‘வாரிசு’ மொக்க சீரியல் பிளேடு……  

ஜெயபிரகாஷ் குரூப் ஆஃப் கம்பெனிக்கும் (பிரகாஷ்ராஜ்), ராஜேந்திரன் குரூப் ஆஃப் கம்பெனிக்கும் (சரத்குமார்) இடையே தொழில் போட்டி வலுத்து வருகிறது. இதனிடையே, தொழிலதிபர் ராஜேந்திரன் தனக்குப் பிறகு தனது தொழிலை ஏற்று நடத்த தனது மகன்களில் திறமையான ஒருவரை அடையாளம் காண முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

மற்றொரு புறம் வீட்டிலிருந்து விலக்கப்பட்டிருக்கும் விஜய் ராஜேந்திரன் (விஜய்) தனது பெற்றொரின் 60ஆம் கல்யாணத்திற்காக மீண்டும் வீட்டின் படியேற, அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. இது ஒரு புறம் இருக்க சரத்குமார் உடலில் ஒரு நோய் ஏற்படுகிறது. அந்த நோய் சரத்குமாரை என்ன செய்தது? இறுதியில் ராஜேந்திரன் தனது அடுத்த தொழில் வாரிசை கண்டறிந்தாரா? விஜய் ஏன் வீட்டிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார்? என்பதே வாரிசு படத்தின் கதை….

‘ரஞ்சிதமே’ பாடலின் கடைசி நிமிடங்களில் சிங்கிள் ஷாட்டில் அவரது ஆட்டம் திரையரங்கை ஆர்ப்பரித்து அலறவிடுகிறது.‘தீ’ தளபதி பாடலில் அவரின் நடையும் ரசிகர்களுக்கு ‘பொங்கல்’ விருந்து. படத்தில் வரும் சண்டை காட்சிகள் தெலுங்கு படங்களை ஞாபகபடுத்துகிறது. விஜய் ஒரு காட்சியில் 50 பேரை அடிப்பது எல்லாம் ஓவர்…. குடும்ப கதை பெரிய அளவில் இல்லை, நடிகர் விஜய் யின் நடிப்பு புதிதாக இல்லை. ரஞ்சிதமே பாடலுக்கும், பின்னணி இசைக்கும் இந்த படம் சில நாட்கள் நகரும்…. படத்தின் துவக்கம் சரியில்லை. செக்கச் சிவந்த வானம் படத்தை பார்ப்பது போன்று இருந்தது. கதையின் துவக்கத்தில் ராஜேந்திரன், விஜய்க்கு இடையே ஏற்படும் பிரச்சனை கவரவில்லை. இடைவேளை கூட பெரிதாக சுவாரஸ்யமாக இல்லை.

மொத்தத்தில் இந்த ‘வாரிசு’ மொக்க சீரியல் பிளேடு……  

Varisu Rating 3.5/5

Iruthi Theerppu: IRUTHI THEERPPU OFFICE 044-35720178