தங்கம் விலை கிடு கிடு உயர்வு!

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

அந்த வகையில், தங்கம் விலை தொடர்ந்து 3 வது நாளாக இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.5,010 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ40,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

நேற்று மாலை நிலவரப்படி,கிராமுக்கு 19 ரூபாய் உயர்ந்து ரூ.4,955 ஆகவும், சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து ரூ.39,640ஆக விற்பனையானது. 

Iruthi Theerppu: IRUTHI THEERPPU OFFICE 044-35720178