தமிழக அதிரடி படையால் 2004-ல் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பனுக்கு வித்யாராணி, விஜய லட்சுமி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். வித்யாராணி கடந்த வருடம் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். இளைய மகள் விஜயலட்சுமி நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார்.

விஜயலட்சுமி நடிக்கும் படத்துக்கு ‘மாவீரன் பிள்ளை’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை கே.என்.ஆர்.ராஜா இயக்கி கதாநாயகனாகவும் நடிக்கிறார். விஜயலட்சுமி நடிக்கும் தோற்றத்தை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு உள்ளனர்.

அதில் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு போராளியாக நிற்கிறார். மது ஒழிப்பு மற்றும் தண்ணீர், விவசாயிகள் பிரச்சினை பற்றிய போராட்டங்களை மையப்படுத்தி இந்த படம் தயாராகி உள்ளது.

விஜயலட்சுமி போராட்டங்களை முன்நின்று நடத்தும் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார், வீரப்பன் வாழ்க்கையை மையமாக வைத்து ஏற்கனவே வன யுத்தம், வில்லாதி வில்லன் வீரப்பன் என்ற பெயர்களில இரண்டு படங்கள் வந்துள்ளன. இந்த நிலையில் வீரப்பன் மகள் தற்போது போராளியாக நடிப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here