3 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் வயிற்று வலி காரணமாக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள நேஷனல் மருத்துமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அல்சர் பாதிப்பு இருந்ததால் தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
நேற்று காலை 7 மணிக்கு இரும்பு ஊட்டச்சத்து ஊசி ஒன்றை மருத்துவர்கள் செலுத்தியுள்ளனர். அதன் பின்னர் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதாக சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சிறுமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, மருத்துவர்கள் சிறுமியை ஐ.சி.யூவில் வைத்து சிகிச்சைக்காக அளித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர், சிறுமியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது சிறுமியின் உடல் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் எங்கள் குழந்தைக்கு போட்ட ஊசி என்ன? என்று தெளிவான விசாரணை நடத்தி விளக்கம் அளிப்பார்களா? என்று பெற்றோர்கள் உறவினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.