புது படைப்பாளிகளுடன் பயணம் பிடிக்கும்- நடிகர் சமுத்திரக்கனி
‘பாரிஸ் கஃபே’ விமர்சனம் RATING 3/5
கண்மணி ரங்கநாதன் மற்றும் வெங்கல் லிங்கேஸ்வரன் தயாரிப்பில், தண்டர் மீடியா மற்றும் எல் வி என்டர்டைன்மெண்ட் சார்பில் குரு சோமசுந்தரம், அனு மோள், நயனா சாய், சாய் விக்கி, விஜய் விஷ்வா அர்ச்சனா நடிப்பில் சரஜ் சீலன் எழுதி இயக்கி இருக்கும் படம் தான் ‘பாரிஸ் கஃபே’
விமர்சனம்
மருத்துவரான குரு சோமசுந்தரம் மனைவி அனுமோல் மீது பெரும்பாசம் கொண்டவர். சமூகநலனுக்காக குரல் கொடுக்கும் அனுமோலும் கணவன் மீது பாசம் கொண்டவர் தான். குரு சோமசுந்தரம் சூழ்நிலை அழுத்தம் காரணமாக ஒரு காதல் ஜோடியின் கொலையை தற்கொலை என போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கொடுத்து விடுகிறார்.
அதில் கோபப்படும் அனுமோல் கணவரை விட்டுப் பிரிகிறார். இவர்களைச் சேர்த்து வைப்பதற்காக மகள் அர்ச்சனா அவரின் காதலன் விஜய் விஷ்வா இருவரும் வருகிறார்கள். பெரிய ஜோடியை சின்ன ஜோடி சேர்த்து வைத்ததா? அந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் ரீ ஓப்பன் ஆகி என்ன விளைவுகளை ஏற்படுத்தியது? என்பதே படத்தின் கதை.
குருசோமசுந்தரம் குற்றவுணர்ச்சியை சுமக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். அனுமோல் பெரியார் அம்பேத்கர் வழிமொழிந்த பெண்ணாக நடித்து கவனம் ஈர்க்கிறார். விஜய் விஷ்வா ஒரு சப்போர்ட்டிங் ஹீரோவாக அசத்துகிறார். அர்ச்சனா கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட ஒரு காதல் ஜோடி இயல்பாக நடித்துள்ளனர். இயக்குநர் சராஜ் சீலன் ஒரு சோசியல் கன்டென்ட்-ஐ கையிலெடுத்துள்ளார். அந்தக் கன்டென்டில் கொஞ்சம் கமர்சியல் சேர்த்து ஓரளவு இன்ட்ரெஸ்டிங்காகவே கதை நகர்கிறது. படம் முழுக்க ஆங்காங்கே காமெடிகள் வைத்து முக்கிய திருப்பத்துக்குள் கதை போனதும் எமோஷனலாக சீரியசாக முடிய வேண்டிய படம் இது. மாறாக, கடைசி நேரத்தில் வில்லனை எல்லாம் காமெடி ஆக்கி குரு சோமசுந்தரம் கையில் துப்பாக்கி கொடுத்து காமெடி செய்து படத்தை சற்று நீர்த்துப் போகச் செய்து விட்டார்கள். கிளைமேக்ஸ் ரசிக்க வைக்கிறது.
பாரிஸ் கஃபே- ஜோடியின் கருத்து.
‘கோல்ட் கால்’ விமர்சனம் RATING 3/5
வேலை தேடி அலையும் நான்கு இளைஞர்களுக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை கிடைக்கிறது. வேலை கிடைத்த சந்தோஷத்தைவிட, வேலையைச் செய்யாமல் எப்படி சமாளிப்பது என்பதில்தான் அவர்களுக்கு அதிக ஆர்வம். நிறுவனத்தின் இலக்குகளைப் பற்றி பெரிதாகக் கவலைப்படாமல், தங்களுக்குத் தெரிந்த விதத்தில் பொழுதைக் கழிக்கும் இந்த நால்வருக்கும் ஒரு கட்டத்தில் பிரச்சினை காத்திருக்கிறது.
கொடுக்கப்பட்ட இலக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் இல்லையென்றால் வேலையை இழக்க நேரிடும் என்ற நெருக்கடி உருவாகிறது. இதற்கிடையில் ஒரு பிரபல நிறுவனத்தைச் சேர்ந்த குடும்பத்துடன் தொடர்புடைய ஒரு சிறுவன் கடத்தப்படுவது கதையின் போக்கையே மாற்றுகிறது. அந்தக் கடத்தல் வழக்கின் நிழல் இந்த நான்கு இளைஞர்களின் மீதும் விழ, அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.
சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய், பாலாஜி, ஸ்ரீகாந்த், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேரி லிட்டி & கீர்த்தனா புல்கி தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். குறிப்பாக, சூழ்நிலையைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் தருணங்களிலும், பிரச்சினையிலிருந்து தப்பிக்க முயலும் காட்சிகளிலும் இயல்பான நடிப்பு படத்திற்கு நகைச்சுவைத் தன்மையைச் சேர்க்கிறது. வேலை மீது அக்கறையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் தங்களால் சமாளிக்க முடியாத ஒரு பெரிய பிரச்சினைக்குள் சிக்கிக்கொள்ளும்போது ஏற்படும் குழப்பங்களே படத்தின் பிரதான பொழுதுபோக்கு.
படத்தின் மிக முக்கியமான பலம் அதன் பெங்களூரு களம். நகரத்தின் இயல்பான சூழலைப் பயன்படுத்தி கதை நகர்த்தப்பட்டிருப்பது படத்திற்கு தனித்துவமான தோற்றத்தைத் தருகிறது. குறிப்பாக, பெங்களூருவின் பன்மொழிச் சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் வெவ்வேறு மொழிப் பின்னணியைக் கொண்ட கதாபாத்திரங்களை உருவாக்கியிருப்பது ரசிக்க வைக்கிறது. இயக்குநர் தம்பிதுரை எத்துராஜ், கதையை நேரடியாகச் சொல்லாமல் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார்.
கோல்ட் கால்- டார்கெட் வலி.
‘தி டார்க் ஹீவன்’ விமர்சனம் RATING 3/5
பாலாஜி இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ள படம் தான் ‘தி டார்க் ஹீவன்’
விமர்சனம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மெக்கரை என்ற மலைக்கிராமத்தை மையமாக வைத்து கதை நகர்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாக கூறப்படும் சில மர்மமான சம்பவங்கள், நிகழ்காலத்திலும் எவ்வாறு தொடர்கின்றன என்பதுதான் படத்தின் கதைக்களத்தின் முக்கிய அடித்தளம்.
மெக்கரையில் உள்ள கலை மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஒரு மர்மமான புத்தகம் கிடைக்கிறது. அந்தப் புத்தகத்தின் சிறப்பு என்னவென்றால், அதை யார் படிக்கத் தொடங்கினாலும், அவர்களின் வாழ்க்கையில் அடுத்து நடைபெறவிருக்கும் சம்பவங்கள் அதில் ஏற்கனவே எழுதப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், அந்த நபர் எப்போது, யாரால், எவ்வாறு இறக்கப் போகிறார் என்பதும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது கதைக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.
இந்த மர்மமான புத்தகத்தைச் சுற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவங்களுக்கும், நிகழ்காலத்தில் நடைபெறும் தொடர் மரணங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதே கதையின் முக்கிய முடிச்சாக அமைந்திருக்கிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நூலகரின் மகள் தனது தந்தைக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காக மெக்கரைக்கு வருகிறார். அதே நேரத்தில், கிராமத்தில் மர்மமான முறையில் தொடர்ந்து நடைபெறும் தொடர் மரணங்களை விசாரிப்பதற்காக காவல்துறை அதிகாரியாக சித்து அங்கு வருகிறார்.
கிராம மக்கள் இந்த தொடர் மரணங்களுக்கு பின்னால் வன தெய்வத்தின் சாபம் இருப்பதாக நம்புகின்றனர். ஆனால் காவல்துறை அதிகாரியான சித்து, இதை இயற்கைக்கு அப்பாற்பட்ட சம்பவமாக பார்க்காமல், இதன் பின்னால் ஒரு சைக்கோ கொலையாளி இருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்குகிறார். இந்தக் கொலைகளின் பின்னணியில் இருப்பது யார்? என்பதே கதை.
சித்து, காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். தர்ஷிகா, ரித்விகா ஆகியோருக்கும் கதையோட்டத்திற்கு தேவையான முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருவரும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியுள்ளனர்.
நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, அருள் D சங்கர் உள்ளிட்ட நடிகர்கள் ஏற்றுள்ள கதாபாத்திரங்கள் பார்வையாளர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவே படத்தின் மர்மத்தன்மையை மேலும் வலுப்படுத்துகிறது. கதாபாத்திரத்தின் தீவிரத்தையும், விசாரணைக் காட்சிகளின் அழுத்தத்தையும் உணர்ந்து நடித்திருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக, கதையின் மர்மம் அதிகரிக்கும் நேரங்களில் அவரது நடிப்பு படத்தின் பதற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
தி டார்க் ஹீவன்- த்ரில் கலவை.
நடிகை சிம்ரனுக்கு சிறந்த நடிகை விருது! எந்த படத்திற்கு தெரியுமா?!
மீசைய முறுக்கு 2! ரசிகர்கள் ஆர்வம்!!
ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு2’ டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு – யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளை கடந்தது!
80கள் முதல் Gen Z தலைமுறை வரை ரசிகர்களை கவரும் வகையில் இசை, காதல், நகைச்சுவை, ஆக்ஷன் மற்றும் குடும்ப உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ள இப்படம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது.
ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான குறுகிய காலத்திலேயே யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளை கடந்து, சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து டிரெண்டிங்கில் இடம்பெற்று வருகிறது.
படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ள டிரெய்லர், நடனம், ஆக்ஷன், நகைச்சுவை, காதல் மற்றும் குடும்ப உணர்வுகளை ஒருங்கிணைத்து, அனைத்து தலைமுறை ரசிகர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, 80களின் தலைமுறை முதல் இன்றைய Gen Z தலைமுறை வரை வெவ்வேறு காலகட்டங்களின் உணர்வுகளை இணைக்கும் வகையில் இப்படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், சமீபத்தில் வெளியான ஆல்பத்தின் ஐந்தாவது பாடலான ‘கலைவாணியே’ பாடலுக்கும் இசை ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே வெளியான ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே, ‘கோயிந்தம்மா’ மற்றும் ‘அடி போடி’ ஆகிய பாடல்கள் இசை ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, சார்ட் பஸ்டர் பாடல்களாக உருவெடுத்து, இசை தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகின்றன.
ஒவ்வொரு பாடலும் தனக்கென தனித்துவமான இசை மற்றும் உணர்வை கொண்டுள்ள நிலையில், ‘மீசைய முறுக்கு 2’ இளமைத் துடிப்பு, காதல், நகைச்சுவை, நட்பு மற்றும் குடும்ப உணர்வுகளை இசையுடன் இணைக்கும் வண்ணமயமான இசை கொண்டாட்டமாக உருவாகி வருகிறது.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் இசையமைப்பு என பல்வேறு பொறுப்புகளை ஏற்றுள்ளதுடன், கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா. இதன் மூலம் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முழுமையான பொழுதுபோக்கு மற்றும் இசை விருந்தை வழங்கத் தயாராகி வருகிறார்.
இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா, சைத்ரா ஜே. ஆச்சார், கேதிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன் மற்றும் ஷா ரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
டிரெய்லருக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பும், சார்ட் பஸ்டர் பாடல்களும் ஏற்படுத்தியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் செப்டம்பர் 25, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இசை, காதல், உணர்வுகள், நகைச்சுவை மற்றும் கொண்டாட்டம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’, வழக்கமான திரையரங்க அனுபவத்தைத் தாண்டி, திரையரங்குகளையே ஒரு இசைக் கச்சேரியாக மாற்றும் வண்ணமயமான கொண்டாட்டமாக அமையவுள்ளது.
பொள்ளாச்சியில் விவசாயிகள் போராட்டம்!
பொள்ளாச்சி, பி.ஏ.பி, அலுவலகத்தில் போராட்டம் நடந்து வருவது சம்பந்தமாக தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள், அது சமயம் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர், ஈஸ்வர சாமி, மற்றும் பொள்ளாச்சி, எம். எல்.ஏ, நித்தியானந்தன், அவர்களும் கலந்து கொண்டார்கள். பேச்சுவார்த்தையில்
நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
உப்பாறு ஆணைக்கு தண்ணீர் திறக்கும் திட்டம் கைவிடப்பட்டது, எனவும், பி ஏ பி, வாய்க்கால் கடைமடை வரை கால்வாய் தூர்வார ஒதுக்கப்பட்ட நிதி நீர்வளத் துறைக்கு வந்துவிட்டது, மேலும் சட்டமன்றத் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் ஆணையத்திடம் தடை இல்லா சான்று பெற்று அரசாணை வெளியிடப்படும், அதன் பிறகு குறுகிய கால டெண்டர் வைக்கப்பட்டு கால்வாய்களை தூர் வாரும் பணி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது, மேற்கண்ட கோரிக்கைகளை விவசாயி இடம் தெரிவித்தார்கள், இதை ஏற்றுக் கொண்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றார்கள்.
ஒரே மாதிரியான படங்களே வருகின்றன- நடிகை ரித்விகா ஆதங்கம்
எண்டோஸ்கோபிக் ஸ்பைனல் ஃபியூஷன் சிகிச்சை அறிமுகம்!
சென்னை:
காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை, ‘எண்டோஸ்கோபிக் ஃபியூஷன்’ அறுவைசிகிச்சையை சென்னையில் முதல்முறையாக அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் தனது முதுகுத்தண்டுவடப் பராமரிப்புத் திட்டத்தை இம்மருத்துவமனை மேம்படுத்தியுள்ளது. திறந்தநிலை அறுவைசிகிச்சை அல்லது வழக்கமான குறைந்த ஊடுருவல் உள்ள அறுவைசிகிச்சையை (MIS) விட சிறிய துளை மூலம் தண்டுவட அறுவைசிகிச்சை மூலம் பலன் பெறக்கூடிய நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த மாற்று முறையாகும். சுமார் 8 மி.மீ அளவுள்ள சிறிய துளை மூலம் அதிக துல்லியமான கேமரா மற்றும் நுண் கருவிகளைச் செலுத்தி இந்த எண்டோஸ்கோபிக் ஃபியூஷன் அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. இதன் மூலம் நரம்புகளில் உள்ள அழுத்தம் நீக்கப்பட்டு, சுற்றியுள்ள தசைகள், எலும்புகள் மற்றும் தசைநார்கள் பாதிக்கப்படாமல் உட்பதியம் (இம்ப்ளாண்ட்) செய்யப்படுகிறது. வழக்கமான அறுவைசிகிச்சைகளில் ஏற்படும் பெரிய தழும்புகள், தசை பாதிப்புகள், அதிக இரத்த இழப்பு மற்றும் அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய வலி ஆகியவை இதில் மிகக் குறைவாகவே இருப்பதால், நோயாளிகள் விரைவாக குணமடைய இந்த சிகிச்சை உத்தி உதவுகிறது.
வழக்கமான திறந்தநிலை அறுவைசிகிச்சையில் பெரிய அளவிலான கீறல்களும், அதிகளவு தசைப் பிரித்தலும் தேவைப்படும். வழக்கமான குறைந்தபட்ச ஊடுருவல் அறுவைசிகிச்சையிலும் சுமார் 20 மி.மீ அளவில் கீறலிடப்படுவதால் திசுக்களுக்குச் சிறிய அளவில் பாதிப்பு உண்டாகலாம். ஆனால், எண்டோஸ்கோப்பிக் ஃபியூஷன் என்ற இந்த நவீன சிகிச்சை உத்தியில் திசு சேதம், இரத்த இழப்பு மற்றும் அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய வலி ஆகியவை மிக குறைவாகவே இருப்பது, நோயாளிகள் மிக விரைவில் குணமடைய உதவுகிறது.
தண்டுவட வட்டு தேய்மானம், தண்டுவடக் கால்வாய் சுருக்கம் (Spinal stenosis) மற்றும் சில ஆரம்பநிலை தண்டுவட தளர்வுகள் போன்ற தேய்மானத்தால் ஏற்படும் இடுப்புத் தண்டுவடப் பிரச்சனைகள். முறையான ஆரம்பக்கட்ட சிகிச்சைகளை மேற்கொண்ட பிறகும் குணமாகாமல், தொடர்ச்சியான நரம்பு அழுத்த கால் வலியால் அவதிப்படுபவர்கள், ஏற்கனவே திறந்தநிலை அறுவைசிகிச்சை செய்த இடத்தில் தழும்புகள் உருவாகி, மீண்டும் அதே முறையில் அறுவைசிகிச்சை செய்வது அதிக அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால், மாற்று அறுவைசிகிச்சை தேவைப்படும் நபர்கள் மற்றும் நீண்ட நேரம் நடைபெறும் திறந்தநிலை அறுவைசிகிச்சையின் சுமையைத் தாங்க முடியாத சில முதியவர்களுக்கும் இச்சிகிச்சை முறை பொருத்தமானதாக இருக்கும்.
இது குறித்து ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் மூத்த தண்டுவட மற்றும் எலும்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் பி. கீர்த்திவாசன் கூறுகையில், “எண்டோஸ்கோபிக் முறையானது தண்டுவட வட்டு விலகல் மற்றும் நரம்பு அழுத்தத்திற்கான சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் தண்டுவடத்தின் இயற்கையான நிலைத்தன்மையைப் பாதுகாப்பதன் வழியாக, விரிவான இணைவுக்கான தேவையை தவிர்க்க இது உதவக்கூடும். நோயாளியின் உடல்நிலை மற்றும் முழுமையான பரிசோதனைக்குப் பிறகே இச்சிகிச்சை யாருக்குப் பொருந்தும் என்பது தீர்மானிக்கப்படுகிறது. அனைத்து நோயாளிகளுக்கும் இம்முறை பொருந்தாது; கடுமையான தண்டுவடப் பிறழ்வுகளுக்கு வழக்கமான அறுவைசிகிச்சையே தேவைப்படும்,” என்றார்.
ஏற்கனவே தண்டுவட அறுவைசிகிச்சை (L4-L5) செய்திருந்த 56 வயதுப் பெண்மணிக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டபோது, எண்டோஸ்கோபிக் முறை மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் இரத்த இழப்பு 50 மி.லிட்டருக்கும் குறைவாகவே இருந்தது. நோயாளி சிகிச்சைக்குப் பிறகு இரண்டு மணி நேரத்திலேயே நடக்கத் தொடங்கி, இரண்டே நாட்களில் வீடு திரும்பினார். கடுமையான கால் வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் ஒருவருக்குப் பெரிய அறுவைசிகிச்சை தவிர்க்கப்பட்டு, எண்டோஸ்கோபிக் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் விரைவாகக் குணமடைந்து தனது அன்றாடப் பணிகளுக்குத் திரும்பினார். மருத்துவர் பி. கீர்த்திவாசன் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக எண்டோஸ்கோபிக் தண்டுவட அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார். இப்போது இந்த அதிநவீன சிகிச்சை முறையை இம்மையத்தில் அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்.
சென்னை, ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையின் முதுகுத்தண்டு மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் பாலமுரளி இது குறித்துக் கூறுகையில்: “இந்த நவீன மருத்துவ செயல்முறை உத்தி, எங்களின் விரிவான முதுகுத்தண்டு சிகிச்சைத் திட்டத்தை மேலும் வலுப்படுத்துகிறது. சிகிச்சைக்குப் பொருத்தமான நோயாளிகளை தேர்வு செய்வது, துல்லியமான திட்டமிடல் மற்றும் பல்வேறு மருத்துவத் துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவையே சிகிச்சையின் சிறந்த பலன்களைத் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எண்டோஸ்கோபிக் ஃபியூஷன் அறுவை சிகிச்சை என்பது சிறிய அளவிலான கீறல்களை ஏற்படுத்துவது என்பதைத் தாண்டி, நோயாளியின் நிலைக்கேற்ப மிகச் சரியான சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுப்பதாகும். இந்த நவீன உத்தியின் மூலம், சிகிச்சைக்கான வரம்பை மேலும் விரிவுபடுத்தி, நோயாளிகளின் தனிப்பட்ட தேவைக்கேற்ற சிறந்த மருத்துவத் தீர்வுகளை எங்களால் வழங்க முடிகிறது. குறிப்பாக, மிகவும் சிக்கலான மற்றும் மறுசீரமைப்பு தேவைப்படும் முதுகுத்தண்டு பாதிப்புகளில் இது சிறந்த பலனளிக்கும்,” என்று தெரிவித்தார்.
காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனரும் செயல் இயக்குநருமான மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “அறுவைசிகிச்சையின் சிரமங்களையும், பக்கவிளைவுகளையும் குறைத்து, மருத்துவ நிபுணத்துவத்துடன் நவீன தொழில்நுட்பத்தை இணைத்து மக்களுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்கி குணம்பெறச் செய்வதே எங்களின் நோக்கம். எண்டோஸ்கோபிக் ஃபியூஷன் அறுவைசிகிச்சை உத்தியின் அறிமுகம், பொருத்தமான நோயாளிகளுக்கு குறைந்தபட்ச கீறல் மற்றும் வலியுடன் பாதுகாப்பான சிகிச்சையை வழங்கி விரைவாக குணமளிப்பதில் எங்களின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது,” என்று தெரிவித்தார்.
மண்டாடி விமர்சனம் RATING 3.2/5
ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி, மஹிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ், மிதுன் ஜெய்சங்கர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மண்டாடி’
மீனவ சமூகத்தின் வாழ்க்கை, கடல், பாரம்பரிய படகுப் பந்தயம் மற்றும் தனிப்பட்ட பகை ஆகியவற்றை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முத்துக்காளி என்ற கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். கடலில் மீன்பிடிப்பதில் திறமை வாய்ந்தவராக மட்டுமல்லாமல், படகுப் பந்தயத்திலும் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியவராக முத்துக்காளி காட்டப்படுகிறார். சில தனிப்பட்ட காரணங்களால் தனது சொந்த ஊரை விட்டு விலகியிருக்கும் அவர், மீண்டும் தனது மக்களுக்காக திரும்பி வர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது நீண்ட காலமாக அவருடன் மோதலில் இருக்கும் சட்டைப் புலி என்ற கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய சவாலாக மாறுகிறது. அதை சூரி எப்படி கையாண்டார் என்பதே கதை.
முத்துக்காளி கதாபாத்திரத்திற்காக நடிகர் சூரி தன் உடலமைப்பை முழுமையாக மாற்றி, மீனவ மக்களின் மொழிநடையை உள்வாங்கி அப்படியே வாழ்ந்திருக்கிறார். சூரி மற்றும் சுஹாஸ் இடையிலான சண்டைகாட்சி, உணர்வுப்பூர்வமான ஃப்ளாஷ்பேக் மற்றும் ஜி.வி-யின் பின்னணி இசை ஆகியவை வேற லெவல். கடலில் படகில் நடக்கும் சண்டைக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. படத்தின் மிகச்சிறந்த பகுதிகள் க்ளைமாக்ஸ் காட்சியில் தான் வருகிறது.
சற்று நீளமான ஃப்ளாஷ்பேக் காட்சிக்குப் பிறகு, திரைக்கதை மீண்டும் வேகம் பிடிக்கிறது. குறிப்பாக, பிரம்மாண்டமான படகுப் பந்தயக் காட்சியுடன் அமையும் க்ளைமாக்ஸ், கண்டிப்பாகப் பெரிய திரையில் அனுபவிக்கப்பட வேண்டிய ஒன்று. படம் முழுவதும் சூரி மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்தை உறுதியுடன் தாங்கிப் பிடிக்கிறார்.
முதல் பாதி முழுவதும் கொஞ்சம் போர் அடிக்கிறது. ஆனால், இரண்டாம் பாதி படத்தை ஓரளவுக்குக் காப்பாற்றுகிறது. காளி தன் கடந்த காலத்தைச் சொல்லும் காட்சிகள், புலியுடனான நட்பு, சத்யராஜ் கதாபாத்திரம் ஆகியவை நன்றாக வொர்க்-அவுட் ஆகியுள்ளது. மஹிமா உடனான காதல் காட்சிகள் சுவாரஸ்யமாக உள்ளன. க்ளைமாக்ஸில் வரும் படகுப் போட்டி காட்சிகள் விறுவிறுப்பாகவும், எமோஷனலாகவும் எடுக்கப்பட்டுள்ளன. படத்திற்கு இரண்டாம் பாதியும், படகுப் போட்டிகளும்தான் முக்கிய பலம்.
மொத்தத்தில் இந்த ‘மண்டாடி’ படகு மன்னன்
















