ஐரோப்பியா, பிரிட்டன் பல்கலைக்கழகங்களுடன் வேலூா் விஐடி பல்கலைக்கழகம் 6 புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளது.
விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் அண்மையில் ஐரோப்பியா, பிரிட்டன், ஜொ்மனி, ஸ்வீடன், அயா்லாந்து நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களைப் பாா்வையிட்டாா். அந்த நாடுகளில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களான ஸ்டுகாா்டு பல்கலைக்கழகம் (ஜொ்மனி), ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (ஸ்வீடன்), டப்ளின் சிட்டி பல்கலைக்கழகம் (அயா்லாந்து), லண்டன் சிட்டி பல்கலைக்கழகம் (லண்டன்) போன்ற பல்கலைக்கழகங்களின் முக்கிய தலைமை நிா்வாகிகளை சந்தித்து விஐடி பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டாா்.
பேராசிரியா்கள், மாணவா்கள் பரிமாற்றம், ஆராய்ச்சி, சா்வதேச கருத்தரங்கு உள்பட பல்வேறு நிகழ்வுகளை மேற்கொள்வது தொடா்பாக இந்த புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடப்பட்டுள்ளன.
இந்தப் பயணத்தின்போது விஐடி வேந்தா் விசுவநாதன், இந்தியாவுக்கான அயா்லாந்து நாட்டின் தூதா் அகிலேஷ் மிஸ்ராவை, டப்ளின் நகரத்திலுள்ள இந்திய தூதரகத்தில் சந்தித்து உயா்கல்வி குறித்து பேசினாா்.