சென்னை புளியந்தோப்பு கேபி பார்க்  குடிசை மாற்று வாரிய பகுதியை சோ்ந்தவா் சினிமா நடன கலைஞா் ரமேஷ்.  இவர் திரைப்படங்களிலும், சின்னத்திரையிலும் நடன கலைஞராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் கூட நடன கலைஞர் ரமேஷ் நடித்திருந்தார்.

இப்படி திரைப்படங்களிலும், சின்னத்திரையிலும் நடன கலைஞராக பணியாற்றி வந்த இவருக்கு ஏற்கனவே, சித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இன்பவள்ளி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு ரமேஷ் அந்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டாா். இந்நிலையில் நடன கலைஞர் ரமேஷ் தனது பிறந்தநாளை முன்னிட்டு 2-வது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளாா்.

அதற்கு அவா் மறுப்பு தொிவிக்கவே பத்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்து பாிதாபமாக உயிாிழந்துள்ளார். கணவன் ரமேஷின் தற்கொலை குறித்து தகவலறிந்த முதல் மனைவி தனது கணவா் மரணத்தில் மா்மம் இருப்பதாக பேசன் பிாிட்ஜ் போலீசில் புகாா் அளித்தாா். புகாரின் போில் வழக்குப் பதிவு செய்த போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here