Wednesday, June 10, 2026
Blog

இது எருமை ஆட்சி! யோவ் விஜய் என்னய்யா நீ…!! யூடியூபர் மாரிதாஸ் கைது!!!

மூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் தளங்கள் மூலமாக அரசியல் கருத்துக்களை பகிர்ந்து வரும் பிரபல யூடியூபர் மாரிதாஸ், அண்மைக்காலமாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான அரசின் செயல்பாடுகள் மற்றும் அமைச்சர்களின் நடவடிக்கைகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இதனால் மாரிதாஸ் மீது தவெக நிர்வாகிகள் புகாரளித் நிலையில், தமிழக அரசுக்கு எதிராகவும், பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் சில கருத்துகள் பதிவிடப்பட்டதாகக் கூறி, சென்னை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இதையடுத்து, வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சென்னை சைபர் கிரைம் தனிப்படை காவல்துறையினர் மதுரைக்கு விரைந்தனர்.

தொடர்ந்து மதுரை மாநகர காவல்துறையினரின் உதவியுடன், மதுரை சூர்யா நகர் பகுதியில் உள்ள மாரிதாஸ் இல்லத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில், யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். மாரிதாஸ் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் தன்மை, எந்த குற்றப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அவர் வெளியிட்டதாகக் கூறப்படும் குறிப்பிட்ட வீடியோக்கள் என்ன என்பன குறித்து காவல்துறை தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. அவரிடம் நடத்தப்படும் விசாரணைக்குப் பின்னரே முழுமையான விவரங்கள் வெளியாகும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மாரிதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரவலான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. கருத்துச் சுதந்திரம், அரசியல் விமர்சனங்களின் எல்லை, சமூக ஊடகங்களின் பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. எனவே தற்போது மாரிதாஸ் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கடைசி மூன்று பதிவுகள் தான் கைது செய்யப்பட்டதற்கு காரணம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் அந்த பதிவுகள் மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அமைச்சர் கீர்த்தனா பற்றிய பதிவு :

இவனுக்காக வீட்டை விட்டு வெளியேறினாரா அமைச்சர் கீர்த்தனா?! பெயர் மதன்.. ஏம்மா இவனை ஏம்மா இரவு பகலாக கூட்டிட்டு சுற்றிகிறீர்? அமைச்சர் தனி பாதுகாப்பு அதிகாரிகளை விட்டு விட்டு இவனுடன் சென்று அமைச்சர் என்ன செய்கிறார் என்பதை ஆளும் விஜய் தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும். ஏன் எனில் ஒரு சின்ன அரசின் கொள்கை முடிவு கூட பல ஆயிரம் கோடி வரத்தகத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு அரசு அமைச்சரவை பாதுகாப்போடு இருப்பது அவசியம்.

அது கசிந்தால் போது பங்கு சந்தையில் சூதாட்டம் உச்சம் தொடும். அப்படி சென்சிட்டிவான துறையில் இருந்து கொண்டு இப்படி இருப்பது தமிழகத்தின் தலைகுனிவு.. தொடர்ந்து தமிழகத்தின் முதலீடுகள் ஆந்திராவை நோக்கி செல்வது பெரும் சந்தேகத்தையும் – கீர்த்தானா நடவடிக்கைகள் பெரும் கேள்விகளையும் எழுப்புகிறது.. இந்த கீர்த்தனாவிற்கும் விஜய் ரசிகர் மன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இவர் முழுக்க முழுக்க ஆதவ் வட்டத்தில் இருந்த நபர்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனன் குறித்த பதிவு:

ஏன்ம்பா லாட்டரி ஆதவ் ! உன் மாமனார் லாட்டரி திருடன் அக்கவுண்டன் பழனிச்சாமி கொலை செய்யப்பட்ட கேஸ் மீண்டும் விசாரனைக்கு வருமா – நீதி கிடைக்குமா? இல்லை மூடப்படுமா! , உன் மாமியார் லீமா ரோஸ் சகோதரன் ஜான் பிரிட்டோ எங்கே திரியுறான்! என்ன ஹவாலா வேலை பார்க்கிறான் என்பதை விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள் அனைத்தும் ஊத்தி மூடப்படுமா? கொஞ்சம் உன் காந்தி புகைப்படம் வைத்து அம்பேத்கார் என பேசி ஊரை ஏமாற்றும் யுக்தியை விட்டு விளக்கம் தரவும்.

ஆதவ் தற்போது சிறு துறைமுகங்கள் சார்ந்த அமைச்சகத்தையும் தன் கையில் வைத்திருப்பது ஆபத்தானது தமிழகத்திற்கு.. தமிழகத்தின் எல்லை தாண்டிய கடத்தல்கள் , போதை கடத்தல்களும் செய்வதற்கு ஜான் பிரிட்டோ சிண்டிக்கேட் கடத்தலுக்கும் இந்த சிறு துறைமுகங்கள் உதவிகரமாக இருக்குமோ என்ற கேள்வியும் இணைகிறது… எனவே ஆதவ் + லீமா ரோஸ் கும்பல் மொத்த தமிழகமும் விரட்டி அடிக்க கேள்விகள் கேட்பது முதலில் அவசியம்.லாட்டரி மாபியா மீண்டும் தமிழகத்தை தன் கொடூரமான காசு வெறிக்கு வேட்டையாக கிளம்பியுள்ளது…

தவெக ஆட்சி குறித்த பதிவு :

கடந்த ஒரு மணி நேரத்தில் 87 முறை மின்சாரம் செல்வதும் பின் low கரண்டாக வருவதுமாக இருக்கிறது. டேய் வீட்டில் ஒரு பொருள் மிச்சம் இருக்காதுடா இப்படி மின்சாரம் வந்தா. கரண்ட் மொத்தமா கூட நிறுத்தி போட்டு தொலைங்கடா, இப்படி power fluctuation மொத்த மின்சாதன பொருட்களையும் நாசம் செய்துவிடும்..

நடுத்தர குடும்பம் EMI போட்டு வாங்கி வச்ச பொருளேல்லாம் பழுதாகுமே என வருத்தமே இல்லாம எப்படியா எருமை மாடு மாதிரி ஆட்சி நடத்துறேங்க! மின் விசிறி ஆரம்பித்து பிரிட்ஜ் , டீவி வரை எல்லாம் நாசமாக போவது உறுதி. விஜய் யோவ் என்னய்யா நீ ஆலோசனை வழங்கின.. அப்படி என்ன தான் நீங்க நிர்வாகம் பண்றீங்க … எருமை ஆட்சி.. என கூறியுள்ளார்.

இளம் பெண்ணை கொலை செய்த சிங்கம் மீசை முதியவர்!

டலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவரது மனைவி 26 வயதுடைய காமாட்சி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கணவரைப் பிரிந்து தந்தை வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை காமாட்சி சரமாரியாக தாக்கப்பட்ட வீட்டிற்கு வெளியே உயிரிழந்து கிடந்த நிலையில் அவருக்கு அருகிலேயே அவரது தந்தையான பாண்டுரங்கன் என்பவரும் அடிபட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட காமாட்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே இளம்பெண்ணை படுகொலை செய்த அதே ஊரைச் சேர்ந்த 63 வயதுடைய மகேந்திரன் என்ற முதியவரை அண்ணாமலை நகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீஸ் எஸ்பி ஜெயக்குமார் விசாரணை நடத்தியதை தொடர்ந்து இதில் பல்வேறு முக்கிய தகவல்களும், கொலைக்கான காரணமும் தெரிய வந்துள்ளது. அதே ஊரைச் சேர்ந்த முதியவரான மகேந்திரன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார், மேலும் மிகவும் வேண்டியவர்களுக்கு அவ்வப்போது பணமும் கொடுத்து உதவி செய்து வந்துள்ளார். அந்த வகையில் காமாட்சிக்கு அவர் இரண்டு லட்சம் ரூபாய் வரை கடனாக பணம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மகேந்திரன் இளம் பெண் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முயன்றுள்ளார். மேலும் தனது கிராமத்தில் அந்தப் பெண் தன்னுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாக தவறான தகவலை பரப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளம் பெண் காமாட்சி மகேந்திரனை வரவழைத்து அவர் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ காட்சிகளை எடுத்துள்ளார். அதில் “நான் உன் கூட தொடர்புல இருக்கேனா.. நீ என்ன வெச்சிட்டு இருக்கியா.. உனக்கு ஆசையா இருந்த உன் பொண்ணு கிட்ட போய் கேளு.. என் வாழ்க்கையையே கெடுத்துட்டியே” என இளம் பெண் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து பின்னர் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இந்நிலையில் ஊருக்கு வந்த மகேந்திரன் தெரிந்தவர்கள் மூலம் காமாட்சியிடம் இருந்த வீடியோ எடுத்த செல்போனை வாங்கி விட்டார். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்போனில் பதிவான காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து இதனால் அதிர்ச்சியும் அவமானமும் அடைந்த மகேந்திரன் நேற்று காலை தனது வயலுக்கு செல்லும் போது காமாட்சி வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்ததை பார்த்திருக்கிறார்.

பின்னர் வயலுக்குச் சென்று இரும்பு பைப்பை எடுத்து வந்து காமாட்சியை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார். அதை தடுக்க வந்த அவரது தந்தையையும் தாக்கினார் என்பது தெரிய வந்தது. எனவே அவரை கைது செய்த போலீசார் மேலும் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற நோக்கத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இந்த வழக்கில் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசைக்கு இணங்க மறுத்து தட்டிக்கேட்ட பெண்ணை முதியவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் இருக்கும் இடத்தில் உற்சாகம் இருக்கும்- விஜய் சேதுபதி

Puri Connects மற்றும் JB Motion Pictures நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இப்படத்தின் பிரம்மாண்ட  டீசர்  வெளியீட்டு விழா சென்னை நகரில் உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர், ஊடகத்தினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
 
நிகழ்வில் இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சார்மி கௌர், நடிகர் விஜய் சேதுபதி, உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று ஊடகங்களையும் ரசிகர்களையும் சந்தித்தனர்.
 
டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள “ஸ்லம் டாக்” திரைப்படம் குறித்து நிகழ்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன.
 
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா   பேசியதாவது:
 
ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
 
இது தயாரிப்பாளராக எனது முதல் திரைப்படம். இயக்குநர் பூரி ஜெகன்நாத் சார் மற்றும் சார்மி மேடம் ஆகியோருடன் இணைந்து இந்த படத்தை தயாரித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி போன்ற சிறந்த நடிகருடன் எனது முதல் திரைப்படத்தை தொடங்கியிருப்பது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.
 
கதாநாயகி சம்யுக்தா, தபு மேடம், துனியா விஜய் சார் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் எனது நன்றிகள். விஷ்வா, விடிவி கணேஷ், பிரம்மாஜி மற்றும் இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்த திரைப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் மிகப்பெரிய பொறுப்பு ஊடகங்கள் மற்றும் பத்திரிகை நண்பர்களின் கைகளில் உள்ளது. எங்களது படைப்பை மக்களிடம் கொண்டு செல்ல நீங்கள் வழங்கும் ஆதரவுக்கு முன்கூட்டியே நன்றி தெரிவிக்கிறேன். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் என் நன்றிகள். நன்றி.” என்றார்.
 
தயாரிப்பாளர் சார்மி கௌர் பேசியதாவது:
 
“இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ஊடக நண்பர்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அதே இடம், அதே முகங்கள், அதே புன்னகைகள். 2002-ஆம் ஆண்டு ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் முதன்முதலாக சென்னை வந்த நாட்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. அப்போது ஊடக நண்பர்களை சந்தித்தேன். அதன் பிறகு பல படங்களில் நடித்தேன். உங்கள் அனைவரிடமிருந்தும் நிறைய அன்பைப் பெற்றேன். இன்றும் உங்களை சந்தித்து பேசும்போது, அந்த பாசமும், நெருக்கமும் இன்னும் மாறாமல் இருப்பதை உணர்கிறேன்.”
 
”‘ஸ்லம் டாக்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் சென்னை வந்துள்ளேன். ஆனால் இந்த முறை நடிகையாக அல்ல, தயாரிப்பாளராக. எங்கள் Puri Connects நிறுவனத்தின் சார்பில் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளோம். ஆனால் நேரடி தமிழ் திரைப்படமாக இது எங்களின் முதல் முயற்சி. அதனால் இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது.”
 
”‘ஸ்லம் டாக்’ ஒரு ஆக்சன் மற்றும் உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ளது. இதில் நீங்கள் மிகவும் இயல்பான, நிஜத்தன்மை கொண்ட ஆக்சன் காட்சிகளையும், மனிதர்களின் வாழ்க்கையோடு நெருக்கமாக இணைந்த உணர்வுகளையும் காண்பீர்கள். பூரி ஜெகன்நாத் சாரின் திரைக்கதை சொல்லும் விதமும், விஜய் சேதுபதி சாரின் நடிப்பும் இணைந்து இந்தப் படத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளன.”
 
“விஜய் சேதுபதி சார் முதலில் ஒரு சிறந்த நடிகர். அதே நேரத்தில் மிகப்பெரிய நட்சத்திரமும் கூட. ஒரு திரைப்படத்திற்கு நடிப்பு திறமையும், வணிக ரீதியான மதிப்பும் ஒருசேர தேவைப்படும் போது, அந்த இரண்டையும் சமநிலைப்படுத்தும் நடிகர் அவர். இந்தப் படத்தில் இணைந்ததற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சிறந்த முறையில் இந்தப் படத்தை வெளியிடுவோம் என்று உறுதியளிக்கிறேன்.”
 
“தபு மேடத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தக் கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்திலிருந்தே அவரைத்தான் நினைத்திருந்தோம். கதையை கேட்டவுடனேயே அவர் சம்மதித்தார். தனது கதாபாத்திரம் மட்டுமல்லாமல், முழுக் கதையையும் பாராட்டி எங்களுக்கு நம்பிக்கையளித்தார். இன்றுவரை எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.”
 
“துனியா விஜய் சார் இந்தப் படத்தின் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதையை கேட்டவுடனேயே உடனடியாக ஒப்புக்கொண்டார். தனது படப்பிடிப்பு தேதிகளையும் எங்களுக்காக மாற்றி அமைத்துக் கொடுத்தார். அவருடைய ஒத்துழைப்பிற்கும், அன்பிற்கும் எப்போதும் நன்றிக்கடன்பட்டிருப்போம்.”
 
“சம்யுக்தாவை முதன்முதலில் சந்தித்த தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. கதாபாத்திரத்திற்கு மிகவும் இயல்பான தோற்றமும், நடிப்புத் திறமையும் கொண்ட நடிகை தேவைப்பட்டது. சம்யுக்தா அந்த கதாபாத்திரத்தை மிக அழகாக உயிர்ப்பித்தார். அவருடைய இயல்பான நடிப்பும், எளிமையான தோற்றமும் ரசிகர்களை நிச்சயம் கவரும்.”
 
“விடிவி கணேஷ் சார் பற்றி சொல்ல வேண்டுமென்றால், சமூக வலைதளங்களில் அவருடைய வீடியோக்களை பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும். இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று நினைத்தோம். படத்தில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.”
 
“இந்தப் படத்தில் பிரம்மாஜியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.”
 
“எங்கள் நிறுவனத்தின் CEO விஷு ரெட்டிக்கு சிறப்பு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் இயக்குநருக்கு எந்தவிதமான அழுத்தமும் வராமல் பார்த்துக் கொண்டவர் அவர். தயாரிப்பு, மார்க்கெட்டிங், விற்பனை, விளம்பரம் என அனைத்து துறைகளையும் ஒரே நேரத்தில் கவனித்து இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்க உதவியுள்ளார். அவருடைய உழைப்பிற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது.”
 
“இந்தப் படத்தை ஆதரித்த ஜேபி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் முழு படக்குழுவிற்கும் என் நன்றிகள். ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ ரசிகர்களை பெரிதும் கவரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் உங்களை பெருமைப்படுத்துவோம்.” என்றார்.
 
இசையமைப்பாளர்  ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்   பேசியதாவது..,
 
“இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் சாருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியவர் அவர்தான். அவர் ஒரு மிகப்பெரிய லெஜெண்ட். ஆரம்பத்தில் அவருடன் பணியாற்றுவது எனக்கு சற்று பயமாகவும், பதட்டமாகவும் இருந்தது. ஆனால் அவருடன் இணைந்து பணியாற்றியபோது அது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக மாறியது. இந்த வாய்ப்பிற்காக அவருக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
அதேபோல் சார்மி மேடத்திற்கும் நன்றி. அவர் அனைவரையும் மிகவும் அன்பாகவும், எளிமையாகவும் கவனித்துக் கொண்டார். விஜய் சேதுபதி சாருக்கும், சுமிதா மேடத்திற்கும் என் நன்றிகள்.
 
இந்த படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலும் வித்தியாசமான அனுபவத்தை தரக்கூடிய வகையில் உருவாகியுள்ளது. ரசிகர்களுக்கு இது ஒரு இனிய ஆச்சரியமாக இருக்கும். பாடல்கள் மட்டுமின்றி, பின்னணி இசையிலும் நிறைய புதுமைகளை கொண்டு வர முயற்சித்துள்ளோம். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.”.
 
நடிகர் விடிவி கணேஷ் பேசியதாவது:
 
“இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு திடீரென வந்தது. ஒரு நாள் பூரி ஜெகன்நாத் சார் அழைத்தார். உடனே எனக்கு நினைவுக்கு வந்தது ‘போக்கிரி’. இன்றைய தமிழக முதலமைச்சர் நடித்த அந்த பிரம்மாண்ட வெற்றிப் படத்தின் ஒரிஜினலை இயக்கியவர் அவர்தான். அதோடு பல மாஸ் ஹிட் படங்களை கொடுத்த மிகப்பெரிய இயக்குநர். என் மேனேஜரும் அவரைப் பற்றி நிறைய சொல்லியிருந்தார். அதனால் அவரை சந்திக்கும்போது ஒரு விதமான எதிர்பார்ப்பு இருந்தது.
 
ஆனால் நேரில் சந்தித்தபோது, அவ்வளவு பெரிய வெற்றிகளைப் பெற்ற இயக்குநர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல், மிகவும் எளிமையான, மென்மையான மனிதராக அவரை பார்த்தேன். அவருடன் அமர்ந்து பேசியதும், ஒன்றாக உணவருந்தியதும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
 
இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அந்த கதாபாத்திரம் பற்றிய விவரங்களை இப்போது சொல்ல முடியாது. ஆனால் அதை நடித்தபோதே மிகவும் ரசித்தேன். பூரி சார் நடிகர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வேலை வாங்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
 
“தபு மேடம் ரசிகன் நான்  அவருடைய அன்பையும் அவர் குழுவினரின் அன்பை நான் மறக்க முடியாது. குறிப்பாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தபோது, தினமும் எங்களுக்கு அவர் அனுப்பிய உணவுகள் மிகவும் பிரமாண்டமாக இருக்கும். மட்டன், சிக்கன், புலாவ் என பல வகையான உணவுகளை நிறைய அளவில் அனுப்புவார் அவர் கூட நடித்த அனுபவம் மறக்க முடியாதது. அந்த அன்பும், உபசரிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. படப்பிடிப்பு அனுபவத்தை இன்னும் இனிமையாக்கிய விஷயங்களில் இதுவும் ஒன்று.”
 
“படப்பிடிப்பின் முதல் நாளிலேயே விஜய் சேதுபதி சாரின் அர்ப்பணிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டேன். தெலுங்கு டயலாக்குகளை எழுதி வைத்து மனப்பாடம் செய்வார்.  கேரவனில் உட்கார்ந்து ஓய்வெடுப்பதை விட, வெளியிலேயே அமர்ந்து தொடர்ந்து தனது வேலையில் முழு கவனத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த அர்ப்பணிப்பைப் பார்த்தபோது, நான் முன்பு பணியாற்றிய இன்றைய தமிழக முதலமைச்சரின் உழைப்பும், அர்ப்பணிப்பும் நினைவுக்கு வந்தது. அதே அளவிலான ஈடுபாட்டையும், உழைப்பையும் விஜய் சேதுபதி சாரிடமும் பார்த்தேன்.
 
அதனால்தான் இன்று அவர் இந்திய அளவில் ஒரு வெற்றிகரமான நடிகராக  திகழ்கிறார். இந்த உயரத்தை அடைவதற்கு திறமை மட்டுமல்ல, கடின உழைப்பும், பொறுமையும் அவசியம். சரியான நேரம் வரும்வரை காத்திருந்து தொடர்ந்து உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.
 
இந்தப் படம் வெளியான பிறகு, குறிப்பாக தெலுங்கு ரசிகர்களும் அவருடைய நடிப்பை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். தமிழ், தெலுங்கு என எந்த மொழியாக இருந்தாலும் அவர் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். அவருடைய திறமையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பூரி சார் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
 
நடிகர்கள் அனைவரிடமிருந்தும் சிறந்த நடிப்பை வாங்கிக் கொள்ளும் திறமை பூரி சாருக்கு இருக்கிறது. அதே நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் ஒழுக்கமாகவும், நேர்த்தியாகவும் செயல்படுவார். கலைஞர்களை சரியான நேரத்தில் அழைத்து, திட்டமிட்டபடி பணிகளை முடித்து விடுவார். அந்த தொழில்முறை அணுகுமுறையே அவரை இந்த உயரத்தில் நிலைநிறுத்தியுள்ளது.
 
இந்தப் படத்தில் நான் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், மிகவும் மகிழ்ச்சியுடன் நடித்தேன். படக்குழுவில் இருந்த உதவி இயக்குநர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். இந்தப் படத்திற்காக மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. டீசரிலேயே அதன் தரம் தெரிகிறது.
 
‘ஸ்லம் டாக்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இந்தப் படத்திற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுகள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.
 
நடிகை சம்யுக்தா பேசியதாவது..,
 
“பூரி ஜெகன்நாத் சாருடன் பணியாற்றியது ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது. ஒரு காட்சியை மிகவும் எளிமையாகவும், அதே நேரத்தில் ஸ்டைலாகவும் இயக்கக்கூடியவர் அவர். இயக்கம் என்பது ஒரு கலை. அதை அவர் மிகவும் இயல்பாக கையாள்கிறார். சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்து, கலைஞர்களிடம் இருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொணரும் திறமை அவருக்கு இருக்கிறது.
 
இந்த படத்தில் விஜய் சேதுபதி சாருடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.அவரின் ரசிகை நான், ரசிகர்கள் திரையில் ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் ஒரு இணை நடிகையாக, ஒரு நடிகர் கதாபாத்திரமாக மாறும் அந்த அற்புதமான பயணத்தை நேரில் பார்த்திருக்கிறேன். விஜய் சேதுபதி சார் அந்த மாற்றத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறார். அவருடன் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். அவர் மிகவும் அன்பானவர், எளிமையானவர்.
 
இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் உருவாக்கியுள்ள பாடல்கள் அனைத்தும் அற்புதமாக இருக்கின்றன. இதுவரை நான் கேட்ட பாடல்களே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. முழு ஆல்பத்தையும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்.
 
எங்கள் தயாரிப்பாளர்களுக்கு சார்மி மேடமுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவர்கள் இந்த படத்தில் பணத்தை மட்டும் முதலீடு செய்யவில்லை; தங்களது நேரம், உணர்வுகள் மற்றும் முழு அர்ப்பணிப்பையும் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக சார்மி மேம், படத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் நேரடியாக ஈடுபட்டு பணியாற்றியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் அவர் எப்போதும் அக்கறை கொண்டிருந்தார். அவரது விருந்தோம்பலும், அன்பான அணுகுமுறையும் அனைவரையும் கவர்ந்தது.
 
ஜேபி சாருக்கும், முழு தயாரிப்புக் குழுவிற்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். நானும் இப்போதுதான் டீசரை பார்த்தேன். முழு படத்தையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
 
மேலும் பூரி ஜெகன்நாத் சாருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்த பிறகு அவருடன் புகைப்படம் எடுக்க மக்கள் காத்திருப்பார்கள். அவரது பெயரையே கொண்டாடும் ரசிகர்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு இயக்குநராக அவர் உருவாக்கியிருக்கும் அந்த பிராண்ட் மதிப்பே அவருடைய வெற்றிக்கு சான்று. முழு படத்தையும் திரையில் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி.” என்றார்.
 
இயக்குநர் பூரி ஜெகன்நாத் பேசியதாவது..,
 
“தமிழ் ஊடக நண்பர்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ திரைப்படம் எனது முதல் நேரடி தமிழ் திரைப்படம். இந்த வாய்ப்பை அளித்த விஜய் சேதுபதி சாருக்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
 
ஒரு இயக்குநராக, விஜய் சேதுபதி போன்ற திறமையான நடிகர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் இணைந்தது எனக்கு மிகவும் பெருமையான விஷயம். அவரைப் பற்றி என்னை மிகவும் கவர்ந்தது அவரது எளிமை. எப்போதும் மிகவும் இயல்பாகவும், எளிமையான மனிதராகவும் இருக்கிறார். படப்பிடிப்பு தளத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் ஒரு புதுமுக நடிகரைப் போலவே உற்சாகத்துடன் வருவார். அவரது நடிப்பில் ஒரு துளி கர்வத்தைக் கூட பார்க்க முடியாது. அந்த குணங்கள் என்னை மிகவும் ஈர்த்தன. இந்த படத்தில் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ஒரு வித்தியாசமான, சக்திவாய்ந்த விஜய் சேதுபதியை காண்பார்கள்.
 
சம்யுக்தாவுடன் முதல் முறையாக பணியாற்றினேன். அவர் மிகவும் உற்சாகமானவர். இந்த படத்தில் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் விடிவி கணேஷ் சார் எப்போதும் படப்பிடிப்பு தளத்தை உற்சாகமாக வைத்திருப்பார். அவர் இருக்கும் இடத்தில் அனைவரின் முகத்திலும் சிரிப்பு இருக்கும். மிகவும் பாஸிடிவான மனிதர்.
 
கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான துனியா விஜய் இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய பங்களிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. அதேபோல் ஜரீனா வஹாப் அம்மாவாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சில காட்சிகளில் அவருடைய நடிப்பைப் பார்த்தபோது என் கண்களில் கண்ணீர் வந்தது.
 
பிரம்மாஜி, ரோஹன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு முழு நியாயம் செய்துள்ளனர். இந்த படத்தின் நடிகர் தேர்வுக்கான பெருமை முழுவதும் சார்மி கௌருக்கே சேரும். இந்த படத்திற்காக மிகச் சிறந்த நடிகர் பட்டாளத்தை அவர் ஒருங்கிணைத்துள்ளார்.
 
தயாரிப்பாளர்களான ஜேபி நாராயண ராவ் மற்றும் மகேந்திர ராவ் ஆகியோருக்கு எனது நன்றிகள். அவர்கள் திரைப்படத் துறையில் புதியவர்களாக இருந்தாலும், இந்த படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளனர். மேலும், இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் அற்புதமான பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கியுள்ளார். பாடல்கள் மட்டுமல்ல, பின்னணி இசையும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.
 
‘ஸ்லம் டாக்’ திரைப்படத்தின் கதை இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பல பிச்சைக்காரர்களைக் கடந்து செல்கிறோம். ஆனால் அவர்களின் பின்னால் இருக்கும் வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் கதைகளை நாம் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டோம். அந்த மனிதர்களின் உலகத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையாக இந்த படம் உருவாகியுள்ளது.
 
இது ஒரு ஆக்ஷன் திரைப்படம் மட்டுமல்ல; வலுவான உணர்வுகளையும் கொண்ட திரைப்படம். குறிப்பாக இன்றைய இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களுக்காக இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.” என்றார்.
 
நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது..,
 
“இங்கு வந்திருக்கும் ஊடக நண்பர்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த படக்குழுவில் உள்ள அனைவரும் படத்தைப் பற்றியும், தங்களது அனுபவங்களைப் பற்றியும் மிகவும் அழகாக பகிர்ந்து கொண்டார்கள். அதை கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
 
முதலில் துனியா விஜய் சாரைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்றபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரை நான் நீண்ட காலமாக கவனித்து வருகிறேன். கன்னடத்தில் அவர் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் பார்த்தபோது, மிகவும் ஒழுக்கமான, அர்ப்பணிப்பான நடிகராக இருந்தார். இயக்குநர் சொல்வதை முழுமையாகக் கேட்டு, அந்த கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக தயார் செய்து கொள்வார். அவர் ஒரு சிறந்த மனிதர், அற்புதமான நடிகர். அவருடன் பணியாற்றியது எனக்கு பெருமையாக இருக்கிறது.
 
விடிவி கணேஷ் சாருக்கு என் நன்றிகள். அவரைப் பற்றி எனக்கு இருந்த எண்ணம் வேறு, ஆனால் அவருடன் இணைந்து நடித்த பிறகு அவருடைய நடிப்பு திறமையை இன்னும் நெருக்கமாக புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு காட்சியை எப்படி இன்னும் சிறப்பாக மாற்றலாம் என்பதில் எப்போதும் ஆர்வமாக இருப்பார். படப்பிடிப்பு தளத்திலும், திரையிலும் அனைவரையும் மகிழ்விக்கக் கூடிய ஒரு அற்புதமான கலைஞர். அவர் இருக்கும் இடத்தில் எப்போதும் உற்சாகம் இருக்கும்.
 
சம்யுக்தாவுக்கு நன்றி. மிகவும் திறமையான மற்றும் புத்திசாலித்தனமான நடிகை. ஒரு கதாபாத்திரத்தை விரைவாகப் புரிந்து கொண்டு, அதை மிக இயல்பாக வெளிப்படுத்தும் திறமை அவருக்கு இருக்கிறது.  படத்திற்காக அவர் எடுத்த முயற்சியும், அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது. இன்று இந்த மேடையில் அவர் பேசிய விதமும் மிகவும் அழகாக இருந்தது.
 
இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வரின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். நான் தற்போது டீசர் இசையை மட்டுமே கேட்டிருக்கிறேன். அது மிகவும் சிறப்பாக இருந்தது. படத்தின் முழு இசை ரசிகர்களை வெகுவாக கவரும் என்று நம்புகிறேன்.
 
“முதலில் சார்மி மேடத்திற்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். படப்பிடிப்பு தளத்தில் எவ்வளவு பெரிய சவால்கள் இருந்தாலும், அதை மிகுந்த அமைதியுடனும் உறுதியுடனும் கையாண்டார். ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், முழு படத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக செயல்பட்டார். இயக்குநருக்கு என்ன தேவை, அதை எப்படி சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே அவர் கவனம் செலுத்துவார். இன்று நீங்கள் திரையில் பார்க்கப் போகும் இந்தப் படத்தின் தரத்தில் அவருடைய பங்கு மிகப்பெரியது. அவருடைய மன உறுதியையும், அர்ப்பணிப்பையும் நான் மிகவும் மதிக்கிறேன்.”
 
“பூரி ஜெகன்நாத் சார் ஒரு வரலாறு. அவருடைய சினிமா பயணமும், வாழ்க்கை அனுபவங்களும் மிகவும் ஊக்கமளிப்பவை. பல ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார். ஒரு கதையை முடித்தவுடன் அடுத்த கதையைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுவார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காலத்திலும் அவர் பல கதைகளை என்னிடம் பகிர்ந்திருக்கிறார். ஒவ்வொரு கதையும் தனித்துவமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது.”
 
“ஒரு காட்சியை உருவாக்குவதிலும், அதை திரையில் வெளிப்படுத்துவதிலும் அவருக்கு இருக்கும் தெளிவு அபாரமானது. அவருக்கு என்ன வேண்டும், ஒரு ஃபிரேமில் என்ன இருக்க வேண்டும், எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த தெளிவு இருக்கும். அப்படிப்பட்ட இயக்குநருடன் பணியாற்றும்போது ஒரு நடிகராக நமக்கு மிகுந்த நம்பிக்கையும், பாதுகாப்பான உணர்வும் கிடைக்கும். ‘நீங்கள் பாதுகாப்பான கைகளில் இருக்கிறீர்கள்’ என்ற நம்பிக்கையை அவர் எப்போதும் கொடுப்பார்.”
 
படம் மிகவும் வலுவான கதையுடன் உருவாகியுள்ளது. ஆக்சன், உணர்வுகள், மனித உறவுகள் என அனைத்தும் இதில் இருக்கின்றன. பூரி ஜெகன்நாத் சாரின் சிறந்த படங்களில் ஒன்றாக ‘ஸ்லம் டாக்’ இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தில் அவருடைய ஈடுபாடும், நம்பிக்கையும், உழைப்பும் மிகத் தெளிவாக தெரிகிறது.”*
 
“இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தை நான் மிகவும் ரசித்தேன். இயக்குநர் மற்றும் நடிகர் இடையே உருவாகும் அந்த நம்பிக்கையும், புரிதலும் இந்தப் படத்தில் மிகவும் அழகாக அமைந்தது. பூரி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் இருக்கிறது. அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.”
 
”‘ஸ்லம் டாக்’ திரைப்படம் அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த படத்திற்காக உழைத்த இயக்குநர் பூரி ஜெகன்நாத் சார், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்‘
 
விஜய் சேதுபதியுடன் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை தபு மற்றும் கன்னட நட்சத்திரம் துனியா விஜய் நடித்துள்ளனர். மேலும் பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர்  ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்  இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
 
பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் ஆகியோர் Puri Connects நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த திரைப்படம், JB Motion Pictures நிறுவனத்துடன் இணைந்து உருவாகியுள்ளது.
 
“ஸ்லம் டாக்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ளது
 
 

முதல்வர் விஜய் பத்திரிகையாளர்கள் சந்திப்பு எப்போது?!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “வருவாய் துறையில் மக்களுக்கான சேவைகளை விரைவாக வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுப் பணிகளை இன்று நடத்துகிறோம். குறிப்பாக சாதித் சான்றிதழ் விரைந்து கிடைக்க என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதற்காக முடிவுகளை மேற்கொள்ள இருக்கிறோம். ரேஷன் கார்டுகள், முதியோர் உதவித் தொகை, சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களை எப்படி எளிதாக கிடைக்கும் வகையில் நிறைவேற்றுவது என ஆய்வு செய்ய உள்ளோம்.

ஆன்லைன் முறையில் பதிவு செய்யும்போது, சில நேரங்களில் கால தாமதம் ஏற்படுவதாகக் குறைகள் உள்ளது. ஆன்லைன் மூலமாக பதிவு செய்தவுடன், அந்தந்த வருவாய் வட்டத்தில் விஏஓக்கள் ஆய்வு செய்து அந்தப் பணிகளை 5 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்கவில்லையென்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அரசு நிலங்கள் எந்தெந்த இடங்களில் உள்ளது, அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் ஆய்வு செய்யவுள்ளோம். பட்டா மாறுதலில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்க உள்ளோம். தமிழகத்தின் பேரிடர் மேலாண்மை பணிக்கு ரூ.1000 கோடி தேவை என சொன்னோம், அதனை முன்னெச்சரிக்கையாகவே மத்திய அரசு வழங்கியிருக்கிறது.

முதல்வர் செயல்பாடுகளையே முக்கியமாக நினைக்கிறார். சொன்னதைச் செய்கிறோமா, மக்கள் அதில் மகிழ்ச்சி அடைகிறார்களா என்பதையே முதல்வர் பார்க்கிறார். பத்திரிகையாளர்களை சந்தித்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதை காட்டிலும், செயல்வடிவத்திலே அவருடைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

மாரிதாஸ் எந்த அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என சட்ட ரீதியாக தெரியவில்லை. பத்திரிகை சுதந்திரம் என்பது தனிப்பட்ட விமர்சனமாக இல்லாமல் மக்கள் வளர்ச்சிப் பணிகளில் இருக்க வேண்டும். அப்போதுதான் நாடே வளர்ச்சியடையும்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதல்வர் விஜய் கட்டாயம் பத்திரிகையாளர்களை மதித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கணவனின் கொடூர செயல்! கதறி ஓடிய மனைவி!!

சேலம் மாவட்டம், ஆத்தூர் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதுடைய கணேசன். இவருக்கும் தென்னங்குடி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய நந்தினி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணேசன் விவசாய கூலி தொழில் செய்து வந்த நிலையில் மனைவி நந்தினி அருகில் உள்ள தனியார் மில் பகுதியில் வேலை பார்த்து வருகிறார். கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் கணேசன் நந்தினியை அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.


தொடர்ந்து கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கணவனை பிரிந்து வாழ முடிவு செய்த நிலையில் மனைவி நந்தினி குழந்தையை தன்னுடன் அழைத்துக் கொண்டு தென்னங்குடி பாளையம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து வீட்டுக்குச் சென்ற கணவன் வீட்டில் மனைவி இல்லாததால் உடனடியாக தென்னங்குடி பாளையத்தில் உள்ள தனது மாமியார் சங்கீதா வீட்டிற்கு சென்று மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு கோட்டை பகுதியில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார்.


பின்னர் வீட்டில் வைத்து மனைவி நந்தினி கணேசனை தாக்கியதாக சொல்லப்படுகிறது. அப்போது நந்தினி சத்தமிட்டு அலறவே கணேசன் மனைவியை அழைத்துக்கொண்டு உப்பேடை பகுதியில் உள்ள அய்யனார் கோயில் ஏரி பகுதிக்கு அழைத்து சென்று அவரை கல்லால் தலை மற்றும் கால்களில் தாக்கியுள்ளார். மேலும் அவரது ஆடைகளையும் கலைத்து கடுமையாக தாக்கியதில் வலி தாங்காமல் மனைவி நந்தினி அங்கிருந்து தப்பி ஓடி அருகே உள்ள ஒரு வீட்டில் துணி வாங்கி அணிந்து கொண்டு தந்து தாய் வீட்டிற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து அவர்கள் நந்தினியை ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கணேசன் மீது வழக்கு பதிவு செய்து நந்தினியிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் அடிப்படையில் ஆத்தூர் நகர போலீசார் கணேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மனைவியை கொடூரமாக ஆடைகளை கலைந்து தாக்கிய கொடூர கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பைக் திருடர்கள் சிக்கினார்கள்! உங்கள் பைக் அதில் இருக்கா? புகார் கொடுங்கள்!!

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தொடர்பாகப் பல்வேறு புகார்கள் பெறப்பட் டன. பைக்குகள் திருடுபோன இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் அலங்கா நல்லூர் பகுதியைச் சேர்ந்த சரத் பாபு (40), அணைக்கட்டு தாலுகா அல்லிவரம் பகுதியைச் சேர்ந்த விமல்குமார் (31) ஆகிய இருவரை ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை வேலூர் மாவட்டம் கணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளனர். இதற்கு கணியம்பாடி மோட்டுகுளம் பகுதியைச் சேர்ந்த வரும், சென்னை ஸ்ரீபெரும்புதூரில் தமிழ்நாடு பட்டாலியன் சிறப்புப் படையில் காவல ராகப் பணிபுரிந்து வருபவருமான மணிகண்டன் (32) என்பவர் உதவி செய்ததும் தெரிய வந்தது. திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை வேலூர் மற் றும் கணியம்பாடி பகுதிக்குக் கொண்டு வந்து மிகக் குறைந்த விலைக்கு இவர்கள் விற்றுள்ளனர்.

இதையடுத்து, கணியம்பாடியில் இருந்த காவலர் மணிகண்டனை ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து, அங்கு குறைந்த விலைக்கு விற்கப்பட்ட 60-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை போலீஸார் மீட்டனர். இந்த மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பாக பெறப்பட்ட புகார்கள் பலவற்றுக்கு வழக்குப் பதிவு செய்யப்படாததால், அதனை உரியவர்களிடம் ஒப்படைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் சிலர் தெரிவிக்கின்றனர்.

 

அப்பாவை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை!

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி என்ற மகேஷ் (43). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கல்யாணி மற்றும் இவர்களுக்கு மகாராஜன் (18) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். இதில் மகாராஜன் 9-ம் வகுப்பு படித்து அதில் தேர்ச்சி பெறவில்லை என்பதால், அதன் பின்னர் பள்ளிக்கு செல்லாமல் படிப்பை நிறுத்தி ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது.

இந்நிலையில் தந்தை-மகன் 2 பேருமே மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு மாயாண்டி மதுபோதையில் வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படும் நிலையில், நேற்று அதிகாலை 2 மணி அளவில் தந்தைக்கும்-மகனுக்கும் இடையே வீட்டில் வைத்து மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மது போதையில் இருந்த மகன் மகாராஜன் ஆத்திரம் அடைந்து வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் தந்தை என்றும் பாராமல் தலையில் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து மாயாண்டி உயிரிழந்துள்ளார்.  

பின்னர் மகாராஜன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாயாண்டி உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பிச்சென்ற மகன் மகாராஜனை போலீசார் தேடி வருகின்றனர். பெற்ற தந்தையை மகன் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாநகரில் கஞ்சா, மது போதையில் அடிக்கடி பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி சந்திப்பு, குறுக்குத்துறை, டவுன் பகுதிகளில் கஞ்சா பொட்டலங்கள் தாராளமாக கிடைக்கிறது என்றும், அதனை இளம் வயதினர் வாங்கி புகைத்து போதையில் தகராறில் ஈடுபடும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது எனவும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகிறார்கள். எனவே போலீசார் கூடுதல் ரோந்து பணியில் ஈடுபட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்வதோடு குண்டர் சட்டத்தில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையில் எம்.டி.இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் டிபிஏ!

சென்னை:

எம்.டி.இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் டிபிஏ பிரைவேட் லிமிடெட், தனது வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய நிகழ்வாக சென்னையில் தனது செயல்பாடுகளை பெருமளவில் விரிவுபடுத்துவதை பெருமிதத்துடன் அறிவித்துள்ளது. மேலும், தென்னிந்தியா முழுவதும் மருத்துவக் காப்பீடு செயல்பாடுகளில் நிர்வாகத்திறனை வலுப்படுத்துவதற்கு இந்நிறுவனம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புக்கு சான்றாக இது இருக்கிறது.

IRDAI-ஐ பதிவு பெற்ற மூன்றாம் தரப்பு நிர்வாக சேவை நிறுவனமான எம்.டி.இந்தியா, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் காப்பீடுத் துறையில் சிறப்பாக இயங்கி வருகிறது. பாலிசிதாரர்கள், காப்பீட்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு கோரிக்கை சேவைகள், மருத்துவமனை ஒருங்கிணைப்பு மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு ஆகியவை மிகவும் அவசியமாகியுள்ள இக்காலத்தில் இந்த விரிவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 23 அலுவலகங்கள் மற்றும் சென்னையில் 4 அலுவலகங்களுடன் இயங்கி வரும் எம்.டி.இந்தியா டிபிஏ இம்மாநிலத்தில் தனது சேவைக்கான செயற்பரப்பை மேலும் ஆழப்படுத்தி வருகிறது. பாலிசிதாரர்களின் மருத்துவக் காப்பீடு கோரிக்கைகளை பரிசீலித்து தீர்வு வழங்கும் ஐந்தாவது ‘சிறப்பு சேவை மையம்’ மிக விரைவில் சென்னையில் தொடங்கப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் எம்.டி.இந்தியாவின் பயணம் அண்ணா சாலையில் (மவுண்ட் ரோடு) தொடங்கப்பட்ட முதல் கிளை அலுவலகத்துடன் ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து குணா காம்ப்ளக்ஸ் மற்றும் ரஹேஜா டவர்ஸ் ஆகிய இடங்களிலும் தனது அலுவலகங்களை நிறுவிய இந்நிறுவனம்,  இப்பகுதியில் காப்பீடு சேவைகளுக்கான தேவைகள் தொடர்ந்து அதிகரித்ததால், கீழ்ப்பாக்கத்தில் முதலில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் அலுவலகம் மூன்று பிரத்யேக அலுவலகங்களாக விரிவாக்கம் செய்யப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் உள்ள என்ஆர்சிஎஸ் டவரில் தற்போது திறக்கப்பட்டுள்ள புதிய கிளை, மருத்துவம் மற்றும் காப்பீடுச் சேவைகளுக்கான முதன்மை மையமாக வளர்ந்து வரும் சென்னையின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.

ஆரம்பத்தில் சுமார் 100 ஊழியர்களுடன் தொடங்கிய எம்.டி.இந்தியாவின் சென்னை பிரிவின் செயல்பாடுகள், தற்போது 450-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக்  கொண்டதாக சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிறுவனம் இழப்பீடு கோரிக்கைகளை பரிசீலித்து தீர்வு வழங்குவதற்காக  120-க்கும் மேற்பட்ட மருத்துவர்களையும் பணியில் சேர்த்துள்ளது. இது விரைவான சேவை, சிறப்பான மேலாண்மை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிரமமற்ற எளிதான ஆதரவு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விரிவாக்கம் குறித்து எம்.டி.இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் டிபிஏ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. சமீர் போன்ஸ்லே கூறுகையில்:

“ஒரு நபரோ அல்லது குடும்பமோ மருத்துவமனையில் தெளிவு, ஆதரவு மற்றும் நம்பிக்கையைத் தேடும் மனித வாழ்வின் ஒரு மிக முக்கியமான கட்டத்தில்தான் எங்களது சேவைக்கான பணி தொடங்குகிறது என்பதை எம்.டி.இந்தியா-ல் நாங்கள் நன்கு புரிந்துகொண்டிருக்கிறோம். பொதுமக்களுக்குப் பரிவு மற்றும் பொறுப்புணர்வுடன் விரைவாக சேவை செய்வது எமது கடமை என்பதை நாங்கள் புரிந்து செயலாற்றி வருகிறோம். எங்களின் இந்தச் சென்னை விரிவாக்கம் என்பது புதிய அலுவலகம் அல்லது பெரிய அளவிலான செயல்பாடுகளைப் பற்றியது மட்டுமல்ல; மக்களுக்கு, மருத்துவமனைகளுக்கு மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு எப்போது மிகவும் தேவையோ, அப்போது நம்பகமான காப்பீடு கோரிக்கை மேலாண்மை செயல்பாடுகளை வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் அருகிலேயே விரைவாக வழங்குவது  என்ற குறிக்கோளை சார்ந்திருக்கிறது.”

உள்ளூர் பணியாளர்களை உருவாக்கி மேம்படுத்துவதும், சொந்த ஊரிலேயே நல்ல வருவாய் தரும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் இந்த விரிவாக்க நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். முன்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த பல சுகாதார மற்றும் கார்ப்பரேட் துறை நிபுணர்கள் சிறந்த வேலைவாய்ப்புகளுக்காக டெல்லி, மும்பை, பெங்களூரு அல்லது புனே போன்ற நகரங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. சென்னையில் இந்த விரிவாக்கத்தின் மூலம், உள்ளூர் நிபுணர்கள் தங்கள் சொந்த மாநிலத்திலேயே தங்கிப் பணியாற்றுவதற்கான சிறந்த வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதே எம்.டி.இந்தியா நிறுவனத்தின் நோக்கமாகும்.

விரைவில் செயல்பாடுகளை தொடங்கவிருக்கும் ‘சிறப்பு மையம்’ வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தென்னிந்தியா முழுவதும் மருத்துவச் சேவைகளை எளிதில் பெறுதல், செயல்திறன் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்குதல் ஆகியவற்றில் எம்.டி.இந்தியா-ன் நீண்டகால பொறுப்புறுதிக்கு இது சான்றாக திகழ்கிறது. தானியக்க செயல்பாடாக மருத்துவக் காப்பீடு கோரிக்கை மேலாண்மைக்கான எதிர்காலத் திட்டத்தை உருவாக்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் சார்ந்த காப்பீடு கோரிக்கைக்கான தீர்வு அமைப்பைச் செயல்படுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டு அதில் முதலீடு செய்து வருகிறது.

He-Man and the Masters of the Universe – Review

Us Indian millennials, and even plenty of Gen Z viewers, grew up watching He-Man cartoons on television before school. The premise was simple and endlessly appealing: Prince Adam, heir to the kingdom of Eternia, raises the Sword of Power and declares, “By the Power of Grayskull, I have the power!”, transforming into the mighty He-Man. Alongside allies like Teela, Man-At-Arms, and his faithful companion Cringer, He-Man protects Eternia from the schemes of the evil Skeletor. It is classic good-versus-evil fantasy, packed with larger-than-life heroes, colourful villains, magical creatures, and enough adventure to fire up a child’s imagination.

Director Travis Knight’s adaptation of the film understands why people loved that formula in the first place. More importantly, it understands that there is no need to apologise for it. The story itself is fairly straightforward. There are no shocking twists or attempts to reinvent the mythology from scratch. What impressed me was how confidently it tells a familiar story. A lesser adaptation could have settled for generic fantasy, but Masters of the Universe is consistently engaging throughout its runtime.

The writing keeps things moving at a brisk pace, and the film rarely wastes time. There is usually something entertaining, funny, or character-driven happening on screen. Once it settles into its rhythm, it becomes an easy film to get swept up in. The tone of He-Man: Masters of the Universe deserves particular credit. This is a movie made for people who grew up with He-Man, and it is packed with fan service and references. At the same time, it doesn’t slips into full-on mocking parody. The film pokes fun at how some things about this story are so ridiculous, but it never comes at the expense of the material itself. The film is happy to laugh with its characters without laughing at them.

Nicholas Galitzine turns out to be excellent casting as Adam and He-Man. Physically, he not only looks the part, but his performance goes beyond simply fitting the image of the character. This version of Adam spends much of the film trying to convince people that he truly is the prince of Eternia. Galitzine handles the character’s awkwardness and humour just as comfortably as he handles the heroic moments. He never pushes Adam too far into comedy, nor does he reduce him to a one-note action hero. For example, Adam is shown has working in human resources while stranded on Earth. He repeatedly tries applying workplace conflict-resolution techniques to situations that clearly do not call for them, creating some funny moments that fit naturally into the story.

Camila Mendes delivers a solid performance as Teela. Her character plays an important role early on, although the film gradually focuses fully on the main hero. While this is undeniably Adam’s story, the relationship between the two characters feels like an area that could have received a little more attention. By the end, it felt like some interesting possibilities were left unexplored.

Idris Elba is equally dependable as Duncan, better known as Man-At-Arms. He brings the warm and strong mentor presence to the role. The relationships and chemistry between the main characters is nice to watch and adds the human touch to this fantastical world. If there is one character who threatens to walk away with the entire film, it is Skeletor. Jared Leto’s performance captures exactly what makes the villain memorable. Skeletor is intimidating and dangerous, but he is also flamboyant, sarcastic, and endlessly entertaining. The film understands that those qualities are inseparable. His dialogue hits the mark every time as his delivery is excellent, and he manages to be menacing without losing the darkly funny personality fans remember. This version feels recognisably like the Skeletor many of us grew up watching, while also fitting comfortably into a modern blockbuster. The skull-faced villain looks fantastic on screen, and the visual design sells his presence. Alison Brie also makes the most of her role as Evil-Lyn, delivering exactly what the cunning character requires and forming a one-sided partnership with Skeletor throughout the film.

Fans will also be pleased to see familiar names such as Cringer, Ram-Man, Fisto, Mekaneck, and several other Eternian favourites. Importantly, they do not look out of place in live action. The film successfully translates many of these designs without making them appear ridiculous. The action sequences in the film are quite enjoyable throughout. The fighting is very He-Man like, i.e., using various moves to throw away your opponents with some punches here and there. While these are unlikely to rank among the greatest action scenes ever filmed, they provide plenty of exciting moments and make good use of the characters’ abilities. 

Visuals wise, you will see dragons, alien races, magical creatures blending into the world naturally. At no point did the CGI distract me or pull me out of the experience. The visual effects team clearly understood the challenge of bringing Eternia to life and generally succeeds. The soundtrack features familiar musical motifs and references to classic He-Man themes appear throughout the film, providing a welcome dose of nostalgia without becoming overbearing. For much of its runtime, He-Man and the Masters of the Universe keeps things light, funny, and adventurous. Then comes a scene near the climax between He-Man and Skeletor and reveals a deeper understanding of the material. The sequence explores Adam’s identity and Skeletor’s obsession. Despite it all being about swords and magic, the story also is about Adam’s responsibility to be Eternia’s champion. You see a sincerity in this and shows Travis Knight has a good understanding of these characters and why their motives matter.

 

‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு. கி. சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

‘அந்தரன்’ திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், ‘அருவி’ பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், வி ஜே ராஜூ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹரி எஸ் ஆர் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை இக்னேசியஸ் அஸ்வின் மற்றும் சதீஷ் குரோசாவா மேற்கொள்ள கலை இயக்கத்தை சசிகுமார் கவனித்திருக்கிறார் பரபரப்பான கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மு.கி. சாம்பசிவம் தயாரிக்க சந்தோஷ் ராவணன் இயக்கியிருக்கிறார்.

வரும் 25ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன் தயாரிப்பாளர் சி. வி. குமார், நடிகை சாண்ட்ரா, பிக் பாஸ் சபரி, ‘விக்கல்ஸ்’ விக்ரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரம் பேசுகையில், ”பிக் பாஸ் மூலமாகத்தான் இப்படத்தின் நாயகன் பிரஜின் நண்பரானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அதற்கு முன்-பின் என ஒரு புதிய வரலாறு உருவாகும். அதேபோல் நண்பர் பிரஜின் நடித்திருக்கும் ‘அந்தரன்’ படத்தின் மூலம் அந்தரனுக்கு முன், அந்தரனுக்கு பின் என பிரஜினின் முன்னேற்றம் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இருக்கும் என்று நம்புகிறேன்.

பிக் பாஸ் வீட்டில் அவர் தன்னுடைய திரையுலக பயணத்தில் நடைபெற்ற சம்பவங்களை விவரித்து கொண்டே இருப்பார். அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வாழ்த்துகிறேன்,” என்றார்

நடிகை இவானா வருண் பேசுகையில், ”இது என்னுடைய முதல் திரைப்படம். அதனாலயே இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். படப்பிடிப்பு தளத்தில் குழுவாக இணைந்து அனைவரும் வழங்கிய ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி. படப்பிடிப்பு அனுபவங்கள் மறக்க முடியாதது.

நாங்கள் கலைஞர்கள். உணர்வுகளை கதாபாத்திரங்களின் வழியாக வெளிப்படுத்துகிறோம். அதன் மூலமாக நாங்கள் அனைவரும் ரசிகர்களுடன் தொடர்பு கொள்கிறோம். இந்த படம் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த திரைப்படத்தை ஜூன் 25ஆம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் சந்தோஷ் ராவணன் பேசுகையில், ”இந்த திரைப்படத்தின் கதையை தயாரிப்பாளர் சாம்பசிவத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினேன். அதனை படித்து இரண்டு நாட்களில் ‘கதை நன்றாக இருக்கிறது. ஆனால் இப்போது என்னால் தயாரிக்க இயலாது’ என்றார். அதன் பிறகு ஆறு மாதம் கழித்து மீண்டும் என்னை அழைத்து, ‘என்னுடைய நண்பர் ராஜேந்திர பிரசாத் வருகை தந்துள்ளார். அவருக்கு கதையை சொல்ல முடியுமா?’ எனக் கேட்டார். கதையை சொன்னேன் அவருக்கும் பிடித்திருந்தது. அவர் கொடுத்த பேராதரவின் காரணமாகத்தான் தயாரிப்பாளர் சாம்பசிவம் இப்படத்தின் பணிகளைத் தொடங்கினார். அதன் பிறகு நெருக்கடியான சூழல் ஏற்பட்டபோதும் எனக்கு கொடுத்த வாக்குறுதியின் காரணமாக படத்தின் பணிகளை நிறைவு செய்து, தற்போது வெளியிடுகிறார். இதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் இந்தப் படத்தில் அவர் சங்கர் எனும் கதாபாத்திரத்தில் நாயகியின் தந்தையாக நடித்திருக்கிறார். அவர்தான் கதாநாயகனாகவும், வில்லனாகவும் இருப்பார். அதற்கும் நன்றி.

நான் படப்பிடிப்பு தளத்தில் நாயகி உடன் பேசியதே இல்லை. ஏனெனில் அவர் பேசும் இந்தி எனக்கு தெரியாது. நான் பேசும் ஆங்கிலம் அவருக்கு புரியாது. இதனால் இந்தியும் ஆங்கிலமும் தெரிந்த ஒரு உதவியாளரை வைத்துக் கொண்டுதான் அவருடன் பணியாற்றினேன். ஆனால் திரையில் அவருடைய நடிப்பு ரசிக்கும் வகையில் இருக்கும்.

‘அந்தரன்’ என்றால் ஒரு ஹண்டர். ஹண்டர் என்றால் மறைந்திருந்து தாக்குபவன் என பொருள். நம்முடைய தினசரி வாழ்வில் பல விஷயங்களை கடந்து செல்கிறோம். ஆனால் அதன் மூலமாக ஏதேனும் மோசமான விளைவுகள் ஏற்பட்ட பிறகுதான் அதன் சீரியஸ்னஸை பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டதுதான் ‘அந்தரன்’. அதைப் பற்றி இப்போது விரிவாக சொல்ல இயலாது. படம் பார்க்கும்போது ரசிகர்கள் அனைவரும் உணர்வார்கள்.

இந்த திரைப்படம் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் ஒரு வழக்கினை தழுவியது. இந்த வழக்கு தொடர்பான எந்த விவரங்களையும் நான் இதுவரை தயாரிப்பாளரிடம் கூட பகிர்ந்து கொண்டதில்லை. படம் வெற்றி பெற்ற பிறகு இதைப்பற்றி சொல்கிறேன். ஆனால் நிச்சயமாக இந்த ‘அந்தரன்’ வழக்கமான படமாக இருக்காது என்பதை மட்டும் நான் உறுதியாக சொல்ல முடியும்.

‘போர் தொழில்’, ‘ராட்சசன்’, ‘தெகிடி’ ஆகிய திரைப்படங்களில் இருந்தது போன்ற ஒரு தனித்துவமான விஷயம் இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் இருக்கிறது. இது நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும்.

இந்தப் படத்தின் கதை திரில்லர் தான். ஆனால் அதனை ரொமான்டிக்காக சொல்லி இருக்கிறோம். ரொமான்டிக்கான சீன்கள் நிறைய இருக்கிறது. இது ஏன் என்பதற்கான காரணம் உச்சகட்ட காட்சியில் சொல்லியிருக்கிறோம்.

இந்தக் கதையை தயாரிப்பாளர் சி. வி. குமாரிடம் சொன்னேன். அவர்தான் இந்தக் கதையில் பல விஷயங்களை சேர்க்கலாம் என ஆலோசனை சொன்னதுடன் மட்டும் நிற்காமல் நிறைய நடிகர், நடிகைகளையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் பயன்படுத்திக் கொள் என பரிந்துரையும் செய்தார் . அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய முழுமையான பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்கினர்,” என்றார்.

தயாரிப்பாளர் சி வி குமார் பேசுகையில், ”இப்படத்தின் தயாரிப்பாளர் சாம்பசிவம் என்னுடைய நெருங்கிய நண்பர். 2019ம் ஆண்டில் ‘அடவி’ என்றொரு திரைப்படத்தை தயாரித்தார். அந்தப் படத்தின் வெளியீட்டிற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். அன்று முதல் இன்று வரை நல்லதொரு நட்பு நீடிக்கிறது.

அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் ‘மனிதர்கள்’ என்றொரு படத்தை தயாரித்தார். அந்த திரைப்படத்தை வணிக ரீதியில் வெளியிடுவதற்காக பார்வையிட சொன்னார். அந்தப் படத்தை பார்த்தேன். ஆனால் அது ஆர்ட் ஃபிலிம். இந்த திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழாவிற்கு அனுப்பலாம். திரையரங்குகளில் வெளியிட வேண்டாம் என ஆலோசனை சொன்னேன். ஆனால் அவர் அந்தத் திரைப்படத்தையும் துணிச்சலுடன் திரையரங்குகளில் வெளியிட்டார்.

இயக்குநர் சந்தோஷ் இராவணன் எனக்கு மிகவும் தெரிந்தவர். கொரோனா காலகட்டத்திற்கு முன் என்னுடைய அலுவலகத்தில் பணியாற்றியவர். அதன் பிறகு தொடர்பில் இல்லை. பிறகு ஒருநாள் சாம்பசிவம் என்னை போனில் தொடர்பு கொண்டு, ‘உங்கள் அலுவலகத்தில் பணியாற்றிய சந்தோஷ் சொன்ன கதை நன்றாக இருக்கிறது’ என என்னிடம் சொன்னார். சந்தோஷ் திறமையானவர் தான், படத்தை தயாரிக்கலாம் என நம்பிக்கை கொடுத்தேன். அதன் பிறகு படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொடர்பான பரிந்துரையை கேட்டார்கள். நானும் வழங்கினேன்.

படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும் முன் இயக்குநர் சந்தோஷ் என்னை சந்தித்து அதனை காண்பித்தார். அப்போது டைட்டில் ‘அந்தரன்’ என்று இருந்தது. அவரிடம் நீ வேறு ஒரு டைட்டில் தானே வைத்திருந்தாய். ஏன் மாற்றினாய் என்று கேட்டபோது, தயாரிப்பாளரின் தேர்வு என்று விளக்கம் அளித்தார். உடனே தயாரிப்பாளரிடம் ஏன் இந்தப் படத்திற்கு அந்தரன் என பெயர் வைத்திருக்கிறீர்கள் என கேட்டேன். பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு டைட்டில் வைத்தால் அது அனைவருக்கும் புரிய வேண்டும். ஒவ்வொருவருக்கும் டைட்டிலுக்காக விளக்கம் கொடுத்து கொண்டு இருக்க வேண்டாம் என்று சொன்னேன்.

அதற்கு அவர் குடும்பத்துடன் ஆலயத்திற்கு சென்று விருப்ப சீட்டை போட்டு தேர்ந்தெடுக்கும் போது அதில் ‘அந்தரன்’ என்று தான் வந்தது. இதனை என் மனைவி தான் தேர்வு செய்தார்கள். அதனால் அந்த டைட்டிலை மாற்ற இயலாது என்று அன்பாக சொன்னார். நான் உடனே சிரித்துக்கொண்டே சரி என்று சொல்லிவிட்டேன்..

இந்த திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். நல்ல படம் .கதையின் போக்கை யாராலும் இறுதிவரை கணிக்க இயலாத அளவிற்கு சுவராசியமாக இயக்குநர் படத்தை உருவாக்கியிருக்கிறார்.

இந்தப் படம் ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் நன்றாக இருந்தால் ஊடகங்களும் , ரசிகர்களும் கொண்டாடுவார்கள். இதற்கு என்னுடைய நிறுவனத்திலிருந்து வெளியான படைப்புகளே சாட்சி. அந்த வகையில் இந்த படமும் நன்றாக இருக்கிறது. வெற்றி பெறும், வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் மு கி சாம்பசிவம் பேசுகையில், ”அடவி, மனிதர்கள் ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து அந்தரன் என்னுடைய மூன்றாவது திரைப்படம். படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.‌ தமிழ் சினிமாவின் யுனிவர்சிட்டி என போற்றப்படும் நண்பரும் , தயாரிப்பாளருமான சி வி குமார் மற்றும் விக்ரம், சபரி, சாண்ட்ரா ஆகிய சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி.

தயாரிப்பாளர் சி வி குமார் ‘சூது கவ்வும்’  படத்தினை தயாரித்துக் கொண்டிருந்தபோது என்னை சந்தித்து நல்லதொரு கதை இருக்கிறது தயாரிக்கிறீர்களா என கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்று சொன்னேன். பணத்தை யார் கேட்டார்கள், படத்தை தயாரிக்கிறாயா எனக் கேட்டார். சி வி குமாருக்கு நல்ல கதை கிடைத்தால் போதும். அதை படமாக உருவாக்குவார். அந்த அளவிற்கு அவர் திறமையானவர். தமிழ் திரையுலகில் ஏராளமான புதுமுகங்களை அவர் அறிமுகப்படுத்தி இருக்கிறார். ஒரு திரைப்படத்திற்கான கன்டென்ட் மற்றும் சரியான விஷயம் கிடைத்துவிட்டால் அவர் தயாரிப்பார். இந்தப் படம் உருவானதற்கும் அவர்தான் காரணம். அதனால் அவருக்கு சிறப்பு நன்றி.

இயக்குநர் கதையை சொன்னார், அது எனக்கு பிடித்திருந்தது. அப்போது என்னிடம் பணம் இல்லை என்று சொன்னேன். அதன் பிறகு எனக்கு ஒரு குழு அமைந்தது. நான் தயாரித்த இரண்டு திரைப்படங்களிலும் நல்லதொரு கன்டென்ட் இருந்தது. அதேபோல் இந்த திரைப்படத்திலும் சமூகத்துக்கு தேவையான ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறோம். அதனை ஒரு க்ரைம் திரில்லராக வழங்கியுள்ளோம். திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்களின் ஆதரவை வழங்குவீர்கள் என நம்புகிறேன்.

புதியவர்கள் ஒன்றிணைந்து ஒரு நல்லதொரு திரைப்படத்தை உருவாக்கினால் அதற்கு விநியோகஸ்தர்களும், ஓடிடி உள்ளிட்ட வர்த்தகம் தொடர்பானவர்களும் ஆதரவை வழங்க வேண்டும் என இந்த தருணத்தில் ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறேன். புதியவர்களின் திரைப்படத்தை ‘நட்சத்திரங்கள் இல்லாத திரைப்படம்’ என புறக்கணிக்க வேண்டாம். ஏனெனில் இன்றைய முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் கடந்த காலத்தில் புது முகங்கள் தான் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்,” என்றார்.

நடிகர் பிரஜின் பேசுகையில், ”இருபது ஆண்டு காலமாக ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி விடாதா என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும். ஏனெனில் தமிழ் ரசிகர்கள் நல்ல திரைப்படத்தை கொண்டாடுவார்கள்.

தயாரிப்பாளர் சாம்பசிவம் அவர்களின் மூன்றாவது திரைப்படம் இது. நல்ல கதை. நல்லதொரு கருத்தை தேர்வு செய்திருக்கிறார். இந்தப் படம் உங்களுக்கு வணிக ரீதியான வெற்றியை தர வேண்டும். தரும். நிறைய போராட்டங்களுக்கு இடையே நல்லதொரு படைப்பை மனதிற்கு நிறைவாக உருவாக்கியிருக்கிறோம். படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இயக்குநர் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் பலர் சென்றுள்ளனர். பலரிடம் பழகி இருக்கிறேன். அதில் விக்ரம் மற்றும் சபரி ஆகியோர் என்னுடைய நெருங்கிய நண்பர்கள். நான் பிக் பாஸ் வீட்டில் விக்ரமுடன் தான் அதிகமாக சண்டை போட்டிருக்கிறேன். யாருடன் நீங்கள் அதிகமாக நெருங்குகிறீர்களோ, அவர்களுடன் தான் உங்களுக்கு சண்டை வரும். அந்த சண்டை மூலமாக வரும் நட்புதான், பிக் பாஸ் வீட்டிற்கு வெளியேயும் நீடிக்கும்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு தரமான படைப்பாக இருக்கும். அவர்கள் செலவிடும் விலை மதிக்க முடியாத நேரத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும் இந்த படம் இருக்கும். ஜூன் 25ம் தேதி ‘அந்தரன்’ திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும்,” என்றார்.