ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் வாக்குச்சீட்டை தவிர்த்து வேறு எந்தெந்த ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என்ற விவரத்தை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் ஆறு மற்றும் ஒன்பது ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் வாக்குச்சாவடி சீட்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் 11 விதமான அசல் ஆவணங்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி ஆதார் அட்டை, மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்திற்கு வழங்கப்பட்ட பணிஅட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம் அல்லது அஞ்சலக கணக்கு புத்தகங்கள் ஆகியவற்றில் ஒன்றை ஆவணமாக காட்டலாம்,

மேலும் மருத்துகாப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் ஒரிமம், பேன் கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்களிலும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.  வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி அடையாள அட்டை, எம்.பி., எம்.எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here