சென்னை:
தண்டையார்பேட்டை படேல் நகர் 3 வது தெருவில் சென்னை மாநகராட்சி மேல்நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 2000-2001 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ மாணவிகள் 25 ஆண்டுகள் கழித்து அனைவரும் இன்று அப்பள்ளியில் சந்தித்தனர். சந்தித்த மகழ்ச்சியில் அனைவரும் ஒருவருக்கொருவர் கட்டி அனைத்து அன்பை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் அன்று பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்களை அழைத்து கவுரவித்து ஆசிர்வாதம் பெற்றனர்.