Monday, July 27, 2026
Blog

அலறவிட்ட மாணவர்கள்! 47 அதிகாரிகள் பணி நீக்கம்?!!

புதுடெல்லி, ‘நீட்’ வினாத்தாள் கசிந்த விவகாரம் நாடு முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடந்தது. வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து, தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (NTA) ரத்து செய்தது. தொடர்ந்து, கடந்த 21ம் தேதி நீட் மறு தேர்வு நடந்தது. நீட் வினாத்தாள் அடிக்கடி கசிவதால், என்.டி.ஏ. அமைப்பு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதையடுத்து, ‘அடுத்தாண்டு முதல் நீட் தேர்வு கணினி வழி முறையில் நடத்தப்படும்’ என, பா.ஜ.க, மூத்த தலைவரும், மத்திய கல்வி அமைச்சருமான தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.

தர்மேந்திர பிரதான்

இந்த சூழலில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

வன்முறை

இதற்கிடையே நாடாளுமன்றத்தை நோக்கி கடந்த 20-ந்தேதி நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் மாணவர்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காயம் அடைந்தனர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரை விட்டு தற்போது வரை வெளியேறவில்லை. இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க தினமும் ஏராளமான இளைஞர்கள் வெளியூர்களில் இருந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

ஜந்தர் மந்தரை சுற்றி இணைய சேவை முடக்கப்பட்டு இருக்கிறது. மெட்ரோ ரெயில் சேவைகள் தடை செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்து வருவது, டெல்லியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.

இதனிடையே நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (CJP) அமைப்பின் கோரிக்கைகளுக்கு இணக்கமான தீர்வைக் காண்பதற்காக, அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர்களான சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோருடன் மத்திய மந்திரிகள் ஜிதேந்திர சிங் மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் இன்று( வெள்ளிக்கிழமை, ஜூலை 24) டெல்லியில் உள்ள விட்டல்பாய் படேல் இல்லத்தில் சந்தித்தனர்.

போராட்டங்கள் தொடரும்

மத்திய அரசுடன் இன்று நடைபெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் அல்லது அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) வலியுறுத்தி உள்ளநிலையில், மாணவர் போராட்டங்கள் தொடரும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

47 அதிகாரிகள் பணி நீக்கம்

இந்நிலையில் தேசிய தேர்வுகள் முகமை (NTA) 47 அதிகாரிகளை பணியிலிருந்து நீக்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மேலும் அவர்கள் மீது மீது சட்டரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன. வினாத்தாள் கசிவு விவகாரத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ள தேசிய தேர்வுகள் முகமையை முழுமையாக சீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

2 லட்சம் பிரசவம் பார்த்த மருத்துவர் பாட்டி!

தராபாத், வயது என்பது வெறும் எண்தான் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் 92 வயது பெண் மருத்துவர் ஒருவர். இந்த வயதிலும் அவர் தொடர்ந்து அறுவை சிகிச்சைகளை செய்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

68 ஆண்டு சேவை!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் மருத்துவர் சூரி ஸ்ரீமதி (வயது 92). பிரபல மகப்பேறு மருத்துவர் ஆன இவர், கடந்த 68 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ துறையில் பணியாற்றி வருகிறார். தன் வாழ்நாளில் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான பிரசவம் பார்த்து சாதனை படைத்துள்ளார்.

தொடரும் அறுவை சிகிச்சை!

92 வயதை எட்டிய பிறகும், தற்போதும் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார். வயது மூப்பு காரணமாக ஓய்வெடுக்காமல், இப்போதும் தேவைப்படும் அவசர காலங்களில் சிசேரியன் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகளை துல்லியமாக மேற்கொண்டு அசத்தி வருகிறார்.

இவரது இந்த அசாத்திய சேவைக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகிறது.

கோவையில் உண்டியல் பணம் திருட்டு!

கோவை கோனியம்மன் கோவில் வளாகத்தில் 9 இடங்களில் நிரந்தர உண்டியல் இருக்கிறது. திருப்பணிக்கு பக்தர்களிடம் நன்கொடை வசூலிக்கும் விதமாக ஒரு உண்டியல் உள்ளது. தேர்த்திருவிழாவை ஒட்டிய ஆறு இடங்களில் தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டது.

மொத்தமுள்ள 16 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி, அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடந்த 15ஆம் தேதி காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை நடைபெற்றது.

ஒரு உண்டியலில் உள்ள காணிக்கை பணத்தை எடுக்காமல், ஏற்கெனவே எண்ணப்பட்ட உண்டியல்களோடு சேர்த்து மறைத்து வைத்துள்ளனர். இதை அதிகாரிகள் கவனிக்கவில்லை. பிறகு சீட்டு விற்பனையாளர் பாலசுப்ரமணியன், அலுவலக உதவியாளர் சரவணன், திருவலகு பிரதீப்குமார், பூசாரி கிருஷ்ணராஜ் ஆகியோர் கூட்டாக ஒரு உண்டியலை மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் குமார் நடத்திய விசாரணையில் ஊழியர்கள் நால்வர் உண்டியல் பணத்தை திருடியது உறுதியானதால், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. தற்போது இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கோவில் உண்டியல் பணத்தைத் திருடிய நான்கு ஊழியர்களும் அதை கவனிக்காத நான்கு அதிகாரிகளும் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்து முதல்வர் விஜய் யின் வாழ்க்கை படமா?!

மிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்து தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் விஜய். இதனிடையே, அவரது நடிப்பில் வெளியாகி உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் அவரது கடைசிப் படம் எனக் கூறப்படுவதால், இனி அவரைத் திரையில் பார்க்க முடியாதோ என்ற கவலையில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை (பயோபிக்) திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அட்லீ இயக்கும் பான்-இந்தியா திரைப்படம்?

விஜய்க்கு ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ எனத் தொடர்ந்து மூன்று பாக்ஸ் ஆஃபிஸ் படங்களை கொடுத்த இயக்குநர் அட்லீ, விஜயின் பயோபிக் திரைப்படத்தை இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மிகப்பிரம்மாண்டமான முறையில் பான்-இந்தியா திரைப்படமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில், விஜய்யின் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் கேள்வியும் சினிமா வட்டாரங்களில் எழுந்துள்ளது.

‘நாளைய தீர்ப்பு’ முதல் முதலமைச்சர் வரை

‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி, இன்று தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்துள்ள விஜய்யின் திரையுலக மற்றும் அரசியல் பயணத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகவுள்ளதாகக் கூறப்படும் செய்தி அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும், விஜய்யின் பயோபிக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகம் போக வேண்டாம்! மு.க ஸ்டாலின் வேண்டுகோள்!!

ர்நாடகா – தமிழ்நாடு இரண்டு மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர்ப் பிரச்னை என்பது பல ஆண்டு காலமாகவே இருந்து வருகிறது. இந்தசூழலில்தான், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போது, கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து இந்த தீர்மானம் ஒருமனதாகவும் நிறைவேறியிருந்தது.

அதேசமயம், அண்மையில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கிடைக்க வேண்டிய நீரை கர்நாடகா உடனடியாக திறந்துவிட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், குடிநீர் தேவைக்கு மட்டுமே நீர் இருப்பதாகவும், மழைப் பொழிவு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க இயலாது என்றும் கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்தசூழலில் தான், மேகதாது அணை மற்றும் காவிரி நதி நீர்ப் பிரச்னை குறித்து நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூருவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் செல்லவுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் ஆர்.வினோத் தெரிவித்திருக்கிறார். அதன்படி, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாருடன் தமிழ்நாடு முதல்வர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தநிலையில் தான், மேகதாது அணை தொடர்பாக கர்நாடக முதல்வருடனான பேச்சுவார்த்தைக்கு முதல்வர் விஜய் செல்வதை கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை! நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.

இதனால்தான், கடந்த காலங்களில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் உறுதியாக அதனை நிராகரித்தது தி.மு.க.! கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக் கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி; விவசாயச் சங்கத்தினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்! பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகம் செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தஞ்சாவூரில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நபர்! எப்படி வேலை பார்க்கிறார்?!

ஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு பிரிவில் தற்காலிக கணினி ஆப்ரேட்டராக சுதர்சன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் ஊழியர்களிடம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால், புகாரின் அடிப்படையில் கடந்த 6ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அவரை பணிநீக்கம் செய்துள்ளார். இந்நிலையில் பணிநீக்கம் செய்தபின்னரும் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அவர் மீண்டும் கணினியில் வேலை பார்த்துள்ளார்.

அப்போது அங்கு வந்த சத்துணவு ஊழியர்கள் சுதர்சனை பார்த்து “நீ ஏன் இங்கு வந்து வேலை பார்க்கிறாய் என கேட்டபோது ஊழியர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட சுதர்சனுக்கு ஆதரவாக உடனிருந்த சக ஊழியர்களும் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வீடியோ வெளியாகி வைரலானது.

இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தஞ்சாவூர் ஒன்றியத் தலைவர் குலோத்துங்கன், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு பிரிவில் தற்காலிக கணினி ஆப்ரேட்டராக பணியாற்றிய சுதர்சன், இவர் ஊழியர்களிடம் பணம் பெறுவது உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால், அவரை மாவட்ட ஆட்சியர் கடந்த 6-ம் தேதி பணிநீக்கம் செய்தார். 

ஆனால், சுதர்சன் அலுவலகத்தில் கணினியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அவரிடம் கேட்டால் முறையாக பதில் அளிக்காமல், எங்களிடம் தகராறுக்கு வருகிறார். அலுவலகத்தில் மேலாளர், உதவியாளர்கள் என பலரது முன்னிலையில் அவர் பணியாற்றி வருகிறார். மேலாளரிடம் கேட்டால், சத்துணவு ஊழியர்களுக்கு சம்பளம் போட வேண்டும் எனவே தான் சுதர்சன் வேலை பார்க்கிறார் என கூறுகின்றனர். தஞ்சாவூர் ஒன்றியத்தில் உள்ள 131 சத்துணவு ஊழியர்களின் குடும்ப விவரங்கள், பணி தொடர்பான விவரங்கள் அனைத்தும் கணினியில் உள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவரை எப்படி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் அனுமதித்தனர் எனத் தெரியவில்லை. இது தொடர்பாக விளக்கம் கேட்டால், எங்களையே சுதர்சன் தாக்க வருகிறார். இந்த விவகாரத்தை நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட உள்ளோம். எங்களது தகவல்கள் கணினியில் பாதுகாப்பில்லாமல் இருப்பதால், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

‘மனதின் குரலில்’ பிரதமர்

பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) என்ற தலைப்பில் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன்படி, 136-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

மக்களே, இந்த மாதம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் விஞ்ஞானிகள், தொலைதூரம் செல்லக்கூடிய பினாகா ராக்கெட் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டனர். இந்த வெற்றி நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

அதேபோல குஷா என்​ற பெயரில்​ அ​திநவீன ஏவுகணை கவசத்தையும் டிஆர்டிஓ உருவாக்கியது. உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட மகேந்திரகிரி போர்க்கப்பல் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியாவை நோக்கிய பயணத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இது அமைந்துள்ளது. இன்று பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, நட்பு நாடுகள் உடனான அரசியல் ரீதியான உறவு உள்ளிட்டவை புதிய உயரத்தை தேசம் எட்டியுள்ளன.

இந்த மாத தொடக்கத்தில் நான் இந்தோனேசியா பயணம் மேற்கொண்டிருந்தேன். அப்போது பிரம்மோஸ் ஏவுகணை சார்ந்த முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய பாதுகாப்பு உபகரணம் மற்றும் தொழில்நுட்பத்தின் மீது உலக நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கை அதிகரித்து வருவதை இது காட்டுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

தொடர் அமளி! சபாநாயகர் ஒத்திவைப்பு!!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடுத்தடுத்து பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை 12 மணிக்கு பின்னர் மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்ததால், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 5-ம் நாளான இன்று காலை 11 மணிக்கு வழக்கம் போல இரு அவைகளும் கூடின. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும், கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, கார்கில் போரில் வீரமரணம் அடைந்த தியாகிகளின் வீரத்தைப் போற்றும் வகையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, கேள்வி நேரம் தொடங்குவதாக ஓம் பிர்லா அறிவித்தார். 

எனினும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர். அவர்களை சமாதானப்படுத்த ஓம் பிர்லா தொடர்ந்து முயன்றார். “கேள்வி நேரத்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். எந்த விஷயம் தொடர்பாக விவாதிக்க நீங்கள் விரும்பினாலும் அதற்கான அனுமதி உங்களுக்கு வழங்கப்படும்.

நேற்றும்கூட இதை நான் தெரிவித்தேன். அவையின் செயல்பாடுக்கு இடையூறு விளைவிக்காதீர்கள். என ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். எனினும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை தொடர்ந்து நடக்க நீங்கள் விரும்பவில்லை என்பதால் அவையை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கிறேன்” என அறிவித்தார்.

நீட் தேர்வு போராட்டம்! சென்னை மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு!!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டெல்லியில் இளைஞர்கள் போராடி வருகின்றனர். அதன்படி அவர்களுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையிலும் இளைஞர்கள் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவல்களின் அடிப்படையில் நேற்று சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள இணைப்பு சாலைகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன்படி அனைத்து இணைப்பு சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் கடற்கரை பகுதிக்கு உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றயை தினம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள இணைப்பு சாலைகளில் பொதுமக்கள் வழக்கம் போல் நடைபயிற்சி மேற்கொண்டனர். நேற்று போல இன்றும் காலை 10 மணி பிறகு கடற்கரை பகுதிக்கு செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது என காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மெரினா கடற்கரை இணைப்பு சாலைகளில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

நேற்றைய தினம் போல் இன்றும் காலை 10 மணிக்கு பிறகாக சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள இணைப்பு சாலைகள் மூடப்படும் என அறிவித்த நிலையில் எந்த நுழைவாயில்களும் மூடாமல் அனைத்து நுழைவாயில்களும் திறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மெரினா கடற்கரை பகுதிகளில் உள்ள இணைப்பு சாலைகளில் காவலர்கள் ஆங்காங்கே பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி டெல்லியில் இளைஞர்கள் போராடி வரும் நிலையில் சென்னை மெரினா கடற்கரையிலும் மாணவர்கள் போராட்டம் மேற்கொள்ளவார்கள் என்பதால் நேற்று மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று மெரினா கடற்கரை பகுதிகளில் வழக்கமாக பொதுமக்களும் வாகனங்களும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

ஜனநாயகன் விமர்சனம் RATING 2.9/5

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

விமர்சனம்:

கைதியாக சிறையில் இருக்கிறார் தளபதி வெற்றிக் கொண்டான் (விஜய்). காவல்துறைக்கு அவர் செய்யும் உதவிக்கு கைமாறாக, மரண தருவாயில் இருக்கும் அவரது தாயை சந்திக்க ஏற்பாடு செய்கிறார் அதிகாரி ஸ்ரீகாந்த் (கௌதம் வாசுதேவ் மேனன்). அதனால் அவர் சஸ்பெண்ட் ஆகிறார். விபத்தில் ஸ்ரீகாந்த் இறந்துவிட, அவரது மகள் விஜியை தனது மகளாக எடுத்து வளர்க்கிறார் தளபதி வெற்றிக் கொண்டான். விஜியை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்ற அவரது தந்தையின் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் தளபதி. இதனிடையே அரசியல்வாதிகளுடன் சேர்ந்து தன் சுயலாபத்துக்காக தமிழ்நாட்டை அழிக்க நினைக்கிறார் சர்வதேச குற்றவாளி ஜான் ஹிம்லர் (பாபி தியோல்). இப்படியான சூழலில், அவர்களின் சதித்திட்டத்தை முறியடித்து, தமிழகத்தை தளபதி வெற்றிக் கொண்டான் எப்படி மீட்டார்…? விஜி ராணுவ அதிகாரி ஆனாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை….

விஜயின் கடைசி படத்தை தன்னால் முடிந்த அளவுக்கு மாஸ் தருணங்களை நிரப்பி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்திருக்கிறார் ஹெச்.வினோத். மகளாக குறும்புத்தனங்களுடனும், இறுதியில் ஆக்‌ஷன் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார் மமிதா பைஜூ. பூஜா ஹெக்டேவுக்கு சொல்லிக்கொள்ளும்படி காட்சிகள் இல்லை. சர்வதேச வில்லனாக முரட்டுத்தனத்தில் மிரட்டுகிறார் பாபி தியோல். பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், ஸ்ரீநாத் தேவையான நடிப்பை வழங்குகின்றனர். தனது வழக்கமான முக பாவனைகள், உடல்மொழிகள், ரசிக்க வைக்கும் சின்ன சின்ன ரியாக்‌ஷன்களால் கவரும் விஜய், ‘ஒன் லாஸ்ட் டான்ஸ்’ என நடனத்தில் மிரட்டுகிறார். எம்ஜிஆர் புகைப்படத்துடன் விஜய்க்கு கொடுக்கும் இன்ட்ரோ, மாஸான இன்டர்வல் காட்சி, ‘நான் ஆணையிட்டால்’ பாணியில் சாட்டை சுழற்றும் காட்சி, பஞ்ச் வசனங்கள், ஆக்‌ஷன் என தெறிக்கவிடுகிறார் விஜய். 

பகவந்த் கேசரி படத்தின் மைய சரடையும், பல காட்சிகளையும் சேர்த்து தன்னுடைய கற்பனையையும், அரசியலையும் கலந்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் ஹெச்.வினோத். சூப்பர் மார்க்கெட்டில், பூஜா ஹெக்டேவை சந்தித்து ஆன்டி என நக்கலடிக்கும் காட்சி, மமிதாவுக்கான ராணுவ பயிற்சி, காவல்துறை அதிகாரியின் தவறான நடத்தை, சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான வசனம், பெண்களை மட்டுப்படுத்தும் காட்சிகள் பகவந்த் கேசரியின் ரீமேக். “பொண்ணுங்களுக்கு பயம் இருக்க கூடாது..”, “புலி மாதிரி வளர்க்கணும்..” என பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசுகிறது படம். 

மைனஸ்: லாஜிக் இல்லாத கிளைமேக்ஸ் காட்சிகள்…. காதல் காட்சிகள் ஒன்னும் இல்லை….

மொத்தத்தில் இந்த ‘ஜனநாயகன்’ ஒரு போராட்டக்காரன்.