நாடு முழுவதும் முகநூல், வாட்ஸப்,இன்ஸ்டாகிராம் போன்ற இணையதள சேவைகள் தற்காலிகமாக முடங்கியது. தொழில்நுட்ப கோளாறால் முகநூல், வாட்ஸ் அப் போன்ற இணையதள சேவைகள் முடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீர் முடக்கத்தால் சமூகவலைதள வாசிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இந்தியா மட்டுமின்றி, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
 
சமூக ஊடக நிறுவனமான வாட்ஸ்அப் 14,000 க்கும் மேற்பட்ட பயனர்களுக்கு செயலிழந்துள்ளதாகவும், மெசஞ்சர் கிட்டத்தட்ட 3,000 பயனர்களுக்கு செயலிழந்ததுள்ளதாகவும் Downdetector தளம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாக 20,000 க்கும் மேற்பட்டோர்  டுவிட்டரில் புகார் அளித்துள்ளனர். ஆனால் செயலிழப்பு குறித்து பேஸ்புக் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
 
திடீர் முடக்கம் குறித்து வாட்ஸ் நிறுவனம் கூறியதாவது:-
 
“சிலர் தற்போது வாட்ஸ்அப்பில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர நாங்கள் பணியாற்றி வருகிறோம், விரைவில் இங்கே மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது என செய்தியை விரைவில் அனுப்புவோம் என  தெரிவித்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here