தமிழ்நாடு சைக்கிள் ஓட்டுதல் சங்கத்துடன் இணைந்து எலிஃபண்டைன் சர்க்யூட் நடத்திய சைக்ளோத்தான் நிகழ்வு சென்னை அடையாறு பகுதியில் இன்று காலை நடைபெற்றது (CYCLOTHON) . பசுமை மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான மிதிவண்டி. டாக்டர் சைலேந்திர பாபு (பதிவு டிஜிபி/காவல்துறைத் தலைவர்) எலிஃபண்டைன் நிர்வாக இயக்குநர் திரு. ரமணன் பாலகங்காதரன் உடன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கலா அறக்கட்டளையைச் சேர்ந்த 35 மதியிறுக்க (ஆட்டிசம்) நிலையினர் பங்கேற்றுள்ளனர், மேலும் அவர்களில் ஒருவரான 8 மாத கர்ப்பிணிப் பெண் தனது கணவருடன் டேன்டெம் பைக்கில் பங்கேற்றார். மேலும் நகரம் முழுவதும் சுமார் 400 மேற்பட்ட சைக்கிள் ஓட்டுநர்கள் பங்கேற்று நிகழ்வை வெற்றிகரமாக முடித்தனர்.
தமிழ் திரையுலக முன்னணி இயக்குநர் சுதா கொங்கரா அவர்கள் சைக்ளோத்தான் டீசர்ட்டை அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந்நிகழ்வினில் கலந்துகொண்ட டாக்டர் சைலேந்திர பாபு (பதிவு டிஜிபி/காவல்துறைத் தலைவர்) பகிர்ந்துகொண்டதாவது:
மாரத்தான் சென்னையில் பரவலாக நடந்து வருகிறது ஆனால் இப்போது முதல்முறையாக சைக்ளோத்தான் நடைபெறுகிறது. 500க்கும் மேற்பட்டவர்கள் சைக்கிள் ஒட்டுகிறார்கள். பெரிய மகிழ்ச்சி. மக்களின் அடிப்படை தேவை மனமகிழ்ச்சி தான் அது சைக்கிளிங்கில் கிடைக்கும். இதில் கலந்துகொள்ளும் போது பல இடங்களை பார்த்த திருப்தி கிடைக்கும். 50, 100 கிலோ மீட்டர் சைக்கிளிங் ஓட்டுபவர்கள் தினமும் எத்தனையோ பேரைச் சந்திப்பார்கள். அது மனதுக்கு மகிழ்ச்சி தரும். உற்சாகம் தரும். மேலும் இதன் மூலம் சாதனைகள் இந்திய அளவிலும் உலக அளவிலும் நிகழும் அதற்காக இந்த சைக்களத்தான் நிகழ்வை நாம் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும். பைக் ஒரு தானியங்கி இயந்திரம் அதை ஓட்ட உடல் உழைப்பு தேவை இல்லை. சைக்கிள் ஓட்ட உடல் பலம் தேவை, இளைஞர்கள் பைக் மோகத்தை விட்டு விட்டு சைக்ளோத்தானை தேர்ந்தெடுக்க வேண்டும். உண்மையான உடல் தகுதி யோடு இருக்கக்கூடிய விளையாட்டு சைக்கிள் பந்தயம் தான். உலக நாடுகளில் பாரிஸில் 1800 கிலோமீட்டர் சைக்கிள் பந்தயம் ஆனது இருக்கிறது. லண்டனில் கிட்டத்தட்ட 1000 கிலோ மீட்டருக்கு மேல சைக்கிள் ஓட்டக்கூடிய பந்தயங்கள் இருக்கிறது. அங்கு உள்ளவர்கள் அதற்கே தயாராக இருக்கிறார்கள் நமது ஊரில் நாம் இமய மலைக்கு காரில் செல்வதே பெரிய விஷயமாக பார்க்கிறோம். மூன்று நாள் நான்கு நாட்கள் என தொடர்ச்சியாக அவர்கள் சைக்கிள் ஓட்டுவது அவர்களது மன உறுதியை காட்டுகிறது. அந்த வகையில் மோட்டார் சைக்கிளை ஓட்டுவதை விட சைக்கிளை ஓட்டுவதே நல்லது.

















