சந்திர கிரகணம் ஏற்படும் போது நிலவு ஏன் சிவப்பாக மாறுகிறது?!

0
8

சந்திர கிரகணம் முழு நிலவு நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும். சூரியன், பூமி மற்றும் சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படும். முழு நிலவு பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி சந்திர கிரகணமும் ஏற்படும்.

அதன்படி, இன்று முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் முழு சந்திர கிரகணத்தைப் பார்க்க இயலாது . ஏனெனில் சந்திர உதயத்திற்கு முன்பாகவே மொத்த நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கும். முழு மற்றும் பல்வேறு பகுதி வடிவ நிலைகளின் முடிவினை நாட்டின் கிழக்குப் பகுதிகளில் காண முடியும்.

தமிழகத்தில் சந்திர கிரகணம் நேரம் எப்போது?

தமிழ் நாட்டில் சென்னையில், சந்திர கிரகணம் இந்திய நேரப்படி 5 மணி 39 நிமிடங்கள் தொடங்கி அடுத்த நாள் காலை 8.59 மணியளவில் முடிவடையும் என கணக்கிடப்பட்டுள்ளது.

கிரகணம் ஏற்படும் போது நிலவு ஏன் சிவப்பாக மாறுகிறது ?

வெள்ளை ஒளிக்குள் ஏழு நிறங்கள் இருப்பது நீங்கள் அறிந்ததே. அதில் நீல ஒளியானது பூமியின் வளிமண்டலத்தில் ஒளிச் சிதறல் அடைகிறது, இதன் காரணமாக வானம் நீல நிறமாக இருக்கிறது. அதேபோல ஒளியானது வளிமண்டலத்தின் வழியே செல்லும் போது சிவப்பு நிறமானது ஒளி விலகள் அடைகிறது. அது நிலவின் மீது படுகிறது, இதன் காரணமாக நிலவு சிவப்பு நிறமாகக் காணப்படுகிறது.

அடுத்த சந்திரகிரகணம் எப்போது?

அடுத்த முழு சந்திர கிரகணம் மார்ச் 14, 2025 அன்று நிகழும் என்றும், ஒரு பகுதி சந்திர கிரகணம் அடுத்த அக்டோபர் 2023-ல் நிகழும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here