தமிழ்நாட்டில் தக்காளி விலை உச்சத்தை தொட்ட நிலையில், தற்போது இறக்குமதி அதிகரிப்பால் விலை குறைந்தது. கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது.
சென்னையில் சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் வரை விற்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். விலையை குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த சில தினங்களாக மளமளவென உயர்ந்த தக்காளி விலை இன்று ரூ.100க்கும் கீழ் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அந்த வகையில் சென்னையில், 1கிலோ தக்காளி மொத்த விற்பனையில் ரூ. 50/80/90க்கும், சில்லறை விற்பனையில் ரூ.110 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.