சிக்கினார் வில்லிவாக்கம் பெண் இன்ஸ்பெக்டர்…..

0
18

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அனுராதா வீட்டிலிருந்து 7. 21 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த 19ஆம் தேதி வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அனுராதா 20000 லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மோனிகா ஸ்ரீ என்பவர் வரதட்சணை கொடுமை தொடர்பாக அவருடைய கணவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் அவரது கணவர் உட்பட 8 பேர் மீது நான்கு பிரிவில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு மோனிகா ஸ்ரீ அவருடைய இல்லத்தில் இருந்து உடைமைகளை எடுப்பதற்காக சென்று இருக்கிறார்.

அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்ததாக கணவர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் கணவர் வினோத்குமார் என்பவர் நீதிமன்றம் சென்று மறுவிசாரணை செய்ய உத்தரவும் பெற்றிருக்கிறார். இந்த உத்தரவின் அடிப்படையில் வரதட்சணை கொடுமை வழக்கு இருப்பதால் அந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கும்படி நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த விசாரணை செய்வதற்காக வினோத்குமார் அவர்களிடமிருந்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அனுராதா ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதும் தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக நீதிமன்ற உத்தரவுப்படி அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த வழக்கை முடித்து வைப்பதற்காக மோனிகாவிடம் 20 ஆயிரம் ரூபாய் ஆய்வாளர் அனுராதா கேட்டுள்ளார். 

இது தொடர்பாக மோனிகா ஸ்ரீ லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் நடவடிக்கை எடுக்கும்படி எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மோனிகா ஸ்ரீ ஆய்வாளர் அனுராதாவிடம் பணம் கொடுக்கும் பொழுது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படத்தில் சிறை அடைத்தனர்.

இதற்கு அடுத்தபடியாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அனுராதா இல்லத்தில் சோதனை செய்த போது அவருடைய வீட்டில் இருந்த பீரோவில் கணக்கில் வராத 7.21 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here