Wednesday, March 4, 2026
Blog

இரட்டை கொலை வழக்கு! 7 பேர் கைது!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேர் விவரம்: தென்னிமலை சுடலைகண்ணு மகன் கண்ணன் (21), முருகன் மகன் சுப்பையா என்ற சுபாஷ் (19), பன்னீர்செல்வம் மகன் அந்தோனி மைக்கேல் (18), சுடலைகண்ணு மகன் கல்யாணி (19), நாங்குநேரி நம்பிநகர் முத்தையா மகன் ராஜா (19), வள்ளியூர் ஆண்டி மகன் உச்சிமாகாளி (20), நெடுங்குளம் முருகன் மகன் வசந்தகுமார் (21).

நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் சரகம் , பெரும்பத்து பஜாரில், நேற்று இரவு பைக்கில் வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல், அங்கு டீ கடை அருகே சாலையில் நின்று கொண்டிருந்த, பொதுமக்களை சரமாரியாக வெட்டியது. இந்த சம்பவத்தில் வடமாநில செங்கல் சூளை தொழிலாளி உள்பட இரண்டு பேர் பலியாகினர். கண்மூடித்தனமாக வெட்டியதில் 6 பேருக்கு பலத்த வெட்டுக் காயம் விழுந்தது.

இந்தக் கொடூர தாக்குதலில் பெரும்பத்து இந்திரா காலனியை சேர்ந்த ஜான் (42) மற்றும் பெயர் தெரியாத வட மாநில செங்கல் சூளை தொழிலாளி ஆகிய இரண்டு பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் படுகாயம் அடைந்த பெரும்பத்து பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் மகன் நெல்சன் (58), பால்வண்ணன் மகன் பிரபாகரன், வைகுண்டம் மகன் ராமசாமி, வீராங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கணேசன் (53) ஆகியோர் காயமடைந்தனர்.

மேலும், சம்பவ இடத்திலிருந்து தப்பித்துச் சென்ற எதிரிகள், புளியங்குளம் அருகே சென்றபோது அந்தபகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சசிகுமார் என்பவரையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

QuizBites 4.0: சமையல் வினாடி வினா தளம்!

சென்னை:
 
சமையல் அறிவு மற்றும் தொழில்முறை நட்புறவை கொண்டாடுவதில் நான்கு வெற்றிகரமான ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், QuizBites 4.0 அளவு, ஆற்றல் மற்றும் தொழில்துறை அளவிலான பங்கேற்புடன் திரும்பியது. இஸ்பஹானி மையத்தால் தொடர்ந்து நான்காவது ஆண்டாக நடத்தப்பட்ட, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சமையல் வினாடி வினா மதிப்புமிக்க GRT கிராண்டில் நடைபெற்றது, இதில் தென்னிந்தியா முழுவதிலுமிருந்து 50க்கும் மேற்பட்ட அணிகள் மற்றும் 100 சமையல்காரர்கள் கலந்து கொண்டனர்.
 
ஒரு சிறப்புத் துறை முயற்சியாகத் தொடங்கியது, இப்போது பிராந்தியத்தின் சமையல் நாட்காட்டியில் ஒரு குறிப்பிடத்தக்க வருடாந்திர தளமாக உருவாகியுள்ளது. QuizBites தொடர்ந்து அனுபவம் வாய்ந்த நிபுணர்களையும் வளர்ந்து வரும் திறமையாளர்களையும் ஈர்க்கிறது, இது விருந்தோம்பல் துறையில் அறிவு சார்ந்த ஈடுபாட்டிற்கான வளர்ந்து வரும் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.
 
இந்த ஆண்டு பதிப்பில் மேம்படுத்தப்பட்ட, உயர்-தீவிர வடிவமைப்பு, பஸர் சுற்றுகள் மற்றும் சமையல் நிபுணத்துவம், அனிச்சைகள் மற்றும் குழுப்பணியை சோதிக்கும் விரைவான-தீ அமர்வுகள் இடம்பெற்றன. போட்டி மனப்பான்மை நிகழ்வு முழுவதும் உயர்ந்ததாக இருந்தது, ஆறு அணிகள் சிறந்த கௌரவங்களுக்காகப் போராடிய ஒரு பரபரப்பான இறுதிச் சுற்றில் உச்சத்தை அடைந்தது.
 
Winner: கல்னரி  அகாடமி ஆஃப் ஹைதெராபாத்
 
இந்த நிகழ்வில் தென்னிந்திய சமையல் சங்கத்தின் தலைவர் சமையல்காரர் தாமோதரன் மற்றும் SICA இன் பொதுச் செயலாளர் சமையல்காரர் ஷீதராம் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர், அவர்களின் தொடர்ச்சியான தலைமை தொழில்துறையில் தளத்தின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தியுள்ளது. அவர்களின் இருப்பு QuizBites இன் வளர்ந்து வரும் அந்தஸ்தை ஒரு வினாடி வினாவாக மட்டுமல்லாமல், சமையல்காரர்களுக்கான ஒரு தொழில்முறை நெட்வொர்க்கிங் மற்றும் திறன் மேம்பாட்டு மன்றமாகவும் மாற்றியது.
 
சமையல்காரர் தாமோதரன் கூறுகையில், “QuizBites 4.0 என்பது தென்னிந்திய சமையல் சமூகத்திற்குள் உள்ள அசாதாரண திறமையை வெளிப்படுத்தும் ஒரு உற்சாகமான நிகழ்வாகும். சமையல்காரர்கள் தங்கள் படைப்பாற்றல், அறிவு மற்றும் திறமையின் எல்லைகளைத் தாண்டிச் செல்வதைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது. இந்த நிகழ்வில் உள்ள ஆர்வமும் தோழமையும் எங்கள் சமையல் துறையின் எதிர்காலத்தைப் பற்றி நிறையப் பேசுகின்றன.”
இந்த முயற்சியின் பின்னணியில் உள்ள தொகுப்பாளராகவும் உந்து சக்தியாகவும், இஸ்பஹானி மையம் தடையற்ற செயல்படுத்தல் மற்றும் பிரீமியம் அனுபவத்தை உறுதிசெய்தது, GRT கிராண்டின் நேர்த்தியான அமைப்பைப் பயன்படுத்தி தொழில்முறை ரீதியாக நிர்வகிக்கப்பட்ட நிகழ்வை வழங்கியது. நான்கு பருவங்களாக, இந்த மையம் QuizBites-ஐ ஒரு நிலையான மற்றும் நம்பகமான தொழில்துறை சொத்தாக நிலைநிறுத்தி, சிறப்பைக் கொண்டாடி, சமூகத்தை வளர்க்கிறது.
 
இஸ்பஹானி மையத்தின் இயக்குனர் திரு. கேசன் கூறுகையில், “நான்காவது சீசன் QuizBites-ஐ நடத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம், மேலும் இந்த தளம் ஆண்டுதோறும் எவ்வாறு வளர்ந்து வருகிறது என்பதைக் காண்கிறோம். உற்சாகமும் பங்கேற்பும் தென்னிந்தியாவின் சமையல் திறமையின் வலிமையைக் காட்டுகின்றன. நிபுணர்களை ஒன்றிணைத்து சிறப்பை வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சிகளை வளர்ப்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.”
 
தென்னிந்திய சமையல் சங்கமான Ispabani மையம் மற்றும் அஞ்சலி எண்ணெய்கள் ஆகியவற்றின் ஆதரவுடன், QuizBites 4.0, தென்னிந்தியாவின் முன்னணி சமையல் அறிவு தளமாக அதன் நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் நான்கு வெற்றிகரமான பருவங்களில் தொடர்ந்து புதிய உயரங்களை எட்டுகிறது.

‘ஓ பட்டர்ஃப்ளை’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

பட்டர்ஃப்ளை திரைப்படம், ஆன்ட்ஹில் சினிமா நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். பாலம்பூர் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்திற்கு, துல்சியா நிறுவனம் கன்சல்டிங் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளது. ஒரு வலுவான மற்றும் திறமையான கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் விஜய் ரங்கநாதன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி மற்றும் கீதா கைலாசம் உள்ளிட்ட திறமையான நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளது. உறவுகளின் மென்மையையும், கணிக்க முடியாத தன்மையையும் ஒரு த்ரில்லர் பாணியில் பேசும் இப்படம் வரும் மார்ச் 6ம் தேதி திரையரங்குளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.
 
ஒளிப்பதிவார் வேதராமன் சங்கரன் அவர்கள் பேசும்போது, ஓ பட்டர்ஃப்ளை படத்தை மிகவும் சிரமப்பட்டு எளிதாக எடுத்து விட்டோம்.  மார்ச் 6ம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் தியேட்டரில் பார்த்து சப்போர்ட் செய்யுங்கள். நன்றி. 
 
இசையமைப்பாளர் வைசாக் சோமநாத் அவர்கள் பேசும்போது, இயக்குனருக்கு என்ன வேண்டும் என்று தெளிவாக இருந்தார், என்னால் என்ன கொடுக்க முடியும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன். அதனால் மிகவும் எளிதாக அமைந்தது. இந்த படத்தில் பணி புரிந்தது நல்ல ஒரு அனுபவமாக இருந்தது. மார்ச் 6ம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் படத்திற்கு சப்போர்ட் செய்யுங்கள். நன்றி.
 
தயாரிப்பாளர் ஆனந்த் ஷா அவர்கள் பேசும்போது, இயக்குனர் விஜய் முதல் முறையாக இந்த கதையை எடுத்துக் கொண்டு வந்த போது இது போன்ற ஒரு கதையை நான் பார்த்ததே இல்லை. மிகவும் சிம்பிளான ஒரு ஸ்டோரி, மிகவும் சிம்பிளிசிட்டியான ஒரு மனிதர். பொதுவாக இயக்குனர்கள் முதல் படம் பண்ணும் போது பிரம்மாண்டமாக எடுக்க முயற்சிப்பார்கள், அதன் மூலம் பணம் சம்பாதிக்க நினைப்பார்கள். ஆனால் விஜய் நல்ல ஒரு தரமான படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இந்த படத்தை எடுத்துள்ளார். படத்தில் பணியாற்றிய அனைவரும் தங்களது முழு உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்திற்காக மும்பையில் அலுவலகம் போடலாம் என்று சொன்னேன், ஆனால் இயக்குனர் அந்த செலவை படத்திற்குள் போடலாம் என்று சொன்னார். நன்றி.
 
தயாரிப்பாளர் வெங்கி அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். முதல் முறையாக என்னுடைய வாழ்க்கையில் ஒரு சினிமா விழாவில் பேசுகிறேன். நான்கு வருடங்களுக்கு முன்னர் விஜய் என்னிடம் இந்த கதையை சொன்னார். ஆனால் எதற்காக என்னிடம் சொன்னார் என்று புரியவில்லை. முதலில் இந்த படத்திற்கு இன்வெஸ்ட்மென்ட் செய்கிறேன் என்று சொன்னேன். பிறகு நான் தான் தயாரிப்பாளர் என்று சொன்னார்கள். எதுவாக இருந்தாலும் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று விஜய் எண்ணினார். இந்தப் படத்திற்காக 35 வீடுகளை தேடினார். அதில் ஒரு வீட்டை தேர்வு செய்தார். ஆனால் அந்த வீட்டின் உரிமையாளர் படம் எடுப்பதற்கு முதலில் சம்மதிக்கவில்லை, பிறகு அவரிடம் பேசி சம்மதிக்க வைத்தோம். விஜய் இடமிருந்து கால் வந்தால் ஏதாவது பெரிய பிரச்சினையாக மட்டும் தான் இருக்கும். விஜய் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார். அவருடைய உழைப்பிற்காக நிச்சயம் இந்த படம் வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். 
 
நடிகர் அத்துல் அவர்கள் பேசும் போது, அனைவருக்கும் வணக்கம். இயக்குனர் விஜய் அவர்களுக்கு நான் மிகப்பெரிய நன்றியை சொல்லிக்கிறேன். அவர் இல்லை என்றால் நான் இந்த படத்தில் இல்லை. கதையை முழுவதுமாக படித்தேன். சிறப்பாக இருந்தது. இதில் எப்படியாவது நன்றாக நடிக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு வந்தது. இந்த படத்தில் என்னை நம்பி வாய்ப்பு கொடுத்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் செம ஜாலியாக இருந்தது. நிவேதிதா நல்ல ஒரு நடிப்பை இந்த படத்தில் கொடுத்துள்ளார். படம் பார்க்கும்போது உங்களுக்கு அது புரியும். நாசர் சார் அவர்களுடன் நடித்தது எனக்கு பெருமையாக இருந்தது. டெக்னிகல் டீம் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். இந்த படத்திற்கு என்ன தேவையே அதனை சரியாக கொடுத்துள்ளனர். மார்ச் 6ம் தேதி அனைவரும் இந்த படத்தை பார்த்து சப்போர்ட் செய்ய வேண்டும். எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. 
 
நடிகர் சிபி சந்திரன் அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். இது போன்ற மேடை கிடைப்பது நல்ல ஒரு வாய்ப்பு. நிறைய அலுவலகங்களில் என்னுடைய புகைப்படத்தை கொடுத்து வாய்ப்புக்காக காத்திருந்தேன். இந்த படத்தில் எங்கள் டீமே சிறப்பாக அமைந்துள்ளது. ரிலேஷன்ஷிப் என்றாலே த்ரில்லர் தான். நாம் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது நம்முடைய பார்ட்னரிடம் சில விஷயங்களை மறைத்திருப்போம். அனைவரும் இதனை செய்திருப்போம். யாரும் நல்லவர்களும் கிடையாது, கெட்டவர்களும் கிடையாது. அப்படி மறைக்கும் போது நமக்குள் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். மர்டர் மிஸ்டரி படங்களை விட ரிலேஷன்சிப்பில் இருக்கும் திரில்லர் எதிலுமே வராது. இந்தப் படம் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் த்ரில்லரை பற்றி பேசுகிறது. மேலும் இந்த படம் நிறைய விஷயங்களை பற்றி பேசுகிறது. இன்று விவாகரத்து தொடர்பான செய்திகள் தான் அதிகம் இடம் பெறுகிறது. 
 
ஒருவர் நம்மிடமிருந்து விலகி செல்லக்கூடாது என்பதற்காக தான் ஒரு விஷயத்தை மறைக்கிறோம். அவர்கள் தேவையே இல்லை என்று நினைத்தால் அனைத்தையும் ஓப்பனாக சொல்லி விடுவோம். சினிமா துறையில் விவாகரத்து தொடர்பான செய்திகள் அதிகம் வருகிறது. ஒருவருக்கு மெண்டல் ஹெல்த் மிகவும் முக்கியம்.. விஜய் சார், அஜித் சார் போன்றவர்களுக்கு வருடத்தில் 150 நாட்கள் தான் வேலை இருக்கும். மீதமுள்ள நாட்களில் வீட்டில் தான் இருக்க வேண்டும். அந்த சமயத்தில் மெண்டல் ஹெல்த் மிகவும் முக்கியம். அது இல்லை என்றால் நமது குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது பழைய ரிலேஷன்ஷிப்பை பற்றி பேசவே கூடாது. அதை கடந்து போய்விட வேண்டும். உங்களுடைய தட்டில் இருக்கும் சாப்பாட்டை யாரும் சாப்பிட முடியாது, அதேபோல இன்னொருவர் தட்டில் அதிகம் சாப்பாடு இருந்தால் அதை அவர் சாப்பிட போகிறார்.  நம்மளுக்கு என்ன தேவையோ, அதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த படம் இந்த சமயத்திற்கு ஏற்ற ஒரு படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இயக்குனர் சொல்ல வந்த கருத்தை உண்மையாக இருக்கும். அனைவரும் இந்த படத்தை பாருங்கள். எனக்கு பலமுறை சப்போர்ட் செய்துள்ளீர்கள். இந்த படத்திற்கும் சப்போர்ட் செய்யுங்கள். நன்றி
 
நடிகை நிவேதிதா சதீஷ் அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். இந்த மேடையில் இருப்பது மிகவும் எமோஷனலாக உள்ளது. கேப்டன் மில்லர் படத்திற்காக மிகவும் கடின உழைப்பை கொடுத்தேன், கிட்டத்தட்ட 1 வருடம் அந்த படத்தில் பணியாற்றி நிறைய கற்றுக்கொண்டேன். ஆனால் நான் எதிர்பார்த்த பலன் எனக்கு கிடைக்கவில்லை என்று தோன்றியது. சினிமா நமக்கு சரிப்பட்டு வருமா அல்லது வேறு ஒரு துறையில் கவனம் செலுத்தலாமா என்று தோன்றியது. சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கலாம் என்று நினைத்தேன். அந்த சமயத்தில் தான் ஓ பட்டர்ஃப்ளை படம் எனக்கு வந்தது. நான் இதுவரைக்கும் கேட்ட நரேஷன்களில் அது சிறப்பாக இருந்தது. இந்த படம் பண்ணலாம் என்று முடிவு எடுத்த பிறகு நிறைய ரிகர்சல் செய்தோம். படம் ஆரம்பிக்கும் போது எனக்கு ஒரு அறுவை சிகிச்சை இருந்தது.
 
படக்குழு நினைத்து இருந்தால் வேறு நடிகையை கமிட் செய்திருக்கலாம், ஆனால் எனக்காக காத்திருந்தனர். என்னுடைய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனருக்கு நன்றி. இந்த படம் ஒரு புதிய ஜானரில் உருவாகியுள்ளது. இந்த படம் ஹியூமன் எமோஷனல் பற்றி பேசுகிறது. இந்த படத்தை பார்த்து வெளியே வரும் போது நல்ல ஒரு மனதுடன் வெளியே வருவீர்கள் என்று நம்புகிறேன். இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இயக்குனர் விஜய் போன்ற நபர்கள் கிடைப்பது அரிது. இந்தப் படம் ஒரு நல்ல ஒரு எக்ஸ்பீரியன்ஸை கொடுத்தது. இந்த படத்திற்கு அனைவரும் சப்போர்ட் செய்வீர்கள் என்று நம்புகிறேன். இசையமைப்பாளர் நல்ல ஒரு ஓர்க்கை இந்த படத்திற்கு கொடுத்துள்ளார். இந்த படம் சிங் சவுண்ட் முறையில் உருவாகியுள்ளது. அனைவருக்கும் நன்றி. 
 
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் ரங்கநாதன் அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் நன்றி. நான் சினிமாவிற்கு வந்து 7,8 வருடங்கள் ஆகிவிட்டது. என் அப்பா மற்றும் அம்மா இருவரும் சினிமா பக்தர்கள். அதிலிருந்து எனக்கு ஈடுபாடு வந்தது. சினிமாவில் ஏதாவது தனித்துவமாக பண்ண வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகத்தான் நிறைய காலம் எடுத்துக் கொண்டேன். இந்த கதையை நீண்ட நாட்களுக்கு முன்பு எழுதினாலும், மீண்டும் ஒரு எழுத்தாளருடன் இணைந்து எழுதினேன். இந்த படத்திற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களை தேடி அலைந்தோம். இந்த படம் ஏற்கனவே உள்ள பேட்டன்களில் இல்லை என்பதை உணர்ந்தோம். முன்னணி நிறுவனங்களிடம் இந்த கதையை எடுத்துக் கொண்டு சென்ற போது இந்த படத்திற்கான ரெஃபரன்ஸ் இல்லை. நண்பர்கள் இந்த படத்திற்காக அவர்களால் முடிந்த இன்வெஸ்ட்மெண்ட் செய்துள்ளனர். 
 
சினிமாவில் இண்ட்ரஸ்ட் உள்ளவர்களிடம் இந்த கதையை கொண்டு சென்றோம், அப்படி உள்ளே வந்தவர்கள் தான் எங்களது தயாரிப்பாளர்கள். அனைவரையும் ஒன்றிணைத்தது இந்த கதை தான். ஒரு பெண் கதாபாத்திரத்தை முதன்மையாக வைத்து படம் எடுப்பது அவ்வளவு சுலபமானது இல்லை. இந்த படத்தை முதலில் இருந்தே சிங்க் சவுண்டில் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதனால் கண்டிப்பாக தமிழ் பேச தெரிந்த நடிகை வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தோம். அப்படித்தான் நிவேதிதா இந்த படத்திற்கு வந்தார்கள். நிறைய பேரை இந்த கதாபாத்திரத்திற்கு முயற்சி செய்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. நிவேதிதா எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சியான தருணம். நாசர் சாருக்கு எங்கள் படத்தின் ஐடியா பிடித்திருந்தது. இந்த படத்தில் அவரை வித்தியாசமான கதாபாத்திரத்தில் பார்க்கலாம். லட்சுமி பிரியா இந்த கதையை புரிந்து கொண்டு இந்த படத்திற்குள் வந்தார்கள். மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பான ஒர்க்கை கொடுத்துள்ளனர். இசையமைப்பாளர் இந்த படத்திற்கு முக்கியமான ஒருவராக மாறி உள்ளார். இந்த படம் ஒரு யுனிக் அட்டெம்ப்ட். மார்ச் 6ம் தேதி படம் வெளியாக உள்ளது. உங்களது சப்போர்ட் தேவை. நன்றி.
 
ஓ பட்டர்ஃப்ளை திரைப்படம் வரும் மார்ச் 6ம் தேதி திரையரங்குளில் வெளியாக உள்ளது.

கள்ள தொடர்பில் நடிகர் விஜய்! மனைவி புகார்!!

டிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் 2021ம் ஆண்டிலேயே விஜய் நடிகையுடன் கள்ள உறவில் இருப்பது தெரிந்தும் மனைவி சங்கீதா தாமதமாக மனுத்தாக்கல் செய்திருப்பது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக சங்கீதா தனது விவாகரத்து மனுவில் சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு முழுநேர அரசியலில் கவனம் செலுத்துவதாக விஜய் அறிவித்துள்ளார். 

பிரச்சனையின்றி கவுரவமாக இருவரும் பிரிய வேண்டும் என்று நினைத்தேன். இதற்கான முயற்சிகளை செய்தேன். 2021 செப்டம்பர் முதல் 2022 பிப்ரவரி வரை வழக்கறிஞர் மூலமாக சமூகமாக பிரிவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினோம். வழக்கறிஞர் வழியாக இருதரப்பிலும் பேசி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. தீர்வும் கிடைக்கவில்லை. சுமூகமாக பிரிய 2 முயற்சிகளை முன்னெடுத்தேன். கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி விஜயை சந்திக்க முயற்சி மேற்கொண்டேன். ஆனால் நடக்கவில்லை.

எனது மகன், மகளின் கல்வி, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விவாகரத்தை தள்ளிப்போட்டேன். ஆனால் இப்போது நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை” என கூறியுள்ளார். மேலும் ”கள்ளஉறவில் இருக்கும் நடிகையுடன் வெளிநாடுகளுக்கு சேர்ந்து சென்றார். திருமணத்தை மீறிய உறவை தட்டிக்கேட்டதால் வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார்.

விஜய் எனக்கு கட்டுப்பாடுகளை விதித்தார். பணம் செலவு செய்ய விடாமல் தடுத்தார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டேன். இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. திருமண வாழ்க்கையில் என்னை ஒதுக்கிவிட்டு நடிகையுடன் உறவை தொடர்ந்தார். நடிகையும், விஜயுடன் சேர்ந்து இருக்கும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது மன உளைச்சலை தந்தது. தேவையென்றால் நடிகையின் பெயரையும் வெளியிடுவேன்” என்றார்.

ரசிகர்கள் வருத்தம்!

எங்கள் தளபதி என்று பெருமையாக நினைத்தோம். ஆனால் நீங்கள் இப்படி செய்திருப்பது தவறு. பெண்களுக்கு தமிழக வெற்றி கழகத்தில் பாதுகாப்பு இருக்குமா? என தற்போது சிந்திக்க வைக்கிறது. அரசியல் தலைவர் என்ற பதவியை நீங்கள் இழந்து விட்டீர்கள். இனிமேல் நாங்கள் விஜய் ரசிகர்கள் இல்லை என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள். இதற்கு முற்று புள்ளி வைக்க விஜய் என்ன? செய்ய போகிறார் என பார்ப்போம்.

திமுக வில் OPS! இணைய காரணம் என்ன?!

திமுகவில் இணைந்த பின்னா் செய்தியாளா்களிடம் ஓ.பன்னீா்செல்வம் கூறியதாவது: முன்னாள் முதல்வா் அண்ணா தொடங்கிய திமுகவில் மனமகிழ்ச்சியுடன் இணைந்துள்ளேன். அண்ணா, கருணாநிதி காட்டிய வழியில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் வகையில் கட்சியையும், ஆட்சியையும் மு.க.ஸ்டாலின் வழிநடத்தி வருகிறாா்.

அரசியலில் சா்வாதிகாரமாக, ஆணவப்போக்கோடு நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமி, எந்தக் காலத்திலும் இனி வெற்றி பெற முடியாது என்ற சூழலை அதிமுகவுக்கு உருவாக்கியுள்ளாா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னா் லட்சக்கணக்கான அதிமுக தொண்டா்கள் திமுகவில் இணைந்துள்ளனா். ஓா் அரசியல் இயக்கத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற இலக்கணத்தோடு கட்சியை ஸ்டாலின் வழிநடத்துகிறாா். கடந்த 5 ஆண்டுகளில் அவா் செயல்படுத்திய சாதனைத் திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைந்துள்ளன.

அதிமுகவில் தென் மாவட்டங்களில் வளரும் தலைவா்களை பழனிசாமி அழித்து வருகிறாா். பழனிசாமியால் அதிமுக அழிவுப் பாதையில் செல்கிறது. கடந்த காலங்களில் அதிமுகவில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களால் பாதிக்கப்பட்டேன். அனைவரையும் அரவணைக்கும் போக்கு இப்போது அதிமுகவில் இல்லை.

எந்த அழுத்தமும் இல்லாமல், சுயமாக முடிவெடுத்து திமுகவில் இணைந்துள்ளேன். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைவா் ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன். வரும் தோ்தலில் திமுக மீண்டும் வென்று ஆட்சியமைக்கும் என்றாா்.

ஆதரவாளா்களும் இணைந்தனா்:

ஓ.பன்னீா்செல்வத்துடன் உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.அய்யப்பன், முன்னாள் மக்களவை உறுப்பினா் மதுரை ஆா்.கோபாலகிருஷ்ணன், புதுச்சேரி மாநில அமைப்பாளா் ஓம்சக்தி சேகா், ஜெயலலிதா பேரவை முன்னாள் துணைச் செயலா் டி.ரமேஷ், மாநில வழக்குரைஞா் பிரிவு தலைவா் சி.திருமாறன், இணைச் செயலா் பி.ராஜலட்சுமி, நிா்வாகிகள் சென்னை ரெட்சன் சி.அம்பிகாபதி, மடத்துக்குளம் கே.மாரிமுத்து, நாமக்கல் பழனிசாமி, மாநில மகளிா் அணி இணைச் செயலா் சீதா பழனிசாமி, புதுக்கோட்டை நகா்மன்ற முன்னாள் தலைவா் ராஜசேகா் ஆகியோரும் திமுகவில் இணைந்தனா்.

திமுகவில் இணைந்ததைத் தொடா்ந்து, ஓ.பன்னீா்செல்வம், ஐயப்பன் ஆகியோா் தங்களது சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்து, அதற்கான கடிதத்தை சட்டப்பேரவைச் செயலா் சீனிவாசனிடம் வழங்கினா்.

அன்பானவா், பண்பானவா்: ஓபிஎஸ் குறித்து முதல்வா் ஸ்டாலின்

‘திமுகவில் இணைந்துள்ள முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தை வரவேற்கிறேன்; அவா் அன்பானவா், பண்பானவா்’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: தாய்க் கட்சியான திமுகவில் இணைந்துள்ள முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தை வரவேற்கிறேன். திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் (நீதிக் கட்சித் தலைவா் சா் பி.டி.பன்னீா்செல்வம்) பெயரைத் தாங்கிய அவா், திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளாா்.

2026 பேரவைத் தோ்தல் என்பது தமிழ்நாட்டுக்கும், பாஜகவுக்கும் இடையிலான ஜனநாயகப் போா். இதை உணா்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் திமுக கூட்டணியில் இணைந்து வருகிறாா்கள்.

நம்மோடு இணைந்துள்ள ஓ.பன்னீா்செல்வம் அன்பானவா், பண்பானவா், அடக்கமானவா். அவரது வருகை நல்வரவாகட்டும் எனப் பதிவிட்டுள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.

 

டிஎஸ்பி நீதிமன்றத்தில் ஆஜர்! நீதிபதி உத்தரவு என்ன?!

சிவகங்கை மாவட்​டம் மடப்​புரம் பத்​ர​காளி​யம்​மன் கோயில் காவலாளி அஜித்​கு​மார், தனிப்​படைக் காவலர்​கள் தாக்கப் பட்டதில் உயி​ரிழந்​தார். இந்த வழக்​கில் தனிப்​படைக் காவலர்​கள் 6 பேரை சிபிஐ கைது செய்​தது. கூடு​தல் குற்​றப் பத்​திரி​கை​யில் மானாமதுரை டிஎஸ்​பி​யாக இருந்த சண்​முகசுந்​தரம், திருப்​புவனம் காவல் ஆய்​வாளர் ரமேஷ்கு​மார், உதவி ஆய்​வாளர் சிவக்​கு​மார், தலை​மைக் காவலர் இளை​ய​ராஜா ஆகியோர் எதிரி​களாக சேர்க்​கப்​பட்​டனர்.

பின்​னர், சண்​முகசுந்​தரம் உட்பட 4 பேரும், மதுரை மாவட்ட நீதி​மன்​றத்​தில் ஆஜராக உத்​தர​ விடப்​பட்​டது. இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்​த​போது சண்​முகசுந்​தரம் ஆஜராக​வில்​லை. இதையடுத்​து, டிஎஸ்பி சண்​முகசுந்​தரத்​துக்கு எதி​ராக ஜாமீனில் வர முடி​யாத பிடி​வாரன்ட் பிறப்​பித்​து, அவரைக் கைது செய்து மார்ச் 5-ல் ஆஜர்​படுத்த சிபிஐக்கு நீதிபதி உத்தர​விட்​டார்.

இந்​நிலை​யில், டிஎஸ்பி சண்​முகசுந்​தரம் தலை​மைத் குற்​ற​வியல் நீதித்​துறை நடு​வர் செல்​வ​பாண்டி முன்​னிலை​யில் நேற்று ஆஜராகி, பிடி​வாரன்ட்டை ரத்து செய்​யக் கோரி மனு தாக்​கல் செய்​தார். இதையடுத்​து, பிடி​வாரன்ட்டை ரத்து செய்​து, மார்ச் 5-ம் தேதி நீதி​மன்​றத்​தில் ஆஜராக உத்​தர​விட்ட நீதிப​தி, விசா​ரணையை தள்​ளி​வைத்​தா​ர்.

தருமபுரியில் எஸ்எஸ்ஐ சடலமாக மீட்பு!

ருமபுரியை அடுத்த வெண்ணாம்பட்டி மாந்தோப்பு பகுதியில் வசித்து வந்தவர் சகாதேவன் (58). இவர் தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே மணியக்காரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர். தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு ஏரியூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, துறை ரீதியான நடவடிக்கை மூலம் அவர் காவல்துறை பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு செல்வதாக குடும்பத்தாரிடம் கூறிவிட்டு சென்ற சகாதேவன் நேற்று காலை தருமபுரி ரயில் நிலையம் அருகே உள்ள தேக்குமரத் தோப்பில் ஒரு மரத்தில் புடவையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

தகவல் அறிந்த தருமபுரி நகர காவல் நிலைய போலீஸார் சகாதேவனின் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தன் உயிரிழப்புக்கு யாரும் காரணமில்லை என்றும், குணமாகாத வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பிட்டு சகாதேவன் கடிதம் எழுதி வைத்துள்ளதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

இருப்பினும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது உயிரிழப்பில் வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா? என்று போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.

நடிகர் விமல்- நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் ‘வடம்’ 

மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் – நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவான ‘வடம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘வடம்’ படத்தில் விமல், நட்டி நட்ராஜ், சனஸ்கா ஸ்ரீ,  முனிஸ்காந்த்,  பால சரவணன், ‘ஆடுகளம்’நரேன், மதுசூதன் ராவ், தீபா, இந்துமதி மணிகண்டன், இயக்குநர், நடிகர்களுமான ஷரவணன் சக்தி, மூர்த்தி, ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை ஷபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். வடமஞ்சு விரட்டு எனும் கிராமிய வீர விளையாட்டின் பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ராஜசேகர் பேசுகையில்,

”நான் இந்த துறைக்கு புதிது. இயக்குநர் ஆறு மாதத்திற்கு முன் என்னை சந்தித்து கதை சொல்வதற்கு முன் மாட்டை பற்றி சொன்னார். அது எங்களுக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு இரண்டு மூன்று சந்திப்புகளிலும் கதையைப் பற்றி விரிவாக சொன்னார். அதன் பிறகு என்னுடைய பார்ட்னர்களுடன் விவாதித்தோம். இயக்குநர் எங்களிடம் எப்படி கதையை சொன்னாரோ… அதை அப்படியே திரையில் கொண்டு வந்து இருந்தார். நாங்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம். இதற்காக முதலில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா நடிகர் நடிகைகளும் நன்றாக நடித்திருந்தார்கள். குறிப்பாக இமான் அவர்களின் இசை சிறப்பாக இருந்தது. புது தயாரிப்பு நிறுவனம் புது தயாரிப்பாளர் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.

நான் கிராமத்தில் இருந்து வந்தவன். எங்களுக்கும் மாட்டிற்கும் நிறைய தொடர்பு உண்டு. ஒரு மாடு பதினெட்டு ஆண்டுகள் தான் உயிர் வாழும் என நினைக்கிறேன். டீ -காபி -பால் -தயிர்- என மாட்டுடன் நாம் அனைவரும் தொடர்பு கொண்டிருக்கிறோம். 18 ஆண்டு காலம் நமக்காக வாழ்ந்து இறக்கிறது. இன்றும் ஆலயங்களில் நந்தீஸ்வரராகத்தான் இருக்கிறார். நாங்கள் இதுபோன்று மாட்டை பற்றி படம் எடுப்பது பாக்கியம் என கருதுகிறோம்.

நிறைய பேர் வெள்ளித்திரையில் தோன்றுவதை தான் தங்களது ரோல் மாடலாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்த விசயத்தை நாங்கள் சொன்னதால் பெருமிதம் கொள்கிறோம். இதற்காக இறைவனுக்கும், மக்களுக்கும் நாங்கள் நன்றி சொல்கிறோம்” என்றார்.

நடிகர் முனீஸ்காந்த் பேசுகையில், ” வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் புது தயாரிப்பாளரை போல் இல்லாமல் எங்கள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றார். அவர் தொடர்ந்து படங்களை தயாரிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். விமலுடன் தொடர்ந்து நான் பல படங்களில் இணைந்து பணியாற்றி வருகிறேன். நான் இந்த படத்தில் நட்டியுடன் சில காட்சிகளில் நடித்திருக்கிறேன்.

பொதுவாக ஒரு காட்சியில் நடிக்கும் போது அந்த காட்சி நிறைவடைந்த பிறகு தான் சக நடிகர்கள் பாராட்டு தெரிவிப்பார்கள். இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே சிறப்பாக நடிக்கிறீர்கள் மேலும் மெருகேற்றுங்கள் என உற்சாகப்படுத்தினார் நட்டி. இது எனக்கு பெருமிதமாக இருந்தது அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘பாண்டி முனி’ என்ற பாடல் மிகப்பெரிய ‘வைப்’பாக இருந்தது. இதற்காக டி. இமானுக்கு நன்றி.

நான் நடித்த கதாபாத்திரத்தை பற்றி இப்போது எதையும் பகிர்ந்து கொள்ள இயலாது. எனக்கு முக்கியமான கேரக்டரை இயக்குநர் கொடுத்திருக்கிறார். அது என்ன? என்பதை நீங்கள் திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நான் சினிமாவில் நடிப்பதற்காக ஆசைப்பட்ட கேரக்டர் அதுதான். இது ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும். ” என்றார்.

இயக்குநர் கேந்திரன் பேசுகையில், ”கதை முழுமையாக எழுதி முடித்தவுடன் முதலில் இசையமைப்பாளர் இமானிடம் தான் சொன்னேன். அவர் முழுவதும் கேட்டுவிட்டு நான் இசையமைக்கிறேன் என்று சொன்ன தருணத்திலேயே எனக்குத் தெரிந்து விட்டது இந்த படம் ஹிட் என்று. இதற்காக இமானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரைத் தொடர்ந்து இப்படத்தின் கதையை விமலிடம் சொன்னேன். அதற்குப் பிறகு நட்டியிடம் சொன்னேன் அப்போது அவர் நீங்கள் சொன்ன கதையை மாறாமல் அப்படியே படமாக்கி விடுவீர்களா..! என்றார். நான் நிச்சயமாக எடுக்கிறேன் என்று சொன்னவுடன் அவரும், நானும் நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தார்.

இப்படத்திற்காக நிறைய ஹீரோயின்களை தேடிக் கொண்டே இருந்தோம். ஒருமுறை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் ஒரு போட்டோவை பார்த்தேன்.‌ அந்த போட்டோ அழகாக இருந்தது. வேறு எதையும் யோசிக்கவில்லை. அப்புறம் அவரை தேடினோம். அவர் என்னுடைய நண்பரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அவரை நடிக்க வைத்தோம். அவரும் அற்புதமாக படத்தில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் எதிர்காலத்தில் நல்ல ஆர்டிஸ்ட் ஆக வருவார். இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.‌

இந்தப் படத்தில் விமலுடன் நடித்த ‘பாண்டி முனி’ எனும் காளை மாட்டிற்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காட்சி படமாக்கும் போது ‘ஆக்ஷன்’ என்று சொன்னால் பாண்டி முனி நடிக்கும். நீங்கள் படம் பார்க்கும்போது அதனை ரசிப்பீர்கள்.

விமல் இந்தப் படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்ட பிறகு பணிகள் வேகம் எடுத்தன. இந்தப் படம் இவ்வளவு விரைவாக நிறைவடைந்து இருக்கிறது என்றால் அதற்கு ஹீரோவின் ஒத்துழைப்பு தான் முக்கியம்.

நான் இந்தப் படத்தைப் பற்றி எதையும் பேசவில்லை. மார்ச் 6ஆம் தேதி திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டிய படம் இது. இந்தப் படம் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்

நடிகை சனஸ்கா ஸ்ரீ பேசுகையில், ” நான் இயக்குநருடைய நண்பரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தில் நடித்திருந்த ஒரு காட்சியைத் தான் நான் என்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்திருந்தேன். அதைப் பார்த்து இந்தப் பெண் தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்று அடம் பிடித்து நடிக்க வைத்தார். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கு நன்றி.‌

புது ஹீரோயினுக்கு சம்மதம் சொன்ன விமலுக்கும் நன்றி. பெரிய நடிகர்களுடன் பணியாற்றும்போது ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் விமலுடன் பணியாற்றும்போது அவர் என்னை கலாய்த்து கொண்டே இருப்பார்.

நான் சின்ன வயதில் ஸ்கூலுக்கு செல்லும் போது இமானின் பாடல்களை கேட்டு வளர்ந்திருக்கிறேன். படத்தில் எனக்கும் ஒரு சோலோ சாங் இருக்கிறது. அதை கொடுத்த இமான் சாருக்கு நன்றி. ரொம்ப வருசத்திற்கு பிறகு ஹீரோயினுக்கு ஒரு சோலோ சாங் வருகிறது. அதில் நான் நடித்ததற்கு மீண்டும் ஒருமுறை அவருக்கு நன்றி சொல்கிறேன்.

இந்தப் படத்தை நாங்கள் அனைவரும் இன்று காலையில் தான் பார்த்தோம். படம் மிக சிறப்பாக வேற லெவலில் இருக்கிறது. படத்தின் இடைவேளைக்கு முன்னரான சண்டைக்காட்சியில் நானும் இருக்கிறேன். இதற்காக சண்டைப் பயிற்சி இயக்குநருக்கு நன்றி” என்றார்.

இசையமைப்பாளர் டி. இமான் பேசுகையில், ” மாசாணி பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராஜசேகருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவருடைய முதல் படம் இது. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன். இந்த நிறுவனம் தொடர்ந்து பல பல வெற்றி படங்களை வழங்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.

இந்தப் படத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது 60, 70 முறை சந்தித்திருப்போம். ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு நொறுக்குத் தீனியை எடுத்து வந்து அன்பை வெளிப்படுத்துவார். அதேபோல் படத்திற்கும் தேவையான அனைத்து விசயங்களுக்கும் கஞ்சத்தனம் இல்லாமல் செலவு செய்திருக்கிறார். இயக்குநருக்கு மிகப்பெரிய சொத்து தயாரிப்பாளர் ராஜசேகர் தான். அவர்கள் இருவரும் இணைபிரியாத தோழர்கள் போல இருப்பார்கள். அவர்களுடைய நட்பு இப்படத்தை கடந்தும் தொடரும் என நம்புகிறேன்.

இயக்குநர் இப்படத்தின் கதையை என்னிடம் முதலில் சொன்ன பிறகு நான் இசையமைக்கிறேன். ஆனால் அதற்கு முன் நடிகர் நடிகைகளை தேர்வு செய்யுங்கள் என்று சொன்னேன். அப்போதுதான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும். அதனால் முதலில் ஒரு நடிகரை பேசி தீர்மானித்து உறுதி செய்து விட்டு வாருங்கள் என சொன்னேன். விமல் சார் இந்தப் படத்தில் இணைந்தது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது.

இன்றைக்கு இருக்கும் ஜென் ஸீ இளைஞர்களுக்கு இவருடைய ‘ஒற்றை வார்த்தை ‘ மிகவும் பிடிக்கும். இது ஒரு நல்ல விசயம்தான்.  மனதில் தோன்றுவது தான் பேசுகிறார் என்பது வெளிப்பட்டு விடும். அப்படி ஒரு இயல்பான மனிதராக இருப்பதற்காக விமலை நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.

இந்தப் படத்தில் இடம்பெறும் நான்கு பாடல்களையும் பாடலாசிரியர் ஞானக்கரவேல் தான் எழுதி இருக்கிறார். சிறிது இடைவெளிக்குப் பிறகு நான் ஒரு பாடலுக்கு பின்னணி பாடி இருக்கிறேன்.  இந்த திரைப்படத்தின் பாடல்களை என்னுடைய டி ஐ சவுண்ட் ஃபேக்டரி நிறுவனத்திற்கு வழங்கிய தயாரிப்பாளருக்கு நன்றி.

நட்டி சார் நம் திரைத்துறையின் சொத்து. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இந்தப் படம் நம்முடைய ரூரல் ஸ்போர்ட்ஸான வட மஞ்சு விரட்டு  பற்றிய படம். அது தொடர்பான காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார் எடிட்டர் ஷபு. அவருக்கு என் வாழ்த்துக்கள்.

எந்த படமாக இருந்தாலும் லைட் அண்ட் சவுண்ட் தான் முக்கியம். ஒரு இயக்குநருடைய கற்பனையை கொடுப்பதே லைட் அண்ட் சவுண்ட் தான். அதில் லைட் என்ற விசயத்திற்கு காரணமான ஒளிப்பதிவாளருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இன்றைய சூழலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடல்களின் எண்ணிக்கை குறைவு தான். இதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆணாதிக்கம் மிக்க இந்த உலகத்தில் பெண்களுக்கு ஒரு முழு பாடலை வழங்குவது என்பது குறைந்துவிட்டது. அது எழுதும்போது இருந்தால்தான் திரையில் வரும். அப்படி ஒரு பாடல் வேண்டும் என்று இயக்குநர் சொல்லும் போது தான் நாங்களும் அப்படி ஒரு பாடலை கொடுக்க முடியும். இதற்காக இயக்குநருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் இப்படி ஒரு சூழலை உருவாக்கினார்.  

இந்த படம் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் தயாரிப்பாளர் மிகுந்த இறை நம்பிக்கை கொண்டவர். அவர் வணங்கும் தெய்வம் அவருக்கு எல்லா அருளையும் வழங்க வேண்டும்.

என்னுடைய அனுபவத்தில் இறை மீது நேசம் கொண்டிருப்பவர்களுக்கு எவ்வளவு சோதனைகள் வந்தாலும் ஒரு போதும் வீழ்ச்சி இல்லை. அதனால் இந்தப் படம் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தயாரிப்பாளருக்கு தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.

நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், ” இந்த படத்தை நான் பார்த்து விட்டேன். மிக நன்றாக இருக்கிறது. இயக்குநருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளரின் விருந்தோம்பலை பற்றி அனைவரும் சொன்னார்கள் எனக்கு அவருடைய இறை நம்பிக்கை மிகவும் பிடித்திருந்தது.

நான் இப்படத்தின் முழு திரைக்கதையையும் கேட்டேன். அது சிக்கலானது. அதை காட்சிப்படுத்துவது கடினமானது. தயாரிப்பாளரிடம் எப்படி இந்த படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டீர்கள்? என கேட்டேன். நம்முடைய தேசத்தில் தான் ‘ஏரும் தெய்வம் எருதும் தெய்வம்’ என்று இருக்கிறது. இந்தக் கதையில் வட மஞ்சுவிரட்டு என்று ஒரு விசயத்தை வைத்து அதை சுற்றிலும் நல்லதொரு கதாபாத்திரங்களை உருவாக்கி இருந்தார். அது எனக்கு பிடித்திருந்தது. அதனால் தயாரிக்க ஒப்புக்கொண்டேன் என்றார்.  

விமலுடன் நான் இணைந்து பணியாற்றும் முதல் திரைப்படம் இது. இதற்கு முன் நானும் அவரும் ‘ஓம் காளி ஜெய் காளி’ எனும் வெப் சீரிஸில் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத பல காரணங்களால் நான் அதில் நடிக்கவில்லை. இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை இயக்குநர் கேந்திரன் ஏற்படுத்தி கொடுத்தார். விமலிடம் எப்போதும் ஒரு யதார்த்தம் இருக்கும் அது இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம்.

இந்தப் படத்தில் நீதிமன்ற வளாகத்தில் ஒரு சண்டைக் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் விமல் அற்புதமாக நடித்திருக்கிறார். அதில் ஹீரோயிசமும் தெரியவேண்டும் அதே நேரத்தில் அதை ஒரு எல்லைக்குள் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்க வேண்டும். இதை மனதில் வைத்து நன்றாக நடித்திருந்தார்.  

இந்த படத்தின் திரைக்கதை கலைத்துப் போடப்பட்ட சீட்டுக்கட்டு போலிருக்கும்.‌ இதற்கு கேமரா மேன், எடிட்டர், ஃபைட் மாஸ்டர், மியூசிக் டைரக்டர் இமான் ஆகியோர் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

தீபா- சரவணன் சக்தி- பால சரவணன்- ஆகியோர் மூவரும் இணைந்து ஒரு கூட்டணி அமைத்து நடித்திருக்கிறார்கள். இவர்கள் வரும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்கள் நிச்சயமாக சிரிப்பார்கள்.

சமூகப் பிரச்சனைகளை சொல்லி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. இந்த படம் ஒரு கிராமத்தின் கதை. அதை சுற்றியுள்ள மக்களின் மனநிலை.. அவர்களின் உறவுமுறை… இதை இந்த படம் பேசி இருக்கிறது. தயாரிப்பாளர் குறிப்பிட்டதை போல் ‘ஏரும் எங்கள் கடவுள்தான் எருதும் எங்கள் கடவுள்தான்’ இதையும் இந்தப் படம் பேசுகிறது. படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகர் விமல் பேசுகையில், ”  இந்தப் படத்தை பார்த்து விட்டேன். இமான் சார் இந்த படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.‌ மதுரையில் மஞ்சுவிரட்டு நடக்கும் இடங்களில் எல்லாம் இந்த ‘பாண்டி முனி’ பாடலை தான் ஒலிக்க விடுகிறார்கள். அந்த அளவிற்கு பாடலுக்கு இசை அமைத்துக் கொடுத்த இமானுக்கு நன்றி.

எனக்கு மாஸ் ஹீரோ எல்லாம் வேண்டாம். நல்ல மனசுள்ள ஹீரோவாக இருந்தால் போதும். ஏனெனில் என் சக்தி என்ன என்று எனக்குத் தெரியும்.  ஆண்டவன் என்னை இந்த அளவில் வைத்திருந்தால் போதும். நம்மை நம்பி பணம் போடும் தயாரிப்பாளருக்கு ஓரளவு லாபம் சம்பாதித்து கொடுத்தால் போதும்.

ஹீரோயின் பெயர் சனாஸ்கா. இந்தப் பெயரை கூப்பிடுவதெல்லாம் எனக்கு பெரிய டாஸ்காக இருக்கிறது. அவர் இந்த படத்தில் மிகவும் இயல்பாக  நடித்திருக்கிறார்.

எனக்கு பால சரவணன் ஆகிய இருவருக்கும் மாடுடன் தான் பெரிய டாஸ்க் இருக்கும். அவர்கள் பெயர் பாண்டி முனி. அவர்கள் இன்று மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டிருப்பதால் இங்கு வர முடியவில்லை.

படத்தில் நானும், நட்டி நடராஜும் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது.. அவர் எதைப் பற்றியும் கவலைப்படாதே அடிக்க வேண்டும் என்றால் அடித்து விடு, மிதிக்க வேண்டும் என்றால் மிதித்து விடு என மிகவும் சுதந்திரம் கொடுத்தார். அதனால் அந்த காட்சி அற்புதமாக வந்தது. அதற்காக இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தயாரிப்பாளை பற்றி ஒரு உண்மை சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ரோபோ சங்கர் மாமா மறைந்த போது குற்றாலத்தில் ‘வடம்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். பெரிய பொருட்செலவில் அந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. முதல் நாள் இரவு தான் எனக்கு தகவல் சொன்னார்கள். நான் மெதுவாக இயக்குநரிடம் சொன்னேன். படப்பிடிப்பிலிருந்து செல்வதற்கு அனுமதி கொடுக்க மாட்டார்கள் என்று தெரியும். இருந்தாலும் கேட்டு பார்ப்போம் என இயக்குநரிடம், இரவில் விமானம் மூலம் சென்னைக்கு சென்று காலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு உடனடியாக விமானம் ஏறி மதியத்திற்குள் படப்பிடிப்புக்கு வந்து விடுகிறேன் என்று சொன்னேன்.

ஆயிரம் துணை நடிகர்கள்-  மக்கள்-  மாடு பிடி வீரர்கள்-  சிவகங்கையிலிருந்து ஏராளமான மாடுகளும் வந்து இருந்தது. கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் பொருட்செலவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. வேறு ஏதேனும் காட்சிகள் இருக்கிறதா? என்று கேட்டேன் இல்லை என்றார்கள். அதன் பிறகு படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டேன். மனைவியிடம்,’ நீ சென்று ஆறுதல் கூறு’ என்று சொல்லிவிட்டேன்.

அடுத்த நாள் மாலையில் அனைவரையும் அழைத்து ரோபோ சங்கருக்கு கண்ணீர் அஞ்சலியுடன் பெரிய ப்ளக்ஸ் பேனரை வைத்து மௌன அஞ்சலி செலுத்தினார். அங்குள்ள கிராம மக்களுக்கு 500 புடவைகளை தானமாக வழங்கினார். அந்த ஏரியா முழுவதும் 2000 மரக்கன்றுகளை வழங்கி, அதை பதியமிட வைத்தார். நேரில் வந்து செலுத்த முடியாத அஞ்சலியை தயாரிப்பாளர் ராஜசேகர் இப்படி செய்து என் மனதை கவர்ந்து விட்டார். அதற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த கதையை அவர் கவனமாக தேர்வு செய்து உருவாக்கியிருக்கிறார். இந்த நிறுவனமும், இந்த படமும் பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இயக்குநர் கேந்திரன் இந்த கதையை என்னிடம் சொன்னார். கதை நன்றாக இருந்தது. ஆனால் அதை அவர் சொன்னபடியே எடுத்து விடுவாரா..! என்ற சந்தேகம் இருந்தது. இது ஒரு கமர்சியல் திரைப்படம் தான். ஆனால் இது கதை உள்ள கமர்சியல் படம். அதுவும் நான்கு ஐந்து கதைகள் இருக்கும் படம். முதலில் இருந்து எல்லாத்தையும் சொல்லி சொல்லி கிளைமாக்ஸ்சில் அனைத்தையும் கச்சிதமாக முடிப்பார். படப்பிடிப்பில் நிறைய காட்சிகளை படமாக்கி கொண்டு இருந்தார். ஆனாலும் எனக்கு நம்பிக்கையே வரவில்லை. நேற்று முன்தினம் படம் பார்த்த பிறகு தான் எனக்கு திருப்தியானது. அவர் என்னிடம் சொன்ன கதையை கச்சிதமாக படமாக்கி இருந்தார். இந்த படத்தை இனி ரசிகர்கள் திரையரங்கத்தில் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

கோவையில் தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்! எதற்கு தெரியுமா?!

கோவை தொட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை பள்ளி கழிப்பறை, மாணவிகள் கழிப்பறை, ஆசிரியர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் 5-ம் வகுப்பு மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புகார் அளித்தனர். மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த நிலையில், மாணவர்களைக் கொண்டு கழிவறையை சுத்தம் செய்ய வைத்த புகாரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்திய மாணவா் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆகியவை சாா்பில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவரிடம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம், தொட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவா்களுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் கடுமையான அநீதிகள் நடைபெற்று வருகின்றன.

தொட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை பள்ளி கழிப்பறை, மாணவிகள் கழிப்பறை, ஆசிரியர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் 5-ம் வகுப்பு மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். வருகை பதிவேட்டின் வரிசைப்படி தினமும் காலை 2 மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர். பள்ளியில் மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் கழிப்பறைகள், ஆசிரியா்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் நாள்தோறும் காலை, மாலை என 2 வேளைகளும் இந்த 5 மாணவா்களும் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

மேலும் அந்த மாணவர்கள் மட்டும் தரையில் அமர வைக்கப்பட்டு உள்ளனர். இந்த விஷயத்தை பெற்றோரிடம் தெரிவிக்கக் கூடாது என்றும், அவ்வாறு தெரிவித்தால் மாற்றுச் சான்றிதழை வழங்கி பள்ளியில் இருந்து விரட்டி விடுவேன் என்றும் தலைமை ஆசிரியா் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இத்தகைய தீண்டாமை சார்ந்த செயல்பாடுகள் நடந்து உள்ளதாக எங்களுக்கு தெரிய வருகிறது. இது கல்வி உரிமைகளுக்கு எதிரானது.

எனவே மாணவர்களை தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள் மீது சட்டரீதியான மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள துப்புரவு பணியாளா் மற்றும் பாதுகாவலா் பணியிடங்களை உடனடியாக வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த பள்ளியில் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரியை, கோவை மாவட்டம் அன்னூர் வட்டாரம் கோனார்பாளையம் அரசு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். கோவை போன்ற வளர்ந்த ஒரு நகரத்தின் அருகே, அதுவும் வருங்காலத் தூண்களாக வளர வேண்டிய சிறுவர்களிடம் “தீண்டாமை” எனும் விஷம் விதைக்கப்படுவது உண்மையிலேயே வெட்கக்கேடானது என்று சமூக ஆர்வல்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

நல்ல கண்ணு அய்யா காலமானார்! யார் தான் இவர்? வாங்க பார்ப்போம்!!

ந்திய கம்யூனிஸ்ட் கட்சி​யின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான இரா.நல்​ல​கண்​ணு காலமானார். அவருக்கு வயது 101. மகத்தான அந்த அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.

எவருக்​கும் கிட்டாத அரிய வாய்ப்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி​யின் தொடக்க நாளான 1925 டிசம்பர் 26 ​தான் நல்​ல​கண்​ணு​வின் பிறந்​த​நாளாகும். கட்சி தோன்றிய நாளில் தோன்றிய ஒரே மனிதர் நல்​ல​கண்​ணு​தான். வேறு எந்த அரசியல் தலைவரின் வாழ்விலும் அமைந்திராத அரிய ஒற்றுமை இது. கம்​யூனிஸ்ட் கட்சி பிறந்த நாளில் பிறந்​தவ​ரான நல்​ல​கண்​ணு​வின் குடும்​பம், கம்​யூனிஸ்ட் இயக்​கக் குடும்​பம் அல்ல.

விடு​தலைப் போராட்​டத்​தின் எழுச்சியால் உந்​தப்​பட்ட ஆர்.நல்​ல​கண்​ணு, பள்ளி மாணவ​னாக இருந்த காலத்​தில் இந்​திய தேசிய காங்​கிரஸ் இயக்​கத்​தில் தன்னை இணைத்துக்​கொண்​டார். ஆனால், இளம் வயதிலேயே பெற்​றிருந்த தனது பரந்​துபட்ட வாசிப்பு ஆற்​றலால், சுதந்திரப் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​போது சிறு வயதிலேயே கிடைத்த அனுபவங்​களால், பலவேசம் செட்​டி​யார் போன்ற தனது ஆசிரியர்​கள் தந்த வழி​காட்​டு​தலால் அவர் கம்யூனிஸ்ட் இயக்​கத்​தைத் தேர்ந்​தெடுத்​தார்.

1948-இல் இந்​தி​யா​வில் கம்​யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்​தில், ஏராள​மான சதி வழக்​கு​களில் கம்​யூனிஸ்ட் தலை​வர்​கள் கைது செய்​யப்​பட்​டனர். தமிழ்​நாட்​டில் ‘நெல்லை சதி வழக்​கு’, வரலாற்​றில் பதி​வான முக்கிய வழக்​காகும். இந்த வழக்​கில்​தான் நல்​ல​கண்ணு கைது செய்​யப்​பட்​டு, பல ஆண்​டு​கள் சிறை​யில் இருந்​தார். தமிழ்​நாட்​டைச் சேர்ந்த கம்​யூனிஸ்ட் தலை​வர்​களில் நல்லகண்​ணு​தான் நீண்ட காலம் சிறை​யில் இருந்​தவர். நல்ல​கண்​ணு​வின் இளம் வயதுப் போராட்​டங்​களை​யும், அவர் அனுப​வித்த சிறைக் கொடுமை​களை​யும் அறி​யும் அனை​வருக்​கும் அவர் மீது பெரும் ஈர்ப்பு உரு​வாகும் என்பது நிச்​ச​யம்.

குறிப்​பாக, அவருடைய வாழ்க்​கைப் பயணம் பற்​றி அறியும் இளம் தலை​முறை​யினர், மக்​களுக்​காகத் தொண்டு செய்ய இப்​படி​யும் ஓர் உறு​தி​மிக்க தலை​வர் இருக்க முடி​யுமா என்று வியப்​பில் ஆழ்ந்து போவதைத் தவிர்க்க முடி​யாது. அரசி​யலில் கொள்கை மாறு​பாடு​கள் இருக்​கலாம்; ஆனால், சாமானிய மக்​களைப் பாதிக்​கும் பொதுப் பிரச்​சினை​களில் அரசி​யல் பார்க்​காமல் எல்லோரும் இணைந்து ஓரணி​யில் மக்​களுக்​காகப் போராட வேண்​டும் என்​ப​தில் நம் அரசி​யல் தலை​வர்​கள் அனை​வருக்​கும் நல்​ல​கண்ணு முன்​னு​தா​ரண​மாகத் திகழ்ந்தவர்.

கடந்த நூறாண்​டு​களில், தமிழ்​நாட்​டில் குறுக்​கும் நெடுக்குமாக அவரது காலடி படாத ஊர்​களே இல்லை எனலாம். தமிழ்​நாட்​டின் கடந்த ஒரு நூற்​றாண்டு கால வரலாற்றை எழுதும்​போது, நல்​ல​கண்​ணு​வைத் தவிர்த்துவிட்டு எழுத முடி​யாது. ஏனெனில், அவருடைய வாழ்க்கை என்​பது தமிழ்​நாட்​டின் நூறாண்டு கால வரலாற்றோடு பின்​னிப் பிணைந்​திருக்​கிறது.

எல்லா மக்​களுக்​கும் எல்​லா​மும் கிடைத்​திடச் செய்ய வேண்​டும் என்ற உயரிய நோக்​கில், அரசி​யல், சமூகம், கல்வி, பொருளாதாரம், விவ​சா​யம், அறி​வியல், கலை, இலக்​கி​யம், பண்​பாடு என அனைத்​துத் தளங்​களி​லும் செயல்​படும் தமிழகத்​தின் முன்​னோடிகளோடு இணைந்து, நவீன தமிழ்​நாட்​டைக் கட்​டமைப்​ப​தில் பெரும் பங்​களிப்பு செய்​தவர் நல்​ல​கண்​ணு.

அரசி​யல் கட்​சிக்​கான வேலிகளை​யெல்​லாம் கடந்​து, தமிழ்​நாட்​டின் பொதுத் தலை​வ​ராகப் பரிணமித்த ​அந்த மாமனிதர் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.முத்தரசன் பகிர்ந்த தகவல்களை இனி பார்ப்போம்.

தூத்​துக்​குடி மாவட்டம் திரு​வை​குண்​டத்​தில் இராம​சாமி – கருப்​பாயி தம்ப​திக்கு மூன்​றாவது மகனாகப் பிறந்​தார் நல்ல​கண்ணு. பள்ளி​யில் படிக்​கின்​ற​போதே, தேச விடுதலையே தனது மூச்​சென்​றிருந்​தார். தேசப்​பிதா காந்தி​யின் எளிமை, நேர்மை ஆகியவை இவரை ஆட்கொண்டன. பொது வாழ்க்கைக்கு வந்த நாள் முதல் கடைசி வரை எளிமை​யின் சிகர​மாய் – நேர்​மை​யின் அடையாள​மாய் தொடர்ந்த இவரது வாழ்க்கை, ஆரம்பத்தில் காந்​தியப் பாதை​யில் பயணித்​தது.

அதன்​பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்​திவந்த இயக்கங்​களாலும், தோழர் ஜீவா பொதுக் கூட்​டங்​களில் ஆற்றிய உரைகளைக் கேட்டும் நல்ல​கண்​ணு​வின் கவனம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி​யின்​பால் திரும்​பியது. அதனால் கல்லூரிப் படிப்​பைக் கைவிட்​டார். சின்னஞ்​சிறு வயதில் செங்​கொடியைக் கரங்​களில் ஏந்தி​ய​வர், கடந்த எண்பது ஆண்டு காலமாகத் தனது லட்சியப் பயணத்​தைத் தொய்வின்​றித் தொடர்​ந்தார்.

கட்சி தடை செய்​யப்​பட்​ட​போது தலைமறைவு வாழ்க்கையில், காடுமேடு​களில் அலைந்து திரிந்த நிலையில் காவல் துறை இவரின் ரகசிய இடமறிந்து கைது செய்​தது. காவல் அதிகாரி மற்ற தலைவர்​களைப் பற்றி விசா​ரித்த​போது அதற்கு நல்ல​கண்ணு பதில் சொல்ல மறுத்​தார். அதனால் அடித்து, உதைத்து, நையப்பு​டைத்து, தலைகீழாகத் தொங்​க​விட்டு அடித்​தும் வாய் திறக்கவே இல்லை. இனி என்ன செய்​ய​லாம் என ஆழ்ந்து யோசித்த காவல் அதிகாரி, இவருடைய மீசை ரோமத்தை ஒவ்வொன்றாகப் பிடுங்கி மகிழ்ந்​தார். இருப்​பினும் நல்ல​கண்​ணு​விட​மிருந்து பதில் எதுவும் கிடைக்க​வில்லை.

காவல் துறை​யினர் ஜோடித்த பொய்யான நெல்லை சதி வழக்​கில் ப.மாணிக்​கம், கே.பாலதண்​டா​யுதம், வாத்​தி​யார் ஜேக்கப் உள்ளிட்ட தலைவர்​களோடு தோழர் நல்லகண்ணுவுக்​கும் ஆயுள் தண்டனை வழங்​கப்​பட்​டது. சிறை​யில் நடந்த அனைத்​துக் கொடுமை​களை​யும் நெஞ்சுரத்​தோடு அவர் எதிர்​கொண்​டார்.

கட்சி​யில் உறுப்​பின​ராகத் தொடங்கி, விவசாயத் தொழிலாளர் சங்கத்​தின் மாநிலப் பொதுச் செயலா​ளராக நீண்ட காலமும்; கட்சி​யின் மாநிலச் செயலாளராக நான்கு முறை தேர்வு செய்​யப்​பட்டு 12 ஆண்டு​களும்; கட்சி​யின் தேசிய நிர்​வாகக் குழு உறுப்​பின​ராக​வும், தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவ​ராக​வும் பணியாற்றிய அனுபவம் மிக்​கவர்.

தன்னை நாடி வந்த நிதிகள் எதையும் இவர் தனதாக்​கிக் கொண்​ட​தில்லை. சான்​றாக, தமிழ்​நாடு அரசின் சார்​பில் அம்பேத்கர் விருது வழங்​கப்​பட்​ட​போது கொடுக்​கப்​பட்ட நிதி​யைக் கட்சி​யின் வளர்ச்​சிக்​கும், சங்க வளர்ச்​சிக்​கும் வழங்​கி​னார். 2022-இல் தமிழ்​நாடு அரசு ‘தகை​சால் தமிழர் விருது’ வழங்​கிய​போது, தனக்கு அளிக்​கப்​பட்ட 10 லட்சம் ரூபா​யுடன் மேலும் 5 ஆயிரம் ரூபாயை சேர்த்து, 10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை முதல்வர் மு.க.ஸ்​டா​லினிடம் கரோனா நிதி​யாகத் திரும்ப அளித்​தார்.

இவரது எண்ப​தாம் ஆண்டில் விழா எடுத்த​போது கட்சி இவருக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளித்​தது. அதனை அதே மேடை​யில் கட்சிக்கு நிதியாக வழங்​கி​னார். இவருக்கெனச் சொந்​தமாக வாகன வசதி கிடை​யாது என்ப​தறிந்து, அடையாறு மாணவர் நகலக உரிமை​யாளர் ஆனாரூனா கார் ஒன்றைப் பரிசளித்​தார். அதன் சாவியை முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்​கி​னார். நல்லகண்ணு அந்த ஊர்தி​யை​யும் கட்சிக்கே அளித்​தார்.

இவரது தியாகத்​தைப் பலரும் பல கோணங்​களில் பாராட்டி மகிழ்ந்தது உண்டு. திமுக தலைவர் கருணாநிதி, தோழர் நல்ல​கண்​ணு​வின் எண்ப​தாம் ஆண்டு விழா​வில் பேசி​ய​போது, “இன்​றைக்கு நான் ஒரு உண்மை​யைச் சொல்​கிறேன், எனது இரண்டு கண்களில் ஒன்று பழுதாகிவிட்​டது, ஒரு கண் பார்​வை​தான் உண்டு, மற்றொரு கண் நல்ல​கண்ணு” என்றும், “என்னைவிட இரண்டு வயது இளையவர் என்றாலும், தியாகத்​தால் என்னைவிட மூத்​தவர்” என்றும் பெருமிதம் பொங்கக் கூறினார்.

பாஜக அணியில் திமுக இருந்த​போது திருச்​சி​யில் பத்திரி​கை​யாளர்கள் சந்திப்​பில் நிருபர்கள் கருணாநி​தி​யிடம், “நீங்கள் பாஜக அணியில் இருந்து விலகி வர வேண்டுமெனத் தொடர்ந்து நல்ல​கண்ணு பேசிவரு​கிறார், அது குறித்து உங்கள் பதில் என்ன?” என்று வினவிய​போது, கருணாநிதி சற்றும் தயக்கமின்றி, “நல்​ல​கண்ணு எப்போதும் நல்லதைத்​தான் சொல்​வார்” என்றார்.

தன் வாழ்​நாள் முழு​வதும் ஏழை, எளிய மக்களுக்​காக, உழைக்​கும் மக்களுக்​காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்​கொண்​ட​வர். தியாகத்​தால் புடம்​போட்ட தங்கமென ஜொலித்​தவர். மணல் கொள்​ளையை எதிர்த்து உயர் நீதி​மன்ற மதுரைக் கிளை​யில் வழக்​குத் தொடுத்து, தானே நீதி​மன்றம் சென்று வாதாடி வெற்றி​யும் கண்ட​வர்.

பொது​வாழ்வு என்பது பொழுது​போக்​கல்ல, எளிமை​யும், நேர்​மை​யும், அர்ப்​பணிப்பும், ​தி​யாக​மும் நிறைந்​த​தாகும் என்​பதை ​வாழ்ந்து ​காட்​டியவர். சொல்​லுக்கும் செயலுக்கும் வேறு​பாடு இன்​றித் தன் ​வாழ்வை அர்ப்​பணித்​துக்​கொண்ட எளிமை​யின் சிகர​மாகத் திகழ்ந்தவர் தோழர் நல்லகண்ணு.