனமாகத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மாற்று வழியில் மறுவாழ்வு அளிக்கும் சாத்தியக்கூறுகளை இந்த வெற்றிகரமான சிகிச்சை வெளிப்படுத்தியிருக்கிறது.”


காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனரும் மற்றும் செயல் இயக்குநருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில்,

“இதயக் கட்டமைப்பு சார்ந்த நவீன சிகிச்சை முறைகள், சிக்கலான வால்வு நோய்களுக்கான சிகிச்சைகளை முற்றிலும் மாற்றி வருகின்றன. இவ்வளவு சிக்கலான ஒரு சிகிச்சையை மேற்கொள்வதற்கு அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழு, அதிநவீன ஸ்கேனிங் வசதிகள், ஹைபிரிட் அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் பல்வேறு மருத்துவப் பிரிவுகளின் தடையற்ற ஒருங்கிணைப்பு ஆகியவை அவசியம். இந்தச் சாதனை, காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட்டில் உள்ள உயர்தர மருத்துவ நிபுணத்துவம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைப் பிரதிபலிக்கிறது. மேலும், இந்தியாவில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவ ஆதாரங்களின் அடிப்படையிலான அதிநவீன சிகிச்சைகளை வழங்குவதில் உள்ள எங்களது தொடர் அர்ப்பணிப்பையும் இது எடுத்துரைக்கிறது.”

‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படம்

நடிகர் யோகி பாபு நடித்து 300 ஆவது திரைப்படமாக வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளி வர இருக்கும் திரைப்படைப்பு ‘அர்ஜுனன் பேர் பத்து’.

இப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் யோகி பாபுவுடன் ,அனாமிகா மஹி,காளி வெங்கட், அருள் தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி, எம் சௌந்தர்யா சரவணன் , ரஞ்சன் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.மு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

பாடல்களை கார்த்திக் நேத்தாவும் வசனத்தை எம் .ஆர் .அருண் சந்தரும் எழுதியுள்ளனர். கலை இயக்கத்தை B. சேகரும் சண்டைக் காட்சிகளை ஓம் பிரகாஷும் கவனித்துள்ளனர். ஆடியோ லஹரி மியூசிக்.

தேவ் சினிமாஸ் சார்பில் கிருத்திகா தங்கப் பாண்டி எஸ் மற்றும் தங்கப்பாண்டி. D தயாரித்துள்ளனர்.

இணைத் தயாரிப்பு: எல் .சுந்தரபாண்டி

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவிழா பிரசாத் லேப் திரையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் படக் குழுவினருடன் ஏராளமான சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

விழாவில் கதை நாயகன் யோகி பாபு பேசும் போது,

“எல்லாருக்கும் வணக்கம். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் தங்கபாண்டி சார், கீர்த்திகா மேடம்,இயக்குநர் ராஜ்மோகன் உங்களுக்கு எல்லாம் ரொம்ப நன்றி.
இது எனது 300 ஆவது படம் என்று எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த நம்பருடன் நாமே ஒரு வரையறை வைத்துக் கொள்ளக் கூடாது.


எனவே 300 என்ற எண் எனக்குப் போதாது.ஒரு நடிகராக இருந்து கொண்டு நாமே ஒரு எண்ணிக்கை போட்டுப் பெருமைப்படுத்திக் கொள்ளக் கூடாது. அந்த எண்ணிக்கையைக் கடைசி காலத்தில் தான் சொல்ல வேண்டும்.
நாகேஷ் சார், மனோரமா அம்மா போன்ற ஜாம்பவான்கள் நடித்த எண்ணிக்கையைப் போல் நானும் நிறைய படங்கள் நடித்துப் பெரிதாக வளர வேண்டும். அந்த அளவிற்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்தப் படத்தில் நடித்த சென்ட்ராயனுக்கு நன்றி.இந்தப் படத்தில் நான் அழுவது போல் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்று நினைக்கிறேன்.
அடுத்து மைனா உங்களுக்கு ரொம்ப நன்றி. கதாநாயகி அனாமிகாவுக்கு நன்றி.

நான் 2016 லேயே நயன்தாரா கூட நடித்து விட்டேன். இனி யாருடன் நடிக்க வேண்டும் என்கிற கவலை இல்லை.எந்தக் கதாநாயகியுடனும் நடிக்க வேண்டும் என்ற கவலை இல்லை.நமக்குக் கதை தான் முக்கியம் ,கதாநாயகி அல்ல.


இமான் சார் எனக்குப் பிடித்த இசையமைப்பாளர். அவர் என்னைப் பாராட்டிப் பேசினார். ஆனால் நானும் அவரை எப்போதும் பாராட்டிக் கொண்டிருக்கிறேன். நானும் பிரபு சாலமன் சாரும் ‘மேம்போ’ படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது எப்போதும் அவரைப் பற்றித் தான் பேசுவோம். அவரும் பெருமையாகச் சொல்வார்.
நான் முன்னணிப் பாத்திரத்தில் நடிக்கும் படங்களின் இசையை அவரிடம் தர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.கண்டிப்பாக நீங்கள் செய்து தர வேண்டும். இந்தப் படத்துக்காக அவரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன், அதைச் செய்து கொடுத்து உதவினார்.ரொம்ப நன்றி சார்.காளி வெங்கட் என் நல்ல நண்பர். நான் அழைத்ததும் உடனே வந்து விட்டார்.அவர் நாயகனாக நடிக்கும் படங்களில் இரண்டு காட்சிகளுக்குக் கூப்பிட்டால் கூட போய் நடித்துக் கொடுப்பேன். நித்திலன் இங்கே வந்ததற்கு ரொம்ப நன்றி.பாடல் எழுதியிருக்கும் கார்த்திக் நேத்தா சாருக்கும் நன்றி.


மேலும் இங்கே வந்துள்ள மதன் சார், ரமேஷ் சார், சௌந்தர்யா எல்லாருக்கும் ரொம்ப நன்றி. கேமராமேன் பிரதீப்,உதவி இயக்குநர்கள் எல்லாருக்கும் ரொம்ப நன்றி.

இந்தப் படத்தின் இயக்குநர் ராஜ்மோகன் எனக்கு நீண்ட காலமாக நல்ல பழக்கம்.

ஆற்காடு பக்கத்தில் ஒரு கிராமம் தான் எங்கள் தாத்தாவோட பூர்வீகம். நாங்கள் பிறந்ததெல்லாம் எல்லாமே சென்னைதான். வெளியூரிலிருந்து வந்தவர்களுக்குத் தான் சினிமா கஷ்டம் என்று கிடையாது .சென்னையில் பிறந்தவர்களுக்கும் சினிமா கஷ்டம் தான். சென்னை வாசிதான் நாங்க எல்லாமே. நான் அதை இந்த 24 வருஷம் அனுபவப்பட்டுத் தெரிந்திருக்கிறேன்.

2009 வந்து யோகிதான் உங்களுக்குத் தெரியும். அதுக்கு முன்னாடி நான் லொள்ளுசபா போல எல்லா சேனலிலும் நிகழ்ச்சிகளில் பணியாற்றி இருக்கிறேன்.எல்லார் கூடவும் பணியாற்றி இருக்கிறேன் ஆர்ட் டைரக்டர் இடம் உதவியாளராக வேலை பார்த்துள்ளேன். இப்படி நிறைய வேலை பார்த்திருக்கிறேன். நாம் வளர வேண்டும் என்றால் அதெல்லாம் செய்துதான் ஆக வேண்டும்.அவை யாவும் என்னுடைய வளர்ச்சிக்கு நான் செய்தவை தான்.

இந்த ராஜ்மோகன் பற்றி இங்கே சொல்ல வேண்டும். ஒரு நாள் ராஜ்மோகன் என்னிடம் வந்து ஒரு மாதிரி கதை சொன்னான்.அதன் பிறகு ஆளே காணோம். கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டான். மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் என் அலுவலகத்தில் இருக்கும்போது ராஜ்மோகன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று நினைவுவந்தது. உடனே அவனுக்குப் போன் செய்தேன். என்ன செய்கிறாய் என்று கேட்டேன். இது மாதிரி ஒன்று செய்து கொண்டிருக்கிறேன் என்றான் உடனே வா படம் பண்ணலாம் என்று அழைத்தேன். அதற்குப் பிறகுதான் சந்தித்தோம். அப்படித்தான் இந்த படம் ஆரம்பித்தோம்.இது மாதிரி நிறைய உதவி இயக்குநர்களுக்கு நான் உதவி செய்யத் தயாராக இருக்கிறேன் நல்ல கதையோடு வாருங்கள். சரியாகச் செய்யுங்கள். மீண்டும் எனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி”. என்றார்.

பேசி முடித்ததும் அவருடன் செய்தியாளர்கள் கலந்துரையாடிய போது அவரிடம் யாருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்று கேட்ட போது, “கமல் சாருடன் மட்டும் தான் இன்னும் நடிக்கவில்லை. விரைவில் நடிப்பேன் என்று நம்புகிறேன் “என்றார். மேலும் யோகி பாபு பகிர்ந்து கொண்டவை:

“300 படங்கள் வரை வந்துள்ளதற்குத் தெய்வ பக்தி காரணம்.நான் வழங்கும் முருகன்தான் அதற்குக் காரணம். எனக்கு முருகன் மேல் பெரிய நம்பிக்கை உள்ளது.

நான் எந்த பிரேமில் தலை காட்டினாலும் என்னை ஒரு நகைச்சுவை நடிகராகத்தான் பார்க்கிறார்கள். நகைச்சுவை வேடங்கள் தான் எனக்குச் சோறு போடுகிறது. அதை முதலில் நான் திருப்தி செய்ய வேண்டும். அதனால் அதை நிறுத்த மாட்டேன். சில படங்களில் லீடு என்று முன்னணிப் பாத்திரங்களில் என்னைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் அவ்வளவுதான். மற்றபடி நான் ஒரு நகைச்சுவை நடிகராகத் தான் என் காலத்தை ஓட்டுகிறேன். என்னை ஆதரித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. அவர்களுக்கு நான் இன்னும் படங்களின் மூலம் கொடுக்க வேண்டும், நிச்சயம் செய்வேன்” இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னதாக தயாரிப்பாளர் தங்கப்பாண்டி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

மேலும் விழாவில்சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சுசீந்திரன், நித்திலன், ஷான் ,படத்தின் இயக்குநர் ரா.ராஜ்மோகன், இசையமைப்பாளர் இமான்,ஒளிப்பதிவாளர் பிரதீப் காளி ராஜா, கதாநாயகி அனாமிகா,மைனா நந்தினி, அருள்தாஸ், காளி வெங்கட், லெனின் பாரதி,சுப்பிரமணியம் சிவா, சென்ட்ராயன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவின் நிறைவில் ட்ரெய்லர் பாடல்கள் வெளியிடப்பட்டன. 300 ஆவது படத்தை முன்னிட்டு நாயகன் யோகிபாபுவுக்குத் தயாரிப்பாளர் ஆளுயர மாலை அணிவித்தார். அத்துடன் விழாவில் கேக் வெட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள்.

யோகி பாபுவின் 300 வது படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளிவர இருக்கிறது.

‘Evil Dead Burn’ Review RATING 3.6/5

The nastiest demonic creatures in horror are back, and in the most grotesque, visceral, brutal, dark, and creative Evil Dead yet. As a new filmmaker takes the wheel, Evil Dead Burn drives in a bold new direction while feeling like a twisted thematic union of every era in Sam Raimi’s series. Serving as the sixth movie in the Evil Dead franchise, which debuted in 1981 with the Raimi-directed and Bruce Campbell-led The Evil Dead, Sébastien Vaniček’s Evil Dead Burn takes the brutality and nastiness that has defined the property’s central evil for the past 45 years to its most extreme level. Though Evil Dead Burn’s narrative and character development struggle to match recent entries, its intense physical gore, psychological torture, and masterful set pieces will simultaneously spoil the audience and satisfy their twisted appetites. If Evil Dead Rise’s cheese grater scene or the 2013 Evil Dead’s self-amputation were too nauseating to get through, Evil Dead Burn offers no reprieve.

From the opening scene, Vaniček transports viewers into a terrifying state of familiarity and uses this cold open to set the tone for the chilling, unforgiving brutality and exhausting ruthlessness his Deadites will bring for the next two hours. I’m not typically very squeamish when it comes to gory horror scenes, especially since they’re often infused with humor, as Lee Cronin frequently did in Rise. That said, in terms of the sheer amount of wincing it evoked, Evil Dead Burn was one of the hardest films to watch that I’ve seen in a theater. One bloody sequence featuring Hunter Doohan’s Joseph made my stomach turn, not just with its disturbing physical qualities, but also the emotional nuances behind the brutality as Vaniček warps the central family’s dynamics.

Evil Dead Burn’s set pieces are so inspired and engrossing that the pacing impressively never wavers. The speed with which the film travels through the Deadite attacks easily could have become monotonous and draining in other hands, but not Vaniček’s. His direction is so energized that a nearly two-hour movie feels more like the franchise’s typical 90-minute fare.

Vaniček is incredibly purposeful with his use of color. Evil Dead Burn is most similar in tone and style to Fede Álvarez’s Evil Dead, with both telling bleak, harsh stories of families that are already broken and openly resentful before the Kandarian Demon (via the Necronomicon) unleashes its ruthlessness upon their dynamics. A grim, gray atmosphere underscorea both films throughout their arcs, with the intentional additions of dark, blood reds in Evil Dead and firey reds and oranges in Evil Dead Burn emphasizing the stories’ most intense thematic and character-driven developments.

The terrors at the family’s old vacation home culminate in a highly suspenseful oner that may go down as one of the greatest sequences in Evil Dead history. The expert stunt-coordination, cinematography, and sheer terror in the cast’s performances unite to create an all-timer set piece, showcasing the elevated craft and unique, visually inspired talent Evil Dead continues to employ that allow such a tradition-heavy franchise to feel so refreshing. Longtime fans will be satisfied with the classic Evil Dead franchise calling cards returning through a novel lens, but may find certain expansions of the series’ lore more divisive. The demons, relics, and Deadite possessions in Evil Dead Burn are handled very differently from past installments. Certain links to franchise history are only skimmed over despite the considerable weight they carry moving forward.

While Vaniček’s innovation and style pull the weight for Evil Dead Burn, the film falters in regard to its screenplay and character development. Audiences are thrust immediately into the tense dynamics of the central family, but the movie doesn’t go far enough beyond the surface to give us a layered understanding of who these characters are and why they’re so dysfunctional. The brief recountings of harsh backstories or context often feel abrupt and insufficient.

These writing stumbles are harder to forgive when the film tackles such a sensitive topic as domestic abuse. With a narrative entrenched in themes of isolation and bitterness amid defective family relationships and grief, Evil Dead Burn’s character introductions struggle to be as captivating as the heavy, poignant set-up of their demonic family inversion requires.

Souheila Yacoub’s Alice gets the most depth, with Hunter Doohan’s Joseph being a not-so-close second, but the script leaves the family without any fully fleshed out members before (and after) they gradually become Deadites. Their motivations and relationships tend to be vague or fairly two-dimensional. Still, an emotional core remains at the heart of Evil Dead Burn’s multi-generational reckoning with the secrets, shame, and resentments that tore them apart long before their twisted reunion.

Script issues aside, however, there are some incredible “hell yeah” moments in Evil Dead Burn that will satisfy franchise fans while making the wait for 2028’s Evil Dead Wrath more excruciating. With Vaniček’s reinvigorating style and unflinching intensity, Evil Dead Burn is a testament to the strength of the franchise’s commitment to bringing in new voices to put their unique stamps on its iconic terrors.

‘முதற்கனல்’ விமர்சனம் RATING 3.4/5

ஸ்ரீகங்கா புரொடக்ஷன்ஸ் ஆர். போத்திராஜ் தயாரிப்பில் இயக்குனர் ஆர்.வெங்கட்டரமணன் இயக்கத்தில், அஸ்வின் விஸ்வநாதன், ராஜேஷ், யோகேஷ், ராமசாமி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘முதற்கனல்’

விமர்சனம்:

கதையின் நாயகன் 17 வயது இளைஞன். தனது அப்பாவுடன் சொந்த ஊருக்கு வருகிறான். புதிய சூழல், புதிய நண்பர்கள் என வாழ்க்கை நகரும் நிலையில், சில தவறான நட்புகள் அவனை கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பக்கம் இழுத்துச் செல்கின்றன. ஆரம்பத்தில் “ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம்” என்ற ஆர்வத்தில் தொடங்கும் பழக்கம், நாளடைவில் அவனது வாழ்க்கையையே ஆக்கிரமிக்கிறது.

பின்னர் தனது சொந்த ஊரான காஞ்சிபுரத்திற்கு திரும்பிய பிறகும், அந்த பழக்கத்திலிருந்து அவனால் வெளியே வர முடியவில்லை. குடும்பத்தினரிடம் பொய் பேசுவது, பணத்திற்காக தவறான செயல்களில் ஈடுபடுவது, தனது எதிர்காலத்தைப் பற்றிய அக்கறையை இழப்பது என போதைப்பழக்கம் அவனை முழுமையாக மாற்றிவிடுகிறது.அதன் பிறகு, ஊரில் பழகிய நண்பனுடன் சேர்ந்து சென்னை செல்கிறான். அங்கு போதைப்பொருள் உலகின் இன்னும் ஆபத்தான முகத்தை சந்திக்கிறான்.

எளிதாக கிடைத்த மகிழ்ச்சி என்று நினைத்த விஷயம், வாழ்க்கையையே சீரழிக்கும் கொடிய வலையாக மாறுகிறது. அந்த இரு இளைஞர்களும் அந்த உலகிலிருந்து மீண்டு வருகிறார்களா? அவர்களது வாழ்க்கை மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகிறதா? என்பதே படத்தின் மீதிக்கதை…

கதாநாயகனாக நடித்துள்ள அஸ்வின் விஸ்வநாதன், தனது கதாபாத்திரத்தின் ஒவ்வொரு உணர்வையும் மிகவும் இயல்பாக வெளிப்படுத்தி கவனத்தை ஈர்க்கிறார். ஒரு இளைஞனின் கனவுகள், தவறுகள், மனவேதனை, மீண்டு வருவதற்கான போராட்டம் ஆகிய அனைத்தையும் நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்தியிருப்பது அவரது நடிப்பின் சிறப்பாக அமைகிறது.

எடிட்டர் திஸ்யன் சாரதி காட்சிகளை தேவையான வேகத்தில் தொகுத்திருப்பதால், படம் எங்கும் சோர்வடையாமல் இறுதிவரை சுவாரஸ்யமாக பயணிக்கிறது. பின்னணி இசை ஒவ்வொரு சஸ்பென்ஸ் தருணத்தையும் மேலும் விறுவிறுப்பாக்கி, உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு கூடுதல் ஆழத்தை அளிக்கிறது.

பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக திகழ்கின்றன. ராஜேஷ், ராமசாமி, தனுஜா, இலக்கியா, அரி கரன், யோகேஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களுக்கான கதாபாத்திரங்களை முழுமையாக உணர்ந்து நடித்திருப்பதால், படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகள் மேலும் வலிமை பெறுகின்றன.

மொத்தத்தில் இந்த ‘முதற்கனல்’ போதை உணர்வு.

அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையில் 400 அறுவை சிகிச்சைகள் நிறைவு!

சென்னை:

அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை, 400-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததைக் குறிக்கும் விதமாக, குழந்தைகளுக்கான ரோபோடிக் சிறுநீரகவியல் துறையில் தனது சிறப்புச் செயல் மையத்தைத் தொடங்கியுள்ளதாக அறிவித்தது. மூத்த ஆலோசகர் மற்றும் குழந்தைகளுக்கான சிறுநீரகவியல் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் வி. ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் 2012-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம், மருத்துவச் சிறப்பு, புதுமை மற்றும் சிறந்த சிகிச்சை முடிவுகள் ஆகியவற்றில் புதிய அளவுகோல்களை அமைத்து, இந்தியாவின் முன்னோடி மற்றும் தென்னிந்தியாவின் முதல் பிரத்யேக குழந்தைகளுக்கான ரோபோடிக் சிறுநீரகவியல் முயற்சியாக வளர்ந்துள்ளது.

கடந்த பதினான்கு ஆண்டுகளில், இத்திட்டம் சிக்கலான குழந்தைகளுக்கான ரோபோடிக் சிறுநீரகவியல் அறுவை சிகிச்சைகளுக்கான ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது; இந்தியா மற்றும் அண்டை நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மேம்பட்ட, குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட (minimally invasive) அறுவை சிகிச்சை சேவைகளை இது வழங்குகிறது. மருத்துவச் சிறப்பு, புதுமை மற்றும் சிறந்த சிகிச்சை முடிவுகள் ஆகியவற்றில் தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்ட இந்தத் திறனானது, இப்போது ‘குழந்தைகளுக்கான ரோபோடிக் சிறுநீரகவியல் சிறப்புச் செயல் மையம்’ என்ற அதிகாரப்பூர்வ அங்கீகாரத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது; மேலும் இது சிறப்புமிக்க குழந்தைகள் அறுவை சிகிச்சை சேவைகளை மேம்படுத்துவதில் அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

தொடங்கப்பட்டதிலிருந்து, இத்திட்டம் அனைத்து வயதுப் பிரிவுகளையும் சேர்ந்த குழந்தைகளுக்கு வெற்றிகரமாகச் சிகிச்சை அளித்துள்ளது. சிகிச்சை பெற்றவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் ஐந்து வயதுக்குட்பட்டவர்கள், அதே சமயம் 10 சதவீதம் பேர் ஒரு வயதுக்குட்பட்ட கைக்குழந்தைகள் ஆவர். மிகச்சிறிய நோயாளிகளிடமும் ரோபோடிக் உதவியுடனான அறுவை சிகிச்சையின் துல்லியம் மற்றும் பாதுகாப்பை நிரூபிக்கும் வகையில், வெற்றிகரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்ட மிகச்சிறிய குழந்தைக்கு வெறும் 50 நாட்களே ஆகியிருந்தன. மேலும் அதன் எடை 3.5 கிலோகிராம் மட்டுமே இருந்தது.

இந்நிகழ்ச்சியில் பேசிய, சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனைகளின் மூத்த ஆலோசகர் குழந்தைகள் சிறுநீரகவியல் நிபுணரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் வி. ஸ்ரீபதி கூறியதாவது: “400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்திருப்பது, மருத்துவச் சிறப்பையும், குடும்பங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் பிரதிபலிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். ரோபோடிக் அறுவை சிகிச்சையானது, சிக்கலான செயல்முறைகளை அதிகத் துல்லியத்துடனும், குறைந்த வலியுடனும், விரைவான குணமடைதலுடனும் செய்ய எங்களுக்கு உதவுகிறது. அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையில், நோயாளிகளின் பாதுகாப்பே எங்களின் முதன்மையான முன்னுரிமையாகும். ஒவ்வொரு குழந்தைக்கும் மிகப் பாதுகாப்பான சிகிச்சையை உறுதி செய்வதற்காக, எங்கள் குழந்தைகள் சிறுநீரகவியல் குழு, மயக்க மருந்து நிபுணர்கள், செவிலியர்கள், அறுவை சிகிச்சை அரங்கப் பணியாளர்கள் மற்றும் உயிரி மருத்துவப் பொறியாளர்கள் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர். இந்தச் சிறப்பு மையத்தின் மூலம், நாங்கள் குழந்தைகள் ரோபோடிக் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து மேம்படுத்துவதோடு, உலகத் தரம் வாய்ந்த சிகிச்சைக்கான அணுகலையும் விரிவுபடுத்துவோம்.”

ரோபோ உதவியுடன் செய்யப்படும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையானது, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு உயர்-வரையறை, முப்பரிமாணப் பெரிதாக்கப்பட்ட காட்சியையும், மனிதக் கையின் அசைவுகளைக் குறிப்பிடத்தக்கத் துல்லியத்துடன் பிரதிபலிக்கும் மணிக்கட்டுக் கருவிகளையும் வழங்குகிறது. இது, சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், நுணுக்கமான பிரித்தல் மற்றும் புனரமைப்பைச் செய்ய உதவுகிறது. இதனால், இது குறிப்பாக நுட்பமான குழந்தை சிறுநீரகவியல் அறுவை சிகிச்சைகளுக்கு மிகவும் மதிப்புமிக்கதாக அமைகிறது.

சிக்கலான சிறுநீரகப் புனரமைப்பின் போது, அறுவை சிகிச்சை நிபுணர்கள் குடல்களைத் தொந்தரவு செய்யாமல் அறுவை சிகிச்சை செய்ய முடியும், இது அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் பாதிப்பைக் கணிசமாகக் குறைக்கிறது. வழக்கமான திறந்த அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடும்போது, ரோபோ உதவியுடன் செய்யப்படும் செயல்முறைகள் பல நன்மைகளை வழங்குகின்றன. அவற்றுள் சிறிய கீறல்கள், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய குறைந்த வலி, விரைவான குணமடைதல், மருத்துவமனையில் குறைந்த நாட்கள் தங்குதல், மற்றும் குறைந்தபட்ச தழும்புகளுடன் கூடிய சிறந்த தோற்ற அழகு சார்ந்த முடிவுகள் ஆகியவை அடங்கும்.

சிறுநீரக அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரண்டு மணி நேரத்திற்குள் குழந்தைகள் பெரும்பாலும் பால் குடிக்கத் தொடங்கிவிடுகிறார்கள், அதே நேரத்தில் பெரும்பாலான நோயாளிகள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். இது குழந்தைகள் விரைவில் குணமடையவும், குடும்பங்கள் விரைவாக வீடு திரும்பவும் உதவுகிறது.

இந்தத் தொடக்க விழா குறித்து கருத்து தெரிவித்த அப்பல்லோ மருத்துவமனைகளின் வியூக இயக்குநர் திருமதி. சிந்துரி ரெட்டி, “ரோபோடிக்ஸ் மற்றும் துல்லியமான செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி குழந்தை மருத்துவத்தை மேம்படுத்துவதற்கான அப்பல்லோவின் பயணத்தில், இந்த சிறப்பு மையத்தின் தொடக்கமானது அடுத்த கட்டத்தைக் குறிக்கிறது. இந்தத் தொழில்நுட்பங்களின் தாக்கம், குழந்தைக்கு சிறிய கீறல்கள், குறைந்த வலி மற்றும் விரைவான குணமடைதலை அளிக்கிறது. மேம்பட்ட குறைந்தபட்ச ஊடுருவல் அறுவை சிகிச்சையை விரைவுபடுத்துவதற்கும், உலகத் தரம் வாய்ந்த சிகிச்சைக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கும், இந்தியா மற்றும் அதற்கு அப்பால் குழந்தை சிறுநீரகவியல் சிகிச்சையின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவுவதற்கும் அப்பல்லோ கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த மைல்கல் வலுப்படுத்துகிறது” என்றார்.

சென்னை பிராந்திய அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் இளங்குமரன் காளியமூர்த்தி மற்றும் சென்னை அப்பல்லோ பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளின் பிரிவுத் தலைவர் டாக்டர் சுசீலா நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில் இந்தச் சிறப்புச் செயல்மையம் (Centre of Excellence) தொடங்கி வைக்கப்பட்டது. புத்தாக்கம், ஆராய்ச்சி, கல்வி மற்றும் மருத்துவச் சிறப்பம்சங்கள் ஆகியவற்றின் மூலம் குழந்தைகளின் சுகாதார சேவையை மேம்படுத்துவதில் அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனைகள் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்தத் தொடக்கம் மேலும் உறுதிப்படுத்துகிறது.

ஒரு தசாப்தத்திற்கும் மேலான முன்னோடி நிபுணத்துவத்தின் அடிப்படையில், இம்மையம் மேம்பட்ட ‘குறைந்தபட்ச ஊடுருவல் அறுவை சிகிச்சை’ (minimally invasive surgery) வசதிகளை விரிவுபடுத்துவதோடு, குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குப் பாதுகாப்பான சிகிச்சைகள், விரைவான குணமடைதல் மற்றும் சிறந்த சிகிச்சை முடிவுகளைத் தொடர்ந்து வழங்கும்.