Sunday, August 23, 2026
Blog

Yourbackers play Movie OTT

‘Yourbackers play’ என்ற உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT தளத்தை அறிமுகப்படுத்துகிறது Yourbackers ஃபவுண்டேஷன்!

 

யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் (Yourbackers Foundation) தனது ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ (Yourbackers Play) என்னும் உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT (Over-The-Top) டிஜிட்டல் தளத்தை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது.

பொழுதுபோக்கையும் சமூக சேவையையும் இணைக்கும் இந்த முன்னோடி முயற்சியின் மூலம், பயனர்கள் பார்க்கும் ஒவ்வொரு திரையிடலும் நேரடியாக சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி. இந்த ஓடிடி தளத்தின் நிறுவனர் கிஷோர் ஆதித்யா ஏற்கனவே மனிதம் படத்தை தயாரித்திருக்கிறார். தற்போது மைம் கோபி கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார்.

இந்த ஓடிடி கலைஞர்கள், பார்வையாளர்கள் மற்றும் திரையுலகினரை ஒன்றிணைத்து, பொழுதுபோக்கை சமூக மாற்றத்திற்கான கருவியாக மாற்றியமைக்கும் ஒரு வரலாற்று முயற்சி. இந்த தளத்தில் இலவசமாக திரைப்படத்தை கண்டுகளிக்கலாம். அதே சமயம் நாம் ஏதாவது பங்களிப்பு செய்ய விரும்பினால் அதையும் நன்கொடையாக தாராளமாக அளிக்கலாம். அந்த தொகையும் ஆதரவற்ற மக்களின் சேவைக்காக பயன்படுத்தப்படும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க யுவர்பேக்கர்ஸ் பிளே ஓடிடி துவக்க விழா தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. முன்னதாக இந்த ஓடிடி தளத்தில் தற்போது காணக் கிடைக்கும் மனிதம், வி3, கோட்டா, மெல்லிசை, தாவுத், ஓ பட்டர்ஃபிளை போன்ற திரைப்படங்களின் டிரைலரும் திரையிடப்பட்டது.

இந்த நிகழ்வில் யுவர்பேக்கர்ஸ் ஓடிடி நிறுவனர் கிஷோர் ஆதித்யா பேசும்போது,

 “இந்த விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த யுவர்பேக்கர்ஸ் பவுண்டேஷன் துவக்கி 6 ஆண்டுகள் ஆகிறது. பாண்டிச்சேரியில் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டோம். கடலுக்குள் சென்று கடலுக்குள் இருக்கும் பிளாஸ்டிக்கை கிளீன் செய்து கின்னஸ் சாதனை படைத்தோம். மாண்புமிகு இந்திய பிரதமர் மோடி அவர்கள் கூட எங்கள் சேவையை குறித்து பாராட்டினார். பெண்கள் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து உழைத்து வருகிறோம்.

சினிமாவை பொறுத்தவரை விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தை நாங்கள் வட ஆற்காடு, தென் ஆற்காடு ஏரியாவில் வினியோகம் செய்தோம். தொடர்ந்து இன்ஃபினிட்டி, கழுமரம் போன்ற படங்களையும், அதனைத் தொடர்ந்து மனிதம் படத்தையும் தயாரித்தோம்.

ஓடிடியிலும் மக்கள் பெரிய படங்களையே பார்க்க விரும்புகிறார்கள், முன் வருகிறார்கள். இந்த நிலையில் எங்கள் ஓடிடியின் மூலம் சின்ன படங்களை பார்க்க வைக்க ஒரு முயற்சி எடுத்திருக்கிறோம். இதில் சப்ஸ்க்ரிப்ஷன் கட்டணம் கிடையாது. இலவசமாக படத்தை பார்க்கலாம். இம்பாக்ட் டிக்கெட் என்ற ஆப்ஷன் உண்டு, அதில் பயனர்கள் விரும்பும் தொகையை அளிக்கலாம். அந்த தொகையிலும் பெரும்பகுதி சமூக சேவைக்கு தான் செல்கிறது. மீதம் உள்ள ஒரு பங்கு திரைப்படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும். இந்த ஓடிடியில் இன்னொரு SOS சிறப்பு அம்சமும் உண்டு. இது பெரும்பாலும் இரவு நேரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களையும் தடுக்கும் ஒரு முயற்சி. மேலும் AI மூலம் திரைப்படங்களையும் உருவாக்க இருக்கிறோம். இது அடுத்த கட்டமாக செயல்பாட்டுக்கு வரும்.

அவுட் ரைட் முறையிலும், ஷேர் முறையிலும் படத்தை வாங்கி இந்த ஓடிடியில் வெளியிட இருக்கிறோம். இந்த ஓடிடியின் வளர்ச்சி பல சிறிய படங்களுக்கு நிரந்தர வருமானத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். நாம் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. எதையும் எதிர்பாராமல் நம் கடமையை செய்து வந்தால் நாம் எதிர்பாராத நல்லது நமக்கு நடக்கும். ஆதரவு கொடுங்கள். நன்றி” என்றார்.

FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது,

 “ஓடிடியும் ஒரு தியேட்டர் தான். ஆரம்பத்தில் சினிமாவுக்கு பலம் சேர்க்கும் ஒரு கருவி போல ஓடிடி வந்தது. இப்போது ஓடிடி சினிமாவை கட்டுப்படுத்தும் நிலைக்கு வந்து விட்டது. முன்பு போட்டி போட்டுக் கொண்டு படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனங்கள் இப்போது படம் வாங்குவதை நிறுத்தி விட்டார்கள். மேலும் அவர்கள் தான் ரிலீஸ் தேதியையே முடிவு செய்கிறார்கள். இப்போது தமிழ் சினிமாவில் எந்த ஒரு ஹீரோவும் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய முடியாது. அப்படி ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா இருக்கிறது.

தமிழில் ஒரு ஓடிடி நிறுவனம் துவங்கியது மகிழ்ச்சி. இந்த விழாவுக்கு நான் வருவதற்கு ஒரு முக்கியமான சுய நல காரணமும் உண்டு. இந்த லாபத்தில் 20% தொழிலாளர்களுக்கு தரப் போகிறேன் என கிஷோர் உறுதி அளித்திருக்கிறார். நல்ல தரமான படங்களை வாங்கி ரசிகர்களுக்கு தாருங்கள். அப்போது தான் நிறைய ரசிகர்கள் உங்களை நம்பி வருவார்கள்.

ஒரு திரைப்படம் வெற்றி அடையலாம் அல்லது தோல்வி அடையலாம். ஆனால் தற்போது நிறைய குப்பையான படங்கள் வெளி வருகின்றன. அப்படி இருக்கும் சூழலில் நல்ல படங்களை மட்டுமே வாங்கி வெளியிடுங்கள். தமிழ் சினிமாவில் சுமார் 1000 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கின்றன. அதில் நிச்சயம் ஒரு 200 நல்ல படங்களாவது இருக்கும். அதை வாங்க முயற்சி செய்யுங்கள். உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்றார்.

நடிகர் எஸ்.வீ.சேகர் பேசும்போது,

“வழக்கமாக சில விழாக்களில் சம்பந்தம் இல்லாதவர்கள் வந்து சம்பந்தம் இல்லாதவற்றை பேசி அது பேசுபொருளாகி விடுகிறது. விழாவின் நோக்கம் மறைந்து விடுகிறது. அப்படி இல்லாமல் இந்த விழாவுக்கு சம்பந்தப்பட்டதை மட்டும் பேசுகிறேன். 6 ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இந்த ஃபவுண்டேஷன் தறபோது லாப நோக்கமற்ற ஓடிடி தளத்தை துவக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த ஓடிடியில் கஜானா என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். வெள்ளை அறிக்கையும் விடுகிறார்கள். பணம் போடுபவர்களுக்கு திரும்ப பணம் வந்தால் தான் அது பிஸினஸ். உலகில் எதுவுமே இலவசம் கிடையாது. நல்ல தொழிலாகவும் இது அமைய வேண்டும். நீங்கள் இலவசமாக தருகிறீர்கள் என்பதாலேயே மக்கள் உங்கள் கண்டெண்டை பார்க்க மாட்டார்கள். தரம் மிகவும் முக்கியம், அதற்கேற்ப நல்ல நல்ல கண்டெண்டை பார்த்து வாங்குங்கள். ஓடிடி என்றாலே ஒரு சில முன்னணி நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சி வருகிறது. அதை தாண்டி ஜெயிக்க வேண்டும். நல்ல அனுபவசாலிகளின் ஆலோசனைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மக்களின் ரசனைகளை புரிந்து கொண்டு படங்களை எடுங்கள். நீங்கள் செய்யும் சேவையே உங்களை காப்பாற்றும்” என்றார்.

நடிகர் போஸ் வெங்கட் பேசும்போது,

 “ஓடிடி என்றாலே பண முதலைகளின் கோட்டை. உலகில் எங்கு சென்றாலும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் இருக்கிறது. தமிழ் நாட்டில் ஒரு ஓடிடி வேண்டுமென்றால் அதற்கு அரசு தான் ஏதாவது முன்னெடுப்பு எடுக்க வேண்டும். இதுவரை அப்படி ஒரு முயற்சி எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. நெட்ஃபிளிக்ஸில், அமேசானில் லட்சக்கணக்கான படங்கள் இருக்கின்றன. அனாலும் அதில் எல்லாவற்றையும் நாம் பார்ப்பதில்லை, தேர்வு செய்து தான் பார்க்கிறோம். அது போல தான் மக்களும் தேர்வு செய்து தான் படங்களை பார்ப்பார்கள். அதனால் புதுப்புது கண்டெண்டை கொடுக்க முயற்சி செய்யுங்கள். இளைஞர்களின் கற்பனைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களை நல்ல உயரத்துக்கு எடுத்துச் செல்லும்” என்றார்.

நடிகர் மைம் கோபி பேசும்போது,

 “நான் நடிப்பு சொல்லிக் கொடுக்க தான் கிஷோர் சாரிடம் வந்தேன். அவர் நல்ல விஷயங்களை மட்டுமே பேசுவார். அவர் ஒரு கடும் உழைப்பாளி. எப்போது தூங்குவார் என்பது கூட தெரியவில்லை. திடீரென ஒரு நாள் அவருக்கு நடிக்க வந்த வாய்ப்பை தூக்கி எனக்கு கொடுத்தார். அந்த படத்தில் தான் நான் நடிக்கிறேன். எங்கோ எவரோ ஆரம்பித்த விஷயத்தை நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். முதல் அடியை நாம் என்று எடுத்து வைக்கிறோமோ அன்று தான் சாதனை ஆகிறது. நல்ல ஒரு முயற்சியை முன்னெடுத்திருக்கிறார். அவருக்கு எல்லோரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் மதியழகன் பேசும்போது,

 “பணம் சம்பாதிக்க தான் எல்லோரும் சினிமாவுக்கு வருகிறோம். ஆனால் அப்படி பணம் சம்பாதித்து சேர்த்து வைக்காமல் லாப நோக்கமற்ற ஒரு சேவையை செய்ய முன்வந்திருக்கும் கிஷோர் சாருக்கு வாழ்த்துக்கள். இன்றைய சூழலில் தமிழ் சினிமாவுக்கு மிக முக்கியமான தேவை. நல்ல நோக்கத்திற்கு நன்றி” என்றார்.

நடிகர் யூகி சேது பேசும்போது,

 “ஓடிடி என்பது எனக்கு புரியாத விஷயமாகவே இருக்கிறது. பஞ்ச தந்திரம் தியேட்டரில் சாதாரண வெற்றி தான். ஆனா ஓடிடியில் மிகப்பெரிய வெற்றி என்று சொல்கிறார்கள். ரீல்ஸ் பார்த்து பழக்கப்பட்ட இன்றைய இணைய உலகில் எல்லாமே வேகமாக இருக்க வேண்டும் என கேட்கிறார்கள். சினிமா அழகியலே மாறி விட்டது. 100 மார்க் வாங்கினால் தான் பாஸ் என்ற சூழலும் உருவாகியிருக்கிறது. ஏற்கனவே ஓடிடி படங்களை வாங்குவதில்லை. இதில் 8 வாரங்கள் கழித்து தான் படங்களை வெளியிட வேண்டும் என்ற கண்டிஷனை எல்லாம் நாம் போட முடியாது.

சினிமாவில் வெற்றி சதவீதம் எப்போதுமே 10 முதல் 20% தான் இருந்து வருகிறது. கருத்து சொல்ற படம் என்றால் நீங்களே வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது தான். ஜனரஞ்சகம் என்பது மிக முக்கியம். நல்ல படங்களை கொடுங்கள். சினிமா மட்டும் தான் என்ன ஏது என தெரியாமலே டிக்கெட் வாங்கி பார்ப்பார்கள். சினிமாவில் மட்டும் தான் ரீஃபண்ட் கிடையாது. இந்த ஓடிடி மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும்” என்றார்.

நடிகர் கூல் சுரேஷ் பேசும்போது,

 “ஒரே தட்டில் சாப்பிட்டோம் என சொல்வார்கள், ஆனால் நானும் கிஷோர் சாரும் உண்மையிலேயே ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள் தான். கிஷோர் சார் எவ்வளவோ பேருக்கு உதவிகளை செய்து வருபவர். அவரை ஒரு ஆண் அன்னை தெரஸா என்று கூட சொல்லலாம். அவர் ஆரம்பித்திருக்கும் இந்த ஓடிடி நிறுவனம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

இந்த நிகழ்வில் ஆதரவற்ற மற்றும் நலிவடைந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. மேலும் யுவர்பேக்கர்ஸ் சி இ ஓ ஜான் ஜூலியஸ், இயக்குனர் புருனோ, தயாரிப்பாளர் ஜேகே சரவணன், ஜேகே சதிஷ், ஸ்டார் ஹோம்ஸ் செல்வக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மாமியாரை கொலை செய்த மருமகன்!

முதி அருகே பீட்டர்புரத்தைச் சேர்ந்த ரங்கராஜ் மனைவி வாசுகி(43). இவருக்கு ஹேமா(20), ஹேமலதா(19) என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஹேமா திருமணமாகி கடலாடி அருகே வசித்து வருகிறார்.

இளைய மகள் ஹேமலதா முதுகுளத்தூர் அருகே பொதிகுளம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமாரை(23) காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அவர் பொதிகுளத்தில் வசித்து வந்த நிலையில், சில நாட்களாக பீட்டர்புரத்தில் தாய் வாசுகி வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் உதயகுமார் தினமும் குடித்துவிட்டு, வேலைக்கு செல்லாமல் இருந்ததை வாசுகி கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வாசுகிக்கும் மகள் ஹேமலதா, மருமகன் உதயகுமார் ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது உதயகுமார் கோடாரியால் வாசுகியை தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தாய் உடல்நிலை சரியில்லாத நிலையில் உள்ளதாக தனது அக்கா ஹேமாவுக்கு ஹேமலதா தகவல் சொல்லியுள்ளார். ஹேமா வந்து பார்த்தபோது தாய் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. பேரையூர் காவல் நிலையத்தில் ஹேமா புகார் அளித்தார். அதனையடுத்து போலீஸார் உதயகுமார், ஹேமலதா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அமரம் திரைப்பட இசை வெளியீட்டு விழா!

திவ்ய சேத்ரா பிலிம்ஸ்  பட நிறுவனம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிப்பில், இயக்குனர் திரு அருள் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “அமரன்”

மூன்று காலகட்டங்களில்  மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும்  ஒரு அமர காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், தேஜஸ் ராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார். மற்றும் ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் திருஅருள் கிருஷ்ணன். இவர் இயக்குனர் கோகுல், ராஜன் மாதவ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் ஆகஸ்ட் 28-ல் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்  தயாரிப்பாளர் C.R. ராஜன் பேசியதாவது..,

‘அமரம்’ திரைப்படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லோரும் ஒரு நல்ல படத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் அதற்கு கலைஞர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் அமைய வேண்டும். அது சில படங்களுக்கு மட்டுமே அமையும். அந்த வகையில், ‘அமரம்’ படத்திற்கு அத்தகைய சிறப்பான உழைப்பும் அர்ப்பணிப்பும் அமைந்துள்ளது.

இயக்குநர் அருள் கிருஷ்ணன், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என ஒவ்வொரு துறையிலும் பணியாற்றிய அனைவரும் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். அவர்களுடைய உழைப்பினால்தான் இந்தப் படம் சாத்தியமாகியுள்ளது.

இந்தப் படத்தின் கதையை இயக்குநர் அருள் கிருஷ்ணன் என்னிடம் கூறியவுடனேயே இப்படத்தை தயாரிக்க முடிவு செய்துவிட்டேன். எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. முதலில் ஒரு ரீமேக் படம் செய்யலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்தக் கதையைக் கேட்டவுடன் இந்தப் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டேன்.

ஒரு கட்டத்தில் என்னால் படத்தில் முழுமையாக ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டபோது, துரை பாண்டி இந்தப் படத்தின் பணிகளை முழுமையாக கவனித்துக் கொண்டார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். கதாநாயகன் தேஜஸ் ராஜன் மற்றும் கதாநாயகி ஐரா அகர்வால் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘அமரம்’ திரைப்படம் ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று படத்தை பார்த்து உங்கள் ஆதரவைத் தர வேண்டும். நன்றி!”

நாயகன் தேஜஸ் ராஜன் பேசியதாவது..

“இன்று எனக்கு மிகவும் முக்கியமான நாள். எங்களுடைய படைப்பு தற்போது உங்கள் முன்னால் வந்துள்ளது. படத்தின் டிரெய்லர் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

இந்தத் திரைப்படத்தை நாங்கள் 40 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு செய்தோம். புயலுக்கு மத்தியிலும், கொடைக்கானலில் அதிகாலை 4 மணிக்கும், எண்ணூர் பீச்சிலும் என பல்வேறு இடங்களில் பல கஷ்டங்களுக்கிடையே இந்தப் படத்தை படமாக்கினோம்.

இந்தப் படத்திற்காக 330-க்கும் மேற்பட்ட நடிகர்கள் தங்களது முழு அர்ப்பணிப்புடன், உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் அருள் கிருஷ்ணன் இந்தப் படத்தை மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார். இந்தப் படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இந்தப் படத்தின் வெற்றி விழாவில் என்னுடன் பணியாற்றிய சக நடிகர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் குறித்து விரிவாகப் பேசுகிறேன். இப்படத்திற்கு உங்கள் அனைவரும் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி!”

படத்தின் இயக்குநர் அருள் கிருஷ்ணன் பேசியதாவது..,

“என்னுடைய திரைப்பயணம் என்பது மிக நீண்ட பயணம். நான் சினிமாவில் நீண்ட காலமாக இருந்து வருகிறேன். என்னுடைய ஊரிலிருந்து இதுவரை யாரும் சினிமாவிற்குள் வந்ததில்லை. எனது ஊருக்கு சினிமா என்பது புதிதான விஷயம். நான் கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர் சார் போன்றவர்களைப் பார்த்துதான் படத்துறைக்குள் வந்தேன். அவர்களைப் போல் படங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

தமிழ் சினிமா இந்திய அளவில் பல்வேறு துறைகளிலும் சிறந்து வருகிறது. தேசிய விருதுகள் பெறுவதிலும், எமோஷனல் படங்களை உருவாக்குவதிலும் நாம் முன்னணியில் இருக்கிறோம். ஆனால் ஆக்ஷன் படங்களைப் பொறுத்தவரை சில விஷயங்களை நாம் தவறவிட்டு வருகிறோம்.

அதனால், ஆக்ஷன் படத்தை மையமாக வைத்து, ‘கே.ஜி.எஃப்’ போன்ற படங்களைப் பார்த்து, அதனால் இன்ஸ்பயர் ஆகி, அதுபோன்ற ஒரு மிகச்சிறந்த திரைக்கதையை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆக்ஷன் படங்களுக்கு மிகச்சிறந்த திரைக்கதை மிகவும் முக்கியம். ஆனால் அந்தப் படத்தை உருவாக்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால் அந்த முயற்சியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பின்னர் என்னுடைய மேனேஜர்கள் மூலம் வேறு சில கதைகளைச் சொல்லியிருந்தேன். அப்போதுதான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இந்தக் கதையைக் கேட்டு, ‘இதை நாம் தயாரிக்கலாமே’ என்று கூறினார்.

கதாநாயகர்கள என்னால போய் ரீச் பண்ண முடியல, காரணம் அவங்களுக்கு எக்கச்சக்க கமிட்மென்ட் இருக்கு. அப்போ நடிகர் கார்த்தி சார் ஒரு இன்டர்வியூல சொன்ன மாதிரி, அத ஒரு இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டு நம்மளே நம்மள முதல்ல வெளி கொண்டு வரணும். அவங்கள மாதிரி ஒரு நடிகருக்கு எழுதுன கதையிலயும், நல்ல கதையா, நல்ல திரைக்கதையா இருக்குற பட்சத்துல, ஒரு புதுமுக நடிகர கூட போட்டு அந்த அளவுக்கு ஒரு ஹிட்ட குடுக்க முடியும். அந்த அளவுக்கு ஒரு படத்த எடுத்துற முடியும். ஒரு குறைந்த முதலீட்டுலயே, குறைந்த பட்ஜெட்லயே ஒரு  பிரம்மாண்டமான படத்த பண்ண முடியும்னா  அதுக்கான ஒரு பெரிய முயற்சிதான், ஒரு உதாரணம்தான் இந்தப் படம். பிரம்மாண்டமா பண்ணிருக்கோம், அதுக்கு நெறைய திட்டமிடல் தான் காரணம்.

(Trident Arts) ரவீந்திரன் சார் அவங்க வந்து இந்தப் படத்த பத்தி சொல்லும்போது, ஒரு ‘புதிய பாதை’, ஒரு ‘சுப்பிரமணியபுரம்’, ஒரு ‘பருத்திவீரன்’ மாதிரி வரும்னு சொன்னாரு. கல்ட் கிளாசிக்கா (Cult classic) இந்தப் படம் வரும்.

இந்தக் கதை மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் ஒரு கதை. இப்படியொரு கதையை உருவாக்குவதற்கு நிறைய தைரியம் வேண்டும். அந்தத் தைரியம் தயாரிப்பாளரிடம் இருந்தது.

இந்திய சூழலில் ஒரு ஹீரோவிடம் கதை சொல்லி அவரை படத்திற்குள் கொண்டு வருவது என்பது பட்ஜெட் உள்ளிட்ட பல காரணங்களால் பெரிய சவாலாக இருக்கிறது. நடிகர் யோகிபாபு என்னுடைய நெருங்கிய நண்பர். ‘ஜுங்கா’ படத்திலிருந்து அவருடன் பணியாற்றி வருகிறேன். அவரை இந்தப் படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தபோது, அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் பட்ஜெட் காரணங்களால் அவரால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. இதில் அவருடைய தவறு எதுவும் இல்லை. சினிமா சூழல் அப்படித்தான் இருக்கிறது.

இந்தத் திரைப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு திரைப்படமாக இருக்கும். இந்தப் படத்திற்காக பலரும் தங்களுடைய சம்பளத்தைப் பெரிதாக எதிர்பார்க்காமல், எனக்காகவும் இந்தப் படத்திற்காகவும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவரும் என்னுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படம் கண்டிப்பாக உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு நல்ல படைப்பாக இருக்கும். இப்போதைக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி!”

நாயகி ஐரா அகர்வால் பேசியதாவது..,

“இன்று எனக்கு மிகவும் சந்தோஷமான நாள். இந்த நாளுக்காக நான் பல மாதங்களாக மிகவும் ஆவலுடன் காத்திருந்தேன். தற்போது எங்களுடைய படத்தின் இசையும் டிரெய்லரும் வெளியாகியுள்ளது. இது உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்”

படத்தின் கதையை இயக்குநர் அருள் கிருஷ்ணன் தன்னிடம் கூறியபோதே மிகவும் பிடித்திருந்தது ஐரா அகர்வால், அவர் கூறிய விதத்தில் கதையை சிறப்பாக திரையில் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

“இயக்குநர் எனக்கு நடிப்பை சொல்லிக் கொடுத்து, மிகவும் அழகாக என்னை நடிக்க வைத்தார். அவருடைய வழிகாட்டுதல் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இந்தப் படத்தில் எடிட்டர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என ஒவ்வொரு துறையிலும் பணியாற்றிய அனைவரும் மிகச் சிறப்பாக தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர்”.

என்னுடன் இணைந்து நடித்த கதாநாயகன் தேஜஸ் ராஜனுக்கும் நன்றி, தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கும் எனது நன்றி.“‘அமரம்’ திரைப்படம் நிச்சயமாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு நல்ல படைப்பாக இருக்கும். எனவே இந்தப் படத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் அன்பையும் அளிக்க வேண்டும்” நன்றி.

சிறப்பு விருந்தினர் மாமன்ற நடுவர் டாக்டர் V. ராமராஜ் பேசியதாவது..,

“மக்களுக்காக பேசும் மீடியா துறை நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘அமரம்’ படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு கமர்ஷியல் படமாக இல்லாமல், மக்களின் வாழ்க்கையை, அவர்களின் வலியை, அவர்களுக்கான நியாயத்தைப் பேசும் படமாக இப்படம் இருக்கும் என்று அறிகிறேன். இப்படிப்பட்ட ஒரு கதையை எடுத்துச் சென்று உருவாக்கியிருக்கும் படக்குழுவினருக்கும், இதில் நடித்திருக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

லோக் ஆயுக்தா பற்றிய ஒரு விழிப்புணர்வு தமிழகத்தில் இன்னும் போதுமான அளவில் இல்லை. ஊழலுக்கு எதிராக செயல்படும் அமைப்பான லோக் ஆயுக்தா குறித்து தமிழக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஊழலுக்கு எதிரான ஒரு போரைத் தொடங்க வேண்டும். அந்தப் பயணம் இப்போது ஆரம்பமாகிவிட்டது. அதற்கான பயணத்தில் நாம் அனைவரும் இணைவோம் என்று இந்த விழாவின் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

‘அமரம்’ திரைப்படத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் அளிக்க வேண்டும். மக்களின் குரலைப் பேசும் இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். படக்குழுவினருக்கு மீண்டும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி!”

மிராக்கிள் மைக்கேல்  புதுவிதமான பாணியில் ஸ்டண்டை வடிவமைத்துள்ளார். பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் மிக்கி ஜெ .மேயர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வெற்றிமாறனின் வட சென்னை, அசுரன் படங்களில் பணியாற்றிய R. ஸ்ரீராமர்  எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.

தொழில் நுட்ப குழு விபரம்

எழுத்து இயக்கம் –  அருள் கிருஷ்ணன்
இசை – மிக்கி ஜெ .மேயர்
பாடல்கள் – சினேகன்,சௌந்தரராஜன். K
ஒளிப்பதிவு – பரத் குமார்
எடிட்டிங் – R. ஸ்ரீராமர்
கலை இயக்கம் – ஜனார்த்தனன்
ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்
நடனம் – பூபதி
தயாரிப்பு மேற்பார்வை – A.P.ரவி
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
தயாரிப்பு – C.R.ராஜன்.

Traident Arts ரவீந்திரன் இந்த படத்தை இம்மாதம் 28ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

ஒன் மேன் விமர்சனம்

படம்: ஒன் மேன் (One Man)

நடிப்பு: சங்ககிரி ராஜ்குமார் (எல்லா கதாபாத்திரமும்)

தயாரிப்பு: சங்ககிரி ராஜ்குமார்

இசை: சங்ககிரி ராஜ்குமார்

ஒளிப்பதிவு: சங்ககிரி ராஜ்குமார்

இயக்குனர்,: சங்ககிரி ராஜ்குமார்

பிஆர்ஓ : நிகில் முருகன்

விமர்சனம்:

டூவீலர் முதல்  விமான முறை ஓட்டத் தெரிந்து எல்லாத்துறையிலும் தனித்திறமை கொண்ட ஐந்து பேருக்கு விருது அறிவிக்கப்பட அதனை பெற்று வர ஐந்து பேரும் ஒரே காரில் செல்கிறார்கள்.

கார் பழுதடைவதால் அதை நிறுத்திவிட்டு அருகில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு ஐந்து பேரும் செல்கிறார்கள் அங்கே ஒரு பெரிய சோதனை கூடத்தை பார்க்கிறார்கள். அங்கு கிடைக்கும் ஒரு செல்போனை எடுத்து ஆன் செய்யும்போது அதில் அரைகுறையாக விடப்பட்ட சோதனையை செய்தால் இந்த உலகில் 10 நாட்களுக்கு வேறு எந்த உயிரினமும் இருக்காது இங்கிருக்கும் ஐந்து பேர் மட்டுமே உயிரோடு இருக்கலாம் என்று தகவல் கிடைக்க அதை பரிசோதனை செய்ய முயல்கிறார்கள் அதன்பிறகு என்ன நடந்தது என்பதே கதை….

கடைசி 5 நிமிடம் இந்தப்படத்தை அவர் தனியாளாக எடுத்து நடித்ததை வீடியோவாக காட்டுகிறார். அந்த வீடியோவைப் பார்க்கும் போது கண்கள் கலங்குகின்றன.

ஒரு படம் என்றால் ஒரு ஹீரோ ஹீரோயின் வில்லன் இன்னும் சில கதாபாத்திரங்கள் இணைந்து நடிப்பார்கள் அல்லது இருவர் மட்டுமே நடித்த படம் வந்திருக்கிறது.

ஆனால் ஒரே நபர் படத்தின் அத்தனை பணியும் சொல்ல போனால் நடிப்பு முதல் இயக்கம் வரை உள்ளடக்கிய எடிட்டிங் மேக்கப் சவுண்ட் பின்னணி இசை மிக்சிங் கிராபிக்ஸ் ஒளிப்பதிவு அரங்கம் உள்ளிட்ட 24 வகை துறைகளையும் கையில் எடுத்து படத்தை செய்து முடித்து உலகிலேயே முதன் முறையாக ஒரே நபர் எல்லா பணிகளையும் ஏற்று நடித்து இயக்கியுள்ள படம் என்ற பெருமையை ஒன் மேன் படம் பெற்றிருக்கிறது என்பது தமிழ் திரை உலகுக்கு இன்னும் போனால் இன்னும் சொல்லப்போனால் தமிழனுக்கு உலக அளவில் பெருமை தேடித் தரும் சாதனை படம் என்றால் அது மிகையல்ல.

ஒரே நடிகர் இரட்டை வேடத்தில் அல்லது மூன்று இடத்தில் நடித்தால் அதுவே ஆச்சரியத்தில் ரசிகர்களை அழைத்து விடும் ஆனால் இந்த படத்தில் நூற்றுக்கணக்கான கதாபாத்திரத்தில் ஒரே நடிகர் ஒரே சமயத்தில் ஒரே பிரேமுக்குள் நடித்திருப்பது கற்பனையிலும் எண்ணிப் பார்க்க முடியாத ஆச்சரியம் என்பதை சொல்லியே ஆக வேண்டும்.

மொத்தத்தில் இந்த ‘ஒன் மேன்’ ஒரு முறை பார்க்கலாம்.

ONE MAN பத்திரிகையாளர் சந்திப்பு

சங்ககிரி ராஜ்குமாரின் ‘ONE MAN’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ ஆகிய படங்களை இயக்கி, தயாரித்து, நடித்து, பிரபலமான பன்முகத் திறன் கொண்ட படைப்பாளியாகத் திகழும் சங்ககிரி ராஜ்குமார், கதையின் நாயகனாகவும் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் ‘ONE MAN’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையிலான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கதையின் நாயகனாக மட்டுமல்லாமல், ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்திற்குத் தேவையான பல்வேறு பணிகளைத் தனி ஒருவராக மேற்கொண்டு, உலக சினிமாவில் இதுவரை யாரும் மேற்கொள்ளாத வகையிலான ஒரு முயற்சியாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் தனித்துவமான சாதனையை நிகழ்த்திய தமிழர் என்ற அடையாளத்தையும் அவர் பெற்றுள்ளார்.

எதிர்வரும் 21-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ONE MAN’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குநர்கள் சேரன், லெனின் பாரதி, ஏ.ஆர்.கே. ராஜராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேசுகையில்:

“இந்தப் படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்த பிறகு, திரையரங்குகளில் படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவைச் சந்தித்தேன். இதுபோன்ற உலக சாதனை முயற்சியாக உருவாகியுள்ள படைப்பைத் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான வழிகாட்டலையும் ஆலோசனையையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவர் உடனடியாக பிவிஆர் நிறுவனத்திடம் தொடர்புகொண்டு பேசினார்.

பிவிஆர் நிறுவனத்திடம், ‘இந்தப் படைப்பு ரசிகர்களைச் சென்றடைய வேண்டும்’ என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தேன். அவர்கள், ‘உலகில் யாரும் இதுபோன்ற முயற்சியை மேற்கொண்டதில்லை. தமிழ்நாட்டில் தமிழராகிய நீங்கள் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறீர்கள். இதற்கு எங்களின் ஆதரவு உண்டு’ என்றனர். இதற்காக பிவிஆர் நிறுவனத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தத் திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடுவதற்காக முயற்சி செய்தால், ‘இப்படி ஒரு அரிய முயற்சியா!’ என்ற வியப்புடன் ஆதரவு அளிப்பார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு, படப்பிடிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்பப் பணிகளுக்காக இயக்குநர் ஏ.ஆர்.கே. ராஜராஜாவைச் சந்தித்தேன். அவர் என்னுடைய நோக்கத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு, தன்னுடைய ஸ்டுடியோவின் சாவியை ஒப்படைத்துவிட்டு, ‘நீங்கள் எப்போது வேண்டுமானாலும், எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் இங்கு பணியாற்றலாம்’ என்று தெரிவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் ஏ.ஆர்.கே. ராஜராஜா பேசுகையில்:

“ஒரு மனிதன் எல்லா வேலைகளையும் செய்து, அவரே எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து ஒரு படத்தை உருவாக்குகிறேன் என்று சொல்லும்போது, மற்றவர்களைப் போல எனக்குள்ளும் ஒரு கேள்விக்குறி இருந்தது.

ஆனால், அவர் பணியாற்றிய விதம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவர் முன்பு குறிப்பிட்டதைப் போல், இதற்கு ஆதாரம் இருக்கிறது என்று சொன்னார் அல்லவா? அதில் நானும் ஓர் ஆதாரம் தான். படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் அனைத்தையும் அவரே மேற்கொண்டார்.

அதன் பிறகு அந்தப் படத்தைப் பார்த்தேன். ஒரு திரைப்படத்தைத் தொழில்நுட்ப ரீதியாக எவ்வாறு சிறந்த தரத்துடன் உருவாக்க வேண்டுமோ, அப்படியே அந்தப் படத்தை அவர் உருவாக்கியிருந்தார். இந்தத் திரைப்படத்தில் ஆயிரக்கணக்கான மனிதர்களின் கதாபாத்திரங்களில் அவரே நடித்திருக்கிறார். இதுவே அவருடைய முதல் வெற்றி.

இந்தத் திரைப்படத்தை நான், இயக்குநர் லெனின் பாரதி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் பார்த்தோம். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு எங்களுக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தில் சுமார் பத்து நிமிடங்கள் எங்களால் பேசவே முடியவில்லை.

இது இந்தியத் திறமையின் உச்சம் என்று சொல்லலாம். அவருடைய உழைப்பு பெருமைப்படக்கூடியது. இது ஒரு வரலாற்றுப் பதிவு.

இந்தத் திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் லெனின் பாரதி பேசுகையில்:

“தமிழ் சினிமாவிற்கு இது மிக முக்கியமான படம். இதற்கு முன்பு ஏராளமான பிரம்மாண்டமான படங்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, இந்திய சினிமாவில் தொழில்நுட்ப ரீதியாக ஒரு மைல்கல்லை எட்டிய திரைப்படம் இது. உயர்ந்த தொழில்நுட்பத் தரத்துடன் நிறைய படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், அவற்றின் பின்னணியில் ஆயிரக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இடம்பெற்றிருக்கும். தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்களிப்பு, பெரிய நிறுவனங்களின் பங்களிப்பு, மிகப்பெரிய பொருளாதார பங்களிப்பு என பல்வேறு அம்சங்கள் இருக்கும்.

ஆனால், இத்தகைய பெரிய பின்னணி எதுவும் இல்லாமல், தனி மனிதராக மிகப்பெரிய முயற்சியை மேற்கொண்டு சங்ககிரி ராஜ்குமார் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். இதன் காரணமாகவே அவருடன் தொடர்ந்து பயணிக்கிறேன்.

இது சினிமாவை காட்டுத்தனமாக நேசிக்கும் ஒருவரால் மட்டுமே சாத்தியமாகும். சினிமாவை மட்டுமல்லாமல், சினிமா மூலமாக ஏதாவது ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்ற ஆதங்கம் கொண்ட கலைஞர் சங்ககிரி ராஜ்குமார். அதற்காகவும் நான் அவருடன் இணைந்திருக்கிறேன்.

இந்தப் படத்தைப் பார்க்கும்போது, ஒரு நபரால் இவ்வளவு விஷயங்களைச் செய்ய முடியுமா என்ற ஆச்சரியம் ஏற்படும். சினிமாவை நேசிக்கும் அனைத்து கலைஞர்களும் இந்தத் திரைப்படத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

தோழர் ராஜ்குமார் மிக நுட்பமான நடிகர். தெருக்கூத்து கலைஞரும் கூட. அவருடைய தெருக்கூத்தை நான் பார்த்திருக்கிறேன். தமிழ் திரையுலகில் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டிய நடிகர் இவர்.

இந்தத் திரைப்படத்தை தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு திரையிட்டுக் காண்பிக்க வேண்டும். தொழில்நுட்பத்தை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து சங்ககிரி ராஜ்குமார் திரைப்படக் கல்லூரி மாணவர்களுடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் வேண்டும். இதற்கும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கிறேன்” என்றார்.

இயக்குநர் மற்றும் நடிகர் சேரன் பேசுகையில்:

“ஒரு நாள் ரோகிணி மேடம் போன் செய்து, ‘வெங்காயம்’ என்றொரு படத்தைப் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. நீங்களும் பாருங்கள் என்றார். அவருடைய பரிந்துரை என்றால் நிச்சயமாக நன்றாகத்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அந்தப் படத்தைப் பார்த்தேன். நல்ல விஷயத்தை அழுத்தமாகவும் இயல்பாகவும் சொல்லியிருந்தார்.

ஒரு நல்ல படத்தைப் பார்த்துவிட்டால், அது தொடர்பான உணர்வுகளைப் பதிவிடுவதுதான் என்னுடைய வழக்கம்.

அந்தத் தருணத்தில் என்னை ஏராளமானவர்கள் தூக்கிச் சுமந்ததைப் போல், எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்த தருணத்தில் ராஜ்குமாரைத் தோளில் தூக்கிச் சுமக்கத் தொடங்கினேன். அதன் பிறகு என்னுடைய அழைப்பின் பேரில் 50-க்கும் மேற்பட்ட இயக்குநர்கள் இந்தப் படத்தைப் பார்வையிட்டனர். அதன் பிறகு அந்தப் படத்திற்கு ஒரு அடையாளம் கிடைத்தது.

திரையரங்குகளில் வெளியாகி ஓரிரு நாட்களிலேயே வெளியேற்றப்பட்ட ‘வெங்காயம்’ திரைப்படம், மீண்டும் ‘சேரன் வழங்கும் வெங்காயம்’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது. நல்ல வசூலையும் பெற்றது.

இவர் சினிமாவில் சம்பாதிப்பதற்காக வரவில்லை. சாமானியனும் ஒரு சினிமாவை உருவாக்க முடியும். சாமானியர்களிடம் சினிமாவைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். சாமானியர்களையும் சினிமாவில் பயன்படுத்த முடியும் என்ற கர்வம் மிக்க சிந்தனை அவருக்கு உண்டு.

அவருடைய அடுத்த படமான ‘பயாஸ்கோப்’, ‘வெங்காயம்’ திரைப்படத்தை உருவாக்கும்போது கிடைத்த அனுபவங்களை வைத்து எடுக்கப்பட்ட படம். அவரிடம் மிகச் சிறந்த நகைச்சுவை உணர்வு இருக்கிறது. அது அந்தத் திரைப்படத்தில் வெளிப்பட்டிருக்கும்.

இதுபோன்ற நல்ல திரைப்படங்களை மக்களிடம் நாம் தான் முன்னிறுத்த வேண்டும். அதிலும் இந்த ‘ONE MAN’ திரைப்படத்தில் அனைத்து விஷயங்களையும் அவர் மட்டுமே செய்திருக்கிறார். இத்தகைய புதுமையான முயற்சிக்காகவே அவரை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும். ஆனால் அந்தப் புதுமையான முயற்சியையும் அவர் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

இந்தப் படத்தை நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பார்த்துவிட்டேன். அதன் பிறகு பல்வேறு தொழில்நுட்பப் பணிகளை மேற்கொண்டு படத்தை மேலும் சிறப்பாகச் செதுக்கியிருக்கிறார்.

படத்தில் அனைத்து கதாபாத்திரங்களிலும் அவரே நடித்திருக்கிறார். ஆனால் அவற்றில் ராஜ்குமார் தெரியமாட்டார்; அந்தக் கதாபாத்திரம்தான் தெரியும். அந்த அளவிற்குக் கடுமையாக உழைத்திருக்கிறார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் உழைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.

அவருடைய கடும் உழைப்புதான் அவரை அடையாளப்படுத்தும். அவர் ‘நெடும்பா’ என்றொரு படத்தையும் உருவாக்கியிருக்கிறார். அந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

சங்ககிரி ராஜ்குமாருக்கு ஒரு படத்தை உருவாக்க ரூ.70 லட்சம் போதுமானது. இந்தப் பட்ஜெட்டில் தமிழ் சினிமாவில் நல்லதொரு படத்தை எடுக்க முடியும் என்பதை ராஜ்குமார் நிரூபித்திருக்கிறார்; நிரூபித்தும் வருகிறார்.

தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் திரைப்படங்களாகவே சங்ககிரி ராஜ்குமார் உருவாக்கும் திரைப்படங்கள் இருக்கின்றன. இருப்பினும், இன்றைய சூழலில் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும், பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் கழித்து அவருடைய புகழையும் அவரையும் தமிழ் சினிமா கொண்டாடும். அவருக்கு நிச்சயமாக அங்கீகாரம் கிடைக்கும்.

அவர் சினிமா மீது வைத்திருக்கும் நேசத்தால், சினிமா ஒரு நாள் அவரைக் கொண்டாடியே தீரும்” என்றார்.

நடிகர் சத்யராஜ் பேசுகையில்:

“சங்ககிரி ராஜ்குமாருடன் இணைந்து பணியாற்றியதற்கு முக்கியமான காரணம் பகுத்தறிவுப் பகலவன் பெரியார் தான். ஏனெனில், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் போன் செய்து இவரைச் சந்திக்கச் சொன்னார். அவர் சொல்லும்போது, ‘அய்யாவின் தொண்டர். அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்யுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.

அவரைச் சந்தித்தபோது, ‘நீங்கள் சத்யராஜாகவே நடிக்க வேண்டும். ஒரு பாடலில் மட்டும் பெரியாராக நடிக்க வேண்டும்’ என்றார்.

கடந்த 20 ஆண்டுகளாக கேரக்டர் ரோலில் நடிக்கத் தொடங்கிய பிறகு, என்னுடைய கதாபாத்திரத்தை மட்டுமே கேட்கிறேன். இயக்குநர் சொல்வதை மட்டும் செய்கிறேன். என்னுடைய கதாபாத்திரம் தவறில்லாமல் இருந்தால் போதும் என்று நினைத்துவிட்டு நடிக்கிறேன்.

‘வால்டர் வெற்றிவேல்’, ‘அமைதிப்படை’ காலகட்டத்தில் சினிமா என் கையில் இருந்தது. இப்போது நான் சினிமாவின் கையில் இருக்கிறேன். அதனால் தற்போது படப்பிடிப்புக்குச் சென்றோமா, நடித்தோமா என்று இருக்கிறேன்.

அதே சமயத்தில், நான் நடிக்காத படங்களின் இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கும் செல்வதில்லை. ஏனெனில், நான் நடிக்கும் படங்கள் மாதந்தோறும் வெளியாகின்றன. கடந்த மாதம் ‘சாருகேசி’. இந்த மாதம் ‘ஜி.டி.என்.’. அடுத்த மாதம் ‘மண்டாடி’.

நாம் நடித்த படங்களைப் பற்றிய விமர்சனம் நமக்குள் இருந்தாலும், அதை பகிரங்கமாக மேடையில் பகிர்ந்துகொள்வதில்லை. படத்தைப் பற்றி புகழ்ந்துதான் பேச வேண்டும். என்னிடம் இருக்கும் மிகப்பெரிய ‘மிஸ்டேக்’ என்னவென்றால், இரண்டு ‘பால்’ கூடுதலாகவே போடுவேன். ஏனெனில் கலைஞர்களின் சந்தோஷம் அங்கீகாரம் தான். பாராட்டிற்காக ஏங்குவது மனித இயல்பு. அதனால் தான் புகழ்ந்து பேசுகிறேன்.

இதைப் பற்றிப் பேசும்போது மணிவண்ணன் அடிக்கடி என்னிடம் ஒரு விஷயத்தைச் சொல்வதுண்டு. ‘தலைவரே, ஐஸ் வைக்கிறது என்றால் சின்னதாக வைக்கக் கூடாது. பெரிய அளவில் ஐஸ் வைத்துவிட வேண்டும். ஒன்று அவரது மண்டை உடைய வேண்டும் அல்லது ஐஸ் உடைய வேண்டும். அந்த அளவிற்கு ஐஸ் வைக்க வேண்டும்’ என்பார்.

ஆனால், நான் இந்தப் படத்திற்கு ஏன் வந்தேன் என்றால், ‘வெங்காயம்’ படத்தைப் பார்த்து பிரமித்துப் போனேன். ‘வெங்காயம்’ படத்தை மீண்டும் வெளியிட்டு வெற்றி பெறச் செய்ததில் சேரனின் பங்களிப்பு அதிகம். அதற்காக இந்தத் தருணத்தில் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

அவருடைய ‘பயாஸ்கோப்’ படத்தையும் பார்த்து பிரமித்தேன். அந்தப் படமும் சிறப்பானதாக இருந்தது. இந்தப் படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்றும் குழப்பத்தில் இருக்கிறேன். ‘ONE MAN’ என்றால் எப்படி? எல்லா வேலைகளையும் இவரே செய்கிறார் என்றால் அது எப்படி சாத்தியமானது? எனக்கு தற்போது வரை புரியவில்லை.

125 படங்களில் நடித்த பிறகு ‘வில்லாதி வில்லன்’ என்ற ஒரு படத்தை இயக்கினேன். அப்போதுதான் நடிப்பது எவ்வளவு சுகமானது என்பதை உணர்ந்தேன்.

ஊடகங்களிடம் நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். சங்ககிரி ராஜ்குமாரின் ‘ONE MAN’ திரைப்படம் மக்களைச் சென்றடைவதற்கு பேருதவி செய்யுங்கள். ஏனெனில், இந்தத் திரைப்படத்தை நான் மிகப்பெரும் சாதனையாகப் பார்க்கிறேன்.

இவர் வெற்றி பெற்றால்தான் இவரைப் போன்ற புதிய முயற்சிகளுடன் ஏராளமான இளைஞர்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைப்பார்கள். இந்தப் படத்தை நான் பார்த்த பிறகு ராஜ்குமாருக்கு போன் செய்து என்னுடைய விமர்சனத்தைச் சொல்வேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

இதனைத் தொடர்ந்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்காக ‘ONE MAN’ திரைப்படம் திரையிடப்பட்டது.

திரைப்படத்தைப் பார்த்த பின்னர், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் சங்ககிரி ராஜ்குமார் அவர்களை வெகுவாகப் பாராட்டி, அவரின் முயற்சியை கொண்டாடினர்.

Apollo Hospitals launched Always Open Always Here’

Chennai, August 18, 2026:

Apollo Hospitals today announced the launch of ‘Always Open. Always Here.’, a first-of-its-kind initiative that makes routine and planned healthcare services available across all seven days of the week, including Sundays.

Apollo’s emergency, critical care and inpatient services have always been available 24×7. The new initiative extends Sunday access to outpatient consultations, diagnostics, preventive health checks, follow-up consultations and scheduled procedures, helping patients and families seek timely care without waiting for a weekday.

For many working Indians, time is one of the biggest barriers to timely healthcare. Busy work schedules, family responsibilities and weekday commitments often lead people to postpone consultations, tests and health checks. Apollo’s Health of the Nation 2026 Report has pointed to the rising burden of lifestyle diseases such as obesity, hypertension, diabetes and metabolic disorders, increasingly affecting Indians during their most productive years. The report further highlights that based on health screenings from over 2.5 mn individuals across the Apollo ecosystem in India, there is certainly a rise of a silent epidemic, where millions are living with undiagnosed chronic conditions despite showing no visible symptoms. Nearly 26% were found hypertensive and 23% diabetic despite being asymptomatic, underlining that a symptom-led healthcare model is no longer viable.

‘Always Open. Always Here.’ addresses this gap by giving patients one more day to act on their health before delay becomes risk.

Dr. Prathap C. Reddy, Founder & Chairman, Apollo Hospitals Group, said, “For more than four decades, Apollo has believed that healthcare is not only about treating illness, but about protecting health and preventing disease. ‘Always Open. Always Here.’ is a continuation of that promise. We have always been available for emergencies and critical care. We are now extending the same commitment to routine and preventive care across all seven days of the week. This is our seal of service to every Indian.”

He added, “This initiative is also a tribute to every doctor, nurse, technician and healthcare worker at Apollo, and to their families. Healthcare is a profession built on service above self. Their commitment allows us to take this step for patients and families across India. If one timely consultation helps detect disease early or prevent a crisis, we would have changed a life. If we inspire millions to choose care before crisis, we would have changed the future.”

A legacy of firsts, now taking on the barrier of time

Apollo Hospitals has always believed that healthcare transformation begins by challenging what society has learnt to accept as normal. Dr Reddy questioned why a place meant to save a life should be called ‘Casualty’ and helped redefine it as ‘Emergency’ across hospitals. He lent his voice to ending smoking on flights when it was still considered commonplace and helped give pharmacies the unmistakable green identity recognised today. These were simple changes that altered behaviour and have been the hallmark of his journey: to see what others take for granted, ask why it cannot change, and then change it for millions.

Since 1983, Apollo has played a defining role in Indian healthcare: cardiac surgeries that had never before been performed on Indian soil; South Asia’s first Proton Cancer Centre; preventive care pioneered through the Master Health Check, which has touched over 30 million lives; and one of the world’s busiest solid-organ transplant programmes. Apollo Prohealth has been the first AI-powered risk prediction and analysis designed to help individuals identify health risks earlier and take informed action before conditions progress. Patients from over 150 countries now walk through Apollo’s doors.

With ‘Always Open. Always Here.’, Apollo adds another first: taking on the barrier of time in routine healthcare.

Dr Preetha Reddy, Executive Vice Chairperson, Apollo Hospitals, said, “People should be able to seek medical care at a time that fits more easily into their lives. For working professionals, caregivers and families balancing multiple responsibilities, having the option to consult a doctor, complete a health check or continue with follow-up care, particularly on Sundays, can make a meaningful difference. ‘Always Open. Always Here.’ reflects our commitment to ensuring that the trusted care people expect from Apollo is available every day of the week, whenever they need it.”

What changes for patients

Patients will be able to access specialist consultations, preventive health checks, diagnostics, follow-up consultations and scheduled procedures on Sundays, subject to hospital-specific schedules and service readiness. This means a working professional can complete a health check without taking weekday leave, a family can bring an ageing parent for a planned diagnostic test, and a patient awaiting a follow-up consultation need not wait until Monday.

The initiative will use Apollo’s existing clinical infrastructure, doctors, diagnostics, operating theatres and coordinated care teams to make Sunday access more structured and patient friendly.

For Apollo, this is a natural extension of its long-standing commitment to make quality healthcare more timely, accessible and patient-centred.

‘பாரிஸ் கபே’ இசை வெளியீட்டு விழா!

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா!

தண்டர் மீடியா கண்மணி ரங்கநாதன் மற்றும் LV என்டர்டேன்மெனட் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரிக்கும் பாரிஸ் கஃபே (Paris cafe) படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் நடித்துள்ளனர். மேலும் அர்ச்சனா குமார், விஜய் விஸ்வா, சாய் விக்கி, நயனா, பிபின் மற்றும் பலர் நடித்துள்ளனர். சராஜ் சீலன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இசையமைப்பாளர் கே அவர்கள் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சதீஷ் ஜி அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார். தேசிய விருதை வென்ற விஜே சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார்.

படத்தின் தயாரிப்பாளர் கண்மணி ரங்கநாதன் அவர்கள் பேசும் போது, பாரிஸ் கஃபே ஒரு ஸ்மால் பட்ஜெட் படம் ஆனா ஒரு ஸ்ட்ராங் மெசேஜ் இருக்கு நம்ம சமுதாயத்தில் நடக்குற முக்கியமான விஷயம் பத்தி பேசுற படம். குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் இந்தப் படத்தில் இருப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. படத்தின் இயக்குனர் என்னுடைய கணவர் 20 வருடமா முயற்சி செய்கிறார் ஆனா சூழ்நிலை அவருக்கு இயக்குநராக விடல அது நான்தான். இந்தப் படத்துக்காகவும் நிறைய புக் ரிசர்ச் பண்ணி இருக்காரு. என்னுடைய கணவரை நினைத்தால் எனக்கு பெருமையா இருக்கு.

படத்தின் இணை தயாரிப்பாளர் லிங்கேஸ்வரன் அவர்கள் பேசும் போது, சினிமாத்துறை எனக்கு புதுசு. இந்தப் படம் முடிஞ்சதுக்கு அப்புறம் எனக்கு இன்னொரு படம் எடுக்க ஆசையா இருக்க காரணம் இந்த படத்தின் இயக்குனர் தான்.

படத்தின் கலை இயக்குனர் தாமு அவர்கள் பேசும் போது,
இந்த படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. இயக்குனருக்கு லைவ் விட செட்டு போட்டு பண்ணா தான் பிடிக்கும், எனக்கு வாய்ப்பு கொடுத்தாங்க அதற்கு ரொம்ப நன்றி.

படத்தின் எடிட்டர் சாபு அவர்கள் பேசும் போது, என்னோட உதவியாளர் லோகேஷ், மற்றும் பிரகாஷ்க்கு என்னுடைய நன்றி. சரஜ் சீலன் முதல் பட இயக்குனர் மாதிரி தெரியல, எல்லாமே ரொம்ப சிறப்பா பண்ணிருந்தாரு, இயக்குனர் உடைய 20 வருட கனவு உண்மை ஆகி இருக்குன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

சிறப்பு விருந்தினர் இயக்குனர் மித்ரன் ஜவகர் அவர்கள் பேசும்போது, ஒரு டைரக்டருக்கு மனைவி ப்ரொடியூசரா கிடைக்கிறது பெரிய அதிர்ஷ்டம், குரு சோமசுந்தரம் எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகர், இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். படம் மிகப்பெரிய வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்.

சிறப்பு விருந்தினர் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் அவர்கள் பேசும்போது, இயக்குனர் உடைய 23 வருட கனவு இது உண்மையாக்க ஒரு நேர்மை வேண்டும் அது அவர்கிட்ட இருக்கு, இந்தப் படத்தோட தலைப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, இது உண்மைக்கு நெருக்கமான படமா இருக்கும்னு நான் நம்புறேன். ஒரு படத்தின் எழுத்தும் ஒளிப்பதிவும் இருட்டிலிருந்து உருவாவது, எழுத்தாளருக்கும் ஒளிப்பதிவாளர்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை வழி நடத்திப் போறவர்தான் இயக்குனர், டைரக்டர் ஒவ்வொரு படியா போனாதான் அந்த வழி அவருக்கு தெரியும், கடவுளின் பார்வையில் பார்க்க வேண்டும். நிலையற்ற தன்மையை ஏற்றுக் கொள்பவர்களுக்கு தான் ஒரு நீளமான பயணமும் அனுபவமும் கிடைக்கும்.

படத்தில் நடித்த நடிகை நயன சாய் பேசும்போது,” இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குனருக்கு என்னுடைய முதல் நன்றி. என்னுடைய அம்மா எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணி இருக்காங்க அதற்கு ரொம்ப நன்றி. குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் அவர்களுடன் நடித்தது சந்தோஷமா இருக்கு. இந்த வாய்ப்பை வாங்கி கொடுத்தது கோ டைரக்டர் சாமி அண்ணா அவர்களுக்கு ரொம்ப நன்றி . இசையமைப்பாளருக்கும் என்னுடைய நன்றி. பிஆர்ஓ ரியாஸ் சார் மற்றும் பராஸ் நான் சென்னை முதல் முறை வந்ததிலிருந்து எனக்கு எல்லா உதவிகளையும் செஞ்சு கொடுத்தார் அதற்கு என்னுடைய நன்றி. இந்த படத்தை தியேட்டர்ல பார்த்து எங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க கடவுள்கிட்டயும் நான் வேண்டிக்கிறேன்.

படத்தில் நடித்த நடிகர் விஜய் விஸ்வா அவர்கள் பேசும்போது, இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அவர்களுக்கு என்னுடைய நன்றி அதற்கு காரணமாக சாமி அண்ணனுக்கும் நன்றி. சமீபத்தில் நான் அமெரிக்கா போயிருந்தப்போ தமிழ் சங்கம் மேடையில அமைச்சர் ராஜ்மோகன் இருந்தாரு அந்த விழாவை நான் தான் தொகுத்து வழங்கினேன் அவருடைய அனுமதி ஓட ஒரு பாடலை போட்டோம் அது என்னுடைய பாட்டு அதற்கு கே தான் இசை அமைத்திருந்தார் இசையமைப்பாளர் கே அவர்களுக்கும் என்னுடைய நன்றி. ரெண்டு யுனிவர்சிட்டி கூட எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஒன்னு தமிழ்நாடு யுனிவர்சிட்டி இன்னொன்னு மலையாளம் யூனிவர்சிட்டி குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் கூட நடிச்சது நிறைய கத்துக்கிட்டேன் இவங்க கிட்ட இருந்து அதற்கு என்னுடைய நன்றி. தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு ஒரு வேண்டுதல் . நிறைய சின்ன படங்கள் வருது அதற்கு சரியான அங்கீகாரம் இல்லை அரசாங்கம் மூலமா ஒரு ஓடிடி தளம் தொடங்கினால் அது எல்லோருக்கும் ரொம்ப உதவியா இருக்கும் இது என்னுடைய வேண்டுகோள். இந்த படம் சொசைட்டிக்கு தேவையான கருத்தை சொல்லி இருக்கு எல்லாரும் இந்த படத்துக்கு சப்போர்ட் பண்ணுங்க.

படத்தில் நடித்த நடிகர் பிபின் அவர்கள் பேசும்போது, இந்தப் படம் நான் நடிச்சதிலேயே ரொம்ப வித்தியாசமான படம், இந்தப் படத்தினுடைய கதை ரொம்ப நேர்த்தியானது. குரு சோமசுந்தரம் அனுமோல் உங்க கூட நடிச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு எல்லோருக்கும் நன்றி.

படத்தில் நடித்த நடிகர் சாய் விக்கி அவர்கள் பேசும்போது, இது என்னுடைய முதல் மேடை, நான் சின்ன சின்ன கேரக்டர் பண்ணி இருக்கேன் ஆனா இந்த படத்துல எனக்கு ஒரு பேர் எல்லாம் கொடுத்து படம் முழுக்க டிராவல் பண்ணி இருக்கேன் அது சந்தோஷமா இருக்கு. ஏழு வருஷமா முயற்சி செஞ்சிட்டு இருக்கேன் இயக்குனர் எனக்கு நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கார். எல்லாரையும் நான் குறிப்பிட்ட சொல்லல ஆனா ஒரு சிலர் இன்ஸ்டாகிராம் மூலமா தான் படம் வாய்ப்பு தர்றாங்க ஆனா இந்த இயக்குனர் அதையெல்லாம் பார்க்காமல் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். இந்தப் படம் ஒரு முக்கியமான கருத்தை சொல்லுது, ஒரு ஸ்ட்ராங்கான விஷயத்தை ரொம்ப மென்மையா சொல்லக்கூடிய படம். இசையமைப்பாளர் கே அவர்களுடைய இசை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவருடைய இசையில் நான் நடிச்சதும் எனக்கு சந்தோஷமா இருக்கு. குரு சோமசுந்தரம் மாதிரி ஒரு நடிகர் யாருமே இல்லை ஜோக்கர் படத்தில் இருந்து நான் அவரை பாலோ பண்றேன். அனுமோல் உங்க கூட நடிச்சதும் சந்தோசமா இருக்கு. கௌசல்யா அவர்களுக்கு நடந்தது மத்தவங்கள விட ரொம்ப மோசமானது அதிலிருந்து அவங்க மீண்டு வந்து இருக்காங்க அவங்களுக்கு வீரவணக்கம் தான் சொல்லணும். குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை கூட கொலை பண்ணது கிடையாது ஆனால் காதல் பண்ணா இங்க ஆணவ படுகொலை பண்றாங்க அந்த சொசைட்டில நம்ம இருக்கோம், இது மாறனும் அதுக்கான படம் தான் பாரிஸ் கஃபே.

படத்தில் நடித்த நடிகை அர்ச்சனா அவர்கள் பேசும்போது, இது என்னுடைய மூன்றாவது படம், என்னுடைய பத்து வருட உழைப்பு. சின்ன வயசுல நிறைய பாடிஷேம் பண்ணி இருக்காங்க ஆனா இப்போ கேமராவில் என்ன பார்க்கும்போது எனக்கே அழகா தெரியுது அதற்கு ஒளிப்பதிவாளருக்கு நன்றி. இயக்குனர் இந்த படத்தோட கதையை ஒவ்வொரு லைனும் மைண்ட்லயே வச்சிருப்பாரு. குரு சோமசுந்தரம் நடிக்கிற எல்லாத்தையும் ரசிக்கலாம். அனுமோல் அவர்களுடைய கண்ணு அப்படியே நடிக்கும். கே ” உங்களுடைய மியூசிக் ரொம்ப அழகா இருக்கு”. இது ரொம்ப அழகான கதை இந்த சமுதாயத்திற்கு தேவையான படம்.

படத்தில் நடித்த நடிகர் மற்றும் ப்ரொடியூசர் கணேஷ் அவர்கள் பேசும்போது, என்னுடைய போட்டோ பார்த்து தேர்ந்தெடுத்தேனு சொன்னாரு எனக்கு இந்த கதை ரொம்ப இன்ட்ரஸ்ட்டா இருந்துச்சு இந்த டீமை ஒரு பாசிட்டிவான எனர்ஜி ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு மீனிங் இருக்கும் இந்தப் படத்தில் நடிச்சது சந்தோஷமா இருக்கு.

படத்தில் நடித்த நடிகை அனுமோல் அவர்கள் பேசும்போது, எல்லோருக்கும் வணக்கம் இந்தப் படம் ரொம்ப முக்கியமான படம், நான் நடிக்கும் படங்கள் சமுதாயத்திற்கு தேவையான படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பேன். இயக்குனர் கூட பேசும் போது ஒரு கான்ஃபிடன்ட் இருந்துச்சு அதனால தான் இந்த படம் நான் நடித்தேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் எல்லார் கூடையும் நடிச்சது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. கே இசையமைப்பாளர் அவருடைய தமிழ் பாட்டை விட மலையாள பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். குரு சோமசுந்தரம் கூட நடித்தது சந்தோஷமா இருந்துச்சு எனக்கு அவரு மேல கோபம் நான் அழகா இல்ல என்ன விட வேற ஒரு ஹீரோயின் அழகா இருக்கங்கன்னு என்கிட்டயே சொல்றாரு இப்ப கூட அவர் கிட்ட சண்டை போட்டேன், ஆனால் அந்த சண்டை அன்பான சண்டைதான், இவர் மேல எனக்கு ரொம்ப ரெஸ்பெக்ட் இருக்கு எல்லோரிடமும் ஒரே மாதிரி தான் பழகுவார் . இந்தப் படத்துல நடிச்சது சந்தோஷமா இருக்கு இயக்குனர் தயாரிப்பாளர் எல்லாருக்கும் ரொம்ப நன்றி. இது ஒரு சின்ன படம் இல்லை ரொம்ப முக்கியமான படம்..

படத்தின் இசையமைப்பாளர் கே அவர்கள் பேசும்பொழுது, வந்திருக்கிற எல்லோருக்கும் நன்றி. இது எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம், நான் நல்ல படம் தேடிக்கிட்டு இருந்த அந்த டைம்ல இந்த படம் எனக்கு வந்துச்சு ரொம்ப நன்றி. படத்துல ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து ஒர்க் பண்ணி இருக்கோம். என்னோட இந்த படத்துல பாடல் பாடிய எல்லாருக்கும் என்னுடைய நன்றி என்னுடைய டீமுக்கும் என்னுடைய நன்றி.

படத்தில் நடித்த நடிகர் குரு சோமசுந்தரம் அவர்கள் பேசும்போது, அந்தப் படத்துல நடிச்சது எனக்கு ரொம்ப சந்தோஷம் டைரக்டர் சொன்னதுமே எனக்கு ரொம்ப பிடிச்சு நான் ஒத்துக்கிட்டேன் இந்த படத்தை. நிறைய புது படத்தின் இயக்குனரின் மனைவி வேலைக்கு போவாங்க ஆனா இந்த படத்தோட இயக்குனரின் மனைவி இந்த படத்துக்கு ப்ரடியூசர் ஆயிட்டாங்க அது பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. இந்தப் படம் கன்டென்ட் ஓரியண்டட் படம். அனுமோல் வேற ஒருத்தவங்கள அழகா இருக்கன்னு சொன்னதும் கடுப்பாயிட்டாங்க அது அன்பான சண்டை. இந்த படத்துடைய எடிட்டருக்கு அவருக்கும் நன்றி. இசையமைப்பாளர் கே என்னுடைய நன்றி. முக்கியமா ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் விக்கி இந்த படத்துல ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு எனக்கு போட்டியா இருக்கிற மாதிரி நடிக்கிறார் ரொம்ப கஷ்டமான ரோல் அத ரொம்ப நல்லா பண்ணி இவருக்கு வாழ்த்துக்கள். கௌசல்யா அவர்கள் வந்ததுக்கு நன்றி பெண்களை மதிக்காத நாடு கண்டிப்பா வளராது , கௌசல்யா மாதிரி இன்னொருத்தங்க இங்கே இருக்கக்கூடாது நம்ம மாறினால்தான் எல்லாமே மாறும் இந்த படம் அதைப்பற்றி தான் பேசும். எல்லோருக்கும் ரொம்ப நன்றி.

சிறப்பு விருந்தினர் கௌசல்யா சங்கர் அவர்கள் பேசும்பொழுது, இந்தப் படத்துல சிறப்பு விருந்தினரா என்ன ஏன் கூப்பிட்டாங்கன்னா சந்தேகம் இருந்தது, ஏன்னா எனக்கு களத்துல வேலை செய்யறது தான் என்னுடைய வேலை சினிமா எனக்கு தெரியாது ஆனால் இந்த படம் பார்த்ததும் எனக்கு புரிந்தது இது சமூகத்திற்கு ரொம்ப தேவையான படம். இந்த படத்தில் காதல் ரொம்ப இயல்பாக இருந்தது. ஒரு பெண் இந்த சமூகத்தில் எப்படி இருக்கணும் அதையும் இந்த படம் தெளிவா காட்டியது. தமிழ்நாட்டுல இப்பவும் பெண்களின் உரிமைக்காகவும் எல்லோருடைய உரிமைக்காகவும் நிறைய பேரு போராடுறாங்க அதனுடைய தொடர்ச்சி தான் இந்த படம். ஒரு பெண் மாறினால் அந்த சமூகம் மாறும் ஒரு பெண் இல்லாமல் எல்லோரும் மாறும்போது இந்த சமூகம் ஜாதியை கடந்து நிற்கும் அப்படின்றத இந்த படம் காட்டுச்சு. ஒரு பெண் தன்னுடைய இணையை எதை வைத்து தேர்ந்தெடுப்பது என்று தவறாக இருக்கும் பிற்போக்குத்தனத்தை இந்த படம் உடைத்திருக்கிறது. ஆணவ படுகொலைகள் தொடர்ச்சியா தமிழ்நாட்டுல நடந்துகிட்டு இருக்கு அதை பண்றது பெற்றோர்களாக இருக்காங்க, அதற்கு ஒரு மாற்றமா இந்த படம் இருக்கு. ஆணவ படுகொலைக்கு எதிரா தனிச்சட்டம் வேணும்னு அரசு கிட்ட கேட்டு இருக்கோம் அதற்கு இந்த படம் வழிவகுக்கும் என்று நினைக்கிறேன். குரு சோமசுந்தரம் ஒரு கதாபாத்திரமா நடிக்காமல் கதாபாத்திரமாக வாழ்கிறார்.

படத்தின் இயக்குனர் சராஜ் சீலன் அவர்கள் பேசும்போது, என்னுடைய சினிமா வாழ்க்கை ஆறு வயதில் ஆரம்பித்தது, என்னுடைய அப்பா தான் எனக்கு சினிமா கற்றுக் கொடுத்தார், வாரம் தவறாமல் படங்களை பார்ப்போம், படிச்ச ஸ்கூல் வாசல்ல ஐந்து தியேட்டர் இருக்கும். வகுப்பறையில் ரஜினி கமல் பற்றிதான் அதிகமா பேசுவோம் சினிமாலாம் எங்களுடைய பேச்சு. பாரதிராஜா பாலச்சந்தர் பாலுமகேந்திரா பாக்கியராஜ் இவங்க தான் எனக்கு ரொம்ப புடிச்ச இயக்குனர்கள். நான் பாக்யராஜ் சார்-ஐ இந்த படத்துக்கு கூப்பிடனும்னு நினைச்சா அவரு இப்ப இல்ல அது ரொம்ப கஷ்டமா இருக்கு. உங்க அப்பாக்கு கலைத்துறையில் ரொம்ப ஆர்வம் அவரும் மூலமா தான் நான் எல்லாமே கத்துக்கிட்டேன். நான் சினிமாவை படித்து தான் கத்துக்கிட்டேன். ஒரு நிமிட ஷார்ட் பிலிம் என்னோட பொண்ணை வைத்து எடுத்தேன் அந்தப்படம் செலக்ட் ஆனதும் என்னுடைய பார்வை ரொம்பவும் பெரிதா மாறியது அதற்குப் பிறகு எல்லாமே சினிமா தான் என்று முடிவு செய்தேன். குரு சோமசுந்தரம் கிட்ட முதல் முறை கதை சொன்னதும் அவர் ரொம்ப நல்லா இருக்கு நானே பண்றேன் என்று சொல்லிட்டார் அவர் கூட பயணித்தது எனக்கு சந்தோசமா இருக்கு ரொம்ப நன்றி குரு சார். அனுமோல் கிட்ட போன்ல தான் கதை சொன்னேன் அவருக்கும் பிடித்து ஒத்துக்கிட்டாங்க அதற்கும் நன்றி. படத்துல நடிச்ச நடிகர் நடிகைகள் எல்லாரும் ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க எல்லாருக்கும் மனமார்ந்த நன்றி. சாபு இந்த படத்துக்கு ஒரு முக்கியமான பில்லர் நான் சொன்னதை ரொம்ப அருமையா பண்ணி கொடுத்தார். கலை இயக்குனரின் உழைப்பு ரொம்ப முக்கியமானது அவருக்கும் என்னுடைய நன்றி. இசையமைப்பாளர் கே அவர்களுக்கும் என்னுடைய நன்றி.

மஞ்சள் நிற உடை கட்டாயம்!

யோத்தி ராமர் கோயில் அர்ச்​சகர்​களுக்​கான புதிய உடை விதி​முறை கடந்த வெள்​ளிக்​கிழமை முதல் அமலுக்குவந்துள்​ளது. இதன்​படி, பூஜைகள் மற்​றும் வழி​பாட்டு நிகழ்ச்​சிகளை நடத்​தும் அனைத்து அர்ச்​சகர்​களும் பாரம்​பரிய மஞ்​சள் நிற உத்தரீ​யம் (மேலாடை) அணிய வேண்​டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கோயி​லின் சமயக் குழு​வால் இந்த விதி​முறை வகுக்கப்பட்டுள்ளது. தினசரி பூஜை, ஆரத்தி உள்​ளிட்ட சடங்குகளை நடத்​தும் அர்ச்​சகர்​கள், தையல் இல்​லாத மஞ்​சள் நிற உத்​தரீயத்தை அணிய வேண்​டும். இது கோயி​லில் பின்பற்றப்படும் வைஷ்ணவ மரபு மற்​றும் ராமானந்​தா​ச்சார்ய பரம்பரையின் (வைஷ்ணவ சமய குரு​வால் தொடங்​கப்​பட்ட ஆன்மிக பரம்​பரை) அடிப்​படை​யில் வகுக்​கப்​பட்​டுள்​ளது.

தற்​போது நடை​பெற்று வரும் ஜூலனோத்சவ (ஊஞ்​சல்) விழா​வின்​போது இந்​தப் புதிய உடை முதன்​முறை​யாகப் பொது​வெளி​யில் தெளி​வாகக் காணப்​பட்​டது. மஞ்​சள் நிற உத்​தரீ​யம் அணிந்த அர்ச்சகர்​கள், வேத மந்​திரங்​களு​டன் சடங்​கு​களை நடத்​தி, ராம்லல்​லா​வின் உற்சவ மூர்த்​தியை அலங்​கரிக்​கப்​பட்ட பல்லக்கில் வைத்து விழா​வைத் தொடங்கி வைத்​தனர்.

இந்த ஒருங்​கிணைந்த உடை சமய ஒழுங்​கை​யும், அர்ச்​சகர்​களின் ஆன்​மிக அடை​யாளத்​தை​யும் வலுப்​படுத்​தும் என கோயில் அதிகாரி​கள் கருதுகின்​றனர். கூடு​தல் விதி​முறை​கள் படிப்படியாக வரக்​கூடும் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அமைச்சர்கள் மீது உதயநிதி விமர்சனம்!

வெக அரசில் அந்தந்தத் துறை அமைச்சர்கள் அந்தந்த துறைக்கான பதிலைச் சொல்ல மறுக்கிறார்கள். உதாரணத்துக்கு சட்டம் ஒழுங்கு, போதைப் பொருள் தடுப்பைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறோம். இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர் யார் என்பது மக்களுக்குத் தெரியும். அந்த அமைச்சர் இன்றைக்கு அவைக்கு வரவே இல்லை. அதற்கான பதிலையும் அவர் சொல்லவே இல்லை,” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததும், உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோவையில் மாணவர் அமுதன் 10 நாட்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்துகின்ற கும்பலைப் பற்றி காவல்துறையிடம் விவரங்களையெல்லாம் கூறியதற்காக காவல்துறை என்ன செய்திருக்க வேண்டும்? சரியான நடவடிக்கை எடுத்து, போதைப் பொருளைப் பறிமுதல் செய்திருக்க வேண்டும்.

அந்த மாணவன் அமுதன் யார் மீது புகார் கொடுத்தாரோ, யார் போதைப்பொருள் கடத்துகிறார்கள், யார் விநியோகம் செய்கிறார்கள் என்று கூறினாரோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். அதற்கு மாறாக, அந்த போதைப்பொருள் விநியோகம் செய்கின்ற கும்பலை அழைத்து, `இந்த அமுதன்தான் உங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கொடுத்திருக்கிறார்’ என்று கூறியதனால், அந்த போதைப் பொருள் விநியோகம் செய்யும் கும்பல் அமுதனை கிட்டத்தட்ட 20 பேரைக் கொண்ட ஒரு கும்பலாகச் சேர்ந்து அடித்து, 5 நாட்களுக்கு முன்பு படுகொலை செய்திருக்கிறார்கள்.

அதுமட்டுமன்றி, திருவொற்றியூரில் இதேபோல தனுஷ் என்ற மாணவர், 20 பேர் கொண்ட ஒரு கும்பலால் தாக்கப்பட்டு பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இப்படித் தொடர்ந்து போதைப்பொருளால் இன்றைக்குப் பல்வேறு சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்பட்டு இருக்கின்றன.

இதையெல்லாம் சுட்டிக்காட்ட வேண்டும் என்று இந்த அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்காக இன்றைக்கு நாம் மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்களும் சட்டமன்றத்தில் அரசின் கவனத்தை ஈர்த்துப் பேசியிருக்கிறோம்.

ஆனால், இதற்கெல்லாம் எந்தவிதமான ஒரு சரியான பதிலும் இந்த அரசிடம் இல்லை. மாறாக எங்கள் மீது மீண்டும் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். தங்களது ஆட்சியில் என்ன செய்தீர்கள் என்று ஒரு தெளிவான விளக்கம் இல்லாமல், எங்கள் மீது மீண்டும் பழியைப் போடுகின்ற வழக்கத்தையே இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.

அதுமட்டுமன்றி, நான் பலமுறை இந்த மூன்று மாதங்களாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். எந்தத் துறைக்கு யார் அமைச்சர் என்பதே சரியாகத் தெரியவில்லை. அதற்கு என்ன காரணம் என்றால், இந்த அரசில் அந்தந்தத் துறை அமைச்சர்கள் அந்தந்த துறைக்கான பதிலையே சொல்ல மறுக்கிறார்கள்.

இன்றைக்கு சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறோம், போதைப் பொருள் தடுப்பைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறோம். இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர் யார் என்பது மக்களுக்குத் தெரியும். அந்த அமைச்சர் இன்றைக்கு அவைக்கு வரவே இல்லை. அதற்கான பதிலையும் அவர் சொல்லவே இல்லை. இதையெல்லாம் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு வெளிநடப்பு செய்திருக்கிறோம்.” என்றார்.

பின்னர் செய்தியாளர்கள், ‘மீண்டும் அவை நடவடிக்கையில் கலந்து கொள்வீர்களா?’ என கேட்டதுக்கு, “மீண்டும் அவை நடவடிக்கையில் கலந்துகொள்வோம். முறையான பதில் வேண்டும் என்றுதான் கேட்கிறோம். அதற்கான அமைச்சர்தான் வரவில்லையே? அமைச்சர்தானே எழுந்து பதில் சொல்ல வேண்டும்? சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் யார் என்பது மக்களுக்குத் தெரியும்” என்றார்.

பின்னர், ‘நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறதா எனக் கேட்கிறாரே?’ என்ற கேள்விக்கு, “அந்த காணொலி எப்போது வெளியே வந்தது? ஒரு மாதத்திற்கு முன்னால் வந்தது. அப்படி காணொலி வந்தால், வந்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியென்றால் இந்த அரசுதானே நடவடிக்கை எடுக்க வேண்டும்? அவரை அழைத்து விசாரித்தார்களா? அப்படியென்றால், அந்த அமைச்சர் ஒப்புக்கொள்கிறாரா, அது போதைப் பொருள்தான் என்று ஒப்புக்கொள்கிறாரா?” என்றார்.

பின்னர், மைதானத்தைச் சுற்றிலும் காவல்துறை இருந்தது என்கிறாரே? என்ற செய்தியாளர்கள் சுட்டிக்காட்ட, “அப்படியென்றால், அது போதைப் பொருள்தான் என்று ஒப்புக்கொள்கிறாரா? நான் என்ன சொல்கிறேன் என்றால், இந்த வீடியோ எப்போது வந்தது? ஒரு மாதத்திற்கு முன்பு வந்தது. எனவே இந்த அரசு அவரை அழைத்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எங்களுடைய அரசாக இருந்திருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்போம். ஆனால் இந்த வீடியோ வெளிவந்ததே இப்போதுதான்” என்று உதயநிதி கூறினார்.

பயிர் கடன் தள்ளுபடி! முதல்வர் அறிவிப்பு

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். ஆரம்பத்தில் 25.05.2026 அன்று ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி கோரிக்கைகள் வந்தன.

இக்கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலித்த முதலமைச்சரின் உத்தரவின்படி, கடந்த ஜூன் 15-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, நிதித்துறை மற்றும் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு ஆலோசித்தனர்.

இந்த மறுஆய்வுக் கூட்டத்தின் முடிவில், கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகள் அனைவருக்கும் 100 சதவீதம் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கடந்த நிதியாண்டில் கடன் பெற்ற விவசாயிகளுக்குக் குறைந்தபட்சம் ரூ.35,000 முதல் அதிகபட்சமாக ரூ.75,000 வரை நிதிப் பலன் கிடைக்கப்பெறும்.

இந்திய ரிசர்வ் வங்கி 28.11.2025 அன்று வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, கடன் தள்ளுபடிக்கான முழுத் தொகையையும் அரசு 45 முதல் 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலைமை மற்றும் நிதி ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு, கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 01.05.2025 முதல் 28.02.2026 வரையிலான காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற சுமார் 14.43 லட்சம் (14,43,504) விவசாயிகள் இதன் மூலம் நேரடியாகப் பயனடைவார்கள். இதற்காக அரசாங்கத்திற்கு சுமார் ரூ.5,932.23 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

பயனாளிகளின் விவரங்களைப் பிரித்துப் பார்க்கும்போது, 8,33,773 குறு விவசாயிகளுக்கு ரூ.3,599.67 கோடியும், 5,16,183 சிறு விவசாயிகளுக்கு ரூ.1,995.42 கோடியும், 93,548 இதர பெரு விவசாயிகளுக்கு ரூ.337.15 கோடியும் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆக மொத்தம் 14,43,504 விவசாயிகளுக்கு ரூ. 5,932.23 கோடி தள்ளுபடித் தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கடன் தள்ளுபடி நடவடிக்கை, எதிர்வரும் சாகுபடி பருவத்தில் விவசாயிகள் மீண்டும் புதிய கடன்களைப் பெற்று சுலபமாக விவசாயப் பணிகளைத் தொடரப் பெருமளவில் துணையாக இருக்கும்.

பயிர்க்கடன் இன்றைய முதலமைச்சர் அறிவிப்பு – என்ன வித்தியாசம்?

முன்பு:

ரூ. 75 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி
ரூ. 75 ஆயிரத்துக்கு மேலான பயிர்க்கடன்களுக்கு ரூ.35 ஆயிரம் தள்ளுபடி

இன்றைய அறிவிப்பு:

ரூ. 75 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி
ரூ. 75 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரையிலான பயிர்க்கடன்களுக்கு ரூ.75 ஆயிரம் தள்ளுபடி
ரூ. 1 லட்சத்துக்கு மேலான பயிர்க்கடன்களுக்கு ரூ.35 ஆயிரம் தள்ளுபடி

வித்தியாசம்:

ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றவர்கள் ஏற்கெனவே ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி பெற்றிருப்பார்கள். அவர்கள் தற்போது கூடுதலாக ரூ.40 ஆயிரம் சேர்த்து ரூ. 75 ஆயிரம் தள்ளுபடி பெறுவார்கள்.