Thursday, February 12, 2026
Blog

போலீஸ் தடியடி! நடந்தது என்ன?!

புதுச்சேரி பொதுப்பணித் துறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து வரும் வவுச்சர் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அண்மையில் முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனாலும் இதுவரை அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

முதல்வர் அறிவிப்பின்படி, தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சிங்கார வேலர் நினைவு தினத்தையொட்டி கடலூர்-புதுச்சேரி சாலையில் நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு இன்று முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்தார்.

பின்னர், அங்கிருந்து புறப்பட்டார் அப்போது வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கத்தில் ஒன்றுகூடியிருந்த பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் ஏராளமானோர் முதல்வரின் காரை முற்றுகையிட முயன்று அவரது காரை பின்தொடர்ந்தனர்.

உடனே அங்கு பாதுகாப்பில் இருந்த போலீஸார் வவுச்சர் ஊழியர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது முதல்வரின் கார், அந்த இடத்தை கடந்து சென்ற நிலையில், போலீஸாருக்கும் வவுச்சர் ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் வெங்கட சுப்பா ரெட்டியார் சதுக்கம் அருகே நெல்லித்தோப்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் போலீஸாருக்கும், ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, ஊழியர் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டு விழுந்துள்ளார். அவரை சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அந்த சமயத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் போலீஸாரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன், பெண் ஊர்க்காவல் படையினர் பவதாரணி, ராஜலட்சுமி ஆகியோரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கினர். இதையடுத்து போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கலைந்து செல்ல வைத்தனர். இதில் ஏனாமைச் சேர்ந்த படுகு சுப்புராஜ் (45) என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் புதுச்சேரி அரசு பொது மருத்துவமைனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், காயமடைந்த 13 ஊழியர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் சங்கத் தலைவர் சரவணனை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் போலீஸார் தடியடி நடத்தியதில் காயமடைந்த 14 வவுச்சர் ஊழியர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன், திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி, முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன், திமுக தொகுதி பொறுப்பாளர் கோபால் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியது:

“பொதுப்பணித் துறை வவுச்சர் ஊழியர்கள், கரோனா காலத்தில் பணியில் சேர்ந்த செவிலியர்கள், அரசு பள்ளி ஒப்பந்த ஆசிரியர்கள், என்ஆர்எச்எம் ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள், மின்துறை ஊழியர்கள் தினமும் போராட்டம் நடத்துகிறார்கள்.

பொதுப்பணித் துறை வவுச்சர் ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது. அவர்கள் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க அமைதியான முறையில் சென்றனர். ஆனால், காவல் துறையை ஏவிவிட்டு அவர்களை காட்டுமிராண்டிதனமாக அடித்துள்ளனர். 14 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். இது ஆட்சியாளர்களின் அராஜகத்தின் உச்சகட்டம். இதுபோன்ற அராஜக ஆட்சி புதுச்சேரியில் இருந்தது இல்லை.

இந்தச் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தலைமையில் போராட்டம் நடத்த உள்ளோம். காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன் நாளை சட்டப்பேரவையில் இப்பிரச்சினையை முன்வைத்து, அரசு உரிய பதில் சொல்ல வேண்டும் என பேச உள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.

‘ஆட்சியில் பங்கு கிடையாது’ தமிழக முதல்வர் உறுதி!

ட்சியில் பங்கு’ என காங்கிரஸ் தலைவர்கள் போர்க்கொடி உயர்த்திக் கொண்டிருக்கும் சூழலில், ‘கூட்டணி ஆட்சியெல்லாம் தமிழகத்துக்கு சரிப்பட்டு வராது’ என தடாலடியாக மறுத்துள்ளார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின்.

விஜய் அரசியலுக்கு வந்தது தமிழகத்தில் பல்வேறு கட்சிகளுக்கும் அனுகூலமாகிவிட்டது. டிடிவி தினகரன், அன்புமணி தொடங்கி கிருஷ்ணசாமி வரை தவெகவை வைத்து கேம் ஆடிய நிலையில், காங்கிரஸும் விஜய்யை வைத்து திமுகவுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறது.

கடந்த சில வாரங்களாகவே காங்கிரஸில் கலகக் குரல்கள் அதிகமாகியிருக்கிறது. ‘ஆட்சியில் பங்கு வேண்டும், அதிகம் தொகுதிகள் வேண்டும்’ என்பதை அழுத்தமாக சொல்லி வருகின்றனர் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோர். இவர்களின் கோரிக்கைக்கு வலு சேர்ப்பதுபோல டெல்லி தலைமையும் பெரிதாக கண்டிக்காமல் அப்படியே விட்டுவிட்டது.

2006-ல் 34 தொகுதிகளில் வென்று, 96 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்த திமுகவுக்கு ஆட்சியில் பங்கு கோராமலேயே பரிபூரண ஆதரவளித்தது காங்கிரஸ். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டது. அதன்பின்னர் 2016-ல் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் மட்டுமே கொடுத்தது திமுக.

2021 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கான கோட்டாவை இன்னும் குறைத்து 25 ஆக்கியது. 2026 தேர்தலில் காங்கிரஸுக்கான தொகுதிகள் இன்னும் குறைக்கப்படலாம் என்று அரசல் புரசலாக பேசப்பட்டது. இதனை மனதில் வைத்தே காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர்த்து வந்தது திமுக.

தங்களுக்கான தொகுதிகள் குறைக்கப்படலாம் என்பதை யூகித்த காங்கிரஸ், அடுத்த ஆப்ஷனாக தவெகவை கையில் எடுத்தது. மிகக் குறைவான தொகுதிகளை திமுக ஒதுக்கினால், தவெக பக்கம் செல்வோம். வெற்றிபெறவில்லை என்றாலும், கட்சியை உயிர்ப்பிப்போம். விஜய்யின் செல்வாக்கை வைத்து தேர்தல் நடைபெறவுள்ள புதுச்சேரி, கேரளாவில் வெற்றி பெறுவோம் என்றெல்லாம் கணக்குப் போட்டது.

இந்தக் கணக்கின் வெளிப்பாடாகவே ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை முன்வைக்க ஆரம்பித்தது காங்கிரஸ். திமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒரு சாரரும், தவெக கூட்டணிக்கு ஆதரவாக ஒரு சாரரும் என களத்தில் தீவிரமாக பேசி வருகின்றனர். தவெக தரப்பிலும், ‘70 தொகுதிகள், துணை முதல்வர் பதவி, ஆட்சியில் பங்கு’ என்றெல்லாம் காங்கிரஸுக்கு தூண்டில் போடப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, திமுகவுடன் கூட்டணி குறித்து பேச 70 நாட்களுக்கும் மேலாக காத்திருக்கிறோம் என வெளிப்படையாகவே சொல்லி அதிர்ச்சியூட்டினார் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர். இதனை தொடர்ந்து பிப்.22 முதல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்குவோம் என திமுக அறிவித்துள்ளது.

இந்தச் சூழலில்தான் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதெல்லாம் ஒத்துவராது என்று உறுதியாக சொல்லியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், “திமுக கூட்டணியில் குழப்பம் என திட்டமிட்டு பரப்பப்படுகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி இடையே எந்த குழப்பமும் இல்லை. திமுக, காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக இருக்கிறது. ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது. கூட்டணியில் முறிவு ஏற்படுவதற்காக ஆட்சியில் பங்கு என கிளப்பி விட்டு, சிலர் சதி செயலில் ஈடுபட்டுள்ளனர். அது எடுபடாது.

ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்பது காங்கிரஸுக்கு நன்றாக தெரியும். அரசியலை தாண்டி ராகுல் காந்தியை ஒரு சகோதரராக பார்க்கிறேன். அவரும் அப்படித்தான். திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இருக்கும்” என பொட்டில் அடித்தாற்போல சொல்லியுள்ளார்.

இதற்கு உடனடியாக பதிலளித்த காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி, “இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் கூட்டணி அரசை ஏற்கும் நிலையில், தமிழ்நாடு மட்டும் ஏன் ஏற்காது? இந்தியாவில் மற்ற மாநில மக்களை போல் தமிழ்நாட்டு மக்களும் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவாகவே உள்ளனர். கூட்டணி ஆட்சி அமைவதில் தமிழக மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை’ எனத் தெரிவித்தார்.

இவரின் கருத்தை ஆமோதித்த காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், ‘மக்கள் முடிவு செய்வார்கள் கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை. 2006-ல் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது காங்கிரஸ் கட்சியின் தவறு’ எனத் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அரசியலுக்கு அப்பாற்பட்டு ராகுல் காந்தி என் சகோதரர் போன்றவர் எனச் சொல்லியுள்ளார். ஆனால், ‘ஆட்சியில் பங்கு’ என குரலெழுப்பும் அத்தனை காங்கிரஸ் தலைவர்களும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்கள் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். ஆட்சியில் பங்கு இல்லை என உறுதியாக மறுத்திருக்கிறார் ஸ்டாலின்.

 

பெண் ஆய்வாளர் பகிர்ந்த ஆடியோ வைரல்!

சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு பெண் ஆய்வாளர் கிரேசி சோபியா சமீபத்தில் பொறுப்பேற்றார். காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வார்டுகளிலுள்ள பெண்கள், பொதுமக்கள் இணைத்து வாட்ஸ்ஆப் குரூப் ஒன்றை ஏற்படுத்தி, அதில் வெளியிட்ட ஆடியோ ஒன்றில், ‘ஒரு பவுன் ரூ. 1 லட்சத்தை தாண்டியிருக்கிறது.

பாதுகாப்பின்றி நகை அணிந்து வந்தால் டூவீலரில் வந்து பறித்துக்கொள்வர். அதிகாலை 5.30 மணிக்கும், இரவு 8.30 மணிக்கும் இரு இடத்தில் நகைப் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. நகை விற்கும் விலைக்கு பாதுகாப்பாக வையுங்கள். முடிந்தளவு பெண்கள் தங்க நகைகளை அணிவதை தவிர்க்கலாம். இதற்கு பதில் கவரிங், பாசிகளை போடுங்கள்.

வெளியூர் சென்றால் வீட்டிலுள்ள பணம் நகைகளை வங்கி லாக்கரில் வையுங்கள். காவல் துறைக்கு தகவல் தெரிவியுங்கள். வர்த்தகர்கள் கடை கல்லா பெட்டியில் பணம் வைக்கக் கூடாது. நம்பர் பிளேட் இன்றி டூவீலர்களில் வலம் வரும் கொள்ளையர்கள், குறிப்பாக வாக்கிங், வாசலில் கோலமிடும், கடைக்கு செல்லும் பெண்களை குறி வைத்து நகை பறிக்கின்றனர்.

நகைப் பறிப்பு நடந்துவிட்டால் கண்டுபிடிப்பது கடினம். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வீடு, வர்த்தக நிறுவனங்களில் பணியிலுள்ள காவலாளிகள் விசில் வாங்கி கொடுத்து, குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை விசில் ஊத அறிவுறுத்தாலும், சில இடங்களிலுள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்படாததால் குற்றச் செயல்களை கண்டறிவதில் சிரமம் உள்ளது.

மரங்கள், போஸ்டரால் கேமராக்கள் மறைக்கப்படுகிறது. எவ்வித தகவலாக இருந்தாலும் போலீஸுக்கு தகவல் தெரிவியுங்கள். காவல் துறைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார். குற்றச் செயல்களை தடுக்க, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆய்வாளர் கிரேசி சோபியா வெளியிட்ட இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்ப்பிணி பெண் மீது தாக்குதல்! விஜய் கண்டனம்

மிழக வெற்றிக் கழகத்தினர் மீது ரௌடிகள் தாக்குதல் நடத்தியதாக கட்சித் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்:

“சென்னை, பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, 100-க்கும் மேற்பட்ட ரௌடிகள் அராஜக தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

இந்தத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் ஆறு பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன். தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது. இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள பெரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான ராஜேஷுக்கும் (30), அத்திவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கவுசல்யா (20) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில், கவுசல்யா கடந்த 5-ம் தேதி வீட்டில் தரையில் சிந்தியிருந்த சமையல் எண்ணெயில் கால் வைத்த போது, வழுக்கி விழுந்ததில், தலையில் படுகாயமடைந்து உயிரிழந்ததாக ராஜேஷ், கவுசல்யாவின் தந்தை முருகனிடம் தெரிவித்துள்ளார். ஆனால், கவுசல்யாவின் முகத்தில் நக கீறல்களும், உதடு, தலை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டிருந்ததால், கவுசல்யாவின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து, கவுசல்யாவின் தாய் அளித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீஸார், வழக்குப் பதிவு செய்து நடத்திய தீவிர விசாரணையில் தெரிய வந்ததாவது:

கவுசல்யாவின் கணவர் ராஜேஷுக்கும், அவரது சித்தி மகளான, சென்னை, கொருக்குப்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.காம்.2-ம் ஆண்டு படித்த வந்த தீபிகா (21)வுக்கும், உறவை மீறிய காதல் இருந்துவந்துள்ளது. அந்த காதல், ராஜேஷின் திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்ததால், அதனை தட்டிக் கேட்டுள்ளார் கவுசல்யா. இதையடுத்து, கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு லாட்ஜில் ராஜேஷும், தீபிகாவும் அறையெடுத்து, தங்கி கவுசல்யாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி, கவுசல்யாவின் முகத்தை தலையணையால் அமுக்கியும், அவரது தலையை சுவற்றில் மோதியும் கவுசல்யாவை கொலை செய்துள்ளார் ராஜேஷ். பிறகு, கவுசல்யா தரையில் சிந்திய சமையல் எண்ணெயில் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடியுள்ளார். இவ்வாறு போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜேஷ் மற்றும் தீபிகா ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

‘ஆழி’ இசை வெளியீட்டு விழா

லையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆழி’ திரைப்படத்தில் சரத்குமார் , இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்திருக்கிறார் ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஒலி வடிவமைப்பினை மேற்கொண்டிருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 888 புரொடக்ஷன்ஸ் மற்றும் செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

பிப்ரவரி 27ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவரான ரவி கொட்டரக்கரா, இயக்குநர் உதய சங்கரன், விநியோகஸ்தர்கள் அப்பாஸ் ஏ. ஜெ, ஹரி உத்ரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ரவி கொட்டரக்கரா படத்தின் இசையை வெளியிட.. வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

விநியோகஸ்தர் ஹரி உத்ரா பேசுகையில், ”இன்றைய தேதியில் நல்ல படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு பல சவால்கள் இருக்கின்றன. நல்ல கன்டென்ட் கிடைப்பதும் பெரிய விஷயமாக இருக்கிறது. அந்த வகையில் ஆழி மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என நம்புகிறேன். நான் சின்ன வயதில் இருந்தே சரத்குமாரின் ரசிகர். அவருடைய படங்களை பார்த்து வளர்ந்திருக்கிறேன். அவர் நடித்த இந்த திரைப்படத்தை விநியோகம் செய்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். குறைந்த பட்ஜெட்டிலான படங்கள் வெளியாவதிலும் அவற்றை விற்பனை செய்வதிலும் பெரும் போராட்டம் இருக்கிறது. தமிழ் திரையுலக நலனுக்காக போராடும் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து வியாபார வழிமுறையை முன்வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை தாமரை செல்வி பேசுகையில், ”இது எனக்கு முதல் மேடை. இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. நான் மேடை நாடகத்தில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது சரத்குமாரை சந்தித்தேன். அதன் பிறகு இப்போது தான் அவரை சந்திக்கிறேன். அவருடைய படத்தில் நடித்திருக்கிறேன் என்பது சந்தோஷமாக இருக்கிறது. என்னை படபிடிப்பு தளத்தில் மலையாளத்தில் பேச வைத்த இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி,” என்றார்.

நடிகர் வையாபுரி பேசுகையில், ”சரத்குமாருடன் 2001ம் ஆண்டிற்கு முன்னர் நடித்துள்ளேன். அதன் பிறகு இப்போது தான் அவருடன் மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது.‌ இந்த படத்தில் அப்பா வேடத்தில் நடித்திருக்கிறேன். இந்த வேடத்தில் நடிப்பதற்காக இயக்குநர் என்னிடம் இரண்டு நாள் கால்ஷீட் கேட்டார். ஆனால் ஒரே நாளில் அனைத்து படப்பிடிப்பையும் நிறைவு செய்துவிட்டார். மலையாள இயக்குநர்கள் தமிழில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று என ஆசைப்படுகிறார்கள். அதற்காக இயக்குநர் உருவாக்கிய கதைதான் ‘ஆழி’ . இப்படம் பிப்ரவரி 27ம் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை தேவிகா சதீஷ் பேசுகையில், ”தமிழில் நான் நடிக்கும் மூன்றாவது படம் ‘ஆழி’. நான் இந்தப் படத்தில் சரத்குமாரின் மகளாக நடித்திருக்கிறேன். நான் சின்ன வயதில் இருந்தே சரத் குமார் சார் நடித்த படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். படத்தில் மட்டுமல்லாமல் படப்பிடிப்பு தளத்திலும் ஒரு அப்பாவை போல் அறிவுரை கூறி அன்பாக அக்கறையுடன் நடத்தினார். என்னுடைய ஆசிரியர்களுக்கும் இயக்குநர் மாதவ் ரமா தாஸ் இயக்கிய படங்கள் பிடிக்கும். இந்தப் படத்தில் ஆஸ்கார் விருதை வென்ற ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனிங் செய்திருக்கிறார். அதனால் படத்தின் தரம் அனைவருக்கும் பிடிக்கும்.‌‌ படத்தின் பணியாற்றிய சக நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர் அனைவருக்கும் நன்றி,” என்றார்.

நடிகர் இந்திரஜித் ஜெகன் பேசுகையில், ” இப்படத்தில் வாய்ப்பளித்ததற்காக இயக்குநருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் சரத்குமார் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. திரைக்கு முன்னாலும்… திரைக்குப் பின்னாலும்… அவர் என்னுடைய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதில் அவருடைய அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. பின்னணி இசையில் ரசூல் பூக்குட்டியின் பங்களிப்பு பிரம்மாண்டமானதாக இருக்கும். ஆழி படக்குழுவில் நானும் இடம் பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது,” என்றார்.

தயாரிப்பாளர் ரவி கொட்டாரக்கரா பேசுகையில், ”படத்தின் டைட்டில் ஆழி. ஆழி என்றால் கடல். உங்களில் யாருக்காவது கடலின் ஆழம் என்ன என தெரியுமா? தெரியாது. அதேபோலத்தான் என்னுடைய நண்பர் சரத்குமாரின் நடிப்பின் ஆழம். இன்னும் அவர் புதிதாய் நடித்துக் கொண்டே இருப்பார். அவர் முதலில் ஏற்று நடித்த கேரக்டர்கள் வேறு. வில்லன், ஹீரோ, லவ்வர் பாய், ஃபாதர்- ஃபேமிலி மேன் டு எவரிதிங். ஆனால் இதில் அவர் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இன்றைய இளம் கலைஞர்கள் அவரிடம் இருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அவர் கதையைக் கேட்கும் போது அவரது கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கிக் கொள்வார். இதனை இன்றைய 85 சதவீத நடிகர்கள் செய்வதில்லை. அவர் இன்று வரை படித்துக் கொண்டிருக்கிறார் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பற்றியும் சிந்திக்கிறார். அண்மை காலமாக அவர் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்று நடித்திருக்கும் கேரக்டர் வித்தியாசமானதாக இருக்கும். இதே போல் தான் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

கடல் அலையின் ஓசையை கேட்டிருப்பீர்கள். கடல் – ஆழியின் ஒலியை கேட்டிருக்கிறீர்களா?  அதனை இந்த படத்தில் ரசூல் பூக்குட்டி கேட்க வைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் இயக்குநர் மாதவ் ரமா தாசன் வித்தியாசமான திரைக்கதையில் கதையை சொல்லி இருக்கிறார்.

தயாரிப்பாளர் சஜித் கிருஷ்ணன் எனது தயாரிப்பில் வெளியான மலையாள படத்தை 26 ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் வெளியிட்ட விநியோகஸ்தர். சிறந்த அனுபவசாலி. அவர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜூன் மாதத்திற்கு பிறகு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் கட்டிடம் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கும். அனைவரும் வருகை தாருங்கள். சினிமாவை மேலும் வளப்படுத்துவோம்,” என்றார்.

இயக்குநர் மாதவ் ரமா தாசன் பேசுகையில், “நான் தமிழில் இயக்கியிருக்கும் முதல் படம் இது. இதற்கு முன் மலையாளத்தில் ‘மேல் விலாசம்’, ‘அப்போதகேரி ‘, ‘இளையராஜா ‘ என மூன்று திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன். இதில் ‘இளையராஜா’ படத்தை தமிழில் உருவாக்க எண்ணினேன். தமிழில் படத்தை இயக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம்.  அதற்கான நேரம் இப்போது அமைந்து ஆழி  உருவாகியுள்ளது.  70 சதவீதம் கடலில் நடைபெறும் இந்த கதைக்கு சவுண்ட் அவசியம். இதற்காக சர்வதேச அளவில் அனுபவம் உள்ள ரசூல் பூக்குட்டியிடம் கேட்டோம்.  அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு தற்போது வரை படத்தின் தரமான ஒலி அமைப்பிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தில் நாய் ஒன்றும் நடித்திருக்கிறது. அதனுடைய ஒலிக்காக கஷ்டப்பட்டு உழைத்தார். நாயின் குரைப்பு ஒலியை துல்லியமாக பதிவு செய்யும்போது அவருடைய மைக் ஒன்றும் சேதமடைந்தது. அந்த அளவிற்கு நேர்த்தியாக உழைத்திருக்கிறார். இந்த படத்தில் நாயின் கதாபாத்திரமும், அதனுடைய ஒலி அமைப்பும் ரசிகர்களை கவரும். இந்தப் படத்தை பார்த்த பிறகு அனைவருக்கும் கடலுக்குள் நிஜமாகவே சென்று வந்த ஒரு உணர்வு ஏற்படும்.

இந்தக் கதையை முதலில் சரத்குமாரிடம் சொன்னேன். அவர்தான் அவருடைய கதாபாத்திரத்தில் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டார். அவருடைய கேரக்டரில் நிறைய வேரியேஷன்ஸ் இருக்கிறது. படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கும் தருணத்தில்  அதிகாலை 3 மணி அளவில் கூட என்னை தொடர்பு கொண்டு அவரது கதாபாத்திரம் குறித்த கேள்விகளை கேட்பார். அதற்கு நான் விளக்கம் அளிப்பேன். இந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தின் மீது ஈடுபாடு காட்டி நடித்திருக்கிறார் சரத்குமார்.‌ இப்படத்தில் அவர் நெகட்டிவ் ஷேடிலும் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் நடித்த வையாபுரி, இந்திரஜித், தேவிகா மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நிகில் முருகனும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்,” என்றார்.

சவுண்ட் என்ஜீனியர் ரசூல் பூக்குட்டி பேசுகையில், ”சரத்குமார் நடித்த பல படங்களை என்னுடைய கல்லூரி காலங்களில் பார்த்து ரசித்து கொண்டாடி இருக்கிறேன்.  அவரை மீண்டும் இந்த படத்திற்காக திரையில் பார்த்தபோது அவர் அதே இளமையுடன் இருப்பதை பார்த்து வியந்து போனேன். இவர் எப்படி இளமைக் குன்றாமல், வயதே ஆகாமல் தோன்றுகிறார் என ஆச்சரியப்படுகிறேன். நடிகர், பாசமுள்ள தந்தை, நிறுவனத்தின் தலைவர் என அவர் எப்போதும் இயல்பாக சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டே இருக்கிறார். அவர் எதையும் ‘டேக் இட் ஈஸி’யாக எடுத்துக் கொள்கிறார். இதைத்தான் அபிஷேக் பச்சன், ஷாருக்கான், கமல்ஹாசன் ஆகியோரும் பின்பற்றுகிறார்கள்.
சரத்குமாரை பற்றி இந்திரஜித் குறிப்பிட்டது போல் அவரிடம் இருக்கும் ஒழுக்கத்தை இன்றைய இளம் தலைமுறையை சேர்ந்த கலைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சரியான உணவு, உடற்பயிற்சி, அர்ப்பணிப்பு, உழைப்பு, மரியாதை, நேரம் தவறாமை, கேமரா முன்னால் நடிப்பு என ஒரு தவத்தை போல் தன்னுடைய பணியை செய்கிறார். அவர் இந்தப் படத்தில் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மூலம் கதையை வழி நடத்துகிறார்.

நான் இதுவரை வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு மனிதர்களிடத்தில் பழகி பணியாற்றி இருக்கிறேன். இந்தி சினிமாவிலும் பணியாற்றி இருக்கிறேன், தென்னிந்திய சினிமாவிலும் பணியாற்றியிருக்கிறேன். இரண்டிலும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் தென்னிந்திய சினிமாவில் ஒவ்வொரு காட்சிக்கும் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். சினிமாவைப் பற்றி அக்கறையுடன் இருப்பார்கள். நான் இந்தப் படத்தை மூன்று முறை மிக்ஸ் செய்திருக்கிறேன். இது போன்ற துணிச்சலான அணுகுமுறை தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் , இயக்குதர்களுக்கும் தான் இருக்கிறது. இங்குள்ள தயாரிப்பாளர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் இயக்குநரை கொண்டாடுகிறார்கள். இயக்குநருக்கு ஆதரவு தருகிறார்கள்.

அத்துடன் இவர்கள்தான் மெயின் ஸ்ட்ரீம் ரசிகர்களின் மனநிலையை கணிக்கிறார்கள். தொழில்நுட்பம், கலை அழகு, கதை, கதாசிரியர், இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் மீது நம்பிக்கை கொள்கிறார்கள்.  இந்த காரணத்தினால் தான் தமிழ் சினிமா, மலையாள சினிமா, மராத்தி சினிமா,.வங்காள சினிமா ஆகியவை வளர்ச்சி அடைந்து வருகின்றன.  இதற்கு நானே மிகச் சிறந்த உதாரணம்.

இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகை தேவிகாவின் புன்னகை நன்றாக இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்,” என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில், ”இந்தப் படத்தின் இயக்குநர் மாதவ் ரமா தாசன் கதை சொல்ல வந்தார். அவர் வருவதற்கு முன் அவர் இயக்கத்தில் வெளியான ‘மேல் விலாசம்’ படத்தை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அவர் கதை முழுவதும் சொன்னார். அது வித்தியாசமான கதை . பெரும்பாலும் மீன்பிடி படகு ஒன்றில் நடைபெறும் கதை. பெரும்பாலும் கடல் தான் திரைக்கதையில் இருக்கிறது. இதை எப்படி நீங்கள் திரையில் காட்சிப்படுத்துவீர்கள் என கேட்டேன். அது குறித்து நாங்கள் முழுமையாக திட்டமிட்டிருக்கிறோம் என சொன்னவுடன் அதிலேயே அவருடைய அர்ப்பணிப்பு எனக்குத் தெரிந்தது. ஒரு மீன்பிடி கப்பல் அளவிற்கான கப்பல் ஒன்றை அரங்கத்திற்குள் உருவாக்கி, அதனை இயக்குவதற்காக ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தினார். அதனால் இந்த படத்தை நான் ஒரு வித்தியாசமான படமாக தான் பார்க்கிறேன்.

பல படங்கள் ஆடல், பாடல், பிரம்மாண்டம் என கமர்ஷியல் அம்சங்களுடன் இருக்கும். ஆனால் இதில் ஆடல் பாடல் போன்ற பிரம்மாண்டங்கள் இல்லை. ஆனால் கதை பிரம்மாண்டமானதாக இருக்கும்.

இன்றுள்ள ரசிகர்கள் பலவிதமான படங்களை பார்த்து ரசிக்கிறார்கள். செல்போனில் வெளியாகும் ஷார்ட்ஸ், ரீல்ஸ் இதிலெல்லாம் நடிக்கிறார்கள். இதனால் நடிகர்களுக்கு ரீல்சில் நடிப்பதா, ஷார்ட்ஸில் நடிப்பதா, வெப்சீரிஸில் நடிப்பதா, டெலிவிஷனில் நடிப்பதா, பெரிய ஸ்கிரீனில் நடிப்பதா என்ற குழப்பம் இருக்கிறது. ஆனால் இந்த வகையான குழப்பம் எந்த நடிகர்களுக்கும் தேவையில்லை. ஏனெனில் எதில் நடித்தாலும் நடிப்பு நடிப்புதான். அதனால் எதில் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஏந்த குழப்பமும் தேவையில்லை. காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப நாம் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் மாற்றம் ஒன்றே மாறாதது.

மாதவ் ரமா தாஸின் வித்தியாசமான படம் என்று தான் இதை சொல்வேன். அதனால் இந்த படம் வெற்றி பெறும். இதற்கு ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.

இந்தப் படத்திற்கு என்னுடைய நண்பர் ரசூல் பூக்குட்டியின் பங்களிப்பு வலிமையானது என்றே சொல்லலாம். இது சவுண்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம். அவருடைய அர்ப்பணிப்பு உணர்விற்காக அவருக்கு மேலும் பல ஆஸ்கார் விருதுகள் கிடைக்க வேண்டும் என்ற வாழ்த்துகிறேன். இந்தப் படத்தில் பெல்ஜியம் மலினாய்ஸ் வகையை சேர்ந்த நாய் ஒன்று நடித்திருக்கிறது. நாயின் குரலை துல்லியமாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இரண்டு நாள் அவரது குழுவினருடன் ரசூல் பணியாற்றினார். இந்தப் படத்தில் நாயுடனும் ஒரு சண்டைக் காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் சிறப்பானதாக இருக்கும்.

தயாரிப்பாளர் சஜித் கிருஷ்ணன், விநியோகஸ்தர் ஹரி உத்ரா, பாடலாசிரியர் நவீன், வையாபுரி, தாமரைச்செல்வி, தேவிகா சதீஷ், இந்திரஜித் ஜெகன், நடிகர் நிகில் முருகன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

இந்தப் படத்தின் கிளிம்ப்ஸை பார்க்கும் போது நான் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பது தெரியும். இன்று நெகட்டிவ் கேரக்டருக்கு தான் வரவேற்பு இருக்கிறது. இன்று கதாநாயகன் என்று சொன்னால் நல்லவனாக இருந்தால் மட்டும் கதாநாயகன் ஆக முடியாது. தப்பு செய்பவர்கள் தான் கதாநாயகன்.‌ புஷ்பா 2 படத்தில் ஹீரோ செம்மரம் கடத்துகிறார். ஆனால் அவர் தானே ஹீரோ. அதனால் இன்றைக்கு காலங்கள் மாறிவிட்டன. இன்றைக்கு வித்தியாசம் தேவைப்படுகிறது. வித்தியாசத்திற்கு தேவைப்படும் நெகடிவ் ஷேடு – தவறு என்றும் உணர்த்தப்படுகிறது. அதனால் தவறாமல் டிஸ்க்ளைமரும் இடம் பிடிக்கிறது.

என்னைப் பொறுத்தவரை இந்த படம் நல்ல கதை. சிறந்த இயக்குநர். மீன்பிடி படகிற்குள் இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் உணர்வுபூர்வமான விஷயங்கள் தான் முக்கியமானது. ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். வித்தியாசமான அனுபவமாக இருக்கும்,” என்றார்.

முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்ட திருமண விழா!

சென்னையில் இன்று ஆந்திர முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் இல்லத் திருமண விழா நடந்தது. காலையில் இந்து முறைப்படி நடந்த திருமணத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவியுடன் கலந்து கொள்ள, மாலையில் கிறிஸ்தவ முறைப்படி நடந்த வரவேற்பில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் கலந்து கொண்டுள்ளார்.

மணமகன் சாஹில் ஜெகன் மோகனின் சகோதரரான சுனில் ரெட்டியின் மகன். மணமகள் வேதிகா காரைக்குடி பிசினஸ் குழுமமான முருகப்பா குடும்பத்தைச் சேர்ந்த அருண் முருகப்பன் – சிகப்பி தம்பதியின் மகள்.

காதல் திருமணம் என்பதால் இருவீட்டாரின் குடும்ப மரபுப்படி திருமணம் செய்ய விரும்பினார்களாம். எனவே காலையில் மணமகள் வீட்டாரின் விருப்பப்படி இந்து செட்டிநாட்டு முறைப்படி நடந்திருக்கிறது திருமணம். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவுடன் கலந்து கொண்டார். தவிர சினிமா நடிகர் நடிகைகள் சிலரும் கூட திருமணத்தில் கலந்து கொண்டனர். மாலை கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றி, சென்னை அண்ணாசாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நடைபெற்றது.

இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டிருக்கிறார். முதல்வர் முதலில் வரவேற்பில் கலந்து கொள்ளவே திட்டமிட்டிருந்ததாகவும் விஜய் அதில் கலந்து கொள்ள இருப்பது அறிந்தே அதை மாற்றியதாகவும் சொல்கிறார்கள் சிலர். இந்த திருமண விழாவில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் நடிகர்கள் சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வீட்டில் பிரசவம் பார்த்ததால் நடந்த விபரீதம்!

மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவை சேர்ந்த நியாஸ் அலி மகன் நசிம் உசேன். இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு பிரசவ தேதி நெருங்கிய நிலையில், அவரை மேலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வருமாறு நிலைய மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மனைவியை அழைத்துச் செல்லாமல், நேற்று முன்தினம் இரவில் வீட்டில் வைத்து நசிம் உசேன் பிரசவம் பார்த்துள்ளார். இதில், அவரது மனைவிக்கு ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது.

“சிசுவின் உடலை காட்டு ஜூம்மா பள்ளிவாசலில் அடக்கம் செய்துள்ளனர்” என, மேலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சுமதி, மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து, நசிம் உசேனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

‘ரெட் லேபிள்’ விமர்சனம் RATING 3.6/5

கே.ஆர் வினோத் இயக்கத்தில் லெனின், அஸ்மின், அனுமோகன், ஆர்.வி உதயகுமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘ரெட் லேபிள்’ 

விமர்சனம்: 

கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவர்கள் தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலில் அராஜகமாக வெற்றி பெற MLAஆர்.வி உதயகுமாரின் மகன் பாண்டியன் முயற்சி செய்கிறார். இவரின் அராஜகத்தை கட்டுப்படுத்த முன்னாள் மாணவர் தலைவர் லெனினை அழைத்து வருகிறார்கள். இவர் நேர்மையான முறையில் தேர்தலை நடத்த முயற்சி செய்கிறார். இந்த சூழ்நிலையில் கல்லூரியில் ஒரு கொலை நடக்கிறது. இந்த கொலையை விசாரிக்க போலீஸ் கல்லூரிக்கு வருகிறது. பிறகு என்ன நடந்தது என்பதே கதை…

நாயகனாக நடித்திருக்கும் லெனின், அறிமுக நடிகர் என்ற அடையாளமே தெரியாதவாறு சிறப்பாக நடித்திருக்கிறார். கல்லூரி மாணவர் மற்றும் கல்லூரியை முடித்த காலக்கட்டம் என்று தோற்றத்திலும், நடிப்பிலும் வேறுபாட்டை காட்டுவதற்காக அதிகம் மெனக்கெட்டிருப்பது திரையில் தெரிகிறது. 

காமெடி கலந்த வில்லத்தனத்தின் மூலம் கவனம் ஈர்க்கும் இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரின் திரை இருப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. ஒரு சாதாரண கேம்பஸ் தேர்தல், அடிதடி என்று தொடங்கும் படம் கொலைக்கு பின்பு ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக மாறிவிடுகிறது. கல்லூரி வாழ்க்கை மற்றும் காதல் பின்னணியில், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையை மிக நேர்த்தியாக எழுதிருக்கும் பொன்.பார்த்திபன், பல திருப்பங்கள் மூலம் இறுதி வரை சுவாரஸ்யம் குறையாமல் திரைக்கதையை கையாண்டிருக்கிறார்.

 மைனஸ்: சில காட்சிகள் லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது மற்றும்  நாயகிக்கு ஏற்ற தோற்றம் இல்லை.

மொத்தத்தில் இந்த ‘ரெட் லேபிள்’ காதல் கொலை.  

 

‘உயிருள்ளவரை உஷா’

சென்​னை:

டி.ராஜேந்தர் இயக்​கத்​தில் நளினி நாயகி​யாக அறி​முகமான படம், ‘உயிருள்ளவரை உஷா’. கங்​கா, ராதா ரவி, எஸ்​.எஸ்​.சந்​திரன், கவுண்​டமணி, சரிதா உள்பட பலர் நடித்திருந்​தனர். 1983-ம் ஆண்டு வெளி​யான இப்​படம் சூப்பர் ஹிட்டானது.

படத்​தில் இடம் பெற்ற இந்​திரலோகத்து சுந்​தரி, வைகைகரை காற்றே நில்​லு, இதயமதை கோவிலென்றேன் உள்பட அனைத்து பாடல்​களும் வெற்​றி​பெற்​றன. இந்​நிலை​யில், இப்​படம் 43 வருடங்​களுக்​குப் பிறகு 4கே டிஜிட்​டல் தொழில்நுட்​பத்​தில் பிப்.13-ம் தேதி மீண்​டும் ரிலீஸ் ஆகிறது. இதற்​கான விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. தயாரிப்​பாளர் கலைப்​புலி எஸ்​.​தாணு, இயக்​குநர் விக்ரமன், ஆர்​.கே.செல்​வ​மணி, ராதா​ர​வி, நளினி ஆகியோர் கலந்து கொண்​டனர். விழா​வில்

டி.​ராஜேந்​தர் பேசும்​போது:

“இப்​படத்​தின் படப்​பிடிப்பை முடித்​து​விட்டு ஒரிஜினல் காப்​பியை பைனான்​சி​யர்​களுக்கு போட்டு காண்​பித்​தேன். ஜெமினி லேபில் படத்​தைப் பார்த்து விட்​டு, நளினி, கதா​நாயகி​யாக சரி​யாக வரமாட்​டார்; அவருக்கு ‘நீட்டு முகம்’ என்று அவரை மாற்​றச் சொன்​னார்​கள். ஆனால், அவரை கதா​நாயகி​யாக்கி படம் எடுத்​தேன். 4 ஆயிரம் அடி பிலிம் வாங்​கி, நீட்டு முகம் என்ற சொன்​னவர்​களிடம் அவரை ‘நீட்’ முக​மாக மாற்​றினேன். நளினி​யின் தலை​முடியை விரித்​துப் போட வைத்​து, பேக் லைட்​டில் வைத்து படமாக்கினேன். அந்த பேக் லைட் தான் என் கதா​நாயகி​யின் ஹைலைட். பிறகு அவர்​களுக்கு மீண்​டும் படம் போட்​டுக் காண்பித்தேன். படத்​தைப் பார்த்து விட்​டு, நீட்டு முகம் என்று யார் சொன்​னார்​களோ, அவர்​களே கைதட்டினார்கள். இதை என் திறமைக்​காகவோ, என் தலைக் கணத்துக்காகவோ சொல்​ல​வில்​லை. வாழ்க்​கை​யில் யார், எப்​போது, எப்​படி வரு​வார்​கள் என்​பது யாருக்​கும் தெரியாது, ஆண்​ட​வனுக்​குத்​தான் தெரி​யும் என்​ப​தற்​காகத்​தான் சொல்​கிறேன்” என்​றார்.