Wednesday, April 8, 2026
Blog

வழிப்பறியில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் கூட்டாளியுடன் கைது!

ஜார்க்​கண்ட் மாநிலத்​தைச் சேர்ந்த கரண், மோண்​டி, புனா​ பாடி ஆகிய 3 பேரும் சென்னை சூளை பகு​தி​யில் உள்ள கடை ஒன்​றில் பணி செய்ய கடந்த 3-ம் தேதி ரயில் மூலம் சென்னை எழும்​பூர் வந்​தடைந்​தனர். பின்​னர், அங்​கிருந்​து, ஆட்​டோ​வில் சூளை நோக்கி சென்று கொண்​டிருந்​தனர்.

பணம், செல்போன் பறிப்பு மோண்டி வழி​யில் இறங்​கி​ விட மற்ற இரு​வரும் ஆட்​டோ​வில் சென்று கொண்​டிருந்​தனர். அப்​போது, ஆட்டோ ஓட்​டுநர் மற்​றும் அவருக்கு அரு​கில் அமர்ந்​திருந்த நபருடன் சேர்ந்து ஆட்​டோ​வில் இருந்த கரண் மற்​றும் புனா​பாடி ஆகியோரை கத்​தி​யைக் காட்டி மிரட்​டி, அவர்​கள் வைத்​திருந்த செல்​போன்​கள் மற்​றும் பணத்தை பறித்​தனர். பின்​னர், அவர்​களை ரித்​தர்​டன் சாலை அருகே இறக்​கி​விட்டு தப்​பினர்.

அம்பத்தூர், அயப்பாக்கம் இதுகுறித்​து, எழும்​பூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில், ஜார்க்​கண்ட் மாநில இளைஞர்​களை தாக்கி வழிப்​பறி​யில் ஈடு​பட்​டது அம்​பத்​தூர், அயப்​பாக்​கத்​தைச் சேர்ந்த நாக​ராஜ் (28) மற்​றும் அவரது கூட்​டாளி என்​பது தெரிய வந்​தது.

இதையடுத்​து, தலைமறை​வாக இருந்த நாக​ராஜை போலீ​ஸார் கைது செய்​தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கூட்​டாளி​யான காஞ்​சிபுரம் மாவட்​டம், மேலக்​கோட்​டையூரைச் சேர்ந்த மணி​மாறன் (37) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.

வா…பணம் தருகிறேன் என அழைத்து பெண் செய்த செயல்!

டலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சசிகுமார் என்ற 19 வயது இளைஞர், மதுரவாயல் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான 21 வயதான ரித்திகா என்ற இளம்பெண்ணை காதலித்து, சென்னையின் பல்வேறு இடங்களில் அவருடன் சுற்றித்திரிந்துள்ளார். இதற்கிடையே தான் பிசினஸ் தொடங்குவதாகக் கூறி காதலன் சசிகுமாரிடமிருந்து சிறுக சிறுக ஒரு லட்சத்து 87 ஆயிரம் ரூபாயை, ரித்திகா கேட்டு வாங்கியுள்ளார்.
 
இதனால் கல்லூரிக்குக் கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, சசிகுமார் வேலைக்கும் சென்றுள்ளார். அதில் வரும் மாத சம்பளப் பணத்தையும் ரித்திகா கறந்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் ரித்திகா வேறு ஒரு நபரை காதலிப்பது தெரியவந்து அதிர்ச்சி அடைந்த சசிகுமார், அது தொடர்பாகக் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இனி உன்னுடன் பேச விருப்பமில்லை “நீ யாரோ நான் யாரோ..” எனக்கூறி காதலைத் துண்டித்துள்ளார்.
 
அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தவித்த சசிகுமார் “உனக்காகத்தான் கல்லூரியைக் கூட பாதியில் நிறுத்தி விட்டு வேலைக்குச் சென்றேன். ஆனால் என்னுடன் பழகி கொண்டே வேறு ஒருவனை காதலித்து விட்டாயே” என கண்ணீருடன் சண்டை போட்டுள்ளார். பின்னர் “நீ எப்படியோ போ, ஆனால் என்னிடம் ஏமாற்றி வாங்கிய 2 லட்சத்தை எடுத்து வைத்து விட்டு போ ” என அழுத்தம் கொடுத்துள்ளார்.
 
இந்நிலையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி பணத்தை திரும்ப தருவதாகக் கூறி கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே வருமாறு, சசிகுமாரிடம் ரித்திகா தெரிவித்துள்ளார். அங்கு சென்றதும் காரில் தனது தோழி உட்பட நான்கு பேருடன் காத்திருந்த ரித்திகா தாம்பரம் அருகே பணம் இருப்பதாகவும் அங்கு சென்றதும் பணத்தை தருவதாகவும் கூறி சசிக்குமாரையும் அழைத்து சென்றுள்ளார். பின்னர் தாம்பரம் சென்றதும் அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று, அங்கு ஏற்கனவே பதுங்கி இருந்த ஐந்து நபர்களும், காரில் இருந்த ரித்திகா உட்பட நான்கு பேரும் சேர்ந்து சசிகுமாரை கட்டையால் தாக்கி காயப்படுத்தி, கால்வாய் அருகே வீசி சென்றனர்.
 
சிறிது நேரத்தில் சுயநினைவு திரும்பிய சசிகுமார் தனது தந்தையிடம் ஃபோன் செய்து தகவல் கூறிவிட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைக்காகச் சேர்ந்தார். அங்கு போலீசாரிடம் சசிகுமார் அளித்த புகாரின் பேரில் விசாரணையைத் தொடங்கிய கோயம்பேடு கே11 போலீசார் சசிகுமார் கடத்தி தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
 
அதில் கடத்தலில் ஈடுபட்ட தாம்பரத்தைச் சேர்ந்த ரித்திகா, சஞ்சய், சரவணன், சேலையூரை சேர்ந்த தர்ஷினி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அத்துடன் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஐபோன் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே சசிக்குமாரை மட்டும்தான் ரித்திகா ஏமாற்றி உள்ளாரா? அல்லது வேறு யாரேனும் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலை வாய்ப்பு: இந்திய ராணுவத்தில் வேலை!

ந்திய ராணுவ ஆட்சேர்ப்பு 2027-க்கான இணையவழிப் பதிவுக் காலக்கெடுவை நீட்டிப்பதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. முதலில் 01 ஏப்ரல் 2026 அன்று முடிவடைய இருந்த பதிவுக் காலம், தற்போது 10 ஏப்ரல் 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.​திருத்தப்பட்ட காலம்: 13 பிப்ரவரி 2026 முதல் 10 ஏப்ரல் 2026 வரை.​தேர்வுக் கட்டணம்: ஒரு விண்ணப்பத்திற்கு ₹250 கட்டணம் செலுத்த வேண்டும். (கிரெடிட்/டெபிட் கார்டு, யுபிஐ அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்).​தேர்வு முறை: இணையவழி பொது நுழைவுத் தேர்வு (CEE), உடல் தகுதி மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

கல்வித் தகுதிகள் (பதவி வாரியாக):​ அக்னிவீர் ஜெனரல் டியூட்டி (GD): 10-ஆம் வகுப்பில் 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 33% மதிப்பெண்கள் அவசியம்.​ அக்னிவீர் டெக்னிக்கல்: 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.​அக்னிவீர் கிளார்க் / ஸ்டோர் கீப்பர்: 12-ஆம் வகுப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் (Arts/Commerce/Science) 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.​அக்னிவீர் டிரேட்ஸ்மேன்: 8 அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஒவ்வொரு பாடத்திலும் 33% மதிப்பெண்கள்.

வயது வரம்பு:​ அனைத்து பிரிவுகளுக்கும் குறைந்தபட்சம் 17.5 வயது முதல் அதிகபட்சம் 21 வயது வரை இருக்க வேண்டும். (விண்ணப்பிக்கும் தேதியில் இந்த வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும்). விண்ணப்பதாரர்கள் கடைசி நேர சிக்கல்களைத் தவிர்க்க, காலக்கெடுவிற்கு முன்பே பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தகுதி நிபந்தனைகளை இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளவும்.

​உதவிக்கு தொடர்பு கொள்ள:​ஏதேனும் உதவி தேவைப்பட்டால், சென்னையில் உள்ள மண்டல ஆட்சேர்ப்பு அலுவலகத்தை அணுகலாம்.

 

வேலை வாய்ப்பு: கடற்படையில் வேலை!

டற்படை கப்பல் பழுதுபார்க்கும் தளம் மற்றும் கடற்படை விமானத் தளத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘அப்ரெண்டிஸ்’ (Apprentice) பிரிவில் மொத்தம் 240 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களில் பிட்டர் (Fitter) பிரிவில் 31 இடங்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பிரிவில் 21 இடங்கள், எலக்ட்ரீசியன் (Electrician) பிரிவில் 29 இடங்கள், எலக்ட்ரானிக் மெக்கானிக் (Electronic Mechanic) பிரிவில் 18 இடங்கள், இன்ஸ்ட்ரூமென்ட் பிரிவில் 15 இடங்கள், வெல்டர் (Welder) பிரிவில் 14 இடங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறை பிரிவுகள் அடங்குகின்றன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கட்டாயமாக ஐ.டி.ஐ. (ITI) தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்களின் வயது 01.06.2026 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “The Admiral Superintendent (for Officer-in-Charge ATS), Apprentices Training School, Naval Ship Repair Yard, Naval Base, Kochi – 682 004” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17.04.2026 என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை rdsdekerala.dgt.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு!!

தூத்​துக்​குடி மாவட்​டம், சாத்​தான் ​குளத்​தைச் சேர்ந்​த ஜெய​ராஜ் மற்​றும் அவரது மகன் பென்​னிக்ஸ் ஆகியோர் சாத்​தான்​குளத்​தில் செல்​போன் கடை நடத்தி வந்​தனர். கரோனா ஊரடங்​கின்​போது குறித்த நேரத்​தைத் தாண்டி கடையை திறந்து வைத்​திருந்​த​தாகக் கூறி, இவர்​கள் இரு​வரை​யும் கடந்த 2020 ஜூன் 19-ம் தேதி இரவு சாத்​தான்​குளம் போலீ​ஸார், காவல் நிலை​யம் அழைத்​துச் சென்று கடுமை​யாகத் தாக்​கினர்.

இதில் ஜூன் 22-ம் தேதி பென்​னிக்​ஸும், 23-ம் தேதி ஜெய​ராஜும் உயி​ரிழந்​தனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசா​ரித்த நிலை​யில், உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​வின்​படி, சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றப்​பட்​டது. இதை கொலை வழக்​காக சிபிஐ பதிவு செய்​து, காவல் ஆய்​வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்​வாளர்​கள் பால​கிருஷ்ணன், ரகு கணேஷ், சிறப்புசார்பு ஆய்​வாளர் பால்​துரை, தலை​மைக் காவலர் முரு​கன், காவலர்கள் சாமதுரை, முத்​து​ராஜா, செல்​லத்​துரை, தாமஸ் பிரான்​சிஸ், வெயிலுமுத்து ஆகிய 10 பேர் கைது செய்​யப்​பட்​டு, மதுரை மத்திய சிறையில் அடைக்​கப்​பட்​டனர். இதில் பால்துரை சிறையில் உடல்​நலக் குறை​வால் உயிரிழந்​தார்.

இந்த வழக்கு விசா​ரணை கடந்த 5 ஆண்​டு​களாக மதுரை நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது. மொத்தம் 100-க்​கும் மேற்​பட்ட சாட்​சிகளிடம் விசாரணை நடத்​தப்​பட்டது. இதைத் தொடர்ந்​து, கடந்த 23-ம் தேதி நீதிபதி முத்​துக்​குமரன் தீர்ப்பளித்தார். ‘‘தந்தை, மகன் இருவரையும் கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் போலீஸார் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மரணத்தை விளைவிக்கும் காயங்கள் உருவாகும் வகையில் இருவரும் தாக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறாக, மரணத்தை விளைவிக்கும் அளவுக்கு இருந்துள்ளன. இதுபோன்ற கொடூர தாக்குதல்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்ததாக கேள்விப்பட்டுள்ளோம். அதுபோல போலீஸார் தாக்கியுள்ளனர். இருவரையும் இரவு 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை போலீஸார் தாக்கியுள்ளனர். தவிர, இருவர் மீதும் போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்காக போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளனர்.

போலீ​ஸார் தாக்கிய​தால்தான் தந்​தை, மகன் இரு​வரும் உயி​ரிழந்தனர் என்ற முடிவுக்கு நீதி​மன்​றம் வரு​கிறது. சாட்​சி​யங்களின் அடிப்படை​யில் 9 பேர் மீதான கொலைக் குற்​றச்​சாட்டு சந்​தேகத்​துக்கு இடமின்றி நிரூபிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, இந்த வழக்​கில் ஸ்ரீதர் உள்​ளிட்ட 9 பேரும் குற்​றவாளி​கள் என முடிவு செய்​யப்​படு​கிறது. இவர்​களுக்​கான தண்​டனை விவரம் மார்ச் 30-ம் தேதி அறிவிக்​கப்​படும்’’ என தெரி​வித்​தார்.

இதையடுத்து, குற்​ற​வாளி​கள் 9 பேருக்​கும், மதுரை அரசு மருத்​து​வமனை​யில் உடல், மனநல பரிசோதனை நடத்​தப்​பட்​டு, அதற்​கான அறிக்​கையை மருத்​து​வர்​கள் நீதி​மன்​றத்​தில் நேற்று தாக்​கல் செய்​தனர். இதைத் தொடர்ந்​து, குற்​ற​வாளி​கள் 9 பேரும் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டனர். உயிரிழந்த ஜெய​ராஜ், பென்னிக்ஸ் குடும்​பத்​தினரும் வந்திருந்​தனர்.

நீதிபதி முத்​துக்​குமரன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்​தது. அப்​போது தண்​டனை விவரம் தொடர்​பாக மத்​திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்​கல் செய்​யாத​தால், ஏப்​ரல் 2-ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்​கப்​படும் என நீதிபதி உத்​தர​விட்டு விசாரணையை தள்ளிவைத்திருந்தார்.

இதற்கிடையே, குற்​ற​வாளி​கள் 9 பேருக்​கும் உச்​சபட்ச தண்டனை வழங்க வேண்​டும் என, உயி​ரிழந்த ஜெய​ராஜ் குடும்​பத்​தினர் வலி​யுறுத்​தி​யிருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

இந்நிலையில், நீதிபதி முத்​துக்​குமரன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்​தது. “இது அரிதினும் அரிதான வழக்கு. தந்தை, மகன் இருவரையும் இரவு முழுவதும் காவல்நிலையத்தில் அடைத்து வைத்து, விடிய விடிய தாக்கி, கொடுமையாக கொலை செய்துள்ளனர். ஜெயராஜ், பெனிக்ஸை பழிவாங்கும் நோக்கில் தாக்கியுள்ளனர். அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். காவல் மரணங்கள் கொடூரமானடு என்று உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது. ஆனாலும், இந்தக் குற்றம் குறைந்தபாடில்லை.

அண்மையில் கூட மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரணமடைந்தார். சாத்தான்குளம் சம்பவத்தில், காவல் ஆய்வாளர்கள் ஸ்ரீதர் தாக்கியதால் மற்ற காவலர்களும் இணைந்து தாக்கியதாகக் கூறியுள்ளனர். அவர்கள் நினைத்திருந்தால் உயரிதிகாரிகளிடம் கூறி இந்தச் சம்பவத்தை தடுத்திருக்கலாம். ஆனால், குற்றத்துக்கு உடந்தையாக இருந்துள்ளனர். அந்த வகையில் அவர்களும் குற்றவாளிகளே. எனவே, குற்​ற​வாளி​கள் 9 பேருக்​கும் இந்த நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கிறது,” என்று தீர்ப்பு வழங்கினார்.

விபசார விடுதி! மீட்கப்பட்ட 5 பெண்கள்!!

ம்பாஜி நகரில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நகரின் MIDC வாலுஜ் பகுதியில், ஒரு ஹோட்டல் இயங்கிவந்தது. ஆனால் ஹோட்டல் என்ற போர்வையில் ஒரு பெரிய விபச்சார விடுதிதான் நடத்தப்பட்டுவந்துள்ளது. காம்கர் சௌக்கில் உள்ள ‘நந்தினி ஹோட்டலில்’ இயங்கி வந்த இந்த விபச்சாரம் நடக்கும் இடத்திற்கு போலீசார் நள்ளிரவில் சோதனை நடத்தினர். இந்த நடவடிக்கையில், ஹோட்டல் மேலாளர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட 5 பெண்கள் இந்த கொடுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நந்தினி ஹோட்டலுக்குப் பெண்களை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துவந்து, பாலியல் தொழிலுக்காக விற்கப்படுவதாக, குற்றப்பிரிவின், மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலைச் சரிபார்க்க, ரகசியமாக காவல்துறை இரவில் ஒரு போலி வாடிக்கையாளரை அந்த ஹோட்டலுக்கு அனுப்பியது. குற்றம் நடப்பது உறுதி செய்யப்பட்டதும் உடனடியாக சிக்னல் கிடைத்தது. அதனடிப்படையில் காவல்துறை அந்த ஹோட்டலில் அதிரடி சோதனை நடத்தியது. இந்த நடவடிக்கையில், ஹோட்டல் மேலாளர் சச்சின் பகவான் கோசவி (30), நிதின் பகவான் கோசவி (32) மற்றும் ஹோட்டல் உரிமையாளர் உமேஷ் ராவ்சாஹேப் ஆம்லே ஆகியோர் மீது MIDC வாலுஜ் காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல்துறையினர் நடத்திய இந்த சோதனையில் 3 வாடிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாலியல் தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட பாதிக்கப்பட்ட 5 பெண்களை போலீசார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். அவர்கள் தற்போது சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

காவல் உதவி ஆய்வாளர் ஜெகந்நாத் மென்குடாலேவின் கூற்றுப்படி, “ஒரு போலி வாடிக்கையாளரை அனுப்பி காவல்துறையினர் இந்தச் சம்பவத்தைக் கண்டுபிடித்துள்ளனர். சாட்சிகள் முன்னிலையில், அந்தப் போலி வாடிக்கையாளரிடம், குறிப்பிட்ட குறியீடுகள் இடப்பட்ட பணத்தாள்கள் கொடுக்கப்பட்டு, தங்கும் விடுதிக்கு அனுப்பப்பட்டார். அந்த போலி வாடிக்கையாளர் ஒரு பெண்ணுக்காக ரூ.1,500 செலுத்தி, ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் உடனடியாக அந்த விடுதியில் சோதனை நடத்தி, மேலாளரையும் விடுதி உரிமையாளரையும் கைது செய்தனர்” என்று கூறியிருக்கிறார்.

சிக்கியது இத்தனை கோடியா?! தேர்தல் ஆணையம் குறிப்பு!!

மிழ்நாடு உள்பட தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் 5 மாநிலங்களில் தேர்தல் பறக்கும் படையினர் 650 கோடி ரூபாய் அளவுக்கு ரொக்கம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:
 
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக மார்ச் 15ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், அம்மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் அதன் எல்லையில் உள்ள 12 மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர், 5 ஆயிரத்து 173 பறக்கும் படைகளும், 5 ஆயிரத்து 200 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதில் மேற்கு வங்கத்தில் மிக அதிக அளவாக 11 கோடி ரூபாய் ரொக்கம், 55 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள், 150 கோடி ரூபாய் பரிசுப் பொருட்கள் உள்பட 319 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாய் ரொக்கம், 2 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள், 67 கோடி ரூபாய் போதைப் பொருட்கள் மற்றும் 63 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் உள்பட 170 கோடி ரூபாய் மதிப்பிலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் அஸ்ஸாமில் 97 கோடி ரூபாய், கேரளாவில் 58 கோடி ரூபாய் மற்றும் புதுச்சேரியில் 7 கோடி ரூபாய் என 650 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், மது மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு! 9ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல்!!

மிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை 3,430 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தருமபுரியில் சவுமியா அன்புமணி உள்ளிட்டோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். மனுக்கள் பரிசீலனை நாளை நடைபெறுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் ஏப்.9-ம் தேதி வெளியாகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியானது. இதையடுத்து, அன்றைய தினமே தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. தலா 2,106 தேர்தல் பறக்கும் படைகள், நிலைக் கண்காணிப்பு குழுக்கள் 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 5.69 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், அனைத்து தொகுதிகளிலும் கடந்த மார்ச் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் முதல் நாளிலேயே வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் உட்பட முதல் நாளில் மொத்தம் 867 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மார்ச் 31 (மகாவீர் ஜெயந்தி), ஏப்.1 (வங்கி விடுமுறை), ஏப்.3 (புனித வெள்ளி), ஏப்.5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 நாட்கள் பொது விடுமுறை என்பதால் மனு தாக்கல் நடைபெறவில்லை. அந்த வகையில், இதுவரை 3 நாட்கள் மட்டுமே வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை 3,430 மனுக்கள் இதில் 2,731 ஆண்கள், 698 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 3,430 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 84 மனுக்கள், பர்கூர் தொகுதியில் 29 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக மானாமதுரை, நிலக்கோட்டையில் தலா 5 மனுக்களும், காட்டுமன்னார்கோவில், திருவாரூர், பேராவூரணி, கந்தர்வகோட்டை ஆகிய தொகுதிகளில் தலா 6 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இதுவரை 282 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக தியாகராய நகர்தொகுதியில் 28 மனுக்கள், குறைந்தபட்சமாக ஆயிரம் விளக்கு தொகுதியில் 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தேர்தல் அறிவிக்கையில் கூறியபடி அனைத்து

தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைகிறது. இன்று ஒரு நாள் மட்டுமே அவகாசம் இருப்பதால், தமிழகம் முழுவதும் அதிமுக, பாஜக வேட்பாளர்கள், கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட மதுரை மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் இன்று மனு தாக்கல் செய்கின்றனர்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, எடப்பாடி தொகுதியிலும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, தருமபுரி தொகுதியிலும் மனு தாக்கல் செய்கின்றனர். இன்று மாலை 3 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும்.

நாளை மனுக்கள் பரிசீலனை: இதைத் தொடர்ந்து, நாளை காலை 11 மணிக்கு, அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். ஏற்கப்பட்ட, தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் விவரம் நாளை மாலை வெளியாகும். வேட்புமனுக்களை திரும்பப்பெற ஏப்.9-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர், சின்னங்களைப் பொருத்தும் பணிகள் ஏப்.10-ம் தேதி முதல் தொடங்க உள்ளன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக பூத் ஸ்லிப் வழங்கும் பணிகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

10-ம் தேதி முதல் பிரச்சாரம் மேலும் சூடுபிடிக்க உள்ளது. அந்தந்த தொகுதிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ள செலவினப் பார்வையாளர்களும், வேட்பாளர்களின் செலவினங்களை தீவிரமாக கண்காணிக்க உள்ளனர். தேர்தல் விதிமீறல் தொடர்பாக ‘சி-விஜில்’ செயலியில் தெரிவிக்குமாறும், வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குகள் மற்றும் கல்வித் தகுதி தொடர்பாக இசிஐ நெட் போர்ட்டலில் தெரிந்துகொள்ளுமாறும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பிரச்சாரம் ஏப்.21-ம் தேதிமாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. அது முதல் தேர்தல் நாளான ஏப்.23 மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடியும் வரையிலான 48 மணி நேரம் அமைதி காலமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கால கட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவும், தொலைக்காட்சிகளை வைத்து காட்சிப்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்காக 75,032 வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மாவட்டதேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். வாக்குஎண்ணும் மையங்களை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

தேர்தல் நாளில் பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தினக்கூலி, ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட அனைத்து விதமானதொழிலாளர்கள், பணியாளர்களுக்கும் அன்று ஊதியத்துடன் விடுப்பு அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பிரச்சாரம் செய்ய போராரா ரஜினி….!

டிகர் ரஜினிகாந்த், ஜெயிலர்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கான பணிகளில் கலந்து கொள்வதற்காக, நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத் சென்றார். முன்னதாக,

சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில்:

“ஜெயிலர்-2 படத்தின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. படம் வெளியாகும் தேதி குறித்து விரைவில் அறிவிப்பார்கள். நானும், கமலும் இணைந்து நடிக்கும் படம் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது” என்றார். அப்போது, தேர்தல் நெருங்கி வருகிறது. மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, வணக்கம் என்று கையெடுத்து கும்பிட்டார். தொடர்ந்து, நீங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கும், சிரித்து கொண்டே, ‘நோ கமெண்ட்ஸ்’ என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

R.K நகர் தொகுதி பற்றி ஓர் அலசல்! வாய்ப்பு யாருக்கு?!

R.K நகர் வாக்காளர்கள் விவரம்:

ஆண் – 93,576
பெண் – 1,14,726
மூன்றாம் பாலினத்தவர் – 97
மொத்த வாக்காளர்கள் – 1,95.856

மிழகத்தின் மிகப்பெரிய காசிமேடு மீன்பிடி துறைமுகம் அமைத்திருக்கும் சென்னை கடலோர தொகுதியாக ஆர்.கே.நகர் விளங்குகிறது. 2014-ல்நடைபெற்ற இடைத்தேர்தல், 2016-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வரானதால், விஐபி அந்தஸ்தை இத்தொகுதி பெற்றிருந்தது.

இத்தொகுதியில் மீனவர்கள் மற்றும் மீன் தொழிலைச் சார்ந்தவர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாகவும் மீனவர்கள் உள்ளனர். இத்தொகுதியில் பூர்வீகமாக வசிப்பவர்கள் அதிகம். பெரும்பாலான பகுதிகள் மக்கள் அடர்த்தி மிகுந்த, குறுகிய தெருக்களைக் கொண்டவையாக உள்ளன. 

பெரம்பூர் தொகுதியில் இருக்கும் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கால் அதிக பாதிப்பு இத்தொகுதி மக்களுக்குத்தான். இத்தொகுதியில் மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்றவாறு கழிவுநீர் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவில்லை. அதனால் அங்கு உருவாகும் அதிகப்படியான கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் பக்கிங்ஹாம் கால்வாயில் விடப்படுவதால், அப்பகுதி சுகாதாரக்கேட்டின் பிடியில் சிக்கியுள்ளது. இதன் பாதிப்பு நேப்பியர் பாலம் வரை நீள்கிறது. பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீர் செல்வதால், அப்பகுதியில் கொசுத்தொல்லை பெருந்தொல்லையாக உள்ளது.

இத்தொகுதியில் கடந்த முறை வெற்றிபெற்ற ஜெ.ஜான் எபினேசர் திமுக வேட்பாளராக மீண்டும் களம் இறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஆர்.எஸ்.ராஜேஷ், தவெக சார்பில் மரிய வில்சன், நாம் தமிழர் கட்சி சார்பில் வெண்ணிலா தாயுமானவன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் இதுவரை நடைபெற்ற 12 தேர்தல்களில் 7 முறை அதிமுக, 3 முறை திமுக, 2 முறை காங்கிரஸ், ஒருமுறை சுயேச்சை (டிடிவி.தினகரன்) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

அதிமுகவின் கோட்டையாக இருந்த இத்தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் திமுக வேட்பாளர் ஜெ.ஜான் எபினேசர் வெற்றி பெற்று, அதிமுகவின் தொடர் வெற்றியை உடைத்து, தொகுதியை திமுக வசமாக்கினார். இவர் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.19.70 கோடியில் ஆர்.கே.நகர் விளையாட்டு வளாகத்தை கொண்டு வந்துள்ளார். பல்வேறு பூங்காக்களை சீரமைத்துள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதியிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இவருக்கு திமுகவின் தேர்தல் அறிக்கையும், மகளிருக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன் அறிவிப்பும், கூட்டணி பலமும் சாதகமாக உள்ளன.

அதிமுக சார்பில் போட்டியிடும் ஆர்.எஸ்.ராஜேஷ், கடந்த 15 ஆண்டுகளாக இத்தொகுதியில் வலம்வந்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இவரது நலத்திட்ட உதவிகளும், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளான இலவச பிரிட்ஜ், ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் போன்ற அறிவிப்புகளும் பலமாக உள்ளன.

தவெக சார்பில் போட்டியிடும் மரிய வில்சன் புதுமுகமாக இருந்தாலும், விஜய் என்ற ஸ்டார் வெளிச்சம் அவருக்கு மிகப்பெரும் பலமாக இருக்கிறது. மேலும் ஒரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத்தினர் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். இத்தொகுதியில் உள்ள தலித் மற்றும் கிறிஸ்தவர்கள் வாக்குகளை பிரிப்பார் என்றும், அதனால் திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு பெரும் சவாலாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

தற்போதைய சூழலில், இத்தொகுதியில் திமுக, அதிமுக, தவெக ஆகிய 3 கட்சிகளின் வேட்பாளர்களும் சம பலத்துடன் மோதுகின்றனர். இதனால் ஆர்.கே.நகர் தொகுதியை ஆட்கொள்ளும் வேட்பாளர் யார் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. வாய்ப்பு யாருக்கு என்பதை மக்கள் தான் முடிவு செய்ய முடியும். பார்ப்போம்….