திருவள்ளூர்:
புன்னபாக்கம் ஊராட்சியில், சமத்துவ மேட்டு காலனி பகுதியில் திருநங்கைகள், இருளர்கள் அவர்களுக்கு அரசு ஒதுக்கப்பட்ட குடியிருப்பு பகுதியில் மழை அதிக அளவில் பெய்ததால் தற்போது கட்டப்பட்ட சுவர் கால்வாயின் உள்ளேயே இடிந்து விழுந்துள்ளது. இதனால் மழை நீர் சரியாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
உடனே இடிந்த சுவரை கட்டி தர கோரி குடியிருப்போர்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் இப்பகுதிக்கு செல்லும் பாதையில் தெரு விளக்குகள் மற்றும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் செல்ல சிரமம் அடைந்து வருகின்றனர். அதிகாரிகள் மேற்பார்வையிட்டு சரி செய்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
– எமது நிருபர்