தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 6 மற்றும் 9 என 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளன.
 
இந்நிலையில், இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் இயக்க நிர்வாகிகள் தேர்தலில் களம் காண விஜய் ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிகிறது. மக்கள் இயக்கத்தின் கொடி மற்றும் தனது படத்தை பிரசாரத்திற்கு பயன்படுத்தவும் ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here