பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் 287 பயனாளிகளுக்கு ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் அவர்கள் தலைமையில் இன்று வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
இந்நிகழ்வில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு நாளும் ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்து வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி நகராட்சி பகுதியில் மட்டுமே டிராக்டர் மற்றும் பேட்டரி இயந்திரங்கள் மூலம் தூய்மை பணி மேற்கொண்டதை மாற்றி இன்று கிராமப்புறங்களும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக டிராக்டர் மற்றும் பேட்டரி பொருத்திய இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு எங்கு, என்ன தேவை என்பதை அறிந்து கொண்டு அதற்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருபவர் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.
தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தினை முன்னேற்றுவதற்காக எறையூர் பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைத்து அங்கே பல்வேறு தனியார் தொழிற்சாலை அமைப்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரில் வருகை தந்து அடிக்கல் நாட்டினார்கள். இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றவுடன் 10,000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு எந்த மாவட்டத்திற்கு என்ன தேவை என்று தேவையறிந்து சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்ற பேரையில் இரண்டு முறை ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டதை இரண்டு முறையும் நிராகரிக்கப்பட்டது. மக்கள் நலனில் உறுதியாக இருந்த காரணத்தினால் இன்று ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அமலுக்கு கொண்டு வரப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதினால் இந்தியாவில் நம்பர் ஒன் முதலமைச்சராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விளங்கி வருகிறார்கள் என பேசினார்
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை விரைந்து வழங்க வேண்டுமென உத்தரவிட்டதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் அரசு அலுவலர்கள் மீது வைக்கின்ற நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் ஒவ்வொரு துறை அலுவலர்களும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக இன்று வருவாய்த் துறையின் சார்பில் ரூ.47,34,000 லட்சம் மதிப்பீட்டில் 05 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களும், 50 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் இ- பட்டாக்களும், வருவாய் துறை (சமூக பாதுகாப்பு திட்டம்) சார்பில் ரூ.1,05,00,000 மதிப்பீட்டில் 22 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகையும், 12 பயனாளிகளுக்கு விதவை உதவித் தொகையும், 35 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையும், 01 பயனாளிக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவி தொகையும், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் ரூ.65,000 மதிப்பீட்டில் 13 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் ரூ.38,353 மதிப்பீட்டில் 7 பயனாளிகளுக்கு மின் மோட்டார் உடன் கூடிய தையல் இயந்திரமும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.11,100 மதிப்பீட்டில் 02 பயனாளிகளுக்கு தையல் இயந்திரமும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ. 23,300 மதிப்பீட்டில் 03 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும், 01 பயனாளிக்கு காதொலி கருவியும், தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.25,000 மதிப்பீட்டில் 05 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகையும், வேளாண்மை துறை சார்பில் ரூ.20,210 மதிப்பீட்டில் 06 பயனாளிகளுக்கு மின்கல தெளிப்பான் மற்றும் தார்ப்பாய்களும், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சார்பில் ரூ.2,65,960 மதிப்பீட்டில் 25 பயனாளிகளுக்கு பேட்டரி தெளிப்பான் விசைத்தெளிப்பான் தார்பாலின் தையல் இயந்திரமும், வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.94,05,773 மதிப்பீட்டில் 05 பயனாளிகளுக்கு 40-70 HP டிராக்டர்களும், 06 பயனாளிகளுக்கு 8 HP பவர் டில்லர்களும், 01 பயனாளிக்கு கரும்பு அறுவடை இயந்திரமும், 05 பயனாளிகளுக்கு சூரிய மின் சக்தியுடன் கூடிய போர்வெல் அமைக்கவும், தோட்டக்கலைத் துறை சார்பில் ரூ.3,95,000 மதிப்பீட்டில் 04 பயனாளிகளுக்கு Above 8HP பவர் டில்லர்களும், 02 பயனாளிகளுக்கு வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்கவும், மகளிர் திட்டம் சார்பில் ரூ.5,80,000 மதிப்பீட்டில் 12 பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டம் மற்றும் சுழல் மேம்பாட்டு நிதிகளும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ரூ.41,980 மதிப்பீட்டில் 20 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பாக்கெட்களும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.1,57,79,062 மதிப்பீட்டில் பாரதப் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கும், 09 கிராம ஊராட்சிகளுக்கு டிராக்டர் வழங்குதல், 09 பயனாளிகளுக்கு மின் கலன் வண்டிகள் வழங்குதல், 02 ஒன்றிய குழு தலைவர்களுக்கு ஸ்கார்பியோ வாகனம் வழங்குதல் என மொத்தம் 287 பயனாளிகளுக்கு ரூ.4,18,84,738 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
என பேசினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி நா.அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி அ.லலிதா, நகர்மன்றத் தலைவர் திருமதி அம்பிகா ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் திருமதி பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்), திரு ந.கிருஷ்ணமூர்த்தி (ஆலத்தூர்), திருமதி மீனா அண்ணாத்துரை(பெரம்பலூர்), திரு க.ராமலிங்கம் (வேப்பந்தட்டை) வேளாண்மை இணை இயக்குநர் திரு. சங்கர்.எஸ். நாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் திரு.சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திருமதி பொ.ராணி, தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி மா.இந்திரா, மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.