Tuesday, June 30, 2026
Blog

‘அரூபி’ டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா

லையாளத்தில் உருவாகியுள்ள ‘அரூபி’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் அம்சங்கள் நிறைந்த இப்படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

“சில ரகசியங்கள் ஒருபோதும் மறைந்தே இருக்காது…” என்ற வரியுடன் தொடங்கும் டிரெய்லர், பல்வேறு மர்மங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் நிறைந்த கதைக்களத்தை முன்னிறுத்துகிறது. விறுவிறுப்பான காட்சிகள், பின்னணி இசை மற்றும் திகில் கலந்த திரைக்கதை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுக்கு பின் படக்குழு படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்

இயக்குநர் அபிலாஷ் வாரியர் பேசியதாவது..,

“முதலில் அனைவருக்கும் நன்றி. எங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படம் மலையாளம் மட்டுமல்ல, எல்லா மொழி ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்காக படப்பிடிப்பின்போதே நிறைய உழைத்திருக்கிறோம்.

படத்தின் புரமோஷன் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் தொழில்நுட்பக் குழு. பின்னணி இசையமைப்பாளர் கோபி சுந்தர் ., ஒளிப்பதிவாளர் ரோபி வர்கீஸ் ராஜ், படத்தொகுப்பாளர் கிஷோர் மோகன் உள்ளிட்ட அனுபவமிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.

மீதியை நீங்கள் திரையரங்கில் பார்த்து முடிவு செய்யுங்கள். படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறோம். அனைவருக்கும் மீண்டும் நன்றி.”

தயாரிப்பாளர் பிரதீப் ராஜ் பேசியதாவது:

“இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இன்று திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவரின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. மகிழ்ச்சியாக இருந்தாலும், சோகமாக இருந்தாலும், தனிமையில் இருந்தாலும், மன அழுத்தத்தில் இருந்தாலும், மக்கள் ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறார்கள். திரைப்படம் பார்க்க இனி எந்தவொரு விசேஷ நாளும் தேவையில்லை.

சமீபத்தில் கேரள அரசு திரைப்படத் துறையை ஒரு தொழில்துறையாக அறிவித்துள்ளது. அதனால் இன்று நாங்கள் அனைவரும் திரைப்படம் என்ற தொழிலில் ஈடுபட்டு வருகிறோம் என்பதில் பெருமை கொள்கிறேன்.

இந்த மேடையில் நின்று சினிமாவை கொண்டாடுவதில் மகிழ்ச்சி. இந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பதற்கும், உங்களுடன் இந்த தருணத்தை பகிர்ந்து கொள்வதற்கும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த வாய்ப்புக்காக என் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நன்றி.

குறிப்பாக இயக்குநர் அபிலாஷ் வாரியருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். என் நண்பரும், இந்தப் படத்தின் நாயகனுமான விஷாக் ரவியுடன் சேர்ந்து அவர் என்னிடம் இந்தக் கதையைச் சொன்னார். நான் சினிமா துறையைச் சேர்ந்தவன் அல்ல; தொழிலதிபர். ஆனால் இந்தக் கதையை கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. என் மனைவி மஞ்சுவின் ஆசீர்வாதத்துடன் இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்தேன்.

அப்போது அபிலாஷிடம் நான் ஒரு விஷயம் மட்டும் சொன்னேன். ஏற்கனவே பிரபலமான நடிகர்களை மட்டும் நம்பாமல், திறமையான இளம் கலைஞர்களைத் தேடி அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றேன். இந்தியாவில் திறமைக்கு குறைவில்லை. ஆனால் அந்த திறமையை வெளிப்படுத்த சரியான மேடை கிடைக்காமல் பலர் இருக்கிறார்கள். அவர்களை நம்பிக்கையுடன் கொண்டு வந்து, கடின உழைப்பு மற்றும் ஒழுக்கத்துடன் இந்தப் படத்தை உருவாக்க வேண்டும் என்று கூறினேன்.

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் கதைதான். படம் முடிந்து வெளியே வரும்போது, ‘இவ்வளவு அருமையான கதையை இதுவரை யாரும் ஏன் படமாக எடுக்கவில்லை?’ என்று நீங்கள் நினைப்பீர்கள். அந்த அளவுக்கு சிறப்பான கதையை அபிலாஷ் மிகுந்த உழைப்புடன் திரையில் கொண்டு வந்துள்ளார். இளம் நடிகர்களையும் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு மக்கள் பேசுவார்கள், விவாதிப்பார்கள், தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதற்காகவே நான் காத்திருக்கிறேன்.

ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. ஒரு திரைப்படத்தின் வெற்றி அல்லது தோல்வியில் ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. நல்ல திரைப்படம் தோல்வியடைவதற்கு காரணம் அது சரியான பார்வையாளர்களை சென்றடையாததுதான். ஒரு படம் அனைவருக்கும் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. அது ஒருவரின் ரசனைக்கு ஏற்றதாக இல்லாவிட்டால் அவர் அதை மோசமான படம் என்று கூறலாம். ஆனால் அது மோசமான படம் என்பதற்கான அர்த்தமல்ல.

சரியான பார்வையாளர்களிடம் ஒரு திரைப்படத்தை கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் மிகப்பெரிய பாலமாக இருக்கின்றன. அதனால் இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவும், ஒத்துழைப்பும் தேவை. அன்புடனும் மரியாதையுடனும் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறோம். ‘அரூபி’ திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள். அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்.”

நடிகர் விஷாக் ரவி பேசியதாவது:

“அனைவருக்கும் என்னுடைய அன்பு வணக்கம். முதலில் சமீபத்தில் நம்மை விட்டு பிரிந்த பாரதிராஜா சார் மற்றும் பாக்யராஜ் சாருக்கு என்னுடைய பணிவான அஞ்சலியை செலுத்துகிறேன். தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களுக்கு எனது மரியாதை.

இன்று இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள ஊடக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. தயாரிப்பாளர் சொன்னது போல, ஒரு படத்தின் வெற்றிக்கு ஊடகங்கள்தான் மிகப்பெரிய பாலமாக இருக்கிறார்கள். உங்கள் ஆதரவு இருந்தால்தான் எங்களைப் போன்ற புதியவர்கள் முன்னேற முடியும்.

இந்தப் படம் உருவான பயணம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. நானும் இயக்குநர் அபிலாஷ் வாரியரும் இணைந்து பல கதைகளை உருவாக்கினோம். எந்தக் கதையை முதலில் படமாக்குவது என்று நீண்ட நாட்கள் யோசித்தோம். இறுதியாக இந்தக் கதையை தேர்வு செய்தோம். அதன் பிறகுதான் தயாரிப்பாளர் பிரதீப் ராஜ் சாரை சந்தித்தோம்.

பிரதீப் ராஜ் சார் எனக்கு ஒரு தயாரிப்பாளர் மட்டுமல்ல, தந்தை போன்றவர். அவர் இல்லையென்றால் இந்தப் படம் உருவாகியிருக்காது. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மேடையில் இருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இது ஹீரோவாக எனது முதல் படம். அதனால் உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் ஆதரவும் எனக்கு மிகவும் முக்கியம்.

‘அரூபி’ ஒரு ஹாரர் திரைப்படம். முதலில் இதை மலையாளத்தில் மட்டுமே எடுக்கத் திட்டமிட்டோம். ஆனால் கதையின் வலிமை மீது இருந்த நம்பிக்கையால், தமிழிலும் வெளியிட முடிவு செய்தோம். நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களுக்கு எல்லா மொழிகளிலும் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

ஒரு ஹாரர் படத்தில் பின்னணி இசையும், ஒலித் தரமும் மிகவும் முக்கியமானவை. அதற்காக கோபி சுந்தர் பின்னணி இசையமைத்துள்ளார். சவுண்ட் டிசைனிலும் தொழில்நுட்பக் குழு சிறப்பாக பணியாற்றியுள்ளது. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலங்களில் அதுவும் ஒன்றாக இருக்கும்.

எனது அம்மாவுக்கு இந்த மேடையில் சிறப்பு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவரால்தான் இன்று நான் உங்கள் முன்னால் ஒரு ஹீரோவாக நிற்கிறேன். அவருக்கு என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘அரூபி’ திரைப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. எங்களைப் போன்ற புதிய கலைஞர்களை ஆதரித்து, திரையரங்குகளில் படம் பார்த்து வெற்றி பெறச் செய்யுங்கள். இது எனது முதல் படம் மட்டுமல்ல, இன்னும் பல நல்ல படங்களை செய்ய வேண்டும் என்பதே என் கனவு. உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் அவசியம்.


நடிகை நேஹா சாவ்லா பேசியதாவது:

“அனைவருக்கும் வணக்கம். நான் நேஹா சாவ்லா. டெல்லியைச் சேர்ந்தவள். இன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த தருணம் என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. இந்த கனவை நனவாக்கிய இறைவனுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்த இயக்குநர் அபிலாஷ் வாரியர் மற்றும் புனர்த்தம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு மனமார்ந்த நன்றி. ‘யக்ஷிணி’ கதாபாத்திரத்தில் என்னை தேர்வு செய்து நம்பிக்கை வைத்ததற்கு அவர்களுக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இது மிகவும் சவாலான, கடினமான கதாபாத்திரமாக இருந்தது.

இந்தப் படத்திற்காக நாங்கள் அனைவரும் எங்கள் முழு உழைப்பையும், மனதையும் கொடுத்துள்ளோம். எனவே அனைவரும் திரையரங்கிற்கு வந்து இந்தப் படத்தை பார்த்து எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இது ஒரு ஹாரர் திரைப்படம். அதே நேரத்தில் மர்மமும், சுவாரஸ்யமும் நிறைந்த படமாக இருக்கும். சுமார் 300 ஆண்டுகள் பழமையான ஒரு வீட்டில் இந்தப் படம் படமாக்கப்பட்டது. அந்த மாதிரியான லொகேஷனில், இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பது எந்த நடிகைக்கும் கிடைக்கும் சிறந்த அறிமுகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

கேரளாவில் நடைபெற்ற பேட்டிகள் மற்றும் புரமோஷன்கள் எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தன. இப்போது சென்னை வந்து தமிழ் ரசிகர்களை சந்திப்பதும் எனக்கு இன்னொரு கனவு நனவானது போன்ற உணர்வை தருகிறது.

உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி. அனைவரும் திரையரங்கிற்கு வந்து ‘அரூபி’ திரைப்படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”

நடிகை சாக்ஷி படாலா பேசியதாவது:

“அனைவருக்கும் வணக்கம். இன்று எங்களை இங்கு அழைத்து, உங்கள் முன்னால் நிற்கவும், உங்களிடம் பேசவும் வாய்ப்பு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இது எங்களுக்கு மிகவும் பெரிய வாய்ப்பாகவும், மறக்க முடியாத தருணமாகவும் இருக்கிறது.

மொழி எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது. இருந்தாலும் மலையாள சினிமாவில் எனது முதல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நன்றியுணர்வையும் அளிக்கிறது. இந்தப் படத்தில் ஒரு அழகான பாடல் இருக்கிறது. அதன் அர்த்தம் முழுமையாக எனக்குப் புரியாவிட்டாலும், அதை கற்றுக்கொண்டு என்னால் முடிந்த சிறந்த முறையில் நடித்திருக்கிறேன்.

இப்போது கொஞ்சம் பதற்றமாக இருக்கிறேன். இருந்தாலும், இந்த வாய்ப்பை எனக்கு வழங்கி, மொழி ஒரு தடையாக இருந்தபோதும் என் மீது முழு நம்பிக்கை வைத்த இயக்குநர் அபிலாஷ் சாருக்கு மனமார்ந்த நன்றி. அவர் வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றியிருப்பேன் என்று நம்புகிறேன். அதேபோல் தயாரிப்பாளர் பிரதீப் சார் மற்றும் படக்குழுவில் உள்ள அனைவரும் எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கும் நன்றி.

இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவருக்கும், எங்களை அன்புடன் வரவேற்று, எங்கள் பேச்சைக் கேட்டு ஆதரவு அளித்ததற்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. நன்றி.”


நடிகர் சம்பத் ராம் பேசியதாவது..

“நான் 1998-ஆம் ஆண்டு சினிமாவுக்கு வந்தேன். ஆரம்பத்தில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தேன். அதன் பிறகு எனக்கு விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் பல நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. மலையாள இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் எனக்கு மிகப்பெரிய கதாபாத்திரங்களை வழங்கினர்.

அதில் முக்கியமாக ‘மாளிகாப்புரம்’ திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பான படமாக அமைந்தது. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழிலும் பல நண்பர்கள் அந்தப் படத்தில் என்னுடைய நடிப்பை பாராட்டி, என்னை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று கூறினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு வரும்படி தயாரிப்பாளர் என்னிடம் கேட்டபோது, என்னுடைய சொந்த படத்தின் பூஜை இருந்தபோதும் அதை முடித்துவிட்டு, இந்தப் படத்திற்காக இங்கு வந்துள்ளேன். அதுவே இந்தப் படத்தின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.

‘அரூபி’ படத்தின் டிரெய்லரை பார்த்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.மேலும், பத்திரிகையாளர்கள் அனைவரும் இந்தப் படக்குழுவிற்கு தங்களது முழு ஆதரவையும் வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.”

இசையமைப்பாளர் இயக்குநர் எஸ் எஸ் குமரன் பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். பொதுவாக மலையாள திரைப்படத் துறை இன்று உலகளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக கதைக்களம் சார்ந்த படங்களும், அவற்றின் வணிக வெற்றிகளும் இந்திய சினிமாவில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளன. குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்களை உருவாக்கி மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்று வருவது பாராட்டத்தக்க விஷயம்.

அந்த வரிசையில் ‘அரூபி’ திரைப்படமும் ஒரு முக்கியமான வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் மிகவும் அழகாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது. குறிப்பாக சவுண்ட் டிசைன், தொழில்நுட்பத் தரம் மற்றும் படத்தின் க்ராஃப்ட் அனைத்தும் சிறப்பாக இருந்தன. தயாரிப்பாளர் பேசும்போது, சினிமாவைப் பற்றிய தெளிவான புரிதலுடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. ரசிகர்களின் ரசனையை நன்றாக புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு படத்தை உருவாக்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

‘அரூபி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அந்த வெற்றியை நானும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நன்றி. வணக்கம்.”


நடிகர் அசோக் பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். மொழி என்பது ஒரு தடையல்ல; மனிதர்களை இணைக்கும் ஒரு பாலம். மலையாள மக்களிடம் இருக்கும் ஒற்றுமையும், ஒருவருக்கொருவர் கொடுக்கும் ஆதரவும் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு சிறந்த பண்பாகும்.

‘அரூபி’ படத்தின் இயக்குநர் அபிலாஷ் வாரியர் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். தயாரிப்பாளர் பிரதீப் ராஜ் போன்ற உறுதியான ஆதரவு அவருக்கு மிகப்பெரிய பலமாக இருந்துள்ளது.

நானும் சினிமாவில் பூஜ்ஜியத்திலிருந்து என் பயணத்தைத் தொடங்கியவன். ஒவ்வொரு படமும் அடுத்த வாய்ப்புக்கான அடித்தளமாக அமைகிறது. அதுபோல, இந்தப் படமும் இதில் பணியாற்றிய அனைவருக்கும் ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருக்கும்.

டிரெய்லரைப் பார்த்தபோது, ஒளிப்பதிவு, லைட்டிங், சவுண்ட் டிசைன், பின்னணி இசை உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் மிகவும் கவர்ந்தன. திரையில் மிகச் சிறந்த அனுபவத்தை இந்தப் படம் வழங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

மலையாள சினிமா இன்று தரமான கதைகளால் உலகளவில் கவனம் பெற்று வருகிறது. அதே வரிசையில் ‘அரூபி’ திரைப்படமும் ஒரு முக்கியமான வெற்றிப்படமாக அமையும் என்று நம்புகிறேன். ஹீரோ விஷாக் ரவி, நடிகைகள் நேஹா சாவ்லா, சாக்ஷி படாலா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். ‘அரூபி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி. வணக்கம்.”

 

நடிகர் விண்செண்ட் அசோகன் பேசியதாவது..,

‘அரூபி’ படக்குழுவினருக்கு, ஹீரோ, ஹீரோயின் மற்றும் அனைத்து நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

குறிப்பாக தயாரிப்பாளருக்கு என் பாராட்டுகள். புதிய திறமைகளையும், இளம் கலைஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் மிகவும் உயர்ந்தது. இன்று இங்கே இருக்கும் ஒவ்வொருவரும் ஒரு காலத்தில் புதுமுகங்களாகத்தான் இருந்தார்கள். அப்போது யாரோ ஒருவர் வாய்ப்பு கொடுத்ததால்தான் இன்று நாங்கள் இந்த இடத்தில் இருக்கிறோம். எனக்கும் அப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் இன்று அறியப்பட்ட நடிகராக இருந்திருக்க முடியாது.

தமிழ் மற்றும் மலையாள திரையுலகிற்கு பல ஆண்டுகளாக வலுவான உறவு இருந்து வருகிறது. அதனால் இந்தப் படத்திற்கும் தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். ‘அரூபி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி.”


விநியோகஸ்தர் ராகவா ராம் பேசியதாவது..,

“‘அரூபி’ திரைப்படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். புதிய திறமைகளை ஒன்றிணைத்து, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் மிகச் சிறந்த முயற்சியை தயாரிப்பாளர் மேற்கொண்டுள்ளார்.

இயக்குநர் இந்தப் படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கியுள்ளார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களது முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர்.

இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது. எனவே பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் ‘அரூபி’ திரைப்படத்திற்கு முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”

‘எக்கோ’ படத்தின் தயாரிப்பாளர் ஜெயராம் பேசியதாவது.,,

“அனைவருக்கும் வணக்கம். விஷாக் ரவி என்னுடைய நீண்ட நாள் நண்பர். ‘அரூபி’ படத்தின் ஆரம்ப கட்டத்திலிருந்தே இந்தப் படம் பற்றிய அப்டேட்களை அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டே இருந்தார்.

இந்தப் படத்திற்காக தயாரிப்பாளரும், இயக்குநரும், ஒட்டுமொத்த படக்குழுவினரும் மிகுந்த உழைப்பை செலுத்தியுள்ளனர். அவர்களின் அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் நிச்சயமாக நல்ல பலனைத் தரும் என்று நான் நம்புகிறேன்.

‘அரூபி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.”

இப்படத்தில் விஷாக் ரவி, நேஹா சாவ்லா, சாக்ஷி படாலா, ஜாய் மேத்யூ, சிந்து வர்மா, கண்ணன் சாகர், விஜுபால் மற்றும் கிரண் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை அபிலாஷ் வாரியர் இயக்கியுள்ளார். கதை, திரைக்கதை மற்றும் வசனங்களையும் அவரே எழுதியுள்ளார். பிரதீப் ராஜ் தயாரித்துள்ள இப்படத்தை புனர்த்தம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வினீத் வி.டி. படத்தொகுப்பை மேற்கொண்டுள்ள நிலையில், மகேஷ் ஸ்ரீதர் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். பாடல்களை ஹரி நாராயணன் எழுதியுள்ளார். மர்மம் மற்றும் த்ரில்லர் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப் படம் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

‘தி டார்க் ஹெவன்’ இசை வெளியீட்டு விழா

கோதை என்டர்டெயின்மெண்ட் மற்றும் எம் .எஸ் .ஸ்விஸ்  ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன் ‘. 
 
நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்களை எடுத்துக் கொண்டு  மர்மமான க்ரைம் திரில்லராக உருவாகி உள்ளது. 
‘ஐந்து கொலைகள் ஒரே விதத்தில் நடைபெற்றுள்ளன. ஆனால் எந்தத் தடயமுமில்லை’ என்கிற புள்ளியில் தொடங்குகிற கதை, பரபரப்பூட்டும்  திருப்பங்களுடன் படமாகியுள்ளது .
 
அறிமுக நாயகன் தொலைக்காட்சி புகழ் சித்து, தர்ஷிகா , ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார்.
 
ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன்.
 
சித்து பிரதான நாயகனாக நடித்துள்ள இப்படம்
‘எ சித்து இன்வெஸ்டிகேஷன்’என்கிற டேக் லைனுடன் ஜூலை 17 இல் தமிழ், ஆங்கிலம் ,தெலுங்கு ,ஹிந்திமொழிகளில் வெளியாகிறது.
 
இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது.
 
விழாவில் ட்ரெய்லர்,   பாடல்கள் திரையிடப்பட்டன.
 
விழாவின் தொடக்கத்தில் ஷரண், கோபால், மனோஜ் என மூன்று தயாரிப்பாளர்கள் பேசினார்கள்.
 
தயாரிப்பாளர் மனோஜ் பேசும்போது,
 
“இப்போது வரும் சில படங்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் ஓடுவதில்லை. சில படங்கள் ஓடிடியில்  ஓடுகின்றன. எல்லா நல்ல படங்களும் ஓடுவதில்லை. இது ஒரு ஆபத்தான சூழ்நிலை இல்லையா? ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதி பாதிக்கப்படக்கூடாது என்று சொல்வது போல் ஒரு நல்ல படம் ஓடாமல் இருக்கக் கூடாது .நல்ல படங்களை வரவேற்பதற்கு ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் கொண்டு போய் சேர்க்க வேண்டும் .நிறைய தரமற்ற படங்கள் வருகின்றன .ஆனால் ‘தி டார்க் ஹெவன்’ நிச்சயம் வெற்றி பெறக்கூடிய நம்பிக்கை கொண்ட படமாக இருக்கிறது. இன்று பல தயாரிப்பாளர்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
உப்புமா படங்களால்,
தரமற்ற படங்களால் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் பாதிப்பு அல்ல, பலருக்கும் பாதிப்பு.திறமையான  இயக்குநர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடம் கிடைக்காமல் இருக்கிறது.திரை உலகிற்குத் தயாரிப்பாளர் மிக முக்கியம். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய கிரைம் திரில்லராக  இருக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது ”என்றார்.
 
இன்னொரு தயாரிப்பாளர் ஷரண் பேசும்போது,  
 
” நான் இந்தப் படத்தில் நடிப்பதற்காகத் தான் வந்தேன் .ஆனால் பாலாஜி இந்தப் படத்திற்காக உழைப்பதையும் போராடுவதையும் நேரில் பார்த்தேன். அவர் சிரமத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று தோன்றியது .எனவே தயாரிப்பில் இணைந்து கொண்டேன்” என்றார்.
 
தயாரிப்பாளர் கோபால் பேசும் போது, 
 
“இந்தப் படம் தமிழ் சினிமாவில் சிறப்பான படம்.பாலாஜி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குநர்.அவர் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு எடுத்த படம் இது. சினிமாவில் அவருக்கான நல்ல இடம் கிடைக்கும்.இந்தப் படத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் யாரும் சோடை போகமாட்டார்கள் .இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.
 
நடிகர் அருள் டி சங்கர் பேசும்போது,
 
“இந்தப் படத்தில் நிறைய வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடந்தன. இதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் இப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் பாலாஜியுடன் எனக்கு இது நாலாவது படம் .அவர் இயக்கத்தில் இது இரண்டாவது படம் .சில காட்சிகளை  ரீஷூட் செய்தார். அவர் நினைத்தது சரியாக வர வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாக இருப்பார் .இந்தப் படத்தின் போது அவருக்கு தாங்க முடியாத மன அழுத்தம் இருந்தது . அந்த அழுத்தத்தில் அவர் காரை அடித்து அவரது காருக்கு சேதாரம் ஏற்பட்டது. ஆனால் அதை வெளியே  மற்றவரிடம் காட்டாமல் படப்பிடிப்பில் பரபரப்பாக இருப்பார். கிரிக்கெட் டீம் போல் அவரைச் சுற்றி எப்போதும் 11 பேர் கொண்ட ஒரு கூட்டம் இருக்கும். இந்தப் படத்தில் என்னுடன் நடித்தவர்கள் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
 
கேமராமேன் சிரிக்கவே மாட்டார்  காரியத்தில் கண்ணாக இருப்பார். இந்தப் படப்பிடிப்பில் எனக்கு உதவியாளராக ஒரு வயதானவரை அமர்த்தியிருந்தார்கள். அவர் செய்யும் காரியங்கள் வேடிக்கையாக இருக்கும்.அவை எல்லாமே சிரிப்பை வரவழைக்கும்” என்றார்.
 
நடிகர் ஜெயக்குமார் பேசும்போது 
 
“நடந்து போக கூட முடியாத இடத்துக்கெல்லாம் எங்களை அழைத்துச் சென்று படப்பிடிப்பு  நடத்தினார். அதுதான் அவர்களின் தனித்தன்மையாக இருந்தது.
 
ஒவ்வொரு காட்சியையும் மூன்று முறை எடுப்பார். சரியானது வரும் வரை விட மாட்டார். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்தார்.படப்பிடிப்பின் போது எப்போதும் அவருக்கு அவரது மனைவி பெரும் பக்கபலமாக இருந்தார் ‘என்றார்.
 
நடிகர் ,எழுத்தாளர் வேல ராமமூர்த்தி பேசும் போது,
 
“இன்று இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்கள் காலமானது ஒரு பெரிய இழப்பு.  கடந்த 11 ஆம் தேதி பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியின் போது என் அருகில் இருந்தார்.
 இப்போது இல்லை. 
அந்தத் துயரத்தோடு தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.
 
இந்தப் படத்தின் இயக்குநர் பாலாஜி ஒரு நாள்  திருநெல்வேலியில் இருந்து பேசுகிறேன் என்று பேசினார் .வழக்கமாக கதை சொல்லும் இயக்குநர்கள் சொல்வது போல்தான் இருந்தது. போனில் மிகவும் நம்பிக்கையுடன் தான் பேசினார்.நான் சற்று சந்தேகப்பட்டேன். நான் இந்தப் படம் எடுக்க முடியாமல் தோற்று விட்டால் நான் அமெரிக்கா சென்று விடுவேன் என்றார்.அவரது நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைத்து நான் நடிக்கச் சம்மதித்தேன்.
 
படப்பிடிப்பில் எல்லாரும் குடும்பம் போல் பழகினார்கள். பாலாஜியின் உழைப்புக்காகவே இந்தப் படம் ஓட வேண்டும். பெரிய பெரிய படங்களுக்குக் கூட இவ்வளவு லொகேஷன்களில் எடுத்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்குத் தேடித் தேடி  எடுத்தார்கள். நான் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ட்ரெய்லர் பார்க்கிற வரை எனக்கு இந்தப் படத்தின் மீது நம்பிக்கை இல்லை .இப்போது சொல்கிறேன் .இந்தப் படம் தோற்காது.அவர் அமெரிக்கா எல்லாம் செல்ல வேண்டியதில்லை” என்றார்.
 
இயக்குநர் மித்ரன் பேசும் போது ,
 
“இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும்போது  எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இவர்களின் கடின உழைப்பு ட்ரெய்லரில் தெரிகிறது. சினிமாவுக்கு எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவு சினிமா திருப்பிக் கொடுக்கும்.இது மாதிரி  திரைப்படங்களுக்கு ஊடகங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்” என்றார்.
 
நடிகர் புகழ் பேசும்போது,
 
 “இந்தப் படத்தின் நாயகன் சித்து எனக்கு ஒரு மாதமாகப் பழக்கம்.எல்லோரிடமும்  அன்பாகப் பழகுவார் .என்னை டார்லிங் என்று தான் கூப்பிடுவார். இந்தப் படத்தின் கான்செப்ட் பார்க்கும் போது அழகாக இருக்கிறது.இந்த படத்தில் பங்கெடுத்துள்ளவர்கள் பலரும் எனது நண்பர்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள் “என்றார்.
 
இசையமைப்பாளர் சக்தி பாலாஜி பேசும்போது,
 
“நான் இதற்கு முன்பு இசை அமைத்த உடன்பால் ,ஜாக்கி என்ற இரண்டு படங்களுக்குப்  பிறகு இசையமைக்கும் மூன்றாவது படம் இந்தப் படம் இது.
வேல ராமமூர்த்தி சார் போன்று நான் வியந்து பார்த்தவர்கள் என் படத்தில் இருப்பது மகிழ்ச்சி மட்டுமல்ல  பெருமையாகவும் இருக்கிறது. இந்தப் படத்தில் நான்கு பாடல்கள். நான்குமே சூழலுடன் தான் இருக்கிறது. என்னைச் சந்திக்க இயக்குநர் பாலாஜி வரும்போது எப்போதும் பத்து பேருடன் தான் வருவார். அந்த அளவிற்கு அந்த படக் குழு  ஒற்றுமையோடு இணைந்திருந்தார்கள்” என்றார்.
 
நடிகர் ரித்விகா பேசும்போது,
 
“இவ்வளவு தூரம் இந்தப் படம் வருமா என்று இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு 70% படத்தை எடுத்துவிட்டு வேண்டாம் என்று தூக்கிப்போட்டுவிட்டு மீண்டும் அதே படத்தை அதே லொகேஷன்களில் எடுத்து ரிலீஸ் வரை கொண்டு வந்து இருக்கிறதே ஒரு சாதனைதான் .ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கு இவர்களது விடாமுயற்சி தான் காரணம். படப்பிடிப்பு நடக்கும் போதெல்லாம் தினசரி ஏதாவது பிரச்சினை வரும்.புரிந்து கொள்வதில் சிக்கல் வரும்.மழை பெய்ய வேண்டும் என்று பார்த்தால் அன்று மழை வராது.மழை வேண்டாம் என்றால் மழை வரும்.
 
எப்படி இருந்தாலும் இயக்குநர் பாலாஜி ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருந்தார்.
அவர் இந்த வேலைகளை எல்லாம் பார்ப்பதற்கு மேனேஜர் வைத்துக் கொள்ள வேண்டும்.ஒருவரே எல்லா வேலையும் பார்த்துக் கொண்டு சிரமப்படக்கூடாது.
 
கதைகளை மட்டுமே நம்பி இன்று ஹபீபி ,நூறு சாமி போன்ற படங்கள் ஓடுகின்றன. அந்த வகையில் இந்தப் படமும் ஓடும் ஆதரவு கொடுங்கள்” என்றார்.
 
நடிகர் மைம் கோபி பேசும்போது,
 
“தம்பி சித்து இந்த அளவிற்கு இங்கே வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் நடித்திருப்பவர்கள் பலரும் எனக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள், தம்பிகள்,தங்கைகள் .சினிமா ஒரு அழகான துறை. சினிமாவில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.நம் நாட்டில் 140 கோடி பேர் இருக்கிறார்கள். எத்தனை பேரை கேமரா பதிவு செய்கிறது?சினிமாவில் நடிக்கும் இந்த குறைந்த அளவு மக்களைத்தான் பதிவு செய்கிறது .அப்படிப்பட்ட பெருமைக்குரியவர்கள் சினிமாவில் இருப்பவர்கள்.
 
சினிமா எல்லாரையும் மாற்றி விடும். ஏற்கும் பாத்திரத்தில் நல்லவனாக மட்டுமல்ல கெட்டவனாகவும் மாறி மாறி நடிக்கிறோம். எல்லா திறமைசாலிகளுக்கும் இடம் தருவது சினிமா தான். நீங்கள் எப்போதும் சந்தோஷத்தை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். துக்கத்தைத் தள்ளி வையுங்கள். மகிழ்ச்சியாக வாழலாம் “என்றார்.
 
இயக்குநர் பாலாஜி பேசும்போது,
 
“இயக்குநர் பாக்யராஜ்  சார் காலமானது வருத்தமாக இருக்கிறது. சினிமாவுக்கு வந்து நான் முதலில் அவரிடம் தான் கதை சொன்னேன்.
 
இந்தப் படத்தில் தயாரிப்பாளர் ஷரண் இஷ்டப்பட்டு வந்தார் .அவர் இல்லாவிட்டால் இந்தப் படம் இந்த அளவிற்கு வந்திருக்காது. அதேபோல் கோபால் அவர்கள், என் தம்பி மனோஜ் ஆகியோர் பெரிதும் பக்கபலமாக நின்றார்கள்.அது போல இந்தப் படத்திற்கு நிறைய பேர் எனக்குத் துணையாக நின்று இருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் நன்றி. சித்து ஒரு சிறப்பான  இடத்திற்கு இந்தப் படத்தின் மூலம் செல்வார். நான் திருநெல்வேலிக்காரன்,சென்னையைச் சேர்ந்தவன் அல்ல.என் படத்தில் தமிழ் பேசும் நாயகியாக தர்ஷிகா  வந்ததில் பெரிய மகிழ்ச்சி . அடுத்து ரித்விகா போன்று ஒவ்வொருவராக இந்தப் படத்திற்குள் வந்த பிறகு படம் வேறு மாதிரியாக மாறிவிட்டது .நான் சீன் பேப்பரைக் கொடுத்து விட்டால் அவர்கள் தானாக எல்லாம் செய்து விடுவார்கள் என்கிற அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
 
எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.எல்லாரையும் நான் மிகவும் சிரமப்படுத்தி இருக்கிறேன். இந்தப் படத்தின் மீதும் என் மீதும்  சிலருக்குச் சந்தேகம் இருந்தது .சந்தேகப்பட்டார்கள் .ஆனாலும் நான் இந்தப் படத்தை முடித்து விட்டேன்.மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறேன். “
என்றார்.
 
படத்தின் கதாநாயகன் சித்து பேசும்போது,
 
“எனக்குக் குருநாதர் போல இருப்பவர் மைம் கோபி அண்ணன்.  அவர் ஒரு நடிப்பு பயிற்சிப்பள்ளி வைத்திருக்கிறார் .அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். எனக்குப் பலரின் அறிமுகங்கள் கிடைத்தது அவரால்தான்.
 
இன்றைய காலகட்டத்தில் நாமே நம்மைப் பற்றி சொல்ல வேண்டும். மற்றவர்களிடம் நம்மை நாமே முன் வைக்க வேண்டும் .அப்படிப்பட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். ‘திருமணம்’ தொடரில் நடித்ததற்குப் பிறகு வந்துள்ள ஒரு பெரிய வாய்ப்பாக இந்தப் படத்தைப் பார்க்கிறேன். இந்த படத்தின் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்.
இந்தப் படத்தில் நடித்தவர்கள் மூலமும் நிறைய கற்றுக் கொண்டேன். உதாரணத்திற்கு இரவு மூன்று நான்கு மணிக்கு படப்பிடிப்பில் இருந்தால் கூட ஜெயக்குமார் சார் வந்து எங்களிடம் பேசி சிரிக்க வைப்பார் .எப்படி அவரால் முடிகிறது என்று நினைப்பேன்.இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று கற்றுக் கொண்டேன்.இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கம் வந்து பார்த்து ஆதரிக்க வேண்டுகிறேன் “என்றார்.
 
‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

கொடுங்கையூரில் கொலை! போலீஸ் விசாரணை!!

சென்னை தண்​டை​யார்​பேட்டை நேரு நகர் 11-வது தெருவை சேர்ந்​தவர் பிரபல ரவுடி பங்​காரு என்கிற அருண் (21). சி கேட்​டகிரி ரவுடி​யும் சரித்​திர பதிவேடு குற்​ற​வாளி​யு​மான அருண் மீது கொருக்​குப்​பேட்​டை, தண்​டை​யார்​பேட்டை உள்​ளிட்ட பல்​வேறு காவல் நிலை​யங்​களில் கொலை, கொலை முயற்​சி, அடிதடி உட்பட 10-க்கும் மேற்​பட்ட குற்ற வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளது.

கடந்த 6 மாதங்​களுக்கு முன்பு ரவுடி அருண் கொடுங்​கையூர் எழில் நகர் 9-வது தெரு​வில் உள்ள குடிசை மாற்று வாரிய குடி​யிருப்​பில் தாயுடன் குடியேறி​னார். இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் இரவு சுமார் 10 மணி​யள​வில் ரவுடி அருண் தனது காதலி தர்​ஷினி உடன் வீட்​டில் பேசிக் கொண்​டிருந்​தார்.

அப்​போது இருசக்கர வாக​னத்​தில் வந்த 6 பேர் கொண்ட கும்​பல் வீட்​டினுள் புகுந்து அருணை காதலி கண்​முன்னே வெட்டி கொலை செய்து விட்டு தப்​பிச் சென்​றனர். இதில் ரவுடி அருண் ரத்த வெள்​ளத்​தில் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.‌ இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காதலி தர்​ஷினி கதறி அழுததைப் பார்த்த அக்​கம் பக்​கத்​தினர் ஓடிவந்து அருணை மீட்டு ஸ்டான்லி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

இந்த சம்​பவம் குறித்து தகவல் அறிந்த கொடுங்​கையூர் போலீஸார் மருத்​து​வ​மனைக்கு விரைந்து சென்று கொலை​யான ரவுடி அருண் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.‌ ரவுடி அருண் கொலைக்​கான காரணம் என்ன, அவரை கொலை செய்தவர்கள் யார், முன்விரோதம் காரண​மாக இந்த கொலை நடை​பெற்​றதா என பல கோணங்​களில் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். மேலும் கொலை செய்த 6 பேர் கொண்ட கும்​பலை போலீ​ஸார் தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.

 

‘லவ் ஓ லவ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

மகேஷ் ராஜேந்திரன் எழுதி, இயக்கி, தினேஷ் ராஜ் தயாரித்துள்ள லவ் ஓ லவ் படத்தை Zinema Media & Entertainment நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. படத்திற்கு பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். Wayne Pavey, Pradeep PJ, FOXn ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ள நிலையில், சண்டைக் காட்சிகளை அபிஷேக் ஸ்ரீனிவாஸ் வடிவமைத்துள்ளார். பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும்

இப்படத்தின் கலைஞர்கள் கலந்து கொண்டு பேசியதாவது :

தயாரிப்பாளர் தினேஷ் பேசும்போது,

தனஞ்செயன் சாருடன் சேர்ந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி.

கடந்த 21/2 ஆண்டு காலமாக தூக்கமில்லாமல் ஆத்மார்த்தமாக உழைத்திருக்கிறார். நீண்ட நாட்களாக சரியான நாயகனை தேடி பவேஷ் கிடைத்தார்.

நாயகி தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார். யூடியூப்-ல் நடனம் மூலம் பிரபலமானவர்.

இசையமைப்பாளருக்கு இது முதல் படம். ஆனால், பரிமளா & கோ முதலில் வெளியாகி விட்டது.

இப்படத்தின் கதை அனைவருக்கும் நெருக்கமாக இருக்கும். கருத்தசொல்ல கூடிய படமாகவும் அதே சமயம் நகைச்சுவையுடனும் இருக்கும் என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது,

சிறிய அரங்கில் பார்ப்பதை விட கமலா போன்ற பெரிய திரையில் பார்க்கும் போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

திங்க் மியூசிக் அவர்களுக்கும் நன்றி. ஒரு படைப்பு என்பது கூட்டு முயற்சி. அதற்கு திங்க் மியூசிக் மிகவும் உறுதுணையாக இருந்தது.

இப்படம் விரைவாக வெளியாக அமேசான் தான் காரணம். அவர்களின் அழுத்தத்தால் ஜூலை 10 அன்று வெளியாக இரவு பகலாக வேலை நடந்து கொண்டிருக்கிறது.

நல்ல திரைப்படங்களை மக்கள் கொண்டாட தவறியதே இல்லை. அதற்கு சிறந்த உதாரணம் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் நூறு சாமி படம் தான்.

சசி சார் 10 படங்கள் தான் கொடுத்திருக்குறீர்கள், இன்னும் 100 படம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். நூறு சாமி படம் இந்த வருடத்தின் சிறந்த படமாக பேசுப்படும்.

இந்த படத்திற்கு பிறகு வனிதா பெரிய வலம் வருவார்.

நடிகை நாக துர்கா யூடியூப்-ஐ நிறுத்தி விடுங்கள். சுபராசு சார் பணத்தில் எந்த சமரசமும் இல்லாமல் இந்த படத்தை வெளிய கொண்டு வரோம் என்று முன் பணம் கொடுத்தார்.

ஆரம்ப காலத்தில் தனுஷ் சாரை பார்த்தது போல பவேஷை பார்த்ததும் தோன்றியது. இன்னும் 2 படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். பெரிய நாயகனாக வருவார். ஆனால் தொடர்ந்து வெற்றி பெற வேண்டுமென்றால் இதே பணிவோடு இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்றார்.

தயாரிப்பாளர் தாணு பேசும்போது,

20 கோடி செலவாகும் பட்ஜெட்டை 10 கோடியாக்கும் தனஞ்செயனுடன் கூட்டு வைத்திருக்கிறீர்கள்.

காதல் எப்போதும் மாறாது, அந்த காதலை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.

நடிகர் சித்ரா லட்சுமணன் பேசும்போது,

தனஞ்செயன் பவிஷை பார்த்து எவ்வளவு வேண்டுமானாலும் சம்பளம் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். நாக துர்காவிடம் யூடியூப் பக்கம் போகாதீர்கள் என்றார். அதை கேட்காதீர்கள். அது தான் உங்களை இந்த இடத்தில் உட்கார வைத்திருக்கிறது.

கஸ்தூரி ராஜா பேரனை நாயகனாக்கி விட்டார். பவேஷ் காதல் காட்சிகளிலும் உணர்வு பூர்வமான காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார் என்றார்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் கதிரேசன் பேசும்போது,

பாடலாக இருந்தாலும் பின்னணி இசையாக இருந்தாலும் எந்த இடத்தில் என்ன மாதிரியான பாதிப்பு கொடுத்தால் படம் வெற்றியாகும் என்பதை தெரிந்து கொண்டு இசையமைத்திருக்கும் Wayne Pavey, Pradeep PJ, FOXn இருவருக்கும் பாராட்டுகள் என்றார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் துணை தலைவர் கமலகண்ணன் பேசும்போது

ஓடிடி இன்னும் 2 மாதத்தில் முதல்வரை வைத்து துவக்கி வைப்போம். ஆகவே தைரியமாக படம் எடுங்கள்.

பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்திருக்கிறோம். சினிமாத் துறை இதன் பிறகு நன்றாக இருக்கும். லவ் ஓ லவ் படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.

இயக்குனர் ஆர் வி உதயகுமார் பேசும்போது,

புதிதாக வருபவர்களுக்கு பல விஷயங்கள் தெரிவதில்லை. ஆனால், விஷயம் தெரிந்த தனஞ்செயனை தேர்ந்தெடுத்து உடன் வைத்திருக்குறீர்கள். அவர் வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிகளையும் கூறுவார்.

இந்த படத்தின் ட்ரைலர் பார்த்ததும் அதிர்ந்து விட்டேன். யார் இந்த பையன் பிரமாதமாக நடித்திருக்கிறான் என்று கேட்டேன். கஸ்தூரி ராஜா பேரன் என்று தெரிந்ததும் மகிழ்ச்சி அடைந்தேன்.

ஒரு மகனை இயக்குனராகவும், இன்னொரு மகனை நடிகராகவும் உருவாக்கியுள்ளார் கஸ்தூரி ராஜா. தன்னுடைய பெரியப்பாவிற்கு பவிஷ் நல்ல பெயர் வாங்கி கொடுக்க வேண்டும்.

இசையமைப்பாளர் தீனா பேசும்போது,

6 நாட்கள் கோவாவில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அங்கு இந்த படத்தை பற்றி தனஞ்செயனும் இயக்குனர் சசியும் கூறினார்கள்.

23 வருடத்திற்கு முன்பு திருடா திருடி படத்தில் தனுஷை பார்த்தது போல இன்று பவேஷை பார்க்கிறேன். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.

இயக்குனர் கஸ்தூரி ராஜா பேசும்போது,

பவிஷ் அம்மா இன்று வர இயவில்லை, அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். தனுஷின் பிரதி தான் பவேஷ்.

உன்னுடைய இயக்குனரோ தயாரிப்பாளரோ அவர்கள் சொன்ன நேரத்திற்கு சென்று விடு என்று தனுஷிடம் கூறினேன். இன்று வரை அதை பின்பற்றி கொண்டிருக்கிறார். அதே போல் பவேஷ் தன்னை தானே வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்போதெல்லாம் நான் யாருக்கும் அறிவுரை சொல்வது கிடையாது.

என்னுடைய வீட்டில் பவேஷ் ஸ்பெஷல், என் மனைவிக்கு செல்வராகவன் ஸ்பெஷல். எனக்கு பவேஷ் அம்மா ஸ்பெஷல். 3 பாடல்களிலேயே வியக்க வைத்து விட்டான் பவேஷ்.

தயாரிப்பாளர் மற்றும் தனஞ்செயன் இருவரும் பவேஷ் பற்றி பெருமையாக சொல்கிறார்கள்.

இயக்குனர் ஆர்.கே. செல்வமணி பேசும்போது,

ரோஜாவை அறிமுகப்படுத்தியது செல்வமணி என்பது மாறி ரோஜாவின் ராஜா செல்வமணி என்ற பெயர் வந்துவிட்டது. அது தான் நடிகருக்கு இருக்கும் சிறப்பு.

லவ் ஓ லவ் பெயருக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. இந்த கதையை 1 1/2 மணி நேரம் கதை கூறினார். கேட்கும் போது நேரில் பார்ப்பது போல் இருந்தது.

தனஞ்செயன் வாயால் நல்ல பெயர் எடுப்பது கஷ்டம். அதை இந்த படத்தின் இயக்குனர் மகேஷ் வாங்கியிருக்கிறார்.

அன்று படம் வெளியாவது தயாரிப்பாளர் கட்டுப்பாட்டில் இருந்தது, பிறகு நடிகரிடம் இருந்தது. இப்போது ஓடிடி -யிடம் இருக்கிறது. இங்கு இருக்கும் ஓடிடி அலுவலகம் மும்பையில் இருக்கிறது.

200 படங்கள் இலவசமாக கொடுத்தால் கூட வாங்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. வாரந்தோறும் 50 படங்களாவது ஓடிடியில் வெளியானால் நன்றாக இருக்கும்.

ரஜினியிடம் இருக்கும் தன்னம்பிக்கை முதல் படத்திலேயே தனுஷுக்கு இருந்தது. அதே நம்பிக்கை இன்று பவிஷிடம் பார்க்க முடிகிறது என்றார்.

இயக்குனர் சசி பேசும்போது,

பரிமளா & கோ படத்திலேயே பாலாஜி ஸ்ரீராமின் இசையை பார்த்தேன். ஒரு பாடலே அந்த படத்தை அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றது. அதே போல இந்த படமும் பெரிய வெற்றி பெறும் என்றார்.

நடிகர் ரவி மரியா பேசும்போது,

மகேஷ் கதை கூறினால், உடனே படப்பிடிப்பிற்கு சென்று விடலாம் என்று தோன்றும்.

தனஞ்செயன் சாருடன் உருவான தண்டட்டி படம் பெரிய பெயர் வாங்கியது எல்லோருக்கும் தெரியும் என்றார்.

சுப்பிரமணிய சிவா பேசும்போது,

செல்வமணி அண்ணன் பேசியது ரொம்ப முக்கியமானது. பவிஷ் அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கருப்பண்ண சாமி மூலம் தாத்தா எப்படி வெற்றி அடைந்தாரோ அதே போல பவிஷ் வர வேண்டும். எல்லா காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்.

எம் ஜி ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித், சிம்பு – தனுஷ் வரிசையில் பவிஷ் இடம் பெறுவார். ஆனால், அவருக்கு இணையாக யார் வருவார் என்று தெரியவில்லை என்றார்.

லக்ஷ்மணன் பேசும்போது,

6 வருடங்களுக்கு முன்பே இந்த கதையை மகேஷ் கூறும் போது இந்த படம் நிச்சயம் வெற்றியடையும் என்று கூறினேன். மகேஷ் மற்றும் பவிஷ் இருவரும் அழகாக இருக்கிறீர்கள் என்றார்.

இசையமைப்பாளர்கள் பாக்ஷன் பேசும்போது,

இந்த வாய்ப்பை கொடுத்த தனஞ்செயன் சார், மகேஷ் மற்றும் அனைவருக்கும் நன்றி.

இந்த படத்தின் பாடல்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

நடிகை நாக துர்கா பேசும்போது,

டீஸருக்கு நீங்க கொடுத்த ஆதரவிற்கு நன்றி. அதே போல படத்திற்கும் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.

நடிகர் பவிஷ் பேசும்போது,

எந்த மேடையாக இருந்தாலும், எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் தனுஷ் சாருக்கு தான் முதலில் நன்றி சொல்வேன்.

தனஞ்செயன் மற்றும் தினேஷ் சாருக்கு நன்றி. மகேஷ் சார் கதை கூறுவதில் சிறந்தவர்.

பிரதீப் மற்றும் இருவரும் சேர்ந்து பாக்சன் என்ற பெயரில் இசையமைத்திருக்கிறார்கள். சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.

நாக துர்கா பயிற்சி இல்லாமல் பார்த்ததுமே நடனம் ஆடி வியக்க வைத்தார் என்றார்.

சண்டை பயிற்சி இயக்குனர் என்னுடைய பணியை எளிமையாக்கினார் என்றார்.

நடிகர் அஜய் திஷான் பேசும்போது,

லவ் ஓ லவ் ட்ரைலர் நன்றாக வந்துருக்கிறது. பவிஷ், நாக துர்கா, நன்றாக நடித்திருக்கிறார்கள். படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.

இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன் பேசும்போது,

இங்கு வந்த அனைவருக்கும் நன்றி. 1 1/2 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்ற முடியுமென்றால் கடவுளால் தான் முடியும். அந்த வகையில் தனஞ்செயன் சாருக்கும் தினேஷ் சாருக்கும் நன்றி.

கலை இயக்குனர் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். நாக துர்கா நன்றாக நடித்திருந்தீர்கள். சசி சார் நூறு சாமி என்ற சிறப்பான படைப்பை கொடுத்திருக்கிறார்.

இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.

கடவுளுக்கு நன்றி என்றார்.

நடிகை வனிதா விஜயகுமார் பேசும்போது,

நான் சினிமாவை விட்டு சென்ற பிறகும் மீண்டும் என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள். என்னுடைய கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். எனக்கும் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது.

இன்றைய காலத்திற்கு தேவையான தலைப்பு லவ் ஓ லவ். அனைவரும் திரையரங்கம் சென்று பாருங்கள்.

நேர்மையான விமர்சனம் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

 

லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி படத்தின் துவக்க விழா

Kaviya Productions மற்றும் S2 Movies இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் பூஜை விழா இன்று (ஜூன் 26) கோலாகலமாக நடைபெற்றது.

யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலக்ஷ்மி, யாஷிகா ஆனந்த், YGM மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், அஸ்மிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை கே.ஆர். செந்தில்நாதன் எழுதி இயக்குகிறார். பி. மஞ்சுநாத் தயாரிக்கும் இப்படத்தை S2 Movies இணைந்து தயாரிக்கிறது. அச்சு ராஜாமணி இசையமைக்க, ஷிஹாப் பட்டாம்பி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.பி. அகமது படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ரெம்பன் பால்ராஜ் கலை இயக்குநராகவும், ஜாக்கி பிரபு சண்டைப் பயிற்சி இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். நிர்வாக தயாரிப்பாளராக சேலம் சரவணன் செயல்படுகிறார்.

பட விழாவில் இயக்குனர் கே.ஆர் செந்தில்நாதன் பேசியது.

அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது வணக்கம். இன்று முதல் நாளாகவே எங்கள் படத்தின் பூஜை விழாவுடன் படப்பிடிப்பைத் தொடங்கியிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்தப் படத்தை தயாரிப்பாளர் திரு. மஞ்சுநாத் தயாரிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக ரச்சிதா மேடம், யாஷிகா மேடம் மற்றும் இங்கு வருகை தந்துள்ள அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றி. அனைவரின் ஆதரவுடன் இந்தப் படம் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்.


இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.வி. உதயகுமார், நடிகையும் அரசியல்வாதியுமான YGM மதுவந்தி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


நடிகர் மெல்வின் பேசியதாவது..,

“இந்தப் படம் விளையாட்டை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகிறது. இயக்குநர் கதையை சொன்னபோதே அதற்காக நாங்கள் தயாராக ஆரம்பித்துவிட்டோம். கண்டிப்பாக இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். படம் வெளியான பிறகு மற்ற விஷயங்களை விரிவாகப் பேசலாம். நன்றி.


நடிகர் அமித் பார்கவ் பேசியதாவது..

“அனைவருக்கும் வணக்கம். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். ஒரு திரைப்படம் உருவாவது என்பது மிகவும் நீண்ட பயணம். ஒரு கதை எழுதுவதிலிருந்து அதை திரைப்படமாக உருவாக்கி, மக்களிடம் கொண்டு சேர்க்கும் வரை எத்தனையோ சவால்களையும், தடைகளையும் கடக்க வேண்டியுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டரைப் பார்த்தாலே அந்தப் பயணத்தின் அருமை புரியும். ஒரு கதையை உருவாக்கி, போட்டோஷூட் நடத்தி, இன்று பூஜை விழா வரை கொண்டு வந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல. இதுவே ஒரு திரைப்படத்தின் மிக முக்கியமான கட்டமாக நான் கருதுகிறேன்.

இயக்குநர் செந்தில்நாதன் சாரின் பார்வையும், இந்தப் படத்தின் கதையும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்று நம்புகிறேன். அனைவரும் இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”

வழக்கறிஞர் சிவராமகிருஷ்ணன் பேசியதாவது..,

“இந்த நிகழ்வில் என்னை அழைத்த இயக்குநர் கே.ஆர். செந்தில்நாதன் அவர்களுக்கும், தயாரிப்பாளர் மஞ்சுநாத் அவர்களுக்கும், சரவணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எந்த ஒரு திரைப்படமும் வெற்றி பெறுவதற்கு பத்திரிகை மற்றும் ஊடகங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. சகோதரர்களாகிய நீங்கள் அனைவரும் உங்கள் முழு ஆதரவையும் இந்தப் படத்திற்கு வழங்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படம் அனைவரிடமும் சென்று சேர உங்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

ஒரு திரைப்படத்தைத் தொடங்கி, அதை உருவாக்கி, திரையரங்குகளுக்கு கொண்டு வருவது எவ்வளவு கடினமான பயணம் என்பதை ஒரு தயாரிப்பாளராக நானும் நன்கு அறிவேன். அந்தப் பெரிய முயற்சியை மேற்கொண்டுள்ள தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் இந்தப் படத்திற்கு தங்களது முழு ஆதரவை வழங்க வேண்டும். ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ மாபெரும் வெற்றி பெற்று, நூறாவது நாள் வெற்றி விழாவைக் கொண்டாட என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி. வணக்கம்.”

 


இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி பேசியதாவது..,

“இங்கு கலந்து கொண்டுள்ள அனைத்து கலைஞர்களுக்கும், விஜயரத்னம் சாருக்கும், செந்தில் சாருக்கும் எனது வாழ்த்துகள். செந்தில் சாரை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். அவருடைய அர்ப்பணிப்பும், உழைப்பும் எனக்கு நன்றாகத் தெரியும். இந்தப் படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அனைவருக்கும் நன்றி.”

நடிகை மதுவந்தி பேசியதாவது.., “அனைவருக்கும் வணக்கம். மேடையில் அமர்ந்திருக்கும் தயாரிப்பாளர் மஞ்சுநாத் சார், இயக்குநர் செந்தில்நாதன் சார், இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி மற்றும் இந்தப் படத்தின் அனைத்து கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்தப் படத்தில் நானும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகிறேன். போஸ்டரில் என் புகைப்படம் இல்லையே என்று யாரும் கேட்க வேண்டாம், ஆனால் இந்தப் படத்தில் நான் இருப்பது உறுதி.இது வித்தியாசமான களத்தில் உருவாகும் ஒரு திரைப்படம். குறிப்பாக, இன்றைய தமிழ் சினிமாவுக்கு மிகவும் தேவையான விளையாட்டை மையமாகக் கொண்ட ஆரோக்கியமான கதைக்களத்துடன் இந்தப் படம் உருவாகி வருகிறது. இப்படிப்பட்ட ஒரு நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ள படக்குழுவினருக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

இந்தப் பூஜை விழாவோடு மட்டும் இல்லாமல், இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்று இதே உற்சாகத்துடன் வெற்றி விழாவையும் கொண்டாடுவோம் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.”

 

நடிகை அஸ்மிதா பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ என்ற தலைப்பே மிகவும் வித்தியாசமாகவும், அனைவரையும் கவரக்கூடியதாகவும் இருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் செந்தில்நாதன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

மேலும், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தக் கதையும், என்னுடைய கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.”


நடிகை யாஷிகாஆனந்த் பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கிய இயக்குநர் செந்தில்நாதன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை அளித்ததற்காக தயாரிப்பாளருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘டி.டி. நெக்ஸ்ட் லெவல்’ படத்திற்குப் பிறகு, ஒரு நல்ல கதைக்காக காத்திருந்தேன். அப்போது இந்தக் கதை என்னிடம் வந்தது. இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டு எங்களை வாழ்த்த வந்துள்ள சக நடிகர்கள், சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இந்தப் படத்தை விரைவில் திரையரங்குகளில் உங்களுடன் சேர்ந்து பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். விரைவில் திரையரங்குகளில் அனைவரையும் சந்திப்போம். நன்றி.”


நடிகை ரச்சிதா பேசியதாவது..,

“பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம். இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்கு மிக்க நன்றி. ஏற்கனவே பலரும் கூறியதுபோல், ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது மிகவும் கடினமான பயணம். ஒரு கதையை உருவாக்கும் கட்டத்திலிருந்தே பல சவால்கள் தொடங்கிவிடுகின்றன. இயக்குநர் செந்தில்நாதன் சாருடன் கதையைப் பற்றி பேசும்போதெல்லாம், இரண்டு வாரங்களுக்கு முன் பேசிய விஷயங்கள் மீண்டும் மாறியிருக்கும். கதை இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பல மாற்றங்கள், விவாதங்கள் நடைபெறும்.

இந்தப் படம் செந்தில்நாதன் சாரின் கனவுப் படைப்பு என்று சொல்லலாம். ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு கனவுத் திரைப்படம் இருக்கும்; அதுபோல இந்தப் படம் அவருக்கு மிகவும் முக்கியமானது. அந்தக் கனவு முழுமையாக நிறைவேற வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறது. திரைப்படம் உருவாகும் பயணத்தில் பல சிரமங்களும், எதிர்பாராத சவால்களும் வந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து இன்று இந்தப் படத்தின் பூஜை விழா நடைபெறுகிறது. இனி இந்தப் படம் எந்தத் தடையும் இல்லாமல் வெற்றிகரமாக நிறைவடைய வேண்டும் என்பதே என்னுடைய மனமார்ந்த விருப்பம்.

போஸ்டரைப் பார்த்தவுடன் நான் ‘பி.டி. மாஸ்டர்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பதை படத்தில் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும். அனைவருக்கும் நன்றி.”

 


இயக்குநர் சங்கம் சார்பில் R V உதயகுமார் பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ என்ற தலைப்பே மிகவும் வித்தியாசமாகவும், வண்ணமயமாகவும் இருக்கிறது. இந்த மேடையைப் பார்த்தாலே அந்த உற்சாகம் தெரிகிறது. இன்று இங்கு வந்தவுடன் எனது அத்தனை சோர்வும் மறைந்துவிட்டது.

இயக்குநர் செந்தில்நாதன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இன்றைய தமிழ் சினிமாவுக்கு மிகவும் தேவையான விளையாட்டை மையமாகக் கொண்ட ஒரு படத்தை உருவாக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர் அச்சு, தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தப் படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு விருந்தாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படத்தை இவ்வளவு பிரமாண்டமாக பூஜையுடன் தொடங்குவதே பெரிய விஷயம். ஒரு திரைப்படத்தை ஆரம்பிப்பதில் இருந்து அதை முடித்து, திரையரங்குகளுக்கு கொண்டு வரும் வரை எண்ணற்ற போராட்டங்களும் சவால்களும் இருக்கின்றன. படப்பிடிப்பில் வரும் சவால்களைவிட, அந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. ஒரு திரைப்படத்தின் வெற்றியை அதன் கதை, நடிகர்களின் நடிப்பு, ஒளிப்பதிவு அல்லது இசை மட்டுமே தீர்மானிப்பதில்லை. அந்தப் படத்தை சரியான முறையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதும் மிக முக்கியம். அதற்கு நல்ல உள்ளடக்கம் (Content) மட்டுமல்ல, நல்ல நேரமும் (Timing) அவசியம்.

இந்த இரண்டும் சிறப்பாக அமையும்போது தான் ஒரு திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெறும். ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படமும் அந்த வெற்றியைப் பெற்று ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.”

 


வழக்கறிஞர் தெய்வ சிகாமணி பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். இயக்குநர் செந்தில்நாதன் சாரை எனக்கு பல காலமாக தெரியும். அவர் பல வெற்றிப் படங்களில் பணியாற்றியிருக்கிறார். கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தப் படத்திற்காக அவர் எடுத்த முயற்சியும், ஓடிய ஓட்டமும், பட்ட கஷ்டங்களும் எனக்கு நன்றாகத் தெரியும்.

இந்த ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் அவருடைய கனவுத் திரைப்படம். அந்தக் கனவை நனவாக்க அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார். கடந்த ஏழு ஆண்டுகள் ஓடியவர், இந்தப் படத்தின் மூலம் வெற்றியாளராக மாறி, பல வெற்றிகளையும் விருதுகளையும் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தப் படத்திற்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் தங்களது முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”

 


தயாரிப்பாளர், நடிகர் மஞ்சுநாத் பேசியதாவது..,

இந்த விழாவிற்கு வருகை தந்து, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்து, அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி


விளையாட்டு பின்னணியில் நகைச்சுவையும், குடும்ப பொழுதுபோக்கும் கலந்த வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகவுள்ள ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் குறித்து விரைவில் மேலும் பல அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


வழக்கறிஞர் தெய்வ சிகாமணி பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். இயக்குநர் செந்தில்நாதன் சாரை எனக்கு பல காலமாக தெரியும். அவர் பல வெற்றிப் படங்களில் பணியாற்றியிருக்கிறார். கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தப் படத்திற்காக அவர் எடுத்த முயற்சியும், ஓடிய ஓட்டமும், பட்ட கஷ்டங்களும் எனக்கு நன்றாகத் தெரியும்.

இந்த ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் அவருடைய கனவுத் திரைப்படம். அந்தக் கனவை நனவாக்க அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார். கடந்த ஏழு ஆண்டுகள் ஓடியவர், இந்தப் படத்தின் மூலம் வெற்றியாளராக மாறி, பல வெற்றிகளையும் விருதுகளையும் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தப் படத்திற்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் தங்களது முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”


விளையாட்டு பின்னணியில் நகைச்சுவையும், குடும்ப பொழுதுபோக்கும் கலந்த வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகவுள்ள ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் குறித்து விரைவில் மேலும் பல அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

‘நடமாடும் மேமோகிராம்’ வாகனச் சேவை!

சென்னை:
 
மருத்துவச் சேவையில் தமிழ்நாட்டில் முன்னணி வகிக்கும் சென்னை காவேரி மருத்துவமனை, லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை KVG அறக்கட்டளை மற்றும் லயன்ஸ் மாவட்டம் 3241C ஆகியவற்றுடன் இணைந்து, தனது சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் ‘நடமாடும் மேமோகிராம்’ வாகனச் சேவையைத் தொடங்கியுள்ளது. மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான வழக்கமான மேமோகிராம் பரிசோதனைகளைச் செய்ய, மருத்துவமனை அல்லது பரிசோதனை மையங்களுக்குச் செல்வதில் சிரமப்படும் பெண்களுக்கு இப்பரிசோதனையை எளிதாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த நடமாடும் வாகனத்தின் மூலம் பரிசோதனைச் சேவைகளை நேரடியாகப் பொதுமக்களின் வசிப்பிடத்திற்கே கொண்டு செல்வது, ஆரம்ப நிலையிலேயே பாதிப்பைக் கண்டறியவும், மார்பக ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பெரிதும் உதவும்.
 
நவீன மேமோகிராம் சாதனம் பொருத்தப்பட்ட இந்த நடமாடும் மருத்துவ ஊர்தியை, தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன்அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
 
இந்த நடமாடும் மேமோகிராம் வாகனம், மார்பகப் புற்றுக்கட்டிகளைக் கண்டறிவதற்கான டிஜிட்டல் மேமோகிராபி பரிசோதனையை மிகவும் வசதியாகவும் எளிதாகவும் வழங்கும் வசதிகளைக் கொண்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகள், பணியிடங்கள், சமுதாயக் கூடங்கள் மற்றும் புறநகர், நகர்ப்புறங்களின் பல்வேறு இடங்களுக்கு நேரடியாகச் சென்று இவ்வாகனம் சேவை வழங்கும். இது, பெண்கள் தங்களது ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும்.
 
மார்பகப் புற்றுநோய் கண்டறிதலுக்கான டிஜிட்டல் மேமோகிராபியுடன், இந்த நடமாடும் வாகனம் ‘பேப் ஸ்மியர்’ (Pap smear) மற்றும் ‘கோல்போஸ்கோபி’ (Colposcopy) பரிசோதனை வசதிகளையும் வழங்கும். இதனால், பெண்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் நோய் தடுப்புப் பரிசோதனைகளுக்கான ஒரே இடமாக (All-in-one wellness unit) இந்த வாகனம் செயல்படும். பேப் ஸ்மியர் பரிசோதனை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அல்லது அதற்கான ஆரம்பகட்ட மாறுபாடுகளைக் கண்டறிய உதவுகிறது. மேலும், கூடுதல் பரிசோதனை தேவைப்படும் பட்சத்தில் கோல்போஸ்கோபி மூலம் கர்ப்பப்பை வாய் பகுதியை மிக நெருக்கமாகப் பரிசோதிக்க முடியும். இந்த வாகனத்தில் காவேரி மருத்துவமனையின் பெண் மருத்துவர்கள் மற்றும் கதிரியக்க வல்லுநர்கள் (Radiologists) உடன் இருப்பார்கள். அவர்கள் பெண்களின் பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்து, தேவையான ஆலோசனைகளையும் அடுத்தகட்ட வழிகாட்டுதல்களையும் வழங்குவர்.
 
இந்தச் சேவையின் தொடக்க விழாவில் பேசிய லயன்ஸ் சர்வதேச அமைப்பின் 3241C மாவட்ட ஆளுநர், PMJF லயன் எஸ். போஸ், “தமிழ்நாட்டில் பெண்களைப் பாதிக்கும் பொதுவான புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் தொடர்ந்து முதன்மையாக உள்ளது. விழிப்புணர்வு இல்லாமை மற்றும் போதிய மருத்துவ வசதிகள் தங்களுக்கு அருகில் கிடைக்காத காரணத்தால், பல பெண்கள் சரியான நேரத்தில் இதற்கான பரிசோதனையைச் செய்துகொள்வதில்லை. இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்கள், புறநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் வசிக்கும் இடத்திற்கு மிக அருகிலேயே இப்பரிசோதனை வசதியைக் கொண்டு சேர்ப்பதே எங்களது நோக்கமாகும். தமிழ்நாட்டின் முன்னணி மருத்துவக் குழுமங்களில் ஒன்றான காவேரி மருத்துவமனையுடன் இணைந்து இந்த சமூக நலத் திட்டத்தில் பங்கேற்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.
 
மார்பகப் புற்றுநோயின் பரவலான பாதிப்பு குறித்துப் பேசிய மூத்த புற்றுநோய் அறுவைசிகிச்சை மற்றும் ரோபோடிக் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் சுஜய் சுசிகர், “மாநில புற்றுநோய் பதிவேட்டின் தரவுகள், பெண்களிடையே மார்பகப் புற்றுநோயே முதன்மையான பாதிப்பாக இருப்பதைக் காட்டுகின்றன. இது, சரியான நேரத்தில் பரிசோதனை செய்து, நோயை முன்கூட்டியே கண்டறிய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. புற்றுநோய் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள நவீன மருத்துவ முன்னேற்றங்கள் காரணமாக, மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முறையான சிகிச்சை மூலம் முழுமையாகக் குணப்படுத்த முடியும். ஆனால், பரிசோதனை வசதிகளை எளிதில் அணுக இயலாததாலும், விழிப்புணர்வின்மையாலும் பல பெண்கள் பரிசோதனையைத் தள்ளிப்போடுகின்றனர். இந்த நடமாடும் மேமோகிராம் வாகனம் மூலம், பரிசோதனை வசதியை அவர்களின் வாழ்விடங்களுக்கே கொண்டு சென்று, பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, சரியான நேரத்தில் சிகிச்சை பெற்று நலம் பெற உதவுகிறோம்” என்றார்.
 
காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், “இந்தத் திட்டம், அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய, முன்கூட்டியே தற்காத்துக் கொள்ளக்கூடிய ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதில் காவேரி மருத்துவமனைக்கு உள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இந்த நடமாடும் மேமோகிராம் வாகனம் என்பது வெறும் பரிசோதனை சேவை மட்டுமல்ல; இது பெண்கள் எதிர்கொள்ளும் தடைகளைக் குறைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி, தங்களின் ஆரோக்கியத்தை அவர்களே கவனித்துக் கொள்ள வழிவகுக்கும் ஒரு முக்கிய முன்னேற்ற நடவடிக்கையாகும். மருத்துவச் சேவைகளை மக்களிடமே நேரடியாகக் கொண்டு செல்வதன் மூலம், நோய் தடுப்புப் பராமரிப்பை அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த நற்பணிக்காக லயன்ஸ் சர்வதேச அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.
 
முன்கூட்டியே மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் வசதி குறைவாக உள்ள பகுதிகளைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டு, வரும் வாரங்களில் இந்த நடமாடும் வாகனம் மூலம் திட்டமிடப்பட்ட இலவசப் பரிசோதனை முகாம்களை காவேரி மருத்துவமனை நடத்தவுள்ளது.

‘தர்மன்’ பட விழாவில் ரஜினிகாந்த் பேசியது என்ன?!

மிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு “தர்மன்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் இந்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது குறித்து நீண்ட நாட்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ஆரம்பத்தில் இயக்குநர் சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்குவார் என கூறப்பட்டது. பின்னர் சிபி சக்கரவர்த்தியின் பெயரும் அடிபட்டது. ஆனால் இறுதியில் “ஓ மை கடவுளே” மற்றும் “டிராகன்” திரைப்படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இந்த முக்கிய வாய்ப்பை பெற்றுள்ளார்.

“தர்மன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆக்‌ஷன் தோற்றத்தில் காணப்படும் ரஜினிகாந்த், கையில் கத்தி ஏந்தியபடி முகத்தில் சிறு புன்னகையுடன் அவருக்கு உரிய ஸ்டைலில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம் படம் அதிரடி மற்றும் உணர்ச்சிகள் கலந்த கதைக்களத்தில் உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் நடிகை சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே “பேட்ட” திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்த சிம்ரன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் திரையை பகிர உள்ளனர்.

மேலும், நடிகை ராஷி கன்னாவும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்துள்ளார். அவரது கதாபாத்திரம் குறித்து படக்குழு இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை என்றாலும், கதையின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். ரஜினிகாந்த் – அனிருத் கூட்டணியில் ஏற்கனவே வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், “தர்மன்” படத்தின் இசை மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் பெயர் வெளியிட்டு விழா இன்று காலை நடத்த நிலையில் அதில் பேசிய ரஜினிகாந்த் “நான் பேசினாலே பிராப்ளம் தான், ஒன்னு எனக்கு பிராப்ளம் இல்ல மத்தவங்களுக்கு பிராப்ளம்.

இந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய போது கமல் சார் சொன்னார் இங்கு நீங்க ஒரு திரைப்படம் பண்ணனும்.. அதுக்கு அப்புறம் ரெண்டு பெரும் வேலைகளில் பிசி ஆகிட்டோம். அது இப்போ நடந்து இருக்கு.. பல இயக்குனர்கள் மாறி இப்போது அஷ்வத் மாரிமுத்து இந்த கதையை இயக்கியுள்ளார். இதில் பெரிய சிக்கல் கமல் தான் கதை கேட்க மாட்டேன் எல்லாத்தையும் நீங்களே முடிவு பண்ணுங்கன்னு சொல்லிட்டாரு.. நான் ரொம்ப வற்புறுத்தியாக பிறகு தான் கதையை கேட்டார்.. எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பு உங்களுக்கே தெரியும் பல உதவிகளை செய்திருக்கிறார். ஒரு நல்ல என்டர்டைமென்ட் உடன் ஒரு திரில்லர் படமா இது இருக்கும்” என கூறினார்.

பெண்ணை மிரட்டி பல முறை பாலியல் தொல்லை! அந்த புகைப்படங்கள் என்ன?!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆர்.என்.கண்டிகை பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தனது கணவரின் உறவினர் ஒருவருடன் தகாத உறவு இருந்துள்ளார். எனவே இருவரும் அடிக்கடி வீட்டிற்கு தெரியாமல் மறைவான பகுதிகளுக்குச் சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். அப்படி அவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்ததை கவனித்த அதே பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் அவரகள் உல்லாசமாக இருப்பதை மறைமுகமாக புகைப்படம் எடுத்துள்ளனர். அந்தப் புகைப்படத்தை காட்டி அந்த இளைஞர்கள் அந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன், பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

எங்கு கள்ளக்காதல் குறித்து கணவனுக்கு தெரிந்து விடுமோ என அச்சமடைந்த அந்த பெண் கணவருக்கு தெரியாமல் அவர்களுக்கு அவ்வப்போது பணம் அளித்துள்ளார். அந்தப் பெண் சிறுக சிறுக ரூபாய் இருபது லட்சத்திற்கு மேல் பணம் அளித்த நிலையில் மீண்டும் அவர்கள் ஐந்து லட்சம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு பெண் மறுப்பு தெரிவிக்கவே தொடர்ந்து தொல்லை செய்த வாலிபர்கள் அந்தரங்க புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர். எனவே அந்த பெண் கணவர் சீட்டு பணம் கட்டுவதற்காக வைத்திருந்த ரூபாய் 5 லட்சத்தை கணவருக்கு தெரியாமல் எடுத்து அந்த இளைஞர்களுக்கு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சீட்டு பணம் கட்டாதது குறித்து அந்த பெண்ணிடம் கணவர் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பெண்ணின் கள்ளக்காதல் குறித்து கணவனுக்கு தெரியவந்த நிலையில் மன உளைச்சல் அடைந்த அந்த பெண் ஆசிட்டை குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அந்த பெண் பணம் கொடுத்த விவகாரம் குறித்து கணவரிடம் தெரிவித்ததன் பேரில் அவர் பெருநகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பெண்ணை மிரட்டிய அதே பகுதியை சேர்ந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் சந்தோஷ் டேனியல், மைக்கேல்ராஜ், மார்ட்டின் டேனியல், ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களது செல்போன்களை கைப்பற்றிய போலீசார் அதில் உள்ள பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை டெலிட் செய்து வேறு நகல்கள் உள்ளதா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வைத்து பெண் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The Hidden Protector (2026) Review RATING 3/5

The Hidden Protector (2026) is a delightful and visually spectacular evolution of the beloved franchise, delivering a perfect mix of fantasy, humor, and heartfelt storytelling. The film takes a bold step forward by weaving in the legendary tale of the Nian beast from Chinese mythology, transforming a familiar children’s series into a grand, magical adventure. This mythological layer adds depth and excitement while still remaining easy for younger audiences to enjoy. Visually, the movie is a real standout. The animation is vibrant, detailed, and cinematic, with breathtaking environments like the mystical Eve City and beautifully choreographed magical battles. It marks a clear upgrade in production quality and ambition for the series.
 
The heart of the film, however, lies in its characters. Briar, Bramble, and Vick continue to shine with their natural comedic timing and lovable chemistry. Their interactions are funny, light, and never forced, keeping the film consistently entertaining from start to finish. Emotionally, the story delivers a strong message about self-confidence, growth, and teamwork. Briar’s personal journey from insecurity to self-acceptance adds genuine warmth and meaning without slowing down the adventure. Overall, The Hidden Protector is a joyful, action-packed, and emotionally satisfying family film. It successfully blends mythology, comedy, and heart, making it one of the most impressive and memorable entries in the Boonie Bears franchise.

‘அனந்தன் காடு’ விமர்சனம் RATING 3/5

சுயநல அரசியல்வாதி மற்றும் காவல் அதிகாரி இருவரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறு கூட்டம் படும்பாடு தான் இந்த ‘அனந்தன் காடு’

விமர்சனம்:

படத்தின் ஆரம்பத்தில் ஒருவரை துப்பாக்கி முனையில் நிறுத்தி ஒரு கதை சொல்கிறார் ஒரு இளைஞர். அந்தக் கதைப்படி இலங்கை ராணுவத்தால் தன் குடும்பத்தை இழந்த இளைஞன் ஆர்யா கேரளா வருகிறார். அவர் வந்து அங்கு அரசியல்வாதி ஒருவருக்காக கொலைகள் செய்யும் குட்டி கூலிப்படை ஒன்றோடு இணைகிறார். அந்தக்கூலிப்படைக்கு அரசியல்வாதி இன்னொரு வேலையும் கொடுக்கிறார். அதை ஆர்யாவே முன்னின்று செய்கிறார். அதன்பின் அந்த அரசியல்வாதி ஆர்யாவையும் அவர் நண்பர்களையும் கொலை செய்ய திட்டம் தீட்ட அந்தத் திட்டங்களை ஆர்யா முறியடித்தாரா? இல்லையா? துப்பாக்கி முனையில் நின்று கதை சொல்லும் அந்த சிறுவன் யார்? அடுத்து என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை….

சண்டைக்காட்சிகளில் ஆர்யாவின் துடிப்புமிக்க உழைப்பு ஆச்சர்யப்படுத்துகிறது. குற்றப் பின்னணி கொண்ட நால்வர் குழுவினராக நடித்திருக்கும் முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ் மற்றும் அப்பானி சரத் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக இருப்பதோடு, உணர்வுப்பூர்வமான காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் முரளி கோபி, ஒரு குறிப்பிட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு அதை கமர்ஷியல் ஆக்‌ஷன் பாணியிலான படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். யுவாவின் ஒளிப்பதிவுக்கு தனியாக ஒரு பாராட்டுப்பத்திரமே வாசிக்கலாம். இரவு ஷாட்ஸ் முதல் சண்டைக்காட்சிகள் வரை அவரது கேமரா அபாரம். எடிட்டர் ரோஹித் வி.எஸ். வாரியத் சிறப்பாக கட்ஸ் கொடுத்துள்ளார்

மைனஸ்: சில காட்சிகள் லாஜிக்கே இல்லை… தமிழர்கள் கதையில் கூடுதல் கவனம் தேவை….

மொத்தத்தில் இந்த ‘அனந்தன் காடு’ மழை வந்து நிற்கும்.