இராமநாதபுரம்: மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22 முதல் செப்டம்பர் 2022 வரை 262 இருசக்கர வாகன விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில், 126 பேர் உயிரிழந்தனர். தற்போது தலைக்கவசம் அணியாமல் வந்தால் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படுவதோடு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வது, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளுதல், பெட்ரோல் பங்க்-ல் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் வழங்காமல் இருப்பது பற்றி நடவடிக்கை எடுக்கலாம் என சாலை பாதுகாப்பு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இருசக்கர வாகன விபத்தில் பின்னால் அமர்ந்து இருக்கும் பெண்களே அதிகளவில் உயிரிழக்கின்றனர்.
இது குறித்து விவாதிக்கப்பட்டதில் 126 மனித உயிரிழப்புகளில் 99% உயிரிழப்பு ஹெல்மெட் அணியாமல் வந்ததே காரணமாகும். ஆகையால், வாகன ஓட்டி மட்டுமல்லாமல் உடன் அமர்ந்து வருபவரும் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
இரண்டு நபர்களுக்கு மேல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யக்கூடாது. நகர எல்லைக்குள் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மிகாமல் வாகனத்தை இயக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.