தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, திருவள்ளூரில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், செங்கல்பட்டு, தருமபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















