valimai-first-look

தல அஜித்தின் சமீபகால திரைப் படங்களின் கதைகளை நன்கு அறிந்து பொறுமையாக செயல்படுவதால் அவர் நடிக்கிற ஒவ்வொரு திரைப்படங்களும் மாபெரும் ஹிட் அடிப்பத்தோடு வசூல் வாரி குவிக்கின்றன.

அந்த வகையில் அஜித்தின் கடைசி படங்களான விசுவாசம், நேர்கொண்டபார்வை போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதன் பிறகு இரண்டாவது முறையாக ஹச். வினோத்துடன் கூட்டணி அமைத்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாக எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 95% முடிவடைந்த நிலையில் மீதி 5% படத்தை எடுக்க படக்குழு முனைப்பு காட்டி வந்தாலும் வெளிநாட்டில் எடுக்க உள்ளதால் கொரோனா காரணமாக தற்போது எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே படக்குழு வலிமை படத்தின் டப்பிங் பணிகள், எடிட்டிங் பணிகள் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் போன்றவற்றை ரெடி செய்து வருகிறது.

அஜித்தின் பிறந்த நாளான மே 1-ஆம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட முனைப்பு காட்டி வருகிறது இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனம் தற்போது ரெடி செய்து வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.

தற்போது வலிமை படத்தின் ஒரு போஸ்டரை உருவாக்கியுள்ளனர் அதை பார்த்த அஜித் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறாராம் மேலும் இதுவரை அவர் கேரியரில் இல்லாத அளவிற்கு அந்த போஸ்டரை அந்த நிறுவனம் செதுக்கி அவருக்கு கொடுத்துள்ளாதாம்.

அஜித்துக்கே பிடித்து உள்ளதால் இந்த போஸ்டர் நிச்சயம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என படக்குழு கூறியுள்ளது.

மேலும் இதுவரை வந்த போஸ்டர்களை எல்லாத்தையும் தாண்டி வலிமை போஸ்டர் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here