Monday, August 10, 2026
Blog

இது எனக்கு சவாலான படம்- நடிகர் & இயக்குனர் விஷால் பேச்சு

குடம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில்
 
நடிகர் விஷால் பேசியதாவது:
 
அனைவருக்கும் வணக்கம்
 
ஸ்ரீகாந்த் சாரோடு உட்கார்ந்து எடிட்டிங் வேலை பார்க்கணும். தெலுங்கு டப்பிங் வேலை  இருக்கு. அப்புறம் ஜிவி பிரகாஷ் ஸ்டுடியோவிற்கு போகணும். நிறைய வேலை இருக்கு. எனக்கு முதல்ல இந்தத் திரைப்படத்தை அமைச்சு கொடுத்த ஆர்.பி செளத்ரி சாருக்கு நன்றி. அவர் நிறைய நம்பிக்கையைக் கொடுத்தார். மேலும் 14  மாதங்கள் படம் நடிக்காமல் மிகுந்த சிரமத்தில் இருக்கும் போது எனக்கு உறுதுணையாக இருந்து இந்த நொடிவரை உடன் நின்றிருக்கிறார் என் வருங்கால மனைவி சாய் தன்ஷிகா. வேற யாராவது இருந்தால் பிச்சிக்கிட்டு ஓடிருப்பாங்க. திருப்பூர் சுப்பிரமணியன் அண்ணன் எனக்கு கொடுத்த ஊக்கமும்,என்மேல் வைத்த  நம்பிக்கையும்  வீண்போகக்கூடாது என்பதற்காக அதிகமாக உழைத்தேன். அவர் கொடுத்த ப்ளாட்பார்ம் தான் இந்த மகுடம் படத்தை வெற்றிப்படமாக மாற்றப்போகிறது. அவருக்கு நான் நன்றி தெரிவிச்சுக்கிறேன். 
 
படத்தில் நடித்த என்னுடைய சக நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நான் நன்றி சொல்லவேண்டும். இது எனக்கு சவாலான படம். கேமராவிற்கு முன்னாடியும் பின்னாடியும் வேலை நிறைய இருந்தது. ஆக்சன் சொல்லி விட்டு சில நொடிகள் கழித்தே அனைவரையும் நடிக்கச் சொன்னேன். ஏனென்றால் எடிட்டிங் பாயிண்டில் எனக்கு அது உதவியாக இருக்கும் என்பதால். மேலும் என் கலைஞர்கள், ” இவன் ஏன் நடிக்கச் சொல்லித் தர்றேன், இவன் ஏன் இசையில் தலையிடுறான், இவன் ஏன் ஸ்டண்ட்டுக்கு வந்து ஐடியா சொல்றான், என்று யாரும் என்னைச் சொல்லவில்லை.
 
இந்த ஈகோ இல்லாத கூட்டத்தால் தான் மகுடம் படம் இவ்வளவு சிறப்பாக வந்திருக்கிறது. நடிகர்களிடம் எப்படி வேலை வாங்கவேண்டும் என்று கத்துக்கிட்டது இயக்குநர் பாலா அண்ணனிடம்.  துஷாரா,அஞ்சலி, ஜான் விஜய், மாயா, அஸ்வின் உள்பட எல்லா நடிகர்களும் நான் சொல்வதை ஏற்று நடித்தார்கள். இயக்குநராக வேண்டும் என்பது என் 35 வருட கனவு. அர்ஜுன் சாரிடம் என்னை உதவிய இயக்குநராக சேர்ப்பதற்கு நான்குமணி நேரம் என் அப்பா காத்திருந்தார். என்னை ஊக்கப்படுத்தி இன்று என் கனவை நிறைவேற்றி வைத்த அப்பாவிற்கு என் நன்றியை தெரிவிச்சுக்கிறேன். அவருக்கு நான் கடமைப்பட்டிருக்கேன்
 
சண்டைக்கோழி படம் வரக்காரணம் என் அம்மா தான். என் அப்பாவிடம் நீங்க செலவு பண்ணலன்னா நான் செலவு பண்றேன் என்று சொல்லி சண்டக்கோழி படத்தில் நடிக்க வைத்தார். அப்பா அம்மா இருவருமே என் கரியரில் எனக்கு ரொம்ப முக்கியம். ஆர்.பி செளத்ரி சார் அறிமுகப்படுத்திய 45-ஆவது புதுமுக இயக்குநர் நான். சூபர் குட் பிலிம்ஸின் 99-ஆவது படம் இது. இந்த இடத்தில் என் குருநாதர் ஆக்சன் கிங் அர்ஜுன் சாருக்கு நன்றி சொல்லிக்கிறேன்.
 
அவர் தான் என்னை நடிக்க வச்சார். அவரிடம் நான் இயக்குநராக நிறைய கத்துக்கிட்டேன். ராம்கோபால்வர்மாவோட உதயம் படம் பார்த்து நான் இயக்குநராகணும்னு நினைச்சேன். இன்னைக்கி வந்து அது நனவாகியிருக்கு. நம் கனவுகளில் நாம் கான்பிடன்டாக இருந்தால் நிச்சயமாக அது நிறைவேறும். அது எனக்கு மட்டுமல்ல. எல்லாருக்கும் தான். சினிமாத்துறையில் மட்டுமல்ல எல்லாத்துறைக்கும் நான் சொல்வது பொருந்தும். 
 
இன்னைக்கு என் பசங்க நிறையபேர் பட்டதாரிகளா இருக்காங்கன்னா அது அவங்களோட  Will power ah தான். 
எனக்கு இந்தத் திரைப்படத்தில் கேமராமேனாக அமைந்த தம்பி ரிச்சர்ட் எனக்கு ரொம்ப வருசமா பழக்கம். அவருக்கு என் டேஸ்ட் புரியும். சுந்தர் சி சார் எல்லாச் சூழலையும் இலகுவாக கையாள்வார். நான் அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். பொன்.பார்த்திபன் சார் எனக்கு நன்றாக சிங் ஆகும் டயலாக் ரைட்டர்.
 
ஜிவி பிரகாஷ் ஆர். ஆர் வாசித்துக்கிட்டிருக்கார் அதான் வரல. ஜிவி என்ற இசையமைப்பாளர் புதுமுக இயக்குநர்களுக்கு ஒரு வரம். அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. அவர் இந்தப்படத்திற்கு Life கொடுத்திருக்கிறார்.
 
உமாதேவி, ஏகாதசி, விவேக், கருணா  ஆகியோரின் வரிகளுக்கு நன்றி. திலீப்போட புரிதலுக்கு நன்றி. 
இந்தப்படத்திலுள்ள க்ளைமாக்ஸ் காட்சி வேறு எந்தப்படத்திலும் வந்ததில்லை. படம் கடைசி எட்டுநிமிடம் மேஜிக் செய்யும். 
 
எனக்குப் பிடித்த நடிகர் விஜய் இன்று முதல்வராக இருக்கார். அவர் படத்தை நான் எப்படி ரசிச்சுப் பார்ப்பேனோ அதே ரோஹினி தியேட்டரில் என் மகுடம்  படத்தையும் பார்க்கப் போறேன்
 
ஜான் விஜய்யால் லயோலா காலேஜில் பெரிய கலவரமே நடந்திருக்கு. அப்போதே எனக்கு அவரை நன்றாக தெரியும். அவரின் இயல்பான மேனரிஜத்தை படத்தில் பயன்படுத்தியுள்ளேன். இளையராஜா சாருக்கு மிக்க நன்றி. அவர் இசையை நான் பயன்படுத்தி இருக்கிறேன். மீடியாவிற்கு ரொம்ப நன்றி. படம் 14-ஆம் தேதி வெளியாகிறது. 
 
படத்திற்கு இன்னும் சில சிக்கல்கள் இருக்கிறது. அதைத்தாண்டி படம் வெளிவரும். 16-ஆம் தேதி வெற்றிவிழாவில் சந்திக்கிறேன். அப்போது நிறைய விசயங்களைச் சொல்கிறேன். படத்தைத் தியேட்டரில்  பாருங்கள் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்”
என்றார்
 
 
 

மனித உரிமைகள் மற்றும் மதச் சுதந்திர மாநாடு!

சென்னை:
 
மனித உரிமைகள் மற்றும் மதச் சுதந்திரம் தொடர்பான மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில் மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், மதப் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
 
தென் கொரியாவைச் சேர்ந்த 95 வயதான அமைதி செயற்பாட்டாளரும் தலைவருமான லீ மான்-ஹீ தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பது தொடர்பான கவலைகள் குறித்து மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. அவரது வயது மற்றும் உடல்நிலை உள்ளிட்ட மனிதாபிமான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அவரது வழக்கில் மனிதாபிமான அணுகுமுறை, உரிய சட்ட நடைமுறை மற்றும் மனித கண்ணியத்திற்கான மரியாதை ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
 
95 வயதானவரின் தடுப்புக்காவல் குறித்து கவலை:
 
95 வயதான தலைவர் லீ மான்-ஹீ தற்போது தென் கொரியாவில் தடுப்புக்காவலை எதிர்கொண்டு வருவது குறித்து மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள் கவலை தெரிவித்தனர். அவரது வயது, உடல்நிலை மற்றும் வயது முதிர்ந்த ஒருவரை தடுப்புக்காவலில் வைத்திருப்பதால் ஏற்படக்கூடிய மனிதாபிமான விளைவுகள் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பினர்.
 
தென் கொரியாவின் அரசியல் கட்சிகள் தொடர்பான சட்டத்தின் விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தலைவர் லீ மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவர் தப்பிச் செல்லக்கூடும் அல்லது ஆதாரங்களில் தலையிடக்கூடும் என்ற அதிகாரிகளின் கவலைகள் அவரது தடுப்புக்காவலுக்கான காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
 
எனினும், தலைவர் லீயின் வயது முதிர்வு மற்றும் சர்வதேச அளவில் அவருக்குள்ள பொதுவான அறிமுகம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, அவரை தொடர்ந்து தடுப்புக்காவலில் வைத்திருப்பது உண்மையில் அவசியமானதா மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ற அளவான நடவடிக்கையா என பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், கணிசமான காலமாக விசாரணை ஏற்கனவே நடைபெற்று வருவதுடன், கணிசமான அளவு ஆதாரங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், தொடர்ந்து தடுப்புக்காவலில் வைப்பதன் அவசியம் குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
 
சர்வதேச அளவில் பரவலாக அறியப்பட்ட நபராக இருப்பதால், அவர் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் செல்வது கடினம் என்றும் பிரதிநிதிகள் வாதிட்டனர்.
 
தலைவர் லீ மான்-ஹீ யார்?
 
தலைவர் லீ மான்-ஹீ, 2013ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சர்வதேச அமைதி அமைப்பான Heavenly Culture, World Peace, Restoration of Light (HWPL)-ன் நிறுவனர் ஆவார். பல தசாப்தங்களாக பல்வேறு நாடுகள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களிடையே அமைதி, நல்லிணக்கம், மதங்களுக்கு இடையிலான உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். கொரியப் போரின் அனுபவத்தை நேரடியாக எதிர்கொண்ட தலைவர் லீ, எதிர்கால தலைமுறைகள் போரின் அழிவை அனுபவிக்காத வகையில் அமைதியை மேம்படுத்துவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
 
அமைதிக் கல்வி, சர்வதேச மாநாடுகள், மதங்களுக்கு இடையிலான உரையாடல்கள் மற்றும் சமூக அடிப்படையிலான பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அவரது அமைதிப் பணிகள் பல நாடுகளுக்கு விரிவடைந்துள்ளதாக கூறப்பட்டது.
 
தலைவர் லீ மான்-ஹீ, Shincheonji Church of Jesus அமைப்பின் தலைவரும் நிறுவனருமாவார்.
 
இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பல்வேறு தன்னார்வ மற்றும் சமூக சேவை நடவடிக்கைகளில் பங்கேற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, ரத்ததான முகாம்கள், சுற்றுச்சூழல் தூய்மைப் பணிகள், பேரிடர் நிவாரணப் பணிகள் மற்றும் உதவி தேவைப்படும் மக்கள் மற்றும் சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளிலும் அவர்கள் பங்கேற்றுள்ளதாக கூறப்பட்டது. இந்த தன்னார்வப் பணிகள் மனிதநேயம், சமூகப் பொறுப்பு மற்றும் பிறருக்கு நடைமுறை ரீதியாக சேவை செய்யும் மனப்பான்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
 
அவரது தடுப்புக்காவல் குறித்து பிரதிநிதிகள் ஏன் கேள்வி எழுப்பினர்?
 
தடுப்புக்காவல் நடவடிக்கை என்பது அவசியம், அளவான நடவடிக்கை மற்றும் உரிய சட்ட நடைமுறை ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும் என பிரதிநிதிகள் வலியுறுத்தினர். அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டுள்ள காரணங்கள் 95 வயதான ஒருவரை தொடர்ந்து தடுப்புக்காவலில் வைத்திருப்பதை நியாயப்படுத்துவதற்கு போதுமானவையா என அவர்கள் கேள்வி எழுப்பினர். தலைவர் லீயின் வயது முதிர்வு மற்றும் மனிதாபிமான சூழ்நிலைகள் உரிய முறையில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும், அவரது வழக்கு நியாயமாகவும் வெளிப்படையாகவும் கையாளப்பட வேண்டும்.
என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

போட்டோகிராபர் விமர்சனம் RATING 2.9/5

ப்துல் பாசித் சையத் தயாரிப்பில் அஷ்ரப் எழுதி இயக்கி நாயகனாக நடிக்க, ஜனனி சாமிநாதன், கருணாகரன், உறியடி சிவா, ஆடுகளம் நரேன், தேவி மகேஷ் உடன் நடிப்பில் வந்திருக்கும் படம் தான் ‘போட்டோகிராபர்’.

கரு: தனது தாயின் கனவை தன் மூலமாக நிறைவேற்றுவதே ‘போட்டோகிராப்’

விமர்சனம்:

மகன் வீராவுக்கு அப்பா ஆடுகளம் நரேன் சொல்கிறபடி அவரது பிசினைஸ் கவனித்துக் கொள்ள விருப்பம் இல்லை. அவனது காதலி ஜனனி மற்றும் அவளது அப்பா, ஆகியோர் சொல்லியும் அவனால் மாறமுடியவில்லை. அவன் மனதுக்குள் ஒரு முள் இருக்கிறது.
 
அந்த முள்ளின் கிழிசலில் இருந்து தப்பிக்க , வாழ்வில் வித்தியாசமாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்று எண்ணும்  வீராவுக்கு, கொடைக்கானலில் உள்ள மதிகெட்டான் சோலையில் இருப்பதாக சொல்லப்படும் தங்க மரத்தை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசை. அதற்கு  நண்பன் கபிலன் மட்டும் அவனுக்கு உதவுகிறான். மதிகெட்டான் சோலைக்குள் போன யாரும் உயிரோடு வந்தது இல்லை என்பது வரலாறு. ‘அங்கே பேய்கள் இருக்கிறது .  வேறு பல கொடிய சக்திகள் இருக்கின்றன’ என்று எல்லாம் சொல்லப்படுகிறது. 
 
நண்பனால் வர முடியாத நிலையில் தான் மட்டும் கொடைக்கானல் போகிறான் வீரா. நண்பன்  ஏற்பாடு செய்து தந்த கைடும் கடைசி நேரத்தில் குழப்ப,  தனி ஒருவனாக மதிகெட்டான் சோலைக்குள் நுழைகிறான் வீரா. அங்கே அவனுக்கு என்ன நடந்தது? என்பதே கதை….
 
வீரா என்ற கதாபாத்திரத்தின் மூலம் முழுப் படத்தையும் தன் தோள்களில் சுமந்து நடித்திருக்கும் அவர், முதல் படத்திலேயே பல்வேறு உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தி நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். ஆரம்பத்தில் அவரது நடிப்பு சற்று அதிகப்படியாகத் தோன்றினாலும், இரண்டாம் பாதியில் கதை மற்றும் காட்சிகளின் ஆழத்தால் அது பாராட்டைப் பெறுகிறது. இயற்கை, அம்மா-மகன் உணர்வு, அதனால் ஏற்படும் உளவியல் பாதிப்பு ஆகியவை சுவாரஸ்யத்தைக் கொண்டு வருகின்றன.
 
நாயகியாக அனனி சுவாமிநாதன் சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும், நிறைவாக நடித்திருக்கிறார். நண்பராக வரும் கருணாகரன் தனது எதார்த்தமான நடிப்பால் படத்திற்கு வலு சேர்க்கிறார். ராஜ்குமார் சந்திரசேகரனின் பின்னணி இசையும் வித்தியாசமான ஒலிகளும் கவனத்தை ஈர்க்கின்றன. நாயகன் மட்டும் பயணிக்கும் இரண்டாம் பாதியில், பின்னணி இசை பார்வையாளர்களின் கவனத்தை இறுகப் பிடித்து வைக்கிறது.
 

மைனஸ்: திரைக்கதையில் கவனம் தேவை…. கருணாகரன் க்கு கூடுதல் காட்சிகள் கொடுத்திருக்கலாம்….

மொத்தத்தில் இந்த ‘போட்டோகிராப்’ ஒரு கனவு

 

ஆண்டு விழாவில் சிறப்பான கராத்தே சாகச நிகழ்ச்சி!

சென்னை:

மெட்ராஸ் சேவா சதன் பள்ளியின் ஆண்டு விழாவில் சிறப்பான கராத்தே சாகச நிகழ்ச்சிகள், அப்பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 7, 2026 இன்று நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகள், குழு உணர்வு மற்றும் சமூகக் கொண்டாட்டங்கள் நிறைந்த இந்நிகழ்வில் மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஒன்றிணைந்தனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ராயப்பேட்டை மண்டலத்தின் காவல் உதவி ஆணையர் திரு. கே. ஜெகதீசன் (M.A., B.Ed) அவர்கள் கலந்துகொண்டு விழாவிற்குச் சிறப்பு சேர்த்தார்.

இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, வலிமை, ஒழுக்கம் மற்றும் துல்லியத்தன்மையை வெளிப்படுத்தும் வகையிலான சிறப்பான கராத்தே சாகசங்கள் அமைந்திருந்தன. இதில் ஓடுகளை உடைத்தல், காரைத் தள்ளுதல் மற்றும் மாணவிகள் கைகளின் மீது கார்களை ஓட்டிச் செல்லுதல் போன்ற சாகசங்கள் இடம் பெற்றன.

குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாக, மாஸ்டர் கேரிபாலா (GeriBala) அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், செல்வி லட்சுமி பிரியா தனது இரு கட்டைவிரல்களை மட்டுமே பயன்படுத்தி காரைத் தள்ளும் தனித்துவமான சாகசத்தை நிகழ்த்தினார். இந்தச் செயல் சிறப்பு விருந்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் என அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.

பயிற்சியளித்து வழிநடத்திய மாஸ்டர் கேரிபாலா, தனது மார்பின் மீது 1,001 மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்ல அனுமதித்ததற்காக கராத்தே உலக சாதனை படைத்தவர் ஆவார். செப்டம்பர் 15, 2009 அன்று இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தச் சாதனை மூலம், ‘வார் வவுண்டட் ஃபவுண்டேஷன்’ (War Wounded Foundation) அமைப்பிற்கான நிதியும் திரட்டப்பட்டது.

உடல் தகுதி, தன்னம்பிக்கை மற்றும் தற்காப்பு ஆகியவற்றிற்கான ஒரு கருவியாக கராத்தே கலையை மாணவிகளுக்கு அறிமுகப்படுத்துவதும், தற்காப்புக் கலைப் பயிற்சியின் மூலம் பெறப்படும் தைரியம், கவனம் மற்றும் விடாமுயற்சி போன்ற விழுமியங்களால் அவர்களை ஊக்குவிப்பதும் இந்தச் செயல்விளக்க நிகழ்ச்சியின் நோக்கமாகும்

மெட்ராஸ் சேவா சதன் பள்ளி, சமூகத்தில் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட சிறுமிகளுக்குத் தரமான கல்வி மற்றும் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதிலும், அவர்களின் கல்வி, உடல் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

மாஸ்டர் ஜெரிபாலா பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்:

எங்கள் மாணவர்கள் இன்று கற்களை கையால் உடைத்து, கை விரலில் கார் ஏற்றி, இரு விரலில் காரை தள்ளி செய்த சாதனை எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவனின் வெற்றி தான் ஒவ்வொரு மாஸ்டருக்கும் மகிழ்ச்சி அளிக்கும். பொதுவாக கராத்தே சிறந்த தற்காப்பு கலை ஆகையால் அனைவரும் கராத்தே கற்று கொள்ளுங்கள். சண்டை போடாமல் கற்று கொள்ள தற்காத்து கொள்ள வைப்பதே கராத்தே. எங்கள் மாணவர்கள் இன்னும் கராத்தேவில் சாதனை செய்ய பயிற்சி அளித்து வருகிறேன். என்று கூறினார்.

வேளாண் பட்ஜெட் என்ன? வாங்க பார்ப்போம்

மிழ்நாடும் சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்றைய தினம் துவங்கிய நிலையில் தவெக அரசுடைய முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். இதனையடுத்து வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்  இன்றைய தினம் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்துறை அமைச்சர் வினோத் பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில், இது சம்பந்தமான விவாதங்கள் தற்போது ஆரம்பித்துள்ளது.

தவெக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பின்பாக முதன்முறையாக தாக்கல் செய்யும் பட்ஜெட் என்பதால் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. இதனையடுத்து நேற்றைய தினம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட்டில் எந்த புதிய அறிவிப்புகளும் இல்லையென எதிர்க்கட்சிகள் விமர்சிக்க ஆரம்பித்தன. ஏற்கனவே இருந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றி ஸ்டிக்கர் மட்டுமே ஒட்டப்பட்டுள்ளதாக விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.

இதற்கிடையில் இன்றைய தினம் வேளாண்துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பல விதமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ திட்டத்தின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் மாடித்தோட்டம், காய்கறி, பழச்செடி வளர்ப்பு உள்ளிட்டவை ஊக்குவிக்கப்படும் விதமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இரசாயன உரங்களை பயன்படுத்தாமல் வீட்டுத் தோட்டங்களில் நச்சுத்தன்மையற்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்தி பழங்கள், காய்கறிகள் உற்பத்தி செய்யலாம்.

இதன் மூலமாக ஊட்டச்சத்து பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், சுற்றுச்சூழல் மாசுபாடும் குறையும். எனவே நகர்ப்புறங்களில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கிராமப்புறங்களில் வீட்டை சுற்றியிருக்கும் நிலப் பகுதிகளில் செடி வளர்ப்புப் பைகளுடன் கூடிய தொகுப்புகள், நீரியல் தோட்டம் மற்றும் செங்குத்து தோட்டம் அமைக்கலாம். இதில் காய்கறிகள், மூலிகை செடிகள், பழங்கள் ஆகியவற்றை வளர்ப்பதன் மூலமாக நலமான சூழலையும் ஏற்படுத்த வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம் திட்டம் கொண்டு வரப்படுவதாக அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

இதற்காக நடப்பாட்டில் ரூ. 10 கோடி மாநில நிதியில் இருந்து ஒதுக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று விவசாயிகளுக்கு ‘வெற்றி விவசாயி’ உள்ளிட்ட முக்கியமான விருதுகள் வழங்கப்படும் எனவும் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட மற்றும் மாநில அளவில் விவசாயிகளுடைய உற்பத்தியை பெருக்கவும், அவர்களை கெளரவிக்கவும் விருதுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஏக்கர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், பருத்தி உள்ளிட்ட 9 பயிர்களை பயிரிட்டு அதிக மகசூல் எடுக்கும் விவசாயிகளுக்கு ‘வெற்றி விவசாயி விருது’ மாவட்ட அளவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் பரிசாக ரூ. 50,000, இரண்டாம் பரிசாக ரூ. 25,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தமாக 90 பரிசுகள் வழங்கப்படவுள்ள நிலையில், இதற்காக ரூ. 67.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தவெகவின் தேர்தல் வாக்குறுதியான 100% பயிர்க்கடன் தள்ளுபடி குறித்தான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சமீப காலமாகவே இதற்காக விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்து வந்தனர். இந்நிலையில் இன்றைய வேளாண் பட்ஜெட்டில் பயிர்க்கடன் தள்ளுபடி சம்பந்தமான அறிவிப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காவேரி மருத்துவமனை சேவையில் உயிர்காக்கும் ஏ.இ.டி கருவி!

சென்னை:
 
திடீர் மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான இதய பாதிப்பு ஏற்படும் நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு அவசரநிலை சிகிச்சையளிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில், காவேரி மருத்துவமனை மற்றும் சென்னை பன்னாட்டு விமான நிலையம் இணைந்து ‘ஹார்ட்சேஃப்’ திட்டத்தைத் தொடங்கியுள்ளன. இதன் கீழ், விமான நிலையம் முழுவதும் 13 தானியங்கி வெளிப்புற உதறல் கருவி (AED) நிறுவப்பட்டுள்ளன. ஏ.இ.டி என்பது கையடக்கமான மின்னணு சாதனமாகும். இது இதயத் துடிப்பை ஆய்வு செய்து, இயல்பான துடிப்பை மீட்டெடுக்கக் கட்டுப்படுத்தப்பட்ட மின் அதிர்ச்சியைப் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கிறது.
 
சென்னை விமான நிலைய இயக்குநர் திரு. ராஜா கிஷோர், காவேரி மருத்துவமனை குழும நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.
 
சென்னை விமான நிலையத்தில் T1 வருகை, T2 புறப்பாடு, T2 பாதுகாப்புப் பகுதி மற்றும் T4 வருகை ஆகிய நான்கு இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர மருத்துவச் சேவை மையங்களைக் காவேரி மருத்துவமனை இயக்குகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் என 49 பேர்கொண்ட குழு இங்கு செயல்படுகிறது. இவர்கள் பயணிகள், பணியாளர்கள் மற்றும் வருகையாளர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும்போது உடனடி மருத்துவப் பரிசோதனை, முதலுதவி, அவசர சிகிச்சைகளை வழங்குகின்றனர்.
 
மேலும், நோயாளிகளுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கவும் தேவைப்படும் போது பாதுகாப்பாக மருத்துவமனைக்கு மாற்றுவதற்கும், விமான நிலையத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் முழுமையான சிகிச்சை வசதிகளுடன் கூடிய இரண்டு ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இங்குள்ள ஒவ்வொரு மருத்துவ மையமும் மாதத்திற்கு 80 முதல் 100 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கிறது. அதன்படி, நான்கு மையங்களிலும் ஒட்டுமொத்தமாக 320 முதல் 400 நோயாளிகள் பயனடைகின்றனர். இதில் மருத்துவ அவசரநிலைகள், விமானத்திற்குள் ஏற்படும் பாதிப்புகள், முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்கு மாற்றப்படுவோர் அடங்குவர். இவர்களில் 5 முதல் 10 நோயாளிகள் மார்பு வலி, நெஞ்சு படபடப்பு போன்ற இதய பாதிப்புகளுக்காக வருகின்றனர். இது, விமான நிலைய வளாகத்திற்குள் துரிதமான இதய அவசர சிகிச்சைக் கட்டமைப்பின் அவசியத்தை உணர்த்துகிறது.
 
விமான நிலைய வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஏ.இ.டி கருவிகள், அவசர மருத்துவச் சேவை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துகின்றன. திடீர் மாரடைப்பு ஏற்படும் போது, முதல் சில நிமிடங்களிலேயே உயிர்காக்கும் சிகிச்சை வழங்கப்படுவதற்கு இவை பேருதவியாக இருக்கும்.
 
இந்நிகழ்வில் பேசிய சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் இயக்குநர் திரு. ராஜா கிஷோர் கூறுகையில்: “சென்னை பன்னாட்டு விமான நிலையம், ஒவ்வொரு பயணிக்கும், வருகையாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் பாதுகாப்பான சூழலை வழங்க உறுதி கொண்டுள்ளது. தானியங்கி வெளிப்புற இதய உதறல்நீக்கி சாதனங்களை (AED) நிறுவியிருப்பது, எங்களின் அவசர மருத்துவத் தயார்நிலையை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான படியாகும். 24 மணி நேர விமான நிலைய மருத்துவ மையங்கள் மூலம் காவேரி மருத்துவமனை வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்கும், மருத்துவ அவசர காலங்களில் எங்கள் துரிதச் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த அவர்கள் அளிக்கும் நிபுணத்துவத்திற்கும் எங்களது நெஞ்சார்ந்த பாராட்டுகள். நாங்கள் இருவரும் இணைந்து, சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் மருத்துவச் சிகிச்சையின் மூலம் விமான நிலைய வளாகத்தில் உயிர்காக்கும் பாதுகாப்பான சூழலமைப்பை உருவாக்கி வருகிறோம்.”
 
இந்த முன்னெடுப்பு குறித்து பேசிய காவேரி மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ், “திடீர் மாரடைப்பின் போது, சிகிச்சை தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. உடனடியாக சிபிஆர் (CPR) எனப்படும் இதய-நுரையீரல் மீட்டெடுப்பு சிகிச்சையைத் தொடங்கி, முதல் சில நிமிடங்களுக்குள் ஏ.இ.டி கருவியைப் பயன்படுத்தினால், நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கான விகிதம் கணிசமாக அதிகரிக்கும். ‘ஹார்ட்சேஃப்’ திட்டத்தின் மூலம், விரைவாக உயிர்காக்கும் சிகிச்சையைச் சாத்தியமாக்க 13 ஏ.இ.டி கருவிகளை இவ்வளாகத்தில் நாங்கள் நிறுவியுள்ளோம்.
 
எனினும், அவசர காலத் தயார்நிலை என்பது ஏ.இ.டி கருவிகளை நிறுவுவதோடு முடிந்துவிடுவதில்லை; அதற்கு சரியான மருத்துவ நிபுணர்கள், முறையான பயிற்சி மற்றும் சிறந்த அமைப்புகள் தேவை. சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உள்ள காவேரி மருத்துவமனையின் 24×7 அவசர சிகிச்சை மையங்களில், மேம்பட்ட மருத்துவ உபகரணங்களின் ஆதரவோடு அனுபவமிக்க மருத்துவர்கள், திறமையான செவிலியர்கள் மற்றும் பயிற்சி பெற்ற துணை மருத்துவப் பணியாளர்கள் செயல்படுகின்றனர். தற்போது ஏ.இ.டி கருவிகள் நிறுவப்பட்டிருப்பதன் மூலம், எங்களின் அவசர சிகிச்சைப் பிரிவு மேலும் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நொடியும் விலைமதிப்பற்றதாக இருக்கும் ஒரு நெருக்கடியான சூழலில், பயணிகள், வருகையாளர்கள் மற்றும் விமான நிலையப் பணியாளர்கள் என அனைவருக்கும் விரைவான, உயிர்காக்கும் சிகிச்சை கிடைக்கும் என்ற உத்தரவாதமளிக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்க இது உதவுகிறது.”  என்று கூறினார். 
 
ஏ.இ.டி (AED) கருவிகள் நிறுவப்பட்டிருப்பது, ஒவ்வொரு ஆண்டும் இந்த விமான நிலையத்திற்கு வந்து செல்லும் இலட்சக்கணக்கான பயணிகள், பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் சென்னை பன்னாட்டு விமான நிலையம் மற்றும் காவேரி மருத்துவமனை ஆகியவை கொண்டிருக்கும் கூட்டு அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. நவீன அவசரக்கால உபகரணங்களை உடனடியாகப் பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்துவது மட்டுமின்றி, மாரடைப்பை அடையாளம் காணுதல், சிபிஆர் சிகிச்சை அளித்தல் மற்றும் மருத்துவ உதவி கிடைக்கும் வரை ஏ.இ.டி (AED) கருவியைப் பயன்படுத்துதல் ஆகியவை குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதன் அவசியத்தையும் இந்த முன்னெடுப்பு வலியுறுத்துகிறது.

பழனி நில மோசடி…. நால்வருக்கு போலீஸ் காவல்! தொடர் விசாரணை!!

திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவார பகுதியில் உள்ள தண்டபாணி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாக ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸார், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மடத்து வாரிசுதாரர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழநி அருகே புதூரைச் சேர்ந்த சேதுபதி, பத்திரம் தயாரித்து கொடுத்த வழக்கறிஞர் அன்வர்தீன், இடைத்தரகராக செயல்பட்ட ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சென்னை உயர்நீ திமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் பெற்று திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், இடத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகியோரை கடந்த ஜூலை 29-ம் தேதி போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்த சிபிசிஐடி போலீஸார், திண்டுக்கல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று நீதிபதி பாக்கியராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிபிசிஐடி போலீஸாரின் கோரிக்கையை ஏற்று, ஆக.5-ம் தேதி முதல் ஆக.7-ம் தேதி வரை (வெள்ளிக்கிழமை மதியம் வரை) மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, மதுரை மத்திய சிறையில் இருந்து திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட நால்வரையும் சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்!

சென்னையில் 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

வெறுப்புப் பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்தப் புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பொன்முடியை தண்டிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் தனிநபர் புகார் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஜூலை 2 ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பொன்முடி மீதான வழக்கு, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்திர பாண்டியன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி பொன்முடி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, பொன்முடியை செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்தும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 2-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

‘அமுக்கரா’ குதிரை பலம் ரகசியம்!

ன்று நாம் தெரிந்து கொள்ளும் மூலிகை ‘அமுக்குரா’ எனும் ஒரு குத்து செடி இதற்கு ஆயுர்வேதத்தில் ‘அஸ்வகந்தா’ என்ற பெயரும் உண்டு அஸ்வா என்றால் குதிரை என்ற பொருளும் உண்டு இந்த மூலிகையை ஒரு ஆண்மகன் பக்குவப்படுத்தி பயன்படுத்தும் போது இல்லற வாழ்க்கையில் அவனது சக்தி குதிரைக்கு இணையாக இருக்கும் என்ற பொருளும் நாம் எடுத்துக் கொள்ளலாம் இது சாதாரணமாக மலைப்பகுதிகளில் வளரக்கூடியது.

இதன் வேர்ப்பகுதி மட்டுமே நமக்கு ஆண்மை விருத்திக்கான மருந்தாக பயன்படுகிறது இதன் வேர்களை சேகரித்து பாலில் புட்டு அவியல் செய்து இடித்து சூரணம் செய்து காலை மாலை இரண்டு கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர நரம்பு மண்டலங்கள் வலிமை அடையும் விந்து உற்பத்தி அதிகமாகும் மற்றும் நன்கு உறக்கம் வரும் மேலும் இதில் வரும் பழங்களை நாம் துவையல் செய்து சாப்பிடலாம்.

அமுக்குரா இதை பிரித்து பொருள் பார்த்தால் உறவில் ஆண்களுக்கு அமுக்கத்தை அதாவது போதிய அளவு நேரத்தை கூட்டக்கூடிய தன்மை கிடைக்கும் என்றும் பொருள் எடுத்துக் கொள்ளலாம். இதன் இலைகள் உடலில் வரும் கட்டிகளை பழுக்க வைக்க பயன்படுகிறது மேல் பூச்சியாக பயன்படுத்த கட்டிகள் பழுத்து உடையும்.

இப்படிப்பட்ட ஒரு சிறப்பான மூலிகை நரம்பு மண்டலங்களை பலப்படுத்த தூக்கத்தை வரவழைக்க உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் இதை அனைவரும் பயன்படுத்தி பலன் அடையுங்கள் நன்றி.

தொடர்பு கொள்ள:

திரு. கனகராஜ் (பாரம்பரிய வைத்தியர்)
சரவணா ஹெர்பல்ஸ், சேலம்
9942558530

அதிக மின்சார கட்டணம்! விளக்கம்!!

மிழகத்​தில் நடப்பு ஜூலை மாதத்​துக்​கான வீட்டு மின் கட்​ட​ணம் வழக்​கத்தை விட பல மடங்கு உயர்ந்து பொது​மக்​கள் மத்​தி​யில் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. குறிப்​பாக, கடந்த மே மாதக்​கட்​ட​ணத்​தோடு ஒப்​பிடும்​போது, இரு​மடங்கு மின்​கட்​ட​ணம் அதி​கரித்​துள்​ள​தாக புகார்​கள் வந்​துள்​ளன. இதனிடையே பில்​லிங் செயல்​முறை​யில் ஏற்​பட்ட பிரச்​சினை மற்​றும் மீட்​டர் கணக்கீட்டுக் குறை​பாடு​கள் காரண​மாக நுகர்​வோருக்கு மின்கட்ட​ணம் அதி​கரித்​த​தாக மண்டல மின் தலைமை பொறியாளர் சமீபத்​தில் விளக்​கமளித்​திருந்​தார். இந்த நிலை​யில் கூடு​தல் கட்​ட​ணம் விதிக்​கப்​பட்​டது குறித்​தும், 3.70 லட்​சம் வீட்டு மின் இணைப்​பினை ஆய்வு மேற்​கொள்​ள​வும் அதி​காரி​களுக்கு மின்​வாரி​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

இது தொடர்​பாக மின்​வாரியத் தலை​வர் அருண் ராய் அனைத்து மண்டல தலை​மைப் பொறி​யாளர்​களுக்​கும் அனுப்​பி​யுள்ள சுற்றறிக்கை:

கடந்த மே 2026 மாத மின் கட்​ட​ணத்​துடன் ஒப்​பிடும்​போது, நடப்பு ஜூலை 2026 மாதத்​தில் மின் நுகர்வு மற்​றும் கட்டண விகிதம் 3.70 லட்​சம் வீட்டு மின் இணைப்​பு​களுக்கு அதி​கரித்து இருப்​பது கண்​டறியப்​பட்​டுள்​ளது. இந்த மின் இணைப்​பு​களில் நேரடி​யாக கள ஆய்வு செய்ய முடி​வெடுக்​கப்​பட்​டுள்​ளது. அந்த வகை​யில், மறுஆய்​வுப் பணி​களை விரைந்து முடிக்க பல்​வேறு நிலைகளில் உள்ள அதி​காரி​களுக்கு உத்​தரவு பிறப்​பிக்​கப்​படு​கிறது.

இதன்​படி தலை​மைப் பொறி​யாளர் 25 மின் இணைப்​பு​களை​யும், மேற்​பார்​வைப் பொறி​யாளர் 50 மின் இணைப்​பு​களை​யும், செயற்​பொறி​யாளர் 75 மின் இணைப்​பு​களை​யும், துணை நிதி கட்​டுப்​பாட்​டாளர் 50 மின் இணைப்பு​களை​யும் ஆய்வு செய்ய வேண்​டும். இவர்​கள் மட்​டுமின்​றி, உதவி செயற்​பொறி​யாளர் 100, கணக்கு அதி​காரி 150, மூத்த மதிப்​பீட்டு அதி​காரி 150, உதவி கணக்கு அதி​காரி 100, மதிப்​பீட்டு அதி​காரி 150 மற்​றும் உதவிப் பொறி​யாளர் 100 மின் இணைப்​பு​களை​யும் நேரடி​யாகச் சென்று சரி​பார்க்க வேண்​டும். இந்த நேரடி மறுஆய்​வுப் பணி​கள் அனைத்​தும் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதிக்​குள் முழு​மை​யாக முடிக்​கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்​டும்.

மேலும், இந்த ஆய்​வு​களின் போது மின் கணக்​கீட்​டில் ஏதேனும் தவறுகள் அல்​லது பிழைகள் கண்​டறியப்​பட்​டால், உடனடி​யாகத் தேவை​யான திருத்​தங்​களை அதி​காரி​கள் மேற்​கொள்ள வேண்டும். இவ்வாறு மின்வாரியத் தலைவர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மின்சாரம் பற்றிய புகார் எண்: 9498794987