A Decade of Empowerment: Celebrating the Tenth Edition of the Sakthi Awards
‘தினசரி’ விமர்சனம் RATING 2.9/5
ஜி. சங்கர் இயக்கத்தில் சிந்தியா புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையில் ஸ்ரீகாந்த், சிந்தியா லூர்து, பிரேம்ஜி அமரன், எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், மீரா கிருஷ்ணன், ராதாரவி, வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் நடித்துள்ள படம் தான் ‘தினசரி’
விமர்சனம்:
நாயகன் ஸ்ரீகாந்த் நன்றாக படித்து ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார். அவர் தன்னைவிட அதிகம் சம்பளம் வாங்கும் பெண்ணையே திருமணம் செய்ய நிபந்தனைகள் போடுகிறார். அவர் நிபந்தனையை ஏற்க முடியாமல் அவரது திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. தன் குடும்பமே தன்னை ஏமாற்றி திருமணம் செய்து வைத்திருக்கிறது என்று தெரிந்த அவர் மனமுடைந்து போகிறார். ஆடம்பர வாழ்க்கைக்கும் பகட்டு கௌரவத்திற்கும் ஆசைப்பட்டு தன் தாய் தந்தை சொல்லையும் மீறி கடன் வாங்கி தனது பேராசையால் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். பிறகு வாங்கிய கடனை திருப்பி செலுத்துகிறாரா? இல்லையா? என்பதே கதை….
பண பேராசையால் எப்படி எல்லாம் மக்கள் துன்பப்படுகிறார்கள் என்பதைப் பற்றி கதை கூறுகிறது. ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மனம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ வேண்டும் என்பதை உணர்த்துகிறது படம். அம்மாவாக வரும் மீரா கிருஷ்ணன் ஒற்றை ஆளாக வீட்டில் நடக்கும் காட்சிகளைத் தூக்கிச் சுமக்கிறார். இளையராஜாவின் இசை ஓகே. படத்தில் நடித்த ஸ்ரீகாந்த், சிந்தியா லூர்து, பிரேம்ஜி அமரன், எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், மீரா கிருஷ்ணன், ராதாரவி, வினோதினி என அனைவரும் தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். கதை தெளிவாக இல்லை…. சண்டைக்காட்சிகளில் கூடுதல் கவனம் தேவை….
மொத்தத்தில் இந்த ‘தினசரி’ பேராசை….
ராஜ்குமார் (சினிமா நிருபர்)
‘பயர்’ முதல் பாதி விறுவிறுப்பு…. இரண்டாம் பாதி பிசுபிசுப்பு…. RATING 2.9/5
தயாரிப்பாளர் மற்றும் நடிகர் JSK சதீஷ் இயக்கத்தில் பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், ரச்சிதா மகாலட்சுமி, காயத்ரி ஷான், ஜேஎஸ்கே சதீஸ், சிங்கம்புலி, எஸ்.கே.ஜீவா, சுரேஷ் சக்ரவர்த்தி, அனு விக்னேஷ், குழந்தை மனோஜ் ஆகியோர் நடித்துள்ள படம் தான் ‘பயர்’. தற்போது சிறையில் இருக்கும் காசியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை இயக்கியுள்ளார் JSK சதீஷ்.
விமர்சனம்:
நாகர்கோவிலில் காசி என்ற இளைஞர் பிசியோதெரபி மருத்துவர். இவர் பல இளம் பெண்களை காதலித்து ஏமாற்றி அவர்களின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் பறித்து வருகிறார். திடீரென்று காசி காணாமல் போகிறார். உடனே அவரது பெற்றோர்கள் காவல்துறையில் புகார் கொடுக்கிறார்கள். சரவணன் என்ற ஆய்வாளர் குழு விசாரணையை தொடங்குகிறது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் தெரிய வருகிறது. இதற்கிடையில் அமைச்சர் ஒருவர் அந்த விசாரணை வளையத்தில் சிக்குகிறார். பிறகு என்ன நடந்தது? காசியை காவல்துறை ஆய்வாளர் கண்டுபிடித்தாரா? இல்லையா என்பதே கதை….
மருத்துவர் கதாபாத்திரத்தில் பாலாஜி முருகதாஸ் ஏமாற்றும் நடிப்பு ஓகே. படத்தில் சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், ரச்சிதா மகாலட்சுமி, காயத்ரி ஷான், சிங்கம் புலி, சுரேஷ் சக்கரவர்த்தி என அனைவரும் தனக்கு கொடுத்த வேலையை செய்துள்ளனர். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் ஒரு போலீஸ் அதிகாரியாக தனது விசாரணையை தெளிவாக தொடங்கியிருக்கிறார். பெண்கள் பிசியோதெரபி மருத்துவமனைக்கு செல்லும் போது மருத்துவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று படம் சொல்லுகிறது. ஆனால் கிளைமேக்ஸ் சட்டத்தை மீறி விட்டது.
முதல் பாதி விறுவிறுப்பு…. இரண்டாம் பாதி பிசுபிசுப்பு….
மொத்தத்தில் இந்த ‘பயர்’ பத்திட்டு அணையும்……
நட்பு என்றால் நட்பு …! வேலை என்றால் வேலை..!- பிரதீப் ரங்கநாதன் பேச்சு
காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசை வெளியீட்டு விழா
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ இசை வெளியீட்டு விழா!
உலகங்கெங்கும் உள்ள சினிமா ரசிகர்களாலும், அனைத்து வயதினராலும் கொண்டாடப்படுபவரும்; நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையாளரான தனுஷ் அவர்கள் எழுத்து மற்றும் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இத்திரைப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ராபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர், R சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், உதய் மகேஷ், ஶ்ரீதேவி உள்ளிட்ட மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. தனுஷின் ஆஸ்தான தொழில்நுட்ப குழுவான G V பிரகாஷ் இசையமைக்க, லியான் பிரிட்டோ ஒளிப்பதிவில், பிரசன்னா G K படத்தொகுப்பில், ஜாக்கி கலை இயக்கத்தை கவனிக்க, ‘பாபா’ பாஸ்கர் நடன இயக்கம் மேற்கொள்ள பிப்ரவரி-21 அன்று வெளியாக உள்ளது.
அடுத்ததாக இன்று(11-02-25) படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.ஜே.சூர்யா, அருண் விஜய், இயக்குனர்கள் செல்வராகவன், கஸ்தூரி ராஜா, விக்னேஷ் ராஜா,ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சமுத்து, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோருடன் படத்தின் முக்கிய நடிகர்கள் மற்றும் சரண்யா பொன்வண்ணன், பாடலாசிரியர் விவேக், கலை இயக்குனர் ஜாக்கி, ஒளிப்பதிவாளர் லியான் பிரிட்டோ, பாடகி சுபலாஷினி உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
ஸ்ரேயாஸ் ஶ்ரீனிவாசன் (நிர்வாக தயாரிப்பாளர்-NEEK)
முதலாவதாக வுண்டர்பார் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஸ்ரேயாஸ் ஶ்ரீனிவாசன் வரவேற்று பேசும்பொழுது,”தனுஷ் அவர்கள் ‘துள்ளுவதோ இளமைக்கு எப்படி ஆதரவளித்தீர்களோ, அதே போல இந்த இளம் நடிகர்களுக்கும் ஆதரவளிக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டார். GV பிரகாஷ் குமார் பாடல்கள் மற்றும் சிறப்பான பின்னணி இசையை தந்து இந்த படத்தின் முதுகெலும்பாக திகழ்கிறார். தனுஷ் அவர்களின் நட்பிற்காக வந்து சிறப்பித்த அனைத்து சிறப்பு அழைப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்”, என கூறினார்.
எஸ்.ஜே.சூர்யா (நடிகர்-இயக்குனர்)
இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா,” படம் சிறப்பாக வந்துள்ளது, படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். திரைத்துறையில் நடிகர்கள் பற்றாக்குறை உள்ளது; தனுஷ் அவர்கள் ஒரு பட்டாளத்தையே தயார் செய்து அனுப்பி வைத்துள்ளார். ஒரே சமயத்தில் இரு வேறு விதமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை எடுக்கும் இயக்குனராகவும், ஹாலிவுட் வரைக்கும் சென்ற தலைசிறந்த நடிகராகவும் விளங்குகிறார். படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்”, என்றார்.
ராஜ்குமார் பெரியசாமி (இயக்குனர்)
அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி பேசும்பொழுது,”தனுஷ் அவர்கள் எப்படி இவ்வளவு விரைவாக அடுத்தடுத்த படங்களில் இயக்கம் மற்றும் நடிப்பு என்று பரபரப்பாக இருப்பதனால் ஒரு மகா கலைஞனாக விளங்குகிறார். படத்திற்கு GV பிரகாஷ் சிறப்பாக இசையமைத்துள்ளார். படக்குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”, என வாழ்த்தினார்.
விக்னேஷ் ராஜா (இயக்குனர்)
விக்னேஷ் ராஜா பேசும்போது,” இளம் திறமையாளர்களுக்கு எப்பொழுதும் ஆதரவளிப்பவர் தனுஷ் அவர்கள் இந்த படக் குழுவும் அப்படியே உள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள வாய்ப்பளித்த அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. படம் வெற்றியடைய வாழ்த்துக்கிறேன்” என பேசினார்.
தமிழரசன் பச்சமுத்து (இயக்குனர்)
தமிழரசன் பச்சமுத்து பேசும்பொழுது,”தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ‘லப்பர் பந்து’ படத்தை பார்த்துவிட்டு கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியடையும் என்று வாழ்த்தினார். அதேபோல ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ பேசப்படக்கூடிய மற்றும் ஜாலியான திரைப்படமாகவும் இருக்கும் என கூறினார். அவர் கூறியபடி அனைத்தும் நடக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.
அருண்விஜய் (நடிகர்)
அருண் விஜய் வாழ்த்தி பேசும் பொழுது,”சகோதரர் தனுஷ் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் பன்முகத் திறமையாளர். இளைஞர்களை கவரும் விதத்தில், GV பிரகாஷ் சிறப்பான இசையை தந்துள்ளார். படத்தில் நிறைய இளம் திறமையாளர்களுக்கு தனுஷ் வாய்ப்பளித்துள்ளார் அவர்களையும் வாழ்த்துகிறேன்”, என்றார்.
சரண்யா பொன்வண்ணன் (நடிகை)
நடிகை சரண்யா பொன்வண்ணன் பேசும் பொழுது,”நடிகர் தனுஷ் அவர்கள் என்னை அவரது அம்மாகவே நினைப்பவர். படத்தில் நடிக்கும் அனைவரையும் சிறப்பாக கவனித்துக் கொள்ளக் கூடியவர். இன்றும் என்னிடம் ‘நாயகன்’ திரைப்படத்தைப் போல ‘விஐபி’ திரைப்படத்தை பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல எனக்கு இந்த திரைப்படமும் படக்குழுவும் சிறப்பாக அமைந்தது”, என கூறினார்.
ஜி வி பிரகாஷ் குமார் (இசையமைப்பாளர்)
படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசும்பொழுது,”தனுஷ் அவர்கள் இளமையான கதையம்சம் கொண்ட திரைப்படம் என கூறியதால், அதற்கேற்றவாறு இளமை ததும்பும் மாற்று இசையை இப்படத்திற்காக உருவாக்கினோம்.அவருடன் இணைந்து பயணிப்பது சிறப்பான அனுபவம். அவருடைய இயக்கத்தில் முதன்முறையாக இசையமைத்தது புதிய அனுபவமாக இருந்தது.
அதே போல பாடலாசிரியர் விவேக், கலை இயக்குனர் ஜாக்கி, ஒளிப்பதிவாளர் லியான் பிரிட்டோ, பாடகி சுபலாஷினி மற்றும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திரங்களில் நடித்த பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன், ராபியா கதூன், ரம்யா ரங்கநாதன் ஆகியோர் தாங்கள் பணியாற்றிய அனுபவத்தையும், இந்த மிகப்பெரிய வாய்ப்பு அளித்த தனுஷ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியாகும் இத்திரைப்படத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
Chennai Witnesses an Iconic Saree Run Hosted by Taneira and JJ Active
Chennai:
Taneira, a Tata product, partnered with Bengaluru-based fitness company JJ Active and hosted a vibrant morning saree run on Sunday in Chennai. A power-packed community of 1,721 women gathered at Nolambur and transformed it into a breathtaking camaraderie of women draped in magnificent sarees from across the city. A powerful tribute to femininity, fitness, and freedom, the Chennai chapter of Taneira saree run was flagged off by Mr. Ambuj Narayan, CEO of Taneira, and Coach Pramod from JJ Active.
The Taneira Saree Run is a vibrant celebration of heritage and modernity, where tradition gracefully intertwines with contemporary aspirations. Much like the modern woman who balance strength with elegance, the saree transcends its role as mere attire, evolving into a powerful emblem of identity, empowerment, and self-expression. This unique run redefines the six yards, proving that it is not bound by convention but moves with the energy and dynamism of today’s world. Building on the success of previous editions in Pune, Bengaluru, Hyderabad, Kolkata and Ahmedabad, the Chennai chapter of the run further strengthened the bond among women, transforming the saree into a bold statement of resilience and versatility.
On the occasion, Mr. Ambuj Narayan, CEO, Taneira said “The Taneira Saree Run is a tribute to fitness and womanhood, celebrating the saree as a symbol of grace and resilience evolving alongside the strong, dynamic women who wear it. Through this initiative, we aim to redefine perceptions, showcasing the saree as a dynamic expression of strength and versatility. Our partnership with JJ Active reinforces this vision, proving that the saree fits effortlessly into today’s active lifestyles while remaining a cherished legacy. Hosting this event in Chennai, a city rich in culture and energy, brings this vision to life,”
Coach Pramod from JJ Active shared, “Women who dedicate themselves to their families’ well-being often struggle to find time for their own health. Taneira Saree Run is a unique initiative aimed at encouraging women to prioritize their health in a comfortable and supportive environment. It serves as a platform for them to share inspiring stories of overcoming challenges and motivating one another. Chennai marks the sixth city to host the Taneira Saree Run, and we are thrilled to witness the incredible enthusiasm of Chennai’s women in embracing this empowering movement.”
காரில் பதுக்கிய டம்மி கரன்சி நோட்டுகள்!
சென்னை ராயப்பேட்டை பூரம் பிரகாசம் ராவ் சாலையில் வசிக்கும் தொழிலதிபரான கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த ரஷீத் என்பவரது வீட்டில் ஹவாலா பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அவருடைய வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை நடவடிக்கையில் என்ஐஏ அதிகாரிகளும் கைகோத்தனர்.
ரஷீத்தின் வீடு முழுவதும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பின்னர் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவருடைய காரிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அந்த காரில் ரூ.9 கோடியே 48 லட்சம் அளவுக்கு 2 ஆயிரம் ரூபாய் டம்மி கரன்சி நோட்டு கட்டுக்கள் இருந்தது தெரியவந்தது. அந்த டம்மி நோட்டுக்களுடன் ரசீத் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரஷீத்தை கைது செய்தனர். டம்மி நோட்டுகளை வைத்து இருந்ததன் பின்னணி குறித்து அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரஷீத் ஹவாலா பணப்பரிமாற்றம், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டாரா என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகளும் தனியாக புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பெண்கள் மீதான வன்முறைகள்…. விடா முயற்சி கதை!
நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் இயக்குநர் மகிழ் திருமேனியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படத்தில் உள்ள பல விஷயங்களை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், பெண் மீது ஆண் ஒருவன் காட்டும் அன்பும் அக்கறையும்.
படத்திற்கான வரவேற்பு குறித்து நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குநர் மகிழ் திருமேனி பகிர்ந்து கொண்டதாவது, “அஜித் குமார் சார் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு என் இதயம் நிறைந்த நன்றி. எங்களின் ஆரம்ப சந்திப்புகளின் போது, பெண்களை மதிக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்க விரும்புவதாக அடிக்கடி என்னிடம் கூறுவார். எளிய குடும்ப பின்னணியில் வளர்ந்த எனக்கு இதைக் கேட்கும்போது நெகிழ்ச்சியாக இருந்தது. பெண்களுக்கான கதை எனும்போது தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் மகிழ்ச்சியாக சம்மதித்தனர். மிகப்பெரிய கமர்ஷியல் நடிகர்கள் படத்தில் இருந்தபோதும் இந்த கதைக்கு லைகா சம்மதித்தது சிறப்பான விஷயம். அஜித் சாரும் தன்னுடைய சினிமா பயணத்தில் நிறைய புதுவிதமான படங்களில் நடித்திருக்கிறார்.
அவர் தன் கரியரில் வளர்ந்து வரும்போதே ‘வாலி’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தினார். அதேபோல, ‘முகவரி’யில் கனவுகளும் லட்சியங்களும் கொண்ட ஒரு சாதாரண இளைஞனாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். ‘விஸ்வாசம்’ போன்ற மாஸ் ஹிட் படம் கொடுத்த பிறகு கூட ‘நேர்கொண்ட பார்வை’ போன்ற படத்தைத் தேர்ந்தெடுத்து நடித்தார்.
பெண்கள் மீதான வன்முறைகள் குறித்தான செய்தி அஜித் சாரை எப்போதும் மனதளவில் பாதிக்கக் கூடியது. அதனால், அதுபற்றிய வலுவான மெசேஜ் ‘விடாமுயற்சி’ படத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். இருந்தாலும் அஜித் போன்ற மாஸ் நடிகருக்கான சில கமர்ஷியல் விஷயங்களை ரசிகர்கள் திரையில் எதிர்பார்ப்பார்களே என்ற எண்ணமும் எனக்கு இருந்தது. ஆனால், அஜித் சார் என்னிடம் வந்து, “இந்தக் கதை அர்ஜூன் என்ற மிடில் கிளாஸ் மனிதனைப் பற்றியது. வேறு வழியே இல்லை என்றால் தவிர வன்முறையை கையில் எடுக்க வேண்டும் என்று நினைக்காதவன் அர்ஜூன். சரியான படத்தில் நடிக்கும் போது என் ரசிகர்கள் நிச்சயம் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார். அந்த நம்பிக்கை சரியானது என்பது படம் வெளியானதும் என்னால் உணர முடிகிறது. படத்திற்கு கிடைக்கும் பாசிட்டிவ் ரிசல்ட்தான் இயக்குநருக்கு நிறைவான விஷயம். ரசிகர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், விமர்சகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் இருந்து வந்து கொண்டிருக்கும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் மகிழ்ச்சியாக உள்ளது ” என்றார்.
லைகா புரொடக்ஷன்ஸ், சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
The Ultimate Game Changer JEE Preparation Program Launched!
Chennai:
Aakash Educational Services Limited (AESL), the national leader in test preparatory services, proudly announces the launch of Aakash Invictus, a groundbreaking and first-of-its-kind Advanced program for JEE preparation designed for the best and brightest engineering aspirants. This elite, high-intensity, personalized, AI driven and result-oriented initiative is engineered to enable students preparing specifically for IITs or reputed Universities abroad. Aakash Invictus brings together around 500 best JEE Faculty, offering unparalleled mentorship backed by a track record of success in guiding over one lakh students to IITs. The curriculum is cutting-edge and meticulously designed for ambitious students aiming for top IIT ranks.
The program features integrated phygital learning and exclusive study resources, ensuring precision-focused, AI-enabled, and adaptive preparation for JEE Advanced. The rigorous program includes a comprehensive revision and testing module that emphasizes targeted preparation during the final stages before the JEE (Advanced) exam. Students will benefit from specialized curriculum, doubt-clearing sessions and a meticulously crafted test series aimed at maximizing their performance. Aakash Invictus will have small batches so as to give more personalized attention to students.
Mr. Deepak Mehrotra, MD & CEO of Aakash Educational Services Limited, emphasized the program’s significance, stating, “Aakash Invictus is not just a coaching program; it is a transformational journey for students aiming to secure top IIT ranks. This program brings together top-notch faculty with decades of experience, cutting-edge teaching methodologies and personalized, AI and tech-driven learning. Over the years, our educators have successfully mentored millions of students to secure admissions in top IITs. The study material has been completely revamped, covering the entire curriculum and developed by some of the best experts in the industry. We firmly believe this is the best—if you can create better material, we will award you and welcome you to our team.” He further added, “This programme, which started a few months ago has already attracted 2500+ top students. Built on three key pillars – innovative pedagogy and courseware, expert faculty and advanced AI tools – Aakash Invictus will set new benchmarks in JEE preparation. All these brand-new features are backed by the credibility, trust, and technical expertise of Aakash.”
A significant highlight of the program is its focus on innovation in study resources. Students will receive chapter-wise practice worksheets embedded with QR codes that provide detailed solutions and stepwise marking schemes, ensuring they excel in school and board exams alongside JEE preparation. Additional features include workshops for competitive Olympiads, access to an extensive archive of past JEE question papers with chapter-wise breakdowns and solutions, and the JEE Challenger resource, which offers detailed insights, practice questions and analysis to refine their strategies. Furthermore, the program integrates phygital study materials, combining the strengths of physical and digital resources to simplify complex problems, and provides recorded video lectures by expert faculty for flexible, on-demand learning. Admission to Aakash Invictus is highly selective, with students chosen through a specialized entrance test to ensure only the brightest and most committed minds join the program.
Designed as a two-year program for 11th joining students or a three-year program for 10th joining students, Aakash Invictus will be available at 32 cities across India- Delhi NCR, Chandigarh, Lucknow, Meerut, Prayagraj, Kanpur, Varanasi, Jaipur, Kota, Patna, Ranchi, Bokaro, Kolkata, Durgapur, Bhubaneswar, Mumbai, Pune, Nagpur, Ahmedabad, Vadodara, Indore, Bhopal, Hyderabad, Chennai, Madurai, Dehradun and Bangalore and among others. A dedicated team of researchers has developed the course to align with the highest academic standards and evolving exam patterns, ensuring a transformative educational experience for its participants.