Wednesday, April 29, 2026
Blog

தற்கொலை கடிதம்! ஒரே வரியில் திருப்பம்!!

சென்னை, திருவொற்றியூர் மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதுடைய முத்துக்குமார். இவர் மணலி மாநகராட்சி மண்டலத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த குணசுந்தரி என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் ஒரு வருட முன்பு மனைவி இறந்து தனியாக வசித்த உறவினர் சதீஷ்குமார் என்பவரை முத்துக்குமார் அழைத்து வந்து தனது வீட்டில் தங்க வைத்திருக்கிறார்.

இந்நிலையில் முத்துக்குமார் தினந்தோறும் காலை வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் மாலையில் தான் வீடு திரும்புவார் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் வீட்டில் தனியாக இருந்த குணசுந்தரிக்கும், சதிஷ்குமாருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கணவனை விட்டு காதலனுடன் வாழ நினைத்த குணசுந்தரி கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெரியபாளையத்தில் உள்ள அம்மா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் குணசுந்தரி தனது கள்ளக்காதலன் சதீஷ்குமாருடன் வீட்டை விட்டு வெளியேறியது தெரிவந்தது. இதனால் மனமுடைந்து விரக்தியில் இருந்த முத்துக்குமார் இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் இறப்பதற்கு முன்பு செல்போனில் ஆடியோ பதிவு செய்தும், கடிதம் எழுதி வைத்தும் “எனது மரணத்திற்கு காரணம் மனைவி குணசுந்தரியும் சதீஷ்குமாரும் தான்” என தெரிவித்துள்ளார்.

தன்னை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மணலி காவல் நிலைய போலீசார் இறந்த முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் இது குறித்து சட்டரீதியாக எவ்வித நடவடிக்கை எடுக்க முடியாது என போலீசார் புகாரை வாங்க மறுத்ததால் பிரேத பரிசோதனை முடித்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குகொண்டுவரப்பட்ட முத்துக்குமார் உடலை வழியில் மடக்கி பொன்னேரி நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மணலி காவல் நிலைய உதவி ஆணையர் விவேகானந்தன் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பொன்னேரி நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் முத்துக்குமார் எழுதி வைத்த கடிதத்தில் “என் மனைவி வேற என்ன கரணம் சொல்லி இருந்தாலும் நான் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டேன் ஆனால் என்னிடம் நல்ல முறையில் நடந்து கொண்டு இப்படி செய்தது என்னால் தங்க முடியவில்லை, கடந்த (ஏப் 2) ஆம் தேதி கூட நாங்கள் ஒன்றாக குளித்து உடலுறவு கொண்டோம், பிறகு இரண்டு நாட்களிலேயே என்னை ஏமாற்றிவிட்டால்” என எழுதி வைத்திருப்பது முத்துக்குமாரின் உறவினர்கள் மீது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில்​ போதை மாத்திரை! எப்படி?!

காவல்​ ஆணை​யர்​ உத்​தர​வின்​ பேரில்​, சென்​னை ​முழு​வது​ம்​ போதைப்பொருள்​ ஒழிப்​பு நட​வடிக்​கைகள்​ ​முடு​க்​கி​விடப்​பட்​டுள்​ளன. இதன்​ ஒரு பகு​தி​யாக, ​காவல்​ துணை ஆணை​யர்​களின்​ மேற்​பார்​வை​யில்​ அமை​க்​கப்​பட்​ட தனிப்​படை​யினர்​ தீ​விர கண்​காணிப்​பில்​ ஈடு​பட்​டு வரு​கின்​றனர்​.

அந்​த வகை​யில்​, சென்​னை ​ரா​மாபுரம்​ பகு​தி​யில்​ சட்​ட​விரோத​மாக ​போதை ​மாத்​திரைகள்​ ​விற்​பனை செய்​யப்​படு​வ​தாக ​போலீ​ஸாரு​க்​கு ரகசி​​யத்​ தகவல்​ கிடைத்​தது. அதன்​பேரில்​, நேற்​று ​முன்​தினம்​ ​ரா​மாபுரம்​ ​திரு​மலை நகர்​ பூங்​கா அரு​கே ​போலீ​ஸார்​ தீ​விர​மாகக்​ கண்​காணித்​தனர்​.

அப்​போது அங்​கு சந்​தேகத்​துக்​கிட​மான ​முறை​யில்​ நின்​று ​கொண்​டிருந்​த 2 இளைஞர்​களைப்​ பிடித்​து ​வி​சா​ரணை நடத்​தினர்​. ​வி​சா​ரணை​யில்​ அவர்​கள்​ ​முன்​னுக்​குப்​ பின்​ ​முரணாகப்​ ப​திலளித்​த​தால்​, ​போலீ​ஸார்​ அவர்​களின்​ உடைமை​களைச்​ சோதனை​யிட்​டனர்​. அப்​போது அவர்​கள்​ ஏ​ராள​மான வலி நி​வாரண ​மாத்​திரைகளை மறைத்​து ​வைத்​திருந்​தது கண்​டறியப்​பட்​டது.

இதுகுறித்​து நடத்​தி​ய ​வி​சா​ரணை​யில்​, ஒரு​வர்​ மதுர​வாயலைச்​ சேர்​ந்​த தனி​யார்​ கல்​லூரி ​மாணவர்​ சுரேஷ் (23), மற்​றொரு​வர்​ ​ரா​மாபுரம்​ பகு​தி​யைச்​ சேர்​ந்​த ஸ்ரீராம்​ (19) என்​​பது​ம்​, இரு​வரு​ம்​ தெலங்​கா​னா ​மாநிலம்​, செகந்​தி​ரா​பாத்​திலிருந்​து இந்​த வலி நிவாரண ​மாத்​திரைகளை​க்​ குறைந்த​விலைக்​கு ​வாங்​கி வந்​து, சென்​னை​யில்​ சட்​ட​விரோதமாக விற்றது தெரிய​வந்​தது.

இதையடு​த்​து இரு​வரை​யும்​ கை​து செய்​த ​போலீ​ஸார்​, அவர்​களிட​மிருந்​து 1,380 வலி நி​வாரண ​மாத்​திரைகள்​ மற்​றும்​ ​விற்​பனைப்​ பண​மான ரூ.1.47 லட்​சம்​ ஆகிய​வற்​றை பறி​முதல்​ செய்​தனர்​. ​போதைப்​ பொருட்​கள்​ கடத்​தலில்​ பின்​னணி​யில்​ இருப்​பவர்​கள்​ குறித்​து ​போலீ​ஸார்​ தொடர்​ந்​து ​வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

 

தமிழகத்தை சுட்டேரிக்கும் வெயில்!

மிழகம், புதுச்​சேரி​யில் ஒரு சில இடங்​களில் இன்று முதல் மே 2-ம் தேதி வரை வெப்​பநிலை இயல்​பை​விட 2 முதல் 3 டிகிரி செல்​சி​யஸ் அதி​க​மாக இருக்​கக்​கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது குறித்​து, சென்னை வானிலை ஆய்வு மையத்​தின் உயர​தி​காரி​யும், விஞ்​ஞானி​யு​மான வி.ஆர்​.துரை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு:

வடக்கு தெலங்​கானா முதல் குமரிக்​கடல் வரை 0.9 கி.மீ. உயரத்​தில் உள் கர்​நாட​கா, ராயலசீமா மற்​றும் தமிழகம் வழி​யாக ஒரு வளிமண்டல காற்​றழுத்​தத் தாழ்​வுப் பாதை நில​வு​கிறது. இதனால்​,மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள், தென்​தமிழக கடலோர மாவட்​டங்​கள் மற்​றும் டெல்டா மாவட்​டங்​களின் கடலோரப்​பகு​தி​கள், காரைக்​கால் பகு​தி​யில் ஓரிரு இடங்​களில் இன்று (ஏப்​.29) மித​மான மழை பெய்​யும். ஏனைய தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் வறண்ட வானிலை நில​வக்​கூடும்.

தமிழகம், புதுச்​சேரி, காரைக்​காலில் ஒரு சில இடங்​களில் நாளை (ஏப்​.30)​முதல் மே 2-ம் தேதி வரை இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். ஏப்​.30-ம் தேதி நீல​கிரி, கோயம்​புத்​தூர், ஈரோடு, சேலம், தரு​மபுரி மற்​றும் கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்​யக்​கூடும்.

மே 1, 2 ஆகிய தேதி​களில் நீல​கிரி, கோயம்​புத்​தூர், திருப்​பூர், தேனி மற்​றும் திண்​டுக்​கல் மாவட்​டங்​களில் கனமழை பெய்​யக்​கூடும். மே 3, 4-ல் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

இன்று முதல் மே 2-ம் தேதி வரை தமிழகம், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் அதி​கபட்ச வெப்​பநிலை ஒரு சில இடங்​களில் 2 முதல் 3 டிகிரி செல்​சி​யஸ் இயல்பை விட அதி​க​மாக இருக்​கக்​கூடும். மேற்​படி நாட்​களில் வெப்​பநிலை​யும், ஈரப்​ப​த​மும் அதி​கரிக்​கும் நிலை​யில், கடலோர தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும் அசவுகரி​யம் ஏற்​படலாம்.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்​று(ஏப்​.29) வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். அதி​கபட்ச வெப்​பநிலை 38 முதல் 39 டிகிரி செல்​சி​யஸை ஒட்​டி​யும், குறைந்​த​பட்ச வெப்​பநிலை 28 டிகிரி செல்​சி​யஸை ஒட்​டி​யும் இருக்​கக்​கூடும்​.

இவ்​வாறு அறிக்கையில்​ அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

“துபாய் சம்மர் கார்னிவல் 2026”

சென்னை: 

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட “துபாய் சம்மர் கார்னிவல் சென்னை 2026” (Dubai Summer Carnival Chennai 2026), இன்று மாலை நொளம்பூருக்கு அருகிலுள்ள NH பைபாஸ் சாலையில் மிகச் சிறப்பாகத் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு பெருந்திரளான மக்களை ஈர்த்ததுடன், நகரின் ஒரு பிரம்மாண்டமான கோடைக்காலக் கொண்டாட்டத்தின் தொடக்கமாகவும் அமைந்தது.

பிரபல நகைச்சுவை நடிகரும் நடிகருமான புகழ், இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாலை 5 மணிக்கு இக்கார்னிவலை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். அவர் அங்கு வந்திருந்த பார்வையாளர்களுடன் கலந்துரையாடியதுடன், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களையும் பார்வையிட்டார்; மேலும், சர்வதேச தரத்திலான ஒரு கார்னிவல் அனுபவத்தைச் சென்னைக்குக் கொண்டுவந்த இம்முயற்சியைப் பெரிதும் பாராட்டினார்.

‘WE1 Entertainment’ நிறுவனத்துடன் இணைந்து ‘Mishri Group of Companies’ ஏற்பாடு செய்துள்ள இக்கார்னிவல், துபாயின் துடிப்பான உணர்வை அதன் பிரம்மாண்டமான அலங்காரங்கள், கருப்பொருள் சார்ந்த மண்டலங்கள் மற்றும் பெரிய அளவிலான பொழுதுபோக்கு அம்சங்கள் வாயிலாகச் சென்னையில் அப்படியே கண்முன்னே நிறுத்துகிறது. இங்குள்ள ‘Surreal Dubai Waterfalls’ (மாயாஜால துபாய் நீர்வீழ்ச்சிகள்) இதன் தனித்துவமான சிறப்பம்சமாகத் திகழ்ந்து, பார்வையாளர்களுக்குக் கண்கவர் காட்சிகளை விருந்தாக அளிக்கிறது.

 முக்கிய சிறப்பம்சங்கள்

  • Surreal Dubai Waterfalls (முக்கிய ஈர்ப்பு)
  • பனி உலகம் (Snow World) அனுபவம்
  • ‘Avatar’திரைப்படக் கருப்பொருளிலான பிரத்யேக மண்டலம்
  • திகில் இல்லம் (Horror House)
  • கேளிக்கை சவாரிகள் மற்றும் கார்னிவல் விளையாட்டுகள்
  • விற்பனைக் கூடங்கள் (Shopping Stalls)

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகப் பல முக்கிய வணிகத் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அவர்களில் சிலர் Parsan Chand Dugar – நிர்வாக இயக்குனர், Mishri Group of Companies,            Sundarlingam – இயக்குனர், Jeyachandran Retail Pvt Ltd ,              Jayantilal Challani – நிர்வாக இயக்குனர், Challani Jewellery Mart,             Varadharajan – தலைமை நிர்வாக அதிகாரி (CEO), Sowbhagya Electronics

Parsan Chand Dugar கூறியதாவது: “துபாயின் கொண்டாட்ட உணர்வைச் சென்னைக்குக் கொண்டுவரும் ஒரு தனித்துவமான தளமாகவே ‘துபாய் சம்மர் கார்னிவல்’ வடிவமைக்கப்பட்டுள்ளது. குடும்பங்கள் அனைத்தும் ஒரு துடிப்பான சூழலில் பொழுதுபோக்கு மற்றும் ஷாப்பிங் அனுபவத்தை ஒருங்கே அனுபவிக்கக்கூடிய ஒரு இடமாக இதை உருவாக்க நாங்கள் இலக்கு கொண்டுள்ளோம்.”

நடிகர் புகழ் கூறியதாவது: “இத்தகைய ஒரு பிரம்மாண்டமான முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அனைவரும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து, இந்த உற்சாகமான கார்னிவல் அனுபவத்தை நேரில் வந்து கண்டு மகிழுமாறு நான் அன்புடன் அழைக்கிறேன்.”

 நிகழ்வு விவரங்கள்:

  • இடம்: மதுரவாயல் அருகில், NH பைபாஸ் சாலை, நொளம்பூர், சென்னை
  • தேதிகள்: ஏப்ரல் 24 – ஜூன் 7, 2026
  • நேரம்: பிற்பகல் 3:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை

பிரமாண்டமான தொடக்க விழா மற்றும் மக்களிடமிருந்து கிடைத்த சிறப்பான வரவேற்புடன், ‘துபாய் சம்மர் கார்னிவல் சென்னை 2026’ (Dubai Summer Carnival Chennai 2026) நகரத்தின் மிகப்பெரிய கோடைக்கால ஈர்ப்புகளில் ஒன்றாகத் திகழ உள்ளது; இது அனைத்து வயதுப் பிரிவினருக்கும் ஒரு உற்சாகமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது.

புதிய வரலாறு படைத்த சட்டப்பேரவைத் தேர்தல்!

மைதியான முறையில் நடந்த 2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6 மணி நிலவரப்படி 84.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 91.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. 6 மணிக்குப் பின் டோக்கன் பெற்றவர்களுக்கு வாக்களிக்க 2 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் மாலை 6 மணி நிலவரப்படி 83.18% வாக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் தொகுதி வாரியாகப் பார்த்தால் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் அதிகபட்சமாக 89.20% வாக்குகளும், குறைந்தபட்சமாக மயிலாப்பூரில் 74.46% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

வரலாறு படைத்த தமிழகம்: தமிழகத்தில் இதுவரை பதிவானதில் அதிக வாக்கு சதவீதம் என்றால் 2011-ல் 77.8% வாக்குகள் பதிவானது தான். அதற்கு முன்னதாக 1967-ல் 76.57% வாக்குகள் பதிவானதே அதிகபட்ச வாக்குப் பதிவு சாதனையாக இருந்தது.

1957 முதல் இதுவரை தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குப் பதிவு சதவீதங்களின் விவரம்:

  • 1957-ல் 47% வாக்குகள்

  • 1962-ல் 71% வாக்குகள்

  • 1967-ல் 76.57% வாக்குகள்

  • 1971-ல் 71% வாக்குகள்

  • 1977- ல் 61.58% வாக்குகள்

  • 1980-ல் 61.58% வாக்குகள்

  • 1984-ல் 73.47% வாக்குகள்

  • 1989-ல் 69.69% வாக்குகள்

  • 1991-ல் 63.92% வாக்குகள்

  • 1996-ல் 66.95% வாக்குகள்

  • 2001-ல் 59.07% வாக்குகள்

  • 2006-ல் 70.22% வாக்குகள்

  • 2011-ல் 77.8% வாக்குகள்

  • 2016-ல் 74.26% வாக்குகள்

  • 2021-ல் 71.28% வாக்குகள்

பிரபலங்கள் வாக்களிப்பு: வாக்குச் சாவடிக்கு வழக்கம் போல் காலையிலேயே வந்த நடிகர் அஜித் குமார் திருவான்மியூர் வாக்குச் சாவடியில் முதல் நபராக வாக்களித்துச் சென்றார்.

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட சிலுவம்பாளையம் தொகுதியில் குடும்பத்துடன் வந்து மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.

சென்னையில் தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பாஜக மூத்த தலைவரும் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தர்ராஜன், பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு அவரது கணவரும் மதுரை மத்திய தொகுதி வேட்பாளருமான சுந்தர்.சி, நடிகர் ரஜினி காந்த், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் சிவக்குமார், ஜீவா, நடிகை த்ரிஷா, நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா எனப் பல்வேறு பிரபலங்களும் வாக்களித்தனர்.

களத்தில் 4,023 வேட்​பாளர்​கள்: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​திகளி​லும் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. 4,023 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 5.73 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றுள்​ளனர். இவர்களில் 14.59 லட்​சம் பேர் முதல்​முறை வாக்​காளர்​கள்.

தமிழகம் முழு​வதும் 249 மாதிரி வாக்​குச்​சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்​குச்​சாவடிகள், 71 மாற்​றுத் திறனாளி​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள், 79 இளம் பணி​யாளர்​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள் என மொத்​தம் 33,211 இடங்​களில் 75,064 வாக்​குச்​சாவடிகள் அமைக்கப்பட்டுள்​ளன.

5,949 வாக்​குச்​சாவடிகள் பதற்​ற​மானவை என்று அடையாளம் காணப்​பட்​டுள்​ளன. இங்கு நுண்பார்வையாளர்கள், துப்​பாக்​கி ஏந்திய போலீ​ஸார் அல்​லது துணை ராணுவப் படை​யினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பாது​காப்பு பணி​யில் துப்​பாக்கி ஏந்​திய 300 கம்பெனி துணை ராணுவப் படை​யினர் ஈடு​பட்​டுள்​ளனர். இவர்கள் 24 மணி நேர​மும் தீவிர ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்டு வருகின்​றனர்.

மேலும் 83,875 காவல் துறை பணி​யாளர்​கள், 40,427 காவல் துறை அல்​லாத முன்​னாள் ராணுவத்​தினர் உள்​ளிட்ட பணியாளர்​களும் பாது​காப்பு பணி​யில் ஈடுபடுத்தப்பட்டுள்​ளனர். இந்நிலையில், அமைதியான முறையில் நடந்த 2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6 மணி நிலவரப்படி 84.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 91.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.48% வாக்குகள் பதிவாகியுள்ளன.

அங்கீகார கடிதம் இருந்தால் தான் ஊடகவியலாளர்களுக்கு உள்ளே அனுமதி!

தேர்தல் செயல்முறையை செய்தி சேகரிப்பதற்காக வாக்குச் சாவடிகளுக்குள் ஊடகவியலாளர்கள் நுழைவது, 1961 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளின் விதி 32-இன் படி தலைமை அலுவலர்களால் கடுமையாக ஒழுங்குபடுத்தப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) மீண்டும் வலியுறுத்துகிறது.

அதன்படி, ஒவ்வொரு பொது, இடைத்தேர்தல் அல்லது ஈராண்டுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அத்தகைய நுழைவுக்கான அதிகாரக் கடிதங்களை வழங்குவதற்காக ஊடகவியலாளர்களிடமிருந்து கோரிக்கைகளைப் பெற்று அனுப்புமாறு நியமிக்கப்பட்ட ஆதரவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆதரவு அதிகாரிகளில் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) மற்றும் மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநரகம் (DIPR) மூலமான தலைமைத் தேர்தல் அலுவலர்கள் (CEO-க்கள்) ஆகியோர் அடங்குவர்.

PIB-யால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரை, அதிகாரக் கடிதங்கள் PIB-க்கு வழங்கப்படுகின்றன. அத்தகைய கடிதங்களை வழங்குவதற்கு முன்பு PIB தனது சொந்த மட்டத்தில் அவற்றை ஆய்வு செய்கிறது. பின்னர் PIB, அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் பட்டியலை ECI-க்குச் சமர்ப்பித்து, இந்தச் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்கிறது.

மாநில DIPR மூலம் விண்ணப்பிக்கும் ஊடகவியலாளர்களின் கோரிக்கைகள் முதலில் மாநில DIPR-ஆல் ஆய்வு செய்யப்பட்டு, அது தனது பரிந்துரைகளை சம்பந்தப்பட்ட CEO-க்கு அனுப்புகிறது. இந்தப் பட்டியல் முறையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றும், விண்ணப்பதாரர்கள் உண்மையான ஊடகப் பிரதிநிதிகள் என்றும், அவர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) வழிகாட்டுதல்களில் வகுக்கப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்கிறார்கள் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி/மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி (CEO/DIPR) சான்றளிக்கிறார்.

பரிந்துரைக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் ஒருங்கிணைக்கப்பட்ட பட்டியல், பின்னர் தலைமைத் தேர்தல் அதிகாரியால் ஒப்புதலுக்காக ஆணையத்திற்கு அனுப்பப்படுகிறது. தலைமைத் தேர்தல் அதிகாரி/மாவட்டத் தேர்தல் அதிகாரி (CEO/DEO) அல்லது ஒரு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் முறையாகச் சரிபார்க்கப்பட்ட பின்னரே அதிகாரக் கடிதம் வழங்கப்படுகிறது. நம்பகத்தன்மை மற்றும் நேர்மையைப் பேணுவதற்காக, இந்தச் செயல்பாட்டில் நகல் மற்றும்/அல்லது ரப்பர் முத்திரை எதுவும் பயன்படுத்தப்படக்கூடாது என்று ஆணையம் கட்டளையிட்டுள்ளது.

அதிகாரக் கடிதங்களைத் தவறாகப் பயன்படுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. வாக்கின் இரகசியத்தன்மையை மீறாத வகையில், வாக்குப்பதிவு அறைக்குள் புகைப்படம்/காணொளி எடுப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. முறையாகச் சரிபார்க்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஊடகப் பணியாளர்கள் மட்டுமே வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம், தேர்தல் செயல்பாட்டின் நேர்மை, பாதுகாப்பு மற்றும் ஒழுங்கான நடத்தையைப் பேணுவதே இந்த அமைப்புசார்ந்த மற்றும் பல அடுக்கு சரிபார்ப்புச் செயல்முறையின் நோக்கம் என்று ஆணையம் மீண்டும் வலியுறுத்துகிறது.

தேர்தல் நாளன்று செய்தி சேகரிப்பதற்காக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களும் அத்தியாவசிய சேவைகள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் தபால் வாக்கு மையத்தில் (PVC) தபால் வாக்கு வசதியைப் பெறத் தகுதியுடையவர்கள் என்றும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

விண்ணப்பம் மற்றும் ஒப்புதல்: கோரிக்கைகள் மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநரால் (DIPR) சரிபார்க்கப்பட்டு, தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) அல்லது மாவட்டத் தேர்தல் அதிகாரியால் (DEO) அங்கீகரிக்கப்படுகின்றன.

செல்லுபடி: வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் நுழைய அதிகாரக் கடிதங்கள் கட்டாயமாகும்.

கட்டுப்பாடுகள்:
அனுமதி இல்லை: அதிகாரக் கடிதங்கள் “வாக்கு எண்ணும் கூடத்திற்குள்” நுழைய அனுமதிப்பதில்லை.

புகைப்படம் எடுக்கக் கூடாது: வாக்குப்பதிவு அறைக்குள் புகைப்படம்/வீடியோ எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

உபகரணங்கள்: அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்குக் கையடக்கக் கேமராக்கள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் வாக்கு எண்ணும் கூடத்தில் ஸ்டாண்டுகள்/முக்காலிகள் அனுமதிக்கப்படாது.

வெளிநாட்டு ஊடகங்கள்: வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு ‘J’ விசா தேவை, மேலும் அவர்கள் வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) வெளிநாட்டு விளம்பரப் பிரிவிடம் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

வழங்கும் செயல்முறை: நம்பகத்தன்மையைப் பேணுவதற்காக, அதிகாரக் கடிதங்களில் நகல் அல்லது ரப்பர் முத்திரையைப் பயன்படுத்தக் கூடாது என்று இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) கட்டாயப்படுத்துகிறது.

தேர்தல் ஆணையம்

‘ஈரானின் ராணுவம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது’-டிரம்ப்

மெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நான் ஒரு போரில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறேன். ஆனால் சிலர் போலியான செய்திகளை வெளியிடுகிறார்கள். ஈரானின் ராணுவம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. ஒரு ஒப்பந்தம் ஏற்படும் வரை நாம் விலக்கிக்கொள்ளாத ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஈரான் முற்றிலுமாக அழிந்துக் கொண்டிருக்கிறது.

அவர்கள் ஒரு நாளைக்கு 500 மில்லியன் டாலர்களை இழக்கிறார்கள். ஈரானுடன் நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் ஒப்பந்தம், முந்தைய அதிபர்கள் செய்த ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை விட பலமடங்கு சிறந்ததாக இருக்கும். ஈரானின் தலைமை தங்கள் எண்ணெய்யை அமெரிக்கா பெற்றுக்கொள்வதற்காக நூற்றுக்கணக்கான கப்பல்களை அமெரிக்காவின் டெக்சாஸ், லூசியானா, அலாஸ்கா மாகாணங்களை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளது”.

இவ்வாறு வதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சிறுமியை கர்பமாக்கிய தாய்மாமன்! அதிரடி தீர்ப்பு!!

செங்கல்பட்டு மாவட்டம், சேலையூர் பகுதியில் வசித்து வருபவர்கள் கணேஷ் – மோனிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியினர் இவர்களுக்கு 16 வயது ஒரு மகள் உள்ள நிலையில் இருவரும் கட்டிட தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்திருக்கின்றனர். எனவே 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டில் தனிமையில் இருந்து வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு தாத்தா வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கி படித்து வந்துள்ளார். பள்ளி விடுமுறை நாட்களில் மட்டும் சேலையூருக்கு வந்து பெற்றோருடன் தங்குவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். 

இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பள்ளி விடுமுறையின் போது சேலையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது தாய் தந்தை இருவரும் வேளைக்கு சென்ற நிலையில் சிறுமியின் வீட்டிற்கு சென்ற அவரது தாய் மாமா 40 வயதுடைய முருகன் சிறுமியிடம் நலம் விசாரித்து பெற்றோர் வீட்டில் இல்லை என்பதை தெரிந்து கொண்டுள்ளார். பின்னர் சிறுமியை வீட்டிற்குள் அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார். தொடர்ந்து இதுகுறித்து வெளியில் கூறினால் கொன்றுவிடுவேன் என மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.

இதனால் அச்சமடைந்த மாணவி நடந்ததை பெற்றோரிடம் சொல்லாமல் தாத்தாவின் வீட்டிற்கு சென்று வழக்கம்போல பள்ளிக்கு சென்று வந்திருக்கிறார். நாளடைவில் சிறுமி கர்ப்பமான நிலையில் தனது கர்ப்பம் குறித்து தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து தாயிடம் தெரிவித்த நிலையில் அவர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு முருகன் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில் காவ்யாவுக்கு கடந்த (30.07.2025) ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் முருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் விசாரணைக்கு செய்யப்பட்டு வந்த நிலையில் இறுதிகட்ட விசாரணையில் வழக்கை விசாரித்த செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி நசீமாபானு குற்றம் சாட்டப்பட்ட முருகன் குற்றம் புரிந்தவர் என உறுதி செய்து அவருக்கு ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

விஜய் காட்டிய சொத்து மதிப்பு மீண்டும் தவறா?!

ட்டப்பேரவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள தவெக தலைவர் விஜய், ஒரு தொகுதியில் ரூ.100 கோடி வரை சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியிருப்பது முறைகேடானது என்று கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இதுகுறித்து வருமான வரித்துறை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக பெரம்பூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற வாக்காளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

வேட்பு மனுவில் முரண்பாடு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு ரூ.115.13 கோடி என்று குறிப்பிட்டுள்ள விஜய், திருச்சி கிழக்கில் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து மதிப்பு ரூ.220.15 கோடி என்று தெரிவித்துள்ளார். இது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.

தவிர, பெரம்பூரில் சொத்து மதிப்பை அவர் குறைத்துக் காட்டியது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தவறு. வேட்புமனுக்களில் அவர் தெரிவித்துள்ள தகவல்கள் முழுமையானதா, உண்மையானதா என்று விசாரணை நடத்த வருமான வரித் துறை மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘2 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள தவெக தலைவர் விஜய், ஒரு தொகுதியில் ரூ.100 கோடி வரை சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியிருப்பது முறைகேடானது’’ என்று கருத்து தெரிவித்தனர். இந்த வழக்கில் வருமான வரித் துறை தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

ஏன் இப்படி மனம் மாற்றம்?!

டிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் சங்கீதா, பத்திரிகையாளர்களை சந்தித்து விஜய்க்கு எதிராக ஆவணங்களை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சங்கீதா தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜய். தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். விஜய் 2 தொகுதிகளில் களமிறங்கி இருக்கிறார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் களமிறங்கி உள்ளார். இதுதவிர தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தினார். இதில், எடப்பாடி தொகுதியில் மட்டும் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 233 தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதற்கிடையே தான் விஜயிடம் விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். விஜய்க்கும், நடிகை ஒருவருக்கும் கள்ள உறவு இருப்பதாக அவர் குற்றம்சாட்டி இந்த விவாகரத்து மனுவை தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் விஜய் – சங்கீதா ஆகியோரை ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பாக இருவரிடமும் விளக்கம் கேட்க நீதிமன்றம் முடிவு செய்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனால் ஏப்ரல் 20ம் தேதி விஜய் நீதிமன்றத்தில் ஆஜராவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது தேர்தல் நேரம் என்பதால் விஜய் ஆஜராகாமல் வழக்கறிஞரை அனுப்பி வைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தான் ஏப்ரல் 20ம் தேதி விஜய் மீதான குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களை மனைவி சங்கீதா பத்திரிகையாளர்களை சந்தித்து வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கும் நிலையில் சங்கீதா இப்படி செய்தால் அது விஜயின் இமேஜை பாதிக்கும். அதுமட்டுமின்றி தேர்தலிலும் எதிரொலிக்கலாம். இதனால் விஜய் மட்டுமின்றி தவெக வேட்பாளர்கள் பின்னடைவை சந்திக்கும் நிலை உருவாகும்.

இந்நிலையில் தான் விஜய் தரப்பில் இருந்து சங்கீதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 20ம் தேதி பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். இதையடுத்து சங்கீதா மனம் மாறி பத்திரிகையாளர்கள் சந்திப்பை தவிர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.