விழுப்புரம் மாவட்டம் மணலப்பாடி அடுத்த மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவழகன், ஆந்திர மாநிலம் ராம்பள்ளியைச் சேர்ந்த துளசி என்பவரை 2016ஆம் ஆண்டு திருமணம் செய்தார். குடும்பத்துடன் சென்னையில் தங்கி பணியாற்றி வந்த நிலையில், ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பினர்.

கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை, ஆந்திராவில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு வடிவழகன் அனுப்பிவிட்டார். இதனிடையே, அவரது செல்போனை எடுத்து பார்த்தபோது, தான் பெற்ற 2வது மகனை சரமாரியாக தாக்கிய வீடியோ இருந்தது தெரியவந்தது.

இந்த வீடியோ வெளியாகி பரவி வரும் நிலையில், குழந்தையை தாக்கிய தாய் துளசி மீது செஞ்சி சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், துளசியிடம் விசாரணை நடத்த ஆந்திராவுக்கு சென்றனர். இதனிடையே, தவறான நடத்தையால், துளசி தமது குழந்தையை தாக்கி வீடியோ எடுத்ததாக, குழந்தையின் தந்தை தரப்பு தெரிவித்துள்ளது.
 
இந்தநிலையில்  குழந்தையின் தந்தை வடிவழகன் அளித்த புகாரில் தாய் துளசியை சித்தூர் மாவட்டத்தில் போலீசார் கைது செய்தனர். குழந்தையை அடித்து கொடுமைப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் போலீஸ் நடவடிக்கை  எடுத்துள்ளனர்.    குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here