நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து, கட்சியின் சின்னம், கொடி உள்ளிட்டவை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மேலும், கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை 2 கோடியாக அதிகரிக்க வேண்டும் என்று கட்சியினருக்கு அறிவுறுத்தியதுடன், அதற்கான செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் சேருவதற்கான இணையதள லிங்க்-வெளியாகியுள்ளது. இந்த லிங்கை வெளியிட்ட நடிகர் விஜய், தனது கட்சியின் முதல் நபராக சேர்ந்தார். மேலும், விருப்பப்படுவர்கள் அனைவரும் கட்சியில் இணையுமாறும் வீடியோ வாயிலாக விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here