Tuesday, July 14, 2026
Blog

ட்ரெயின் படத்தின் இசை வெளியீட்டு விழா!

வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன், ஐரா தயானந்த, ப்ரீதி கரன், மாளவிகா, தியா ஷர்மா, நாசர், கே எஸ் ரவிக்குமார், சம்பத் ராஜ், நரேன், கலையரசன் மற்றும் பலர் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ட்ரெயின் (Train) படத்தின் இசை  மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சத்தியம் சினிமாஸில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது இதில் மடோன் அஷ்வின், பி எஸ் வினோத் ராஜ், தமிழரசு பச்சைமுத்து, அருண் மாதேஸ்வரன், அமீர், விக்னேஷ் சிவன், சசி, ஆர் பார்த்திபன், ராம், வெற்றிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 
*தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு* அவர்கள் பேசும்பொழுது இன்ப நாள் இது இனிய நாள் இது. மிஷ்கின் பற்றி சொன்னால் நான் ஈன்று எடுக்காத பிள்ளை. எல்லா படத்திற்கும் நான் கதை கேட்பேன் இந்த படத்திற்கு நான் கதை கேட்கவே இல்லை. இந்த படம் கால தாமதம் ஆனதற்கு நான் காரணம் இல்லை. இந்தப் படத்திற்கு தான் முதல் முறையாக பெரிய 8 கம்பார்ட்மென்டம் அமைத்திருக்கிறோம்.  விஜய் சேதுபதி அயராது உழைத்தார். மனிதநேயத்தின் மறுபக்கம் உள்ளவர் அதிகமான அறிவு கொண்டவர். நாசர் மிக அடிமையாக நடித்திருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும். 63 நடிகர் நடிகைகள் நடித்திருக்கிறார்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
 
*மிஷ்கின்*
நந்தலாலா கதை சொல்லும் போது தானு சார் மீட் பண்ணினேன் ஆனா சார்க்கு கதை ஒண்ணுமே புரியல ஆனால் விக்ரமுக்கு அந்த கதை ரொம்ப பிடிச்சது பட் எங்களால் அப்பொழுது ஒன்னா சேர்ந்து படம் பண்ண முடியல அது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு அதற்கு பிறகு தான் தானு சாரை மீட் பண்ணி ஒரு கதை பண்ணலாம்னு சொன்னேன் அவர் விஜய் சேதுபதி வைத்து பண்ணலாமுன்னு சொன்னார் விஜய் சேதுபதி என்கூட ரெண்டு நாள் வொர்க் பண்ணி இருக்காரு ஒரு பத்து வருடத்திற்கு முன்னாடி நான் அவருக்கு நோ சொல்லிட்டு அதுக்கப்புறம் பெரிய நடிகராக வளர்ந்துட்டாரு என்னுடைய சைக்கோ படம் பாத்துட்டு என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் விஜய் சேதுபதி அவரை மிக சிறந்த மனிதனாக நான் பார்த்தேன் இந்தப் கதையை எழுதும் போது விஜய் சேதுபதிக்காக நான் பார்த்து பார்த்து எழுதினேன் இந்தப் படத்தை விஜய் சேதுபதி தவிர வேறு யாராலும் பண்ணி இருக்கவே முடியாது கமல் சார் கூட பண்ணிருக்க முடியாது விஜய் சேதுபதி ஒரு எரிமலை மாதிரி என்னோட படத்தை பத்தி நான் பெருமையா பேசல படம் நல்லா இல்லைனா என்னை செருப்ப கழட்டி அடிங்க விஜய் சேதுபதி நடிப்பை என்னால மறக்கவே முடியாது எல்லாமே முதல் டேக் ஓகே பண்ணிட்டாரு ஒரு காட்சி ஒரு டைம் சொன்னாலே அதை புரிஞ்சு மனசுல இருந்து நடிக்சு முடிச்சுருவாறு நான் நாசர் நரேன் கூட ஒர்க் பண்ணி இருக்கேன் ஆனால் விஜய் சேதுபதி நடிக்க வைத்தது எனக்கு மிகப்பெரிய சந்தோசம் நான் பெருமைப்படுகிறேன் தானு சார்க்கும் ரொம்ப நன்றி உங்க மேல மிகப்பெரிய நம்பிக்கை இருக்கு பிசாசு 2 தயாரிப்பாளருக்கும் என்னுடைய நன்றி அந்தப் படம் வரும் அதுக்காக நான் காத்திருப்பேன் சினிமா அப்படித்தான் இருக்கும் தானு சாருக்கு ரொம்ப நன்றி உங்க காலத் தொட்டு வணங்குகிறேன் இளையராஜா போன்று சுறுசுறுப்பான மனிதராக உங்களைப் பார்க்கிறேன் ரொம்ப நன்றி.
 
*விஜய் சேதுபதி*
இன்னைக்கு எங்களை வாழ்த்த வந்த அத்தனை பேருக்கும் ரொம்ப நன்றி எனக்கு பேசறது நிறைய வார்த்தை இல்ல நான் ரொம்ப கவனிச்சுட்டு இருந்தா இது எல்லாமே எனக்கு கிடைத்த பெருமை இல்லை மிஷ்கின் சாருக்காக தான் நீங்க எல்லாரும் வந்து இருக்கீங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி இந்த படம் எப்ப வரும்னு நாங்க காத்துட்டு இருந்தோம் தானு சார் ஆகஸ்டுல கொண்டு வரேன்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி நான் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக இருக்கும்போது இவர் கிட்ட ஆடிஷன் போயிருக்கும் நான் ஹீரோ ஆனதுக்கப்புறம் ஒரு டைம் என்னை கூப்பிட்டாரு கொஞ்சம் சைக்கோ மாதிரி இருப்பார் நான் டேட் இல்லைன்னு சொல்லிட்டு வந்துட்டேன் சைக்கோ படம் பார்த்ததுக்கு அப்புறம் இவரை எனக்கு ரொம்ப புடிச்சுசு சைக்கோ படம் பார்த்து முடிச்சுட்டு மிஷ்கின் கிட்ட எட்டு மணி நேரம் பேசினேன் எனக்கு ஒரு வாட்ச்  கொடுத்தார் பிசாசு 2 படத்துல ரெண்டு நாள் வொர்க் பண்ணினேன் அதுக்கு அப்புறம்தான்  ட்ரெயின் மூவி நடிச்சேன் செட் கலகலனு இருக்கும் மிஷ்கின் சார் நல்லா நடிக்கிறவங்களுக்கும் நல்லா வேலை செய்றவங்களுக்கும் ஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது அதனால எல்லோரும் சந்தோஷமா வேலை செஞ்சாங்க இவரை சுத்தி இருக்குற எல்லாருக்கும் சந்தோஷமா வச்சு பாரு அறிவு அன்பு இரண்டையும் பகிர்ந்து கொள்வார்கள் இந்தப் படம் உங்களுக்கு திர்லரா இருக்கும் ஆனா எனக்கும் மிஷ்கின் சார்க்கு ரொம்ப ரொமான்டிக் ஐ லவ் யூ மிஷ்கின் சார் என் கூட அடிச்சா எல்லாருக்கும் ரொம்ப நன்றி எல்லாரும் பத்திரமா வீட்டுக்கு போங்க.
 
படத்தில் நடித்த *நடிகை ப்ரீதி கரன்* அவர்கள் பேசும் பொழுது எல்லாருக்கும் வணக்கம் ட்ரெயின் படம் வெளியாக போகிறது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.  ஹார்டுவேர் எல்லாம் விரைவில் திரையரங்கில் பார்ப்பீர்கள். என்ன தேர்ந்தெடுத்ததற்கு மிஷ்கின் சாரிக்கு நன்றி. எந்த இடையூறும் இல்லாமல் படத்தில் நடித்திருக்கிறேன்  நான் ரொம்ப என்ஜாய் பண்ணி நடித்தேன். விஜய் சேதுபதி எனக்கு மிகவும் பிடித்த நடிகர்  யுகி சார் நடிப்பு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு தானு சாருக்கு நன்றி. 
 
படத்தில் நடித்த *நடிகை ஐரா தயானந்த்* அவர்கள் பேசும் பொழுது எல்லோருக்கும் நன்றி ட்ரெயின் என்னுடைய முதல் படம். நான் இங்கே மிகவும் பயத்திலிருந்து இருந்தேன் ஆனா மிஷ்கின் சாரும் அவர்களின் டீமு என்ன சௌகரியம் செய்தார்கள். என்னுடைய இரண்டாவது வீடு மாதிரி இருந்தது. விஜய் சேதுபதி சார் கூட நடிக்கும் போது மிகவும் நடுக்கமா இருந்தது அவர் என்ன சௌகரியம் செய்தார்.  விஜய் சேதுபதி அவர்களுடன் நடித்தது கனவு பலித்தது மாதிரி இருந்தது. எனக்கு தமிழ் தெரியாது என்னை இந்தப் படத்தின் நடிக்க வைத்ததற்கு  தானு சாருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  நாசர் சார் கூட நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கல ஆனாலும் அவர் வீட்டில் இருந்து சாப்பாடு எனக்கு கட்டிக்கொண்டு வந்தாரு பவுசியா மேடம்க்கு என்னுடைய நன்றி. 
 
*நடித்த நடிகை மாளவிக்க சுந்தர்* அவர்கள் பேசும் பொழுது மிஷ்கின் சார் என்னை அழைத்த போது பாடல் பாடுவதற்கு என்று நினைத்தேன் இங்கே வந்த பிறகு தான் தெரிந்தது நடிப்பதற்காக என்று மிஷ்கின் சார் ரொம்ப நன்றி இந்தப் படத்தில் நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது
 
*இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்* அவர்கள் பேசும் பொழுது மிஷ்கின் இயக்கத்தில் நான் நடிப்பது எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது.  பல பரிணாமங்கள் பார்த்தேன் இவர் இயக்கத்தில். நான் நிறைய நல்ல வார்த்தைகள் பேசுவேன் என்று கூறுவார்கள் என்னை விட சுத்தமான வார்த்தைகள் பேசுபவரிடம் அடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. நிறைய கற்றுக் கொடுத்தார். எவ்வளவு கோபம் இருந்தாலும் அடுத்த நிமிடம் மறந்து விடுவார். சூட்டிங் முடிந்ததும் 2000 ரூபாய் கொடுப்பார்.  உள்ளத்தில் ஒரு குழந்தை மிஷ்கின்.  ட்ரெயின் படம் வெற்றி அடைய என்னுடைய கடவுளை வேண்டி வாழ்த்துக்கள் சொல்கிறேன். 
 
*நடிகர் அஜய் ரத்னம்* அவர்கள் பேசும் பொழுது
இந்தப் படத்தினுடைய தாய் தானு. பெரிய தயாரிப்பார்கள் என்னை தேர்ந்தெடுப்பதற்கு நன்றி. மிஷ்கின் ஒரு மாஸ்டர் கடினமான மனிதர் அதிக புத்தகங்கள் படிப்பார். ஆஃபீஸ் நிறைய புத்தகங்கள் தான் இருக்கும். இப்பொழுது அவர் இசை அமைப்பாளர் இந்தப் படத்தில்.  விஜய் என்றால் வெற்றி தான் விஜய் சேதுபதி ரொம்ப வித்தியாசமாக நடித்திருக்கிறார்.  படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றி.
 
*நடிகர் சுரேஷ் மேனன்* அவர்கள் பேசும் பொழுது இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் 
 
*நடிகர் ஷாஜி* அவர்கள் பேசும்பொழுது  இந்தப் படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நிறைய கதாநாயகர்கள் இந்த படத்தில் இருக்கிறார்கள். உயிரை கொடுத்து படம் எடுத்து இருக்கிறார் மிஷ்கின். என்னை தேர்வு செய்ததற்கு நன்றி.
 
*நடிகர் செல்வா* அவர்கள் பேசும்பொழுது மிஷ்கின் சார் உடன் இது எனக்கு மூன்றாவது படம். யூதம் செய், முகமூடி, இப்போ ட்ரெயின். மிஷ்கின் எனக்கு ஒரு டிக்கெட் கொடுத்து இருக்கிறார் அவருக்கு ரொம்ப நன்றி. தானு சார் ரொம்ப நன்றி.
 
*இயக்குனர் மற்றும் நடிகர் சிங்கம் புலி* அவர்கள் பேசும் பொழுது அனைவருக்கும் வணக்கம் சைக்கோ நடிச்சேன் இப்போ ட்ரெயின். இது தானு சார் படம் மிஷ்கின் படம் தானு சார் பாலா சார் தயாரிப்பில் நான் மாயாவி படம் இயக்கினேன். நிறைய கற்றுக் கொண்டே இருக்கிறேன். மிஷ்கின் முதலில் கேமரா படித்தால் பிறகுதான் டைரக்ஷன் படித்தார். அடுத்ததாக நான்கு லட்சம் ரூபாய்க்கு துணி வாங்கி கொடுத்தார். நல்ல மனிதர் இவருடைய உயரத்திற்கு காரணம் அவர் நல்ல குணம். இந்த படத்தில் பணியாற்றியஅனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். என்னுடைய தம்பி விஜய் சேதுபதிக்கு இது மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும். 
 
*நடிகை ஜனனி* அவர்கள் பேசும் பொழுது எல்லோருக்கும் வணக்கம் ஐயோ படம் நடிக்கும் பொழுதே என்னிடம் கூறினார் இந்த படத்தில் நடிக்க வைப்பேன் என்று. இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் பொழுது பயமாக இருந்தது இயக்குனர் அதை சரி செய்தார். படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறுகிறேன். 
 
*நடிகர் நரேன்* அவர்கள் பேசும் பொழுது எல்லாருக்கும் வணக்கம் மிஷ்கினுடன்  இது என்னுடைய நான்காவது படம். தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் அனைத்து திறமைகளும் உள்ளது. அவருடைய வெற்றி என்னுடைய வெற்றி மாதிரி. விஜய் சேதுபதி மாதிரி ஒரு நடிகர் தானு மாதிரி ஒரு தயாரிப்பாளர் மிஷ்கின் இந்த பயணத்தில் கடைசி நடிகர் நான் தான் மிஷ்கின் எப்பொழுதும் தெளிவான ஒருத்தர் அனைவருக்கும் நன்றி 
 
*நடிகர் கணேஷ் வெங்கட்ராம்* அவர்கள் பேசும்பொழுது டிரெயின் பிரேம் எல்லா புதுமையாக இருக்கும். இவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன் ரொம்ப நன்றி சார் 
 
*நடிகர் அன்பு ராஜா* அவர்கள் பேசும் பொழுது 
இந்த படம் இந்திய மக்களுடைய மனசாட்சி ஆகவும், இந்தியா மக்களுடைய மேன்மைகளை பேசக்கூடிய மிக முக்கியமான படம். சேது அண்ணன் ரொம்ப அருமையா நடித்து இருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 
 
*நடிகர் நாசர்* அவர்கள் பேசும்பொழுது உண்மையாகவே ஒரு தந்தை மகனை பார்த்து சந்தோஷப்படுவது போல் எனக்கு இருக்கிறது. சில சமயம் இப்படி ஒரு மகன் பிறந்ததற்காக கோபமும் வருகிறது. இந்தப் படம் உருவாக உதவியாக இருந்த தானு அண்ணன் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். ஏனென்றால் இந்த படம் வழக்கமான படங்கள் போன்று இல்லை.  இந்தப் படத்தை புரிந்து கொண்டு ஒத்துழைப்பதற்கு எங்கள் படக்குழுவின் சார்பாக நன்றி. மிஷ்கின் பற்றி பேசினால் பல மணி நேரம் பேசலாம் மேடை நாகரிகம் கருதி இப்பொழுது கூறுகிறேன் ஐ லவ் யூ மிஷ்கின். எனக்கு மிஸ்கியிடம் மிகவும் பிடித்தது அவருடைய ப்ரொபஷனலிசம். கதை எழுதி முடித்ததும் நான்கு பேரிடம் கொடுத்து படிக்க சொல்வார் அதில் நானும் ஒருவன். நிறம் இரண்டு நல்ல விஷயங்கள் உள்ளது ஒன்று நடிகர்களுக்கான அழகான பாதை போட்டு வைத்திருப்பார் மற்றொன்று நம் விருப்பம் போல் நடிக்க வைப்பார். மிஷ்கின் கவிதைகளை கேட்டு மைக் கண்ணீர் விட்டது. இதுவரை தமிழ் சினிமா பார்க்காத பிரேம் இந்த படத்தில் இருக்கும். எல்லாருக்கும் என்னுடைய நன்றி 
 
*இயக்குனர் மற்றும் நடிகர் யுகி சேதூ* அவர்கள் பேசும்பொழுது தானு சாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தானு தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்கும் ஒருவர். இந்த ட்ரெயின் நல்ல ஓடும் மிக்க நன்றி சார். மிக சிறந்த தயாரிப்பாளர் நீங்க உங்களுக்கு ஆயுள் உயர்ந்த கட்டவுட் நாங்கள் வைக்க வேண்டும். நாசர் சுயசரிதை எழுத நான் தான் சரியான ஆள்.  நாசர் என்னுடைய மிக நெருங்கிய நண்பர். என்னுடைய எல்லா படங்களிலும் நாசர் தான் கதாநாயகன்.  விஜய் சேதுபதி உடைய வெற்றிக்கு காரணமும் அவருடைய உழைப்பு தான். படிப்படியா முன்னுக்கு வந்தவர் கமலஹாசன் படியிலேயே முன்னுக்கு வந்தவர் ரஜினி.  மிஷ்கின் என்னை சைக்கோ படம் நடிக்க சொன்னார் நான் மறுத்து விட்டேன். மீண்டும் இந்த படத்தில் நடிக்க சொன்னார் நான் ஏற்றுக் கொண்டேன். விஜய் சேதுபதி மிக சிறந்த நடிகர் மிகச்சிறந்த ஆளுமை. அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி.
 
*படத்தின் ஒளிப்பதிவாளர் ஃபௌசியா* அவர்கள் பேசும்பொழுது மிஷ்கின் சார்க்கு என்னுடைய முதல் நன்றி. முதலில் எனக்கு பயமாக இருந்தது பிறகு அதை மிஷ்கின் சரி செய்தார்.  இந்தப் படத்தின் கதையும் கதாபாத்திரங்களும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். இந்தப் படத்தில் வேலை செய்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு ஒளிப்பதிவாளரின் பெயரை பதிவு செய்த முதல் படம் இது. 
 
*இயக்குனர் அருண் மாதேஸ்வரன்* அவர்கள் பேசும்பொழுது எல்லாருக்கும் வணக்கம் மிஷ்கின் சார் உங்களுடைய படம் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது.  விஜய் சேதுபதி சார் நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன். நீங்கள் நடிக்கும் படம் அனைத்தும் எனக்கு பிடிக்கும்
 
*இயக்குனர் தமிழரசு பச்சமுத்து* அவர்கள் பேசும் பொழுது எல்லாருக்கும் வணக்கம் என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி மிஷ்கின் சார். உங்களுக்கு ஒரு மனு மட்டும் வைத்துக் கொள்கிறேன் தயவு செய்து எங்களையும் படங்களை பாருங்கள். 
 
*இயக்குனர் PS வினோத் ராஜ்* அவர்கள் பேசும்பொழுது
அனைவருக்கும் வணக்கம் எனக்கு விஜய் சேதுபதி மிஷ்கின் இவர்கள் இரண்டு பேரையும் சிறந்த மனிதர்களாக எனக்கு ரொம்ப பிடிக்கும்.  விஜய் சேதுபதி என் மேல் ரொம்ப அக்கறையா இருப்பார். நான் தொடர்ந்து நன்றி சொல்ற மாதிரி மிஷ்கினிக்கும் மிக்க நன்றி இவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன் 
 
*இயக்குனர் ராம்குமார் பாலசுப்பிரமணியம்* அவர்கள் பேசும் பொழுது
மிஷ்கின் சார் இந்த விழாவிற்கு என்னை அழைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. அவர பார்த்து வளர்ந்து தான் இந்த இடத்திற்கு வந்து இருக்கேன். நான் உங்களுடைய பெரிய ரசிகன். இந்தப் படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. விஜய் சேதுபதி உங்கள பார்க்கவும் எதிர்பார்ப்பாய் இருக்கிறது. எல்லாருக்கும் ரொம்ப நன்றி.
 
*இயக்குனர் மடோன் அஷ்வின்* அவர்கள் பேசும் பொழுது எல்லாருக்கும் வணக்கம் மிஷ்கின் சார் ஒன்று கூறினார் இப்பொழுது படங்கள் நடிக்கிறேன் நிறைய சம்பாதிக்கிறேன் ஆனால் வருத்தமாக உள்ளது காரணம் என்னுடைய படங்கள் வெளிவரவில்லை. ஆனால் இப்பொழுது இவருடைய படைப்பு வெளிவர போகிறது எனக்கு இது மகிழ்ச்சியாக உள்ளது. விஜய் சேதுபதி அண்ணாக்கு என்னுடைய வாழ்த்துக்கள், படத்தில் நடித்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 
 
*நடிகை மற்றும் பாடகி ஷ்ருதி ஹாசன்* அவர்கள் பேசும்பொழுது மிஷ்கின் கிரியேட்டிவ் மைண்ட் உள்ள ஒருத்தர். அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன்.  இந்த வாய்ப்புக்கு நன்றி சார். 
 
*இயக்குனர் அமீர்* அவர்கள் பேசும்பொழுது
அனைவருக்கும் இறைவன் இடத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். மிஷ்கின் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்ட ஒருத்தர். எந்த விமர்சனத்தையும் கடந்து வருவார். எது செய்தாலும் அது என்னுடைய ஸ்டைல் என்று சொல்லுவார். நம்ம எல்லாரும் பாக்கியராஜ் பாரதிராஜா பாலச்சந்தர் படங்கள் எல்லாத்தையும் பார்த்து வளர்ந்திருக்கும் இவர் படம் ஒரு ஸ்டைல் கிரியேட் பண்ணும் அப்படி தனக்கான ஒரு ஸ்டைல் கிரியேட் பண்ணிக்குவார். என்னை கூப்பிட்டு போய் டான்ஸ் ஆட விட்டுட்டார். விஜய் சாராய விட்டுட்டு விஜய் சேதுபதி ரசிக்க வைத்தார். TR சார் க்கு பிறகு மிஷ்கின் தான். மிஷ்கின்ஒரு செல்ல கிறுக்கன் அவருக்கு எந்த விமர்சனம் பற்றியும் கவலை இல்லை போலி இல்லை. மிஷ்கினை நான் ரசித்துக்கொண்டே இருந்தேன். வாழ்த்துக்கள் மிஷ்கின். விஜய் சேதுபதி மாதிரி மரியாதையா பேசுவதற்கு இனை யாருமே இல்லை. விஜய் சேதுபதி படம் என்றாலே நம்பிக்கை. தானு மிகை படுத்தி சொல்ல மாட்டாரு. இந்தப் படம் வெற்றி பெற என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். 
 
*இயக்குனர் சசி* அவர்கள் பேசும் பொழுது
இந்த படத்தை நான் பார்க்கப் மிக முக்கியமான காரணம் மிஸ்கின் உடைய இசை. மிஷ்கின் நடிகர்கள் கிட்ட நடிப்பை வாங்குவது வித்தியாசமா இருக்கும். மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளது. தானு சார் இந்த படம் நீங்கள் நினைப்பது போல் வெற்றி படமாக அமையும். 
 
*இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன்* அவர்கள் பேசும்பொழுது தமிழகத்தை ஆண்டு கொண்டு இருப்பது விசில் சத்தம் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமா நடக்கறதுக்கு காரணம் ரசிகர்கள் உங்களுடைய விசில் சத்தம். ரயிலர் பார்க்கும் பொழுது ஆங்கிலம் படம் பார்ப்பது போல் இருந்தது.  ஒவ்வொரு மனிதனும் உள்ளே ஒரு மாதிரி வெளியே ஒரு மாதிரி இருப்பார்கள் ஆனால் மிஷ்கின் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பார். என்ன நினைக்கிறாரோ அதை தான் பேசுவார். கொஞ்சம் கூட தயக்கம் இருக்காது. நிஜமான மனிதனா நான் அவரை ரசிக்கிறேன்.  எம் ஆர் ராதாவும் மிஷ்கினும் ஒரே மாதிரியானவர்கள். விஜய் சேதுபதி பிலாசபி ஜிலேபி மாதிரி பேசுறீங்க. தோல்வி உங்களுக்கு சந்தோசமா இருக்கும் வெற்றி பயமா இருக்குனு சொன்னீங்க, இந்த படம் உங்களுக்கு மாபெரும் பயம் கொடுக்க போகுது அவ்வளவு பெரிய வெற்றி அடையப்போகுது இந்த படம். மிஷ்கின்க்கு நன்றி சொல்லணும் பவுசியா ஒளிப்பதிவாளரா தேர்ந்தெடுத்ததற்கு. தானுக்கு எனக்கும் நிறைய இருக்கு என்னுடைய முதல் கதை இவருக்கு தான் சொன்னேன். எல்லார்கிட்டயும் என்ன பத்தி இவர் டைரக்டரா வரப்போறாருன்னு சொல்லிக்கிட்டே இருப்பார், அந்த நன்றி கடனுக்காக தான் நான் வந்திருக்கிறேன். அந்த அளவு அன்பு உங்க மேல வச்சிருக்கேன். மிஷ்கின் பயணம் மிக நீண்டது அந்த பயணம் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்.
 
 
*இயக்குனர் விக்னேஷ் சிவன்* அவர்கள் பேசும்பொழுது எல்லாருக்கும் வணக்கம் வாழ்த்துகள் மிஷ்கின் சார் இந்த படத்தில் நடிக்க அழைத்தேன் அவர் மறுத்துவிட்டார். சார் இந்த படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் சார். நானும் ரவுடிதான் படம் இல்லன்னா நான் யாருன்னு யாருக்குமே தெரியாது. அந்த படத்திற்கு ஒரே காரணம் விஜய் சேதுபதி சார் மட்டும்தான். நான் போடா போடி படம் இயக்கிய போது எனக்கு கால் பண்ணி வாழ்த்துக்கள் கூறினார்.  இன்னைக்கு இயக்குனராக இருக்கிற பல பேர் விஜய் சேதுபதி னால தான் இயக்குனர் ஆகியிருக்காங்க அதுக்கு மிகப்பெரிய நன்றி சார்.
 
*இயக்குனர் ராம்* அவர்கள் பேசும்பொழுது
ஒரு ஆறு வருடம் கழித்து மிஷ்கின் காக நடக்கிற ஒரு இசை வெளியீட்டு விழா. இந்த ஆறு வருஷத்துல இரண்டு படம் எடுத்து முடிச்சிட்டான். ஒரு இயக்குனர் எவ்ளோ கஷ்டப்படணுமோ அதை எல்லாமே அவர் பட்டு இருக்கிறார். இந்த ஆறு வருஷத்தில் அவருடைய அவமானங்கள் அவதூறுகள் எல்லாத்தையும் நான் நேர்ல பார்த்திருக்கேன். எல்லாத்தையும் தாங்கிக் கொண்ட ஒரு மனிதர். ஏமாற்றங்கள் நம்பிக்கை துரோகங்கள் அத்தனையும் ஒரு மனிதனுக்கு ஒரே நேரத்துல தாக்கினால் காணாமல் போயிடுவார். மிஷ்கின் இடது கையில் தள்ளிவிட்டு நிற்கிறார். அது அவர் மனிதர்கள் மேலே வைத்துக் கொண்டிருக்கும் நம்பிக்கை. மிஷ்கின் படம் குற்றம் நம்பிக்கை இரண்டும் இருக்கும். தமிழ் சினிமாவின் திரில்லர் படத்தினுடைய தந்தை இவர்தான் நீங்க எவ்வளவு நல்லவராக இருந்தாலும் இந்த உலகத்தில் நடக்கிற தீமைக்கு உங்களுக்கும் பங்கு இருக்கு. மிஷ்கின் கொலையை ரசித்து ரசித்து எடுப்பார் அவர் படத்தில் அவர்களுடைய நியாயம் புரிய வைக்கும்.  செத்துப் போவதற்கு காரணம் அவர்களாகவே இருப்பா இறுதியில் அவர்கள் மீது கருணை வரும் அதுதான் மிஸ்கின் உடைய மொத்த உலகம். விஜய் சேதுபதி நகைச்சுவை கதாபாத்திரங்களை மிக சிறப்பாக கையாளுகிறார், கமல் சாருக்கு பிறகு நல்ல கையாண்டு இருக்கிறார். அவருடைய படம் பார்க்கவும் ஆர்வமா இருக்கேன். தானு எல்லாத்துக்குமே ரெடியா இருக்கக் கூடிய புலி தான் ட்ரெயின் படம் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள். 
 
*இயக்குனர் வெற்றிமாறன்* அவர்கள் பேசும் பொழுது
மிஷ்கின் இசையமைப்பாளர் அதைப்பற்றி தான் பேசணும். அவர் எப்பொழுதும் புதிதாக கற்றுக்கொண்டே இருப்பார். மிஷ்கின்க்கு என்னுடைய வாழ்த்துக்கள். மிஷ்கின் உடைய ஸ்பெஷல் உங்களுக்குள்ளையும் ஒரு கிரேட் இருக்கும் அதை எதிர்பார்க்காத இடங்களில் காட்டுவார். எல்லா படங்களிலும் தொடர்ந்து அது இருக்கும். நாம் அவர் படங்களை பார்க்கும் போது அதை எதிர்பார்த்துக் கொண்டே இருப்போம். பெரிய திரைக்கதை எழுத்தாளர் அவருடைய படங்களுக்கு 100% உழைப்பை கொடுப்பார். தானு சார் மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து இருக்கிறார். சேது என்னுடைய பயணங்களில் ஒரு அங்கமாக இருக்கிறார். இவர் நடிகர் மட்டும் இல்ல ஒரு நல்ல மனிதர். மிஷ்கின் அன்பை வெளிப்படுத்தக்கூடிய ஒருவர்,சேதுவும் அப்படித்தான் ரெண்டு பேரும் சேர்ந்து ஒர்க் பண்ற செட்டு எப்படி இருந்திருக்கும் என்று தெரியவில்லை. எல்லாரும் என்ஜாய் பண்ணி இருப்பார்கள். இந்த படம் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்.

கொட்டாமல் அரிசி போட்ட முதல்வர்! வியந்த விற்பனையாளர்!!

மிழக முதல்வர் விஜய், எங்கு சென்றாலும் அவரின் செயல்கள், இணையத்தில வைரலாகி வரும் நிலையில், இன்று அவர் தனது சொந்த தொகுதியான பெரம்பூரில், புதிய ரேஷன் அட்டை வழங்குவது மற்றும் ரேஷன் கடைகளில் ஆய்வுகள் மேற்கொண்ட நிலையில், ரேஷன் கடைசியில், அவர் மக்களுக்கு பொருட்கள் வழங்கியது குறித்து ரேஷன் கடை ஊழியர் ஒருவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தமிழக முதல்வரும் த.வெ.க தலைவருமான விஜய், இன்று, தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு சென்றிருந்தார். அங்கு புதிய ரேஷன் அட்டை வழக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், 50-க்கு மேற்பட்டோலுக்கு தனது கையால் ரேஷன் அட்டை வழங்கினார்.  தொடர்ந்து ரேஷன் கடைசியில், பொருட்கள் எப்படி எடை போடுகிறார்கள் என்பதை ஆய்வு செய்த விஜய், தனது கையால் மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். 

இந்த ஆய்வின்போது அவர் காரில் வருவதை பார்த்து அப்பகுதி மக்கள் அனைவரும் அவரை வரவேற்க குவிந்தனர். சாலையின் இரு பக்கமும் மக்கள் நின்றுகொண்டு மலர் தூவி அவருக்கு வரவேற்பு அளித்தனர். பெரம்பூர் மட்டும் இல்லாமல், மற்ற பகுதிகளில் இருந்து மக்கள் முதல்வர் விஜயை பார்க்க திரண்டிருந்தனர்.  இந்த சந்திப்பில் விஜய் நடந்துகொண்ட விதம் குறித்து பலரும் மகிழ்ச்சியாக பாராட்டி வரும் பலரும் அவரை பார்ப்பதற்காக வந்ததாக கூறியுள்ளனர். 

அருகில் இருந்து பார்த்தது பெரிய மகிழ்ச்சியாக உள்ளது என்றும் பலரும் தெரிவித்துள்ள நிலையில், ரேஷன் கடைசியில், விஜய் மக்களுக்கு பொருட்கள் வழங்க, எடை போட்டு கொடுத்த பெண் ஊழியர் ஒருவர்

இது குறித்து பேசுகையில், அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. எடை போட்டோம். அதை அவர் எடுத்து மக்களுக்கு கொடுத்தார். முதலில் சர்க்கரை போட்டோம். அதடுத்து பருப்பு, அதன்பிறகு ஆயில் அவர் கையில் கொடுத்து கொடுக்க சொன்னோம். அதன்பிறகு இறுதியாக அரிசி எடை போட்டோம். 

அந்த அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கீழே கொட்டாமல், மக்களுக்கு அழகாக வழங்கினார். அவர் கொட்டும்போது சிறிதளவு கூட கீழே சிந்தவில்லை. இது எதிர்பார்க்காமல் நடந்த நிகழ்வு. அவர் பக்கத்தில் இருக்கும்போது பதற்றம் அதிகமாக இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.

 

 

சூடு பிடிக்கும் கரூர் சம்பவம்! விடாமல் துரத்தும் திமுக!!

ரூர் சம்பவம் தொடர்பான சாட்சிகளை அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளதால், முதலமைச்சர் விஜய் மீது சிபிஐ புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றக் குழுவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவுக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அனுப்பியுள்ளார்.


கடந்த 10ஆம் தேதி கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியுள்ள முதலமைச்சர் விஜய், கரூர் துயரச் சம்பவத்திற்கு காவல்துறையே பொறுப்பு என்றும், அரசியல் சதி இருப்பது போலவும் பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.தவெகவினரின் திட்டமிடப்படாத செயல்பாடுகளும், விதிமீறல்களுமே உயிரிழப்புக்கு காரணம் என தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர், காவல்துறை டி.ஜி.பி. ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்துள்ள நிலையில், அதே உள்துறையைத் தற்போது தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் முற்றிலும் முரணாக பேசி சாட்சிகளைத் திசை திருப்ப முயன்றுள்ளதாக திமுகவின் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் கரூரில் பேசியது குறித்து சிபிஐ தனியாக புகார் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும், அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோருடன் மதியழகன் மற்றும் ஜெகதீஷ் ஆகியோரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சாட்சிகளை அச்சுறுத்தக் கூடாது என பிணைப் பத்திரம் எழுதி வாங்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு!

ன்​னி​யாகுமரி மாவட்​டம் வடக்​கு ​தாமரைகுளம் அருகே நாராயணன்​புதூர் பகு​தி​யைச் சேர்ந்​தவர் சபரிவர்​மன் (33). இவர் அப்​பகு​தி​யில் கடை நடத்தி வந்​தார். கடந்த 9-ம் தேதி மதி​யம் 1.30 மணி​யள​வில் இவரது கடை​யில் தென்​தாமரகுளம் போலீ​ஸார் சோதனை நடத்​தினர். அரசால் தடை செய்​யப்​பட்ட குட்கா பொருட்​கள் இவரது கடை​யில் இருந்​த​தாகக் கூறி, சபரிவர்​மனை கைது செய்து நாகர்​கோ​வில் சிறை​யில் அடைத்​தனர்.

கடந்த 4 நாட்​களாக அவர் விசா​ரணை கைதி என்ற நிலை​யில் இருந்​துள்​ளார். சிறை அறை​யில் நேற்று அதி​காலை​யில் சபரிவர்​மன் மயங்​கிய நிலை​யில் கிடந்​த​தாகக் கூறப்​படு​கிறது. போலீ​ஸார் அவரை ஆசா​ரிபள்​ளம் அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அங்கு மருத்​து​வர்​கள் பரிசோ​தித்​த​போது சபரிவர்​மன் ஏற்​கெனவே உயி​ரிழந்​தது தெரிய​வந்​தது. இத்​தகவல் அவரது குடும்​பத்​தினருக்கு தெரிவிக்​கப்​பட்​டதும் அவர்​கள் அதிர்ச்சி அடைந்​தனர்.

சபரிவர்​மனை போலீ​ஸார் பலமாக தாக்கி உள்​ள​தாக​வும், அவருக்கு எந்​த​வித நோய் பாதிப்​பும் கிடை​யாது எனவும் உறவினர்​கள் குற்​றம்​சாட்​டினர். மருத்​து​வ​மனை வளாகத்​தில் திரண்டு அவர்​கள் போராட்​டம் நடத்​தினர். போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர்​களிடம் எஸ்​.பி. ஸ்டா​லின் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். இதையடுத்​து, போராட்​டம் கைவிடப்​பட்​டது.

2 கோடி ஏமாற்றிய கில்லாடிகள்! எதற்கு தெரியுமா?!

சென்னை பெருங்​குடி பகு​தி​யைச் சேர்ந்த பிரதீப்​ராஜா (27), முது​நிலை அறி​வியல் பட்​டம் பெற்​றவர். இவர் தனி​யார் மென்​பொருள் நிறு​வனத்​தில் பணி​யாற்றி வரு​கிறார். இவரிடம், மதுர​வாயல் பகு​தி​யில் தனி​யார் நிறு​வனம் நடத்தி வந்த திரு​வண்​ணா​மலை​யைச் சேர்ந்த சிலம்​பரசன் (35), சென்னை மதுர​வாயலைச் சேர்ந்த பிரபு (41) மற்​றும் அவர்​களது கூட்​டாளி​கள், முன்​னணி பன்​னாட்டு நிறு​வனங்​களில் அதிக சம்பளத்​தில் வேலை வாங்​கித் தரு​வ​தாக கூறி​யுள்​ளனர்.

இதையடுத்து சென்னை மத்​திய குற்​றப்​பிரி​வில் உள்ள வேலைவாய்ப்பு மோசடி புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​தினர். விசா​ரணை​யில், வேலை வாங்​கித் தரு​வ​தாக போலி வாக்​குறுதி அளித்து பலரிடம் பணம் வசூலித்​தது உறு​தி​யானது.

இதனைத் தொடர்ந்து தலைமறை​வாக இருந்த முக்​கிய குற்​ற​வாளி​யான திரு​வண்​ணா​மலை​யைச் சேர்ந்த சிலம்​பரசனை அவரது மாவட்​டத்​திலேயே நேற்று முன்​தினம் கைது செய்​தனர். மேலும், சென்னை மதுர​வாயலில் பதுங்​கி​யிருந்த பிரபு​வும் கைது செய்​யப்​பட்​டார். அவர்​களிடம் இருந்து 2 செல்​போன்​கள் மற்​றும் வழக்கு தொடர்​பான முக்​கிய ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

முதல் கட்ட விசா​ரணை​யில், வேலை​வாய்ப்பு தேடும் இளைஞர்​களின் அவசரத்தை பயன்​படுத்​தி, பிரபல நிறுவனங்​களில் நேரடி நியமனம் செய்து தரு​வ​தாகக் கூறி பலரிடம் லட்​சக்​கணக்​கில் பணம் வசூலித்​தது தெரிய​வந்​துள்​ளது.

இந்த மோசடி​யில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்​கலாம் என்ற கோணத்​தி​லும் விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. கைது செய்​யப்​பட்ட இரு​வரும் நேற்று நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டு, நீதி​மன்ற உத்​தர​வின்​படி சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். மேலும் பா​திக்​கப்​பட்​ட​வர்​கள் வேறு யாரேனும் இருந்​தால் முன்​வந்து புகார் அளிக்​கு​மாறு மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார்​ கேட்​டுக்​கொண்​டுள்​ளனர்​.

மெட்ரோவில் பயணம் செய்யும் போது சத்தமாக பேசினால் அபராதம்!

மெட்ரோ ரயில்​கள், ரயில் நிலைய வளாகங்​களில் சக பயணி​களுக்கு இடையூறு ஏற்​படுத்​தும் வகை​யில் செல்​போனில் சத்​த​மாகப் பேசுவது, காதில் ஹெட்ஃ​போன் பொருத்​தாமல் செல்​போனில் பாட்டு கேட்​பது போன்ற பயண ஒழுங்​கு​முறை விதி​மீறல்​களுக்​கான அபராதம் ரூ.500-ல் இருந்து அதி​கபட்​ச​மாக ரூ.2,500 வரை உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் வெளி​யிட்ட அறிக்​கை: 

மெட்ரோ ரயில் பயண ஒழுங்​கு​முறை​களைப் பின்​பற்​றி, சக பயணி​களின் வசதிக்​கும், அமை​திக்​கும் மதிப்​பளிக்​கு​மாறு அனைத்து பயணி​களை​யும் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் கேட்​டுக் கொள்​கிறது.

மெட்ரோ ரயில் (இயக்​கம், பராமரிப்​பு) சட்​டம் 2002 பிரிவு 59-ன்​கீழ், சக பயணி​களுக்​குத் தொந்​தரவு விளை​விப்​ப​தோ, அவர்​களது வசதிக்கு இடையூறு ஏற்​படுத்​தும் வகை​யில் செயல்​படு​வதோ தண்​டனைக்​குரிய குற்​றம் ஆகும்.

குறிப்​பாக, மெட்ரோ ரயில்​கள் மற்​றும் வளாகங்​களில் செல்​போன் ஒலிபெருக்​கியைப் பயன்​படுத்​து​வது, காதில் ஹெட்போன் (Headphone) பொருத்​திக் கொள்​ளாமல் இசை, வீடியோக்​கள் பார்ப்​பது, செல்​போனில் உரத்த குரலில் பேசுவது ஆகிய செயல்​கள் மூலம் அதிக இரைச்​சலை ஏற்​படுத்​தும் வகை​யில் செல்​போன்​களைப் பயன்​படுத்​து​வதும், மற்​றவர்​களுக்கு இடையூறு விளை​விப்​பதும் தண்​டனைக்​குரிய குற்​ற​மாகக் கருதப்​படும்.

மத்​திய வீட்​டு​வச​தி, நகர்ப்​புற விவ​காரங்​கள் அமைச்​சகம் கடந்த ஜூன் 19-ம் தேதி வெளி​யிட்ட அரசிதழ் அறி​விப்​பின்​படி, ‘ஜன் விஸ்​வாஸ் சட்​டம் 2026’-ன் கீழ் ஒரு புதிய திருத்​தம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. அதன்​படி, மெட்ரோ ரயில் மற்​றும் அதன் வளாகங்​களில் மற்ற பயணி​களுக்கு இடையூறு விளைவிக்​கும் செயல்​களில் ஈடு​படு​வோருக்​கான அபராத தொகை ரூ.500-ல் இருந்து தற்​போது அதி​கபட்​ச​மாக ரூ.2,500 வரை உயர்த்​தப்​பட்​டுள்​ளது. மேலும், விதி​களை மீறும் பயணி​கள் அங்​கீகரிக்​கப்​பட்ட அதி​காரி​களால் மெட்ரோ வளாகத்​தில் இருந்து உடனடி​யாக வெளி​யேற்​றப்​பட​வும் வாய்ப்பு உள்​ளது.

எனவே, சக பயணி​களின் பயணச் சூழலைக் கருத்​தில் கொண்​டு, அனை​வரும் மெட்ரோ ரயில் மற்​றும் அதன் வளாகங்​களில் உரத்த குரலில் பேசுவது, ஒலிபெருக்கி பயன்​படுத்​து​வது (ஸ்​பீக்​கர் மோடு) ஆகிய​வற்றை தவிர்த்​து, காதில் பொருத்​திக் கொள்​ளும் ஹெட்போன்களை பயன்​படுத்​து​மாறு கேட்​டுக் கொள்​ளப்​படு​கிறது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

பாடகி எஸ்.ஜானகி அம்மா இன்று காலமானார்! அவரை பற்றி பார்ப்போம்

ந்திய திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 88. வயது முதிர்வு காரணமாக அவர் மறைந்த தகவலை, சமூக வலைதளத்தில் அவரது குடும்பத்தினர் பகிர்ந்தனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற ஊரில் (1938) பிறந்தவர். மூன்று வயதில் தொடங்கி 10 வயது வரை இசை கற்றார். முதல் மேடை நிகழ்ச்சியில் பாடியபோது இவருக்கு 9 வயது.

‘விதியின் விளையாட்டு’ (1957) என்ற படத்தில் ‘பெண் என் ஆசை பாழானது’ என்பதுதான் இவர் பாடிய முதல் பாட்டு. அடுத்த நாளே ஒரு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்து. கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.

‘மௌன கீதங்கள்’ படத்தில் ‘டாடி… டாடி… ஓ மை டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே…’ பாடலை, அந்த மழலைக் குரலில் கேட்கும்போது சந்தோஷம் பொங்கும். காரணம், காற்றை கவுரவப்படுத்தும் அந்தக் குரல் எஸ்.ஜானகினுடையது!

குழந்தையின் குரலா, குமரியின் குரலா, காதலியின் ஏக்கமா, காதலனோடு கிறக்கமா, ‘பழைய நெனப்புடா பேராண்டி… பழைய நெனப்புடா…’ எனப் பாடும் கிழவியின் விசனமா? – இப்படி எந்த உணர்ச்சியையும் குரலில் வடிக்கும் திறனைப் பெற்றிருந்த எஸ்.ஜானகியே, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தென்னிந்திய இசையமைப்பாளர்களின் ஏகோபித்த முதல் தேர்வாக இருந்தார்.

1957-ல் இருந்து தமிழ் மொழியில் பாடி வந்தவர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம், வங்காளம், சமஸ்கிருதம், ஒடியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், ஜெர்மன், படுகா, பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் பாடியிருக்கிறார்.

17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற பெருமை பெற்றவர். அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும், அனைத்து பின்னணிப் பாடகர்களுடனும் இணைந்தும் பாடியுள்ளார். ‘இளையராஜா – எஸ்.பி.பாலசுப்ரமணியம் – எஸ்.ஜானகி’ கூட்டணி தென்னிந்திய இசைத் துறையில் தனி முத்திரை பதித்தது. 

பாடலில் பொதிந்துள்ள உணர்ச்சி மற்றும் நடிகைகளுக்கு ஏற்ற வகையில் குரலை மாற்றிப் பாடக்கூடியவர். குழந்தைக் குரலில் பாடுவதிலும் வல்லவர். இவர் பாடிய ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’, ‘செந்தூரப் பூவே’, ‘காற்றில் எந்தன் கீதம்’, ‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’, ‘ராதைக்கேற்ற கண்ணனோ’, ‘அம்மா.. அம்மா..’ போன்றவை காலத்தால் அழியாதவை.

திரைப்படப் பின்னணிப் பாடல்கள், தனிப் பாடல்கள் என பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களை தானே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். ஒரு தெலுங்குப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

கலைமாமணி, கேரள மாநில சிறப்பு விருது பெற்றவர். சிறந்த பாடகிக்கான தேசிய விருது 4 முறை, கேரள அரசு விருது 14 முறை, ஆந்திர அரசு விருது 10 முறை, தமிழக அரசு விருது 7 முறை பெற்றவர். இலங்கையில் 1992-ல் இவருக்கு ‘ஞான கான சரஸ்வதி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

2013-ல் மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. மிகவும் தாமதமாக கிடைக்கும் கவுரவம் என்று கூறி அதை ஏற்க மறுத்து விட்டார். ‘காற்றில் ஜானகியின் கீதம்…’ எப்போதும் உலகோடு இரண்டறக் கலந்திருக்கும். எங்கோ, எவர் செவியிலோ கேட்டுக்கொண்டே இருக்கும்.

எஸ்.ஜானகி பாடிய பல தனிப்பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. இப்பாடல்கள் மகிழ்ச்சி, சோகம், ஏக்கம், பிரிவு, கொண்டாட்டம், ஆசை, தாய்மை எனப் பல விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும் என்றென்றும் கேட்கக்கூடிய செவ்வியல் தன்மையைப் பெறுகின்றன.

“எனது ரசிகர்கள்தான் எனக்குப் பெரிய விருது” என்று ஜானகி சொன்னது போல ரசிகர்களின் மனங்களில் என்றைக்குமே அவருக்கு இடமிருக்கும். தென்னிந்திய மொழிகள் இருக்கும் வரை இவ்வுலகில் ஜானகியின் குரல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்.

‘லவ் ஓ லவ் விமர்சனம்’ RATING 2.9/5

ஹீரோ பவிஷ் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டு துபாய் தப்பி செல்வதாக போலிஸ் ஆபிசர் செல்வராகவன் பவிஷை கைது செய்து வைக்க, அங்க வந்த மாதர் சங்கம் பவிஷுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என போராட, பவிஷ் தன் கதையை செல்வராகவனிடம் சொல்கிறார்.

பவிஷ், நாக துர்காவை பார்த்துவுடன் காதல் அவருகாக என்ன வேண்டும்னாலும் செய்யலாம் என காதலித்து வருகிறார். நாக துர்காவோ பவிஷ் தகுதிக்கு மீறி செலவு வைக்கிறார். அவரும் கடன் வாங்கி தன் ஆசை காதலிகாக செலவு செய்கிறார். கடன்காரராகவும் மாறுகிறார்.

ஒரு கட்டத்தில் நாக துர்கா ஒரு சில காரணத்தால் உடனே திருமணம் செய்ய வேண்டும் என சொல்ல, அதற்குள் நாக துர்கா அம்மா வந்து பவிஷ் ஒரு கடன்காரர் இவர் எப்படி என் பெண்ணை பார்த்துகொள்வார் என பவிஷ் அப்பா கே எஸ் ரவிகுமார் போலிஸ் ஸ்டேஷனில் எல்லோர் முன்னிலையும் அசிங்கப்படுத்துகிறார்.

இதனால் மனமுடைந்து கே எஸ் ரவிகுமார் மற்றும் குடும்பமே பவிஷ் மீது கோபம் கொள்ள, அதே நேரத்தில் பவிஷ் வேலையும் போக, காதலால் தன் வாழ்க்கை சந்தோஷம் எல்லாம் போக, பவிஷ் வாழ்க்கை என்ன ஆனது, இவர்கள் காதல் என்ன ஆனது என்பதே மீதிக்கதை….

பவீஷ், நாக துர்கா என இருவரும் கதாபாத்திரத்திற்கு தங்களால் முடிந்த அளவுக்கு நியாயம் சேர்த்துள்ளார்கள். காதலிக்காக பர்ஸ் முழுவதும் கரைந்து, குடும்பம் சமூகம் என அசிங்கப்பட்டு அதிலிருந்து அவர் நாக துர்காவுக்கு போடும் கண்டிஷன் அப்போது அவர் செய்யும் சேட்டை என இந்த ஜென் தனுஷாகவே கண்முன் ஜொலிக்கிறார், சிறப்பாகவும் செய்துள்ளார்.

இந்த படம் காதல் மோதல் பிரிவு அதை தொடர்ந்து ஒரு ரிவெண்ச் என்பது போல் செல்கிறது, அதில் ஒரு சில இடங்கள் ரசிக்க வைத்தாலும் பல இடங்கள் சோதிக்கிறது தான். எந்த காலத்தில் இருக்கிறோம், இன்னும் பசங்களா காதலுகாக செலவு பண்றாங்க, பொண்ணுங்க செலவு வைக்கிறாங்க என்பது போல் 90ஸ் சினிமா வசனங்கள் வந்தால் பரவாயில்லை காட்சிகளும் அப்படியே உள்ளது.

மைனஸ்: கிளைமேக்ஸ் பெரிய அளவில் இல்லை…. கதை மனதை தொடும் அளவில் இல்லை…

மொத்தத்தில் இந்த ‘லவ் ஓ லவ்’ குழப்பமான காதல்.

‘லக்‌ஷ்மி காந்தன் கொலை வழக்கு’ விமர்சனம் RATING 3.4/5

டிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், வருமையில் சிக்கித்தவிக்கும் நாயகன் வெற்றி திருடுகிறார். வேலை கிடைக்கும் வரை அதையே தொழிலாக வைத்துக்கொண்டு பயணிக்கும் அவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் கொலை குற்றவாளியாகிறார். வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதிக்கிறது. தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தன் குற்றத்திற்கான தண்டனையாக இருந்தாலும், அதன் மூலம் தனக்கான நீதி மறுக்கப்பட்டிருக்கும் வாதத்தை வெற்றி முன் வைக்கிறார். அவரது வாதம் சரியா? தவறா? என்பதே கதை…

இறுக்கமான மனநிலையோடு இருந்தாலும், தனது கருத்துகளை தெளிவாக எடுத்துக்கூறும் வெற்றி, படம் முழுவதும் பேசிக்கொண்டு இருந்தாலும், அந்த காட்சிகளை சரியான முறையில் கையாண்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்.

நாயகியாக வருகிறார் பிரிகிடா சகா. மூக்கும் முழியுமாக சிரிக்கும் கண்களுடன் அந்த கிராமத்து வெள்ளந்திப் பெண்ணாக வருகிறார்.காதல் காட்சிகளிலும் கடைசியில் ஒரே ஒரு திருட்டு என்று கணவனைத் திசை மாற்றுவதிலும் என்று தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

வெற்றியின் நண்பராக வரும் லொள்ளு சபா மாறன், அம்மாவாக நடித்திருக்கும் லிஸி ஆண்டனி, தொழிலதிபர் லக்‌ஷ்மிகாந்தனாக நடித்திருக்கும் கவிதா பாரதி, வெற்றியைத் தூக்கிலிடும் ‘ஹேங்மேன்’ பணி செய்பவராக வரும் சுப்பிரமணியம் சிவா, கன்யா பாரதி, அருவி மதன் ஆகியோர் தங்களது எல்லை தாண்டாத நடிப்பின் மூலம் ஈர்க்கிறார்கள்.

தர்புகா சிவாவின் இசையும், பாடல் வரிகளும்கதையின் தன்மை உணர்த்தும் வகையில் உள்ளன. முதல் பாதியில் நிறைய பேசிக் கொண்டிருப்பதாக தோன்றினாலும் அந்த சலிப்பு தெரியாத அளவிற்கு சரளமாகப் படத்தொகுப்பு செய்துள்ளார்படத்தொகுப்பாளர் பூபதி வேதகிரி.

சிறைச்சாலையில் உள்ள காவல்துறை அதிகாரியாக வருகிறார் ரங்கராஜ் பாண்டே.கண்டிப்பும் அதே நேரம் கருத்துகளைக் கவனிக்கிற நுண்ணுணர்வும் கொண்டவராக வருகிறார்.தொலைக்காட்சி விவாதங்களைப் பார்த்த அவர் இதில் கைதியுடன் ஆன கருத்து மோதலில் தனது பாத்திரத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.

மைனஸ்: படத்தில் ரெட்டியார் என்ற சமூக பெயர் எதற்கு? என்றே தோணுகிறது….. கதையில் கூடுதல் கவனம் தேவை…

மொத்தத்தில் இந்த ‘லக்‌ஷ்மி காந்தன் கொலை வழக்கு’ மனித துடிப்பு.

காவேரி மருத்துவமனையின் ‘ஹைபிரிட் கேத் லேபில்’

சென்னை:

ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை, பழுதடைந்த இரண்டு இதய வால்வுகளுக்கு மீண்டும் ஒரு திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை இன்றி வெற்றிகரமாக சிகிச்சையளித்து சாதனை படைத்துள்ளது. பெருந்தமனி வால்வு நோய்க்காக செய்யப்பட்ட திறந்தநிலை அறுவை சிகிச்சைக்குப் பிறகு, உலகிலேயே முதல்முறையாக முழுமையாக கதீட்டர் வழியில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை இதுவெனக் கருதப்படுகிறது.


ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு சிக்கலான இதய வால்வு அறுவை சிகிச்சை செய்துகொண்ட 58 வயது நபருக்கு இந்த நவீன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நோயாளியின் சொந்த நுரையீரல் தமனி வால்வை (Pulmonary valve) எடுத்து, பழுதடைந்த பெருந்தமனி வால்வுக்குப் (Aortic autograft) பதிலாகப் பொருத்தும் சிகிச்சையே ‘ராஸ்’ (Ross) செயல்முறை என அழைக்கப்படுகிறது. அதேசமயம், எடுக்கப்பட்ட நுரையீரல் தமனி வால்வுக்குப் பதிலாக தானமாகப் பெறப்பட்ட மனித வால்வு பொருத்தப்படும். ராஸ் சிகிச்சை நீண்டகாலத்திற்குச் சிறந்த பலன்களை அளித்தாலும், நாளடைவில் இரண்டு வால்வுகளும் தேய்மானம் அடைந்து, பிற்காலத்தில் மாற்று சிகிச்சை தேவைப்படலாம்.


நோயாளியின் பின்னணி மற்றும் சவால்கள்
இந்நோயாளிக்கு கடுமையான அயோர்டிக் பின்னொழுக்கு, மிதமான நுரையீரல் சுருக்கத்துடன் கூடிய கடுமையான நுரையீரல் பின்னொழுக்கு, தீவிர நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் மற்றும் மிதமான மிட்ரல் பின்னொழுக்கு ஆகிய பாதிப்புகள் இருந்தன. கால்கள் மற்றும் வயிற்றில் கடுமையான வீக்கம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டில் குறைபாடு, தீவிர மூச்சுத்திணறல் உள்ளிட்ட இதயச் செயலிழப்புப் பிரச்சனைகளால் அவர் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரால் நிம்மதியாக உறங்க முடியாத நிலை இருந்தது. மேலும், நியூயார்க் ஹார்ட் அசோசியேஷன் (NYHA) அளவுகோலின்படி, இதயச் செயலிழப்பில் மிகத் தீவிரமான III-IV நிலையில் அவர் இருந்தார்.


அவர் பல்வேறு மருத்துவமனைகளை அணுகியபோதும், இரண்டாவது முறையாக திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை செய்வது மிகச் சிக்கலானது மற்றும் அதிக ஆபத்து நிறைந்தது எனத் தெரிவிக்கப்பட்டது. கதீட்டர் அடிப்படையிலான சிகிச்சையை மேற்கொள்வது கூட சவாலானது என்றே மருத்துவ நிபுணர்களால் கருதப்பட்டது.


காவேரி மருத்துவமனையின் நவீன சிகிச்சை முறை காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட்டின் பன்முக மருத்துவ நிபுணர் குழு, முப்பரிமாண எக்கோ கார்டியோகிராபி மற்றும் கார்டியாக் சிடி ஸ்கேன் மூலம் நோயாளியின் நிலையை விரிவாக ஆய்வு செய்தது. அதன் முடிவில், மீண்டும் ஒரு திறந்தநிலை அறுவை சிகிச்சை இன்றி, முழுமையாகக் கதீட்டர் மூலமாகவே பழுதடைந்த இரண்டு வால்வுகளுக்கும் சிகிச்சையளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டன.

மருத்துவத் துறையில் இதுவரை இதுபோன்றதொரு சிகிச்சை பதிவு செய்யப்படாததால், சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பு, ட்ரான்ஸ்கதீட்டர் ஹார்ட் வால்வ் தெரபிஸ் பிரிவின் இயக்குநர் டாக்டர் ராஜாராம் அனந்தராமன் தலைமையிலான மருத்துவக் குழுவும், சர்வதேச வல்லுநர்கள் குழுவும் இச்சிகிச்சை முறையை விரிவாக ஆய்வு செய்தன.


முதலில் பல்மனரி ஹோமோகிராஃப்ட் பகுதியில் கவர்டு ஸ்டெண்டுகள் மற்றும் பலூன் விரிவாக்கம் மூலம் தயார்படுத்தப்பட்டு, பின்னர் மெட்ரானிக் மெலடி ட்ரான்ஸ்கதீட்டர் பல்மனரி வால்வு பொருத்தப்பட்டது. அதன்பின் பழுதடைந்த அயோர்டிக் ஆட்டோகிராஃப்டில் (Aortic autograft), எட்வர்ட்ஸ் சேபியன் 3 அல்ட்ரா ரெசிலியா பலூன்-விரிவாக்கக்கூடிய வால்வு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. புதிய வால்வை நிலைநிறுத்த உதவுவதற்கு வால்வில் கால்சியப் படிமங்கள் இல்லாததால், இச்சிகிச்சைக்கு மிக நுணுக்கமான திட்டமிடலும், துல்லியமான செயல்பாடும் தேவைப்பட்டது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப உதவியுடன் ‘விர்ச்சுவல் வால்வ் இம்ப்ளான்ட்’ கணிப்பு மாதிரிகள் பயன்படுத்தப்பட்டன. முழு மயக்கவியலின் கீழ், உணவுக்குழாய் வழியாக தொடர்ச்சியான எக்கோ கார்டியோகிராபி வழிகாட்டுதலுடன் ஹைபிரிட் அறுவை சிகிச்சை அரங்கில் இச்சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.


முழுமையாக குணமடைந்த நோயாளி
தீவிர சிகிச்சைப் பிரிவில் சில நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி, எவ்விதச் சிக்கலுமின்றி குணமடைந்து வீடு திரும்பினார். இரண்டு வாரங்களுக்குப் பிறகான பரிசோதனையில் அவரது உடல்நிலையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. வீக்கம் முழுமையாகக் குறைந்து, NYHA Class I இயல்பு நிலைக்கு அவர் திரும்பியிருந்தார். தற்போது அவரால் நிம்மதியாக உறங்க முடிவதுடன், எவ்விதச் சிரமமுமின்றி தினமும் 20-30 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சியும் மேற்கொள்ள முடிகிறது.


டாக்டர் ராஜாராம் அனந்தராமன் (இயக்குநர் – ட்ரான்ஸ்கதீட்டர் ஹார்ட் வால்வ் தெரபிஸ், காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட், ஆழ்வார்பேட்டை) கூறியதாவது:


“ராஸ் சிகிச்சைக்குப் பிறகு அயோர்டிக் மற்றும் பல்மனரி ஆகிய இரண்டு வால்வுகளும் பழுதடைந்தால், அதற்கான சிகிச்சைத் தேர்வுகள் மிகவும் குறைவு. ஏனெனில், மீண்டும் ஒரு திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்வது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். துல்லியமான ஸ்கேனிங், மிகச் சரியான திட்டமிடல் மற்றும் பல்வேறு மருத்துவப் பிரிவுகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலமாகவே, மார்பைத் திறக்காமல் கதீட்டர் முறையிலேயே பழுதடைந்த இரண்டு வால்வுகளையும் எங்களால் வெற்றிகரமாக மாற்ற முடிந்தது. எங்கள் அறிவுக்கு எட்டியவரை, உலக மருத்துவ வரலாற்றில் முழுமையாக கதீட்டர் மூலம் ‘டபுள் ட்ரான்ஸ்கதீட்டர் ராஸ் ரெஸ்க்யூ’ சிகிச்சை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். வேறு வழியின்றி தவிக்கும் அதிக ஆபத்துள்ள நோயாளிகளை கவனமாகத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மாற்று வழியில் மறுவாழ்வு அளிக்கும் சாத்தியக்கூறுகளை இந்த வெற்றிகரமான சிகிச்சை வெளிப்படுத்தியிருக்கிறது.”


காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனரும் மற்றும் செயல் இயக்குநருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில்,

“இதயக் கட்டமைப்பு சார்ந்த நவீன சிகிச்சை முறைகள், சிக்கலான வால்வு நோய்களுக்கான சிகிச்சைகளை முற்றிலும் மாற்றி வருகின்றன. இவ்வளவு சிக்கலான ஒரு சிகிச்சையை மேற்கொள்வதற்கு அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழு, அதிநவீன ஸ்கேனிங் வசதிகள், ஹைபிரிட் அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் பல்வேறு மருத்துவப் பிரிவுகளின் தடையற்ற ஒருங்கிணைப்பு ஆகியவை அவசியம். இந்தச் சாதனை, காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட்டில் உள்ள உயர்தர மருத்துவ நிபுணத்துவம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைப் பிரதிபலிக்கிறது. மேலும், இந்தியாவில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவ ஆதாரங்களின் அடிப்படையிலான அதிநவீன சிகிச்சைகளை வழங்குவதில் உள்ள எங்களது தொடர் அர்ப்பணிப்பையும் இது எடுத்துரைக்கிறது.”