நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் 2021ம் ஆண்டிலேயே விஜய் நடிகையுடன் கள்ள உறவில் இருப்பது தெரிந்தும் மனைவி சங்கீதா தாமதமாக மனுத்தாக்கல் செய்திருப்பது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக சங்கீதா தனது விவாகரத்து மனுவில் சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு முழுநேர அரசியலில் கவனம் செலுத்துவதாக விஜய் அறிவித்துள்ளார்.
வரும் சட்டசபை தேர்தலில் விஜய் போட்டியிட உள்ளார். இதற்கான பணியில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் தான் விஜயிடம் விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
விவாகரத்து மனுவில் விஜய்க்கு, நடிகை ஒருவருடன் கள்ளத்தொடர்பு உள்ளது. இதனை கைவிட கூறியும் விஜய் மறுத்துவிட்டார். மேலும் தனக்கு மனரீதியாக தொல்லைகள் தந்தார். இதனால் விவாகரத்து கோருகிறேன் என்று சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.
அதோடு மனுவில் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதை கண்டுபிடித்தேன். நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருக்கிறார். கடந்த 2021ம் ஆண்டில் இதை கண்டுபிடித்தேன் என்பதையும் சங்கீதா கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் பலருக்கும் ஒரு கேள்வி எழுந்துள்ளது. 2021ம் ஆண்டிலேயே விஜயின் கள்ள தொடர்பை கண்டுபிடித்த சங்கீதா, இப்போது கட்சி தொடங்கி தேர்தல் நெருங்கும்போது விவாகரத்து கோருவது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக சங்கீதா தனது மனுவில் சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.
அதாவது மனுவில், ”நடிகை ஒருவருடன் விஜய்க்கு கள்ளத்தொடர்பு இருப்பதை கடந்த 2021ம் ஆண்டில் கண்டுபிடித்தேன். கள்ள உறவை கண்டுபிடித்ததால் அதனை கைவிடுவதாக விஜய் கூறினார். ஆனால் அவர் கூறியது போல் நடந்து கொள்ளவில்லை. விஜய் தனது செயலுக்காக ஒருபோதும் வருந்தவில்லை. மாறாக மனைவி என்ற முறையில் நான் அனுபவித்த வசதிகளை நிறுத்திவிட்டார். எனக்கு மனஉளைச்சல் தர வேண்டும் என்பதற்காகவே விஜய் விலகி சென்றார்.
பிரச்சனையின்றி கவுரவமாக இருவரும் பிரிய வேண்டும் என்று நினைத்தேன். இதற்கான முயற்சிகளை செய்தேன். 2021 செப்டம்பர் முதல் 2022 பிப்ரவரி வரை வழக்கறிஞர் மூலமாக சமூகமாக பிரிவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினோம். வழக்கறிஞர் வழியாக இருதரப்பிலும் பேசி நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. தீர்வும் கிடைக்கவில்லை. சுமூகமாக பிரிய 2 முயற்சிகளை முன்னெடுத்தேன். கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி விஜயை சந்திக்க முயற்சி மேற்கொண்டேன். ஆனால் நடக்கவில்லை.
எனது மகன், மகளின் கல்வி, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விவாகரத்தை தள்ளிப்போட்டேன். ஆனால் இப்போது நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை” என கூறியுள்ளார். மேலும் ”கள்ளஉறவில் இருக்கும் நடிகையுடன் வெளிநாடுகளுக்கு சேர்ந்து சென்றார். திருமணத்தை மீறிய உறவை தட்டிக்கேட்டதால் வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார்.
விஜய் எனக்கு கட்டுப்பாடுகளை விதித்தார். பணம் செலவு செய்ய விடாமல் தடுத்தார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டேன். இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. திருமண வாழ்க்கையில் என்னை ஒதுக்கிவிட்டு நடிகையுடன் உறவை தொடர்ந்தார். நடிகையும், விஜயுடன் சேர்ந்து இருக்கும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது மன உளைச்சலை தந்தது. தேவையென்றால் நடிகையின் பெயரையும் வெளியிடுவேன்” என்றார்.
ரசிகர்கள் வருத்தம்!
எங்கள் தளபதி என்று பெருமையாக நினைத்தோம். ஆனால் நீங்கள் இப்படி செய்திருப்பது தவறு. பெண்களுக்கு தமிழக வெற்றி கழகத்தில் பாதுகாப்பு இருக்குமா? என தற்போது சிந்திக்க வைக்கிறது. அரசியல் தலைவர் என்ற பதவியை நீங்கள் இழந்து விட்டீர்கள். இனிமேல் நாங்கள் விஜய் ரசிகர்கள் இல்லை என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள். இதற்கு முற்று புள்ளி வைக்க விஜய் என்ன? செய்ய போகிறார் என பார்ப்போம்.

















