லகமெங்கும் டிசம்பர் 12, 2025 அன்று வெளியாகும் மகாசேனா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 30ஆம் தேதி ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
 
மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு கொண்ட காடு சார்ந்த ஆக்ஷன்–த்ரில்லர் படமான மகா சேனா திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் நவம்பர் 30ஆம் தேதி முன்னணி பத்திரிகை மற்றும் ஊடக நிபுணர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் இசை ஆல்பம், முக்கியமான காட்சிகள் மற்றும் இந்தப் படத்தை உருவாக்கிய விதம் ஆகியவை வெளியிடப்பட்டன.இது அங்கு கலந்து கொண்ட அனைவரிடமும்  மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
 
2023 ஆம் ஆண்டில் வெளியான கிரைம் த்ரில்லர் படமான ராகாதான் வெற்றிக்குப் பிறகு, மருதம் புரொடக்ஷன்ஸ் தற்போது மகாசேனா திரைப்படத்தை டிசம்பர் 12, 2025 அன்று உலகளவில் வெளியிடுகிறது.
 
படத்தைப் பற்றி
 
தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கியிருக்கும் மகாசேனா படமானது  இயற்கை, ஆன்மீகம், காடுகளுக்கான பாரம்பரியம் மற்றும் மனித நெறிமுறைகள் இணைந்த ஒரு மாபெரும் காடு சார்ந்த ஆக்ஷன்–த்ரில்லர் படமாகும்.
 
கூடலூர், வயநாடு, கொல்லிமலை மற்றும் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் 90% உண்மையான காடுகளில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம், தெய்வீக இயற்கை சக்திகளுக்கும் அழிவை நோக்கும் மனித பேராசைக்கும் இடையிலான மோதலை ஆழமான காட்சிப்படுத்தலுடன் எடுத்துக் காட்டுகிறது. மாபெரும் திருவிழா கிளைமாக்ஸ், உணர்ச்சி நிறைந்த கதைக்களம் மற்றும் மேம்பட்ட CGI தொழில்நுட்பங்கள் ஆகியவை பார்வையாளர்களை தெய்வீகமும் சாகசமும் இணைந்த உலகிற்குள் நிச்சயம் இழுத்துச் செல்லும்.
 
இத்திரைப்படத்தின் சவுண்ட்டிராக் ஏ. பிரவீண் குமார் மற்றும் உதய் பிரகாஷ் (UPR) ஆகியோரால் உருவாக்கப்பட்ட நான்கு புதிய பாடல்களை கொண்டுள்ளது. பிரபலப் பாடகர்கள் வைக்கம் விஜயலட்சுமி, வி.எம். மகாலிங்கம், வி.வி. பிரசன்னா மற்றும் பிரியங்கா என்.கே. ஆகியோர்கள் பாடியுள்ள இப்பாடல்கள், பழங்குடி இசைத் தாளங்களையும் ஆன்மீக நாதங்களையும் இணைக்கின்றன.
 
நடிகர்கள்
 
விமல், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு, மஹிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், அல்ஃப்ரெட் ஜோஸ், சிவக்ரிஷ்ணா, இலக்கியா, விஜய் சேயோன்,
மேலும் படத்தில் முக்கிய குறியீடு உள்ள கதாபாத்திரத்தில் ஒரு யானை, சேனா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. 
 
தொழில்நுட்ப கலைஞர்கள்
 
கதை, திரைக்கதை & இயக்கம்: தினேஷ் கலைசெல்வன்
அசோசியேட் புரொட்யூசர்: ராணி ஹென்றி சாமுவேல்
இசை: ஏ. பிரவீண் குமார், உதய் பிரகாஷ் (UPR)
பின்னணி இசை: உதய் பிரகாஷ் (UPR)
ஒளிப்பதிவு: டி.ஆர். மனஸ் பாபு
எடிட்டிங்: நாகூரான் ராமச்சந்திரன்
ஸ்டண்ட்: ராம் குமார்
நடன அமைப்பு: தஸ்தா, ஆமீர்
பாடல்வரிகள்: தினேஷ் கலைசெல்வன்
கலை இயக்கம்: வி.எஸ். தினேஷ் குமார்
தயாரிப்பு மேலாண்மை: ராணி, ரமேஷ், தினேஷ் வேல்முருகன்
DI: ஜான் ஸ்ரீராம்
VFX: ஐ-மேட் மீடியா
ஆடியோ கிராபி: பாலாஜி, ராஜு ஆல்பர்ட்
போஸ்டர்கள்: தினேஷ் அஷோக்
மக்கள் தொடர்பு: ரேகா
 
இயக்குனர் குறிப்பு:
 
 இப்படத்தின்  இயக்குனர் தினேஷ் கலைசெல்வன் கூறும் பொழுது:
 
“மகாசேனா என்பது நம்பிக்கை, சக்தி, மற்றும் இயற்கையின் சீரான  சமநிலையைப் பற்றிய கதை. இந்தப் படத்தில் காடு ஒரு பின்னணி அல்ல — அது உயிரோடு இருக்கும் ஒரு கதாபாத்திரம். பேராசை தெய்வீக ஒற்றுமையை எவ்வாறு சீர்குலைக்கிறது, ஆன்மீகம் அதை எவ்வாறு சீரமைக்கிறது என்பதை இந்த பயணத்தின் மூலம் காட்ட விரும்பினேன்.”
 
இத்திரைப்படம் டிசம்பர் 12, 2025 அன்று PVR INOX Pictures மூலம் தமிழ் நாடு உள்ளிட்ட உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. அதன் அற்புதமான காட்சிப்பதிவு, ஆன்மீக ஆழம், மற்றும் உணர்ச்சி மிகுந்த கதை சொல்லல் மூலம் மகாசேனா, காடுகளுக்குள் இருக்கும் ஆன்மாவின் அடிப்பகுதிக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும்  ஒரு தனித்துவமான திரைவெளிப் பயணத்தை உறுதி செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here