Sunday, May 17, 2026
Blog

யாருக்கு எந்த துறை? அமைச்சர் பட்டியல்!!

மிழக முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்ற நிலையில், அவர்களுக்கான இலாகாக்கள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, முதல்வர் விஜய்யின் வசம் பொது நிர்வாகம், உள்துறை, மகளிர் நலன், இளைஞர் நலன், காவல் உள்ளிட்ட துறைகள் உள்ளன.

மேலும், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப் பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கம், மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல் ஆகிய துறைகளும் முதல்வர் விஜய் வசமே உள்ளன.

அமைச்சர் செங்கோட்டையனுக்கு மிக முக்கியமான நிதித்துறை மற்றும் ஓய்வூதியத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் புஸ்ஸி ஆனந்துக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன் சுமை மற்றும் நீர்ப்பாசனம், நீர்ப்பாசனத் திட்டங்கள் உள்ளிட்டவை உள்ளன.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப்பணி (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்) மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் அருண் ராஜுக்கு சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் வெங்கட் ரமணனுக்கு உணவு, பொது விநியோகம், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாடு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நிர்மல் குமாருக்கு மின்சாரம் மற்றும் சட்டத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் ஊழல் தடுப்பு, சட்டப்பேரவை, ஆளுநர், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தொல்லியல், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தகவல் மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படச் சட்டம், செய்தித்தாள் அச்சுத்தாள் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, அரசு அச்சகம் உள்ளிட்ட துறைகள் வழங்கப்பட்டுள்ளன.

அமைச்சர் டி.கே.பிரபுவுக்கு சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கீர்த்தனாவுக்கு தொழில் துறை மற்றும் முதலீட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மது விற்பனை விவகாரம்! காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!!

திருவொற்றியூர் காவல் நிலை​யத்​தில் சட்​டம் – ஒழுங்கு காவல் ஆய்​வாள​ராக இருப்​பவர் அலெக்​ஸ். இவர் விடுப்​பில் சென்​ற​தால் அக்காவல் நிலைய குற்​றப்​பிரிவு ஆய்​வாளர் மோகன்​தாஸ், கூடு​தல் பொறுப்​பாகச் சட்​டம் – ஒழுங்கு பணி​களைக் கவனித்து வந்​தார்.

இந்​தச் சூழலில் திருவொற்​றியூர் பகு​தி​யில் உள்ள டாஸ்​மாக் கடை ஒன்​றில் அனு​ம​திக்​கப்​பட்ட நேரத்​துக்கு முன்​னரும் (மதி​யம் 12 மணி), அனு​ம​திக்​கப்​பட்ட நேரத்​தைத் தாண்​டி​யும் (இரவு 10 மணி) சட்ட விரோத​மாக மது விற்பனை நடை​பெறு​வ​தாகப் புகார்​கள் எழுந்​தன.

இது தொடர்​பான வீடியோ சமூக வலை​தளங்​களில் அண்​மை​யில் வைரலானது. சென்​னை​யில் சட்​ட​விரோத மது விற்​பனையை இரும்​புக்​கரம் கொண்டு அடக்க வேண்​டும் என்று காவல் ஆணை​யர் அபின் தினேஷ் மோடக் ஏற்​கெனவே உத்​தர​விட்​டிருந்​தார்.

இந்​நிலை​யில் தன் பொறுப்​பில் இருந்த பகுதியில் கள்​ளச்​சந்தை மது விற்பனையைத் தடுக்​கத் தவறிய காவல் ஆய்​வாளர் மோகன்தாஸை பணி​யிடை நீக்​கம் செய்து காவல் ஆணை​யர் உத்​தர​விட்​டுள்​ளார்.

“இது போன்ற சட்​ட​விரோத செயல்​களில் ஈடு​படு​வோர் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும். தேவைப்​பட்​டால் குண்​டர் சட்​டத்​தில் குற்றவாளி​கள் சிறை​யில் அடைக்கப்​படு​வார்​கள். சட்​ட​விரோத மது விற்​பனையை தடுக்​கத் தவறும் காவல் துறை​யினர் மீதும் பாரபட்​சம் இன்றி கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும்” என காவல் ஆணை​யர்​ எச்​சரிக்​கை விடுத்​துள்​ளார்​.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு! அரசியல் தலைவர்கள் கோரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்​திய அரசு உடனடி​யாக திரும்​பப் பெற வேண்​டும் என்று முதல்​வர் விஜய் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

முதல்​வர் விஜய்: 5 மாநிலங்​களில் தேர்​தல் முடிந்​த​பின் பெட்​ரோலியப் பொருட்​களின் விலையை உயர்த்​தி​யிருப்​பது ஏற்​புடையதல்ல. இந்த விலை உயர்வு இருசக்கர வாக​னங்​கள் மற்​றும் பேருந்​துகளை பயன்​படுத்​தும் ஏழை, எளிய, நடுத்தர மக்​களின் மாத வரு​வா​யில் பெரு​மளவு பாதிப்பை ஏற்​படுத்​தும்.

அன்​றாடப் பொருட்​களின் விலை உயர்​வுக்கு காரண​மாக அமைவதுடன் ஏழை, எளிய மக்​களின் வாங்​கும் திறனை​யும் பாதிக்​கும். குறு, சிறு தொழில் நிறு​வனங்​களுக்கு உற்​பத்​திச் செல​வும் அதி​கரிப்​ப​தால், சந்​தை​யிலும், ஏற்​றும​தி​யிலும் மந்​தநிலை ஏற்பட வாய்ப்​புள்​ளது. எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்​கள் மற்​றும் குறு, சிறு தொழில் நிறு​வனங்​களைப் பாதிக்​கும் பெட்​ரோலியப் பொருட்​களின் விலை உயர்வை மத்​திய அரசு உடனடி​யாக திரும்​பப்​பெற வேண்​டும்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: தமிழகத்​தில் புதி​தாக பொறுப்​பேற்​றுள்ள தவெக அரசு மாற்​றம் வேண்​டும் என்ற கொள்​கையை அடிப்​படை​யாக வைத்து செயல்​படு​கிறதென்று சொல்​கிறார்​கள். பெட்​ரோலுக்​கும், டீசலுக்​கும், எரி​வாயு சிலிண்​டருக்​கும் உள்ள விற்​பனை வரியை குறைக்க வேண்​டும் என்று கேட்​டுக்​கொள்​கிறேன்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை: ஏற்​கெனவே அத்​தி​யா​வசிய பொருட்​களின் விலை உயர்​வால் பொது​மக்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், இந்த எரிபொருள் விலை உயர்வு மேலும் பணவீக்​கத்தை அதி​கரித்​து, நடுத்தர மற்​றும் ஏழை மக்​களின் வாழ்​வா​தா​ரத்தை பெரிதும் பாதிக்​கும்.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் சண்​முகம்: பெட்​ரோல், டீசல் விலை உயர்வு மக்​களின் அன்​றாட வாழ்க்​கை​யில் சங்​கி​லித் தொடர் போன்ற பாதிப்​பு​களை உரு​வாக்​கும். புயலில் சிக்​கிய படகு போல குடும்​பங்​கள் தள்​ளாடும் நிலை ஏற்​படும். மத்​திய அரசு இந்த விலை உயர்வை உடனடி​யாக திரும்​பப் பெற வேண்​டும்.

பாமக தலை​வர் அன்​புமணி: இந்​தி​யா​வில் பெட்​ரோல், டீசல் விலை ஏற்​கெனவே அதி​க​மாக உள்​ளன. இத்​தகைய சூழலில் கச்சா எண்​ணெய் விலை உயர்​வின் தாக்​கத்தை இயன்​றவரை எண்​ணெய் நிறு​வனங்​களும், மத்​திய அரசும் தாங்​கிக் கொண்டு விலை உயர்வை தவிர்த்​திருக்க வேண்​டும்.

விசிக தலை​வர் திரு​மாவளவன்: பெட்ரோல்​-டீசல் விலையை லிட்​டருக்கு ரூ.3 என உயர்த்​தி​யிருப்​ப​தன் மூலம் பாஜக அரசு எளிய மக்​களின் அடிவ​யிற்​றில் கை வைத்​துள்​ளது. இதனால் மிக​வும் பாதிக்​கப்படப் போவது விளிம்​புநிலை​யைச் சார்ந்த ஏழை-எளிய உழைக்​கும் மக்​கள்​தான்.

அமமுக பொதுச்​செய​லா​ளார் டிடி​வி.​தினகரன், தவக தலை​வர் வேல்​முரு​கன், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன், உள்ளிட்டோரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 

தாத்தா பாட்டியை கொன்ற பேரன்! எதற்கு?!

திரு​வாரூர் மாவட்​டம் மன்​னார்​குடி அருகே உள்ள காரக்​கோட்​டையைச் சேர்ந்​தவர் கலியபெரு​மாள்​(58), வெளி​நாட்​டில் வேலை பார்த்து வரு​கிறார். இவரது மனைவி தேவி(50).

இவர்​களது மகன் ஐயப்​பன்​(32). பொறி​யியல் பட்​டப்​படிப்பு படித்​துள்ள இவர், வேலைக்கு செல்​லாமல் இருந்​துள்​ளார். மதுப்​பழக்​கத்​துக்கு அடிமை​யான ஐயப்​பனுக்கு கஞ்சா பழக்​க​மும் இருந்​துள்​ளது. இதன் காரண​மாக, திரு​வாரூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் கடந்த 20 நாட்​களாக சிகிச்​சை​யில் இருந்த ஐயப்​பன், 2 நாட்​களுக்கு முன்​னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்​பி​னார்.

இந்​நிலை​யில், அதே ஊரில் வசிக்​கும் தனது தாத்தா பிச்​சை​முத்து, பாட்டி சந்​திரா வீட்​டுக்கு நேற்று முன்​தினம் இரவு சென்ற ஐயப்​பன் பணம் கேட்டு தகராறு செய்​துள்​ளார். இதை அறிந்த அவரது தாயார் தேவி, ஐயப்​பனை சமா​தானம் செய்​து, தனது வீட்​டுக்கு அழைத்​து சென்​றுள்​ளார்.

அதன்​பின், பிச்​சை​முத்து வீட்​டுக்கு நேற்று அதி​காலை 5 மணி அளவில் சென்ற ஐயப்​பன், அங்கு தூங்கிக் கொண்​டிருந்த பிச்​சை​முத்​து, சந்​திரா ஆகியோர் மீது அங்​கிருந்த நாற்​காலியை தூக்கி அடித்​துள்​ளார். இதில், இரு​வரும் மயங்​கி​விட்​டனர். அதன் பின்​னர், வீட்​டிலிருந்த தேங்​காய் எண்​ணெயை இரு​வர் மீதும் ஊற்றி எரித்​துள்​ளார்.

தகவலறிந்த வடு​வூர் போலீ​ஸார் அங்கு சென்​று, வீட்​டுக்​குள் எரிந்​தநிலை​யில் இறந்​து கிடந்த பிச்​சை​முத்​து, சந்​திரா ஆகியோரின் உடல்​களை மன்​னார்​குடி அரசு மருத்​து​வ​மனைக்கு பிரேத பரிசோதனைக்​காக அனுப்பி வைத்​தனர். பின்​னர், ஐயப்​பனை கைது செய்தனர். தாத்​தா, பாட்​டியை பேரன் எரித்​துக்​கொன்ற சம்​பவம் மன்​னார்​குடி பகு​தி​யில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

#DIPR #PRO

LIVE VIJAY CM FUNCTION

விஜய் முதல்வர் பதவி ஏற்பு விழா நேரலையில்

THANKS TO DIPR

#LIVECMPROGRAM #LIVEVIJAYSPEECH #IRUTHITHEERPPUTV #DIPR #CMEVENTLIVE #CMVIJAYINAUGURATION #VIJAYFULLSPEECH #VIJAYINSECRETARIAT #TNSECTRETARIAT #VIJAYENTRY #VIJAYSIGNATURE

120 MLAக்களின் ஆதரவு கிடைத்தது! ஆளுநர் அழைப்பு?!

மிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியான நிலையில், புதிய ஆட்சி இன்னும் பதவி ஏற்க முடியாத இழுபறியான சூழல் நிலவி வருகிறது. இதற்கு முன்பு இல்லாத வகையில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் விஜய் ஈடுபட்டார்.

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியிடம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆதரவு கோரப்பட்டது. இதையடுத்து, ஆட்சி மற்றும் அதிகாரப் பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்துடன் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்ததாக கூறப்படுகிறது.தி.மு.க. கூட்டணியில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, தி.மு.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்ததுடன், வரவிருக்கும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் கூட்டணி தொடரும் என்ற முடிவையும் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதன் மூலம் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 என்ற இலக்கை எட்டும் முயற்சியில் விஜய்க்கு முதல் கட்ட வெற்றி கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிரடி திருப்பமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவு விஜய்க்கு கிடைத்தது. இதனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு விஜய்க்கு கிடைத்தது. இதையடுத்து தமிழக கவர்னரை சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தற்போது பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருப்பதால் விரைவில் ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியுள்ளது. நாளை பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. எனினும், ஆளுநரிடம் இருந்து அழைப்பு வந்த பிறகே இந்த தகவல் உறுதி செய்யப்படும்.

இப்படி ஒரு கள்ளகாதலா? வியந்த போலீசார்!

ன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த தேரேகால்புதூர்,எஸ்.பி காலணி 13வது தெருவை சேர்ந்தவர் 23 வயதுடைய சுபாஷினி. இவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் டிப்ளமோ நர்சிங் படித்து முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். அப்போது சுபாஷினிக்கு தனது உறவுக்கார சகோதரியின் கணவரான 43 வயதுடைய மதன்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில், இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.


தொடர்ந்து இருவரும் அடிக்கடி வெளியில் சென்று தனிமையில் இருந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுபாஷினி கர்ப்பமடைந்த நிலையில், நேற்று வீட்டில் இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தன்னுடன் பணிபுரியும் செவிலியரை வீட்டிற்கு அழைத்து பிரசவம் பார்த்துள்ளார். பின்னர் கள்ளக்காதலால் பிறந்த இந்த குழந்தை வெளியில் தெரிந்தால் அவமானம் என நினைத்து பிறந்த சில மணி நேரத்திலேயே அந்த குழந்தையை முட்புதரில் வீசிவிட்டு வீட்டில் இருந்து தப்பி சென்றிருக்கிறார்.


பின்னர் வீட்டின் சுற்றுப்புற சுவர் அருகே உள்ள புதரில் ஒரு பச்சிளம் குழந்தையின் உடல் கிடப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பச்சிளம் குழந்தையின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது சம்பந்தமாக சுசீந்திரம் போலீசார் அப்பகுதியில் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் சுபாஷினி, மதன்குமாருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் கர்ப்பமானது தெரியவந்தது.


தொடர்ந்து அவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, நேற்று சுபாஷினிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் வெளியே தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என்று நினைத்து, மூடி மறைக்க திட்டமிட்டு பச்சிளம் குழந்தையை வீட்டு முன்பு தூக்கி வீசி விட்டு எதுவும் தெரியாமல் சென்று விட்டது தெரியவந்தது. இதனால் குழந்தை துடிதுடிக்க இறந்தது என சுசீந்திரம் போலீசார் விசாரணையில் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வழக்கில் மதன் குமார் முதல் கட்டமாக கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து குழந்தையை வீசி கொன்ற சுபாஷினியை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் ஒருவர் தான் பெற்ற குழந்தையை வீட்டு அருகே தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் உயிருக்கு ஆபத்தா?!

மிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை இதுவரை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காததால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விஜய்க்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் திரும்ப பெறப்பட்டன. இந்த நிலையில் விஜய்க்கு உச்சப்பட்ச பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த டில்லி பாபு:

“தமிழ்நாட்டின் அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடந்து முடிந்த சட்ட பேரவை தேர்தலில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றியானது மக்கள் அனைவரும் எதிர்பார்த்தது போல் உள்ளது. இந்த வெற்றி தமிழ்நாட்டின் மக்களின் வெற்றி. இந்த வெற்றியை உறுதி செய்து ஆட்சி அமைக்கும் தருவாயில் உள்ள சூழ் நிலையில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து பல்வேறு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

அரசியல் சூழ்ச்சி செய்து வருகிறார்கள். எனவே தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க முடியாததற்கு இக்கட்டான சூழ் நிலையை ஏற்படுத்துகின்றனர். பாஜக, ஆர்எஸ்எஸ் செய்யும் சூழ்ச்சியின் வாயிலாக அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என கருதுகிறோம். இந்த சூழ்நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பும் திரும்ப பெறப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கும் தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கும் உரிய உச்சகட்ட பாதுகாப்பை காவல்துறை அளிக்க வேண்டும்”

என்று டில்லி பாபு கூறினார்.

கலக்கத்தில் விஜய்! ஆளுநர் அப்படி என்ன சொன்னார்?

வெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை ஆளுநர் மாளிகைக்குச் சென்று நேற்று சந்தித்தார். அப்போது, ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை அவரிடம் வழங்கினார். இந்நிலையில், இன்று மீண்டும் விஜய், ஆளுநரை சந்திக்க ஆளுநர் மாளிகைக்குச் சென்று சந்தித்தார்.

இந்த சந்திப்பு 30 நிமிடங்களுக்கு மேலாக நடந்தது. இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் என்றும் பின்னர் இல்லை என்றும் மாறி மாறி செய்திகள் வெளியாகின. தவெக தரப்பும் சந்திப்பு பற்றி ஏதும் சொல்லவில்லை.

இந்நிலையில், இந்த சந்திப்பு தொடர்பாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்: “தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இன்று தவெக தலைவர் விஜய்யை ஆளுநர் மாளிகைக்கு அழைத்திருந்தார்.

அந்தச் சந்திப்பின்போது, தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆட்சியமைக்க தேவையான அந்த பெரும்பான்மை எண்ணை விஜய் காட்டவில்லை.” என்று ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காதது குறித்து ஆளுநர் எடுத்துரைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன என்ற எதிர்பார்ப்பு குறித்து தவெக தரப்பில் இன்னும் மவுனம் கலைக்கப்படாத நிலையில், ஆளுநர் தரப்பு விளக்கம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் ஒரு நிலையான அரசு அமைய வேண்டும் என்பதையே ஆளுநர் விரும்புகிறார். பெரும்பான்மை பலம் உறுதிப்படுத்தப்பட்ட உடனேயே, விஜய் பதவியேற்கலாம்.” என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகிறது.

விஜய் போட்ட டிவிட்! ரசிகர்கள் உற்சாகம்!!

VIJAY TWITTER MESSAGE:
 
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
 
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
 
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் – வருகின்றனர்.
 
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
 
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
 
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
 
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
 
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
 
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.