ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே ஓமன் நாட்டிற்கு பணிக்காக சென்ற 45 வயது மதிக்கத்தக்க பெண் உணவின்றி தவிப்பதால் தன்னை மீட்குமாறு வாட்ஸ்ஆப் விடியோ மூலம் தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆற்காடு அடுத்த அசேன்புரா பகுதியைச் சேர்ந்த முகமது ரபிக் என்பவரது மனைவி சபீனா. அதே பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில், வீட்டு வேலைக்காக மாதம் 40,000 ரூபாய் ஊதியத்திற்கு தெரிந்த நபர் மூலம் ஓமன் நாட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு பணி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் முறையாக உணவு கிடைக்காமல் ஒருவேளை மட்டுமே உணவு கிடைப்பதாகவும், விரைந்து தன்னை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க வாட்ஸ்ஆப் விடியோ அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.