இந்த 8 வங்கிகளின் செக்புக் செல்லாது!

நாட்டில் உள்ள சிறிய வங்கிகள் திவாலாகாமல் தடுக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. புதிய திட்டத்தின் படி சிறு வாங்கிகளான தேனா வங்கி, விஜயா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திர வங்கி, சிண்டிகேட் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் அலகாபாத் வங்கி போன்ற வங்கிகள் நாட்டில் இருக்கும் பெரு வங்கிகளுடன் இணைக்கப்பட்டது. தேனா மற்றும் விஜயா வங்கி முறையே பாங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டன. சிண்டிகேட் வங்கியானது கனரா வங்கியுடனும், ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடனும், அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்பட்டது.

இதனை அடுத்து இன்று (ஏப்ரல் 1-ம் தேதி) முதல் மேற்கண்ட 8 சிறு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் செக் புக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே 8 வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருந்த வங்கிகளின் பாஸ்புக் மற்றும் செக் புக்கை வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பயன்படுத்த முடியாது. இவற்றை பயன்படுத்த விரும்பினால் தங்களது வங்கிகள் இணைக்கப்பட்டுள்ள புதிய வங்கிகளுக்கு சென்று புதிய செக் புக் வாங்கிக்கொள்ள வேண்டும்

மேலும் இந்த 8 வங்கிகளுடைய வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு எண், ஐ.எஃப்.எஸ்.சி எண், எம்.ஐ.சி.ஆர் குறியீடு, கிளை முகவரி, வங்கி பாஸ் புக் ஆகியவற்றை மாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், சிண்டிகேட் வங்கி மற்றும் கனரா வங்கியில் தற்போதுள்ள செக் புக் ஜூன் 30 வரை செல்லுபடியாகும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட வங்கிகள் எஸ்எம்எஸ் வாயிலாக எச்சரிக்கை செய்திகள் அனுப்பியுள்ளன. மேலும் எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் வழியாக அனைத்து முக்கியமான தகவல்களையும் புதுப்பிக்க முடியும். குறிப்பாக வாடிக்கையாளர்கள் மொபைல் எண், முகவரி, நாமினி போன்ற விவரங்களை புதுப்பிக்க முடியும்.

இதுமட்டும் அல்லாமல் மேலே குறிப்பிடப்பட்டு உள்ள 8 வங்கிகளில் வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்களின் கணக்கு எண் ஏப்ரல் 1 முதல் மாற உள்ளது. இதனால் வாடிக்கையாளர்களைக் கணக்கைத் தொடர்ந்து பயன்படுத்தும், கணக்கில் இருக்கும் பணத்தைப் பயன்படுத்தவும் புதிய பாஸ்புக் பெறுவது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மத்திய அரசு ஆகஸ்ட் 2019ல் சுமார் 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக இணைத்தது. இதன் மூலம் பொதுத்துறை வர்த்தகத்தை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் வாரக் கடன் பிரச்சனையைப் பெரிய அளவில் குறைத்ததோடு, ஆபத்தில் இருக்கும் வங்கிகளைத் திவால் ஆகாமல் தடுக்கப்பட்டது. இதேபோல் 2017ல் 27 பொதுத்துறை வங்கிகளை 12 வங்கிகளாக இணைத்து வங்கிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

Iruthi Theerppu: IRUTHI THEERPPU OFFICE 044-35720178