செப்.16-ல் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலத்தையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் காலை 10 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
என்.எஸ்.சி. போஸ் சாலை, தங்க சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈடுபடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதியில் நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருடசேவைக்கு தமிழகத்திலிருந்து செப்.16-ஆம் தேதி திருக்குடைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.
அந்தவகையில், நிகழாண்டு திருப்பதி திருக்குடை ஊா்வலம் சென்னை பூக்கடை சென்ன கேசவப் பெருமாள் கோயிலிலிருந்து செப்.16-ஆம் தேதி காலை 10.31 மணிக்கு புறப்படும்.