Friday, March 6, 2026
Blog

காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் தெரியுமா?!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக எம்.பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் இன்று சந்தித்து சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இன்று திமுக மற்றும் காங்கிரஸ் இடையே மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவைத் தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கையெழுத்திட்டனர்.

திமுகவுடனான உடன்படிக்கையை தொடர்ந்து, மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளரை நாளைக்குள் காங்கிரஸ் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாளை மாநிலங்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் வேட்பாளர் மனுத்தாக்கல் செய்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலியாகவுள்ள 6 இடங்களுக்கான மாநிலங்களவை இடங்களுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையில் 4வது திருமணம்….! நடுவில் வந்த நபரின் நிலை?!

கோவை மாவட்டம், சூலூர் அருகே ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஹோட்டலில் பணியாற்றி வரும் எஸ்தர் என்பவரை 4 வது திருமணம் செய்ய ஆசைப்பட்ட நிலையில், ஹோட்டல் உரிமையாளருக்கும், எஸ்தருக்கும் இடையே பழக்கம் இருப்பது தெரியவந்ததையடுத்து ஆத்திரத்தில் ஹோட்டல் உரிமையாளரை ஆட்டோ ஓட்டுநர் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் திலீபன். இவர் ​கோவை மாவட்டம், சூலூரை அடுத்த நாகமநாயக்கன்பாளையம் பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தார். இவரது ஹோட்டலில் அதே ஊரைச் சேர்ந்த 37 வயதான அன்பு எஸ்தர் என்பவர் கடந்த மூன்று மாதங்களாகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஏற்கனவே 3 திருமணங்கள் செய்த ஆட்டோ ஓட்டுநரான பிரேம் ஆனந்த் என்பவர் எஸ்தரை 4 ஆவதாக திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார்.

இந்தத் திருமணத்துக்கு எஸ்தர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் எஸ்தரும், ஹோட்டல் உரிமையாளரான திலீபனும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த பிரேம் ஆனந்த் கடந்த ஜனவரி மாதம் ஹோட்டலுக்குச் சென்று எஸ்தரையும், திலீபனையும் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார்.

இந்த கொலை முயற்சி சம்பவம் காரணமாக பிரேம் ஆனந்த் சூலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு 17 நாட்கள் சிறையில் இருந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த பிரேம் ஆனந்த் இன்று அதிகாலை 5:30 மணியளவில் எஸ்தர் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார். இதையடுத்து, எஸ்தர் வீட்டின் கதவைத் திறந்துள்ளார்.

அப்போது, அங்கு திலீபன் கட்டிலில் படுத்திருப்பதைக் கண்டு கடும் ஆத்திரமடைந்த பிரேம் ஆனந்த், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திலீபனை சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளார். ​கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், வீட்டின் சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்துவிட்டு தீ வைத்து எரிக்கவும் முயன்றுள்ளார்.

அப்போது, கேஸ் வெடித்த நிலையில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் சிதறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பிரேம் ஆனந்தைப் பிடித்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. கரிகால் சங்கர் பாரி மற்றும் சூலூர் போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த திலீபனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், காயமடைந்த எஸ்தரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து, கொலையாளி பிரேம் ஆனந்தைக் கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அய்யா வைகுண்டரின் 194வது அவதார தின விழா!

அய்யா வைகுண்டரின் 194வது அவதார தின விழா தென்மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் இருந்து சாமி தோப்பில் உள்ள வைகுண்டர் தலைமை பதி நோக்கி பக்தர்கள் ஊர்வலம் புறப்பட்டுள்ளனர். இந்த ஊர்வலத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அய்யா வழி பக்தர்கள் அதிகம் உள்ளனர். சமூக, சமத்துவத்தை வலியுறுத்தியவர் அய்யா வைகுண்டர். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ம் தேதி அய்யா அவதார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அய்யா வைகுண்டரின் 194வது அவதார தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி அவர் விஞ்சை பெற்ற திருச்செந்தூரில் இருந்தும், அவர் சிறையில் அடைக்கப்பட்ட திருச்செந்தூரில் இருந்தும் நேற்றே அய்யா வழி பக்தர்கள் வாகனங்களில் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு வந்தனர்.

இதையடுத்து அய்யா வைகுண்டரின் அவதார தினவிஒாவையொட்டி நாகராஜா கோவிலில் இருந்து தலைமை பதி சாமிதோப்புக்கு ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அய்யா வைகுண்டரின் வாகனத்தின் முன்னால் முத்து குடையும், சிங்காரி மேளமும், செண்டை மேளமும் சென்றது. தலைப்பாகை அணிந்து காவி கொடி அணிந்து ”அய்யா சிவ சிவ அரஹரா அரஹரா” என்ற பக்தி முழக்கமிட்டு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

இந்த ஊர்வலம் கோட்டார், ஈத்தாங்காடு, தாமரை குளம் வழியாக சாமிதோப்பை சென்றடைய உள்ளது. சாமி தோப்பில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். அதேபோல் திருசெந்தூரில் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டரின் அவதார பதியில் ஆயிரக்கணக்கானவர்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல் தென்மாவட்டங்களில் உள்ள பிற பதிகளிலும் பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

அய்யா அவதார தினவிழாவையொட்டி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யயும் வகையில் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் மார்ச் 14ம் தேதியும் தென்காசியில் மார்ச் 7 ம்தேதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘அய்யா வைகுண்டர் வழியில் சமத்துவம் பேணுவோம்!’ – முதல்வர் ஸ்டாலின்

ய்யா வைகுண்டரின் 194 வது பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

”இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றிய அய்யா வைகுண்டரை நாம் பெற்ற நாள்!

“கீழ் நோக்கிப் பிடித்தாலும், மேல் நோக்கியே எரியும் தீபத்தைப் போல, விளக்கின் ஒளியாய், வீரத் தனமாக இருங்கள்” எனச் சமத்துவக் கனலைச் சமூகத்தில் விதைத்து நிறைந்தவர் அய்யா வைகுண்டர்.

‘தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்’ எனும் அவரது கூற்றையே ஆட்சிக்கான அடிப்படையாய்க் கொண்டு நலிந்தோரின் நலம் நாடும் அரசாக நமது திராவிட மாடல் அரசும் செயல்படுகிறது.

அய்யா வைகுண்டரின் பொன்மொழிகளைப் பின்பற்றி நடப்போம்! சமத்துவம் பேணுவோம்!” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இரட்டை கொலை வழக்கு! 7 பேர் கைது!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேர் விவரம்: தென்னிமலை சுடலைகண்ணு மகன் கண்ணன் (21), முருகன் மகன் சுப்பையா என்ற சுபாஷ் (19), பன்னீர்செல்வம் மகன் அந்தோனி மைக்கேல் (18), சுடலைகண்ணு மகன் கல்யாணி (19), நாங்குநேரி நம்பிநகர் முத்தையா மகன் ராஜா (19), வள்ளியூர் ஆண்டி மகன் உச்சிமாகாளி (20), நெடுங்குளம் முருகன் மகன் வசந்தகுமார் (21).

நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் சரகம் , பெரும்பத்து பஜாரில், நேற்று இரவு பைக்கில் வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல், அங்கு டீ கடை அருகே சாலையில் நின்று கொண்டிருந்த, பொதுமக்களை சரமாரியாக வெட்டியது. இந்த சம்பவத்தில் வடமாநில செங்கல் சூளை தொழிலாளி உள்பட இரண்டு பேர் பலியாகினர். கண்மூடித்தனமாக வெட்டியதில் 6 பேருக்கு பலத்த வெட்டுக் காயம் விழுந்தது.

இந்தக் கொடூர தாக்குதலில் பெரும்பத்து இந்திரா காலனியை சேர்ந்த ஜான் (42) மற்றும் பெயர் தெரியாத வட மாநில செங்கல் சூளை தொழிலாளி ஆகிய இரண்டு பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் படுகாயம் அடைந்த பெரும்பத்து பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் மகன் நெல்சன் (58), பால்வண்ணன் மகன் பிரபாகரன், வைகுண்டம் மகன் ராமசாமி, வீராங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கணேசன் (53) ஆகியோர் காயமடைந்தனர்.

மேலும், சம்பவ இடத்திலிருந்து தப்பித்துச் சென்ற எதிரிகள், புளியங்குளம் அருகே சென்றபோது அந்தபகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சசிகுமார் என்பவரையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

QuizBites 4.0: சமையல் வினாடி வினா தளம்!

சென்னை:
 
சமையல் அறிவு மற்றும் தொழில்முறை நட்புறவை கொண்டாடுவதில் நான்கு வெற்றிகரமான ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், QuizBites 4.0 அளவு, ஆற்றல் மற்றும் தொழில்துறை அளவிலான பங்கேற்புடன் திரும்பியது. இஸ்பஹானி மையத்தால் தொடர்ந்து நான்காவது ஆண்டாக நடத்தப்பட்ட, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சமையல் வினாடி வினா மதிப்புமிக்க GRT கிராண்டில் நடைபெற்றது, இதில் தென்னிந்தியா முழுவதிலுமிருந்து 50க்கும் மேற்பட்ட அணிகள் மற்றும் 100 சமையல்காரர்கள் கலந்து கொண்டனர்.
 
ஒரு சிறப்புத் துறை முயற்சியாகத் தொடங்கியது, இப்போது பிராந்தியத்தின் சமையல் நாட்காட்டியில் ஒரு குறிப்பிடத்தக்க வருடாந்திர தளமாக உருவாகியுள்ளது. QuizBites தொடர்ந்து அனுபவம் வாய்ந்த நிபுணர்களையும் வளர்ந்து வரும் திறமையாளர்களையும் ஈர்க்கிறது, இது விருந்தோம்பல் துறையில் அறிவு சார்ந்த ஈடுபாட்டிற்கான வளர்ந்து வரும் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.
 
இந்த ஆண்டு பதிப்பில் மேம்படுத்தப்பட்ட, உயர்-தீவிர வடிவமைப்பு, பஸர் சுற்றுகள் மற்றும் சமையல் நிபுணத்துவம், அனிச்சைகள் மற்றும் குழுப்பணியை சோதிக்கும் விரைவான-தீ அமர்வுகள் இடம்பெற்றன. போட்டி மனப்பான்மை நிகழ்வு முழுவதும் உயர்ந்ததாக இருந்தது, ஆறு அணிகள் சிறந்த கௌரவங்களுக்காகப் போராடிய ஒரு பரபரப்பான இறுதிச் சுற்றில் உச்சத்தை அடைந்தது.
 
Winner: கல்னரி  அகாடமி ஆஃப் ஹைதெராபாத்
 
இந்த நிகழ்வில் தென்னிந்திய சமையல் சங்கத்தின் தலைவர் சமையல்காரர் தாமோதரன் மற்றும் SICA இன் பொதுச் செயலாளர் சமையல்காரர் ஷீதராம் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர், அவர்களின் தொடர்ச்சியான தலைமை தொழில்துறையில் தளத்தின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தியுள்ளது. அவர்களின் இருப்பு QuizBites இன் வளர்ந்து வரும் அந்தஸ்தை ஒரு வினாடி வினாவாக மட்டுமல்லாமல், சமையல்காரர்களுக்கான ஒரு தொழில்முறை நெட்வொர்க்கிங் மற்றும் திறன் மேம்பாட்டு மன்றமாகவும் மாற்றியது.
 
சமையல்காரர் தாமோதரன் கூறுகையில், “QuizBites 4.0 என்பது தென்னிந்திய சமையல் சமூகத்திற்குள் உள்ள அசாதாரண திறமையை வெளிப்படுத்தும் ஒரு உற்சாகமான நிகழ்வாகும். சமையல்காரர்கள் தங்கள் படைப்பாற்றல், அறிவு மற்றும் திறமையின் எல்லைகளைத் தாண்டிச் செல்வதைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது. இந்த நிகழ்வில் உள்ள ஆர்வமும் தோழமையும் எங்கள் சமையல் துறையின் எதிர்காலத்தைப் பற்றி நிறையப் பேசுகின்றன.”
இந்த முயற்சியின் பின்னணியில் உள்ள தொகுப்பாளராகவும் உந்து சக்தியாகவும், இஸ்பஹானி மையம் தடையற்ற செயல்படுத்தல் மற்றும் பிரீமியம் அனுபவத்தை உறுதிசெய்தது, GRT கிராண்டின் நேர்த்தியான அமைப்பைப் பயன்படுத்தி தொழில்முறை ரீதியாக நிர்வகிக்கப்பட்ட நிகழ்வை வழங்கியது. நான்கு பருவங்களாக, இந்த மையம் QuizBites-ஐ ஒரு நிலையான மற்றும் நம்பகமான தொழில்துறை சொத்தாக நிலைநிறுத்தி, சிறப்பைக் கொண்டாடி, சமூகத்தை வளர்க்கிறது.
 
இஸ்பஹானி மையத்தின் இயக்குனர் திரு. கேசன் கூறுகையில், “நான்காவது சீசன் QuizBites-ஐ நடத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம், மேலும் இந்த தளம் ஆண்டுதோறும் எவ்வாறு வளர்ந்து வருகிறது என்பதைக் காண்கிறோம். உற்சாகமும் பங்கேற்பும் தென்னிந்தியாவின் சமையல் திறமையின் வலிமையைக் காட்டுகின்றன. நிபுணர்களை ஒன்றிணைத்து சிறப்பை வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சிகளை வளர்ப்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.”
 
தென்னிந்திய சமையல் சங்கமான Ispabani மையம் மற்றும் அஞ்சலி எண்ணெய்கள் ஆகியவற்றின் ஆதரவுடன், QuizBites 4.0, தென்னிந்தியாவின் முன்னணி சமையல் அறிவு தளமாக அதன் நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் நான்கு வெற்றிகரமான பருவங்களில் தொடர்ந்து புதிய உயரங்களை எட்டுகிறது.

‘ஓ பட்டர்ஃப்ளை’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

பட்டர்ஃப்ளை திரைப்படம், ஆன்ட்ஹில் சினிமா நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். பாலம்பூர் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்திற்கு, துல்சியா நிறுவனம் கன்சல்டிங் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளது. ஒரு வலுவான மற்றும் திறமையான கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் விஜய் ரங்கநாதன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி மற்றும் கீதா கைலாசம் உள்ளிட்ட திறமையான நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளது. உறவுகளின் மென்மையையும், கணிக்க முடியாத தன்மையையும் ஒரு த்ரில்லர் பாணியில் பேசும் இப்படம் வரும் மார்ச் 6ம் தேதி திரையரங்குளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.
 
ஒளிப்பதிவார் வேதராமன் சங்கரன் அவர்கள் பேசும்போது, ஓ பட்டர்ஃப்ளை படத்தை மிகவும் சிரமப்பட்டு எளிதாக எடுத்து விட்டோம்.  மார்ச் 6ம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் தியேட்டரில் பார்த்து சப்போர்ட் செய்யுங்கள். நன்றி. 
 
இசையமைப்பாளர் வைசாக் சோமநாத் அவர்கள் பேசும்போது, இயக்குனருக்கு என்ன வேண்டும் என்று தெளிவாக இருந்தார், என்னால் என்ன கொடுக்க முடியும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன். அதனால் மிகவும் எளிதாக அமைந்தது. இந்த படத்தில் பணி புரிந்தது நல்ல ஒரு அனுபவமாக இருந்தது. மார்ச் 6ம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் படத்திற்கு சப்போர்ட் செய்யுங்கள். நன்றி.
 
தயாரிப்பாளர் ஆனந்த் ஷா அவர்கள் பேசும்போது, இயக்குனர் விஜய் முதல் முறையாக இந்த கதையை எடுத்துக் கொண்டு வந்த போது இது போன்ற ஒரு கதையை நான் பார்த்ததே இல்லை. மிகவும் சிம்பிளான ஒரு ஸ்டோரி, மிகவும் சிம்பிளிசிட்டியான ஒரு மனிதர். பொதுவாக இயக்குனர்கள் முதல் படம் பண்ணும் போது பிரம்மாண்டமாக எடுக்க முயற்சிப்பார்கள், அதன் மூலம் பணம் சம்பாதிக்க நினைப்பார்கள். ஆனால் விஜய் நல்ல ஒரு தரமான படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இந்த படத்தை எடுத்துள்ளார். படத்தில் பணியாற்றிய அனைவரும் தங்களது முழு உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்திற்காக மும்பையில் அலுவலகம் போடலாம் என்று சொன்னேன், ஆனால் இயக்குனர் அந்த செலவை படத்திற்குள் போடலாம் என்று சொன்னார். நன்றி.
 
தயாரிப்பாளர் வெங்கி அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். முதல் முறையாக என்னுடைய வாழ்க்கையில் ஒரு சினிமா விழாவில் பேசுகிறேன். நான்கு வருடங்களுக்கு முன்னர் விஜய் என்னிடம் இந்த கதையை சொன்னார். ஆனால் எதற்காக என்னிடம் சொன்னார் என்று புரியவில்லை. முதலில் இந்த படத்திற்கு இன்வெஸ்ட்மென்ட் செய்கிறேன் என்று சொன்னேன். பிறகு நான் தான் தயாரிப்பாளர் என்று சொன்னார்கள். எதுவாக இருந்தாலும் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று விஜய் எண்ணினார். இந்தப் படத்திற்காக 35 வீடுகளை தேடினார். அதில் ஒரு வீட்டை தேர்வு செய்தார். ஆனால் அந்த வீட்டின் உரிமையாளர் படம் எடுப்பதற்கு முதலில் சம்மதிக்கவில்லை, பிறகு அவரிடம் பேசி சம்மதிக்க வைத்தோம். விஜய் இடமிருந்து கால் வந்தால் ஏதாவது பெரிய பிரச்சினையாக மட்டும் தான் இருக்கும். விஜய் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார். அவருடைய உழைப்பிற்காக நிச்சயம் இந்த படம் வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். 
 
நடிகர் அத்துல் அவர்கள் பேசும் போது, அனைவருக்கும் வணக்கம். இயக்குனர் விஜய் அவர்களுக்கு நான் மிகப்பெரிய நன்றியை சொல்லிக்கிறேன். அவர் இல்லை என்றால் நான் இந்த படத்தில் இல்லை. கதையை முழுவதுமாக படித்தேன். சிறப்பாக இருந்தது. இதில் எப்படியாவது நன்றாக நடிக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு வந்தது. இந்த படத்தில் என்னை நம்பி வாய்ப்பு கொடுத்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் செம ஜாலியாக இருந்தது. நிவேதிதா நல்ல ஒரு நடிப்பை இந்த படத்தில் கொடுத்துள்ளார். படம் பார்க்கும்போது உங்களுக்கு அது புரியும். நாசர் சார் அவர்களுடன் நடித்தது எனக்கு பெருமையாக இருந்தது. டெக்னிகல் டீம் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். இந்த படத்திற்கு என்ன தேவையே அதனை சரியாக கொடுத்துள்ளனர். மார்ச் 6ம் தேதி அனைவரும் இந்த படத்தை பார்த்து சப்போர்ட் செய்ய வேண்டும். எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. 
 
நடிகர் சிபி சந்திரன் அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். இது போன்ற மேடை கிடைப்பது நல்ல ஒரு வாய்ப்பு. நிறைய அலுவலகங்களில் என்னுடைய புகைப்படத்தை கொடுத்து வாய்ப்புக்காக காத்திருந்தேன். இந்த படத்தில் எங்கள் டீமே சிறப்பாக அமைந்துள்ளது. ரிலேஷன்ஷிப் என்றாலே த்ரில்லர் தான். நாம் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது நம்முடைய பார்ட்னரிடம் சில விஷயங்களை மறைத்திருப்போம். அனைவரும் இதனை செய்திருப்போம். யாரும் நல்லவர்களும் கிடையாது, கெட்டவர்களும் கிடையாது. அப்படி மறைக்கும் போது நமக்குள் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். மர்டர் மிஸ்டரி படங்களை விட ரிலேஷன்சிப்பில் இருக்கும் திரில்லர் எதிலுமே வராது. இந்தப் படம் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் த்ரில்லரை பற்றி பேசுகிறது. மேலும் இந்த படம் நிறைய விஷயங்களை பற்றி பேசுகிறது. இன்று விவாகரத்து தொடர்பான செய்திகள் தான் அதிகம் இடம் பெறுகிறது. 
 
ஒருவர் நம்மிடமிருந்து விலகி செல்லக்கூடாது என்பதற்காக தான் ஒரு விஷயத்தை மறைக்கிறோம். அவர்கள் தேவையே இல்லை என்று நினைத்தால் அனைத்தையும் ஓப்பனாக சொல்லி விடுவோம். சினிமா துறையில் விவாகரத்து தொடர்பான செய்திகள் அதிகம் வருகிறது. ஒருவருக்கு மெண்டல் ஹெல்த் மிகவும் முக்கியம்.. விஜய் சார், அஜித் சார் போன்றவர்களுக்கு வருடத்தில் 150 நாட்கள் தான் வேலை இருக்கும். மீதமுள்ள நாட்களில் வீட்டில் தான் இருக்க வேண்டும். அந்த சமயத்தில் மெண்டல் ஹெல்த் மிகவும் முக்கியம். அது இல்லை என்றால் நமது குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது பழைய ரிலேஷன்ஷிப்பை பற்றி பேசவே கூடாது. அதை கடந்து போய்விட வேண்டும். உங்களுடைய தட்டில் இருக்கும் சாப்பாட்டை யாரும் சாப்பிட முடியாது, அதேபோல இன்னொருவர் தட்டில் அதிகம் சாப்பாடு இருந்தால் அதை அவர் சாப்பிட போகிறார்.  நம்மளுக்கு என்ன தேவையோ, அதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த படம் இந்த சமயத்திற்கு ஏற்ற ஒரு படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இயக்குனர் சொல்ல வந்த கருத்தை உண்மையாக இருக்கும். அனைவரும் இந்த படத்தை பாருங்கள். எனக்கு பலமுறை சப்போர்ட் செய்துள்ளீர்கள். இந்த படத்திற்கும் சப்போர்ட் செய்யுங்கள். நன்றி
 
நடிகை நிவேதிதா சதீஷ் அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். இந்த மேடையில் இருப்பது மிகவும் எமோஷனலாக உள்ளது. கேப்டன் மில்லர் படத்திற்காக மிகவும் கடின உழைப்பை கொடுத்தேன், கிட்டத்தட்ட 1 வருடம் அந்த படத்தில் பணியாற்றி நிறைய கற்றுக்கொண்டேன். ஆனால் நான் எதிர்பார்த்த பலன் எனக்கு கிடைக்கவில்லை என்று தோன்றியது. சினிமா நமக்கு சரிப்பட்டு வருமா அல்லது வேறு ஒரு துறையில் கவனம் செலுத்தலாமா என்று தோன்றியது. சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கலாம் என்று நினைத்தேன். அந்த சமயத்தில் தான் ஓ பட்டர்ஃப்ளை படம் எனக்கு வந்தது. நான் இதுவரைக்கும் கேட்ட நரேஷன்களில் அது சிறப்பாக இருந்தது. இந்த படம் பண்ணலாம் என்று முடிவு எடுத்த பிறகு நிறைய ரிகர்சல் செய்தோம். படம் ஆரம்பிக்கும் போது எனக்கு ஒரு அறுவை சிகிச்சை இருந்தது.
 
படக்குழு நினைத்து இருந்தால் வேறு நடிகையை கமிட் செய்திருக்கலாம், ஆனால் எனக்காக காத்திருந்தனர். என்னுடைய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனருக்கு நன்றி. இந்த படம் ஒரு புதிய ஜானரில் உருவாகியுள்ளது. இந்த படம் ஹியூமன் எமோஷனல் பற்றி பேசுகிறது. இந்த படத்தை பார்த்து வெளியே வரும் போது நல்ல ஒரு மனதுடன் வெளியே வருவீர்கள் என்று நம்புகிறேன். இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இயக்குனர் விஜய் போன்ற நபர்கள் கிடைப்பது அரிது. இந்தப் படம் ஒரு நல்ல ஒரு எக்ஸ்பீரியன்ஸை கொடுத்தது. இந்த படத்திற்கு அனைவரும் சப்போர்ட் செய்வீர்கள் என்று நம்புகிறேன். இசையமைப்பாளர் நல்ல ஒரு ஓர்க்கை இந்த படத்திற்கு கொடுத்துள்ளார். இந்த படம் சிங் சவுண்ட் முறையில் உருவாகியுள்ளது. அனைவருக்கும் நன்றி. 
 
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் ரங்கநாதன் அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் நன்றி. நான் சினிமாவிற்கு வந்து 7,8 வருடங்கள் ஆகிவிட்டது. என் அப்பா மற்றும் அம்மா இருவரும் சினிமா பக்தர்கள். அதிலிருந்து எனக்கு ஈடுபாடு வந்தது. சினிமாவில் ஏதாவது தனித்துவமாக பண்ண வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகத்தான் நிறைய காலம் எடுத்துக் கொண்டேன். இந்த கதையை நீண்ட நாட்களுக்கு முன்பு எழுதினாலும், மீண்டும் ஒரு எழுத்தாளருடன் இணைந்து எழுதினேன். இந்த படத்திற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களை தேடி அலைந்தோம். இந்த படம் ஏற்கனவே உள்ள பேட்டன்களில் இல்லை என்பதை உணர்ந்தோம். முன்னணி நிறுவனங்களிடம் இந்த கதையை எடுத்துக் கொண்டு சென்ற போது இந்த படத்திற்கான ரெஃபரன்ஸ் இல்லை. நண்பர்கள் இந்த படத்திற்காக அவர்களால் முடிந்த இன்வெஸ்ட்மெண்ட் செய்துள்ளனர். 
 
சினிமாவில் இண்ட்ரஸ்ட் உள்ளவர்களிடம் இந்த கதையை கொண்டு சென்றோம், அப்படி உள்ளே வந்தவர்கள் தான் எங்களது தயாரிப்பாளர்கள். அனைவரையும் ஒன்றிணைத்தது இந்த கதை தான். ஒரு பெண் கதாபாத்திரத்தை முதன்மையாக வைத்து படம் எடுப்பது அவ்வளவு சுலபமானது இல்லை. இந்த படத்தை முதலில் இருந்தே சிங்க் சவுண்டில் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதனால் கண்டிப்பாக தமிழ் பேச தெரிந்த நடிகை வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தோம். அப்படித்தான் நிவேதிதா இந்த படத்திற்கு வந்தார்கள். நிறைய பேரை இந்த கதாபாத்திரத்திற்கு முயற்சி செய்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. நிவேதிதா எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சியான தருணம். நாசர் சாருக்கு எங்கள் படத்தின் ஐடியா பிடித்திருந்தது. இந்த படத்தில் அவரை வித்தியாசமான கதாபாத்திரத்தில் பார்க்கலாம். லட்சுமி பிரியா இந்த கதையை புரிந்து கொண்டு இந்த படத்திற்குள் வந்தார்கள். மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பான ஒர்க்கை கொடுத்துள்ளனர். இசையமைப்பாளர் இந்த படத்திற்கு முக்கியமான ஒருவராக மாறி உள்ளார். இந்த படம் ஒரு யுனிக் அட்டெம்ப்ட். மார்ச் 6ம் தேதி படம் வெளியாக உள்ளது. உங்களது சப்போர்ட் தேவை. நன்றி.
 
ஓ பட்டர்ஃப்ளை திரைப்படம் வரும் மார்ச் 6ம் தேதி திரையரங்குளில் வெளியாக உள்ளது.

கள்ள தொடர்பில் நடிகர் விஜய்! மனைவி புகார்!!

டிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் 2021ம் ஆண்டிலேயே விஜய் நடிகையுடன் கள்ள உறவில் இருப்பது தெரிந்தும் மனைவி சங்கீதா தாமதமாக மனுத்தாக்கல் செய்திருப்பது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக சங்கீதா தனது விவாகரத்து மனுவில் சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு முழுநேர அரசியலில் கவனம் செலுத்துவதாக விஜய் அறிவித்துள்ளார். 

பிரச்சனையின்றி கவுரவமாக இருவரும் பிரிய வேண்டும் என்று நினைத்தேன். இதற்கான முயற்சிகளை செய்தேன். 2021 செப்டம்பர் முதல் 2022 பிப்ரவரி வரை வழக்கறிஞர் மூலமாக சமூகமாக பிரிவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினோம். வழக்கறிஞர் வழியாக இருதரப்பிலும் பேசி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. தீர்வும் கிடைக்கவில்லை. சுமூகமாக பிரிய 2 முயற்சிகளை முன்னெடுத்தேன். கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி விஜயை சந்திக்க முயற்சி மேற்கொண்டேன். ஆனால் நடக்கவில்லை.

எனது மகன், மகளின் கல்வி, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விவாகரத்தை தள்ளிப்போட்டேன். ஆனால் இப்போது நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை” என கூறியுள்ளார். மேலும் ”கள்ளஉறவில் இருக்கும் நடிகையுடன் வெளிநாடுகளுக்கு சேர்ந்து சென்றார். திருமணத்தை மீறிய உறவை தட்டிக்கேட்டதால் வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார்.

விஜய் எனக்கு கட்டுப்பாடுகளை விதித்தார். பணம் செலவு செய்ய விடாமல் தடுத்தார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டேன். இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. திருமண வாழ்க்கையில் என்னை ஒதுக்கிவிட்டு நடிகையுடன் உறவை தொடர்ந்தார். நடிகையும், விஜயுடன் சேர்ந்து இருக்கும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது மன உளைச்சலை தந்தது. தேவையென்றால் நடிகையின் பெயரையும் வெளியிடுவேன்” என்றார்.

ரசிகர்கள் வருத்தம்!

எங்கள் தளபதி என்று பெருமையாக நினைத்தோம். ஆனால் நீங்கள் இப்படி செய்திருப்பது தவறு. பெண்களுக்கு தமிழக வெற்றி கழகத்தில் பாதுகாப்பு இருக்குமா? என தற்போது சிந்திக்க வைக்கிறது. அரசியல் தலைவர் என்ற பதவியை நீங்கள் இழந்து விட்டீர்கள். இனிமேல் நாங்கள் விஜய் ரசிகர்கள் இல்லை என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள். இதற்கு முற்று புள்ளி வைக்க விஜய் என்ன? செய்ய போகிறார் என பார்ப்போம்.

திமுக வில் OPS! இணைய காரணம் என்ன?!

திமுகவில் இணைந்த பின்னா் செய்தியாளா்களிடம் ஓ.பன்னீா்செல்வம் கூறியதாவது: முன்னாள் முதல்வா் அண்ணா தொடங்கிய திமுகவில் மனமகிழ்ச்சியுடன் இணைந்துள்ளேன். அண்ணா, கருணாநிதி காட்டிய வழியில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் வகையில் கட்சியையும், ஆட்சியையும் மு.க.ஸ்டாலின் வழிநடத்தி வருகிறாா்.

அரசியலில் சா்வாதிகாரமாக, ஆணவப்போக்கோடு நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமி, எந்தக் காலத்திலும் இனி வெற்றி பெற முடியாது என்ற சூழலை அதிமுகவுக்கு உருவாக்கியுள்ளாா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னா் லட்சக்கணக்கான அதிமுக தொண்டா்கள் திமுகவில் இணைந்துள்ளனா். ஓா் அரசியல் இயக்கத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற இலக்கணத்தோடு கட்சியை ஸ்டாலின் வழிநடத்துகிறாா். கடந்த 5 ஆண்டுகளில் அவா் செயல்படுத்திய சாதனைத் திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைந்துள்ளன.

அதிமுகவில் தென் மாவட்டங்களில் வளரும் தலைவா்களை பழனிசாமி அழித்து வருகிறாா். பழனிசாமியால் அதிமுக அழிவுப் பாதையில் செல்கிறது. கடந்த காலங்களில் அதிமுகவில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களால் பாதிக்கப்பட்டேன். அனைவரையும் அரவணைக்கும் போக்கு இப்போது அதிமுகவில் இல்லை.

எந்த அழுத்தமும் இல்லாமல், சுயமாக முடிவெடுத்து திமுகவில் இணைந்துள்ளேன். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைவா் ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன். வரும் தோ்தலில் திமுக மீண்டும் வென்று ஆட்சியமைக்கும் என்றாா்.

ஆதரவாளா்களும் இணைந்தனா்:

ஓ.பன்னீா்செல்வத்துடன் உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.அய்யப்பன், முன்னாள் மக்களவை உறுப்பினா் மதுரை ஆா்.கோபாலகிருஷ்ணன், புதுச்சேரி மாநில அமைப்பாளா் ஓம்சக்தி சேகா், ஜெயலலிதா பேரவை முன்னாள் துணைச் செயலா் டி.ரமேஷ், மாநில வழக்குரைஞா் பிரிவு தலைவா் சி.திருமாறன், இணைச் செயலா் பி.ராஜலட்சுமி, நிா்வாகிகள் சென்னை ரெட்சன் சி.அம்பிகாபதி, மடத்துக்குளம் கே.மாரிமுத்து, நாமக்கல் பழனிசாமி, மாநில மகளிா் அணி இணைச் செயலா் சீதா பழனிசாமி, புதுக்கோட்டை நகா்மன்ற முன்னாள் தலைவா் ராஜசேகா் ஆகியோரும் திமுகவில் இணைந்தனா்.

திமுகவில் இணைந்ததைத் தொடா்ந்து, ஓ.பன்னீா்செல்வம், ஐயப்பன் ஆகியோா் தங்களது சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்து, அதற்கான கடிதத்தை சட்டப்பேரவைச் செயலா் சீனிவாசனிடம் வழங்கினா்.

அன்பானவா், பண்பானவா்: ஓபிஎஸ் குறித்து முதல்வா் ஸ்டாலின்

‘திமுகவில் இணைந்துள்ள முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தை வரவேற்கிறேன்; அவா் அன்பானவா், பண்பானவா்’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: தாய்க் கட்சியான திமுகவில் இணைந்துள்ள முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தை வரவேற்கிறேன். திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் (நீதிக் கட்சித் தலைவா் சா் பி.டி.பன்னீா்செல்வம்) பெயரைத் தாங்கிய அவா், திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளாா்.

2026 பேரவைத் தோ்தல் என்பது தமிழ்நாட்டுக்கும், பாஜகவுக்கும் இடையிலான ஜனநாயகப் போா். இதை உணா்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் திமுக கூட்டணியில் இணைந்து வருகிறாா்கள்.

நம்மோடு இணைந்துள்ள ஓ.பன்னீா்செல்வம் அன்பானவா், பண்பானவா், அடக்கமானவா். அவரது வருகை நல்வரவாகட்டும் எனப் பதிவிட்டுள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.

 

டிஎஸ்பி நீதிமன்றத்தில் ஆஜர்! நீதிபதி உத்தரவு என்ன?!

சிவகங்கை மாவட்​டம் மடப்​புரம் பத்​ர​காளி​யம்​மன் கோயில் காவலாளி அஜித்​கு​மார், தனிப்​படைக் காவலர்​கள் தாக்கப் பட்டதில் உயி​ரிழந்​தார். இந்த வழக்​கில் தனிப்​படைக் காவலர்​கள் 6 பேரை சிபிஐ கைது செய்​தது. கூடு​தல் குற்​றப் பத்​திரி​கை​யில் மானாமதுரை டிஎஸ்​பி​யாக இருந்த சண்​முகசுந்​தரம், திருப்​புவனம் காவல் ஆய்​வாளர் ரமேஷ்கு​மார், உதவி ஆய்​வாளர் சிவக்​கு​மார், தலை​மைக் காவலர் இளை​ய​ராஜா ஆகியோர் எதிரி​களாக சேர்க்​கப்​பட்​டனர்.

பின்​னர், சண்​முகசுந்​தரம் உட்பட 4 பேரும், மதுரை மாவட்ட நீதி​மன்​றத்​தில் ஆஜராக உத்​தர​ விடப்​பட்​டது. இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்​த​போது சண்​முகசுந்​தரம் ஆஜராக​வில்​லை. இதையடுத்​து, டிஎஸ்பி சண்​முகசுந்​தரத்​துக்கு எதி​ராக ஜாமீனில் வர முடி​யாத பிடி​வாரன்ட் பிறப்​பித்​து, அவரைக் கைது செய்து மார்ச் 5-ல் ஆஜர்​படுத்த சிபிஐக்கு நீதிபதி உத்தர​விட்​டார்.

இந்​நிலை​யில், டிஎஸ்பி சண்​முகசுந்​தரம் தலை​மைத் குற்​ற​வியல் நீதித்​துறை நடு​வர் செல்​வ​பாண்டி முன்​னிலை​யில் நேற்று ஆஜராகி, பிடி​வாரன்ட்டை ரத்து செய்​யக் கோரி மனு தாக்​கல் செய்​தார். இதையடுத்​து, பிடி​வாரன்ட்டை ரத்து செய்​து, மார்ச் 5-ம் தேதி நீதி​மன்​றத்​தில் ஆஜராக உத்​தர​விட்ட நீதிப​தி, விசா​ரணையை தள்​ளி​வைத்​தா​ர்.