தக்கலை அருகே உள்ள மூலச்சலில் கிறிஸ்தவ சபையில் பாதிரியாராக இருப்பவர் வர்கீஸ் (55). இவர் சபைக்கு வேதாகம விடுமுறை வகுப்புக்கு வந்த 17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை நடத்தி போக்ஸோ சட்டத்தில் பாதிரியார் வர்கீஸை கைது செய்தனர்.

















