திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று ஒரே நாளில் 18 பேர் மனு தாக்கல்!
திருவள்ளூர் – கும்மிடிப்பூண்டி
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி முதல் நேற்று வரை நடந்தது. திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று ஒரே நாளில் 18 பேர் மனு தாக்கல் செய்தனர். இதுவரை திருவள்ளூரில் பி.வி.ரமணா (அ.தி.மு.க.) வி.ஜி.ராஜேந்திரன (தி.மு.க.), குரு (அ.ம.மு.க.) உள்ளிட்ட்ட மொத்தம் 27 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் நேற்று ஒரே நாளில் சுயேச்சை வேட்பாளர்கள் 14 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.கடந்த 12-ந் தேதி முதல் நேற்று வரை இங்கு அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் எம்.பிரகாஷ், தி.மு.க. சார்பில் டி.ஜெ.கோவிந்தராசன், அ.ம.மு.க கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் டில்லி, மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணி சார்பில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் சரவணன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் உஷா உள்ளிட்ட 32 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
பூந்தமல்லி-ஆவடி
தமிழக சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ரேவதி மணிமேகலை உள்பட 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பூந்தமல்லி தனி தொகுதியில் இதுவரை கிருஷ்ணசாமி (தி.மு.க.), ராஜமன்னார் (பா.ம.க.), ஏழுமலை (அ.ம.மு.க.), மணிமேகலை வினோத் (நாம் தமிழர் கட்சி), ரேவதி மணிமேகலை (மக்கள் நீதி மய்யம்) உள்பட மொத்தம் 23 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.ஆவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட நேற்று மட்டும் 12 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதுவரை க.பாண்டியராஜன் (அ.தி.மு.க.), சா.மு.நாசர் (தி.மு.க.), கோ.விஜயலட்சுமி (நாம் தமிழர் கட்சி), சார்லஸ் (பகுஜன் சமாஜ் கட்சி) உதயகுமார் (மக்கள் நீதி மய்யம்), சங்கர் (தே.மு.தி.க.) மற்றும் சுயேச்சைகள் உள்பட 33 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
திருவொற்றியூர்-மதுரவாயல்
திருவொற்றியூர் தொகுதியில் நேற்று 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை கே.குப்பன் (அ.தி.மு.க.) கே.பி.சங்கர் (தி.மு.க.) சீமான் (நாம் தமிழர் கட்சி), சவுந்திரபாண்டியன் (அ.ம.மு.க.), மோகன் (மக்கள் நீதி மய்யம்) மற்றும் 5 பெண்கள் உள்பட மொத்தம் 32 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் இதுவரை பெஞ்சமின் (அ.தி.மு.க.), காரம்பாக்கம் கணபதி (தி.மு.க.), லக்கி முருகன் (அ.ம.மு.க.), கணேஷ்குமார் (நாம் தமிழர் கட்சி), பத்மபிரியா (மக்கள் நீதி மய்யம்) உள்பட 35 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று மட்டும் 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அம்பத்தூர்-மாதவரம்
அம்பத்தூர் தொகுதியில் நேற்று அலெக்சாண்டர்(அ.தி.மு.க.), தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 38 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 21 சுயேச்சை வேட்பாளர்கள் அடங்குவர். கடைசி நாளான நேற்று மட்டும் 16 பேர் மனு தாக்கல் செய்தனர்.மாதவரம் சட்டமன்ற தொகுதியில் மூர்த்தி(அ.தி.மு.க.), சுதர்சனம்(தி.மு.க.), ரமேஷ் கொண்டலய்யா(மக்கள் நீதி மய்யம்), ஏழுமலை(நாம் தமிழர் கட்சி), தட்சிணாமூர்த்தி(அ.ம.மு.க.) உள்பட 33 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். நேற்று மட்டும் 17 சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனர்.
திருத்தணி- பொன்னேரி (தனி)
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் நேற்று தே.மு.தி.க. சார்பில் கிருஷ்ணமூர்த்தி, ஐ.ஜே.கே. சார்பில் தணிகைமலை உள்பட 20 பேர் மனு தாக்கல் செய்தனர். இதுவரை கோ.அரி அ.தி.மு.க.), எஸ். சந்திரன் (தி.மு.க.), அகிலா ( நாம் தமிழர் கட்சி உள்ளிடட் 35 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.பொன்னேரி (தனி) சட்டமன்ற தேர்தலில் கடைசி நாளான நேற்று 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இது வரை சிறுணியம் பலராமன் எம்.எல்.ஏ. (அ.தி.மு.க.), துரைசந்திரசேகர் (காங்கிரஸ்), பொன்ராஜா (அ.ம.மு.க.), தேசிங்குராஜன (மக்கள் நீதி மய்யம்), மகேஸ்வரி (நாம் தமிழர் கட்சி) உள்ளிட்ட 26 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் நேற்று ஒரே நாளில் 134 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.