Thursday, September 3, 2026
Blog

 Prashanth Fertility at Home

Chennai:

Pioneering a new era in Fertility Care, Prashanth Fertility, one of the leading fertility care providers in the city, today launched ‘Prashanth Fertility at Home’, a first-of-its-kind initiative designed to provide eligible IVF support services to patients at the comfort of their homes.  Launched in a press conference in the city, in the presence of Chief Guest Actor Ms. Khushbu Sundar along with Mr. Parthipan J, CEO, Prashanth Fertility, Dr. Samhitha Moturi, Director – Prashanth Group of Hospitals, the initiative aims to address a key challenge – continuity of IVF care. As many couples especially working couples face disruptions caused by missed appointments or treatment schedules in their IVF journey, which leads to multiple repeat in treatment cycles, Prashanth Fertility at Home will help reduce and make the fertility journey more convenient and accessible, while keeping patients under the supervision of their treating fertility specialists.

As part of this initiative, Prashanth Fertility also introduced its dedicated Prashanth Fertility at Home team and a vehicle that will travel across Chennai, enabling couples to receive services such as injection support, eligible monitoring, follow-ups and treatment coordination without having to visit the fertility centre for every stage of their treatment.

The hospital has also introduced a dedicated digital interface through the Prashanth Fertility app, enabling patients to conveniently schedule and manage their at-home fertility care services. Through the app, patients can book eligible services based on their treatment requirements, after which the dedicated Prashanth Fertility at Home team will visit them at their preferred location across Chennai. The initiative brings together technology and personalised care, enabling patients to access services such as injection support, eligible monitoring, follow-ups and treatment coordination at home, while remaining connected to their treating fertility specialists. Together, the app and the dedicated at-home care team are designed to make the IVF journey more seamless, accessible and convenient for couples.

Commenting on the occasion, Dr. Geetha Haripriya, Chairman – Prashanth Group of Hospitals, said “When we first began our journey in fertility care, our vision was simple — to make it possible for more couples to experience the joy of parenthood. Over the years, fertility treatment has evolved tremendously, but one thing has remained constant: the need to make every step of this journey easier for the patient.

With ‘Prashanth Fertility at Home’, we are taking fertility care beyond the walls of the hospital and closer to where patients are. This is not merely about convenience; it is about continuity, confidence and compassionate care. We believe the future of fertility care must be more accessible, more personalised and more connected to the patient, and this initiative is an important step in that direction.”

Adding to this, Dr. Samhitha Moturi, Director – Prashanth Group of Hospitals, said “Fertility treatment is a journey where continuity can make a meaningful difference. The treatment itself can involve multiple appointments, medication schedules, monitoring and follow-ups, and for couples who are balancing work, family and other responsibilities, repeatedly travelling to a fertility centre can become an additional challenge. With infertility affecting a significant proportion of couples, we believe that improving access and reducing avoidable disruptions in the treatment journey can benefit a large number of patients. ‘Prashanth Fertility at Home’ has been conceived with this very objective — to take appropriate, clinically supervised aspects of care closer to the patient. By supporting patients with injection administration, eligible monitoring, follow-ups and treatment coordination at home, we hope to make it easier for couples to stay on track with their treatment while continuing to remain connected to their fertility specialists. Ultimately, this initiative is about removing some of the practical barriers around fertility care, so that patients can focus on what matters most — their journey towards parenthood.”

Sharing her views, Actor Ms. Khushbu Sundar, Chief Guest at the launch, said, “The journey to parenthood is deeply personal, and for couples undergoing fertility treatment, it can be an emotional and physically demanding experience. At a time when they need care, reassurance and support the most, making that journey simpler and more accessible can make a real difference. I am happy to be part of the launch of ‘Prashanth Fertility at Home’, an initiative that brings appropriate fertility care closer to couples and recognises that healthcare must evolve around the needs of the patient. I believe initiatives like this not only make treatment more convenient, but also give couples greater confidence and comfort as they navigate one of the most important journeys of their lives.”

Infertility is emerging as a significant reproductive health concern in India, with the Government of India acknowledging that it affects a substantial proportion of couples, while global estimates suggest that around one in six people experience infertility during their lifetime. Beyond the medical challenges, infertility can have a significant emotional, social and financial impact on couples, with fertility treatments often requiring multiple consultations, investigations, medications and monitoring over an extended period.  As the need for fertility care continues to grow, there is a pressing need to make quality fertility services more accessible, affordable and convenient, while reducing the practical and logistical challenges that can make it difficult for couples to stay on course with treatment.

சென்னையில் மனித கறி! சிக்கிய கொலையாளி!!

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ஆக்ராவை சென்றடைந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில்.. சிவப்பு நிற சூட்கேஸினுள் “ஆணா? பெண்ணா?” என அடையாளம் தெரியாத சடலம் சிதைந்த நிலையில் கிடந்தது. தலை மற்றும் கை, கால்கள் இல்லாமல் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, சூட்கேஸில் இருந்த தமிழ்நாட்டின் பிரபல ஜவுளிக்கடை பையை வைத்து சம்பவம் தமிழ்நாட்டில் அரங்கேறியதை உறுதி செய்தனர்.

இதனால் உத்தரப் பிரதேச ரயில்வே காவல்துறை, தமிழ்நாடு ரயில்வே காவல்துறையின் உதவியை நாடினர். 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய ரயிலில் ஏறுவதற்கு முன்பு, ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சிவப்பு நிற சூட்கேஸுடன் சென்னை சென்ட்ரலுக்குள் நுழைவது சிக்கியது. தம்பதியினர் சூட்கேஸை ரயிலின் ஒரு பெட்டிக்குள் வைத்துவிட்டு, ரயில் புறப்படுவதற்கு முன்பே அதிலிருந்து இறங்கி, சென்னை பார்க் ரயில் நிலையத்திற்கு நடந்து சென்று, அங்கிருந்து புறநகர் ரயிலில் ஏறி கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இறங்கியதும் சிசிடிவி காட்சி உதவியுடன் கண்டறிந்தனர். கூடுவாஞ்சேரியில் இறங்கிய அந்த தம்பதி அங்கிருந்து ஆட்டோ மூலமாகத் தப்பிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில் கூடுவாஞ்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள வீட்டிலிருந்து தான் அந்த தம்பதி சூட்கேசுடன் சென்றது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீசாருக்கு, பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீடு முழுவதும் ரத்தமாகக் காட்சி அளித்ததும், ஒருவரைக் கொலை செய்து உடலை எலும்பு தனியாக, சதை தனியாக வெட்டி எடுத்து மைதா மாவு காய்கறிகள் போட்டு பெரிய பாத்திரத்தில் வைத்து சமைத்து இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சம்பவம் நடந்த வீட்டில் இரண்டு பெண்கள் ஒரு ஆண் என ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் வசித்து வந்த தெரியவந்தது.

ஒரு ஆண், ஒரு பெண்ணிற்கு 35 வயதிற்கு உள்ளாகவும், மற்றொரு பெண் 45 வயது மதிக்கத்தக்கவராகவும் இருந்துள்ளார். கொலையாளிகளின் புகைப்படத்தைக் காட்டி உறுதிப்படுத்திய போலீசார் இறந்த பெண் அய்துல் நிஷா என்பதும் , தாம்பரம் மெப்ஸ்ஸில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
இவருக்கு திருமணமாகி 19-வயதில் மகன் உள்ளதும் அவர் தாம்பரத்தில் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு அவரை அழைத்து விசாரணை நடத்தினர். அதில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. கொலை செய்யப்பட்ட அய்துல் நிஷா கொலையாளியுடன் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஜூன் மாதம் கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து கொலையாளி தம்பதியும் கொலை செய்யப்பட்ட பெண் ஆகிய மூவரும் ஒன்றாக தங்கி உள்ளனர்.

அதன் பின்னர்தான் நிஷா கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து மனிதக் கறி சமைக்கப்பட்ட பாத்திரத்தை போலீசார் மீட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவாகரத்தில் தலை இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் போலீசார் தலையைத் தேடி வருகின்றனர். மேலும் கொலையாளிகளின் செல்போன் சிக்னல்களை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் மணிப்பூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது
இதையடுத்து மணிப்பூர் சென்ற கூடூவாஞ்சேரி போலீசார், கொலையாளி மாணிக் லஸ்கரை கைது செய்தனர். அவரை கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் அவரது மனைவி பகமதி மாஜியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

களம் இறங்கும் அண்ணாமலை! அரசியல் வட்டாரம் சொல்வது என்ன?!

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, ‘வீ தி லீடர்ஸ்’ என்ற அமைப்பை நடத்தி வருகின்ற நிலையில், இதன் மூலம் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல், கல்லூரிகள் தோறும் மாணவர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

அண்மையில், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்த பின்னர், அதனை அரசியல் கட்சியாக மாற்றுவோம் என அண்ணாமலை பேசியிருந்தார். தற்போது வரை அந்த அமைப்பில் 20 லட்சம் உறுப்பினர்கள் மட்டுமே இணைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அடுத்தகட்டமாக ‘மிஸ்டு கால்’ மூலம் உறுப்பினர்களைச் சேர்க்கும் நடவடிக்கையை அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார்.

தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவர்களிடம் பேசி உறுப்பினர்களாக இணைப்பதற்காக பிரத்யேக குழு ஒன்றையும் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான தொலைபேசி எண்ணை அடுத்த கூட்டத்தில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பை கட்டமைப்பு ரீதியாக வலுப்படுத்தும் பணிகளிலும் அண்ணாமலை தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. விரைவில் மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை வெளியிடவும் அவர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகிகளின் பெயர்கள் வெளியிடப்பட்ட பின்னர், உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், தவெக தொடர்பான முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை கண்காணிப்பதற்காக அண்ணாமலை ஒரு குழுவை உருவாக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தக் குழு கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஜனவரி மாதத்துக்குப் பிறகு ஆதாரங்களுடன் தவெகவை அண்ணாமலை கடுமையாக விமர்சிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதுவரை தவெகவை அண்ணாமலை கடுமையாக விமர்சிக்காத நிலையில், அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அவரது அதிரடி பிரஸ்மீட்டுக்கான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போதைய சூழலில், அமைப்பை அமைதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும் வலுப்படுத்துவதிலேயே அண்ணாமலையின் கவனம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, இடைத்தேர்தலில் போட்டியிடும் திட்டம் எதுவும் இல்லை என அண்ணாமலை ஏற்கனவே வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டார். இதனால், அடுத்தகட்டமாக நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அண்ணாமலையின் அரசியல் கணக்கு என்னவாக இருக்கும் என்பதே அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.

இந்த தனிப்படைக் குழுவின் மூலம் தவெக தொடர்பான குற்றச்சாட்டுகளைச் சேகரித்து, அவற்றை கூடிய விரைவில் ஆதாரங்களுடன் நிரூபிக்க அண்ணாமலை தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது அண்ணாமலையின் அரசியல் இலக்கு தவெகவை நோக்கியே இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சி.விஜயபாஸ்கர் மீது பரப்பரப்பு புகார்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த தனவிமல் தாக்கல் செய்துள்ள மனுவில், சட்டப்பேரவை தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்ததாகக் கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக அப்போது மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தன்னை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தேர்தல் செலவுகளை மேற்கொள்ளும் தகுதியை நிரூபிக்க ரூ.5 கோடி தரும்படி வலியுறுத்தினார். மேலும், வேட்பாளர் பட்டியல் அறிவித்ததும் பணத்தை திருப்பித் தந்து விடுவதாக உறுதியளித்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 4 கோடியே 50 லட்சம் ரூபாயை திரட்டி, சி.விஜயபாஸ்கர் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் சோத்துப்பாலை முருகேசன் என்பவரிடம் கொடுத்ததாகவும், வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் செலவுகளுக்காக பணத்தை திருப்பிக் கேட்டபோது, 50 லட்சம் ரூபாய் மட்டுமே திருப்பி தந்ததாகவும், மீதமுள்ள தொகையை தராமல் இழுத்தடித்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போது சி.விஜயபாஸ்கர், ஆளும் தவெக-வில் இணைந்துள்ள நிலையில், பணத்தை திருப்பிக் கேட்ட போது மிரட்டல் விடுத்ததாகவும், இதுசம்பந்தமாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார். தனது புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருக்கிறார். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீசைய முறுக்கு 2 – செப்டம்பர் 25 முதல்

ஹிப்ஹாப் தமிழா ஆதி, கௌஷிக் கிருஷ்ணா, டி. சத்யபிரகாஷ் குரல்களில் உருவான காதல் திருமணப் பாடல்!
 
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே’, ‘கோயிந்தம்மா’, ‘அடி போடி’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சார்ட் பஸ்டர்களாக மாறியுள்ள நிலையில், தற்போது படத்தின் 5வது சிங்கிளான ‘கலைவாணியே’ பாடல் வெளியாகியுள்ளது.
 
இந்தப் பாடலை கௌஷிக் கிருஷ்ணா, டி. சத்யபிரகாஷ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணைந்து பாடியுள்ளனர். பாடலுக்கான வரிகளை ஹிப்ஹாப் தமிழா எழுதியுள்ளார். காதல், திருமணம் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்பாடல், படத்தின் கதையோட்டத்தில் முக்கியத்துவம் பெறும் பாடலாக அமைந்துள்ளது.
 
குறிப்பாக, ‘கலைவாணியே’ பாடலில் ஹிப்ஹாப் தமிழா மற்றும் ரம்யா ரங்கநாதன் கதாபாத்திரங்களின் திருமண இணைவு அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காதலின் அடுத்த கட்டமாக அமைந்துள்ள திருமண நிகழ்வை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப் பாடல், ரசிகர்களுக்கு காதல் மற்றும் குடும்ப உணர்வுகளை ஒருசேரக் கடத்தும் வகையில் அமைந்துள்ளது.
 
இசைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகும் ‘மீசைய முறுக்கு 2’, முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இன்றைய தலைமுறையினரின் ரசனைக்கு ஏற்ற வகையில் காதல், நட்பு, நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் உற்சாகமான இசை என அனைத்து அம்சங்களையும் கொண்ட முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.
 
‘மீசைய முறுக்கு’ திரைப்படம் வெளியாகி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அதன் தொடர்ச்சியான ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 25ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
 
முதல் பாகத்தின் இசை மற்றும் இளைய தலைமுறையினருடன் ஒன்றிணைந்த அதன் வெற்றியைத் தொடர்ந்து, ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் பாடல்களும் தொடர்ந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. தற்போது வெளியாகியுள்ள ‘கலைவாணியே’ பாடலும் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
 
ஹிப்ஹாப் தமிழா ஆதி இப்படத்தில் கதை, திரைக்கதை, இயக்கம், இசை மற்றும் நடிப்பு என பல்வேறு பொறுப்புகளை ஏற்றுள்ளார். அவருடன் சைத்ரா ஜே. ஆச்சார், கெட்டிகா சர்மா மற்றும் ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன் மற்றும் ஷா ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
இசை, காதல், நட்பு, குடும்பம், நகைச்சுவை மற்றும் கொண்டாட்டம் என அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’, திரையரங்குகளில் ஒரு திரைப்பட அனுபவத்தைத் தாண்டி, ரசிகர்களுக்கு ஒரு இசைக் கொண்டாட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
‘மீசைய முறுக்கு 2’ – செப்டம்பர் 25 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்!
 

மண்டாடி படத்தின் இசை வெளியீட்டு விழா!

சென்னையில் மண்டாடி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில்

படத் தொகுப்பாளர் பிரதீப் இ ராகவ் பேசும்போது

படத்திற்கு எது நல்லதோ அதை செய்வேன். கடலில் ஒளிப்பதிவு செய்வது சுலபமல்ல. பெரும்பாலும் கடலில் படம் எடுத்து தோற்று போனவர்கள் தான் அதிகம். ஒரு சில காட்சிகளை மட்டும் கடலில் எடுத்து விட்டு மீதியை க்ரீன் மேட் போட்டு சிஜே வேலைகள் தான் பார்ப்பார்கள். இந்த படத்திலும் அப்படி தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், படம் முழுக்க கடலிலேயே எடுத்து வந்திருந்தார்கள். அப்போது தான் தயாரிப்பாளருக்கு சினிமா மீதிருந்த ஆர்வம் புரிந்தது. சூரி சார் இந்த படத்திற்கு பிறகு மிகப்பெரிய இடத்திற்கு செல்வார். சத்யராஜ் சாரின் கெட்அப்பை பார்த்து அசந்து விட்டேன் என்றார்.

நடன இயக்குனர் அசார் பேசும்போது

முதன் முதலில் என்னை அங்கீகரித்தது ஜி வி சார் தான். கதிர் சாருடன் சுப்பிரமணியபுரம் படத்தில் இருந்து பயணிக்கிறேன். மண்டாடி பாடல் ஏசி செட்டில் எடுத்தோம். சூரி அண்ணன், இடைவெளியில் தான் வந்து ஆடினார். மஹிமா சிறப்பாக ஆடினார். சத்யராஜ் சாருடைய கெட்அப்பை பார்த்து அசந்து விட்டேன்.

சண்டை இயக்குனர் மகேஷ் மேத்யூ பேசும்போது

சூரி அண்ணன் இந்த படத்தில் வெறித்தனமாக உழைத்திருக்கிறார். வெற்றி மாறன் சாருக்கு நன்றி. தயாரிப்பாளர் சார் எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி. உண்மையான மீனவர் கெட்அப்பில் சத்யராஜ் சாரை பார்த்து மெய் மறந்து நின்றோம் என்றார்.

நடிகர் மிதுன் ஜெய் ஷங்கர் பேசும்போது 
 
சுகா சார், நீங்கள் படத்தில் வில்லன். ஆனால் நிஜத்தில் அழகான மனிதர். என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. நான் இரண்டு படங்கள் தான் நடித்திருக்கிறேன். அந்த நேரடி படங்களின் அவர் பார்த்ததில்லை என்பதை முதலிலேயே கூறிவிட்டார். இருந்தாலும் இந்த கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று இனிமேல் தேர்வு செய்ததற்கு மிக்க நன்றி. அவர் நம்பிக்கைக்கு நான் உண்மையாக இருந்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.
 
படத்தின் இறுதி கட்ட காட்சிகள் 29 நிமிடங்கள் படப்பிடிப்பு நடந்து இருக்கும் அந்த காட்சிகளில் சூரி சாருக்கு பலத்த அடிபட்டிருக்கும் எனக்கும் என்னுடன் நடித்தவர்களுக்கும் சிறிய காயம் ஏற்பட்டிருக்கும் எங்களுக்கு மிகவும் நாங்கள் சோர்ந்து இருந்த சமயத்திலும் சிறிதும் சோர்வு குறையாமல் சூரி சார் இருந்ததை பார்த்து தான் நாங்களும் சோர்வில் இருந்து சக்தியை பெற்றோம் என்றார்.
 
நடிகை கிருத்திகா பேசும்போது 
 
இது போன்ற பிரமாண்ட திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் மிக்க நன்றி. சரி சார் உங்களுடைய ஆரம்ப காலகட்டத்தில் போராடி தான் வந்திருப்பீர்கள். எங்களை போன்று வளர்ந்து வரும் கலைஞர்களின் போராட்டங்களுக்கு நன்றாகவே தெரியும் உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி. மிதுன், உடன் நடிக்கும் மிக சிறந்த நடிகர். மண்டாடி செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
 
நடிகர் பாலசரவணன் பேசும்போது 
 
மண்டாடி மாபெரும் படம். பட்ஜெட்டில், பிரமாண்டத்தில் எப்படி வேண்டுமானாலும் சொல்ல உரிமை இருக்கிறது. ஆனால், உழைப்பால் மாபெரும் படம் என்று கூறுவது தான் சரியாக இருக்கும்.
 
2014ஆம் ஆண்டு டார்லிங் படத்தின் தினமும் ஜிவி பிரகாஷ் சரியான அலுவலகத்தில் தான் எப்பொழுதும் இருப்பேன். அவர் நீ ஏன் எப்பொழுதும் எங்கே இருக்கிறாய்? என்று கேட்பார். அதேபோல், இங்கு வர முடியாத அளவிற்கு பிஸியாக இருக்க வேண்டும் என்று கூறுவார். அது போல் இன்று நான் இருக்கிறேன். அதற்கு நான் அவருக்கு நன்றியும் கூறுகிறேன். அவர் அலுவலகத்திற்கு வர முடியாததற்கு மன்னிக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.
 
விடா முயற்சி, கடின உழைப்பு என்று என்ன பெயர் வைத்தாலும் அதற்கு மொத்த உருவமும் எங்கள் சூரி அண்ணன் தான். அடிபட்டு ரத்தம் கொட்டினாலும் மருந்து கூட போடாமல் தொடர்ந்து நடித்தார். பத்து நிமிடம் கூட ஓய்வெடுக்காமல் மருந்து கூட போடாமல் ஏன் நடிக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, இது கடல் என்பதால் படகு மற்றும் கேமரா லைட் மறுபடியும் செட் செய்வதற்கு அரை நாள் ஆகிவிடும் என்பதால் தொடர்ந்து நடித்தேன் என்று மற்றவர்கள் மீதும் அக்கறை கொண்டு பேசினார்.
 
இப்படத்தில் அனைவருமே கடினமாக உழைத்திருக்கிறார்கள். படமும் நன்றாக வந்திருக்கிறது. செப்டம்பர் 10 அன்று நீங்கள் அனைவரும் இந்த படத்தைப் பார்க்கும்போது அனைவருக்கும் புரியும் என்றார்.
 
நடிகை மஹிமா பேசும்போது 
 
“எல்லாருக்கும் வணக்கம். இந்த ‘மந்தாடி’ படத்தோட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு இவ்வளவு பெரிய கூட்டம் வந்திருக்கிறதைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப ஆச்சரியமாவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு. இந்தப் படத்துக்காக ஒட்டுமொத்த குழுவும் போட்ட உழைப்பும் ஆர்வமும் ரொம்பப் பெருசு.
 
ஆரம்பத்துல இந்தப் படத்தை வெறும் 35 நாள் ஷூட்டிங்ல முடிச்சிடலாம்னு தான் பிளான் பண்ணோம். இது ரொம்ப சீக்கிரமா முடிஞ்சிரும்னு தான் நான் நெனச்சேன். ஆனா, மதி இந்த படத்தை இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான ஒரு படைப்பா மாத்தியிருக்கார்ங்குறது நிஜமாவே நம்ப முடியல. அவரோட அந்தப் பார்வை நான் ஆரம்பத்துல எதிர்பார்த்ததை விட பல மடங்கு பெருசா வந்திருக்கு.
 
இந்த படத்துல வேலை செஞ்ச குழு சந்திச்ச சவால்கள் கொஞ்சநஞ்சமல்ல. குறிப்பா நடுக்கடல்ல தினமும் 14 மணி நேரம் ஷூட்டிங் பண்றதுங்குறது சாதாரண விஷயம் கிடையாது. ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர் சாரோட உழைப்பைப் பத்தி சொல்லியே ஆகணும். கடலோட அந்த ஆழமான தன்மையை இவ்ளோ தத்ரூபமா கேமரால கொண்டு வர்றது ஈஸியான காரியமே கிடையாது, ஆனா அதை அவர் மிகச் சிறப்பா செஞ்சிருக்கார்.
 
அதே மாதிரி பீட்டர் ஹெய்ன் மாஸ்டர்… எனக்குத் தெரிஞ்ச மிகவும் கடின உழைப்பாளியான, தைரியமான ஒரு ஆக்‌ஷன் டைரக்டர் அவர்தான். இந்த படத்துல அவரோட அசாத்தியமான அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன். எடிட்டர் பிரதீப் ஈ. ராகவ் அவரோட ஷார்ப்பான கட்ஸ் மூலமா படத்தோட அந்த விறுவிறுப்ப கொஞ்சமும் குறையாம கொண்டு போயிருக்கார்.
 
முக்கியமா சூரி… இந்த படத்துல சூரியோட உழைப்பும், அவரோட அந்த ட்ரான்ஸ்ஃபர்மேஷனும் ரொம்பப் பெருசு. அவ்ளோ டயர்டா இருந்தாலும், உடம்புல சின்னச் சின்ன காயங்கள் பட்டாலும் கூட எந்தவொரு ஷாட்டுக்கும் அவர் சமரசம் செய்யவே இல்லை. ஒரு துணை நடிகரா தன் பயணத்தைத் தொடங்கி, இன்னைக்கு இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படத்துல ஒரு ஹீரோவா உயர்ந்திருக்கார்னா, அதுக்கு அவரோட அந்த விடாமுயற்சிதான் காரணம்.
 
‘மண்டாடி’ படம் கமர்ஷியலா ஒரு மாபெரும் வெற்றியைப் பெறுவதோடு மட்டுமில்லாமல், இந்த படத்துல வேலை செஞ்ச அத்தனை பேரோட அசாதாரண திறமைக்கும் இது ஒரு அடையாளமா இருக்கும்னு நான் உறுதியாக நம்புகிறேன். படம் பெரிய வெற்றியடைய படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி!” என்றார்.
 
ஜி வி பிரகாஷ் பேசும்போது
 
இயக்குனர் மதியுடன் ‘உதயம் என்.எச்4’ படத்திலிருந்தே நெருங்கிய நட்பு இருக்கிறது. அவருடைய இரவு பகல் பாராத கடின உழைப்பும் சினிமா மீதான ஆழமான பார்வையும் அவரை இந்திய சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக விரைவில் உயர்த்தும். எந்த ஒரு சவாலான விஷயத்தையும் துணிச்சலாகவும் பிரமாண்டமாகவும் கையாளும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இந்த படத்தையும் யாரும் எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து மற்றவர்களுக்கு உத்வேகமாக இருக்கிறார் என்றார்.
 
பீட்டர் ஹெயின் பேசும்போது 
 
இயக்குனர் மதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள், குறிப்பாக நடுக்கடலில் படமாக்கப்பட்ட படகு துரத்தல் (Boat Chase) காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு பிரமாண்டமான ஆக்‌ஷன் அனுபவமாக அமையும். தனது 34 கால சினிமா பயணத்தில் எக்ஸ்ட்ரீமான ஒரு சண்டைக்காட்சியை அமைக்க வேண்டும் என்ற ஆசையை இயக்குனர் மதி இந்த படத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குனர் வெற்றிமாறனுக்கும் எனது நன்றி. நள்ளிரவிலும் சுறுசுறுப்பாக பணியாற்றிய இயக்குனர் மதியின் அர்ப்பணிப்பு இப்படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
 
இப்படத்தின் நாயகன் சூரி, எந்தவொரு கடினமான காட்சிக்கும் ‘முடியாது’ என்று சொல்லாமல் தனது முழு உழைப்பையும் கொடுத்துள்ளார். ஒரு சண்டைக்காட்சியின் போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும், மீண்டும் கரைக்குத் திரும்பாமல் நடுக்கடலிலேயே சக்கர நாற்காலி உதவியுடன் படகில் அமர்ந்தபடியே காட்சிகளை முடித்துக்கொடுத்த சூரியின் அர்ப்பணிப்பு அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அவருக்கு இணையாக நடிகர் சுஹாஸும் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். மோட்டார் போன்ற எந்தவித நவீன தொழில்நுட்பமும் இன்றி, இயற்கையோடு போராடி காற்றின் விசையை மட்டுமே நம்பி சுமார் 20 கிலோமீட்டர் நடுக்கடலில் படமாக்கப்பட்ட இந்த படகு துரத்தல் காட்சிகள் மிகவும் சவாலானதாக அமைந்தது.
 
இப்படிப்பட்ட மிகக் கடினமான சூழலிலும் ஒவ்வொரு படகிலும் கேமராக்களை பொருத்தி நேர்த்தியாகப் பதிவு செய்த ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குனரின் உழைப்பு மிகப்பெரியது. சண்டைக் கலைஞர்கள் மட்டுமின்றி, படப்பிடிப்பிற்கு உறுதுணையாக இருந்த உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பும் இப்படம் சிறப்பாக உருவாக முக்கிய காரணமாக அமைந்தது. சில நாட்களில் மோசமான வானிலையால் ஒரு காட்சி கூட படமாக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும், தயாரிப்பாளர்கள் எல்ரெட் குமார், மணி மற்றும் சொக்கு ஆகியோர் எவ்வித அழுத்தமும் இன்றி நடிகர்களுடன் படகிலேயே தங்கி முழுமையான ஆதரவை வழங்கினர். ஒரு போர்க்களத்தில் நிற்பது போன்ற சவாலான சூழலிலும் ஒட்டுமொத்த குழுவும் இணைந்து உருவாக்கியுள்ள ‘மண்டாடி’, திரையரங்குகளில் ஒரு மாபெரும் ஆக்‌ஷன் விருந்தாக அமையும் என்றார்.
 
ரவீந்திர விஜய் பேசும்போது 
 
எனக்காக இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இது என்னுடைய முதல் நேரடி தமிழ்ப் படம். சின்ன வயதிலிருந்தே தமிழ் சினிமாவின் கதைகள் மற்றும் வலுவான கதாபாத்திரங்கள் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதையும் ஈர்ப்பும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு இண்டஸ்ட்ரியில் இவ்வளவு சிறப்பான, சவாலான மற்றும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் மூலம் அறிமுகமாவது எனக்கு கிடைத்த மிகப் பெரிய ஆசீர்வாதம். என் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குனர் மதி மாறன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே எக்சைட்டிங்காக இருந்தது.
 
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு இப்போது கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. ஒரு பொண்ணுகிட்ட காதலைச் சொல்லிவிட்டு அவளுடைய பதிலுக்காகக் காத்திருப்போம் இல்லையா? அந்த மாதிரி ஒரு மனநிலையில்தான் நான் இப்போ இருக்கேன். தமிழ் மக்கள் என்னையும் என் நடிப்பையும் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறேன்.
 
எங்களுடைய தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சாரைப் போல ஒரு தைரியமான தயாரிப்பாளரை நான் பார்த்ததே இல்லை. எந்தவொரு இடத்திலும் படத்திற்காக சமரசம் செய்துகொள்ளவே மாட்டார். இயக்குனர் ஒரு காட்சிக்கு 500 துணை நடிகர்கள் வேண்டும் என்று கேட்டால், எந்த கேள்வியும் கேட்காமல் 1500 பேரை ரெடி பண்ணிக் கொடுக்கும் மாஸான ப்ரொடியூசர் அவர். இந்த படத்திற்காக அவர் கொடுத்த ஊக்கத்திற்கு ரொம்ப நன்றி சார்.
 
சத்யராஜ் சார் இவ்வளவு பெரிய லெஜண்ட் ஆக இருந்தாலும் எங்களிடம் ரொம்பவே எளிமையாகப் பழகினார். அவருக்கு என் நன்றிகள். ஒளிப்பதிவாளர் கதிர் சாருடைய பணிக்கு நான் மிகப் பெரிய ரசிகன். அவர் கேமராவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமை. மஹிமா, மிதுன், பாலசரவணன் என அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது ரொம்ப சந்தோஷம். சுஹாஸைப் பற்றி சொல்லணும்னா, அவரோட முகத்துல ஒரு டுவாலிட்டி (Duality) இருக்கும். ஒரு பக்கம் ரொம்ப அப்பாவியாவும் தெரிவார், இன்னொரு பக்கம் மிரட்டலான வில்லனாகவும் மாறுவார். இந்த படத்தில் அது நன்றாக வேலை செய்திருக்கிறது.
 
சண்டைக் காட்சிகளுக்காக பீட்டர் ஹெய்ன், மகேஷ் மாஸ்டர், திலீப் சுப்பராயன் மற்றும் அசார் மாஸ்டர் ஆகியோருக்கு ரொம்ப நன்றி. முக்கியமா தொண்டி கிராமத்தில் நடுக்கடலில் நாங்கள் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தபோது, எங்கள் உடனே இருந்து எங்களைப் பாதுகாத்த அந்த ஊர் படகு ஓட்டிகளான சுகுமார், சதீஷ், ராஜேஷ், காளிபாண்டி ஆகியோருக்கு என் ஸ்பெஷல் நன்றிகள். நீங்கள் இல்லையென்றால் அந்த கடலில் நாங்கள் எதுவுமே செய்திருக்க முடியாது.
 
இந்த விழாவிற்கு வந்திருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் சாருக்கு மிக்க நன்றி. ‘மண்டாடி’ திரைப்படம் தியேட்டரில் ஒரு பிரமாண்டமான அனுபவமாக இருக்கும். உங்கள் அனைவருடைய அன்பும் ஆதரவும் எனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன். ரொம்ப நன்றி!” என்றார்.
 
சுஹாஸ் பேசும்போது 
 
“முதலில் ஹாரிஸ், உங்களுக்கு ரொம்ப நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை. என் மேலாளர் சன்னி, மணிகண்டன் சார், சொக்கலிங்கம் அண்ணா ஆகியோருக்கு ரொம்ப நன்றி. உதவி இயக்குனர்கள் பிரபா, பிரின்ஸ், தரணி மற்றும் இணை இயக்குனர் இளவரசு சார் ஆகியோரின் கடின உழைப்பிற்கு ஹேட்ஸ் ஆஃப் (Hats off). ஆடை வடிவமைப்பாளர் ஐஸ்வர்யா மற்றும் அருண், முழு படப்பிடிப்பிலும் எனக்கு உதவியாக இருந்த மொழிபெயர்ப்பாளர் ராஜேஷ் ஆகியோருக்கு நன்றி. ஒளிப்பதிவு குழுவிற்கும், கலை இயக்குனர் கிரண் சாருக்கும், செட் அசிஸ்டென்ட் இப்ராஹிம் ஷாவுக்கும் எனது நன்றிகள்.
 
இந்த படத்தில் என் குடும்பமாக நடித்த ரேகா, ஸ்டண்ட் சிவா மாஸ்டர், கிரிஷ், ரியா, சிவானி, பத்மன் சார் அனைவருக்கும் செட்டில் எனக்கு ஆதரவாக இருந்ததற்கு நன்றி. எனது தனிப்பட்ட உதவியாளர்கள் ரமணா, பாலு, மோகன், ராஜா ஆகியோருக்கும் நன்றி.
 
ஃபைட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர்… உங்கள் பெயரைச் சொல்லும்போதே என் கால்கள் நடுங்குகின்றன! அந்த சண்டைக் காட்சிகளுக்காக உங்களுக்கு ரொம்ப நன்றி மாஸ்டர். மகேஷ் மாஸ்டர், திலீப் சுப்பராயன் மாஸ்டர் மற்றும் அசார் மாஸ்டர் ஆகியோருக்கும் நன்றி. அசார் மாஸ்டர், உங்கள் எனர்ஜிக்கு ஈடு கொடுப்பது கஷ்டம், இருந்தாலும் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம். தொண்டி கிராமத்தில் எங்களுக்கு உதவிய படகு ஓட்டிகளான சுகுமார், சதீஷ், ராஜேஷ், காளிபாண்டி ஆகியோருக்கு என் ஸ்பெஷல் நன்றிகள். நடுக்கடலில் நீங்கள்தான் எங்களை காப்பாற்றிய லைஃப் கார்ட்ஸ் (Life guards).
 
இங்கு வந்திருக்கும் வெற்றிமாறன் சாருக்கு நன்றி. இன்று இங்கு நிற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். ‘மண்டாடி’ எனக்கு மிகவும் சிறப்பான படம், ஏனென்றால் இது எனது முதல் நேரடி தமிழ்ப் படம். தமிழ் சினிமாவின் வலுவான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களையும், ஒரு நல்ல படத்தை மக்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதையும் பார்த்து நான் சிறு வயதிலிருந்தே வியந்திருக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு இண்டஸ்ட்ரியில் வாய்ப்பு கிடைத்ததை நான் பெரிய ஆசீர்வாதமாகக் கருதுகிறேன்.
 
இந்த கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே எக்சைட்டிங்காகவும், சவாலாகவும், நான் இதுவரை பண்ணாத ஒன்றாகவும் இருந்தது. என் மீது நம்பிக்கை வைத்து இவ்வளவு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குனர் மதி மாறன் சாருக்கு ரொம்ப நன்றி. நான் இன்னும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன், ஒவ்வொரு படமும் ஒரு நடிகனுக்குப் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொடுக்கும். மந்தாடி எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது, என் வாழ்நாள் முழுவதும் நான் போற்றிப் பாதுகாக்கும் சிறப்பான நினைவுகளைக் கொடுத்திருக்கிறது.
 
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு இப்போது கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. ஒரு பொண்ணுகிட்ட காதலைச் சொல்லிவிட்டு அவளுடைய பதிலுக்காகக் காத்திருப்போம் இல்லையா? அந்த மாதிரி ஒரு பதற்றத்துலதான் நான் இப்போ இருக்கேன். தமிழ் ஆடியன்ஸ் என்னையும் என் நடிப்பையும் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறேன். உங்களுடைய அன்பும் ஆதரவும் எனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகும் இந்த படமும் எனது கதாபாத்திரமும் உங்கள் மனதில் நிற்கும் என நம்புகிறேன்.
 
எங்களுடைய தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சாரைப் போல ஒரு தைரியமான தயாரிப்பாளரை நான் பார்த்ததே இல்லை. இயக்குனர் ஒரு காட்சிக்கு 500 துணை நடிகர்கள் வேண்டும் என்று கேட்டால், அவர் 1500 பேரை ரெடி பண்ணிக் கொடுப்பார். படத்திற்காக அவர் எவ்வித சமரசமும் செய்து கொள்ளவில்லை. எனக்கு இந்த வாய்ப்பை அளித்ததற்கு ரொம்ப நன்றி சார். சத்யராஜ் சார் ரொம்ப எளிமையாகப் பழகினார், அவருக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் கதிர் சாருடைய வொர்க்கிற்கு நான் ரொம்ப பெரிய ரசிகன். இந்த படத்திற்குப் பிறகு நீங்களும் அவருக்கு ரசிகராகி விடுவீர்கள்.
 
மகிமா, ரவீந்திர விஜய், மிதுன் ஆகியோருக்கு வாழ்த்துகள். இந்த படத்தில் பாலசரவணன் ப்ரோவின் நடிப்பை நீங்கள் கண்டிப்பாக என்ஜாய் பண்ணுவீர்கள். எடிட்டர் சார் மற்றும் நான் யார் பெயரையாவது சொல்ல மறந்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்றார்.
 
இயக்குனர் மதிமாறன் பேசும்போது
 
“குடும்பத்தினர், ஊடக நண்பர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அனைவருக்கும் வணக்கம். முக்கியமாக ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த தொண்டி, பாசிப்பட்டினம், முள்ளிமுனை மற்றும் மண்டாடி படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் என் வணக்கம். தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சார் எல்லார் பெயரையும் கூறிவிட்டார், அதனால் நான் பெயர்களை சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
 
‘மண்டாடி’ படம் எனக்கு ஒரு பெரிய பயணம். என் மனதின் ஆழத்திலிருந்து முதல் நன்றியை இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தப் படம் இவ்வளவு பெரிய பிரமாண்டமாக உருவாக அவர்தான் காரணம். வாழ்க்கையில் நான் எந்த இடத்திற்குச் சென்றாலும் எனக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருப்பவர் வெற்றி சார். அவர் இல்லையென்றால் என்னால் இன்று இங்கு நிற்க முடியாது. நான் அவர் எடுத்த ‘ஆடுகளம்’ படத்தில் வேலை செய்யவில்லை என்றால், இன்று இந்த ‘மண்டாடி’ படத்தை எடுத்திருக்க முடியாது. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
 
இந்தப் படத்தை உருவாக்குவதற்கு மூன்று முக்கிய நபர்கள் காரணம். முதல் நபர், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சார். ஒரு இயக்குனரின் கனவை நம்பி அதை நிறைவேற்றிக் கொடுக்கும் தயாரிப்பாளரை நான் இப்போதுதான் பார்க்கிறேன். அடுத்து என்னை இந்தக் கதையுடன் இணைத்தது ‘கடல்’. கடல் சார்ந்த இந்த கதைக்காக நான் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவரைத் தேடினேன், அப்போதுதான் எனக்கு சார் கிடைத்தார். நான் கேட்டதை அவர் கொடுத்தார், அவர் கேட்டதை நான் கொடுத்தேன். என்னிடம், “எனக்கு பிரஷர் ஹேண்ட்லிங், டெட்லைன்லாம் வராது” என்று கூறினார். படப்பிடிப்பு நேரத்தில் எந்தவித அழுத்தமும் இல்லாமல் என்னைப் பார்த்துக் கொண்ட தயாரிப்பாளர் மணி அவர்களுக்கு என் நன்றிகள்.
 
இரண்டாவது நபர், சூரி சார். நீங்கள்தான் இந்த படத்தின் உயிர். படப்பிடிப்பின் போது உங்களுக்கு நிறைய கஷ்டங்கள் ஏற்பட்டன. அந்த நேரத்தில் நான் உங்களைக் கவனிக்க முடியாமல் இருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். சூரி சாருக்கும் எனக்கும் நடந்த ஒரே ஒரு சம்பவம் பற்றி சொல்கிறேன்: ‘பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம், காதலில் முடிந்தது’ என்பது போலத்தான் சூரி சாருக்கும் எனக்குமான உறவு இருந்தது. படப்பிடிப்பு முடிந்து வந்துவிடுவோம், மறுநாள் எந்தவித தயக்கமும் இல்லாமல் அதே ஈடுபாட்டுடன் சூரி சார் வந்து நிற்பார். ஒருநாள் அவரிடம், “ஏன் சார், தூங்கவில்லையா?” என்று கேட்டேன். “ஆமாம், ஊர் புதுசா இருக்கிறதால தூக்கம் வரல” என்றார். இரண்டாவது நாளும் தூங்கவில்லை என்று சொன்னார். மூன்றாவதாக என் உதவி இயக்குனர் என்னிடம், “சூரி சார் தூங்காததற்கு நீங்கள் தான் காரணம்” என்று கூறினார். அப்போதுதான் நான் சூரி சாரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இந்த படத்திற்காக அவர் செய்த தியாகங்கள், யூடியூப் கமெண்ட்ஸில் அவர் பெற்ற பாராட்டுகள் அனைத்திற்கும் அவர் தகுதியானவர். சூரி சாருக்கு இந்தப் படம் ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும்.
 
ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பின் போது எங்களுக்குச் சின்ன சின்ன பிரச்னைகள் ஏற்பட்டன. இருப்பினும் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு எனக்காகவும் படத்திற்காகவும் உழைத்த அனைவருக்கும் நன்றி. சுஹாஸ் சார், ஜி.வி. சார், சத்யராஜ் சார், மகிமா, மற்றும் ஒட்டுமொத்த டெக்னிஷியன்ஸ், அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
 
எனக்கு இந்தப் படத்தைக் கையாளுவதற்குப் பெரிய சவாலாக அமைந்தது தொழில்நுட்பக் கலைஞர்கள் தான். என்னைச் சுற்றி எப்போதுமே பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், கதிர் சார் போன்ற பெரிய டெக்னிஷியன்ஸ் இருப்பார்கள். பீட்டர் மாஸ்டருக்கு நிறைய டார்ச்சர் கொடுத்திருக்கிறேன். கதிர் சார், “கேமரா கடலில் விழுகக்கூடாது, ஒரு பாதுகாப்பான கோணத்தில் வைக்கலாம்” என்று சொன்னபோது, அவர் ஒரு ப்ரொபசர்போல வரைபடம் வரைந்து காட்டி, நான் நினைத்ததைச் சாதித்துக்கொடுத்தார். எடிட்டர் பிரதீப், பாலா சார் மற்றும் ஒவ்வொருவருக்கும் நன்றி.
 
மகிமா, உங்கள் வயதிற்கு மீறிய ஒரு கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்ததற்கு நன்றி. இந்த பெரிய படகை இயக்குவதற்கு எனக்கும் மிகப்பெரிய உறுதுணையாக இருந்தது என் உதவி இயக்குனர்கள்தான். குறிப்பாக அமீர் மற்றும் ஹாரிஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
 
இந்த படம் என்னைக் கண்டுபிடித்ததா அல்லது நான் இந்தப் படத்தைக் கண்டுபிடித்தேனா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த படம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு எப்படி பாரம்பரிய விளையாட்டோ, அதேபோல்தான் மீனவர்களின் இந்த பாய்மரப் படகுப் பந்தயமும். இதற்கும் அரசாங்கம் மாநில மற்றும் தேசிய விருதுகள் வழங்கி அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அப்படி நடந்தால் அதுவே இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறேன். அனைவருக்கும் நன்றி!” என்று கூறினார்.
 
ஆர்.ஜே. பாலாஜி பேசும்போது 
 
“எல்லாருக்கும் வணக்கம். கிளீன் ஷேவ் பண்ணிட்டு இந்த ஈவென்ட்டுக்கு வந்தவங்களுக்கு எல்லாம் இப்போ தாடியே முளைச்சிருச்சு! நானே கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்னு நினைச்சேன், ஆனா நான் வந்ததுக்கு அப்புறமே ஒரு மூணு நாள் ஆகியிருக்கு இந்த ஈவென்ட் நடந்து முடியறதுக்கு. ராமநாதபுரம் மாவட்டத்துல இருந்து பாசிப்பட்டினம், தொண்டி மற்றும் இன்னும் சில ஊர்கள்ல இருந்து வந்திருக்கிற உங்க எல்லாருக்கும் மிகப்பெரிய நன்றி. நீங்க இல்லைனா இந்த ஈவென்ட்ல இந்த ஆரவாரமும் கூச்சலும் இருந்திருக்காது; இவ்ளோ சிறப்பா நடக்குறதுக்கு நீங்கதான் காரணம்.
 
இந்த படத்தோட டைரக்டர் மதி, செமையா பேசுனீங்க. நீங்க ஒரு ஃபர்ஸ்ட் டைம் டைரக்டர் மாதிரி பேசல; உங்ககிட்ட ஒரு தனி ‘Swag’ இருக்கு. இது உங்களுடைய முதல் பிளாக்பஸ்டரா அமைய வாழ்த்துகள். கதிர் சார், செம எடிட்டர் பிரதீப் ஈ ராகவ், பாலசரவணன், மிதுன், மகிமா, சுஹாஸ் சார்னு எல்லாருக்கும் என்னோட வாழ்த்துகள். மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், கடலுக்கு நடுவுல அவ்ளோ கஷ்டப்பட்டு கோர்ட் போட்டு ஷூட் பண்ணிருக்கீங்க. நான் வெற்றிமாறன் சார்கிட்ட கேட்டப்போ, ‘அவர் கோர்ட் போடாம வந்த ஒரே ஸ்பாட் என்னோட செட் தான்’னு சொன்னாரு. இப்படி ஒரு படத்துக்காக இவ்ளோ தூரம் உழைச்ச அத்தனை டெக்னீஷியன்களுக்கும் வாழ்த்துகள்.
 
எறும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலைனு நீங்க நினைக்கலாம். நான் இங்க வந்திருக்கறதுக்கு ஒரே காரணம் என் நண்பர் சூரி சார்தான். அன்பாலே அடிப்பீங்க சூரி சார், கொஞ்சம் உட்காருங்க! நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா நடிச்சதில்ல, எங்களுக்குள்ள எந்த வொர்க்கிங் ரிலேஷன்ஷிப்பும் கிடையாது. ஆனா ஒருத்தருக்கு ஒருத்தர் மானசீகமான அன்பும் மரியாதையும் வெச்சிருக்கோம். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க காமன் ஃப்ரெண்ட் உதய் மூலமாதான் நாங்க பேச ஆரம்பிச்சோம். எனக்கு ஒரு பிரச்னை வந்தப்போ, ஃபர்ஸ்ட் கால் பண்ணி ஆறுதல் சொன்னது அவர்தான். படம் ஜெயிச்சப்போ ரொம்ப சந்தோஷப்பட்டதும் அவர்தான். நீங்க எனக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன் சார்.
 
1999-ல வந்த ‘சங்கமம்’ படத்துல விஜயகுமார் சாரோட கார் வரும்போது, கேட்டைத் திறந்து விட்டுட்டு 10 பேர் இடிச்சிட்டு போவாங்க; அதுல ஒருத்தர் பறந்து போவாரு, அதுதான் சூரி சார். அந்தப் படத்துல இருந்து, ஒரு ஹீரோவா அவர் தனக்கான இடத்தைப் பிடிக்க 25 வருஷம் ஆகியிருக்கு. அவர் யாருக்காகவும் தன்னோட இடத்தை விட்டுக்கொடுக்கல; ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்டா, எலக்ட்ரீஷியனா, கார்பென்டரா, காமெடியனா இவ்ளோ தூரம் போராடி ஜெயிச்சிருக்காரு. இந்த இடத்துல முன்னாடி எல்லாம் இவ்வளவு ஈஸியா உள்ள வர முடியாது. எல்லாரும் ‘அவன் ஆக முடியாது, இவன் ஆக முடியாது’னு சொல்லுவாங்க. ஆனா, விடாமுயற்சியால எவ்ளோ தூரம் வர முடியும்னு அவர் நிரூபிச்சிருக்காரு.
 
இன்னைக்கு நான் வீட்ல இருந்து வரும்போது எல்லா இடத்துலயும் சூரி சாருக்கு பிறந்தநாள் போஸ்டர் ஒட்டியிருந்தது. அதுதான் உண்மையான வளர்ச்சி. போஸ்டர் நம்மளே ஒட்டிக்கலாம், ஆனா அந்த அன்பை மக்கள் கொடுக்கணும். படத்துல உங்களோட டான்ஸ் ரொம்ப சூப்பரா இருந்துச்சு. உங்க ஃபேமிலி டிசைன் பண்ண இந்த டிரஸ்ல, கோர்ட் போட்டுட்டு, கால் மேல கால் போட்டு இன்னும் நிறைய வளருங்க. செப்டம்பர் 10-ஆம் தேதி ரிலீஸாகும் ‘மந்தாடி’ படம் இந்த வருஷத்தோட மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துகள். நன்றி!” என்றார்.
 
இயக்குனர் வெற்றி மாறன் பேசும்போது 
 
“எனக்கு ‘வெற்றிமாறன்’னு பேர் வச்சதே ‘மதிமாறன்’னுடைய அப்பாதான். அந்த வகையில எனக்கு இவரு மாமா பையன்தான். அவர் என்னை விட பெருமையா இருக்கிறதுக்கு அவருக்கு எல்லாத் தகுதியும் இருக்கு. மதி என்கிட்ட, ‘நான் சினிமாக்கு போறேன், நீங்களும் வர்றீங்களா?’ன்னு கேட்டாரு. நான் இன்ஜினியரிங் முடிச்சதுக்கப்புறம் அவர்கிட்ட நான் அசிஸ்டன்ட் டைரக்டரா வேலை செய்ய விருப்பம் சொன்னேன். ஆனா அவங்க அம்மா ‘நீ ஒரு செமஸ்டராவது முடிச்சிட்டு வா’ன்னு சொல்லிட்டாங்க. நான் ஒரே செமஸ்டரை முடிச்சிட்டு, நேரா அவர்கிட்ட வராம ஜி.வி. ஸ்டுடியோல போய் ‘ஷார்ட் ஃபிலிம்’ ஒன்னு எடுத்து அவருக்குக் காட்டுனேன். ஏன்னா அவர் எப்பவுமே தகுதி அடிப்படையிலதான் வேலை செய்வார். எனக்குத் தகுதி இருக்கான்னு அவர் பார்த்தாரு. அதுக்கப்புறம்தான் என்னை அவருக்கு அசிஸ்டன்ட் ஆக்கினார்.
 
அவர் எப்பவுமே ஒரு விஷயத்தை செஞ்சதுக்கப்புறம் தான் எல்லாரிடமும் காட்டுவார். அப்படி ஒரு முறை எனக்கு ஒரு ஷார்ட் ஃபிலிம் காமிச்சதுக்கப்புறம், ‘அடுத்து ஒரு படம் எடுக்கப்போறேன்’னு சொன்னாரு. அவரோட ‘விஷன்’ எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுக்கப்புறம் ‘விடுதலை’ படத்துல நான் ஒர்க் பண்ணும்போது, போஸ்ட் புரொடக்ஷன்ல அவர் என்னையும் என் டீமையும் நைட் 3 மணி வரைக்கும் கூட ஒர்க் பண்ண சொல்லுவாரு. அப்போ அவருடைய கமிட்மென்ட், ஸ்கிரிப்ட் மேல இருக்கிற தெளிவு, எல்லாமே ரொம்பப் பெருசா தெரிஞ்சது. இதுக்கெல்லாம் காரணம் எல்ரெட் குமார் சாரும், மணி சாரும் தான். அவங்க கொடுத்த சுதந்திரம்தான் இதைச் சாத்தியமாக்கியது.
 
இப்படி ஒரு பெரிய படத்தைப் பண்றதுக்கு எல்ரெட் குமார் மாதிரி ஒரு தயாரிப்பாளரால மட்டும்தான் முடியும். ஏன்னா அவர் ஒரு தயாரிப்பாளர்ங்கிறத மறந்துட்டு, டைரக்டர்கிட்ட என்ன வேணும்னு கேட்டுச் செய்வாரு. அதுமட்டுமில்லாம, ‘மந்தாடி’ படம் எந்த அளவுக்குப் பெரிய சவாலா இருந்துச்சுன்னு எனக்கு நல்லா தெரியும். கடல் நடுவுல படமாக்குறது எவ்வளவு கஷ்டம்னு, அந்த டீமுக்கும், பீட்டர் ஹெய்ன் மாஸ்டருக்கும், கதிர் சாருக்கும் தான் தெரியும். ஒரு பெரிய சவாலை அவங்க எல்லாரும் கையாண்ட விதம் ரொம்பவே பாராட்டத்தக்கது.
 
இந்த படத்தோட முக்கியக் கதாபாத்திரமான சூரி அண்ணனைப் பத்தி சொல்லணும்னா, நான் அவரைப் பார்த்ததிலிருந்து அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காருன்னு எனக்கு நல்லா தெரியும். 1999-ல ‘சங்கமம்’ படத்துல ஜூனியர் ஆர்டிஸ்டா ஆரம்பிச்சு, இன்னைக்கு ஒரு ஹீரோவா மாறுறதுக்கு 25 வருஷம் அவர் கடுமையா உழைச்சிருக்காரு. எந்த இடத்திலயும் அவர் விட்டுக் கொடுக்கல. அவர் ஒரு உண்மையான இன்ஸ்பிரேஷன். இந்த படத்துல நான் அவர் கூட நடிக்கலனாலும், அவருடைய வெற்றியை நான் மனசார விரும்புறேன்.
 
இந்த படத்துல வேலை செய்த அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகள். படத்தோட டீசர் பார்க்கும்போது ரொம்பப் பிடிச்சிருந்தது. இந்த படம் நிச்சயம் ஒரு பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி பெறும். ‘மந்தாடி’ படம் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமா மட்டுமில்ல, ஒரு சிறந்த மனித உணர்வுகளைப் பேசுற படமா இருக்கும். செப்டம்பர் 10-ஆம் தேதி வரப்போகிற இந்தப் படத்துக்கு என் முழு ஆதரவும் இருக்கும். படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றி!” என்றார்.
 
நடிகர் சூரி பேசும்போது 
 
“எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. முதல்ல ராமநாதபுரம் மாவட்டம், பாசிப்பட்டினம், தொண்டி போன்ற ஊர்களில் இருந்து வந்திருக்கிற உங்க எல்லாருக்கும் மிகப்பெரிய நன்றி. நீங்க இல்லைனா இந்த ஈவென்ட் சும்மா ஒரு மீட்டிங் மாதிரி ஆகியிருக்கும்; இவ்வளவு பிரமாண்டமா, ஒரு ஆரவாரத்தோட நடக்கிறதுக்கு நீங்கதான் காரணம்.
 
மதி, நீங்க ரொம்ப சிறப்பா பேசுனீங்க. ஒரு முதல் பட இயக்குனர் மாதிரி இல்லாம, அவ்ளோ கெத்தா, நம்பிக்கையோட பேசுறீங்க. உங்க டீம்ல இருக்கிற அத்தனை பேரையும் மேடைக்கு கூப்பிட்டுப் பேசினது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. உங்களுடைய முதல் படமே பெரிய பிளாக்பஸ்டரா அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள். கதிர் சார், உங்க கேமரா ஒர்க் கடலுக்குள்ள பிரமாதமா வந்திருக்கு. பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங், பாலசரவணன் நடிப்பு, தம்பி மிதுன், மகிமா எல்லாருக்கும் வாழ்த்துகள். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், கடலுக்கு நடுவே நீங்க கோட் போட்டுட்டு நின்னுகிட்டு பண்ணிய சாகசங்கள் ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. வெற்றிமாறன் சார் சொன்னது மாதிரி அந்த இடத்துல ரிஸ்க் எடுத்து ஒர்க் பண்ணது பெரிய விஷயம். சுஹாஸ் தம்பி, உங்க முகத்துல ஒரு அப்பாவித்தனம், அதே சமயம் மிரட்டலான வில்லத்தனம் ரெண்டும் இருக்கு. தமிழ் சினிமாவுக்கு உங்களை வரவேற்கிறேன்.
 
எல்ரெட் குமார் சார் மாதிரி ஒரு தைரியமான தயாரிப்பாளர் கிடைக்கிறதே பெரிய விஷயம். இயக்குனர் 500 பேர் கேட்டா, 1500 பேர் கொடுப்பாரு. அவர் கொடுத்த சுதந்திரம் தான் இந்த படம் இவ்ளோ பிரமாண்டமா வரக் காரணம். அதே மாதிரி, முக்காவாசி படம் நடுக்கடல்ல ஒரு 15-20 கிலோமீட்டர் தள்ளித்தான் எடுத்தோம். புயல், காத்துனு எவ்ளோ கஷ்டம் வந்தாலும் எங்களை பத்திரமா பாதுகாத்து கரையைச் சேர்த்த அந்த ஊர் பசங்க சுகுமார், சதீஷ், ராஜேஷ், காளிபாண்டி ஆகியோருக்கு என் ஸ்பெஷல் நன்றிகள். நீங்க இல்லைனா நாங்க கடல்ல ஷூட்டிங் பண்ணியிருக்கவே முடியாது, நீங்கதான் எங்களோட லைஃப் கார்ட்ஸ்.
 
இந்த படத்தோட ஷூட்டிங்ல என் கால்ல பலமா அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுருச்சு. கால் வீங்கி எழுந்து நடக்கக் கூட முடியாத நிலையில, வீல்சேர்ல உட்கார்ந்துக்கிட்டுதான் வந்தேன். டைரக்டர் கூட, ‘வேணாம் சார், உடம்பு தான் முக்கியம், அப்புறம் பார்த்துக்கலாம்’னு சொன்னாரு. ஆனா, ‘பரவாயில்ல தம்பி, படகில் ஏறி உக்காந்துக்கிட்டு என்னால முடிஞ்சதை பண்றேன்’னு சொல்லி நடிச்சேன். அந்த வலியிலும் எனக்காக மொத்த யூனிட்டும் உறுதுணையா நின்றார்கள்.
 
நான் இன்னைக்கு இந்த மேடையில நிம்மதியாக நிற்கிறேன் என்றால் அதுக்குக் காரணம் என் வீட்ல இருக்குற பெண்கள்தான். ஒரு ஆணோட வெற்றிக்குப் பின்னாடி கண்டிப்பா ஒரு பொண்ணு இருப்பாங்க. என் மனைவி, என் குழந்தைங்க எனக்குக் கொடுக்கிற சப்போர்ட்தான் என்னை எந்த கவலையும் இல்லாம ஓட வைக்குது. எல்லாரையும் விட என் அம்மா… அவங்கதான் என் சாமி. ரெண்டு நாளைக்கு முன்னாடி என்கிட்ட போன்ல பேசும்போது எங்க அம்மா ரொம்ப அழுதாங்க. ‘அன்னைக்கு ஒரு நாள் 300 ரூபா வீட்டு வாடகை கொடுக்க முடியாம, சாப்பிட வழியில்லாம போன் பண்ணி அழுதியேயப்பா… இன்னைக்கு ஊர் முழுக்க உன் பிறந்தநாள் போஸ்டர் இருக்குறத பார்த்து எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு’னு சொல்லி அழுதாங்க. அந்த அம்மாவோட கண்ணீரும் ஆசீர்வாதமும், உங்களோட அன்பும் தான் என்னை வாழ வைக்குது.
 
எனக்குத் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என் நண்பர், சகோதரர் உதய் சங்கர் அண்ணனுக்கு என் ஸ்பெஷல் தேங்க்ஸ். செப்டம்பர் 10-ஆம் தேதி ‘மண்டாடி’ படம் தியேட்டர்ல ரிலீஸ் ஆகுது. இது ஒரு மிகப்பெரிய படமா வந்திருக்கு. கண்டிப்பா உங்க எல்லாருக்கும் பிடிக்கும். தியேட்டரில் வந்து பார்த்து உங்க ஆதரவைக் கொடுங்க. ரொம்ப நன்றி, வணக்கம்!” என்றார்.

‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ 

மிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஆட்சிக்கு வந்த தவெக அரசு ஜூன் 23ஆம் தேதியன்று ரூ.755.83 கோடி மதிப்பில் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ தொடங்கி வைக்கப்படவுள்ளதாக அறிவித்தது.

இதற்கான டெண்டர் வெளியிடப்பட்ட நிலையில், பல்வேறு நிறுவனங்களும் அரசிடம் தங்கள் விலைப்புள்ளி விவரத்தினை அளித்தன. இந்த நிலையில், இந்த திட்டத்துக்கு ஜாய் ஆலுக்காஸ் நிறுவனமும், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் ஜூன் 22 முதல் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது என்றும், இதற்காக 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்கள் வழங்க தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகத்தால் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இதில் 11 நிறுவனங்கள் தங்களது விலைப்புள்ளி விவரத்தினை தெரிவித்தன, இதில் ஒரு கிராம் தங்கத்தின் விலையை தவிர்த்து செய்கூலி, காப்பீடு, போக்குவரத்து BIS- தரமுத்திரை போன்ற அனைத்து கூடுதல் கட்டணங்களுக்கும் சேர்த்து 1 பைசா என ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் குறைந்த விலைப்புள்ளியினை அளித்துள்ளது.

மேலும், ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்ற பிற 10 நிறுவனங்களிடம் குறைந்த விலைப்புள்ளி அளித்த நிறுவனத்தின் விலையை ஒப்பிட்டு இசைவு தெரிவிக்க கோரியதில் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் இசைவு தெரிவித்துள்ளது. இதனால் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திற்கும் 70- க்கு 30 என்ற சதவீதத்தில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல இத்திட்டமானது பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான 2026 செப்டம்பர் 15ஆம் தேதி துவக்கி வைக்கப்பட உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசு வேலை வேண்டுமா? செம கேடி பிளான்!!

சென்னை பழைய வண்​ணாரப்​பேட்டை போஜ​ராஜன் நகரைச் சேர்ந்த சித்ரா (28), தனி​யார் மருத்​து​வ​மனை​யில் செவிலிய​ராகப் பணி​யாற்றி வரு​கிறார். கடந்த ஆண்டு டிசம்​பர் மாதம், சென்னை சேத்​துப்​பட்டு மங்​களாபுரத்​தைச் சேர்ந்த சசிகலா (40) என்​பவர் சிகிச்​சைக்​காக அந்த மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

அப்​போது சித்​ரா​விடம் அறி​முக​மான சசிகலா, தனக்கு அரசி​யல் வட்​டாரத்​தில் பெரும் செல்​வாக்கு இருப்​ப​தாக​வும், பணம் கொடுத்​தால் அரசு வேலை வாங்​கித் தரு​வ​தாக​வும் ஆசை வார்த்தை கூறி​யுள்​ளார்.

சசிகலா​வின் பேச்சை நம்​பிய சித்​ரா, பல தவணை​களாக ரூ.8 லட்​சம் கொடுத்​துள்​ளார். மேலும், தனது நண்​பர்​களான சக்தி பாலனுக்கு சுகா​தா​ரத் துறை ஆய்​வாளர் வேலை​யும், கீதாவுக்கு சத்​துணவுத் துறை​யில் வேலை​யும் பெற்​றுத் தரு​மாறு கோரி, அவர்​களை​யும் சசிகலா​விடம் அறி​முகம் செய்​துள்​ளார்.

இதற்​காக சக்தி பாலனிடம் ரூ. 9 லட்​ச​மும், கீதா​விடம் ரூ. 3 லட்​சம் என மொத்​தம் ரூ.20 லட்​சத்தை சசிகலா வாங்​கிய​தாகத் தெரி​கிறது. தேர்​தல் முடிந்​ததும் வேலை வாங்​கித் தரு​வ​தாகக் கூறி காலம் கடத்​திய சசிகலா, அதன் பிறகு சித்​ரா​வின் அழைப்​பு​களைத் தவிர்க்​கத் தொடங்​கி​னார்.

சந்​தேகமடைந்த சித்​ரா, சசிகலா​வின் வீட்​டுக்கு நேரில் சென்று பணத்​தைத் திரும்​பக் கேட்​டுள்​ளார். அப்​போது சசிகலா, “பணத்​தைத் தர முடி​யாது, மீறி கேட்​டால் கூலிப்​படையை வைத்து உன்​னைக் கொன்று விடு​வேன்” என மிரட்​டல் விடுத்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இதையடுத்​து, பாதிக்​கப்​பட்ட சித்​ரா, சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் அளித்​தார். இது குறித்து வழக்​குப் பதிவு செய்த வண்​ணாரப்​பேட்டை போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். சசிகலா​, அவருக்கு உடந்தை​யாக கணவர் குமார் (43) மற்​றும் குமாரின் தங்கை திவ்​யதர்​ஷினி (22) ஆகியோரை போலீ​ஸார் நேற்று முன்தினம் கைது செய்​தனர்.

விசா​ரணை​யில், சசிகலா​வும், திவ்​யதர்​ஷினி​யும் ஒரு வழக்​கறிஞரிடம் உதவி​யாளர்​களாகப் பணி​யாற்றி வந்​ததும், குமார் உணவு டெலிவரி ஊழிய​ராக இருந்​ததும் தெரிய​வந்​தது.

‘ஹைவான்’ டிரெய்லர் வெளியானது!

‘ஹைவான்’ திரைப்படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே, இப்படத்தின் இருண்ட மற்றும் திருப்பங்கள் நிறைந்த உலகத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் (ஹைவான்) மற்றும் சைஃப் அலிகான் (நாயகன்) இடையேயான அதிரடி மோதலைக் காட்டும் விறுவிறுப்பான டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

இருண்ட, த்ரில்லிங் பின்னணியில் உருவாகியுள்ள இந்த டிரெய்லர், இருவருக்கு இடையிலான தீவிரமான மோதலை பிரதிபலிக்கிறது. இயக்குநர் பிரியதர்ஷன், தனது சுவாரசியமான பின்னணி இசை மூலம் படத்தின் பதற்றத்தையும் சுவாரசியத்தையும் மேலும் கூட்டி, ஒரு சிறந்த திரையரங்க அனுபவத்திற்கு வழிவகுத்துள்ளார்.

நடிகர் அக்ஷய் குமார் இதுவரை திரையில் பார்த்திராத மிகவும் இருண்ட மற்றும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அவருக்கு எதிராக சைஃப் அலிகான் பார்வையற்றவராக சவாலான வேடத்தில் மோதியுள்ளார்.

இவர்களுடன் நீதிபதியாக போமன் இரானி, காவல் அதிகாரியாக சயாமி கெர் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் ஷ்ரியா பில்கோன்கர், ஷரிப் ஹாஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர்.

“இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும்போது வெல்லப்போவது யார்?” என்ற பெரிய கேள்வியுடன் இந்த டிரெய்லர் நிறைவடைகிறது.

கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் தியேஸ்பியன் ஃபிலிம்ஸ் நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் ஷைலஜா தேசாய் ஃபென் இணைந்து தயாரித்துள்ள ‘ஹைவான்’ திரைப்படம், வருகிற செப்டம்பர் 11-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

TNEPIC 2026 மாநாடு

சென்னையில் சிறப்பாக நடைபெற்ற
‘தமிழ்நாடு கார்டியாக் எலக்ட்ரோபிசியாலஜி மாநாடு (TNEPIC)

 

சென்னை:

இதயத் துடிப்பு கோளாறுகள் குறித்த நவீன மருத்துவத்தில் உலகளாவிய கவனத்தை ஈர்த்த ‘தமிழ்நாடு இதய மின் உடலியங்கியல் மாநாடு (TNEPIC 2026)’ சென்னையில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. வேகமாக மாற்றம் கண்டு வரும் இதய இலய கோளாறுகள் துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த விவாதங்கள், அறிவியல் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் நேரடி கற்றல் பயிற்சிகள், இரண்டு நாட்கள் மாநாட்டில் இடம்பெற்றன. இதய இலய சிகிச்சையில் முன்னணி நிபுணர்கள், பல வெளிநாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், இதயவியல் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட, இந்தியா முழுவதும் இருந்தும், இலங்கை, மொரிஷீயஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் இதில் பங்கேற்றனர்.
“இதயத் துடிப்பு கோளாறுகளின் உலகம் – மின் உடலியங்கியலும், புத்தாக்கமும் இணையும் இடம்” (The World of Heart Rhythm Disorders – Where Electrophysiology Meets Innovation) என்ற கருப்பொருளின் கீழ் இம்மாநாடு நடைபெற்றது. இதய மேலறை மிகைத்துடிப்பு , ஏட்ரியக் குறு நடுக்கம், இதயக் கீழறை மிகைத்துடிப்பு மற்றும் ஆக்சிஜன் குறைபாடு சாராத இதயத்தசை நோய்கள், இதய சாதனங்கள், இரத்தஓட்டக் குறைபாட்டால் ஏற்படும் மயக்கம், திடீர் இதய உயிரிழப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்களான துடிப்பு-புல நீக்கம், கம்பியற்ற பேஸ்மேக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன சிகிச்சைகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.


மாநாட்டை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மாண்புமிகு திரு. ஜெ. சி. டி. பிரபாகரன், சட்டமன்றப் பேரவைத் தலைவர் தனது உரையில், “மேம்பட்ட இதயத் துடிப்பு மருத்துவத்தில் சென்னை ஒரு முக்கிய மையமாக உருவெடுத்து வருவது பெருமிதமளிக்கிறது. புதிய கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்துகொள்ளவும், இதய சிகிச்சையை வலுப்படுத்தவும், ஒரு சிறந்த தளத்தை இம்மாநாடு வழங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள நிபுணர்களை ஒரே ஒரே தளத்தில் ஒருங்கிணைத்து பயனுள்ள விவாதங்களை சாத்தியாக்கியிருக்கும் மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு எனது பாராட்டுக்கள்” என்று கூறினார்.
TNEPIC 2026 நிகழ்வானது ‘கார்டியாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா’வின் (சென்னை) ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், ‘இந்தியன் ஹார்ட் ரிதம் சொசைட்டி’யின் அங்கீகாரத்தையும் பெற்றது. இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுத் தலைவராக டாக்டர் கே. ஜெய்சங்கரும், அறிவியல் குழுவின் தலைவராக டாக்டர் பி. வி. சஞ்சய்யும் செயல்பட்டனர்.


மாநாட்டின் அமைப்புச் செயலாளர் டாக்டர் தீப் சந்த் ராஜா எஸ். பேசுகையில், “ஏட்ரிய குறுநடுக்கம் (ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன்) போன்ற இதயத் துடிப்பு பிரச்சினைகளுக்கு இப்போது கிடைக்கக்கூடிய அதிநவீன சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அறிவுப்பரிமாற்றத்தை ஏதுவாக்குவதே TNEPIC 2026 மாநாட்டின் நோக்கமாகும். துடிப்பு-புல நீக்கம், கம்பியற்ற பேஸ்மேக்கர்கள் போன்ற புதிய கண்டுபிடிப்புகளையும் இம்மாநாட்டில் நாங்கள் காட்சிப்படுத்தினோம். அனுபவம் மிக்க நிபுணர்களுடன் கலந்துரையாடவும், செய்முறைப் பயிற்சியைப் பெறுவதற்கும் மருத்துவக் கல்வி மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது” என்றார்.

  • நவீன அறிவியல் அமர்வுகள், அறிகுறி மற்றும் சிகிச்சை அடிப்படையிலான கற்றல் (case-based learning), விவாதங்கள் மற்றும் செய்முறைப் பயிற்சிகள் ஆகியவற்றின் கலவையாகத் திகழ்ந்த TNEPIC 2026 மாநாடு, தனிச்சிறப்பு பிரிவான இதயத் துடிப்பு கோளாறுகளுக்கான சிகிச்சையை வழங்குவதில் இதய மின் உடலியங்கியல் (எலக்ட்ரோபிசியாலஜி) நிபுணர்களின் வளர்ந்துவரும் பங்கை முன்னிலைப்படுத்தியது. மேலும், மருத்துவர்களும், பயிற்சி பெறுநர்களும் தங்களின் நடைமுறை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய தொழில்நுட்பங்களை மருத்துவ நடைமுறையில் எவ்வாறு சிறப்பாக ஒருங்கிணைக்கலாம் என்பதை ஆராயவும் இந்த மாநாடு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியது.
    இதயப்படபடப்பு, தலைசுற்றல் மற்றும் இதயச் செயலிழப்பு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கும், பேஸ்மேக்கர் பொருத்துதல் தேவைப்படுபவர்களுக்கும், இதய நலனை மேம்படுத்துவதில் அதிநவீன சிகிச்சைகளின் முக்கியத்துவத்தையும் இம்மாநாடு வலியுறுத்தியது.