ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்- வானிலை
தென் மாவட்டங்களில், வரும், 25ம் தேதி வரை மழை தொடரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.இன்று முதல் வரும், 25ம் தேதி வரை, தென் மாவட்டங்களில் லேசான மழை தொடரும்.
மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.சென்னையில் அதிகபட்சம், 33 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும். நேற்று காலை, 24 மணி நேரத்தில், சிவலோகம், சித்தார், 2 செ.மீ., பேச்சிப்பாறை, வால்பாறையில், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.