வாலாஜா:
மூளைக் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த இளம் பயிற்சி போலீஸ்காரர் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பு தனது அப்பாவைத் தொடர்பு கொண்டு பேசிய வாலிபர், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக உருக்கமாகபேசிய தகவல் வெளி வந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட் டம் ஆற்காடு அடுத்தசாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை என்பவரின் மகன் விக்னேஸ்வரன் (26). விக்னேஸ்வரனுக்கு ஒரு தங்கை இருக்கிறார். கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்புதான் விக்னேஸ்வரன் காவல்துறையில் சேர்ந்துள்ளார். இதற்காக காஞ்சிபுரத்தில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் விக்னேஸ்வரனுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
மூளைக் காய்ச்சல் இந்நிலையில் மூளைக் காய்ச்சலால் அவதிப்பட்ட விக்னேஸ்வரன்வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நேற்று முன்தினம் காவலர் பயிற்சிப் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த விக்னேஸ்வரன், நேற்று மீண்டும் காஞ்சிபுரத்திற்கு புறப்பட்டுச் சென்றார். மாலையில் தனது உடைமைகளுடன் விக்னேஸ்வரன் திடீரென அங்கிருந்து புறப்பட்டார். இரவு 11 மணியளவில் வாலாஜாபேட்டை டோல் கேட் அருகே இறங்கிய விக்னேஸ்வரன், அங்கிருந்தபடி தனது தந்தையை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது ‘எனது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது , எனக்கு வாழப் பிடிக்கவில்லை. எனவே தற்கொலைசெய்யப் போகிறேன்’ என்று தந்தையிடம் கூறியுள்ளார்.
இதனைய டுத்து விக்னேஸ்வரனின் தந்தை ஏழுமலை, விக் னேஸ்வரனை தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால் தந்தையுடன் பேசி முடித்தவுடன் தனது செல்போனை விக்னேஸ்வரன் சுவிட்ச் ஆப் செய்தார். தற்கொலை பின்னர் வாலாஜா பேட்டை டோல்கேட் அருகே உள்ள தனியார் பள்ளி அருகே சென்ற விக்கேஸ்வரன், அங்கிருந்த ஒரு புங்கை மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இரவு முழுவதும் தனது மகனை தேடி அலைந்த ஏழுமலை, இன்று காலை மரத்தில் தூக்கு மாட்டி மகன் பிண மாகதொங்கியதைப் பார்த்து கதறி அழுதார்.
இது குறித்து வாலாஜாபேட்டைபோலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விக்னேஸ்வரனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் பணியில் சேர்ந்த ஒன்றரை மாதத்தில் விக்னேஸ்வரன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.