திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு
 
சேப்பாக்கம்:
 
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
 
தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இத்தேர்தலில் சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளராக அக்கட்சியின் இளைஞரணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். அதேபோல், இத்தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் கஸ்ஸாலி போட்டியிடுகிறார். நாம் தமிழர் உள்பட பிற கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன. 
 
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியின் இன்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று அவர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here