மத்திய அரசால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டமான ரோஜ்கார் மேளா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை அயனாவரத்தில் 250 இளைஞர்களுக்கான பணி ஆணையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார். இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது மிக முக்கியமான நாள் . சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பில் 52,000 பேர் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. பல தமிழ் வழி பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. தமிழ் மொழியை வளர்க்க திமுக என்ன செய்தது? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் துப்பாக்கி சூடு பற்றி எடப்பாடி பழனிசாமி தொலைக்காட்சியில் பார்த்ததாக சொன்னது குறித்த கேள்வி எழுப்பப்ட்டது. அதற்கு, இதில் என்ன தவறு இருக்கிறது. 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த விஷயம் அவை . துப்பாக்கி சூடு நடத்தியது தவறா? நடத்திய விதம் தவறு. எடப்பாடி சொன்ன ஒரு கருத்தை திரித்து சொன்னது சரி இல்லை. ஈபிஎஸ் கவனக்குறைவாக இருந்தார் என கூறுவதும் தவறு. ஈபிஎஸ் கூறிய கருத்தை ஆணையம் திரித்து கூறியுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, கையில் ஒரு கல்லை எடுத்து எறிந்தால் எங்கள் அகராதியில் சமூக விரோதி தான். எனவே பொது சொத்துக்களை சேதாரம் செய்தார்கள், நாங்கள் சமூக விரோதி என்றோம் .திருமாவளவன், சீமான், கனிமொழி, முக ஸ்டாலின் இவர்கள் எல்லாம் கருத்து சொல்லவில்லையா ?ஆனால் காவல்துறை ரிப்போர்ட் வந்தால் அது வேற மாதிரி தான் இருக்கும்.
ரஜினிகாந்த் கருத்து பற்றி ஆணையம் சொல்லிய கருத்து தவறான முன் உதாரணம். முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்த போது பேசிய எல்லா விஷயத்தை எடுத்து பார்ப்போம். அதைவிட ரஜினிகாந்த் பேசியது தவறான ஒன்று அல்ல என்று தெரிவித்தார்.