காரைக்குடியில் முறையாக மூடப்படாத வரத்து கால்வாய் மற்றும் சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது. காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட வ.உசி., ரோடு, துணை மின் நிலைய அலுவலகம் பின்புறம் அண்ணா நகர் செல்லும் சாலையில் முற்றிலுமாக சேதம் அடைந்திருந்தது.
பல ஆண்டுகளாக சாலை அமைக்க கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் கால்வாய் மூடப்பட்டுள்ள நிலையில் தெருவின் நுழைவு பகுதியில் கால்வாய் மூடப்படாமல் பள்ளமாக உள்ளது. இங்கு குப்பையை கொட்டுவதால் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவி வருகிறது.